வனம் சேர்ந்த ஐவனம் முழுக்கதை
Eye
1 வனம் சேர்ந்த ஐவணம் !!
Audio நாவல். https://youtu.be/ErFzmQO6lY8?si=Gj4csQk_ShsFCBMm
வனம் _ காடு
ஐவணம் _ மருதாணி
அரசூர் ஆரம்பப் பள்ளி
17 வருடங்களுக்கு முன்பு
இன்று முதல் நாள் பள்ளி ஆரம்பமாகிறது..
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அழ அழ கொண்டு வந்து வகுப்பறையில் தள்ளிவிட்டு சென்றுகொண்டிருக்க .. சிலர், அழுது கொண்டிருக்கும் தன் குழந்தைகளை அவர்களும் ஏக்க பெருமூச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்..ஆறு வயது வரை தன் மடியில் தவழ்ந்த குழந்தை இதோ அடுத்த வாழ்க்கை படியில் கால் எடுத்து வைக்கிறது ... என் குழந்தையின் எதிர்காலம் நன்றாக வருமா , படித்து இன்ஜினியராக டாக்டராக வருவானா ? என ஆயிரம் ஏக்கங்களோடு பெற்றோரின் இமைகள் நனைந்து போயிருந்தது.. மரத்தின் அடியில் இருந்து ஒரு சத்தம் அனைவர் கவனத்தையும் ஈரத்து திரும்பி பார்க்க வைத்தது ..
இப்படி முதல் நாளே அழுதுகிட்டுஇருந்தா எப்படி? எல்லாருக்கும் இது ஒரு நாள் வந்துதானே ஆகணும், பள்ளிக்கூடத்துக்கு போனாதானே நாளைக்கு பெரிய ஆளா வர முடியும், முதல் நாளே இப்படி அழுதா எப்படி கண்ணு தொட , என்ற அதட்டல் சத்தம் கேட்டு .. அனைவரும் அப்புறம் திரும்ப...
பின் இருபது வயது இளைஞன் கண்களை கசக்கி கொண்டு நிற்க ... அவனை கடிந்து கொண்டு நின்றான் ஆறு வயது மகன் ..
"ஏப்பா அழாத, நீ இப்படி அழுதா நான் எப்படி போக?.."
"அழல சாமி" என்று கரகரத்து வந்தது குரல் ...
"ப்ச் வா" என பிஞ்சு கைகள் விரிய, அந்த ஆறடி உடல் நாலாக மடிந்து மகன் கைக்குள் அடங்கி விட்டது ..
"ப்பா "
"சொல்லு சாமி .."
"ப்ச் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் , என் பெயர் சொல்லி கூப்பிடுங்க, அது என்ன சாமி? ஒழுங்கா அரவிந்துன்னு சொல்லி கூப்பிடுங்க..
"எனக்கு நீ எப்பவும் சாமிதான்"
""போப்பா நீதான் சாமின்னு சொல்ற, ஊர்ல எல்லாரும் என்ன சொல்றாங்க தெரியுமா ?
"என்ன சொல்றாங்க சாமி ?
"ம்ம் வண்ண வண்ணமா சொல்றாங்க... நான் பிறக்கும்போதே அம்மாவ முழுங்கிட்டு பிறந்துட்டேன்னு சொல்றாங்க, நீ இப்படி பொண்டாட்டி இல்லாம தனியா நிக்குறதுக்கு நான்தான் காரணம்னு சொல்றாங்க, நான் ஒரு ராசி கெட்டவன் அதனாலதான் வாழ வேண்டிய வயசுல, நீ வாழாம இப்படி பையனோட தனிமரமா நிற்கிறேன்னு சொல்றாங்க..
"யாரு சொன்னா? " என்று இவ்வளவு நேரம் குழந்தையாக தன் மகன் நெஞ்சுக்குள் அடங்கி இருந்த அவன் சினம் மிகுதியில் திமிறி கொண்டு எழும்ப ..
"அட!! உடனே கோவம் வந்திடுமே , அதனாலதான் உன் முன்னாடி யாரும் சொல்ல மாட்டேங்கிறாங்க.. என் முன்னாடி சொல்றாங்க ..எத்தனை நாள் தான்ப்பா நீ கையையும் , காலையும் சுட்டு எனக்கு சாப்பாடு எல்லாம் செஞ்சு தருவ .. ஒரு கல்யாணம் கட்டிக்கோன்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறீங்க எப்பப்பா கல்யாணம் கட்டிக்குவ? உனக்கு வேணும்னா பொண்டாட்டி ஆசை இல்லாம இருக்கலாம், எனக்கு அம்மா வேணும் ஆசையா இருக்கு" என்ற மகனை அவன் பரிதாபமாக பார்த்தான் ..
கேட்பது விலை உயர்ந்த பொருளாக இருந்தால் வாங்கி கொடுத்து விடலாம், உயிர் உள்ள செல்லப் பிராணியாக இருந்தால் தேடிக் கொடுத்து விடலாம் , உறவுகளாக இருந்தால் சேர்த்து வைத்து விடலாம் , ஆனால் அவனை பெற்றதோடு இந்த உலக பாரம் போதும் என்று உயிரை விட்ட அவன் அன்னையை எப்படி அவனால் திருப்பிக் கொடுக்க முடியும்??
இறந்தவர்கள் திரும்பி வர கூடும் எனில் மரணத்துக்கு மதிப்பு ஏது, பயம் ஏது ??
"அம்மா வேணும்னா போட்டோல பாரு சாமி , ஆனா என்ன கல்யாணம் கட்ட சொல்லாத , எனக்கு இந்த உலகத்துல ரொம்ப பிடிச்சது நீ மட்டும் தான்... உன்னைய தாண்டி எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் வேண்டாம் .. எதுவும் தேவையில்லை என்ற தன் தகப்பன் மீசையை பிடித்து இழுத்த அந்த பாலகன் .
"உண்மையாவே உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமாப்பா..."
"ம்ம் பிடித்தம் தாண்டி எனக்கு நீதான் உயிர்"..
"பொய் சொல்லாத உனக்கு அம்மா மேல ஓவர் லவ் அதனால தான் இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டேங்கிற.."
"லவ்வுன்னா என்ன அர்த்தம் சாமி ?
லவ்வுன்னா அன்பு .. என கண்களை உருட்டினான்..
"ஓஓஓ அப்படின்னா உன் அம்மா மேலே அவ்வளவு அன்பு இருக்கு ...
"என்னவோ போப்பா நீ என்கூட சேர்ந்து உருப்படாம போற என்றவன் பார்வை முதல் வகுப்பு டீச்சரை பார்க்க ..
"எப்போ ..
"என்ன சாமி ? அவன் புக் பையை தூக்கி கொண்டு மகனோடு நடக்க ..
"அந்த டீச்சர் எப்படி இருக்கு .. அவர்களை பார்த்து சிரித்து கொணடு வந்த டீச்சரை மகன் கை காட்ட
"ம்ம் நல்லா இருக்கு ஏன் சாமி ? "
"இரு வர்றேன் என குடுகுடுவென ஓடிய மகன்..
"டீச்சர் டீச்சர் நில்லுங்க...
"என்ன குட்டி ?
"உங்களுக்கு குழந்தை இருக்கா?
"ஹாஹா எனக்கு கல்யாணமே ஆகல குட்டி
"ஓஓஓ அப்போ எங்க அப்பாவை கல்யாணம் கட்டிக்கிறீங்களா??" என்றதும் அவனுக்கு தூக்கி வாரிப்போட , ஓடி போய் மகன் வாயை பொத்தி தூக்கி கொண்ட ஆடவன்
"மன்னிச்சிடுங்க தாயி ... தகப்பன் கையை கடித்து விலக்கிய மகன்
"யப்போ நீ சும்மா இரு , நீயும் பொண்ணு பாக்க மாட்டேங்குற, நான் பாத்து கட்டி வைக்கிறேன்னு சொன்னாலும் வேண்டாங்கிற.. நீ அமைதியா இரு .. நான் பார்த்துக்கிறேன்" என்று பெரிய மனுஷன் தோரணையில் தகப்பனை அதட்டிய மகன்..
"டீச்சர் என் அப்பா பேரு தர்மதுரை, ஊர்ல தூரைன்னு சொல்லுவாங்க... அரசூர் பஞ்சாயத்து தலைவர் , ரெண்டு வீடு, விவசாயம் நிலம் ஏகப்பட்டது இருக்கு .. பணத்துக்கு பஞ்சம் இல்லை ஆனால் எங்க அப்பாவோட பொண்டாட்டி செத்துப் போச்சு, இப்ப நானும் அப்பாவும் மட்டும்தான்.. நீங்க கல்யாணம் கட்டிக்கிட்டீங்கன்னா, உங்கள கண் கலங்காம நாங்க ரெண்டு பேரும் வச்சுக்குவோம். என்று எங்கேயோ பார்த்த படத்தை வைத்து அவன் டயலாக் பேச .. துரைக்கு உதற ஆரம்பித்தது.. ஊர்ல உள்ளவன் நல்லது செய்றானோ இல்லையோ உபத்திரவம் மட்டும் டன் கணக்கில் செய்வார்கள் அதில் ஒன்னு தான் உங்க அப்பனை ரெண்டாம் கல்யாணம் பண்ண சொல்லு உனக்கு அம்மா வரும் என்று அந்த குருத்தின் மனதில் ஆசையை வளர்த்து விட... இவன் அன்று ஆரம்பித்து அப்பாவுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு தேட ஆரம்பித்து விட்டான்..
"டீச்சர் அப்பாவை கட்டிக்கிறீங்களா?
அந்த பாலகனின் பேச்சில் கோபம் வருமா? எவ்வளவாக தன் தகப்பன் மேல் பிரியம் இருக்கிறது என்பதுதான் அந்த ஆசிரியருக்கு தெரிந்தது ..அவன் தலையை வருடிவிட்ட ஆசிரியை ...
"எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் குட்டி
"ஓஓஓ சரி டீச்சர் நான் அந்த டீச்சர் கிடட் போய் கேட்கிறேன் என அரவிந்த் ஓட ...
"தாயி.. அவன் குழந்தை தனமா ..
"அட தப்பா நெனைக்கல சார் ... குழந்தை தாய்க்கு ஏங்கிறது போல இருக்கு .. ஏன் சார் இன்னொரு கல்யாணம் கட்ட மாட்டேன்னு சொல்றீங்க ..உங்கள பத்தி ஊர்ல உயர்வா பேசிக்கிட்டாங்க அதனால கேட்டேன்.. தப்பா நினைக்காதீங்க... "
"இல்ல தாயி, அவனுடைய இந்த சிரிப்புக்கும், பேச்சுக்கும் வேற எது நிகராக போகுது.. இவனோட இந்த சிரிப்பு கடைசி வரைக்கும் நிலைச்சிருந்தா அதுவே போதும்.. அதுக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.. அவன் பேசுனத தப்பா நினைச்சுக்காதீங்க .. பேச்சு தான் பலமா பேசுவான் , ஆனா உடம்பில் சத்தே கிடையாது கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க தாயி" என்று மகனை பிரிய மனமில்லாமல் அந்த ஆசிரியரின் கையில் கொடுத்துவிட்டு எவ்வளவுதான் தன் மனதை கடினமாக மாற்ற நினைத்தாலும் முடியாது மகனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டேன் வண்டியில் ஏறினான் ..
தர்மதுரை..
மகன் அரவிந்த் ...
துரை ஊருக்கு பண்ணையாராக இருந்தாலும் மகனுக்கு அவன்தான் பாலகன் அதட்டி உருட்டி தன் தந்தையை ஓட விடும் வல்லமை அந்தக் குட்டிக் குழந்தைக்கு தான் உண்டு... இவனும் மகன் கையில் அடங்கிப் போவதை பாக்கியமாக நினைத்து அவன் மடியில் தவழும் வளர்ந்த குழந்தை..
தகப்பனுக்கு பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு ஆசிரியரின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடினான் அரவிந்த் ...
கானகம் போல கேட்பாரற்ற ஒரு வாழ்க்கை.. அந்த ஆறடி மனிதனுக்கு காலையிலேயே துரை போன் அலறியது .. குளித்து கொண்டிருந்த துரை சோப்பு நுரையோடு ஓடி வந்தான் ... மகன் என்றும் அவனுக்கு ஆம்பூர் சிந்தாமணி தான் ...அரவிந்த் தான் அழைத்திருந்தார்...
அரவிந்த் வேலைக்கு இன்டர்வி வெளியூர் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தான்...
துரை
"சாமி சொல்லு "
எங்க இருக்க ?
"வீட்டுல குளிச்சிட்டு இருக்கேன்
" ஓஓஓ ...உன் போனுக்கு ஒரு போட்டோ அனுப்புறேன் அந்த பொண்ணு எப்படின்னு பாரு ..என்றதும் துரை போனில் போட்டோவை லோட் பண்ண ஒரு சேலை கட்டிய பெண் பஸ்ஸில் அமர்ந்திருந்தது போல வந்தது, முகம் எல்லாம் தெரியவில்லை ..
"யார் சாமி ?
ஆளு எப்படி இருக்கு ??
"நல்லா இருக்கு அவன் எங்க மூஞ்சை பார்த்தான் ..
"உனக்கு பேசி முடிச்சிடவா ..என்றதும் துரை அதிர்ந்து போய் பீதியிலேயே வச்சிருக்கானே என சோப்பை கூட துடைக்க தோணாது புலம்ப ஆரம்பித்து விட்டான் ..
"ஏன்டா இப்படி பண்ற வீட்டுக்கு வந்து சேரு சாமி
"ப்பா நீ இந்த பொண்ண கட்டிக்க பக்கத்தில இன்னொரு பொண்ணு செமையா இருக்கு அதை நான் கட்டுகிறேன் .. ஒரே மேடையில கல்யாணம் பண்ணி சரித்திர சாதனை படைப்போம்... என்ற மகன் பேச்சில் தலையில் அடித்து கொண்ட துரை ..
பஸ் எங்க வருது ?"
"இதோ ஊர் பக்கம் வந்திடுச்சி கூப்பிட வா , நான் அப்படியே பேச்சு கொடுத்து பார்க்கிறேன் , மசிஞ்சா அடுத்த நல்ல நாள் பார்த்து சிம்புளா கல்யாணம் , ரிசப்ஷன் பெருசா வைக்கலாம் என வைத்து விட்டான் ...துரை முகத்தில் சிரிப்பு ... மகன் என்ன பேசினாலும் அழகுதான் ...
அரவிந்த் ஒரு நாள் இல்லை என்றாலும் வீடே வெறுமை ஆகி விடும் .. அதுவே அவன் இருந்தால் தூங்கும் போது கூட காலை தூக்கி துரை மீது போட்டு கொண்டு கொஞ்சிக்கொண்டு சண்டை இழுத்து கொண்டே இருப்பான்... துரைக்கு இந்த வாழ்வு போதும் என்ற திருப்தியில் வாழ்கிறான் ...
நாமளா ஒன்னு நினைச்சு வாழ்ந்தா போதுமா? , கடவுள்தான் பேனாவை இடைக்கை வச்சில்ல தலையில விதியை எழுதி வச்சிருப்பான், ஆல் சந்து பொந்தில் இருந்தும் பிரச்சனை ஆன் தே வே ராசா .
2 வனம் சேர்ந்த ஐவணம் !!
புடுபுடுவென புல்லட் புகையை கக்கி கொண்டு அரசூர் சாலையில் வழுக்கி செல்ல வெள்ளை நிற வேட்டி சட்டையில் கம்பீரத்தை மொத்தமாக விலைக்கு எடுத்து கொண்டது போல தோரணையில் மீசையை ஒற்றை கை முறுக்கியபடி வண்டியை ஓட்டி கொண்டு வந்து பேருந்து நிலையத்தில் நின்றான் ..
தர்மதுரைக்கு இபபோது வயது பின் நாற்பது.. அதுவும் , அவன் வாயை திறந்து சொன்னால் மட்டுமே தெரியும்.. இளந்தாரி போல உடலும், வனப்பும் வேட்டி கட்டி மீசை திருக்க கொண்டு நடந்தால் ஆளை அடித்து வீழ்த்தும் கட்டுடல் மேனியான்...
"என்ன சாமி இந்த பஸ்சுல தான வருவான் ஆள காணல" என மீசையை திருகி கொண்டே கண்களை அலைய விட ..
"துரைஅஅஅஅஅஅ "என்ற மகன் குரலில் சிரித்தபடி திரும்பினான்... அரவிந்த் சட்டையை முறுக்கி கொண்டு டீக்கடையில் இருந்து வெளியே வர ..
எத்தனை மாற்றம் என் மகனிடம் ஒரு கையில் கிடந்த காப்பை ஏத்தி விட்டபடி ப்ளூ ஜீன் , கருப்பு சட்டையில் இளம் காளையாக வரும் மகனை துரை ரசிக்க..
எப்போதும் இளமை மாறாது சண்டீயர் அழகில் இருக்கும் தன் தந்தையை ரசித்து கொண்டு அரவிந்த் வந்தான் ...
"ஏப்போ சாமி வந்த?? ...
"அரை மணி நேரம் ஆகுது .. ஏன் லேட்டு ? என தந்தை பின்னால் ஏறி அமர்ந்து துரை இடையில் கையை விட்டு பிடித்து கொண்டு, அவன் தோளில் சாய்ந்த மகனை கண்ணாடியில் ஆசையாக துரை பார்க்க ...
"நீ உருப்படவே மாட்டப்பா, இப்ப கல்யாணம் பண்ணுவ நாளைக்கு கல்யாணம் பண்ணுவேன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து 20 வருஷம் ஓடிப்போச்சு இப்போ எனக்கே கல்யாண வயசு ஆகிப்போச்சு தெருவுல எத்தனை பொண்ணுங்க உன்னை சைட் அடிச்சுட்டு போகுது தெரியுமா? ஆனால் நீ என்ன சைட் அடிச்சுகிட்டு இருக்க.. இப்படியே போனா எப்பதான் உனக்கு கல்யாணம் ஆகிறது,
"கல்யாணம் பண்ற வயசா சாமி எனக்கு?
"உனக்கு என்ன வயசாகி போச்சு , பாரு நச்சு பிகரா இருக்க.. இவ்வளவு பெரிய பையனுக்கு தகப்பன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா? நீயும் நானும் அண்ணனும் தம்பி மாதிரி இருக்கோம்..
"அட சாமி!! வெட்டி பேச்சு, எதுக்கு பேசிகிட்டு இருக்க வேலைக்கு ஏதோ பரிச்சை இருக்குன்னு போனியே என்ன ஆச்சு?
"அதெல்லாம் எல்லாம் ஆச்சு ஆச்சு ,துரை
"ம்ம் சொல்லு சாமி" புல்லு கட்டை தூக்கி கொண்டு போகும் பெண்கள் அவனை வணங்க வணக்கம் போட்டபடி மகன் பேச்சை காதில் வாங்கினான் ..
துரை ஐயா என்றால் ஊரில் கடவுள் போல..
புள்ளைக்கு பால் இல்லை
துரை ஐயா வீட்டுக்கு போனா கிடைக்கும்
புருஷன் குடிச்சிட்டு அடிக்கிறான்
துரை ஐயா நாலு போடு போட்டா சரியா போகும்
பொண்ண படிக்க வைக்காம கல்யாணம் கட்டி கொடுக்கிறாங்க
துரை ஐயாக்கிட்ட வெளுபட போறான் ..
வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு
துரை ஐயாக்கிட்ட போனா சீர் செய்வார்.
கடவுள் கொடுக்க தாமதமாவது, கொடுக்க தயங்குவது கூட இந்த துரை செய்வான் ,கொடுத்து சிவந்த கரம் கொண்டவன் ... ஆனால், துரைக்கு கடவுள் செய்தது என்னவோ ஒட்டுமொத்த துரோகம் தான்...
துரை மகன் வளர வளர மரியாதை தேய்ந்து போய் தந்தை தோழன் ஆகி போனான்.. அரவிந்த் ஜாலியா இருந்தா துரை அன்னைக்கு ஏங்கினால் யப்போ, கோவம் வந்தா போப்பா என்று இவர்கள் இருவர் வாழும் வனம் அழகிய வனம் ...
"ம்ம் சொல்லு சாமி
போன இடத்துல ஒரு சூப்பர் பிகர் பார்த்தேன்னு சொன்னேன்ல... என்றதும் துரை மகனை திரும்பிப் பார்க்க...கண்ணை சிமிட்டிய அரவிந்த்
"ஆளு செம அழகு , உனக்கு ஜோடி பொருத்தம் செமையா இருக்கும்.. நீ மட்டும் ம்னு ஒரு வார்த்தை சொல்லு போய் பேசி முடிச்சிடலாம் ..
"கிறுக்குத்தனம் பண்ணாத சாமி.. வளர்ந்த பையனை வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு நான் கல்யாணம் பண்ணுனா ஊரு கைக்தட்டி சிரிக்கும்..
"ஊருக்கு வேற வேலை இல்ல, நமக்கு தேவை ஒரு அம்மா இன்னும் உனக்கு ஒரு மாசம்தான் டைம் அதுக்குள்ள ஓகேன்னு சொல்ற... உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன், மாட்டேன்னு மறுத்தேன்னு வையி கைய கால கட்டி தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி வச்சிடுவேன் ஜாக்கிரதை..
"ஏன் சாமி இப்படி உயிரை எடுக்கிற, அதான் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல...மகன் முகத்தை தூக்கி வைத்து கொள்ள இருவருக்கும் முட்டி கொள்ளும் ஒரே விஷயம் இது ஒன்றுதான்
அரவிந்த் தன் பத்து வயதில் ஒரு பெண்ணின் வீட்டில் போய் அமர்ந்து கொண்டு, இந்த பொண்ண எங்க அப்பாவுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க போறீங்களா இல்லையா என்று சண்டை போட்டான்.. 20 வயதில் தன்னோடு படிக்கும் பெண்ணை எங்க அப்பாவ கல்யாணம் கட்டிக்க என்று அடாவடி பண்ணினான்.. 25 வயதில் பொண்ணைய பார்த்து வச்சிட்டு, தகப்பனை அழைத்து சென்றுவிட்டான்... இவன் செய்யும் ஐச்சாட்டியம் தாங்க முடியாமலேயே துரைக்கு தூக்கம் போய்விட்டது...
தன் தந்தை தனிமைக்கு ஒரு துணை சேர்த்து விட வேண்டும் என ஆசையில் தவிக்கும் மகன் ..
தான் இணை சேர்ந்து விட்டால் அவன் துணை இன்றி போய் விடுவான் என ஓடும் தகப்பன் ...
கடவுள் எப்பவும் தேவையான நேரத்தில் அருள் கொடுக்க மாட்டார் , போடா நீ ஒன்னும் கருணையே காட்ட வேண்டாம் என மனம் நோகும் வேளையில் அருளை குண்டக்க மண்டக்க அள்ளி அள்ளி குடுப்பான் அப்படித்தான் துரை வாழ்க்கை ஆக போகிறது என தகப்பன் மகன் இருவரும் அறிந்திருக்க மாட்டார்கள்...
காலை துரை செய்தி தாளை புரட்டி கொண்டிருக்க அவன் கண்ணில் வெண்மை நிற புடவையின் கீழ்த்தளம் தெரிய செய்தித்தாளை நகட்டி துரை பார்க்க ..
"வணக்கம் சார் என்று நடுத்தர வயது பெண் ஒருத்தி நின்றாள்....
"வணக்கம் தாயி யார் நீங்க ?
"நான் மருதாணி , இந்த ஊர் ஆஸ்பத்திரிக்கு நர்ஸ் வேணும்னு விளம்பரம் பார்த்து வந்தேன் என்ற பெண்ணின் ஆடை சொன்னது அவள் கைம்பெண் என்று ....
மருதாணி!!!
மாசு மரு இல்லாத முகமும் , சாந்தம் குடிகொண்ட கண்களும் , அடக்கமான உடை அணிந்த நின்ற விதமும் ஆண் கண் கூட பார்க்காது தரை பார்த்து பேசும் நன்னடத்தையும் அவனை தவிர பிறர் காது கேட்காத குயிலை விட மெல்லிய குரலும் ..நல்ல மருதாணி பேருக்கு ஏற்ப நிறம் உடல் மங்கிய நிற காட்டன் சேலை துடைத்து வைத்தது போல முகம் அதில் பொட்டில்லை, கழுத்தில் தாலி இல்லை , கண்களில் ஜீவனும் இல்லை .. அழகுக்கு பஞ்சம் இல்லை.. அவள் மருதாணி பெயரில் வண்ணத்தை தெளித்த கடவுள் வாழ்க்கையில் தெளிக்க மறந்து போனார் போலும்... அத்தனையும் அழகு ஆனால் அந்த அழகின் சொச்சம் கூட வாழ்கையில் கிடைத்தது இல்லை புயலில் தத்தளிக்கும் படகு போன்ற ஒரு வாழ்க்கை ..அதிலும் சிரித்தபடி பிரயாணம் செய்யும் அவளும் தேவதைதான்..
ஓஓஓ ...என்றவன் கவனத்தை மகன் ஈர்த்து கொண்டான்
"துரைஏஏஏஏஏஏஏஏ என் சார்ஜரை காணல எங்க வச்ச என ஓடி வந்தவன்... கண்கள் அகல நின்றான் ..
"வாவ்!!! வாட் ஏ ப்யூட்டி" என தன்,வீட்டு கேட்டை திறந்து கொண்டு ஓடி வந்த பெண்ணின் மீது அரவிந்த் பார்வை ஆர்வமாக படிந்து, அருகே நின்ற நடுத்தர வயது பெண்ணை தொட்டது ..
"யாரு துரை இவங்க?
"நம்ம ஊர் ஆஸ்பத்திரிக்கு நர்சா வந்திருக்காங்க சாமி..."
"ஹாய் க்கா " என்றவன் பார்வை துள்ளி கொண்டு வந்த அந்த பெண்ணை ஆசையாக நோக்கியது
"வணக்கம் தம்பி"
"இது உங்க தங்கச்சியா அக்கா" ..
"இல்லைங்க தம்பி , என் பொண்ணு துர்கா ....
"ஓஓஓ பொண்ணா உங்கள பார்க்க ரொம்ப சின்ன பொண்ணா இருந்தது அதான் கேட்டேன் ."
37 வயசு ஆகி போச்சி.. சின்ன வயசுல கல்யாணம் ஆகி என அந்த பெண் முகத்தில் சொல்ல முடியாத வேதனையின் சாடை ..
"சாரி க்கா...
"பரவாயில்லை தம்பி ...
