அதரிசனா இவள் உன் மிழி

Tha

அதரிசனா இவள் உன் மிழி

மார்க் மண்டையன் தொல்லை தாங்க முடியல குருப்ல போடுற அத்தனை போஸ்ட்டையும் ஒளிச்சு வச்சிக்கிறான் இவன்கிட்ட மல்லு கட்டுற நேரத்தில நான் நாலு கதை எழுதிடுவேன் போல

இனி வரும் கதைகளுக்கு என் Facebook page , இன்ஸ்ட்ராவுல மட்டும் தான் லிங்க் சேர் பண்ணுவேன் , சைட்ல நேரடியா வந்து படிக்கிறவங்க எப்போதும் போல சைட்ல படிச்சிக்கலாம் அதில் எந்த மாற்றமும் இல்லை 

நிறைய பேர் கதை போடுறதே தெரியாது நோட்டிபிகேசன் வராது தடுமாறுவதால் இந்த குட்டி மாற்றம் அவ்வளவு தான் 

எப்பவும் போல பேஸ்புக்ல போடுற எபிக்கு குறிப்பிட்ட லைக் தாண்டும் போது அடுத்தடுத்த எபி வரும்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ர ஐடியை பாலோ பண்ணி வச்சிக்கோங்க கதைக்கன அப்டேட்,  புது கதை , ரீரன் கதை லிங்க் அனைத்தும் இதிலே சேர் செய்யப்படும் 

இன்ஸட்ரா லிங்க் 

பேஸ்புக் பேஜ் லிங்க்

https://www.facebook.com/share/r/1D4DYZfiKf/

நம்ம குருப்ல கதைக்கான பொங்கல் வச்சி குஜால் பண்ணி மார்கை கதற விடுவோம் போடா டுபுக்கு நாங்க எல்லா இடத்திலும் சேட்டை பண்ணுவோம் என்ன பண்ணுவ 

விரைவில் வரும் 

அதர்சனா இவள் உன் மிழி!! 

டீசர் 1

இதுதான் என் முதலாளி வீடு வா விழிம்மா தங்கையை பவ்யமாக சுகமார் அழைக்க, விழி என்றவள் அண்ணனை முறைத்து கொண்டு பைக்கை விட்டு இறங்கினாள் ...

நிறம் அழகு என்றால் அவள் அழகற்றவவள் 

குணம் அழகு என்றால் அவள் பேரழகி மாநிறத்துக்கும் குறைவான நிறம் அவள் விழியில் மொத்த அழகையும் பதுக்கி வைத்திருப்பதால் அவள் பெயர் 

விழியாள் வயது 23 பிரைவேட் மருத்துமனை ஒன்றில் செவியலயராக வேலை செய்கிறாள்...

இப்ப மட்டும் ம்மா போடு , கையில பத்து பைசா வந்துட்டா தலைகீழா நின்று ஆட வேண்டியது ஒன்னும் இல்லைன்னா அப்பாவி போல முகத்தை வை.. 

ஹிஹி இந்த ஒரு வாட்டி மட்டும் ஹெல்ப் பண்ணு , நல்ல பொசிசன் வந்து நான் யாருக்கு செய்ய போறேன் எல்லாம் 

அய்யா சாமி விட்டிரு நீ என்ன உயிரோட விட்டாவே போதும் ... என்று விழி தலைமேல் கும்பிடு போட ..

வா விழி, சுகமார் பவ்யமாக அங்கே நின்றவர்களிடம் பேச , அந்த வைர நகை அணிந்த வயதான பெண்மணி மேலே என்றது போல கையை நீட்டியவர் பார்வை வாசலில் நின்ற விழியை அளந்தது.... விழி தலையை குனிந்து கொண்டே அண்ணன் இழுத்த இழுப்புக்கு படியேறி ஓடினாள்.... 

இங்க நில்லு விழி , சார் வருவாங்க 

ம்ம், எப்பா என்னா பெரிய வீடு, இங்கேயா வேலை பார்க்கணும் பயம் தான் வந்தது... அரண்மனை கூட தோற்று போகும் கண்ணாடி அறைகளும் பளிங்கும் ஆடம்பரமும் என மின்னியது அவ்வீடு... 