"துரை பாவம் வேலை போட்டு கொடுத்துடு .. அப்படியே நம்ம வீட்டுக்கு பின்னாடி இருக்கிற வீட்டுல தங்கிக்க சாவி கொடு "..துரை மகன் கட்டளையில் அதிர்ந்து போய் அவனை தனியாக கண்காட்டி..
"சாமி உள்ளார வா என்றுவிட்டு உள்ளே போய்விட்டான்..
"என்ன துரை ? தளதள என்று சுடிதாரில் வந்து நின்ற மான்குட்டி கண்டு மனசு ஏதோ துள்ளியது ...
"எப்படியாவது உசார் பண்ணிடணும்" என்று அரவிந்த் கணிப்பு வேறு பக்கம் ..
"சாமி வேலை கொடுக்கலாம் , ஆனா வேற எங்கேயும் தங்க இடம் பார்க்கலாம்
"ஏன் எப்பவும் பின் வீட்டுல தான தங்க வைப்போம் இப்ப என்னாச்சி ??"
"ப்ச் சொன்னா கேளு சாமி மத்தவுக போல இது கிடையாது அந்த பிள்ளையை பார்த்தா ..
"பார்த்தா
"ப்ச் உனக்கு புரியாது ..ஊர் தப்பா பேசும் சாமி ..
""இங்க தான் தங்கணும் முடியுமா முடியாதா துரை ..
"சரி சாமி உன் இஷ்டம் போல பண்ணு "என சாவியை எடுத்து கொண்டு போய் துரை மருதாணி கையில் விரல் கூட படாது வைக்க ..
"நன்றி" என மருதாணி வாங்கி கொண்டு மகளை அழைத்து கொண்டு பின்னால் வீட்டை நோக்கி நடக்க... இருபது வயது துர்கா துருதுரு கண்ணை உருட்டி அரவிந்தை பார்க்க, அவன் தலையை கோதி கொண்டே அப்பெண்ணை பார்த்து கண்ணை சிமிட்ட ..
சாமி சத்தியமா ஹீரோ ஹீரோயின் இதுக இல்ல ..
அரவிந்த் காதலுக்கு எதிரி தன் தந்தை என கனவிலும் நினைத்திருக்க மாட்டானோ இவர்கள் இருவரும் கண்ணால் கதை பேச ஆனால் கடவுள் முடிச்சி போட்டதோ இவன் தந்தை துரைக்கும் , அவள் அன்னை மருதாணிக்கும்..
எடக்கு மடக்கா ஒரு காதல் !!
இந்த ஆண்கள் வனத்தில் மருதாணி வாசம் வீசுமா?புயல் வீசுமா??
நடுத்தர வயதினர் ஏக்கங்களை சுமந்து ஒரு காதல் கதை ..
3 வனம் சேர்ந்த ஐவணம்!!
"அக்கா எதாவது ஹெல்ப்புன்னா கேளுங்க செய்றேன் என்று அரவிந்த் வேகமாக சத்தம் கொடுக்க துர்கா தாய்க்கு தெரியாது அரவிந்தை திரும்பி பார்க்க போக அவள் கையில் கிள்ளு விழுந்தது ..
"அங்க என்னடி பார்வை?? என்ற மருதாணி கறார் குரலில் ..
"இல்லம்மா அது ?
நம்ம தகுதி என்னன்னு உனக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்ல துர்கா .. மாச சம்பளம் கைக்கு வந்தா தான் நம்ம வயிறு நிறையும் ... அதோட தனியா இருக்கிற நாம ரெண்டு பேரும் எல்லாத்துலேயும் கவனமா இருக்கணும் ... புரியுதா ?
"சரிம்மா..
"என்னைக்கு காலேஜ் போய் மார்க் சீட் வாங்கணும்?? துர்கா இப்போதுதான் முதல் வருட காலேஜ் செல்கிறாள் .. இப்போது வேறு காலேஜில் சேர்க்க இடம் தேடுகிறாள் .. தனியாக மகளைத் தத்தி தத்தி கரை சேர்க்கும் அன்னம் அவள்.. அதனால் எல்லாவற்றிலும் வெகுவாக மிகவும் கவனமாகத்தான் இருப்பாள்.. அவளை விரல் நீட்டி ஒருவரும் குறை சொல்ல இயலாது, வேலைக்கு போவா, வருவா அத்தோடு முடிந்தது என்பது போல் தான் அவளுடைய செம்மையான நடவடிக்கை இருக்கும்.. வெளியே வீணாய் தலை தெரியாது , அப்படியே மகளோடு வந்தால் கூட கடையில் வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு குனிந்த தலை நிமிராமல் வீட்டுக்குள் சென்று முடங்கிக் கொள்வாள்.. இல்லை இந்த சமுதாயம் முடக்கி விடுமே...
"திங்கள் மா..
"ம்ம் ரெண்டு நாள் இருக்கிற இடம் வெளிய தெரிய கூடாது அந்த பையன் வந்து பேசினாலும்
"பேச மாட்டேன் மா .... என்ற மகள் தலையை வருடி விட்ட மருதாணி
"அம்மா சொல்றது உனக்கு கோவம் கூட வர வைக்கலாம் துர்கா ஆனா?? ..
"ம்மா நீங்க சொன்னா சரியா இருக்கும்னு , நான் நம்புறேன் எனக்கு கெட்டதுக்கு நீங்க சொல்வீங்களா... ஆனா கொஞ்சம் எங்கிட்ட ப்ரீயா இருக்கலாமேம்மா... இப்படி கறாரா இருந்தா பயம் தான் வருது .. "
"என்ன பண்ண சொல்ற துர்கா , உலகத்துக்கு பயந்து என்ன இப்படி மாத்திட்டேன் , கடைசியா அதுவே பழகி போச்சி போ" என இருவரும் துரை வீட்டுக்கு பின் வீட்டில் குடித்தனம் வந்தனர்...
அவர்கள் கட்டுக்கோப்பாக கன்னியமாக இருந்தாலும் நேரம் போகாத ஊர் கண்ணு சும்மா விடணுமே..
"சாமி , இப்ப நீ அப்பா சொல்றது எதையும் கேட்க மாட்டேங்கிற என்று கிரிக்கெட் விளையாடுவதற்கு மட்டையை எடுத்துக் கொண்டிருந்த அரவிந்த் பின்னால் துரை சத்தம் கொடுக்க ..
"நீ மட்டும் கேட்டியா, 20 வருஷமா கேட்டுட்டு இருக்கேன் .. எனக்கு ஒரு மம்மி ரெடி பண்ணி கொடுன்னு நீ கேட்காம திமிரு பண்றல்ல , அதே மாதிரி தான் தகப்பன் கன்னத்தில் இச் வைத்து பைக் சாவியை எடுத்து கொண்டு நடக்க ...
"அதுவும் இதுவும் ஒன்னா சாமி , வயசான பிள்ளைகளை கூப்பிட்டுக் கொண்டு வீட்டுக்கு பின்னாடி உட்கார வைன்னு சொல்ற, ஊர் உலகத்துல பார்க்கிறவன் என்ன பேசுவான் சொல்லு .. அரவிந்த் காட்டு புதர் முடியை கையை வைத்து துரை கோதி விட்டான் ..
"என்ன பேசுவான், எதுவும் பேச மாட்டான் ஆம்பள துணை இல்லாத அவங்க ரெண்டு பேரையும் ஊர் எல்லையில் இருக்கிற வீட்ல தங்க வச்சா, நாளைக்கு பின்னுக்கு பிரச்சனை வந்தா நீயும் நானும் தான் ஓடணும்.. ஊர்காரனா ஓடுவான்... தன் மீசையை சீவி கண்ணாடியில் முன்னும் பின்னும் பார்த்து கொண்டு கேட்க..
"அட ஆமா, இதை யோசிக்கவே இல்ல ஆனா ஊருக்குள்ள ஏதாவது வீடு பார்த்து தங்க வஞ்சிருக்கலாமே ..."
"இப்ப எதுக்கு இவ்வளவு பேசுறப்பா , அவங்க என்ன நம்ம வீட்டுக்குள்ளேயா வந்து இருக்காங்க பின்னாடி ஒரு ஓரத்தில் இருக்க போறாங்க நாம இங்க இருக்க போறோம், இதுல என்ன பிரச்சனை வந்திட போகுது... " அவனுக்கே சலிப்புதான் துர்காவை அன்று பார்த்ததோடு சரி, இவனும் உசார் பண்ண பன்னிகுட்டி போல் எல்லாம் உருண்டு பார்த்து விட்டான் ஆள் வெளியே வரவே மாட்டைக்குது ..
ப்ச் எப்படியோ போ ... என வெளியே சத்தம் கேட்டு துரை நேர் கொண்ட நடையோடு வெளியே போனான்... மகனிடம் அன்புக்கு அடிமை .. மகன் அவனுக்கு அதிபதி,, ஆனால் வெளியே துரை ஐயா என்றால் அந்த பயமும் மதியாதையும் தனி தேஜஸ் கொடுக்கும்...
வெளியே ஒரு பெண் உதடு கிழிந்து நிற்க அருகே அவள் கணவன் அவளை அடிக்க பாய ..அத்தனை நேரம் தன்மையாக நின்ற துரை, வேட்டியை ஏத்திக் கட்டி கொண்டு பாய்ந்து போய் அவன் நெஞ்சில் மிதித்து தள்ளி
"பெண்ணும் சாமியும் ஒன்னுடா.. சாமியை கை நீட்டி அடிக்க போற "
"ஐயா அவ எனக்கு துரோகம் பண்ணி புட்டாங்க என்று அவன் பெரும் பழியை அப்பெண் மீது போட அது பாவமாக கதறியது....
"இல்ல ஐயா அவுக அம்மா சொல்றது கேட்டுபுட்டு என்ன அசிங்கம் பண்ணுதாக என்று அப்பெண் அழ .. மீசையை திருகி அந்தப் பெண்ணின் முகத்தை இரண்டு நிமிடம் கூர்மையாக பார்த்த துரை..
"நீ தப்பு செய்யல தானே"
"செய்யல ஐயா ,
"பின்ன எதுக்கு உன் கண்ணீரை வீண் பண்ற எப்பவும் யாருக்கும் உன்னை நிரூபிக்கணும் என்கிற அவசியம் கிடையாது தாயி, அதுவும் உன் புருஷனுக்கு நிரூபிச்சுதான், நீ அவனுக்கு பொண்டாட்டியா இருக்கணும்னா.. அப்படி ஒரு வாழ்க்கை உனக்கு அவசியமே இல்ல.. இன்னைக்கு நீ தப்பு பண்ணிட்டேன்னு சந்தேகப்படுற இவன்.. நாளைக்கு உன்னை கொல்ல கூட தயங்க மாட்டான், தாலியை கழட்டி கொடுத்துட்டு பொறந்த வீட்டுக்கு போய் சேரு தாயி என்றான் துரை... அவன் தீர்ப்பில் சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.. அந்தப் பெண் இரண்டு நிமிடம் அழுது தீர்த்துவிட்டு தன் தாலியை கழட்ட போக..
"இரு தாயி ...என்று நிறுத்திய துரை ... அவள் கணவனை கை நீட்டி அருகே அழைக்க
பவ்வியமாக கைகட்டி வந்து பக்கத்தில் நின்றான்..
"உன் அம்மைக்கும் கிழக்கு தெரு முனியாண்டிக்கும் தொடர்பு இருக்கு, உன் தங்கச்சி அந்த சீனிவாசன் கூட தோட்டுத்துல சுத்துது "என்றதும் அவன் சீறி துரையை முறைக்க ..
"ஹான் கோபம் வருதா ? உன் தாயை சொன்னா கோவம் வருது, தங்கச்சியை சொன்னா கோபம் வருது ஆனா எவளோ பெத்து , நீ சீரும் சிறப்புமாக பாத்துக்குவேன்னு நினைச்சு உன் கூட அனுப்பி வச்சா , அவள குறை சொல்லி விரட்டிவிட பார்க்கிற... உன் தாய்க்கும் தங்கச்சிக்கும் நியாயம் செய்கிற நீ , உன் பொண்டாட்டிக்கு என்ன செஞ்ச.. நீயே யோசித்துப் பார் .. முகம் முழுக்க அடிச்சு ரத்தம் ஆக்கி வைத்திருக்கிற.. ஒரு நாளாவது குடிக்காம வீட்டுக்கு வந்து இருக்கியா, அப்பவும் அவள் உனக்காக குத்த வச்சு உட்கார்ந்து சோறு தண்ணி வடிச்சு போடுறா.. நீ பெத்து போட்ட பிள்ளைகளுக்கு தாயா இருக்கா , உன் தாய் உசத்திதான் ... ஆனா உன் பொண்டாட்டி அதைவிட ஒரு படி ஒசத்தி... உன் தாயா பொண்டாட்டியான்னு யோசிச்சுட்டு முடிவு பண்ணு .. தாயா இல்ல தாரமா?? ... தாய்னா தாய் பின்னாடி போ .. பொண்டாட்டி முக்கியம்னா அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போ" அவன் சொன்ன உண்மைகள் அந்த ஆடவனை சுட்டது.. வேகமாக மனைவியின் காலை கூட பிடிக்க தயங்காமல் காலை பிடித்து மன்னிப்பு கேட்டவன்..
"மன்னிச்சிடு புள்ள என் ஆத்தக்காரி சொன்னான்னு உன்ன கண்ட தனமா பேசிட்டேன் இனிமே நான் சரியா இருக்கேன் நீ சொன்ன மாதிரி நாம தனியாவே போயிடலாம் , என் மனைவியை அணைத்துக் கொண்டு செல்ல ..
பெருமூச்சு விட்டு துரை வீட்டுக்குள் போய்விட... இங்கே நடந்த பஞ்சாயத்தை வேலைக்கு போக கிளம்பி வந்த மருதாணி கேட்டுவிட்டு மெச்சிக்கொண்டாள் ..
இனி இங்கே பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது ..
"வாழ்க்கை முழுவதும் ஆண்களுக்கு பயந்து பயந்து ஓடிய மருதாணிக்கு இந்த வனத்தில் பாதுகாப்பு கிடைக்கும் "என முதல் பார்வையில் துரை நம்ப வைத்தான் ... நன்னடத்தை விதிகளை ஊர் சொல்லி கேள்வி பட்டவள் ரெண்டு நாளாக அவனின் செயல்களை கண்கூடாக பார்த்து கொண்டு தான் இருக்கிறாள்.. அவன் மீது மதிப்பு கூடியது .... துணிந்து அவனிடம் உதவி கேட்க வந்தாள் ...
ஐயா!! என வெளியே மருதாணி குரல் கேட்டு துரை சட்டையை மடக்கி விட்டபடி வெளியே வந்தான் ..
"என்ன தாயி வீடெல்லாம் செளவுக்கியமா இருக்கா ...
"ஆமாங்க ஐயா
"எதுவும் உதவி வேணுமா ?
"ஆமா ஐயா "
"என்ன தாயி??
"என் மகளுக்கு ___ காலேஜ்ல சீட்டு வேணும்
"ஓஓஓ ..இப்ப எங்க படிக்குது..
"__ காலேஜ்...
"அது இஙாகன பக்கத்துல இருக்கே எதுக்கு தொலைவா இருக்கிற காலேஜ்ல சேர்க்கணும்..
"அது" அவள் தலையை குனிய
"சரி தாயி" என் மகனார் படிச்ச காலேஜ் தான் பேச சொல்லி புடுதேன்....
"ரொம்ப நன்றிங்க..
"எதுனாலும் கேளு தாயி முடிஞ்ச உதவி பண்றேன்
ம்ம் சினேகமாக சிரித்து விட்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்...
சிலநேரம் உதவிகள் கூட உபத்திரவம் ஆக கூடும் ..
கிரிக்கெட் விளையாடி உடல் எல்லாம் மண்ணும் புழுதியுமாக வந்து துரை அருகில் பொத்தென்று அமர்ந்தான் அரவிந்த்..
"சாமி அந்த புதுசா வந்த நர்ஸ் புள்ள மகளுக்கு நீ படிச்ச அந்த காலேஜ்ல சீட்டு வேணுமாம் கொஞ்சம் என்ன ஏதுன்னு பார்த்து சேர்த்து விட்டுடு..
ஐ என்று மனதிற்குள் துள்ளாட்டம் போட்ட அரவிந்த்..
"எப்போய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நான் போன வாரம் வேலைக்கு இண்டர்வியூ போனேல்ல அது எங்கேன்னு நினைச்ச அந்த ஊர்ல உள்ள ___ கம்பெனிக்கு தான் ... இன்னைக்கு தான் எனக்கு ஆர்டர் வந்துச்சு...இனி உன் மகன் சம்பாதிக்க போறான் , சும்மா காலரை கெத்தா தூக்கி விட்டுக்க... அரவிந்துக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியை விட துர்கா படிக்க போகும் ஊரில் வேலை கிடைத்தது தான் இரட்டிப்பு மகிழ்ச்சி .. கண்ணா ரெண்டு தின்ன ஆசையா போல குதித்தான்
"அப்படியா சொல்லவே இல்ல , அப்போ நீ வேலைக்கு அங்க போயிடுவியா .. துரைக்கு தன் மகனுக்கு வேலை கிடைத்தது என்னும் சந்தோஷத்தை விட தன்னை விட்டு மகன் பல கிலோமீட்டர் தொலைவில் சென்று விடுவானே பதக்கென்று இருந்தது..
துரைக்கு அவனைப் பிரிந்து இருக்க முடியாது என்பதற்காகவே அவன் படித்து முடிக்கும் வரை காலேஜ் பக்கத்திலேயே வீடு எடுத்து இருவரும் தங்கி கொண்டார்கள்...
இப்போது இங்கே வயற்காடுகளில் விதை விதைத்து நெல் பருவத்திற்கு நிற்கிறது, இவனை நம்பி ஏகப்பட்ட தொழிலாளர்கள் இங்கே இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் திடுதிப்பென்று விட்டுவிட்டு அங்கு செல்ல முடியாது என்ற கவலை...
ஆனால் மகனுக்கோ வந்த நாளிலிருந்து கதவை கூட திறக்காமல் உள்ளேயே இருக்கும் பின் விட்டு ரோஜா மலர் மீது ஈர்ப்பு..
இங்கே தானே முடியாது , இனி வேலை செய்யும் இடத்தில அவளைப் பார்க்கலாம், பேசலாம் என்ற ஆசை ...
"நான் என்ன தென்கொரியாவில் போய் வேலை பார்க்க போறேன் , வாரத்துக்கு ஒரு தடவை வரப் போறேன் அதுக்கு எதுக்குப்பா நீ பீல் பண்ற...
"ஒரு வாரத்துக்கு ஏழு நாள் இருக்கே சாமி
நீ இல்லாம இந்த வீடு வெறுமையா இருக்குமே..
" அப்ப வேணும்னா நான் உன் மடிகுள்ளவே இருந்துக்கவா என்னப்பா நீ , ஆம்பள பையன் வேலைக்கு போனாதான் மவுசு.. நீ சம்பாதித்து வச்ச பணத்தில் நான் தின்னா, உனக்கு என்ன மரியாதை இருக்கும் புரிஞ்சுக்கோப்பா" என்று தன் அப்பனுக்கே பாடம் எடுத்த மகனை பாவமாக பார்த்த துரை
"சரி "என்று விருப்பமில்லை என்றாலும் மகனுக்காக அவனுக்கு ஆயிரம் அறிவுகளை சொல்ல துரை வாயை திறக்க.. அரவிந்த் அவன் வாயை அடைத்து விட்டு லட்சம் அறிவுரைகளை சொல்லி முடித்தான்
"நான் இல்லை என்கிறதுக்காக சாப்பிடாம இருக்காத, டெய்லி நான் உனக்கு போன் போடுறேன் ஒழுங்கா தூங்கு .. என் போட்டோ பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்காத, நான் போன பிறகு நல்லதா ஒரு பொண்ண பார்த்து உஷார் பண்ற வழிய பாரு , உனக்கும் எனக்கும் ஒரே மேடையில் கல்யாணம் சொல்லிப்புட்டேன்..
"போடா கிறுக்கு பயலே" என்று மகன் தோளில் அடித்து துரை அரவிந்தை பேருந்தில் ஏற்றி விட...
"அதே பேருந்தில் ஓடி வந்து துர்காவும் ஏறினாள்..மருதாணி மகள் பின்னால் மூச்சிரைக்க ஓடி வந்து ...
"பார்த்து போயிட்டு வா துர்கா , கவனமா இரு நல்லா படி நம்ம வேலை படிக்கிறது மட்டும்தான், வேற எதிலும் கவனத்தை செலுத்தாத.. போன் போடு என்று மகளுக்கு அறிவுரைகளை கூறி.. மருதாணி கையை அசைத்து விட்டு , அவளும் வீடு நோக்கி வர... துரையும் அதே பாதையில் நடக்க இருவர் பாதையும் ஒன்றாக இணைந்தது ...துரையின் கால் தடம் முன்னால் விழ அவனுக்கு பின்னால் மருதாணியின் கால் தடங்கள் பின்தொடர்ந்தது..
பாதையில் மட்டும் அவர்கள் பாதங்கள் ஒன்றாக இணையவில்லை, இனி வாழ்க்கையிலும் அவர்கள் இதயங்கள் ஒன்றாக இணையும் என்று நாசுக்காக கடவுள் காட்டினாரோ??
இரு வேறு திசையில் , இரு ஜோடிகள் ....
4 வனம் சேர்ந்த ஐவணம் !!
நடுத்தர வயது வந்த தன்னையே இந்த சமுதாயம் ஓட ஓட விரட்டி அடிக்கிறது வயதுக்கு வந்து மூக்கும்,,முழியுமாக இருக்கும் துர்காவை கையில் வைத்து பாதுகாப்பது கண்ணாடி பொருளை வைத்திருப்பது போலவே மருதாணிக்கு தோன்றல், ஏற்கனவே வேலை பார்த்த மருத்துவமனையில் மருத்துவர் மருதாணியிடம் தவறாக நடந்து கொள்ள எதிர்த்து நிற்க திராணி இல்லை .. தனக்காக நிற்க யாரும் இல்லை அரசூர் ஆஸ்பத்திரியில் வேலைக்கு வாய்ப்பு இருக்க மகளை இழுத்து கொண்டு இரவோடு இரவாக மருதாணி டிரைனில் ஏறி விட்டாள் ..
எல்லா இடத்திலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு , முன் வேலை பார்த்த மருத்துவமனையில் நல்ல மருத்துவர்கள் பலர் உண்டு தான்... ஆனால் அவர் டீன் எனவே யார் தனக்கு உதவ கூடும் ..யாருக்கும் சங்கடம் கொடுக்காது முள் கிடக்கு தாண்டி போயிடுவோம் என மருதாணி கிளம்பி விட்டாள் ...
நேற்று வரை இல்லாத தனிமை துரைக்கு ... அந்த பெரிய வீட்டில் அரவிந்த் இல்லாமல் ஏதோ போல இருந்தது எப்போதும் இருவரும் அரட்டை அடித்து கொண்டும் சேர்ந்து படம் பார்ப்பது , குளத்துக்கு ஒன்றாக போய் குளிப்பது என தோழரகள் போலத்தான் துரையும் அரவிந்தும்... அதனாலேயே வாழ்கையில் ஒரு நாள் கூட சலிப்பு தட்டியது இல்லை ... வரவேற்ப்பு அறையில் கிடந்த அரவிந்த் தாய் புகைப்படத்தை துரை மெல்ல வருடினான்
"உன் மகனை பார்த்தியா அருணாம்மா, தோளுக்கு மேல வளர்ந்து இப்ப வேலைக்கு போயாச்சி ம்ம் இதை எல்லாம் பார்க்க உனக்கு தான் கொடுத்து வைக்கல "என்று தீர்க சுமங்கலியாக அர்விந்த் போல சிவந்த நிறத்தில் அழகாக இருந்த அருணாவை துரை கண்கள் வெகு நேரம் பார்த்து கொண்டிருந்தது...
"ஐயா" மருதாணி குரல் வெளியே கேட்டு கழட்டி போட்ட சட்டையை மறுபடியும் எடுத்து மாட்டி கொண்ட துரை வரவேற்பு அறை வந்தான்..
"என்ன தாயி ??"
"ஆஸ்பத்திரியில எந்த மருந்தும் இல்லங்க, சும்மா பேஷிக் மெடிசன் தான் இருக்கு ... அவசரத்துக்கு பேர்கால கேஸ் வந்தா கூட , கொடுக்க மருந்து இல்லைங்க..
"என்னது இல்லையா, நல்லா விசாரிச்சிங்களா தாயி?" அருணா சரியான மருத்துவம் இல்லாமல் பேர்காலத்தில் இறந்து போனாள் என்ற காரணத்துக்காகவே அருணா நிலை எந்த பெண்ணுக்கும் இனி வந்து விட கூடாது என தன் கைகாசு போட்டு கட்டிய மருத்துவமனை.. அவன் மருத்தவ நண்பனிடம் பொறுப்பு கொடுத்தான் அவர் இறந்த பிறகு இப்போது அவர் மகன் பொறுப்பு எடுத்து பத்து மாதம் தான் ஆகிறது..
"ம்ம் அங்க விசாரிச்சா , எல்லாம் அப்படிதான்னு சலிப்பா பதில் சொல்றாங்க... இருக்கிறது ஒரு ஹாஸ்பிட்டல் ஆத்திர அவசரத்திற்கு உயிரை காப்பாத்துறதுக்கு கொஞ்சமாவது மருந்து இருக்கணும் ..இங்க எதுவுமே இல்லங்க , பேருக்கு தான் ஆஸ்பத்திரியின்னு இருக்கு, ஆனா அங்க அடிப்படை வசதி கூட இல்லை.. ஊர்ல நீங்க தான் பெரிய ஆளுன்னு சொன்னாங்க.. அதனாலதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைப்போன்னு வந்தேன் தப்பா நினைச்சுக்காதீங்க.. "என்றதும் துரைக்கு அதிர்வுதான்..
மருத்துவமனைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று மருத்துவர் ஏகப்பட்ட பணங்களை துரையிடம் வாங்கியிருக்கிறார்... ஆனால் துரை ஒரு நாளும் கணக்கு கேட்டது கிடையாது.. உள்ளே போய் பார்த்ததும் இல்லை இன்று மருதாணி வந்து சொல்லவில்லை என்றால், இவை எதுவுமே தெரியாது ..
"சரி தாயி என்ன ஏதுன்னு பார்த்து செஞ்சுபுடுறேன் என்ன தேவன்னாலும் வந்து கேளுங்க , கண்டிப்பா செஞ்சு தர்றேன்.. இது என் கண்ணுக்கு தெரியாம நடந்தது, இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக்கிறேன் , இந்த ஒரு வாட்டி மன்னிச்சுக்கோங்க தாயி " என்றதும் மருதாணிக்கு உண்மையிலேயே எதிரில் நின்றவன் மேல் வியப்புத்தான் வந்தது ... தன் மீது தவறி இல்லை என்றாலும் நான் பெரிய ஆளு என்ற கெத்து இல்லாமல் மன்னித்துவிடு என்று கூறும் ஆணை எ
இன்று தான் பார்க்கிறாள் போல்..
"அய்யோ!! என்ன மன்னிப்பு எல்லாம் என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க, உங்க காதுக்கு எப்படியும் இதெல்லாம் வந்திருக்காதுன்னு தெரியும் அதனால தான் வந்து சொன்னேங்க... வர்றேன்" என மருதாணி மருத்துவமனை நோக்கி நடந்து போக.. துரைக்கும் மருதாணி மீது ஒரு நல்ல எண்ணம் வந்தது ...
"நல்லவேளை இந்த புள்ள வந்துச்சு இல்லன்னா இன்னும் என் தலையில மிளகாய் அரைச்சி இருந்து இருப்பானே முதல்ல இந்த டாக்டரை மாத்திட்டு வேற டாக்டரை போடணும் "என்று உடனேயே மருத்துவமனை நோக்கி வண்டியை விட்டு விட்டான்
மருதாணி மருத்துவமனைக்கு உள்ளே வரும் போது பெரிய சண்டையே நடந்து கொண்டிருந்தது ..அவள் காலை உள்ளே வைக்க பளார் பளார் என துரை கையில் அங்கே வேலை பார்க்கும் மருத்துவருக்கு அடி விழ மருதாணி அதிர்ந்து போனாள் ..
"மக்கள் பணத்துல தின்னு கொழுத்துட்டு ஏகத்தாளமா பேசுறியா தொலைச்சி கட்டி புடுவேன் ராஸ்கல்... வெளியே போறியா இல்ல போலீஸ்ல புடுச்சி கொடுக்கவா" என்று துரை மீசையை திருகி கொண்டு துரை நிற்க ...அவனோ மருதாணியை முறைத்தான்.. அதற்கும் ஒரு அடி போட்ட துரை..
"அங்க எனனடா முறைப்பு நீ செஞ்சதைதான சொன்னாங்க அங்க வாலை ஆட்ட நினைச்ச கண்ணை புடுங்கி விட்டிருவேன் ஓடு "என்று விரட்டி அடிக்க.. மருதாணியை கடக்கும் வேளை .. டாக்டர் குமரன்
"இடம் தெரியாம கையை வச்சிட்ட, இதே இடத்துல உன் மானத்தை வாங்காம விட மாட்டேன்" என்று அவளை முறைத்து கொண்டே போக..
"தேவையில்லாத வேலையில மூக்கை நுழைச்சிட்டேனோ??? என மருதாணி சற்று பயம் கொள்ள ...
"இன்னொரு டாக்டர் வர்ற வரை இந்த தாயி எல்லாம் பார்த்துக்கும் அதுக்கு மரியாதை குறைய புடாது" என அனைவருக்கும் பொதுவாக துரை கூறி விட்டு மருதாணி அருகே வந்தவன்...
"அவன் ஒரு சல்லிப்பய பயப்படாதீங்க , நான் இருக்கேன் "என்றவன் கொடுத்த வாக்குறுதியை இறுதி வரை நிறைவேற்ற போகிறான் என்பது மெய் ...
"ரொம்ப நன்றிங்க "என மனதார கூறிவிட்டு மருதாணி சுறுசுறுப்பாக வேலைகளை பார்க்க தொடங்கி விட்டாள்...
சம்பளத்துக்கு வேலை என்று இல்லாமல் வீடு வீடாக போய் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது நேரம் கிடைக்கும் நேரத்தில் குடும்ப கட்டுபாடு பற்றி பேசுவது , இப்படி அவளை பற்றிய விஷயங்கள் துரைக்கு வந்து கொண்டே இருக்கே..
"நல்ல பொண்ணு இந்ந சின்ன வயசுல வாழ்க்கை இழந்து நின்றிருக்க வேணடாம்" என துரையும் ....
"ஐயா எங்களுக்கு தெய்வம் போல , சின்ன வயசுல வாழ்க்கையை தொலைச்சிட்டு ஒத்த கட்டையா நிற்கிறார்" என மருதாணி காதுக்கு அவன் தனிமை வாழ்க்கை விவரம் போக
"பாவம் நல்ல மனம் கொண்ட மனிதர் நல்லா வாழ்ந்து இருந்திருக்கலாம், கடவுள் நல்வரைத்தான் சோதிப்பார் போல "என ஒருவருக்காக ஒருவர் வருந்தி கொண்டனர்..
"இங்கே அரவிந்த் பஸ்ஸில் பின் சீட்டில் அமர்ந்திருந்த துர்காவை திரும்பி திரும்பி பார்த்து கழுத்து வலியே வந்து விட்டது ...ஆனால் துர்கா மருந்துக்கு கூட அரவிந்தை எட்டி பார்க்கவில்லை ...தன் தாய் முகம்தான் கண் முன்னால் வந்தது...
அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தாயின் முகத்தில் நிம்மதி, சிரிப்பு , பார்த்தது இல்லை .. சதா ஓடி கொண்டே இருப்பாள்.. துர்காவுக்கு எந்த குறையும் இதுவரை வைத்தது இல்லை சக்திக்கு மீறி படிப்பு, உடை, நகை என்று செய்து அவளை ராணி போல் வைத்திருக்க ... தன் அன்னை பேச்சை மீறி தன் சுகம் தேட தோணவில்லை... அரவிந்தை பார்த்ததும் பிடித்து போனது மெய் ... அதுவும் பின் வீட்டில் இருந்த நாலு நாளும் அவன் சேட்டையை ரசிக்க தவற வில்லை ஜன்னலை திறந்தாலே அவன் சத்தம் தான் கேட்கும் தகப்னோடு அரட்டை அடித்து விளையாடும் அவனை ஏக்கமாக பார்ப்பாள்....
அவரும் சிங்கிள் பேரண்ட் சைல்ட் தான், ஆனா அவங்க அப்பா எப்படி வச்சிருக்கார்? ஆனா அம்மா வெளிய போனாலே திட்டுறாங்க என்று சலித்தாலும் மருதாணி மீது மதிப்பு பாசம் மிகுதி..
எத்தனை தடவை திரும்பி பார்க்கிறேன் , ஒரு ஹாய் சொன்னா குறைஞ்சு போவாளா? , என்னவோ பெரிய உலக அழகின்னு நினைப்பு .. போடி , நானும் உன்ன பார்க்க மாட்டேன் என அரவிந்த் பத்து நிமிடம் திரும்பி அமர்ந்து கொண்டான்...துர்கா அவன் திரும்பி அமரவும் முகம் சுண்டி போனாள்..
"என்ன பார்க்கலையோ இல்லையே, என்ன தான பார்த்தார் என சுற்றி தன்னைதான் பார்த்தானா?? என தெளிவு படுத்தி கொண்டாள்...அவன் பார்க்காத நேரம் இவள் பார்ப்பதும் இவள் திரும்பும் வேளை அரவிந்த் பார்க்கவும் என காதல் விளையாட்டில் முதல் படியில் கால் வைத்தனர் ..
"வண்டி பத்து நிமிசம் நிற்கும் ... காப்பி வேணும்னா குடிச்சிட்டு ஏறுங்க "என கன்டெக்டர் கூறி விட்டு போக ...துர்கா சீட்டிலேயே அமர்ந்து கொள்ள அரவிந்த் இறங்கி போனவன், பஸ்ஸில் துர்கா மட்டும் தனியாக அமர்ந்திருக்க வீம்பு பிடிக்க தோணவில்லை ..
"ச்சை தெரிஞ்ச புள்ள நாமா போய் பேசினா தப்பா ... ஏதாவது வேணுமான்னு மட்டும் கேட்டுட்டு வருவோம்" என அவள் அமர்ந்திருந்த ஜன்னல் பக்கம் வந்த அரவிந்த், ஜன்னலை தட்ட துர்கா சற்று அதிர்ந்து அரவிந்த் என்றதும் பெருமூச்சு விட்டு ஜன்னலை திறக்க..
"சாப்பிட எதாவது வேணுமா??...
"ம்ஹூம் அவள் தலையைசைக்க
"காப்பியா டீயா?
ம்ஹூம் எதுவும் வேண்டாம் ..என அவள் ஜன்னலை அடைக்க போக .. கோவம் வந்து விட்டது அவனுக்கு
"இங்க பாரு நான் ஒன்னும் உன்ன கடிச்சி தின்னுட மாட்டேன்.. நமக்கு தெரிஞ்ச பொண்ணு தனியா வந்திருக்கியே... உனக்கு பாதுகாப்பா இருக்கும்னு தான் வந்து நின்னு பேசிகிட்டு இருக்கேன் .. மத்தபடி பொண்ணுங்க கிட்ட இளிச்சு பேசுற கேரக்டர் எல்லாம் நான் கிடையாது .. நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ரொம்ப தான் ஓவரா பண்ற ஹாய் போட்டாலும் முகத்தை திருப்பிகிற.. நீ ஒன்றும் பெரிய அழகியெல்லாம் கிடையாது... ரொம்ப தான் பண்ற" என்று அரவிந்த் பொறிந்து தள்ளிவிட துர்காவுக்கு கண்ணீர் பொளபொளவென்று வடிய ஆரம்பித்துவிட்டது .... அவனுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது..
"ஐய்ய நான் இப்போ உன்னை என்ன சொன்னேன்னு அழுகுற.. கண்ண துடை, நான் உன்னை ஏதோ பண்றேன்னு நினைச்சு என்னை டின்னு கட்டி விட்ருவானுக" என்றதும் துர்கா கண்களை துடைத்துக் கொண்டே..
"நான் யார்கிட்டயும் பேசி பழகினது கிடையாது ,, அதான் நீங்க என்கிட்ட பேச ட்ரை பண்ணும் போது எதுவும் பேசல, அதோட அம்மா யாரு கூடையும் பேசக்கூடாதுன்னு சொல்லித்தான் அனுப்பினாங்க.. உங்க கூட பேசினது தெரிஞ்சா அம்மா திட்டு வாங்கன்னு பயந்துதான் நான் பேசல.. ஆனா நீங்க என்ன வாய்க்கு வந்த மாதிரி திட்டுறீங்க என்று திக்கி திக்கி பேசிய சின்னஞ்சிறு துர்கா குரலில் அரவிந்த் மயங்கினான்..
அவள் சீட்டில் இருந்து குனிந்து உட்கார்ந்து அவனிடம் பேச, இவன் நிமிர்ந்து நின்று அவளோடு பேச இருவர் முகமும் அருகே அருகே.. அந்த வெண்ணிலவும் கார்மேகமும் அருகருகே இருந்தது போல அவ்வளவு அழகு !!!
"சரி சரி திட்டல , ஹாய் போட்டா ஹாய் போடலாம் தெரிஞ்சவங்க பேசுனா பேசுறதுல தப்பு இல்ல தெரியாத இடத்துக்கு வர்ற, தெரிஞ்சவன் நான் கூட வந்தா என்கிட்ட உதவி கேக்குறதுலயும் பேசுறதுலயும் தப்பு இல்ல...
"ம்ம்
"குட் , அதோட உனக்கு காலேஜ்ல சீட்டு பார்த்து சேர்த்து விடப் போறதே நான் தான் என் கூட பேசாம எப்படி காலேஜ்ல போய் சேருவ .. சோ என்கிட்ட பேசலாம் தப்பில்லை ஓகேவா? அவள் சரி என்று சிறுபிள்ளையாய் தலையாட்ட .. துர்கா கண்ணம் கிள்ளி கொஞ்ச தோன்றியது அரவிந்துக்கு...
"இப்ப சொல்லு காஃபி வேணுமா டீ வேணுமா??...
"ஒன்னும் வேண்டாம்
"பஸ்ல நான் போகும் போது, எதுவும் குடிக்க மாட்டேன் யாராவது அதுல மருந்து போட்டு கொடுத்துடுவாங்கன்னு அம்மா சொல்லி இருக்காங்க, வீட்ல இருந்து தண்ணி சாப்பாடு எல்லாம் கொண்டு வந்துட்டேன்" என்று கண்ணை உருட்டி உருட்டி துர்கா பேச.. அவள் கை அருகே தன் கையை கம்பியில் வைத்திருந்த அரவிந்த் அவள் அருகாமையை ரசித்துக் கொண்டே ..
"மறுபடியுமா ...ஏம்மா தாயே!! நான் ஒன்னும் பிள்ளை பிடிக்கிறவன் இல்லை என்ன பார்த்தா அப்படியா இருக்கு ... ஆனா , ரொம்ப விவரமா தான் உங்க அம்மா வளர்த்திருக்காங்க ... மயக்க மருந்து போடணும்னு நினைக்கிறவன் காஃபி டீயில தான் போடணும்னு அவசியம் இல்ல.. இப்படி கர்ச்சீப்புல கூட கொஞ்சமா மயக்க மருந்து வச்சு, உன் முகத்தில் வச்சா போதும் மயங்கி விழுந்துடுவ ..
"என்ன நீங்கள் பயம் காட்டிக்கிட்டே இருக்கீங்க, காப்பி போதும் .."
"இதை முதலிலேயே சொல்லி இருந்தா, இப்படி சொற்பொழிவு ஆற்றி இருக்க மாட்டேன், இரு வாங்கிட்டு வர்றேன்" என அரவிந்த் காஃபியை வாங்கிக் கொண்டு வந்து அவளுக்கு ஒன்றை கொடுத்துவிட்டு, அவனும் கீழே நின்று குடித்துக் கொண்டே அவளை பார்க்க..
துர்கா சூடான காப்பியை குடிப்பதற்கு திணற தலையில் அடித்துக் கொண்டவன்..
"சூடா குடிச்சு பழக்கம் இல்லையா?
"இல்லை "என்று துர்கா தலையாட்ட ..
"கொடு என்று அரவிந்த் வாங்கி அதை தன் உதட்டில் வைத்து ஊதி வேகமாக ஆத்தி , அவள் கையில் கொடுத்து
"இப்ப குடி என்க .. துர்கா தலையை சரித்து அரவிந்தை கண்கள் நொடி கண்கள் இமைக்காமல் இரட்டை நொடி பார்த்தாள்
"என்ன ??என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்க..
"எங்க அம்மாவும் இப்படித்தான் தருவாங்க, தேங்க்ஸ்" என்று சிரித்துக் கொண்டு வாங்கி குடித்துவிட்டு அவன் கையில் கொடுக்க...
"ரெஸ்ட் ரூம் ஏதாவது போகணும்னா போயிட்டு வா என்று அவளுக்கு மட்டும் கேட்க முணுமுணுப்பாக அரவிந்த் கூற..
"தனியா போக பயமா இருக்கு" என்று நெளிந்தவளுக்கு வாழ்க்கை முழுதும் துணையாக இருக்க ஆசை தோன்றியது..
"நான் வரவா ?
"ம்ம் சரி என்று தலையாட்ட ... அவளை பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்து இருக்கையில் அமர வைத்தான்.. மீண்டும் பார்வைகள் பரிமாறும் அதே பயணம் இம்முறை இருவரும் இயல்பாக பார்த்து கொண்டனர் .. துர்கா அசவுகரியமாக நெளிய ஆரம்பித்தாள் ..
துர்கா பின் இருக்கையில் இருந்த ஒருவன் விளக்கை அணைத்த உடன் அவளை சில்மிஷம் செய்ய ஆரம்பிக்க... துர்காவுக்கு பகீர் என்று ஆகி போனது அம்மாஞ்சி பாப்பா இது ... வாயை திறந்து பேசவே பயந்து ஓடுவாள், எதுவுமே செய்ய முடியாது அவள் நெளிய... அரவிந்த் தான் பூதக்கண்ணாடி போட்டு அவளை சைட் அடித்து கொண்டிருந்தானே தப்புமா காட்சிகள்?? எழும்பி வந்து அவள் அருகே இருந்த கிழவியை பார்சல் கட்டி தன் இடத்துக்கு அனுப்பி வைத்தவன் .. பின்னால் திரும்பி சண்டைக்கு சட்டையை முறுக்க... துர்கா அவன் கையை பிடித்து ...
"வீண் பிரச்சனை வேண்டாம் ப்ளீஸ்"
"எது வீண் பிரச்னை இதுவா?? என்று பின்னால் இருந்தவனுக்கு அழகான மொழியில் நாலு கிழி போட்டுவிட்டு
"இங்க உட்காரவா ?போகவா" என்றான் ..துர்கா அவனுக்கு உட்கார நகர்ந்து இடம் கொடுக்க அரவிந்த் அவள் அருகே இடைவெளி விட்டு உடல் தொடாது அமர்ந்தான் ...
ஒரு பெண்ணை அசைக்க வேண்டும் என்றால் அவளுடைய இதயத்தின் நரம்பினை மீட்ட வேண்டும் அவளுக்கு நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பை, நம்பிக்கையை எந்த ஆண் கொடுக்கிறானோ அந்த ஆணின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பும் காதலும் தொடங்கிவிடும்.. அரவிந்த் அரவணைப்பு துர்காவிற்கு ஒரு இதத்தை தானாக கொடுத்தது, இதயத்திலும் ஒரு இடத்தை கொடுக்க ஆரம்பித்தது....
பேருந்து நகர நகர துர்கா தூங்கி விழ, அரவிந்த் அவள் தலையை மெல்ல தன் தோளில் சாய்ந்து கொண்டான்...
சில பயணங்கள் எப்போதும் நீங்கா இடம் பெற்று விடும் ....
இவளோடு வாழ்க்கை பயணம் இப்படியே தொடர வேண்டும் என அரவிந்த் நினைக்க ..
உறவு சிக்கலில், நான்கு உயிர் துடிக்க போகிறது என முன் அறிவிப்பு இறைவன் கொடுக்க தவறி விட்டானே??
5 வனம் சேர்ந்த ஐவணம்!!
துர்கா அரவிந்த் வந்த பேருந்து சேர வேண்டிய இடத்தில் சேர ... துர்கா கண்ணை முழித்து பார்க்கும் பொழுது அரவிந்த் அவள் தலையோடு தலை சேர்த்து தூங்கிக் கொண்டிருக்க.. இவள் அவன் நெஞ்சில் படுத்து கிடந்தாள்... வெட்கமும் , நிலை புரியாத ஒரு தடுமாற்றமும் சரியா தவறா என்ற ஒரு நிலைப்பாடு அற்றத்தன்மையும் ஆனால் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல , அந்த வயதிற்கே உண்டான சிலிர்ப்பும் துர்காவிற்கு உண்டானாலும்.. நெளிந்தபடி அவனை விட்டு தள்ளி அமர , அவள் விலகளில் கண் முழித்த அரவிந்த்...
"சாரி" தூக்கத்தில் தெரியாமல் பட்டுடுச்சு
"பரவாயில்ல "என்று இருவரும் இறங்கி ஆட்டோ பிடித்து காலேஜ் வந்து சேர்ந்தனர்.. அவளை காலேஜில் இரண்டாம் வருட இலக்கியத்தில் சேர்த்து விட்டவன், ஹாஸ்டலில் அவளைக் கொண்டு போய்விட்டுவிட்டு...
"நானும் இங்க பக்கத்தில்தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன், உனக்கு எதுவும் அவசியம்னா" என்றவன் தலையை தட்டி கொண்டு ..
"நேரம் போகலைன்னா கூட கூப்பிடு, வர்றேன் பேசலாம் பழகலாம் ...இது என்னோட போன் நம்பர்..உன் போன் நம்பர் கொடு"" என்று கேட்க..
"அம்மா எனக்கு போன் வாங்கி தரலையே, எதுவா இருந்தாலும் ஹாஸ்டல்ல இருந்துதான் பேசுவேன் அம்மாவும் அதுக்கு தான் போடுவாங்க",
"என்ன நீ , எந்த காலத்துல இருக்க இருக்க..ரெண்டு வயசு பையன் கூட ஐபோன் வச்சுக்கிட்டு சுத்துறான்..
"ஃபோன் இந்த வயசுல தேவையில்லைன்னு அம்மா வாங்கி தரல.."
"ப்ச் அம்மா அம்மான்னு அம்மா புராணம் தாங்கலையே "இவள தள்ளிட்டு போறது ரொம்ப கஷ்டம் போல ... என நினைத்த அரவிந்த்
"அம்மாடி தங்கக்கம்பி.. ஃபோன நல்லதுக்கும் யூஸ் பண்ணலாம் கெட்டதுக்கும் யூஸ் பண்ணலாம் அது யூஸ் பண்றவங்கள பொறுத்து... இதை உங்க அம்மா சொல்லி தரலையா? ...
"இல்ல அம்மா ..
"நிறுத்தும்மா, உங்க அம்மா ரொம்ப பாதுகாப்பா வச்சு வச்சு கெடுத்து வச்சிருக்காங்க... உலகத்தை கொஞ்சம் சுத்தி பாரு, நீ இப்படி இருந்த எல்லாரும் ஈஸியா உன்னை ஏமாத்திட்டு போயிருவாங்க... உனக்கு நான் போன் வாங்கி கொடுக்கிறேன்..
"வேண்டாம்
"ப்ச் பேச விடு, நான் வாங்கி தர்றேன் வச்சுக்கோ...
"அது அம்மா
"உங்க அம்மா கேட்டாங்கன்னா என் பிரெண்டு தந்தாங்கன்னு சொல்லு ..
"ஐயோ!! இதெல்லாம் தப்பு வேண்டாம்..நான் அம்மாகிட்ட சொல்லியே ஏதாவது போன் வாங்கிக்கிறேன் .."
"அப்படியே உங்க அம்மா வாங்கி தந்துடுவாங்க பாரு" ... துர்கா முகத்தை சுருக்கிவிட ..
"பின்ன என்ன , உன்னைய ஒரு வாரம் வீட்டுக்குள்ள வச்சு பூட்டி வச்சவங்க, ஃபோன் மட்டும் வாங்கி தந்துட போறாங்களா... நான் உனக்கு வாங்கி தரேன் வச்சுக்கோ வேணும்னா அங்க போகும்போது போன் இங்க போட்டுட்டு போயிடு..
"அதுக்கு எதுக்கு போன்??..
" ஹிஹி , பின்ன நான் எப்படி உன் கூட பேசறது? என்று அரவிந்த் வாயை விட்டு விட..
"நீங்க எதுக்கு என் கூட பேசணும் உடனே சுதாரித்த அரவிந்த்..
"நாட்டு நடப்பு பேசுறதுக்கு சொன்னேன்.. இப்பதான் நானும் வேலைக்கு சேர்ந்து இருக்கேன், என்கிட்ட பணம் இருக்கு , ஆனா அது துரை பணம் ... உனக்கு வாங்கி தர மொத பொருள் அவர் பணத்துல வாங்கி கொடுக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.. சோ என்னோட முதல் மாசம் சம்பளத்தில் உனக்கு வாங்கி தரேன் அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு.. வார வாரம் வந்து உன்னை பார்க்கிறேன்..
"எதுக்கு நீங்க என்ன பாக்கணும்??" ..
"அட என்னம்மா நீ லவ் பண்றோம்னு ஆகி போச்சு இனிமே அப்பப்ப மீட் பண்ணி காதல வளர்க்கணுமா இல்லையா .
"என்னது லவ் பண்றோமா ?
"அப்ப இல்லையா
"இல்ல
"சரி அப்ப என்ன அண்ணன்னு கூப்பிடு வந்த வழியே திரும்பி பார்க்காம போயிடுறேன் ..
"ஏது அண்ணனா?? அவள் முகம் போன போக்கை பார்த்து சிரித்தவன் ..
"ஆமா ஒன்னு அண்ணன்னு சொல்லு, இல்ல லவ்வை அக்சப்ட் பண்ணு, என்கிட்டேயே டக்கால்டி வேலை பார்க்க நினைக்கிறியா, ம்ம் அண்ணன்னு சொல்லு ..
"என்ன நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க ..
"பின்ன அண்ணன்னு சொல்ல ஏன் தயக்கம் ஹான்.. துர்கா அரண்டு முழிக்க..
"சரி சரி ஒரு வாரம் டைம் எடுத்துக்க, அடுத்த வாட்டி வரும் போது முடிவு சொல்லு அண்ணனா லவ்வரான்னு நீதான் முடிவு எடுக்கணும் ஓகேவா? ...
அவன் துருதுறு பேச்சும் நடத்தையும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக அவன் பக்கத்தில் இழுத்துக் கொண்டு இருந்தது...
"சரி உடம்பை பாத்துக்க "
"நீங்களும் பார்த்துக்கோங்க" என்றதும் அரவிந்த் கண்ணில் மின்னல் தோன்ற அவளை பார்த்தான் துரகா தலையை குனிந்து கொள்ள.. அரவிந்த் அவள் அருகே வந்து நின்று ..
"நான் நல்ல பையன் எல்லாம் இல்ல சைட் அடிப்பேன் , கடலை போடுவேன் ..ஆனா உங்கிட்ட அடிக்கிற ஸ்பார்க் உன்கூட பேசும் போது உள்ளுக்குள்ள உண்டாகுற பீல், இதுவரை யாருகிட்டேயும் வந்ததே இல்ல.. எனக்கே இது லவ்வா அஃபெக்சனான்னு தெரியல , சோ எனக்கே டைம் வேணும் இது என்னன்னு கண்டுபிடிக்க... இது லவ்வுன்னு தெரிஞ்சுது கடிக்கிற உதட்டை நான் கடிச்சு இழுத்துக்குவேன் என்றதும் துர்கா சட்டென்று அவனை எட்டி பார்க்க..
"உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு அடுத்த வாரம் வர்றேன் __ கோவில் பக்கம் வெயிட் பண்ணு ... பாய்" என அவளுக்கு கையசைத்து விட்டு அரவிந்த் துர்காவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே ஆட்டோவில் ஏறி தன் வேலைக்கு கிளம்பினான்.. ஏதோ இதயம் உருவி போனது போல சிறு நெருடல் அவளுக்கு ..
இனி எப்போது அவனை பார்ப்போமென்று ஏக்கத்தோடு போகும் அவனை கையைசைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
இப்படி இளையவர்களுக்கு இடையே காற்றும் அதில் கலந்து வரும் நறுமணமும் போல ஒரு அழகான காதல் அடித்தளம் போடப்பட்டது ..