கீர் கீர் என்று சக்கரம் ஒன்று சுழலும் சத்தம் கேட்டு ஏதோ யோசனையாக நின்ற விழி கண்களை உயர்த்திட 

சக்கர நாற்காலியில் கம்பீரமாக அழகோ அழகாக இறுக்கமான முகம், அலை அலை கேசம் தாடி , அங்கங்கே இளநரையோடு கருப்பு கண்ணாடி அணிந்து வீல் சேரில் அவர்களை நோக்கி வந்தான் அவன் ... 

அவன் அதர்சனன் அதரி என்று அழைப்பார்கள்!! 

சார் 

ம்ம் குரல் வந்த திசைக்கு அவன் வண்டி திரும்பியது 

என் தங்கச்சியை கூட்டிட்டு வந்திருக்கேன்.... என்றதும் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன்... 

நீ போகலாம் என்றதும் சுகுமார் எச்சில் விழுங்கி தங்கையை பார்க்க

டேய் விட்டுபுட்டு போகாத நாய என்று அவள் உதட்டை அசைக்க அவனோ வெளியே போய்விட 

என்ன பேச எது பேச அவள் திகைத்து நிற்க சேரில் இருந்தவன் கைகள் ரிமோட்டை தட்ட .... 

சார் சொல்லுங்க சார் என்று பிஏ ஓடி வர, அவன் உதடு மட்டும் அவரிடம் அசைந்தது 

உன் பேர் என்னம்மா ? 

வி....ழி....யாள்  

வயசு 

23 

ம்ம் குட் , சார் பேரு அதரிசனன் , அவர் வொய்ப் கொஞ்ச நாளைக்கு முன்ன அக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க...

ஓஓஓஓ

அந்த அக்ஸிடென்ட்ல சாருக்கும் கண்ணு தெரியாம போயிடுச்சு என்றதும் விழியின் விழி அகலமாக விரிந்தது

கண்ணு தெரியாதா?? அப்போதுதான் அதரிசனனின் முகத்தையே அவள் கூர்ந்து பார்த்தாள்.... முன் 30 வயது இருக்கலாம், பணக்காரன் என்பது அவன் மிடுக்கில் தெரிந்தது கண் தெரியாதவன் போலவே இல்லை.. ரொம்ப இயல்பாக இருந்தது போல தெரிந்தான்...  

சாருக்கு ஒரு மக அவளுக்குதான் என்று பிஏ இழுக்க 

பீட்டர் நீ போகலாம் , மத்ததை நான் பேசிக்கிறேன் என்ற அதரி குரலில் அவனை பார்த்து கொண்டு நின்ற விழி திடுக்கிட்டு தலையை குனிந்து கொள்ள அவளும் அவனும் மட்டும் அந்த பெரிய அறையில் ... 

என்ன பேர் சொன்ன ? அப்பா இதுதான் ராட்சத குரலா,தன் குடல் வரை போய் எதிரொலித்த உணர்வு ....

வி....ழி 

ம்ம் 

என்ன வேலைக்கு வந்திருக்க ? 

உங்களையும் 

வாட்? 

ம்ஹூம் உங்க குழந்தையை அவள் உதடு தந்தி அடிக்க .. 

என் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கணும் அதுதான் உன் வேலை ... அதை கேர் பண்ணிக்கணும் பிடிச்சா வேலையில தொடரலாம் விழி உதடும் கூட பயத்தில் வியர்த்தது , அப்படி ஒரு ஆளுமையான குரல் 

ஓ...கே..சார் 

சாம்புள் கொடு.. குழந்தைக்கு ஒத்துக்குதான்னு பார்க்கணும் சின்ன பாட்டிலை அவன் நீட்ட, விழி நடுங்கிய விரலோடு.. அதை வாங்கிவிட்டு 

பார்த்ரூம் என்று அவள் இழுக்க 

வாட் பார்த்ரூமா? என் குழந்தைக்கு கொடுக்கிற பால் அது , ஐ நீட் ஹைஜினிக் .... அவன் அதட்டல் கேட்டு உயிரே உறைந்து போய் விழி டப்பாவை கீழே போட்டுவிட 

என்ன ஆச்சு ?

ஒன்னும் இல்லை சார் ... டப்பாவை எடுத்து கொண்டவள் எங்கே எப்படி கொடுக்க என திணறி 

சார் நீங்க வேணும்னா வெளிய வெயிட் பண்றீங்களா?? நா தந்தி அடிக்க அவள் கூறி விட 

வாட் இஇஇஇஇஇஇஇஇஇ அவன் பேரொலி கேட்டு எம்மா இதயமே குதித்து வெளியே விழுந்து விட்டது மெய்

இது என் வீடு என் இடம் , நான் வெளியே போகணுமா ?? 