ஆனால் இங்கோ... காதல், கல்யாணம், வாழ்க்கை தாம்பத்தியம் இதெல்லாம் வழக்கு ஒழிந்து போனது இனிமே அதற்கெல்லாம் நம் வாழ்க்கையில் எங்கே இடம் ? என்று நினைத்த துரை மருதாணி வாழ்க்கையில் அவர்களுக்கே தெரியாமல் ஊராரால் ஆரம்ப புள்ளி வைக்கப்பட்டது ..
துரையிடம் அடி வாங்கிய டாக்ட்டர் குமரன் .. துரை மருதாணியை வச்சிருக்காரு, அதான் வேலையும் கொடுத்து அவளை தன் வீட்டுக்கு பின்னாடி வசதியா வச்சிக்கிட்டு, யாருக்கு சந்தேகம் வராம குடித்தனம் பண்றார்.. இடைஞ்சலா அவ மகளும் இவரு மகனும் இருக்க கூடாதுன்னு இரண்டு பேரையும் பார்சல் பண்ணிட்டார் என நம்பும்படி வதந்தியை கிளப்பி விட்டிருக்க ... வதந்திகள் பல வண்ணம் தீட்டி ஊர் முழுக்க பரவியது ..
பலர் துரை ஐயா தங்கம் போல, என்க.. சிலர் அவரும் மனுசன்தான எத்தனை நாள் அடக்கி வாழ்வார் சபலம் வரும்ல என்க, வயசுக்கு வந்த மகன் மகளை வச்சிட்டு இது தேவையா? என சிலர் தலையில் அடிக்க..கண்ணால பார்க்காம சும்மா பேச கூடாதுப்பா அந்த பொண்ண பார்த்தா மோசமான தெரியல என ஒவ்வொருவம் உருவான வதந்தியை தீயாக பரவ வைக்க ... துரை மருதாணி தவிர ஊர் மொத்தமும் இச்செய்தி பரவியது ..
அவர்கள் சந்தேகங்களுக்கு தீனி போடும் வகையில் இரவே சம்பவம் ஒன்று நடந்தேறியது ..
இரவு துரை வயலுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருக்க அவன் போன் அலறியது, திரையை பார்க்க அரவிந்த் ..உடனே முகம் பனியாக குளிர்ந்து போனது
"சாமி எப்படி இருக்க ?
"ம்ம் அரை மணிநேரத்திற்கு முன்ன தான பேசினேன் .."
"அட ஆமால்ல வேலை எப்படி போகுது சாமி ..
"ப்ச் ஏதோ போது..அவன் குரலிலேயே மகன் நாடித்துடிப்பு அறியும் தந்தை அன்றோ துரை ..
"சாமி வேலை ரொம்ப கஷ்டமா இருக்கோ...
"ம்ம் ..
"அப்போ வேணும்னா இங்க கிளம்பி வந்திடு ..
"ப்ச் வர முடியாத நிலையில மாட்டிக்கிட்டேன்..
"ஏன் என்னாச்சி ... எப்படி சொல்ல துர்காவுக்காக இங்க இருக்க வேண்டிய நிலை என்று அவள் காதலிக்கிறேன் என கூறிய பின்பு தந்தையிடம் கூறி விடலாம் என நினைத்து மனதை மறைத்து விட ...
ஆஆஆஆஆஆஆ என்ற பெண்ணின் அலறல் குரல் துரைக்கும் அதே சமயம் போனில் இருந்த அரவிந்துக்கும் கேட்டது .
"யாருப்பா, இந்த நேரத்துல காட்டுக்குள்ள அதுவும் பொண்ணு குரல் போல இருக்கு ?"
"தெரியலையே
"யோவ் , எனக்கு தெரியாம எதுவும் சின்ன வீடு வச்சிருக்கியா..
"அட ராஸ்கல் வேற வேலை இல்ல பாரு, யாருன்னு தெரியல இரு போய் பார்க்கிறேன் "என மகனோடு பேசி கொண்டே துரை வரப்பில் வேகமாக டார்ச் லைட்டை பிடித்து கொண்டு சத்தம் வந்த இடம் நோக்கி விரைந்து போக ... புதர் மறைவிலிருந்து நால்வர் இவன் தலையை கண்டதும் திபுதிபுவென ஓடிட ... புதருக்கு பின் ஒரு பெண் விசும்பி அழ, துரை போனை ஆப் பண்ணாது பாக்கெட்டில் போட்டுவிட்டு கொஞ்சம் அருகே போய் பார்க்க சேலை கிழிந்து சட்டை கிழிந்து மருதாணி அழுது கொண்டிருக்க..
"மருதாணி நீயா???" என்று துரை வாய்விட்டு அவள் பெயர் கூற , அங்கு போனில் இருந்த அரவிந்த் காதிலும் அப்பெயர் விழுந்தது ...
துர்கா அம்மாதான மருதாணி அங்க என்ன பண்றாங்க?? அதுவும் இந்த நேரத்தில என போனை மறுபடி காதில் வைக்க , துரை போனில் சார்ஜ் இல்லாமல் போன் ஆஃப் ஆகி இருந்தது ...
சிறிய புள்ளிகள் இணைந்து தான் கோலம் உண்டாகும் அது போல சிறு சந்தேகங்கள் இணைந்து தான் ஒரு பிரளயம் உண்டாகும் ...
தன் தந்தைக்கு துணை வேண்டும் என்று போராடிய அர்விந்தே அந்த துணையோடு இணைய விடாது வில்லனாக எதிர்த்து நிற்க போகிறான் ..
விக்கி விக்கி மருதாணி உடலை மறைத்து கொண்டு அழ .. துரைக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை ..
"மருதாணி என்னாச்சி? இங்க எப்படி வந்த யார் அவன்க "
"அது அது வேலை முடிச்சி வரும் வழியில நாலு பேர் என்ன வாயை மூடி என்ன என்ன என்ன நல்லவேளை நீங்க வந்தீங்க இல்லன்னா" என கதறி அழ ஐயோ என்றாகி போனது ..
"யாரு என்னன்னு முகத்தை பார்த்தியா ??" ..
"ம்ஹூம் இருட்டுல ஒன்னும் தெரியல..
"சரி சரி அழாத, யாரு என்னன்னு பார்க்கிறேன் ..
"ப்ளீஸ் வேண்டாம் என் பேர் கெட்டு போகும் "
"அதுக்கு அப்படியே சும்மா விட சொல்றீயா, என் ஊருக்குள்ள வந்து, ஒரு பொண்ணுக்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்கான்... அவன்க வெட்டி பொழி போடாம விட மாட்டேன் ..
"இல்ல அது
"நீ சும்மா இரு ... எதுக்கும் பயப்படணுமோ அதுக்குதான் பயப்படணும் "என்று கூறியவன் அப்போது தான் மருதாணி சேலை ஜாக்கெட் எல்லாம் கிழிந்து கிடப்பதை பார்த்ததும் .. மருதாணி சேலையை இழுத்து தன்னை மறைக்க முடியாது திணற.. துரை வேகமாக தன் சட்டையை கழட்டி அவள் புறம் நீட்டி ..
"போட்டுக்க பைக் பக்கத்துல நிற்கிறேன், மாத்திட்டு வா" என்று விட்டு துரை வேகமாக நகர்ந்து போய் விட.. துரையின் சட்டையை பயத்தில் நடுங்கிய கையோடு மருதாணி எடுத்து மாட்டி கொண்டு அவன் அருகே வந்து..
"ரொம்ப நன்றிங்க சட்டையை நாளைக்கு துவைச்சி தந்திடுறேன் ..."
"எப்படி வீட்டுக்கு போக போற..
"நடந்து...
"இப்படியே போனா சரி வராது , வாங்க நானே கொண்டு போய் விடுறேன் .."
"இல்ல அது
"மணி 11 ஆகுது ஊருக்கு உள்ளாற ஆள் இருக்காது பயம் வேண்டாம்" என்று துரை புல்லட்டை கிக் செய்ய வெறும் பனியன் வெள்ளை வேட்டியில் திணவெடுத்த உடலோடு துரை பைக்கில் இருக்க... மருதாணி தயங்கினாலும் இப்போதைக்கு வேறு வழிதான் என்ன இங்கிருந்து ஊருக்கு போக?? ரெண்டு கிலோ மீட்டர் இருக்கு அத்தனையும் காட்டு பகுதி... மறுபடியும் பயம் சூழ்ந்து கொள்ள ... தயக்கம் கொண்டு மருதாணி நன்றாக இடைவெளி விட்டு துரை பைக்கில் பின்னால் ஏறி அமர... துரையும் வண்டியை ஊர் நோக்கி செலுத்தினான்...
அவன் பொறுத்தவரை இது அவளுக்கு செய்த உதவி. மருதாணியும் உதவியை வாங்கி கொண்டாள் அத்தோடு முடிந்தது ...
ஆனால் இருவரும் ஒன்றாக பைக்கில் வருவதை ஒன்றிரண்டு பேர் பார்த்து விட்டு
"அட !! ஆமா போல துரை மருதாணியை வச்சிருக்காரு, அதான் இந்த ராத்திரி அவளை கூட்டிட்டு பைக்ல போறார் அதுவும் அவர் சட்டையை போட்டுக்கிட்டு அந்த புள்ள போகுது "
"அந்த புள்ளை முடியை பாரு எங்கேயோ நல்லா ஆடி களைச்சி வந்த மாதிரி இருக்கு .."
"ம்ம் நமக்கு எதுக்கு வம்பு "என முகத்தை நொடித்த கிழவி காலை விடியும் முன் வீடு வீடா போய் வத்தி வச்சி புண்ணிய வேலையை பார்த்துடுச்சி...
சில கெட்டதில் நல்லது நடக்கும் என்பார்கள் இவர்கள் வாழ்வும் அப்படிதான் இணைய போகிறது....
6 வனம் சேர்ந்த ஐவணம் !!
மருதாணி துரை பைக்கில் வர வர விசும்பி சத்தம் இல்லாது அழுதாள்.. அவள் கண்ணீர் சூறைக்காற்றில் துரை முகத்தில் வந்து அடித்தது ... ஒரு பொண்ணு தனியா வாழவே முடியாதா ? ஆணையே வாழ விடாத சமுதாயம் , அவளை மட்டும் விடவா செய்யும்..
துரை எத்தனை கல்லடி கண்டு தன் மகனை வளர்த்திருப்பான்... பணம் இருக்கு வளைச்சி போடு என அவனை சபலப்படுத்த எத்தனை பெண்கள் வந்து மேலே விழுந்தனர்.. மனம் எனும் மந்திரகதவின் சாவியை அவன் கட்டுக்கோப்பாக வைத்திருந்த காரணத்தால் யாரும் எதுவும் செய்ய இயலவில்லை..
பாவம் பொழைக்க வந்த இடத்தில அந்த புள்ளைக்கு வேற யார் உதவி செய்வா என்ற கருணை எண்ணம் துரைக்கு வந்தது ..
"இறங்கிக்க மருதாணி அவள் பதில் சத்தம் இல்லை என்றதும் ..
"மருதாணி..
"ஹான் ..
"இறங்கிக்க வீடு வந்திடுச்சி
"ஓஓஓ ரொம்ப நன்றிங்க என்றுவிட்டு இறங்கி கொள்ள
"மருதாணி , யாரு என்னன்னு ஒரு வாரத்துல கண்டுபிடிச்சி, வீதியில அடிச்சு வெளுக்கிறதுல இன்னொருத்தன் இதே மாதிரி தப்பு பண்ண மாட்டான்... நீ நடந்ததையே நினைச்சு வருந்துகிட்டு இருக்காத.."
"ம்ம் சரி..
"குறிப்பா உன் மககிட்ட எதையும் சொல்லி அவளையும் சங்கடப்படுத்தாத.. "
"ம்ம் ஏனோ "ஓவென அழ தோன்றியது .. சாய தோள் கிடைத்தது போல ஒரு பிரம்மை அவன் எதிரில் தோன்றியது ... யாருமில்லை என்ற நிலை போய் இவர் இருக்கிறார் என்று தெளிவு வந்தது , அது காதலில் சேர்த்தி இல்ல அன்பு என்று கூட வைத்து கொள்ளலாம்...
"இனிமே இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்கிறேன் , காலைல வேலைக்கு போனா பொழுது அடையும் முன்ன வீட்டுக்கு வந்துடு...
"இல்ல அங்க வேலை அதிகம் கிடக்குது..அதான் வர லேட் ஆகுது
"ஓஓஓ இன்னொரு நர்ஸ் வேணும்னா போட்டுக்கலாம்.. நீயே எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யாத ..
"சரிங்க என்று மருதாணி தலையசைத்தாள்..
ஊர் எல்லையில் தான் மருத்துவமனை இருக்கிறது எனவே இவள் வேலை முடித்து இரவு நேரத்தில் வரும்பொழுது யாரோ கணக்கு வைத்து அவளை தூக்கிக்கொண்டு சென்றது போல் தெரிந்தது... கண்டிப்பாக இதில் குமரனுடைய செயலும் இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் துரைக்கு ... அந்த சந்தேகம் மட்டும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால், ஊர் கம்பத்தில் கட்டி வைத்து அடி வெளுத்து விடுவான் அவளுக்கு ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு... தன் அறையில் வந்து போனை பார்க்க அப்போதுதான் தன் மகனிடம் பேசியது ஞாபகம் வந்தது..
"ச்சை சாமிட்ட பேசிட்டு இருந்தேனே மறந்து போச்சி என போனை பார்த்தால் அது சுவிட்ச் ஆஃப் ...
"ப்ச் இது வேற ... வேற போன் ஒன்னும் வாங்கணும் எப்பவும் இதே சோலியா போச்சி" என போனை சார்ஜர் போட்டு இரவு தூங்கும் முன் அவனுக்கு பேச..பேச்சு வாக்கில் மருதாணி கதை வந்தது
"என்னப்பா ஏதோ மருதாணின்னு சத்தம் கேட்டது என்ன ஆச்சு?
"அதுவா சாமி ", சொல்ல வாயெடுத்த துரை ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவள் சம்பந்தப்பட்ட செய்தியை எப்படி சொல்ல?? அதோடு இதை போய் தன் மகனிடம் எப்படி சொல்வது என துரை சொல்லாமல் ...
"ஒன்னும் இல்ல சாமி அடுத்த வாரம் திருவிழா வருதுல்ல..அதுக்கு பிள்ளைங்க மருதாணி பறிச்சுக்கிட்டு இருந்ததுக, அந்த சத்தம்தான் உனக்கு கேட்டிருக்கு" என மழுப்பினான்..
"அப்படியா .. அரவிந்தும் தன் தகப்பனிடம் அரட்டையாக பேசிவிட்டு அத்தோடு அதை மறந்து போனான்..
அடுத்த வாரம் கோவில் திருவிழாவிற்கு ஊர் தயாராகியது என்பதை விட.. துரை மருதாணி திருமணத்துக்கு ஊர் தயார் ஆனது என்றுதான் சொல்ல வேண்டும் ....
காலை துரை வாழை தோப்பில் வாழை குலைகளை வெட்டி வண்டியில் போட்டுக் கொண்டிருக்க... ஏதோ சத்தம் கேட்டு அருவாளை ஓங்க, அவன் இடது கையில் அருவாள் வெட்டி விட்டது...
"ஸ்ஆஆஆ என்று கையை பார்க்க ரத்தம் குபுகுபு என்று கொட்ட ஆரம்பிக்க ... துரை வேகமாக தன் துண்டை எடுத்து கையில் கட்டிக்கொண்டான்
"ப்ச் ஒரு நாளும் இப்படி ஆகாதே" என்று ரத்தத்தை நிறுத்த பார்க்க காயம் ஆழமாக பட்டு ரத்தம் நின்ற பாடில்லை , ரத்தப் போக்கை நிறுத்துவதற்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாகி விட்டது...
எப்போதும் கவனமாகத்தான் இருப்பான், இப்போது தன் மகன் இல்லை என்பதே அவனுக்கு பாதி குறையாக இருந்தது.. மகன் ஞாபகத்திலேயே வேலையை செய்ய அது எசகு பிசகாகிவிட்டது...
கையில் அதிக ரத்தப்போக்கு இருக்கவும் தன் மகன் அறிந்தால் அதற்கும் கத்துவானே என்றுதான் போய் கட்டு போட வேண்டியதாகிவிட்டது, இல்லை என்றால் மஞ்சளையும் காபிதூளையும் வச்சு கெட்டும் பயில்வான்.. மகனுக்கு பயந்து ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டான்..
கூட்டம் நிரம்பி வழிந்தது... மருதாணி வேலைக்கு வந்த பிறகு யாருக்கும் முகம் கோண மாட்டாள், எந்த நோயாளி வந்தாலும் அன்பாக அவர்களை அரவணைத்து தன் வீட்டில் உள்ளவர்களை கவனிப்பது போல கவனிப்பாள்.. சிறு குழந்தைக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்த மருதாணி... ரத்த கோலத்தில் உள்ளே வந்த துரையை பார்த்ததும் உள்ளம் பதறிப் போனது ... என்னதான் இருந்தாலும் அவளுக்கு பல நிலைகளில் அவன் உதவி செய்து கொண்டிருக்கிறான் , அந்த மரியாதையும் அன்பும் அவளுக்கு எப்போதும் துரை மீது உண்டு.. அவனை அப்படி இரத்தத்தில் பார்த்ததும் என்ன ஆனதோ என்று பதறி, இருக்கும் வேலையை விட்டுவிட்டு
"என்ன ஆச்சுங்க .. கையில என்ன இவ்வளவு பெரிய அடி ??"என அவள் நோயாளியாகதான் அவனைப் பார்த்தாள், அவன் கையைப் பிடித்தாள்.. ஆனால், ஏற்கனவே கசமுசா பேச்சு நடமாடுகிறது அல்லவா? எனவே பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் கிசுகிசு என்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்..
அவளோடு பேசி கொண்டே துரை சேர்ந்து நடந்தான் ..
அவன் கம்பீர காட்டு அழகு ,,மருதாணி மாடத்தில் இருக்கும் புறா போல சாத்வீக அழகு இருவர் ஜோடி பொருத்தமும் வீணையும் தந்தியும் போல, குழலும் இசையும் போல , மூங்கிலும் காற்றின் கானமும் போல அத்தனை எடுப்பாக இருந்தது ...
"வாழைக்குலை வெட்டும் போது கையில தவறி அருவா விழுந்துடுச்சு, கொஞ்சம் ரத்தம் ஜாஸ்தியா போன மாதிரி இருந்தது அதனால கட்டு போட வந்தேன்.."
"அச்சோ பாத்து செய்யக்கூடாதாங்க".. காயத்தின் அளவை கை வைத்து வருடி பார்த்து கொண்டே கூறிய மருதாணி ...
"வெட்டு பலமா பட்டு இருக்கே... கண்டிப்பா தையல் போடணும், நீங்க உள்ள வந்து படுங்க நான் பாத்துக்குறேன்.."
"கூட்டம் ஜாஸ்தியா இருக்கே, நீங்க வேணும்னா எல்லாரையும் பார்த்துட்டு வாங்க..
"அவங்க வெயிட் பண்ணுவாங்க, நீங்க வாங்க" இன்னும் ரத்தம் போனா மயக்கம் வந்திடும் என அறிந்து அவனை அவசரப்படுத்தி மருதாணி
துரையை அறைக்குள் அழைத்துப் போக ..
இது போதுமே? அவர்கள் கட்டுக்கதைக்கு காரசாரமான விவாதம் கொடுக்க .. தானா அருவா விழுந்ததோ இல்லன்னா, அவரே வெட்டிக்கிட்டு தன் டாவ பாக்க வந்தாரோ தெரியல... இந்த விஷயம் மட்டும் அரவிந்த் கேள்விப்பட்டா என்ன நடக்கும்?
"என்ன நடக்கும் அவன் ஏற்கனவே எங்க அப்பாவுக்கு பொண்ணு குடுங்கன்னு கேட்டுகிட்டு அலைஞ்சான். கல்யாணம் பண்ணி வைப்பான்...
"சரி அப்பனும் மகனும் ஒன்னு போல பிள்ளை பெத்து தாலாட்டுவாங்கலா இருக்கும்.. என கிழவிமார்கள் சிரித்தனர் ..
"என்னடி சிரிப்பு ? துரைக்கு பல்லு ஸ்ட்ராங்கா இருக்கு பக்கோடா திங்குறாரு, இல்ல பீட்சா திங்கிறாரு உங்களுக்கு என்னடி??" என்று இன்னொரு கிழவி அவர்களை அதட்ட ..
"அதுதானே நமக்கு என்ன ஆனாலும் இந்த கதை எங்கேயும் நடக்கலப்பா... ஊருக்கு பெரிய மனுஷன் ஒழுங்கா இருந்தா தானே அவர பார்த்து வளர்ற புள்ளைங்க நல்லா இருக்கும்.. "
"ம்ம் இத்தனை நாள் நல்லா தானே இருந்தாரு. கொஞ்சம் கலரா மினுக்கு தழுக்குன்னு ஒரு பொண்ண பார்த்தவுடனே துரையும் மயங்கி போயிட்டானே...." நமக்கு இப்படி ஒரு லக்கான பிகர் மாட்டலையேன்னு ஒரு பெருசு பொறாமையில் பொங்கியது அவருக்கு பைல்ஸ் ஆபரேஷன் பண்ணி நகர முடியாமல் இருக்கிறார், அவருக்கு குசும்பை பாருங்களேன்..
"ஸ்ஆஆஆ" துரை படுக்கையில் கண்களை மூடி படுத்திருக்க மருதாணி சுறுசுறுப்பாக இயங்கினாள்
"வலிக்குதா??..
"ம்ம் கொஞ்சம் வலி இப்ப தான் தெரியுது ...
"இறுக்கமாக கண்ணை மூடிக்கோங்க , நாலு தையல் தான் போட்டுடுறேன் ...
"ம்ம் என்றவன் பிடிக்க பிடிமானம் தேடி அலைந்தவன் கையில் மருதாணி தோள்தான் தட்டுப்பட்டது.. குறை மயக்க நிலையில் இருந்தவனுக்கு அது புலப்படவில்லை மருதாணி தோளை சிக்கென்று துரை பிடித்து இறுக்க ... அவள் அதிர்ந்தாலும் துரை சுயத்தில் இல்லை பாவம் ரொம்ப வலிக்கும் போல என நினைத்து விட்டுவிட்டு வேலையை முடித்து நிமிர கதவு பக்கம் ஒரே கூட்டம் .... அத்தனையும் இங்க என்ன நடக்குது என்று பார்க்க வந்து ஆஜர் ஆகி இருக்க , மருதாணிக்கு ஒன்றும் புரியவில்லை ..
"முடிஞ்சது என்றதும் துரை எழும்பி கழட்டி போட்ட சட்டையை போட திணற..
"இருங்க போட்டு விடுறேன் "என மருதாணியே அவன் பின்னாடி போய் சட்டையை மாட்டி விட்டாள் யாராக இருந்தாலும் இதை எல்லாம் செவிலியர்கள் சேவை மனப்பான்மையாக செய்வார்கள் தான்.. ஆனால் இங்கே அது பெருங்குற்றமாக பார்க்க பட்டது யார் செய்த பாவம் ???
"காயம் ஆறும் வரை அந்த கை வச்சி எந்த வேலையும் செய்யாதீங்க... ரெண்டு நாளைக்கு ஒரு தடவை கட்டு மாத்தி போடணும் .. நானே வீட்டுல வந்து போட்டு விட்டுடுறேன்".. துரை மருந்து வாடையில் முகத்தை சுளிக்கவும் அது பிடிக்கலை போல வீட்டுல போய் போட்டு விட்டுடலாம் என மருதாணி கூறவும் ..அவனுக்கும் அப்பாடா!! என்ற உணர்வு ... மருத்துவமனை பார்த்தாலே அருணா குழந்தையை பெத்து அவன் கையில் கொடுத்து விட்டு உயிர் விட்டது தான் நியாபகம் வரும் ..
"சரி மருதாணி "என துரை கிளம்பி விட்டான் ...
நாம் செய்யும் புண்ணியம் கூட சில சமயம் காலை வாரி விட்டுவிடும் என்பது எழுதப்படாத சட்டங்கள் ..
துரைக்கு சமையல் செய்து கொடுக்கும் ஆயா வேறு மண்டையை போட்டுவிட, ஒற்றை கையை வைத்து கொண்டு என்ன செய்வான்? என நினைத்த மருதாணி , தான் சமைத்த உணவில் அவனுக்கு கொண்டு கொடுக்க
முதலில் ..இதெல்லாம் எதுக்கு? என்று மறுத்தாலும் வாங்கி கொண்டான்.. வாய்க்கு ருசியாக உணவு மூணு வேளையும் வந்தது சுடச்சுட... அவர்கள் காதல் கட்டுக்கதையும் ஊரை என்டர்டெயின் பண்ணி கொண்டிருந்தது ..
ஊரில் முதல் நாள் திருவிழா கொடியேற்றம் நடந்து கோலாகலமாக தொடங்கியது...
"சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் மருதாணி வாசலில் நின்று சத்தம் கொடுக்க ...துரை முகத்தை துடைத்து கொண்டு வெளியே வந்தான் .. மருதாணி நர்ஸ் ஆடையில் கிளம்பி இருக்க
"என்ன நீ , கொடைக்கு போகலயா ? "இப்போது கொஞ்சம் சகஜமாக இருவரும் பேசி கொள்வார்கள் திண்ணையில் மருதாணி அமர, அவள் அருகே கிடந்த கட்டிலில் துரை உட்கார்ந்து, அவள் கொடுத்த தட்டை வாங்கி சாப்பிட ஆரம்பித்தான் ..
"அரசியில ஒரு முட்டை மருதாணி வீட்டுல போட்டிரு..
"கீரை அறுக்கும் போது ஒரு கட்டு மருதாணி வீட்டுல போட்டிரு ..
"மீனு வாங்கி மருதாணி வீட்டுல கொடுத்திடு "என்று வேலையாட்களிடம் கூறி விடுவான்..
"சரி நமக்கும் சேர்த்து சமைக்கிறா எதுக்கு சிரமம் என்று துரை சகல வசதியும் செய்து கொடுத்தான் .. மருதாணி மறுக்க
"அப்ப சாப்பாடு வேண்டாம்" என்றதும் அவளும் வாங்கி கொண்டாள் .
"நைட் மருந்து வருது , அதை வாங்கி அடுக்கணும் அதோட எனக்கு இப்படி போறதுல அவ்வளவா விருப்பம் இருக்காது" என குழம்பை கலக்கி அவனுக்கு மீன் தெளிச்சி எடுத்து போட்டாள்..அவள் சொல்வது புரிந்த, து அவனும் வருபவர்கள் ஏதாவது பேசி வெந்த புண்ணை கிளறுவார்கள் என்றுதான் கோவில் திருமண விழா என்று எங்கும் செல்ல விரும்ப மாட்டான் ... ஆனால் அரவிந்த் விட மாட்டான் இழுத்து கொண்டு போய்விடுவான் .
"என்ன சொல்றது இருக்கட்டும் நீங்க ஊர் பஞ்சாயத்து தலைவர் நீங்க ஏன் போகல..
"அரவிந்த் பய நைட் கடைசி பஸ்ஸூக்கு வந்திடுவேன்னு சொன்னான், அவன் வந்ததும் போகணும்... "
"ஓஓஓ சரிங்க நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வர்றேன்" ... இரண்டு நர்ஸ் கூட மாட இருப்பதால் அவளுக்கு பாதுகாப்பு என துரையும் சரி என்று விட்டான்...
மருதாணி வேலைக்கு கிளம்பி போய்விட மகனை அழைக்க பைக்கை எடுத்து கொண்டு துரை நிற்க ...
ஐயா என ஒரு நர்ஸ் ஓடி வந்தது
"என்ன தாயி ??
"நான் நைட் ட்யூட்டிக்கு போகும் போது , அந்த டாக்டர் குமரன் நாலைஞ்சு அடியாள் கூட மருதாணியை கடத்திட்டு போகணும்னு பேசிட்டு இருந்தான் ... அவள காப்பாத்துங்க என்று மூச்சு விட முடியாது திணற ..
"_____ படிச்சவன் போல இல்ல, இன்றைக்கு இருக்கு அவனுக்கு" என்று வேட்டியை ஏத்தி கட்டி கொண்டு துரை மருத்துவமனை கிளம்பி விட்டான் ..மறைவில் இருந்து வெளியே வந்த போலி டாக்டர் பயலை கண்ட அந்த நர்ஸ்
"சார் நீங்க சொன்ன மாதிரி பேசிட்டேன் ...
"ம்ம் குட் இந்தா என பணத்தை தூக்கி அவள் கையில் போட்டவன்
"மரியாதை அந்தஸ்த்து இருக்குன்னு ஊர் முன்னாடி என்ன அடிச்சி அசிங்கப்படுத்தினியே துரை, இன்னைக்கு நீ கேவலப்பட்டு நிற்க போற" என்று இன்னொரு பையனை அழைத்து .. திருவிழா கூட்டத்தில் போய் துரை மருதாணி கூட ஆஸ்பத்திரியில ஒன்னு மண்ணா இருக்கார்ன்னு கத்தி சொல்லு, இன்னைக்கு தரமான சம்பவம் நடக்கும்" என்று அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு ஆஸ்பத்திரிக்கு குமரன் போனான் ..துரை மருதாணியை தேடி உள்ளே போக குமரன் மெயின் கதவை இழுத்து அடைத்து விட்டான் ...
இத்தனை வருட தனிமை வாழ்வு இருவருக்கும் போதும் என கடவுள் நினைத்து விட்டார் போல .. இருவரையும் இணைக்க ஓவர் ட்யூட்டி பார்க்க ரெடியாகி விட்டார் ...
7 வனம் சேர்ந்த ஐவணம் !!
அரவிந்த் பெட்டி படுக்கையோடு துர்காவை வர சொன்ன கோவில் வெளியே நின்றான்
வருவாளா? என காத்திருக்க ..காலேஜ் பேக்கோடு துர்கா தூரத்தில் ஓடி வந்தாள் ... இவளுக்காகதான் தம் பிடித்து வேலையில் ஒரு வாரம் தாக்கு பிடித்தது...
அப்பன் கைக்குள் ராஜாவாக வாழ்ந்து விட்டவன் மற்றவர்கள் அடிமை வேலை வாங்க சுத்தமாக வேலை பிடிக்கவில்லை .. இன்று மொத்தமாக வேலையை எழுதி கொடுத்து விட்டு கிடைத்த ஏழாயிரம் ரூபாய் சம்பளத்தில், துர்காவுக்கு ஒரு போனை வாங்கி கொடுத்து விட்டு ஊருக்கு போக நினைத்தான்... போன் இருந்தா போதுமே எப்படியும் காதலை வளர்த்து விடலாம் என்ற எண்ணம் தான் ..
"சாரி வர லேட்டாகி போச்சி என்றவள் பெட்டியோடு அரவிந்த் நிற்கவும்
"என்னாச்சி?
"ப்ச் கவர்னர் பதவிக்கு ஆளு இல்லையாம், கூப்பிட்டு விட்டாங்க அதான் கிளம்பிட்டேன் ..
"அப்படியா ?
"என்ன சொன்னாலும் நம்புவ போல
"பின்ன கஷ்டப்பட்டு காமெடி பண்ண டிரை பண்றீங்க நம்புன மாதிரி நடிக்கணும்ல..
"அடியேய் ஊமை குசும்பி, உன்ன போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு ... என்று சிரித்தவன்..
சரி என்ன முடிவு எடுத்த ??
"முடிவுன்னா ??
"அதான் லவ்வரா, ப்ரோவா? "
"ம்ம் இப்போதைக்கு ப்ரெண்ட் "என்று அவள் நேக்காக நழுவ
"ம்ம் விவரம் தான் .. ப்ரெண்டுக்கு எல்லாம் போன் வாங்கி கொடுக்கிற அளவு நான் நல்லவன் இல்லையே "என்று புது ஃபோனை தூக்கி அவள் புறம் நீட்டிய அரவிந்த்
"புடி ___ கம்பெனியில வேலைக்கு போட்டிருக்கேன் , எப்படியும் மறுபடியும் ஒரு வாரத்தில வந்துடுவேன் ..
"இல்லை இது எல்லாம் வேண்டாம் ..
"சரி வேணடாம்னா விடு உன் ப்ரெண்ட் சரண்யா கிட்ட கொடுத்துடு "
"எதுக்கு?"
"பின்ன உன்ன நினைச்சு தாடி வளர்க்க சொல்றியா வேலைக்கு லெட்டர் போடுற மாதிரி வரிசையா போட்டு வைக்க வேண்டியதுதான் யாரு ஓகே சொல்றாங்களோ, அப்படியே பிக்கப் பண்ணி போக வேண்டியதுதான்..."
"சரண்யா ஊருக்கு போயிட்டா "
"அப்படியா அப்ப ஊர்மிளா கிட்ட கொடு
"அவ தாத்தா செத்து போயிட்டார்னு காலேஜுக்கு வரல" சிடுசிடு மூஞ்சாக நின்றாள்.
"சரி விடு உன் லெக்சரர் கன்னிகாகிட்ட கொடு என் கிளாஸ்மேட்தான் அவ , அவ சரியா வருவா"
ஒன்னும் தேவையில்ல நானே வச்சிக்கிறேன்.. என்று முகத்தை சுளித்துவிட்டு துர்கா நகர... அவள் கையை பிடித்து தடுத்த அரவிந்த்
"எப்ப லவ் சொல்லுவ
"லவ் வந்த பிறகு? பாய்" என்று சிரித்து விட்டு ஓடி விட, அதே சிரிப்போடு அவனும் வண்டியில் ஏறினான் ...
இங்கே துரை மருதாணியை தேடி சல்லடை போட ஆரம்பித்தான் ..
இரண்டு அறை கொண்ட மருத்துவமனை உள்ளே துரை அவளை தேடி போனான்.. உள்ளம் கொஞ்சம் பதட்டமாக இருந்தது
"தனியா விட்டிருக்க கூடாதோ? ஏதுவும் ஆகியிருக்குமோ ??என சின்ன பயம் வேறு ...
" மருதாணி எங்க இருக்க??" சத்தம் கொடுத்து கொண்டே தேடினான்.
அவள் அலமாரியில் ரகம் வாரியாக மருந்துகளை அடுக்கி வைத்துக் கொண்டு இருக்க துரைக்கு அப்பாடா!! என்று மூச்சு வந்தது..
" மருதாணி "என்ற துரை சத்தம் கேட்டு .. இந்த நேரத்தில் தன் பெயரை யார் அழைக்கிறார்கள் என்ற பயத்தில் மருதாணி வேகமாக திரும்ப, மேலே இருந்த மருந்து குப்பி ஒன்று அவள் மேல் விழுந்து கைம்பெண்ணாக இருந்த மருதாணியின் வெள்ளை நிற புடவை முழுவதும் சிவப்பு நிற மருந்தால் கோலமிடப்பட்டது...
" நான் தான் எதுக்கு இவ்வளவு பதட்டப்படுற"
என்றவனுக்கு தான் பயமும் பதட்டமும் வியர்வையில் நெற்றி பளபளத்தது..
"இல்ல இந்த நேரத்தில் என்ன யாரும் கூப்பிடுறாங்கன்னு கொஞ்சம் பயந்துட்டேன்" என தன் மேல் விழுந்த சிவப்பு நிறத்தை கையினால் உதறிவிட்டாள்..
துரை தான் வந்த விஷயத்தை கூறிவிட,,
"யார் சொன்னா ??
"உன் கூட வருமே அந்த நர்ஸ் புள்ள..
"அவளா?? , அவளுக்கு நைட் இன்னைக்கு வேலையே கிடையாதே எதுக்கு உங்க கிட்ட அப்படி வந்து சொன்னா , "
"அப்படியா , ஏதோ வேண்டாத பய தேவையில்லாத ஓரண்ட இழுக்கிறான் போலிருக்கு, சரி சரி நீ மீதியை காலையில வந்து அடுக்கு, வீட்டுக்கு வா என்று அவளை அழைத்துக் கொண்டு வர மருத்துவமனையில் முன் கதவு பூட்டப்பட்டிருந்தது.. மணியோ இரண்டை தாண்டி விட்டது ..
மருதாணிக்கு உதற ஆரம்பித்தது, இந்த நேரத்தில் ஒரு ஆணோடு ஒரே அறையில் இருப்பதை ஊரார் கண்டால் என்ன நடக்கும் ..
"என்னங்க எதாவது பண்ணுங்க ....
"இரு இரு ஒன்னும் பயப்பட வேண்டாம் அரவிந்துக்கு போன் போட்டு கூப்புடுறேன் என போனை எடுக்க அதற்குள் வாசலில் கூச்சல் ...
"போச்சி!!!!" என்று மருதாணி தலையில் அடித்து கொண்டு அழ தயாராக..
"அதெல்லாம் ஒன்னும் ஆகாது , நீ பயப்டடாத புள்ள என்றவன் கதவை திறக்க குமரன் நக்கலாக பார்த்து கொண்டு நின்றான் .. ஊரே இங்கே திருவிழா கொண்டாட வந்து விட்டது ...
"பாத்தீங்களா உங்க ஊர் தலைவர் லட்சணத்தை என்ன அன்னைக்கு ஹாஸ்பிட்டல திருடிட்டு போனது மாதிரி புகார் வாசிச்சான்.. இன்னைக்கு அதே ஆஸ்பத்திரிக்குள்ள இவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி மாதிரி குடித்தனம் நடத்துறாங்க.. இதையெல்லாம் பார்த்துகிட்டு இந்த ஊரு சும்மா நிக்குது.... ம்ம் தொடுப்பா இருந்தா கூட
பண்ணையாருக்கு இருந்தா தப்பில்ல போல ..இதையே நாம பண்ணி இருந்தா, நாக்கை புடுங்கிட்டு சாகுற மாதிரி பேசி இருப்பாங்க ... அவன் பேச்சில் ஊரின் பெரிய தலைக்கட்டுகள் நரம்பு எல்லாம் புடைத்து விட.. உடனே முன்னால் வந்து ஆஜர்.
"என்ன துரை இதெல்லாம்?
"யோவ்!! அவன்தான் ஏதாவது சொல்லுறான்னா ..நீங்களும் அதை நம்பிகிட்டு என்கிட்ட பஞ்சாயத்து பண்ண வரிங்க ....
அப்படி எல்லாம் எதுவும் கிடையாது"
"எதுவும் கிடையாதுன்னா, எதுக்கு இந்த நேரத்துல துரை இந்த நர்ஸூ புள்ளையை தேடி வரணும் என்று ஒரு கிழவி எல்லார் காது படவும் சத்தம் கொடுக்க..
"அது மட்டுமா அன்னைக்கு ரெண்டு பேரும் பைக்ல ஜோடியா வந்தாங்க , இவன் சட்டைய அந்த பொண்ணு போட்டு இருந்தது... எதுவும் இல்லாமலா ரெண்டு பேரும் இப்படி ஒன்னா சேர்ந்து சுத்துவாங்க..
"ஹான் அதை சொல்லுங்க அக்கா, இவருக்கு சோறு கொண்டு போறது என்ன , அவரு இவளுக்கு பார்த்து பார்த்து அரிசியும் காய்கறியும் அனுப்பிவிடுறது என்ன, இதை எல்லாம் நாம சொன்னா யாரு கேப்பா? இந்த ஊர் மத்தியில ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டாங்கல்ல.. எலுமிச்சம் பழத்தை சோத்துல மறைக்கலாம், பூசணிக்காயை எத்தனை நாள் மறைக்க முடியும்? என்றதும் துரைக்கு அவ்வளவு கோபம் ..."
"அட ச்சை நிறுத்துங்க, உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்ல , தப்பே செய்யாத பொண்ண ஊர் மத்தியில் அசிங்க படுத்துறீங்க, இன்னொரு தடவை யாரும் அந்த பொண்ண தப்பா பேசக்கூடாது எல்லாரும் கிளம்புங்க "என்று துரை விரட்டிவிட பார்த்தான்..
மருதாணிக்கு கூசிக் குறுகி போனது, இதற்காகவா இவ்வளவு கடினப்பட்டாள்... அவள் கடந்து வந்த பாதை ஒன்றும் கல்லும் முள்ளும் இல்லை, கண்ணாடி துண்டுகளின் மேல் அல்லவா நடந்து வந்தாள்.. தன் மீது ஒரு துளி கறைப்படாமல் இத்தனை நாள் தன் மகளையும், தன்னையும் காத்துக் கொண்டு இப்பொழுது மொத்தமாக உடைந்து போனது போல் ஒரு எண்ணம் தோன்ற குமுறி வந்து அழுகையை முந்தானை சேலையில் உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு விக்கினாள்..
"இந்தா பாருங்கைய்யா வாய்க்கு வந்தது மாதிரி பேசாதீங்க என் வயசு என்ன, அந்த புள்ள வயசு என்ன?
"ஆசைக்கும் வயசு என்ன துரை சம்மந்தம்.. உனக்கும் சபலம் வரும்ல , பொண்டாட்டி செத்து பல வருஷம் ஆகிப்போச்சு, வீட்டுக்கு பக்கத்துலயே இவ நல்லா வெண்ணை போல இருந்தா, கை விட்டு பாக்க தான் சொல்லும்" என்றதும் துரை கையில் கிடைத்த பாட்டிலை எடுத்து பேசியவர் மண்டையை உடைக்க போய் விட்டான்..
"ஒருத்தரும் இங்க பேச கூடாது போங்க எல்லாரும் ..
"அது எப்படி போக முடியும்?? நீங்க உல்லாசமா இருக்க இது என்ன லாட்ஜா , வீட்டுக்கு உள்ள நடந்த கூத்து எப்போ இப்படி பொது இடத்துக்கு வந்ததோ இனி இதுக்கு ஒரு முடிவு கட்டாம விடுறது சரி இல்லைன்னு தோணுது" என குமரன் தூண்டி விட
"ஆமா துரை யாரு செஞ்சாலும் தப்பு தப்பு தான் ஊர்ல பெரியவன் நீயே தப்பு செஞ்சா என்ன மத்தவங்களும் அதையே தான செய்வாங்க , பந்த மாதிரி தப்பு நடந்தா ஊர் வழக்கப்படி அந்த பொண்ணு முடியை மொட்டை அடிச்சு கழுதையில கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வர வைக்கணும் அதோட ஆம்பளைன்னா அவனை ஊர விட்டு ஒதுக்க வைக்கணும் , என்ன சொல்றீங்க..
"ஆமா ஆமா ... என சிலர் கூறவும் துரைக்கு தன் முதுகு பின் விசும்பும் மருதாணியை பார்த்துதான் பாவமாகி போனது ... இப்படி ஊர் மொத்தமும் நஞ்சை விதைக்கும் அளவு தாங்கள் என்ன செய்தோம் என புரியவில்லை ...
"ஆமா அந்த பொண்ண இழுத்துட்டு வந்து கழுதை மேல ஏத்துங்க எதுக்கு வெயிட் பண்றீங்க" என்று குமரன் ஊமையாக மருதாணியை பார்த்து சிரிக்க.. பெண்கள் மருதாணியை இழுக்க வர , துரை வந்து கையை மறைத்தபடி குறுக்கால் நின்றான் .
"எவளாவது மருதாணி மேல கை வச்சீங்க நடக்குறதே வேற என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்து துரை மருதாணியை இழுத்து தன் முன்னால் விட்டான்..
"மருதாணி .அவள் முகத்தை மூடி கொண்டு கதற
"மருதாணி என்ற அவன் சின குரலில் தலையை தூக்கி மருதாணி பார்த்தாள்...
"என் மேல நம்பிக்கை இருக்கா ? அவள் புரியாது முழித்தாள்...
"உன் கடந்த கால வாழ்க்கை என்னன்னு எனக்கு தெரியாது அது எப்பவும் எனக்கு தேவையும் இல்லை, என் கண்ணை பாரு அதுல காலம் முழுக்க உனக்கு துணையா இருப்பேன்னு பதில் இருந்தா என் கையை பிடி , இல்லை இந்ந கறையோட இவங்க கொடுக்கிற செய்யாத தப்புக்கான தண்டனையை அனுபவிக்க போறேன்னா போய் மொட்டை அடிச்சிக்க..." அவளுக்கு இன்னும் துரை என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை ..
"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா??? என்று கேட்டு விட்டான்.. அவள் அதிர்ந்த போய் துரையை பார்க்க ... அவளுக்கு மேல் ஊர் அதிர்ந்து விட்டது. இப்படி ஒரு முடிவை அசால்ட்டாக துரை எடுப்பான் என குமரன் கூட நினைக்கவில்லை...
"ஆம்பள மேல படுற களங்கம் தூசி போல தட்டி விட்டா போயிடும் ஆனா, பொண்ணு மேல படுற களங்கம் ஆடை மேல பட்ட கறை மாதிரி, உடனே கழட்டவும் முடியாது கழட்டவும் இவங்க விட மாட்டாங்க.. இந்த ஊருக்காக பயந்து எல்லாம் உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு நான் தயாராகல, எப்போ உன் பேர் என் பேரோட சேர்ந்துச்சோ, இனி நீ எங்க போனாலும் அதை மாற்ற முடியாது.. அது உன்ன தொடர்ந்து வந்துகிட்டே தான் இருக்கும் ... அதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும்னா... ஒன்னு நீ எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்.. என்னடா இவன் தாலி கெட்டவான்னு கேக்குறான்னு நீ என்ன தப்பா நினைக்காத, இதுக்கு வேற ஏதாவது இதைவிட சிறந்த பதில் உன்கிட்ட இருக்குன்னா சொல்லு அதுபடி நான் செய்கிறேன் உனக்கும், உன்னைய சேர்ந்த எல்லாருக்கும் நான் பாதுகாவலாக துணையா கடைசி வரைக்கும் இருப்பேன்னு அந்த நம்பிக்கை என் மேல இருந்தா எனக்கு பொண்டாட்டியா என் கூட , என்னோட வனத்துல ஒரு மருதாணியா சேர்ந்திடு... இல்ல உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லைன்னு நீ நெனச்சா என்ன முடிவு எடுக்குறியோ... அதுக்கு நான் கட்டுப்படுகிறேன் உன் இஷ்டம்" என்று துரை பெருமூச்சு விட்டு கையை கட்டிக்கொண்டு ஊரையும் அவளையும் கூர்மையாக பார்க்க..
மருதாணிக்கு தன்னை கேவலமாக பார்க்கும் ஊர் கண்களை பார்த்து அசிங்கமாக இருந்தது .. எங்கே போனாலும் இந்த பெயரையும் இனி சுமந்து கொண்டே தானே செல்ல வேண்டும்.. துரையை வச்சிருந்தாளாம் , ஊர் மக்கள் அவளை அடித்து விரட்டினாங்களான்னு இந்த பெயர் எப்பவும் போகாதுல்ல ..எனக்கு மட்டும் அசிங்கம் இல்ல, என்னால ஊரே சாமியா நினைச்ச , களங்கமே இல்லாத அந்த மாமனிதனுக்கும் அசிங்கமாகிவிட்டது .. இந்த களங்கத்தை துடைக்க இதை விட்டால் வேறு வழி ஏதாவது உண்டா ??என்று அலசி ஆராய ... இதயம் படபடத்தது ஆனால் ஒரு வழியும் இல்லையே ...
ஒன்று அவன் மனைவியாக வேண்டும், இல்லை இந்த களங்கத்தோடு வாழ வேண்டும் களங்கத்தோடு வாழ்ந்து விட முடியுமா? வாழ விட்டு விடுமா இந்த சமுதாயம்?காய்த்த மரம் கல்லடி படும் என்பார்கள் இது பாறையடி அல்லவா பட்டுக் கொண்டிருக்கிறது... இளைப்பாற எனக்கு ஒரு இடமே கிடையாதா?? என்னும் கேவல் அவளுக்கு உருவானது...
"ஏம்மா எங்க துரையை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் பழைய வாழ்கையை நினைச்சு வருத்தப்படாத உன் நல்ல மனசுக்கு தான் துரையை கடவுள் தர்றான் "என ஒன்றிரண்டு நல்ல உள்ளங்கள் கூற...
ஒரு சிறு குழந்தையோ கோவில் மரத்தில் கட்டி இருந்த தாலியை கழட்டி எடுத்துவிட்டு குடுகுடுவென கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடி வந்து துரைக்கும் மருதாணிக்கும் இடையில் தாலியை தூக்கி காட்ட ... துரை அவளை திரும்பிப் பார்த்தான்...
மருதாணிக்கு தன் மகளுக்கு என்ன பதிலை சொல்வது என்று தான் தெரியாமல் முழித்தாள்.. அவள் முகரேகை படித்த துரை ,
"உன் மககிட்ட நான் பேசுகிறேன்" என அவள் நினைக்கும் கேள்விக்கு பதில் சொல்ல
மனதை படிக்கும் அவனை விட வேறு யார் அவளுக்கு துணை ஆகி விட முடியும் துரையை மருதாணி ஆழ்ந்து பார்கக ..
"என் கடந்த காலம்" என அவன் சொல்ல தொடங்க..வேண்டாம் என தலையாட்டி மறுத்த மருதாணி ..
"எப்படி உங்களுக்கு என் கடந்த காலம் தேவையில்லையோ , அது போல உங்க கடந்த காலமும் எனக்கு தேவையில்ல..உங்களை கல்யாணம் கட்டிக்க சம்மதம் "என்று மருதாணி கூற ஊரே வாயடைத்துப் போனது..
"அரவிந்த் ஊருக்கு வரும் கடைசி பஸ் கிடைக்காமல் விடியற்காலை வந்து சேர... பேருந்து நிலையத்திலேயே அவனுடைய நண்பன் ஒருவன் பிடித்துக் கொண்டான்... இங்கே நடந்த விஷயத்தை கூறிட அவனுக்கு நெஞ்சே வெடித்து விட்டது..
" என்னடா சொல்ற?
" ஆமாடா உங்க அப்பாவுக்கும் மருதாணிக்கும் ஏதோ தப்பான உறவு இருந்திருக்கும் போல இருக்கு... இன்னைக்கு ஊர் நடுவுல மாட்டிக்கிட்டாங்க "என்றதும் அரவிந்தால் இதை ஜீரணிக்க முடியவில்லை..
வேறொரு பெண்ணோடு தன் தந்தை மாட்டியிருந்தால் கண்டிப்பாக சபாஷ் நைனா இதத்தான் எதிர்பார்த்தேன் என்று முதல் ஆளாக தாலியை எடுத்து கொடுத்திருப்பான் ... ஆனால் இப்போது தன் தந்தை பேரோடு அடிபடுவது... தான் காதலிக்கும் கனவோடு இரவுகளை கழிக்கும் பெண்ணின் தாயோடு அல்லவா ?
"அதோட இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்க போறதா வேற பேச்சு.. உனக்கு போன் போட்டு போட்டு பார்த்தேன் எடுக்கவே இல்ல அதான் செய்தியை சொல்றதுக்கு நேராவே ஓடி வந்துட்டேன்.."
அவன் தலையில் நெருப்பை கொட்டியது போல அரவிந்துக்கு ஆகிப்போனது...எதுவும் நடப்பதற்குள் இதை தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று வேகமாக இடம் நோக்கி ஓடி வந்தார்கள்..
"உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்க எனக்கு பாதுகாப்பு இறுதி வரைக்கும் இருப்பீங்க.. உங்களை நான் கல்யாணம் கட்டிக்கிறேன்" என்ற மருதாணியின் பேச்சில் மீசையை முறுக்கிய துரை... குழந்தை நீட்டிய தாலியை தன் கையில் வாங்கி..
"இனி மருதாணி என் பொண்டாட்டி.. நான் அவ புருஷன், நீங்க சொன்னது கட்டு கதையா இருந்தாலும் இது கடவுள் போட்ட முடிச்சுன்னு நெனச்சு நான் அவ கழுத்துல மூணு முடிச்சு போடுறேன்... இவதான் இனி எனக்கு பொண்டாட்டி என்னில் பாதி என் பொண்டாட்டியை யாராவது தப்பா பேசுனீங்க இனி கொலை விழும்" ... என்று துரை தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டுவிட்டு தலையை தூக்க... அரவிந்த் வெறித்த கண்களோடு தன் தந்தையையும் தன் காதலியின் தாயையும் பார்த்துக் கொண்டு நின்றான் ...
மகன் கண்டிப்பாக மகிழ்வான், அவன் ஆசைப்பட்டது இதைத்தானே என துரை நினைத்து விட்டான்
பாவம் அவன் அறிவில்லை, ஊரின் விஷ பேச்சில் உடையாத அவன் உள்ளம் தன் மகன் பேச்சில் உடைய போகிறது என்று ...
8 வனம் சேர்ந்த ஐவணம் !!
தன் தகப்பன் கையால் கட்டிய தாலி மருதாணி நெஞ்சில் கம்பீரமாக தொங்க .... அரவிந்த் கண்ணில் ஒரு சொட்டு காதல் தோல்வி கண்ணீர் ..