சாரி சார் சாரி சார் ..... நான் வேணும்னா வெளியே போயிடுறேன்... அடித்து பிரண்டு வெளியே ஓட போனவள் அவன் குரலில் நின்றாள்

நில்லு ஊஊஊஊ 

சார் 

நீ வெளிய போறதும் இங்க இருக்கிறதும் ஒன்னுதான் ம்ம் என்றவன் வீல்சேரை பட்டன் வைத்து தள்ள அது அவன் சொல் கேட்டு பால்கனி போய் நின்றது .. ஒரு சிகரெட்டை எடுத்து அதரி பற்ற வைத்து இழுக்க ..அதன் மணம் அவள் நாசி வந்து சேர .... என்ன செய்ய ஏது செய்ய புரியாத நிலை பெருமூச்சு விட்ட விழி, முதுகு காட்டி உட்காந்து அமுதத்தை கறந்து பாட்டிலில் அடைத்து 

சார் 

முடிஞ்சதா?? முடிந்த சிகெரெட்டை காலால் அணைத்தான் ... 

ம்ம்  

கீழ வை மேஜை மீது அமுத கரைசலை வைக்க ... 

வெயிட் பண்ணு பிள்ளைக்கு செட் ஆகுதான்னு பார்த்துட்டு வர சொல்றேன் அதுக்கு பிறகு அக்ரீமெண்ட் சைன் பண்ணிக்கலாம்...

அக்ரீமெண்டா?? மெண்டல் பய தேரை இழுத்து தெருவுல விட்டுட்டானோ, அண்ணனை திட்டி கொண்டு அவள் நிற்க... அதரி அருகே ஒரு பெண் வந்து அவள் வைத்த பாலை வாங்கி கொண்டு அந்த பெரிய அறை உள்ளே இருந்த இன்னொரு அறை உள்ளே போக ...

ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ என்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டு இங்கே விழி வெறுமையாக சிரித்தாள்.... தாய்தான் ஆனால் தாய் இல்லை, மடி நிறைய பால் உண்டு , கொடுக்க பிள்ளை இல்லை அழுகை கண்ணை முட்டி கொண்டு வந்தாலும் இழுத்து கொண்டாள்.. 

ஹேஹே என்று குழந்தை அழுகை கூடி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ம்ம் ம்ம் சப்பி சப்பி குடிக்கும் சத்தம் அவளுக்கும் கேட்டது, அவனுக்கும் கேட்டிருக்கும் 

சார் முழுசா குடிச்சிருச்சு தகவல் சொல்ல.... அதரி முகம் இறுக்கம் தளராதே 

ம்ம் மட்டும் சொன்னவன் ... அக்ரீமெண்டை கையை விட்டு மேஜையில் தேடி எடுத்தவன் ..

ம்ம் என்று விழி காலடியில் வீசினான் ...

ஊப்ஸ் என்று குனிந்து எடுத்து புரட்டியவள் பல்லை கடித்து அண்ணனை தேடினாள்... 

பரதேசி இவனை கொன்னா எல்லாம் சரியா போகும் 

பிள்ளைக்கு எப்போது பசிக்கும் என்று தெரியாது ஆகவே முழுநேரம் குழந்தையோடு இருந்தே தீர வேண்டும், லீவ் கிடையாது ... வீட்டை விட்டு போக அனுமதியும் கிடையாது ... மாதம் மூன்று லட்சம் சம்பளம் பிள்ளை பால்குடி மறக்கும் வரை இந்த வேலையை செய்ய முழு மனதோடு ஒத்து கொள்கிறேன் ... 

அதன் கீழே கடைபிடிக்க வேண்டிய விதிகள் இருந்தது 

எந்த சாப்பாடும் அவன் அனுமதி இல்லாது அவள் எடுத்து கொள்ள கூடாது 

குடி புகை போதை எதுவும் கூடாது 

வேறு எந்த ஆணோடும் உடலளவில் இணைய கூடாது 

அவள் உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் ... 

கையெழுத்து போட்டு தந்துட்டு இப்பவே வேலையில சேர்ந்துக்க... என்று பேனாவே தூக்கி அதரி அவள் முகத்தில் வீச ....