முடிந்தது அவன் காதல் அத்தியாயம் எழுதப்படாமலேயே முடிக்கப்பட்டது... எப்படி இனி துர்காவை தன் காதலியாக ஏற்றுக் கொள்ள முடியும்? தன் தந்தையும், அவளின் தாயும் கணவன் மனைவி என்றால் .. இனி துர்கா அவனுக்கு தங்கை முறையாக அல்லவா வருவாள்.. சில்லு சில்லாக உடைந்து போனது காதல்....
ஒருவனை நல்லவனாகவும், தீயவனாகவும் மாற்றும் அமுதமும் விஷமும் காதல்தான்.... தூய தேனாக இருந்த அரவிந்த், தன் காதல் போன துக்கம் தொண்டையை அடைக்க, எதிரே நின்ற தன் உயிரான தந்தை மீது கோவம் வந்தது .. தன் காதல் மாண்டு போக இவரின் தராதாரம் இல்லாத செயல்கள்தான் காரணம் என்று வெகுண்டு எழுந்து விட்டான்...
அரவிந்தை கண்ட துரைக்கு தர்மசங்கடமான நிலை .. திருமண வயதில் நிற்கும் மகனை வைத்து கொண்டு புது மாப்பிள்ளை கோலத்தில் நிற்கிறோமே... இப்படி ஆகி போனதே?? என வேதனை கொண்டு மகனை பார்க்க ..
"அதான் மருதாணி அவர் பொண்டாட்டின்னு ஆகி போச்சே இனி அவுக குடும்ப பிரச்சனை.. துரையை இப்படி மாலையும் கழுத்துமா பார்க்கணும்னு ஆசை பட்டோம் அதுக்கு இந்த டாக்டர் வழி அமைச்சி கொடுத்துட்டான் "என்க துரை அதிர்ந்து போய் ஊர் மக்களை பார்த்தான்...
"நீ மட்டும் தான் எங்களுக்கு நல்லது செய்வியா ராசா , உனக்குன்னு இதுவரைக்கும், நீ எதையுமே வச்சுக்கிட்டது இல்ல .. ஊருக்கு என்ன நல்லது எங்களுக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து செஞ்சே நீ இப்படி பட்ட மரமா நிற்கிறத பார்த்துகிட்டு நாங்க மட்டும் சும்மா இருப்போமா?? இந்த டாக்டர் பய வந்து உன்னை தப்பா சொன்ன அன்னைக்கே கட்டி வச்சி தோல உரிச்சிருப்போம் எங்களுக்கு தெரியாதா?? துரை எப்படிப்பட்ட ஆளுன்னு ... காய்ச்ச பால்ல கூட ஆடை விழலாம் .. ஆனா எங்க துரை பசும்பொன்னிலும் சுத்தம்னு... நாங்களும் உனக்கு ஒரு நல்லது செஞ்சு வச்சு புடனும்னு பல வருஷமா ஆசைப்பட்டு முயற்சி எடுக்கத்தான் செய்கிறோம், நீதான் கழுவுற மீனுல நழுவுற மீனு மாதிரி எதுக்கும் பிடி கொடுக்காம ஓடின , வசமா வந்து இந்த வதந்தி மாட்டிச்சு, இப்படி
ஏதாவது நடந்து உன் வாழ்க்கையில செழிப்பு வராதுன்னுதான் நாங்க எல்லாரும் பேசி வச்சு இப்படி பண்ணிப்புட்டோம்... இது தப்புதான் துரை ஆனாலும் எங்களுக்கு வேற வழி தெரியல மன்னிச்சிடு" என்று ஊர் மக்கள் அவன் முன்னால் கையை பிசைய .. தலையில் அடித்துக் கொண்டான் துரை ..
"என்ன நடிப்பா ?"மருதாணிக்கும் பெரிய அதிர்வு ஒரு மனிதனுக்காக ஒரு ஊரே நாடகம் ஆடி இருக்கிறது தன் கழுத்தில் கிடக்கும் இந்த தாலி சரியா தவறா என்று அவளுக்கு புரியவில்லை...
"ப்ச் நல்லா செஞ்சீங்க நல்லது, உங்க கிட்ட நான் கேட்டேனாய்யா பொண்டாட்டி இருந்தாதான் நான் சந்தோஷமா இருப்பேன்னு... இப்படி இக்கட்டுல கொண்டு வந்து மாட்டிவிட்டு இருக்கீங்களே" என்று வேதனையில் துரை முகம் கருத்து போனது..
தன் அருகே அவன் கட்டிய தாலியில் அவன் இணையாக திணிக்கப்பட்ட மருதாணியை திரும்பிப் பார்த்தான்...பெரும் பாரம் அமுக்கியது
இனி கழட்டவோ , கட்டிய தாலி இல்லை என்றோ கூற முடியாது.. தாலி பந்தத்தில் இணைந்தது இணைந்ததுதான் .. மகன் வேறு அமைதியாக நிற்க துரைக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியாத நிலை...
"துரை இப்படி பார்த்துக்கிட்டே நின்னா எப்படிப்பா பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு போ...டேய் அரவிந்த் இதுக்குத்தானே ஆசைப்பட்ட.. பாரு உன் அப்பாவுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி.. இனி அவரும் சம்சாரி ஆகிப்போனார்.. இரண்டு பேரையும் கூட்டிட்டு போயி சுத்தி போடு .. ஊர் கண்ணு முழுக்க, இந்த ஜோடி மேலதான் இருக்கு சும்மா சொல்ல கூடாது துரை, சொக்கனுக்கு வாச்ச சுந்தரி மாதிரி ... மருதாணி உனக்கு அப்படி இணையான அழகா இருக்கா? மூக்கு முழியுமா உன் தோரணைக்கு அம்சமா பொருந்தி போறா... சீக்கிரம் அரவிந்துக்கு ஒரு தம்பி பெத்துக்கொடு என்று எல்லாரும் கிளுக்கி சிரிக்க .. சாட்டையை எடுத்து ஊர் மக்களை அடித்து விரட்ட தோன்றியது துரைக்கு.. குமரன் கூட்டத்தில் நழுவ நினைக்க ஊர் மக்கள் அவனை சுற்றி வளைத்து தூக்கி இலவச பேமிலி பிளானிங் செய்து வைத்தனர் ....
"இன்னைக்கு பூ மிதிக்க போறது இல்ல, இவன போட்டு மிதிக்க போறோம் வாடா மொவனே எங்க துரையவா குறை சொன்ன" என்று அவனை தூக்கி போட்டு பந்தாடி விட்டனர் ...
மூவர் மட்டுமே அந்த இடத்தில் ...
அரவிந்த் , துரை , மருதாணி .... வெகு நேர அமைதி பேச வார்த்தை இல்லாது துரை நின்றான் ..பேச முடியாது மருதாணி நின்றாள் .. பேச நேரம் பார்த்து கொண்டு அரவிந்த் நின்றான் ...
"சாமி" என துரை அவன்,அருகே போக போக கை நீட்டி தடுத்த அரவிந்த் ..
"பக்கத்தில வராத உன் நிழல் கூட என் மேல பட கூடாது" என,மகனை மின்சார அதிர்வு கொண்டு துரை பார்க்க, அவனுக்கு குறையாத அதிர்வால் மருதாணி நின்றாள்..
"சாமி..
"போதும் சாமி சாமின்னு என் உயிரையே எடுத்துட்டுல்ல... நான் உன்ன போய் நல்லவன்னு இல்லை , என் அப்பனை போல இந்த உலகத்துல எந்த அப்பன் இருக்கான்னு நினைச்சேன்... ஆனா நீ கேவலம் ஒரு பொம்பள சுகத்துக்காக பெத்த மகனை மறந்துட்டு இப்படி நிற்கிற... உன் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கலை போ" என்ற மகனின் ஒவ்வொரு வார்த்தையும் , அந்த ஆறடி மனிதனை நடுங்க வைத்து விட்டது ... தன்னிடம் சொல்லாமல் திருமணம் முடித்து விட்டாயே என்று செல்லமாக கோபித்துக் கொள்வான் என்று நினைத்த துரைக்கு அவனின் இந்த விஷமான வார்த்தைகளை தாங்க முடியாமல் தடுமாறி அருகே இருந்த மரத்தை பிடித்தான் ..
"எய்யா ஊர் சனம் சதி செஞ்சிபுட்டிய்யா"
"போதும் இந்த ஊர் வேணும்னா, உன்ன நல்லவன் வல்லவன் என்று சொல்லலாம் .. ஆனா, நீ இதுக்கு தான் ஆசைப்பட்டு இருக்க.. பிளான் பண்ணி இதெல்லாம் நடந்திருக்கு... அன்னைக்கு ராத்திரி இவ கூட தான் நீ காட்டுல உல்லாசமாக இருந்திருக்க ..
"அப்படி எல்லாம் இல்ல சாமி "
"பொய் சொல்லாத என் மேல சத்தியமா சொல்லு இவங்க கூட நீ காட்டுல பேசலன்னு..
"பேசின சாமி ஆனா?
"போதும் நடிக்காத..தப்பு செய்யாதவன் எதுக்கு
நான் கேட்டதுக்கு மருதாணி பறிக்க வந்தவங்க, அது இதுன்னு என்கிட்ட பொய் சொன்ன.. அப்போ உனக்குள்ள கள்ளம் இருந்திருக்கு .. அப்படித்தானே?
"சாமி அப்படி பேசாத தங்கம் .. என் மனசு ரொம்ப கஷ்டப்படுது ... உனக்கு இந்த அப்பாவை பத்தி தெரியாதா ?? என்ற துரையின் கண்கள் மகன் பேசும் வார்த்தைகள் கலங்கி நின்றது....
"அப்படித்தான் நானும் நினைச்சேன்.. என் அப்பா யோக்கியன், பொண்ணு கண்டா மண்ண பார்ப்பார்னு, எனக்காக எல்லாத்தையும் இழப்பார்னு .. ஆனா நீ அப்படி இல்ல... என் கண்ணு முன்னாடி என்னை ஏமாத்திட்ட , என் வாழ்க்கையே கெடுத்துட்ட, என் சந்தோஷத்தை கெடுத்துட்டு நிக்கிற, என் நிம்மதியை இழக்க வச்சிட்ட .. நான் ஆசைப்பட்டது எல்லாம் என் அப்பா எனக்கு பார்த்து பார்த்து செஞ்சு தருவார்னு நான் மார்தட்டி நின்னேன்.. ஆனால் சின்ன சாக்லெட்டை வாங்கி தந்து , என் வாழ்க்கையே எடுத்த மாதிரி இருக்கு.. போய்யா உன்ன போய் நான் தல மேல வச்சு கொண்டாடினேன் பாரு , என்ன செருப்பால அடிக்கணும்" என்ற அரவிந்த் கண்ணிலும் பொலபொலவென்று நீர் வடிந்தது..
காதல் இழப்பை யாரால் தான் சகிக்க முடியும்?அரவிந்த் பெண்களை சைட் அடிப்பான், அத்தோடு முடிந்தது .... காதல் வாழ்க்கை என்னும் நிலைக்கு, தனக்கு இணையாக .. அவன் நினைத்தது ஏங்கியது ஆசைப்பட்டது துர்கா மட்டும்தான் ... ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிடவும் அவனால் இந்த தோல்வியை, காதல் இழப்பை தாங்க முடியாமல் நடப்பது எதையும் உணர முடியாத நிலையில் எல்லோரையும் குறை சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டான்..
சூழ்நிலை அவனை அந்த கதாபாத்திரத்திற்கு கொண்டு வந்து நிற்பாட்டியது.. துரை சூழ்நிலை கைதியாக அங்கே மாற்றப்பட்டான்.. இருவருக்கும் இடையே சரி செய்யப்படவே முடியாத ஒரு பிளவு விழுந்தது மருதாணி என்னும் புது வரவால்..
மருதாணிக்கு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே வேண்டாத களையாக தான் வந்து விட்டோமே என்று விக்கிக் கொண்டு வந்தது ... அரவிந்தே துரையை இப்படி எல்லாம் கேள்வி கேட்க ... துரை ஆண் அவருக்கே இந்த நிலைமை என்றால் ?? வாலிப வயதில் இருக்கும் தன் மகளிடம் இதை எப்படி புரிய வைப்பது? துர்கா என்னை என்ன நினைப்பாள் என்று அவளுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது...
சாமி ...
"போதும் , இனிமே உனக்கும் எனக்கும் எதுவும் இல்ல நான் உனக்கு மகனும் இல்ல,, நீ எனக்கு அப்பனும் இல்ல ... இந்த நிமிஷத்தோட உனக்கும் எனக்குமான எல்லா சொந்தமும் முடிஞ்சு போச்சு , இனிமே என் வாழ்க்கையில நான் உன்னை பார்க்கவே விரும்பல" என்று சினத்தில் கத்திய அரவிந்தை துரை ஓடிப்போய் கட்டிப்பிடிக்க போக... அவன் நெஞ்சில் கை வைத்து பிடித்து தள்ளிய அரவிந்த்..
"நீ எனக்கு வேண்டாம் போ" என்று சிறு குழந்தை போல் அடம் செய்யும் மகனை பார்த்து துரை வேதனையின் உச்சிக்கே போய்விட்டான்..
"என்ன சாமி இதுக்காகவாய்யா நான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேன்... நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்யா, இந்த அப்பாவை விட்டு போயிடாதய்யா" என்று அவன் கையை பிடித்துக் கொண்டு கதறாத குறையாக துரை கதறினான்...
ஐந்து வயதில் அவன் மார் மீது மிதிக்கும் பொழுது அது சுகமாகத்தான் இருந்தது 50 வயதில் வார்த்தையில் அவன் நெஞ்சை மிதிக்கும் பொழுது தாங்கிக் கொள்ள முடியவில்லை ..வலித்தது ரணமாக வலித்தது..
"உன்னை நான் மன்னிக்கணுமா??..
"ம்ம் " சிறு பிள்ளை போல துரை தலையாட்டினான்...
"அப்போ ஒன்னு செய்வியா ??
"ம்ம் எது வேணும்னாலும் செய்றேன் ..
"இந்த பொம்பள கழுத்துல இருக்குற தாலிய உன் கையால அத்து எறிஞ்சிட்டு, அவளுக்கும் உனக்கும் எதுவும் இல்லைன்னு விரட்டிவிடு... இல்லன்னா நான் சொன்னது தான் , உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை என்ற மகனின் வேண்டுகோளில் துரை ஆடி போனான்..
சாமி இஇஇஇஇஇ..
எப்படி முடியும்? கட்டியை தாலியை கழட்டி விட முடியும் என்றால் இங்கே பல ஆண்கள் தாலி கட்டி விளையாண்டு இருப்பார்களே, நீதான் என் மனைவி என்று மூன்று முடிச்சை போட்ட பின்பு அதை எப்படி அடித்து திருத்த முடியும்... இயலாதே.. அத்தோடு, என் மீது நம்பிக்கை இருக்கிறது என்று என் கரம் பிடித்த அவளை விலக்கி விட்டால், அவள் நம்பிக்கைக்கு நான் எப்படி பாத்திரமானவனாக இருக்க முடியும்...
அவனுக்கு துணை தேவைப்படுகிறதோ இல்லையோ? ஆனால் , அவனை நம்பி அவன் கையைப் பிடித்து விட்டாள் , எப்படி அதை உதறித் தள்ள முடியும் ... தன் தந்தையின் பதில் இல்லாத பார்வையில் அரவிந்த் எரிச்சல் கொண்டு..
"அப்போ இந்த மகனை விட , உனக்கு அவதான் முக்கியம் .. என்ன விட உனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம்... நான் எப்படி போனாலும் பரவாயில்லை , உனக்கு உன்னோட வாழ்க்கை தான் முக்கியம் .. என்னோட வாழ்க்கை நாசமா போனாலும் பரவாயில்லை , உனக்கு அவ கூட சந்தோஷமா இருக்கணும் .. அப்போ எதுக்குய்யா நான் உனக்கு.... ஒன்னு அவளை தலைமுழுகிட்டு என் கைய புடி , இல்லன்னா என்ன தலைமுழுகிட்டு அவ கூட நாசமா போ அவ்வளவுதான் சொல்லுவேன்... நான் வேணும்னா நீ மட்டும் நம்ம வீட்டுக்கு வா , நான் வேண்டாம்னா , அவ கூட போயிடு ... "
அரவிந்துக்கு மருதாணியையும் விட்டு வைக்க மனமில்லை அவள் முன்னால் போய் நின்றவன்..
"உன்னை பார்க்கிற வரைக்கும் என் அப்பா எனக்கு மட்டும் சொந்தமானவரா இருந்தார் , என்னைக்கு நீ இந்த ஊருக்குள்ள வந்தியோ.. அன்னைக்கே அவர் என்னை விட்டு விலகிப் போயிட்டார்.. இப்ப சந்தோஷமா உனக்கு... நீ எல்லாம் ச்சை" என்று உதாசினமான வார்த்தையில் மருதாணி அருவருத்துப்போய் குனிந்து கொள்ள... அதுவரை தன்னை அவமானமாக பேசிய மகனை பொறுத்துக் கொண்டு நின்ற துரை... தன் மகன் அருகே வந்து அவன் கையைப் பிடித்து இழுத்து..
"தப்பு செஞ்சது நான் தானடா , என்ன பேசு, அந்த பொண்ண பேசுறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு இது தப்பு சாமி... "தன் தகப்பன் முதுகில் அடங்கி நின்ற மருதாணியையும் அவனையும் கோணலாக உதட்டை வளைத்து பார்த்த அரவிந்த ..தேளாக வார்த்தையை கொட்டினான்..
"ஓஹோ!! ஆசை நாயகிய குறை சொன்ன உடனே பொத்துக்கிட்டு வருதோ என் அப்பனுக்கு... ஆனா உன்கிட்ட நான் இத எதிர்பார்க்கலைய்யா... தப்பு சரி எல்லாம் என்கிட்ட பாக்குற அளவுக்கு நீ வந்துட்டேன்னா... இனிமே உனக்கும் எனக்கும் என்ன பேச்சு "என்ற மகனை தலையில் அடித்து கொண்டு துரை பார்த்தான்..
இப்படி புரிதல் இல்லாமல் பேசுகிறானே என்ன ஆனது இவனுக்கு , அவன் பேசும் பேச்சு, சாராம்சம் புரியாமல் திணறினான் ..
தான் திருமணம் செய்து விட்டேன் என்று சொன்னால் சந்தோஷம்படும் முதல் ஆள் தன் மகனாகத்தான் இருப்பான் என்று நினைத்திருக்க ஆனால் , நடப்பதோ இங்கு வேறே.. மொத்த கோபத்தையும் தன் தந்தை மீதும் மருதாணி மீதும் உமிழ்ந்தான்...
"ஒரு மணி நேரம் டைம் இவளை ஊர் வாசலில் விட்டுட்டு வீட்டுக்கு வந்து சேரு.. இல்ல இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு நான் இந்த ஊரிலேயே இருக்க மாட்டேன், இனிமே நீ நெனச்சாலும் என்ன பார்க்க முடியாது அவ்வளவு தான் சொல்லுவேன்" என்ற அரவிந்த் வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட ...
ஒற்றைப்பக்கம் மகன் போய்க் கொண்டிருந்தான் இன்னொரு பக்கம் மருதாணி நின்று கொண்டிருந்தாள் .. துரை இடையில்...
எந்த பக்கம் போவது? தன் வாழ்க்கையை எந்த பக்கம் அமைத்துக் கொள்வது என்ற விடை தெரியாமல் துரை நடுவில் தவித்து போய் நின்றான்...
தன் மகனா ?இல்லை, தன் தாரமா?
ஏம்மா ரூம் போட்டு சூனியம் வைப்பது எப்படின்னு கத்துக்கிட்டு இருக்கியா?
அதான ?
9 வனம் சேர்ந்த ஐவணம் !!
வெகு நேரம் கல்லில் செய்த சிலையாக துரை அதே இடத்தில் நிற்க ,வானம் இடியோடு மழையை பெய்ய ஆரம்பித்தது.. அவனுக்காக அந்த மழையும் வருந்தியது போல....
துரை திரும்பி மருதாணியை பார்க்க அவள் இருந்த சுவடு இல்லாது சுற்றி பார்க்க , மழையில் நனைந்து கொண்டே மருதாணி ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறுவதை கண்டவன் , ஆழ்ந்த மூச்செடுத்து மருதாணி போன திசை நோக்கி தன் பைக்கை எடுத்து கொண்டு போனான் ....
தனி வழி செல்லவா தாலி பந்தம்
சுடுகாடு போகும் வரை ஒரு வழி செல்லத்தானே தாம்பத்திய பந்தம் வழி ஏது என கண்டு கொண்டான் போல..
வேகமாக பைக்கை கொண்டு போய் பஸ்சுக்கு குறுக்காக துரை நிப்பாட்ட.. பஸ் பிரேக் போட்டு நின்றது... நடப்பது நடந்து முடிந்தது எதையுமே உண்மை என்று நம்ப முடியாமல் தன் கழுத்தில் கிடந்த தாலியை கையால் பிடித்தபடி மருதாணி சீட்டில் செய்து வைத்த செப்பு சிலை போல வெறித்த கண்ணோடு எதிரே வந்த காட்சிகளை பார்த்தபடி அமர்ந்திருக்க.. பஸ்ஸில் போட்ட பிரேக்கில் அவள் உடலும் குலுங்கி அசைந்து நின்றது ...
துரை வேகமாக பஸ்ஸூக்குள் ஏறி ஒவ்வொரு சீட்டாக தன் புது மனைவியை தேடினான்..கடைசி சீட்டின் மருதாணி இன்னும் கண்களை சிமிட்டாமல் வெறித்து பார்வையோடு அமர்ந்திருக்க.. அவள் அருகே போய் நின்ற துரை..
"எழும்பி வா என்றான்.. அவன் சத்தத்தின் மருதாணி அதிர்ந்து அண்ணாந்து பார்க்க ...
"உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன் எழும்பி வா பதில் ஏதும் சொல்லாமல் மருதாணி ஜன்னல் பக்கம் திரும்பி அமரப் போக , தாலி கட்டிய பின்பு உரிமையும் ஒருமையும் தானாக வந்து ஒட்டி விடுமோ .. அவள் கையை பிடித்து இழுத்து தரதரவென்று பஸ்ஸை விட்டு இறக்கி கீழே விட்டவன்...
"இப்ப எங்க போற?முறுக்கிய மீசை நடுவே சினம் கண்டாள்... தானாக உதடுகள் திறந்து கொண்டது
"அது , என்னால உங்களுக்கு தொந்தரவு வேண்டாம் நான் எங்கேயாவது போயிடுறேன் "என்று முதுகு காட்டி நின்று கொண்டு மருதாணி பேச...
"நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்லை... சுயநலம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு நான் சுயநினைவோடதான் உன் கழுத்துல தாலி கட்டினேன்.. நீ தான் என் பொண்டாட்டின்னு ஊர் மத்தியில சொன்னது உன் காதுல விழல... என்கிட்ட கேக்காம உன் பாட்டுக்கு எங்கேயோ போறேன்னா எனக்கு என்னடி மதிப்பு ?"என துரை போட்ட போட்டில் மருதாணி நடுநடுங்கி போனாள்..
"இங்க திரும்பு "அவள் கைகள் கிடுகிடுவென ஆட அவனை நோக்கி திரும்பிட... சொர் என்று மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது, இருவரும் நனைந்து போய் நின்றனர்..
"இது நல்லதா கெட்டதா எங்க போய் முடியும்?? அப்படிங்கறதெல்லாம் எனக்கு தெரியாது.. இது தான் உனக்கும் எனக்குமான ஒரே வழியா அமைஞ்சு போச்சு ... என் நிழலுக்குள்ள தெரிஞ்சோ தெரியாமலையோ வந்துட்ட... இனிமே உனக்கு நான்தான் புருஷன் ,எப்பவும் எங்கேயும் மறுக்க மாட்டேன் மறக்க மாட்டேன் , ஆனா எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு,, தெரியுது இத்தனை வயசுக்கு மேல என்ன அவகாசம்னு.. ஆனா நடந்தது எதையும் இன்னும் என் மூளையும் , என் உடம்பு ஏத்துக்கல நீயும் என்னை புரிஞ்சுக்காம எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஏதாவது முடிவு எடுக்காத , என்ன புரிஞ்சிப்பன்னு நினைச்சுதான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் புரிஞ்சுக்குவதானே? "என்றான் துரை .. அவன் கேள்வியில் மருதாணி தலை தானாக ஆடியது அவனை அறியாமலேயே நிம்மதியாக பெருமூச்சு விட்டவன்...
"எனக்கு என் மகன் எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன்... ஏதோ அவனுக்கு வருத்தமா இல்ல கோவமான்னு தெரியல? அவன சமாளிக்க எனக்கு ஒரு ரெண்டு மாசம் அவகாசம் வேணும்...
"அது வரைக்கும் நான் எங்கேயாவது கண்காணாத இடத்துல இருந்துக்கிறேன்..
"ப்ச் , எதுவும் வேண்டாம்... பக்கத்துக்கு ஊர்ல வீடு ரெடி பண்ண சொல்லி இருக்கேன்... நீ அங்க இருந்துக்கோ , அவன ஓரளவுக்கு சமாளிச்சுட்டு அதுக்கு பிறகு உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. அவன் ஏதாவது பேசிட்டா உனக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் அதனாலதான் , வேற எதுக்கும் இல்ல புரியுதா..
"புரியுது எனக்கு துர்காவை நினைச்சுதான் என மருதாணி கையை பிசைய..துரை என்ன நினைத்தானோ ?? அவள் கையை பிடித்து தன் கைக்குள் வைத்தபடி ..
"அப்பவே சொன்னேனே... இனி உனக்கானது எல்லாம் எனக்கானது, நான் பாத்துக்குறேன் இவனை சமாளிச்சுட்டு அவகிட்ட போய் பேசுறேன் பயப்படாம போ" என்றவன் மழை நீரில் அவள் அங்கம் தெரிய சேலை நனைந்து இருக்க..தன் சட்டையை வேகமாக கழட்டி அவள் கையில் கொடுத்தவன் ..
"போட்டுக்க ஆட்டோ வர சொல்லி இருக்கேன் , என்ன தேவைன்னாலும் பக்கத்து வீட்ல சண்முகம் இருப்பார் அவர் கிட்ட சொல்லு, முடிஞ்சா உன்ன வந்து பார்க்கிறேன்... வரலைன்னாலும் தப்பா நினைக்காத, என் சூழ்நிலை அப்படி"..
"ம்ம் சரிங்க என ஆட்டோவில் ஏறி போகும் மருதாணியை பார்த்து கொண்டே நின்றவன்... தன் மகனை சமாதானம் செய்யும் நோக்கில் வீட்டிற்கு ஓடினான்.
அரவிந்த் கட்டிலில் மல்லாக்க படுத்து கிடந்தான் அவன் கண்ணில் இரண்டு பக்கமும் கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது... துரை மருதாணி இல்லாமல் ஒத்தையாக வருவது நிம்மதியாக இருந்தாலும்... இனி அந்த பழைய சந்தோஷம் , மகிழ்ச்சி இருக்காதே சிறு பிள்ளை போல அவளை விரட்டி விடு என்று விட்டான்.. அதற்காக ஊரெல்லாம் துரையின் மனைவி மருதாணி என்று ஆன பிறகு இருவரை பிரித்து மட்டும் என்ன பயன்? அவர்கள் உறவை பிரிக்கவா முடியும்.. காதலி காதலன் உறவுநிலை பிரிந்து போகலாம்... கணவன் மனைவி உறவு நிலையை எப்படி பிரிப்பது ... போன காதலை நினைத்து துக்கம் கொண்டாடவா? இல்லை தன் தந்தை தனக்காக மனைவியை விட்டுவிட்டு வந்ததற்காக மகிழ்ச்சியடையவா புரியவில்லை.. இன்னும் குழம்பினான்...
தந்தையின் முகத்தை பார்த்து சிரிக்க முடியவில்லை... அருகே வந்து அமர்ந்த துரை மீது தன் நிழல் படாமல் எழும்பி போய் அர்விந்த் கதவை பூட்டி கொண்டான்.. இரண்டு நாட்கள் இதே நிலைதான் நீடித்தது.. தகப்பனும் சாப்பிடவில்லை மகனும் சாப்பிடவில்லை ஏதோ துக்கம் கொண்டாடிய வீடு போல இருவரும் தாடி வளர்த்துக் கொண்டு வீட்டுக்குள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சுற்ற வேண்டிய நிலை... இரண்டு நாள் கழித்து அரவிந்த் பெட்டி படுக்கையோடு கிளம்பி வெளியே வர இவனுக்கு பகீர் என்று ஆகிவிட்டது..
"என்ன சாமி என்னாச்சு? எங்க போற பதட்டத்தில் துரை கேட்க..
"எனக்கு கொஞ்சம் தனிமை வேணும் வேலைக்கு போறேன்
"அந்த வேலை பிடிக்கலேன்னு சொன்னியே சாமி..
"அந்த வேலை தான் பிடிக்கல வேற எந்த வேலையாவது பார்த்துக்கிறேன்.. அத பத்தி நீ கவலைப்படாத எனக்கு என்ன பாத்துக்க தெரியும் சுள்ளென்று விழுந்தான்..
"சரி சாமி போயிட்டு போன் போடு ... வாரம் வாரம் வீட்டுக்கு வந்துடு... பதிலே இல்லாமல் தன் நண்பன் பைக்கில் ஏறி போகும் மகனை வேதனை நிறைந்த கண்ணோடு துரை பார்த்து கொண்டு இருந்தான்...
இப்போது, மருதாணியை போய் பார்த்தாலோ இல்லை அவளோடு பேச்சு வார்த்தை இருக்கிறது என்று தெரிந்தாலோ... இன்னும் தன் மகன் காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுவான் என்று நினைத்து துரை அவள் நன்றாக இருக்கிறாளா?? என்பதை மட்டும் தன் நண்பன் சண்முகத்திடம் கேட்டுவிட்டு ...
தன்னிலை தான் இப்படி ஆகிவிட்டது அவளுடைய நிலையையாவது சரி செய்து விடுவோம் என்று நினைத்து துர்காவை பார்ப்பதற்கு அவள் படிக்கும் கல்லூரிக்கு துரை சென்று விட்டான் ..
துர்கா துரையைப் பார்த்ததும் தன் தாய்க்கு எதுவும் ஆகிவிட்டதோ என்று பதறி ..
"அம்மாவுக்கு என்ன ஆச்சு அங்கிள் ?? என்று ஓடி வர துரைக்கு எப்படி தொடங்க ? அதை எப்படி இந்த பெண் புரிந்து கொள்வாள் என தெரியாது அமைதியாக அவளை அருகே அமர வைத்து ..
"நான் ஒன்னு சொல்லுவேன் இதுல உன் அம்மா மேல எந்த தப்பும் இல்லை, வேற வழி இல்லாம இப்படி ஆகிப்போச்சு "என்று நடந்ததை கூற துர்காவுக்கும் இடி விழுந்தது போல அதிர்ச்சிதான்
"அப்படி என்றால் இனி அரவிந்தோடு தனக்கு ஒரு வாழ்க்கை இல்லையா ? எங்கள் காதல் அவ்வளவுதானா? என்ற கவலை வராது இருக்குமா ஆனாலும் , தன் அன்னையின் கண்கள் இதுவரை சிரித்ததில்லை உப்புநீரிலேயே தவித்து இருக்கிறது.. இனியாவது இந்த உயர்ந்த மனிதனிடம் என் அன்னை வாழ்ந்து விடமாட்டாளா? என்று புரிதலும் பக்குவமும் துர்காவுக்கு இருந்தது போலும் ..
"பரவாயில்ல அங்கிள், சாரி உங்களை எப்படி கூப்பிடனும்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு போகப் போக பழகிக்கிறேன்...
" உனக்கு எப்படி கூப்பிட தோணுதோ அப்படி கூப்பிடு தாயி... உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே.."
"எனக்கு என்ன அங்கிள் வருத்தம்..
"எங்க அம்மா இப்படி சின்ன வயசுலயே கஷ்டப்படுறது எனக்கும் சங்கடமாதான் இருந்தது உங்களை எல்லாரும் ரொம்ப நல்ல விதமா சொன்னாங்க .. எங்க அம்மாவுக்கு உங்கள மாதிரி ஒருத்தர் கிடைச்சது நான் செஞ்ச புண்ணியம்தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் அங்கிள்.. எங்க அம்மாவ நல்லா பாத்துக்கோங்க உங்களுக்கு தொல்லையா நான் இருக்கிறேன்னு நினைச்சா படிப்பு முடியிற வரைக்கும் நான் ஹாஸ்டல்லையே இருந்துக்குறேன். அங்க வரல "என்று சொன்ன பெண்ணின் கையை பிடித்து தன் முகத்தில் வைத்துக் கொண்ட துரை...
"நான்தான் உங்களுக்கு எல்லாம் பாரமாயிட்டேனோன்னு எனக்கு தோணுது ம்மா.. நீங்க எல்லாம் எனக்கு எப்பவும் பாரமில்லைடா உங்களை சுமக்கிறது எல்லாம் எனக்கு சுகமான சுமை .. அது எனக்கு என்னைக்கும் வலிக்காது.. அவன ஒரு கையில சுமக்க முடியும்னா, உன்னையும் என்னால இன்னொரு கையில சுமக்க முடியும் தாயி , நீ எதையும் நினைச்சு வருத்தப்படாம நல்ல படி வாராவாரம் வீட்டுக்கு வந்துடு ,அம்மா உனக்காக காத்திருப்பா..
"ம்ம் சரி ஆங்கிள்
"இந்தா, உனக்காக தின்பண்டம் பழம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் அதுக்கு பிறகு உன் கிட்ட போன் இல்லன்னு கேள்விப்பட்டேன்... இந்தா என்று லேட்டஸ்ட் மாடல் போன் வாங்கி அவள் கையில் கொடுக்க ... வாங்கவா வேண்டாமா? என்ற குழப்பத்தில் துர்கா அமர்ந்திருக்க..
"என்ன உன் குடும்பத்தில ஒருத்தனா ஏத்துக்கிட்டா நான் செய்யிறதையும் ஏத்துக்க முடியும்.. இல்ல இன்னும் நெருடலா இருக்குன்னா , உனக்கு எப்போ அந்த நெருடல் போகுதோ ?அப்போ வாங்கிக்கோ, போயிட்டு வரேன் தாயி "என்று துரை எழும்ப போக துரையின் கையில் இருந்து அனைத்தையும் வாங்கிக் கொண்ட துர்கா..
"தேங்க்ஸ் அங்கிள் இது நீங்க வாங்கி தந்த பொருளுக்காக இல்லை, எங்க அம்மாவுக்கு கொடுத்த வாழ்க்கைக்காக"என்று சிரித்தபடி வழி அனுப்பி விட்ட துர்காவை பார்த்து ஆறுதல் பெருமூச்சு விட்டான் துரை...
போகும் துரையை பார்த்துக் கொண்டே வலது கையில் அரவிந்த் வாங்கி கொடுத்து விட்டுப் போயிருந்த மொபைல் இருக்க.. அதை பக்கத்தில் இருந்த பாறையில் அடித்து சிதறவிட்டாள்..
"இந்த ஃபோனை போலவே இனி உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவும் இல்ல அரவிந்த் ... எனக்கு எங்க அம்மா நல்லா இருந்தா போதும் அதுக்கு நான் தூசியா இருந்தா எப்பவும் அவங்களுக்கு இடையில உறுத்தலா இருக்க மாட்டேன்" என்று கண்ணீரை துடைத்து கொண்டு வகுப்புக்குள் போய் விட்டாள் ...
துர்கா உடனேயே தன் தாய்க்கு போன் போட்டு துரை இங்கு வந்ததையும் தனக்கு துரையை மிகவும் பிடித்திருப்பதாகவும்,
" நீங்க சங்கோஜப்பட எதுவுமே இல்லம்மா இதுவரைக்கும் எனக்காக வாழ்ந்தீங்க , இனி உங்களுக்காக வாழுங்க .. அதுதான் நீங்க என் மேல வச்சிருக்க அன்புக்கு அடையாளம்" என்று சொன்ன மகளை ஆழத் தழுவி கொஞ்ச தோன்றியது..
அது மட்டுமா தன் கழுத்தில் கிடந்த தாலி கூட சுகமா சுமை போல தோன்றியது.. அதை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அப்படியே தேய்த்தாள், அவன் கைகள் அவள் கண்ணத்தை வருடியது போல ஒரு சுகம்... ஒரு வாரத்திற்கு பிறகு தன் மகள் பேசிய பிறகுதான் மருதாணி கட்டிலை விட்டு எழும்புகிறாள்.. முகத்தை கழுவி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள் , பொலிவிழந்து போல் ஏனோ தானோ என்று இருந்தாள்... வேகமாக போய் குளித்துவிட்டு இருப்பதிலேயே ஒரு நல்ல சேலையை எடுத்து கட்டிக் கொண்டவள் கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என நினைத்து வீதியில் நடக்க... அவள் அருகே வந்து ஒரு பைக் பிரேக் போட்டு நின்றது... யார் என்று மருதாணி தலையை தூக்கி பார்க்க .... அவள் கழுத்தில் தாலி கட்டிய நாயகன் துரை ... வெள்ளை நிற சட்டை வேட்டியில் மீசையை முறுக்கியபடி நின்று கொண்டு இருந்தான்...
காதல் ஆசை யாரை விட்டது இவர்களை விட..
தனிமரம் தோப்பாகாது என்று அவன் வாழ்வை அழகாக்க மருதாணி வனம் சேர்ந்தாளோ??
10 வனம் சேர்ந்த ஐவணம் !!
மருதாணி இந்த நேரத்தில் துரையை இங்கே சத்தியமாக எதிர் பார்க்கவில்லை ..அவளுக்கு மிக அருகில் காலை ஊன்றி பைக்கில் நின்றான் ... அவன் வாசம் படும் படி கூட இதுவரை அவள் நின்றது இல்லை இரண்டு முறை அவன் சட்டை அணிந்த பொழுது இதே ஜவ்வாது மணம் தான் அடித்தது இன்று அவன் அருகே நிற்கும் போது தன் உடல் மீது அடித்தது போல இருந்தது அவனும் விலகி எல்லாம் நிற்க வில்லை உரிமையாக அவள் உடை உரசும் தொலைவில் தான் நின்றான் ..
மருதாணிக்கு புதிதாக வயிற்றுக்குள் சுரீர் என்று ஒரு வலி அதையும் தாண்டி படபடப்பு .. இத்தனை வயதில் இந்த மாதிரியான உணர்வுகள் எல்லாம் வருமா என்று தெரியவில்லை.. ஆனால் அவளுக்கு வந்தது.. அவன் முகத்தை பார்க்கவே ஏதோ போல இருந்தது கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து அவனை பார்க்கிறாள்... ஒரு வாரத்திற்கு முன்பு அவன் மீது வெறும் மரியாதை உண்டு.. எப்போது இந்த தாலி வந்ததோ அதன் பிறகு வெட்கமும் நாணமும் அல்லவா சேர்ந்து வந்து வேதனை கொள்ள வைக்கிறது ...
பின்னே வராது அவன் அங்கே இருந்தாலும் அவள் தேவை எது என அறிந்து வந்து கொண்டே இருந்ததே.. தன்னை நினைக்க ஒருவன் இருக்கிறான் என்பதே வரம் அல்லவா ?
""என்ன இந்த பக்கம் ...வேலையா வந்தீங்களா??
"இல்ல உன்ன தேடி வீட்டுக்கு போனேன்,, நீ கோவிலுக்கு போறேன்னு சண்முகம் சொன்னான், அதான் தேடி வந்தேன்... "
"என்ன பார்க்கவா ?"
"ஏன் வர கூடாதா ?
"இல்லை எதுவும் பிரச்சனையாங்க..
"பிரச்சனைன்னா தான் பொஞ்சாதியை தேடி வரணுமாடி? அவன் வாயால் பொஞ்சாதி சொல் கேட்க்கும் போது தேனில் வார்த்தையை தோய்த்து எடுத்தது போல இனித்தது ...
"திடீர்னு வந்து நிற்கவும் கேட்டேங்க"..மருதாணி அவன் பொண்டாட்டி ஆன பிறகு பேச்சு தினுசு எல்லாம் ஒரு மாதிரி வந்தது ... இதற்கு முன்பு புடம் போட்டு தான் பேசுவான் , இப்போது மனசில் வந்தது பேச்சாக அவளிடம் வந்தது ..
பாவம் தாலியை கட்டினதோடு முடிஞ்சின்னு தனியா அனுப்பி விட்டாச்சி... என்ன ஆனா, எது வேணும்னு பார்க்க கூட முடியவில்லை .. அரவிந்த் அவனை விட்டு விலகி போவது நெஞ்சை பிளக்கும் வலிதான் அதற்காக இவளை எக்கேடோ போ என விரட்டுவது ஒரு ஆணுக்கு அழகா ?? தேடி வந்து அவள் தேவை அறிய நினைத்தான்...
"ஆமா, இப்பதான் துர்கா போன் பேசினா... சரி மனச அமைதிக்காக போயிட்டு வருவோம்னு கிளம்பி வந்தேன்" என்று மூன்றாவது நபர்கள் பேசுவது போலவே மெல்ல பேச்சை தொடங்கினார்கள்..
"ஓ துர்காவை பார்க்க அங்க போயிருந்தேன் அவளுக்கு கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கி கொடுத்துட்டு வந்தேன்.. போனும் ஒன்னு வாங்கி கொடுத்தேன்..
"ம்ம் சொன்னாங்க .. போன் எதுக்கு வேண்டாத வேளை பார்க்க வைக்கும் "
"வயசு புள்ளைக்கு பாதுகாப்பு வேண்டாமா?? அதெல்லாம் ஒழுங்கா இருக்கிற புள்ள எங்க இருந்தாலும் ஒழுங்கா இருக்கும் ... ஆத்திர அவரசதுக்கு போன் போட தேவைப்படும்ல" ..
"இல்லைங்க அது ??"
"நான் இருக்கேன் எதுனாலும் நான் பார்த்துக்கிறேன்"
"ம்ம் சரி ...
"அப்படியே உனக்கும் கொஞ்சம் சீலை தூணி வாங்கிட்டு வந்தேன், புடிச்சு இருக்கான்னு பாரு "என இரண்டு கை நிறைய பார்சலை தூக்கி அவள் கையில் கொடுக்க.. மருதாணி கைகள் படபடக்க , அவன் கையில் இருந்து வாங்க போக.. ஆண்மையின் கடின கரமும் பெண்மையின் மென்மை கரமும் ஒன்றை ஒன்று மெல்ல தழுவி கொண்டது.... அவள் இனியத்தீ சுட்டது போல் பொருளை வாங்கிக் கொண்டு தன் கையை இழுத்துக் கொள்ள... அவள் நடுக்கம் உணர்ந்த துரை போக வண்டியை எடுத்து சற்று தூரம் போய்விட்டான் மருதாணி ஏக்கமாக அவனை பார்த்து கொண்டு நிற்பதை கண்ணாடி வழியே பார்த்த துரை அவள் பார்வை தாண்டி வண்டி போக மறுக்க வண்டியை யூ டர்ன் அடித்து அவள் பக்கம் வந்து நின்றவன் ...
"கோவில்ல போய் காத்திரு, பைக்கை விட்டுட்டு வரேன்..
"ம்ம் வியர்த்து போனாள், இரண்டு வார்த்தை பதில் சொல்லவே...அவனை திரும்பி பார்த்து கொண்டே மருதாணி படியில் ஏறிட.. துரையும் அவளை பார்த்து கொண்டே பைக்கை பார்க்கிங்கில் விட்டு கொண்டு நிற்க ..
இவன் உன் இணை, இவள் உன் இணை என்று சொல்லாது நெஞ்சில் தடம் பதித்து போனது ..
மருதாணி சந்நிதியில் நின்று கண்களை மூடி .... என்ன வேண்ட புதிதாக குழப்பம்!! இத்தனை நாள் மகளுக்காக வேண்டினாள், இனி யாருக்காக எப்படி வேண்ட தெரியவில்லை .. இந்த குழப்பத்தில் மத்தியிலும் நெஞ்சில் ஊஞ்சலாடும் தாலி ஒரு சுகம் கொடுக்கத்தான் செய்தது ..
சாமி அவர் மகனை பிரிஞ்சு வருத்தபடுறார், பாவம் நல்ல மனுசன், என்னால அவர் நிம்மதி போயிட கூடாது இரண்டு பேர் மனக்கசப்பையும் சரி பண்ணிடுங்க.. என்று அவனுக்காக முதல் வேண்டுதல் வைத்தாள்.. இனி அவன் இன்பம் துன்பம் அவளுடையது அல்லவா?? ...
"தீர்க சுமங்கலியாக இருங்கோ, குங்குமம் எடுத்துக்கோங்க 'என பூசாரி தட்டை நீட்ட மருதாணி விரல் வெடவெடத்தது...
கைம்பெண் மணப்பெண் ஆனாள்
இப்போது அமங்கலி சுமங்கலி ஆகி நின்றாள் ... இதே பூசாரி முன் ஒரு நாள் இவள் வரும் போது ..
"போச்சி அமங்கலி முகத்தில முழிச்சிட்டேன் என அவள் காது பட சொல்லி போனது நியாபகம் வந்தது .. ஒரு தாலி அத்தனை அவச்சொல்லையும் மாற்ற கூடுமா? மாற்றி விட்டதே!! அவள் வாழ்க்கை மொத்தத்தையும் அழகாக மாற்றி விட்டதே ..
குங்குமமா திருநீறா ?? எதை எடுக்க எச்சில் விழுங்கினாள் மருதாணி ...
"எடுத்துக்க என்னாச்சி? "அவள் அருகே துரை குரலில் மருதாணி தயங்கி அவன் முகம் பார்க்க .. துரையே குங்குமத்தை எடுத்து , அவனே அவள் வகுட்டில் வைத்து விட அவள் உதடு துடிக்க அவனை பார்த்தாள்...
"என்னாச்சி ?
"ஒன்னும் இல்ல
""வேண்டியாச்சா ??
"ம்ம்
"சரி வா அங்க போய் உட்காரலாம் :என துரை அவளுக்கு முன் நடக்க , மருதாணிக்கு நடப்பது எல்லாம் கனவு போல தோன்றியது ....அவளும் அவன் அருகே போய் அமர்ந்தவள் ..
"உங்க மகன் சரியாயிட்டாரா??... கையில் வைத்திருந்த பிரசாதத்தை அவன் பக்கம் தயங்கி நீட்டிட, துரை இயல்பாக அதை எடுத்து கொண்டவன் ..
"ம்ஹூம் இல்ல ஊருக்கு கிளம்பி போயிட்டான்..
"அச்சோ!! பின்ன என்ன ஏன் பார்க்க வந்தீங்க? அவர் காதுக்கு போனா மறுபடியும் சண்டை எதுவும் வந்திடாமங்க.. "
"ப்ச் இந்த ஊர்ல யாருக்கும் என்ன தெரியாது ...அதான் துணிஞ்சு வந்தேன் .. அதோட எத்தனை நாள் மறைக்க முடியும் சொல்லு ..
"ம்ம் சரிதான், ஆனா தம்பி மனசு மாற டைம் கொடுக்கணும்ல...
"அதான் பொறுமையா இருக்கேன், நீ வேற தனியா கிடக்கியேன்னு மனசு அல்லாடுது...
"எனக்கு தனிமை பழகி போச்சிங்க..
"அது இது ஏறும் வரை "என தாலியை கை காட்ட.. தலையை குனிந்து தன் விரலை மருதாணி ஆராய்ச்சி செய்ய ...
என்ன பேச என தெரியாமல் துரை கல்லை குளத்தில் போட , அது கூட இனிமையான நேரங்கள் தான் .. சிலுசிலு தென்றல் காற்று இருவரையும் வருடி போக மருதாணி பறக்கும் முந்தானை சரி செய்து இடை தெரியாது மறைத்தாள் ... இவன் கண்கள் அவள் மறைக்க நினைத்ததை பார்த்து விட்டது..
தாலி கண்ணியாவனை புறம் தள்ளி விட்டது .. என் பொண்டாட்டி பார்க்க சகல உரிமையும் உண்டு என்று கண்கள் அனுமதி கொடுக்க.. காற்றில் ஆடிய முந்தானை வழி நகரும் தேர் அழகை ரெட்டை நொடி கண் ரசிக்க .. அவன் கண்ணுக்கு கடிவாளம் போட தெரியாது இடத்தை காலி பண்ண நினைத்த துரை ...
"சரி இருட்ட போகுது போயிட்டு வா ..
"ம்ம் என மருதாணி எழும்ப, குளக்கரை படிக்கட்டு பாசியாக கிடக்க , அவள் காலை வழுக்கி விட சர்ரென்று வழுக்கி விழ போன மருதாணி வெற்று இடையில் துரை முரட்டு கைகள் அழுத்தி பிடித்து தூக்கிட .. மருதாணி கைகள் அவன் சட்டை காலரை பிடித்திருக்க .... அவள் கண்ணும் அவன் கண்ணும் ஒன்றை ஒன்று கவ்வி கொள்ள... தன் முகம் அருகே நின்ற மனைவி அழகை கணவனாக துரை ரசிக்க தவறவில்லை ... இனி இதில் ஒன்றும் தவறு இல்லையே ... அவன் பார்க்கத்தானே இனி அவள் ..
"பார்த்துடி " அவன் கைகள் முரடாக அவள் இடை வளைவை இறுக்கி அழுத்த .. அதன் மென்மையே இப்படி என்றால் அவளிடம் காணாத அங்கம் எப்படி இருக்கும்?? ஆண் புத்தி சபலம் கொண்டது ... அவள் இதழில் ஈரம் ஏதோ உடலை முறுக்கியது ... தெரியாத தேக வனப்பு அவளை தொட்டதால் சீரற்ற துடித்தது அவள் அறியாளா?.
"பாசி இருந்தது கவனிக்கல என்ற
அவளும் அவன் ஆண்மை மணத்தில் மயங்க தவறவில்லை.. அவன் உதடு மெல்ல அவள் உதட்டை நோக்கி குனிய, அவள் கால் விரல் மெல்ல அவன் உதடு தரும் சுகத்தை அனுபவிக்க உயர ... கோவில் மணியில் மருதாணி பதறி விலகிட துரை ...
"ம்க்கும் பத்திரமா போ" என்று மீசையை திருகியவன் மெல்ல கண்ணால் மருதாணி உடலை வருடினான் .. அவள் இடை நெளிய நடக்க, அவள் பின்னால் துரையும் நடந்து வெளியே வர ...
"நீங்க போங்க நான் போயிக்கிறேன்"...யாரும் பார்த்து அரவிந்த் காதில் போட்டு விட்டு பிரச்சனை இன்னும் பெரிதாகி விட கூடாது, பாவம் மனுசன் பாதியா போனார் தாடி வளர்த்து பார்க்கவே சங்கடமா இருக்கு அவனுக்காக அவள் வருந்த ஆரம்பித்தாள்.. ஊரே அசிங்கப்படுத்திய வேளை எனக்கு என்ன என்று போகாது , அவள் களங்கம் துடைக்க தன்னையே கொடுத்து நின்றானே? அவன் மேல் மரியாதை தாண்டி பிடித்தம் வந்தது ...
"ம்ம் என்று பைக்கை எடுத்தவன்... பாக்கெட்டை தடவி கட்டு பணத்தை அவள் கையில் கொடுத்து ..
"___ ஜூவல்லரியில தாலி சரடுக்கு முன் பணம் கொடுத்தேன் போய் வாங்கிக்க.. மஞ்சள்கிழங்கை மட்டும் கட்டிய மஞ்சள் தாலி மட்டும்தான் மருதாணி கழுத்தில் கிடந்தது ..
"போயிட்டு வந்துடு,
"நான் மட்டுமா? என்று அவள் கேட்டு விட்டு நாக்கை கடிக்க ..அவள் முகத்தை கூர்ந்து பார்த்தவன்
"சரி ஞாயிறு ராவு போவோம், ஆளு இருக்காது.. இன்னும் மகனுக்கு சற்று பயம் தான் ..
"ம்ம் இந்தாங்க "என மருதாணி பணத்தை திருப்பி கொடுக்க போக..
"செலவுக்கு வச்சிக்க"
"இல்லைங்க பணம் இருக்கு
"ஏன் நான் தந்தா வாங்க மாட்டியோ??"..எப்பா ஆளு ஓவர் கோபக்காரர் தான் போல என மருதாணி அமைதியாக பணத்தை வாங்கி உள்ளே வைத்து கொண்டாள் ....
இரு வர்றேன் என்றவன் அருகே பூக்கடை கண்ணில் பட ..
"பாட்டி நாலு முழுப் பூ கொடுங்க "என வாங்கி அவள் கையில் கொடுக்க... அச்சோ பெண்ணின் வெட்கம் எந்த வயதிலும் அழகுதான்!! என அவள் சிவந்த கன்னம் சாட்சி கூறியது ...