அவன் அவமரியாதை செய்வது நன்றாக தெரிய அக்ரீமெண்டை கீழே வைத்து விட்டு 

"சாரி சார் எனக்கு இதுல எதுலையும் சம்மதம் இல்ல வேற யாராவது பார்த்துக்குங்க "என்று கதவை திறக்க போக வாசலை அடைத்தது அவன் கையில் இருந்த ரிமோர்ட்... 

சார் என்ன பண்றீங்க 

எதுல சம்மதம் இல்ல என்றான் கடினமான குரலில் 

இந்த ரூல்ஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராது சார் 

எது வேற எவன் கூடையும் படுக்க கூடாதுன்னு சொன்னது கஷ்டமா இருக்கோ என்று அறிமுகம் ஆகி ரெண்டே நிமிடம் ஆன பெண்ணிடம் அவன் கேட்ட கேள்வியில் விழி முகத்தை சுழித்து ....

ச்சை என்று முகத்தை திருப்பி 

சார் உங்களுக்கு தேவைன்னு வேலைக்கு வந்தா இப்படி தான் பேசுவீங்களா? 

எனக்கு தேவையா ? ஹாஹா என்கிட்ட பிச்சை கேட்டு வந்து நிக்கிறது நீதான் என்றான் திமிர் சற்றும் குறையாது.... 

பிச்சை கேட்டவளுக்கு பிச்சை கொடுக்கிறவன் நாலு ரூல்ஸ் போடத்தான் செய்வான் .... 

பி...ச்சையா அய்யோ பாவம் என்று நினைத்த அவளுக்கு கண்ணுக்கு பதிலா வாய்ல என்னவாவது ஆகி இருக்கலாம் என்று தோன்ம வைத்து விட்டான் ... 

என்ன பொறுத்தவரை என் காசுக்கு வேலை செய்றவங்க பிச்சைக்காரங்கதான் ..

சாரி சார் பிச்சை எடுத்து எனக்கு பழக்கம் இல்ல கதவை திறந்து விடுங்க 

உனக்கு இல்ல உன் அண்ணனுக்கு தெரு பொறுக்கி பழக்கம் போலேயே... உன் வலைக்கு அட்வான்சா நாலு லட்ச ரூபாய் முன் பணம் வாங்கிட்டான்

ஹான் விழி அதிர 

என் பிள்ளைக்கு உன் பால் ஒத்துக்காம போயிருந்தா விட்டிருப்பேன்... அவளுக்கு ஒத்துக்கிச்சு சோ உனக்கு வழி இல்லைங்கிறது விட வழி கிடையாது ... மூடிட்டு போய் பிஏ காட்டுற ரூம்ல தங்கு என்றவன் வீல் சேர் திரும்பி நகர 

என்னால முடியாது என்றவள் மறுப்பில் அவன் சேர் நின்று தலையை திருப்பியவன் 

என் மேஜை மேல இருந்த வைர நெக்லஸ்ஸை ஏன் எடுத்த? 

நா.....னா விழி பதற 

ம்ம் நீயேதான் மிஸ் விழியாள்...

என் வேலைக்காரி கையை பிடிச்சு உன் அண்ணன் இழுத்துட்டானாமே 

ம்ஹூம் 

இது எல்லாம் நீ செய்யல ஆனா செஞ்சேன்னு நிருபிக்க என்கிட்ட பணம் இருக்கு சோ.... அவள் எச்சில் விழுங்கி அதரியை பார்த்தவள் 

"இந்த வேலை செய்யறதுல எனக்கு பிரச்சனை இல்ல சார், ஆனா உங்க மரியாதை இல்லாத நடத்தை எனக்கு பிடிக்கல" உள்ளதை உள்ளபடி சொன்னாள்... 

"பேர் மிஸ் விழியாள், ஆனா பிள்ளைக்கு தாய் தூதூஊஊஊ, உன் அருகதைக்கு மரியாதை ஒரு கேடு , நானா புடுச்சி போடி நாயேன்னு வெளிய தள்ளுர வரை இங்கதான் இருக்கணும் போ ஓஓஓஓஓஓஓஓஓஓஓ என்ற திமிரெடுத்து நின்றவன் முன்னே மாட்டி கொண்டு நின்றான் விழியாள் .... 

அவனுக்கு கண் மட்டும் இல்லை, இதயமும் இல்லை போல !!

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்புகளே 

புது கதையோடு விரைவில் ஓடி வர்றேன்