"தேங்க்ஸ் !!"என்ற அவள் பூச்சி குரலில், துரைக்கும் ஏதோ ஆகி போனது ..
"என்ன ராசா பொண்டாட்டிக்கு பூ கையிலையா கொடுப்பாங்க , தலையை வச்சி விடு ராசா என்றதும் அவள் கையில் மீது தன் கைவைத்து பூவை வாங்கி துரை கேள்வியாக அவளை பார்க்க ..
மருதாணி அவனுக்கு முதுகு காட்டி நின்று தலையை காட்டிட , அதில் பூவை சொருகி விட்டவன் அவள் காதருகே.
"பூவோட பொட்டோட ரொம்ப அழகா இருக்கடி...இனி பூ டெய்லி வை ...என்று கையால் அவளை தொடாது உணர்வுகளை கிளறி விட்டான் ...
"ம்ம் உங்களுக்கு பிடிச்சா வச்சிக்கிறேன்" என அவளும் அவனுக்கு மட்டும் கேட்க கூற... ஆசை தாவரம் பெண் மூச்சு பட்டால் எப்போது வேண்டுமானலும் முளைக்கும் என மருதாணி உணர வைத்தாள்...
""எதுவும் தேவைன்னா..
"போன் போடுறேன் ..
"ம்ம் போயிட்டு வரவா..
"வாங்க" என்று கையசைத்த மனைவி இடையை யாரும் அறியாது வலிக்க கிள்ளி கண்ணடித்து விட்டு துரை போக ... மருதாணி அதிர்ந்து போய் சிவந்தபடி அவனை பார்த்து கொண்டு நின்றாள் ...
காதல் எப்போதும் அழகுதான் காதலை கொண்டாட தெரிந்தவர்கள் கையில் காதல் என்றும் பொக்கிஷம் தான் ...
இரண்டு நாளாக துரை அரவிந்துக்கு போன் மேல் போன் போட்டு சலித்து விட்டான் ... காதல் ஊடல் மட்டும் தான் வலிக்கும் என்று இல்லையே .. எந்த உறவில் ஊடல் என்றாலும் வலிக்குமே .. அதிலும் துரை தன் மகனை உயிராக அல்லவா நினைத்து வாழ்ந்து விட்டான்... ஒவ்வொரு போன் மணி அடிக்கும் போதும் தன் மகனாக இருக்குமோ என்று ஆசையாக நோக்கினான் ...
நாம் விதைத்து போடும் அன்பு விதைகள் என்றாவது ஒரு நாள் பூத்து குலுங்கும்... தன் மகன் நான் கொடுத்த அன்பின் மகத்துவம் அறிந்து வருவான் என்ற நம்பிக்கை மட்டுமே துரையை ஓட வைத்தது..
மருதாணி ஞாயிற்றுக்கிழமை தன் மன்னவன் தோள் சாயும் நேரத்துக்காக ஒவ்வொரு வினாடியும் காத்து கிடந்தாள் ..துரையும்தான் ... இந்த ரெண்டு நாளும் போனில் சாப்பிட்டியா தூங்குனியா, சரி வைக்கவா என சம்பிரதாய பேச்சு மட்டுமே துரையால் பேச முடிந்தது .. அவளும் அரவிந்த் தம்பி போன் போட்டாங்களா? வயலுக்கு போயாச்சி, வீட்டுட்டு வந்தாச்சா? என்பது தாண்டி போக முடியாது இருவரும் தயங்கினர் ...
ஆசைப்பட்ட ஞாயிறும் ஞாயிற்றை உதிக்க வைத்து இதோ வந்தேறி விட்டது ..
11 வனம் சேர்ந்த ஐவணம் !!
ஞாயிறு காலை மருதாணி, துரை வாங்கி கொடுத்து விட்டு போன பையை திறக்க .. சேலை குவியல் என்று தான் கூற வேண்டும் ... சேலை நைட்டி , கண்ணாடி வளையல் , பாவாடை , ப்ரா என எல்லாம் இருந்தது ... இவளுக்கோ புதுப்பெண் நாணம் வந்து ஒட்டி கொண்டது... தனக்காக பார்த்து பார்த்து வாங்கி வந்த துரை மீது நீங்காத ஆசையில் தவிக்க வைத்து விட்டான் ... புடவைகளை தடவி பார்த்தாள் மெனக்கெட்டு எடுத்து மங்களகரமான நிறங்களில் எடுத்திருக்கிறான் என தெரிந்தது மஞ்சள், பச்சை வண்ணங்களில் பல புடவைகள் ...
மஞ்சள் நிற புடவை ஒன்றை எடுத்து கட்டி கொண்டு கண்ணாடியின் முன் நிற்க .. அவன் கட்டிய தாலியில் பேரழகாகத்தான் தெரிந்தாள்... நெற்றி வகட்டு குங்குமத்தை தர்மதுரை என அவன் பெயர் சொல்லி நெற்றியில் வைத்தவள்
"அச்சோ பூ வைக்கலையே , பூ வச்சா அவருக்கு பிடிக்குமே நான் எங்க போய் வாங்க "... என்று யோசித்து கொண்டு நிற்க.. அவள் நினைவுகளின் போதையான துரை போன் போட்டான்.. போனில் அவன் நம்பரை பார்த்தே மருதாணி சிவந்து போனாள்... அதற்கு வலிக்காது ஆன் செய்து காதில் வைத்தவள்
"ஹலோ ...
"கிளம்பிட்டியாடி? பைக்கில் வந்து கொண்டிருக்கிறான் என காற்று சத்தம் கூற
"ஆமாங்க ... வந்துட்டீங்களா??...
"ஆமா வந்துட்டு இருக்கேன் .. கதவை பூட்டிட்டு வா.."என்றவன் யோசனையாக
"ம்ஹூம் பூ இருக்கா ?"
"இல்லைங்க...
"ம்ம் நீ இரு வாங்கிட்டு வர்றேன் , ரெண்டு முழம் போதுமாடி.. "அவன் டி போடும் போதெல்லாம் மருதாணிக்கு உடல் கூசி கூசி இனம் புரியாத இளமை துள்ளல் தோன்றியது
"ஹாங் போதும் "
"வேற எதுவும் வேணுமா ?
"ம்ஹூம்.... இரண்டு வார்த்தை பேசி முடிக்கும் முன் மருதாணி பாதி நகத்தை கடித்து துப்பி விட்டாள், துரை நூறு நேரம் பைக் கண்ணாடியில் தன் முகத்தை குனிந்து பார்த்து விட்டான்... அவளுக்கு குறையாத அழகில் இருக்கோமா? என்று தன்னை பல தடவை பரிசோதனை செய்து கொண்டான்..
அவசர கதியில் கல்யாணம் ஆகி போச்சி.. வேற வழி இல்லாம வாழ கூடாது .. அவளுக்கு என்ன பிடிக்கணும் தந்தையாக எப்படி பெர்பெக்டாக இருக்க விரும்பினானோ ?ஒரு பெண்ணுக்கு கணவனாக நூற்றுக்கு நூறு முடியவில்லை என்றாலும் ஏழுபதுதாவது வாங்கி விட எண்ணம் ... அதே பூக்கடையில் பூவை வாங்கி சுருட்டி பைக் முன் வைக்க ...
என்ன ராசா பொஞ்சாதி வரலயா? .."
"கூப்பிடத்தான் போறேன் பாட்டி ... கடைத்தெரு போறோம்.. அவன் முகத்தில் கூட மீசை நடுவே மனைவி மீது காதல் ஒன்று அவன் மெல்லிய சிரிப்பின் வழி , அரும்பி தெரிந்தது...
"ரெண்டு பேரும் அந்த சிவனும் பார்வதியும் போல ஜோடிப் பொருத்தம் அப்படி இருக்கு எத்தனை குழந்தைங்க.."
"ரெண்டு" என்று துரை கூறவும்
"இன்னும் ஒன்னு பெத்து போடுங்க" என்றதும் அவனுக்கே நாணத்தில் தூறல் வந்து ஒட்டி கொண்டது ...
"பேரன் எடுக்கிற வயசுல பிள்ளை சரியா??" என யோசித்தாலும் ரெண்டு பேர் வாழ்வுக்கும் ஒரு ஆணி வேர் வேணும், கண்டிப்பா பெத்துக்கணும் என்றும் முடிவு எடுத்து கொண்டான். மனைவியோடு முதல் பயணம் ஒரு மாதிரி பீல் ஆச்சி ... உல்லாசமாக விசில் அடித்து கொண்டு மருதாணி வீடடு வாசலில் வண்டியை நிறுத்த உடனே கதவு திறக்கப்பட்டது ... அவள்தான் கதவு பக்கமே நின்று துரை பைக் வருகிறதா என காதை தீட்டி கொண்டிருந்தாளே ..
காதலிக்க தெரிந்தவர்களுக்கு காதல் வரம் !
காதலை கொண்டாட மறுப்பவனுக்கு காதல் சாபம்
இவர்களுக்கு காதல் வரம்தான் .. இறங்கி வேட்டியை ஏத்தி கட்டியபடி துரை அவளை நோக்கி வர.
"அம்மோடியோவ் !!! அவர் பக்கத்தில வந்தாலே செத்து போவேன் போலயே" அவன் அருகே வர வர கதவில் சாய்ந்து அவனை அன்றி எதையும் கண்ணில் வாங்க மறந்து நின்றாள்.. வலது கையில் இலையில் பூ பொதிந்து பகிரங்கமாகவே தன் மனைவிக்கு வாங்கி வந்தான்.. அதுவே அவன் மனதில் வண்ணம் தன் எண்ணத்தை சுமக்கிறது என்பதை காட்டி கொடுக்க
"அய்யோ!!! பூவை இப்படி வாங்கிட்டு வர்றார் , யாராவது பார்த்தா கிண்டல் பண்ணுவாங்களே" என்று நினைத்தாலும் பூவை வாங்க கை நீட்ட போக ..
"திரும்பு நானே வச்சி விடுறேன் "என்றதும் மருதாணி திரும்பி பின்னல் காட்ட ... அதில் ரெண்டு முழு பூவையும் வைத்து விட்டான்
"மோர் கொண்டு வரவா ?"
"வேண்டாம் நேரம் ஆகிடுச்சி பொழுது அடைஞ்சி போச்சி வீட்டுக்கு விரைவா வரணும்ல .போவோமா?? மஞ்சள் நிற சேலையில் மஞ்சக்காட்டு மைனா போல முன்னால் லோட் அவனை வஞ்சனை இல்லாது சோதனை பண்ண செமையா இருந்தாள்
"வீட்டுக்கு உள்ளார வரலையே "மருதாணியின் மலர்ந்த முகம் கவலையாக தேய்ந்து போக
"நான் என்ன விருந்தாளியா உள்ளார வர, நான் உன் வீட்டுக்காரன்டி இனி முழுக்க நீ என் சொந்தம் தான" என்றதும் குப்பென்று வதனம் மலர அவன் பைக்கில் தயங்கி அமர ..
"உனக்கு இன்னும் தெளிவு வரலையோ? என்றான் பைக்கில் பிடித்திருந்த அவள் கைகளை மெல்ல பார்த்து கொண்டே வண்டியை எடுத்தபடி ..
"நானும் தெளிஞ்சாச்சி ..உங்க வீட்டுக்காரி நான்தான்னு தெளிவு வந்திடுச்சி என்ற மருதாணி விரல்கள் அவன் தோள் மேல் பதிய ... அவன் வண்டி நிதானமாக சாலையில் பவனி போனது .. பேசினால் உறவு கூடும் என்பார்கள்... பார்வை பரிமாற்றம் உறவின் உறுதியை கூட வைக்கும் இருவர் பார்வை பரிமாற்றமும் அதை நிருபித்தது... நகைக்கடையில் அவன் கண் பார்த்து கூட நடந்தாள்..
"ஒன்பது பவுனுக்கு தாலி சரடு , தங்க மிஞ்சி, தங்க கொலுசு எல்லாம் எடுத்து போடுப்பா" என்று சீட்டில் கால்மேல் கால் போட்டு துரை அமர, மருதாணி அவன் அருகே நின்று கொள்ள ..
"பக்கத்தில உட்கார் ஏன் நிற்கிற ...
"இல்லைங்க அது .. அவள் தயங்கி நகத்தை கடிக்க
"ம்ம் உட்கார் என இருக்கையை இழுத்து போட்டு தன் அருகே உட்கார வைத்தவன் , அவள் இருக்கை மீது கை போட்டு கொண்டு இவள் என் மனைவி என்று சொல்லாமல் சொன்னான் ..
"இது பாரு என கழுத்தில் வைத்து காட்ட ..
"சின்னதா போதும்ங்க..
"ப்ச் உன் உருவத்துக்கு கனமா போட்டாதான்டி தோரணையா இருக்கும்" இருப்பதில் பெரிய செயினை எடுத்து கொண்டவன், தங்க கொலுசை வாங்கி அவள் கையில் கொடுக்க.. மருதாணி உடனே மாட்டி காட்ட நிறைவாக புன்னகை செய்தவன்..
"போற வழியில கோவில்ல தாலியை மாத்திட்டு மிஞ்சியை நானே கால்ல மாட்டி விடுறேன் என்று அவள் காது பக்கம் குனிந்த துரை கூற ... கன்னம் குங்குமம் பூசிக்கொண்டது ...
"சார் ஜூஸ் என ரெண்டு கப் வர..
"ஒன்னு போதும் என்று துரை ஒன்றை எடுத்து கொண்டு
"நீ குடி மருதாணி ..
"இல்லைங்க நீங்க குடிச்சிட்டு கொடுங்க" என்றதும் துரை ரெண்டு மிடறு குடித்துவிட்டு அவள் கையில் கொடுக்க ... மருதாணியும் அவன் கை பட்டு வந்த பானத்தை சோமபானம் போல கண்கள் கிறங்க குடித்து முடிக்கும் முன், அவள் முந்தானை இழுபட .. பதறி மருதாணி திரும்ப , அவள் முந்தானையில் துரை உதட்டை துடைத்து கொண்டவன் .. வெகு இயல்பாக அவளை ஏற்று கொண்டான் என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டினான்..
"போவோமாடி ..
"ம்ம் போகலாம்ங்க , இருவரும் அதே கோவில் போய் தாலியை அவளுக்கு தங்கத்தில் மாத்தி கட்டி விட்டு அவள் பாதம் பிடித்து மிஞ்சியை மாட்டி அவளை அண்ணாந்து பார்க்க .. இழுத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு..
"உன்ன அவ்வளவு பிடிச்சிருக்கிய்யா !!" என்று கத்தி கூற ஆசைதான் .. ஆனால் கடவுள் பெண்ணை நாணம் கொண்டு படைத்து சதி செய்து விட்டானே ... அவனையே ஆசையில் கொட்டி கிடந்த காதலோடு மருதாணி பார்க்க ...
"போதுமா?? உன் பயம் தெளிஞ்சிடுச்சா? என்றவன் கேள்வியில் மருதாணி திணற..
"என்னடா இவன் தாலியை கட்டி , ஊருக்கு மறைவா ஒதுக்கமா வச்சிருக்கானே, இந்த உறவுக்கு பேர் என்னன்னு யோசிக்கவே இல்லையா ? அவள் உதடு நடுங்க அவனை பார்த்தாள் .
"பயம் இருந்தது உண்மை , ஆனால் அதையும் தாண்டி உங்க மேல நம்பிக்கை இருந்ததும் உண்மை..
"நம்பிக்கையை காப்பாத்திட்டேனா?.
"ம்ம் என்றவள் அவன் கையை தயங்கி பிடிக்க அவனோ இறுக்கி பிடித்து கொண்டு கூட நடந்தான் ..
"அரவிந்த் பய சீக்கரம் மனசு மாறுவான் மாறலேன்னாலும் உன்னை எப்பவும் விட்டிர மாட்டேன் , பயப்படாம போயிட்டு வா" என்று அவளை வீட்டு வாசலில் துரை விட..
"உள்ள வந்துட்டு போங்களேன்..
"என்னவோ தெரியலடி இந்த தாலியை பார்க்கும் போதெல்லாம் உன்ன தப்பா பார்க்க கண்ணும் மனசும் தூண்டுது.. அதனாலதான் கொஞ்சம் விலகியே நிற்கிறேன் ..நேரம் காலம் கூடி வரட்டும் உள்ள வர்றேன் என்று அவள் மன்மத முல்லை கொடியை கவர்களை அவள் கையில் கொடுக்கும் சாக்கில் மெல்ல வருடி கொடுக்க..அவன் கூறியதன் மொழி புரிந்து மருதாணி உற்சாக உணர்வை அடக்க முடியாது ..அவனை பார்த்த பார்வையில் பாய் போட்டு அவள் மேல் பந்தி உண்ண ஆசையில் துரை கிறங்கி போனான்...
"இன்னும் செத்த நேரம் இங்க நின்னேன் இன்னைக்கு ராவே முதலிரவு ஆகி போகும், போய் வர்றேன்டி" என்று அப்போது போல அவள் மெல்லிய இடை சதையை கிள்ளி விட்டு அவள் ..
"ஆவ்ச்" என தடவுவதை ரசித்து கொண்டே துரை அவளை பார்வையில் ரசித்து கொண்டே கிளம்பி போனான்
இரவே நேரம் காலம் காதலுக்கு தூது வரும் .. கட்டிலுக்கு நேரம் வரும் என ரைட்டர் பொன் எழுத்துக்களால் எழுதி விட்டார் ...
12 வனம் சேர்ந்த ஐவணம் !!
வீட்டுக்கு வந்த துரை முதல் வேளையாக அரவிந்த் போனுக்கு போன் போட அதுவோ வெகு நேரம் எடுக்கப்பட வில்லை மறுபடியும் விடாது தொடர ..
"என்ன நிம்மதியா இருக்கவே விட கூடாதுன்னு முடிவே பண்ணிட்டியா" என்று அரவிந்த் அங்கே கத்த மகன் சத்தம் கேட்டு அப்பாடா புள்ள குரலை கேட்டுட்டேன் என நிம்மதி பெருமூச்சு துரை விட்டான் ..
"எய்யா ரெண்டு நாளா போனே எடுக்கலயே..
"உங்ககிட்ட பேச எதுவும் இல்லைன்னு அர்த்தம்... இனிமே போன் போட்டு தொல்லை பண்ணின போனை தூக்கி போட்டு உடைச்சிடுவேன் ஜாக்கிரதை.." என்று வள்ளென விழுந்து விட்டு போனை வைத்து விட்டான் ...
"அப்படி என்ன தப்பு செஞ்சேன், கல்யாணம் கட்டிக்கன்னு நேத்து வர அலைஞ்சான், இன்னைக்கு ஏன் கல்யாணம் கட்டினன்னு சண்டை போடுறான் இப்படி பேசியே கொல்றானே " என்று துரை பெருமூச்சு விட்டான்
அரவிந்தோ, இங்கு துர்கா ஹாஸ்டல் வெளியே கால் கடுக்க நின்றான்... ஊரிலிருந்து வந்ததிலிருந்து போன் போட்டு பார்க்கிறான் .. துர்கா போன் ஸ்வீட்ச் ஆப் என வந்தது.. நேரே தேடி வந்து விட்டான்
"எல்லோருக்கும் அவங்க சுகம் முக்கியம்னா எனக்கும் என் சுகம் முக்கியம் தான் ... இவ என்ன என் அப்பனுக்கா பிறந்தா நான் தயங்க , அவ மனசுல நான் இருந்தா மட்டும் போதூம் , தூக்கிட்டு போயிட்டே இருப்பேன் என்ற எண்ணத்தில் அரவிந்த் அவளை தொடர்பு கொள்ள நினைக்க... முடிய வில்லை.. நேரே இங்கே கிளம்பி வந்து விட்டான் ...
"துர்காவை பார்க்கணும் என வரவேற்பு அறையில் வெயிட் பண்ண ...
துர்கா தூரத்தில் அவனை கண்டு விட்டு வார்டனிடம் ஓடியவள்..
"அவரை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை மேடம், இனிமே வந்தா என்ன பார்க்க அனுமதி கொடுக்காதீங்க "என்று விட்டு தாடியும் கலைந்து போன முடியோடு இருந்த அரவிந்தை வேதனையாக பார்த்தாள் ..தன் தாய் மூலம் நடந்ததை அறிந்து கொண்டாள்..
"பாவம்டி அரவிந்த்,, தீடிரென அவர் அப்பா, இதுதான் என் பொண்டாட்டின்னு சொன்னா வளர்ந்த புள்ளைக்கு கோவம் வரத்தானே செய்யும் .. அவர் சரி பண்ணிடுறேன்னு சொன்னார்" என்று கூறியது நியாபகம் வந்தது ,.. ஆனால் துர்காவுக்கு தானே உண்மை நிலவரம் தெரியும் ... அரவிந்த் தன் மீது உள்ள காதலில்தான் கோவத்தில் கத்தி இருப்பான் என்று ... மறுபடி அவனை பார்த்து பேசி மருதாணி வாழ்க்கையில் பிரச்சனை வந்து விட கூடாது ... மருதாணியின் வாழ்க்கையில் வந்த வசந்தம் துரை... என்னால் அவர்கள் வாழ்க்கை எப்போதும் கெட்டு விட கூடாது என அரவிந்தை விட்டு விலகி கொண்டாள்.அரவிந்தை வார்டன் ஏதோ சொல்லி வெளியே அனுப்ப... அவன் கலவரம் பண்ண , கெஞ்சி கூத்தாடி அவனை வெளியே தள்ளி கேட்டை பூட்ட , துர்கா தன் அறை ஜன்னல் வழியே அவன் சோர்ந்து போய் போவதை கண்ணீர் வடியும் கண்ணோடு பார்த்து கொண்டு நின்றாள் ..
இது ஒரு வழிப்பாதை , ஒன்று துர்கா, அரவிந்த் பயணம் ஆக வேண்டும்... இல்லை துரை மருதாணி பயணம் ஆக வேண்டும் .. விரும்பியே தன் காதலை துறந்து விட்டாள் ...
அரவிந்த் சுருங்கிய முகத்தை பார்த்த அவன் நண்பன் தினேஷ்
"என்னடா என்ன ஆச்சி .. ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து உன் மகனும் சரியில்ல, ஆளும் சரியில்ல விட்டத்தை பார்த்துகிட்டு அறையிலேயே படுத்து கிடக்கிற .... வேலைக்கும் போக மாட்டேங்குற ரெண்டு நாள் அப்பா போன் போட்டுக்கிட்டே இருக்கார் , நீ எடுக்க மாட்டேங்கற ... எடுத்தாலும் அப்பாவ பிடிச்சு கண்டமேனிக்கு திட்டுற என்னதான்டா நடந்துச்சு , வாய தொறந்து முத்த கொட்டு என்று தினேஷ் திட்டினான் ....அவனும் அரசூர் பக்கத்து ஊர்தான் இப்போது இருவரும் ஒரே இடத்தில் தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்கள் தினேஷூக்கு அங்க நடந்த விஷயம் தெரியாது ...
இப்படியே இருந்தால் தனக்கு கிறுக்கு பிடித்து விடும் என்று நினைத்த அரவிந்த் ஊரில் நடந்த விஷயத்தை கூற ...
"அப்போ துர்கா உங்க அப்பா கல்யாணம் கட்டியிருக்கிற பொண்ணோட மகளா? அப்படின்னா அவ உனக்கு தங்கச்சி முறை வரும்டா..
"வாய் மேலே குத்தி விட்டுருவேன் ... எவனுக்கோ பிறந்தவளை எல்லாம் என்னால தங்கச்சின்னு ஏத்துக்க முடியாது .."
"என்னடா இது பேச்சு , நீதான எங்க அப்பாவுக்கு ஒரு வாழ்க்கை அமையனும்னு வேண்டாத சாமி எல்லாம் வேண்டின... இப்போ நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருக்கு பின்ன ஏன்டா அப்பாவ திட்டுற ...
அவர் வாழ்க்கைக்காக என் வாழ்க்கையை காவு வாங்கிட்டாரு...
"அவர் என்ன தெரிஞ்சாடா செஞ்சார்.. நீ அந்த பொண்ண விரும்புறது தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தையே பண்ணி இருக்க மாட்டாருடா ... அந்த பொண்ணுக்கு அவ பெயர் வரக்கூடாதுன்னு தானே அப்பா கல்யாணம் பண்ணி இருக்காரு... நியாயப்படி நீ அவரை பாராட்டதானே செய்யணும் ... ஏன்டா அவர் இப்படி அவர வருத்தப்பட வைக்கிற.. இத்தனை நாள் உனக்காக விட்டுக் கொடுத்து வாழ்ந்தவர்டா அவருக்காக உன் காதலை விட்டுக் கொடுக்க மாட்டியா?? அப்படி ஒன்னும் நீங்க ரெண்டு பேரும் ஷாஜகான் மும்தாஜ் போல உயிரை கொடுக்கிற காதலை எல்லாம் கொடுக்கலையே... ஜஸ்ட் இப்பதான் ஒரு வாரமா பேசி பழகுறீங்க ... அதுக்காக உன்னை இத்தனை வருஷமா மார் மேல தூக்கி போட்டு வளர்த்த அப்பாவ பகைச்சுக்கிட்டு நிக்கிற...
"எத்தனை நாள் காதலிச்சேங்கிறது முக்கியமில்லை எவ்வளவு காதலிச்சேன்ங்கிறதுதான் முக்கியம் இங்க பாரு என்று அர்விந்த் தன் நெஞ்சமீது மறைத்திருந்த சட்டையை விலக்கி காட்ட, அதில் துர்கா என்று அவள் பெயரை பச்சை குத்தி இருந்தான் ..
"அடப்பாவி !! இதய எப்போடா குத்துன..
"அவதான் என் மனைவின்னு எப்போ நினைச்சேனோ, அப்பவே குத்திட்டேன்... ஆனா அவளுக்கு என் காதலும் புரியல, என் அப்பாவுக்கு என் மனசுல என்ன இருக்குன்னு புரியல... எல்லாரும் அவங்க அவங்க இஷ்டம் போல பண்றாங்க , அப்ப நான் மட்டும் எதுக்குடா என் விருப்பம் போல பண்ண கூடாது ...
"ப்ச் என்னடா இது பேச்சு , இங்க பாரு அரவிந்த் உனக்கு காதல் வலி இருக்கு.. ஒத்துக்கிறேன் ஆனா நீ உன் அப்பாவ யோசித்துப் பார், அந்த மனுஷன் உனக்காகவே வாழ்ந்தவர்டா , உன் கண்ணுல கண்ணீர் வந்தா கூட, உன் அப்பா இதயத்துல ரத்தம் வந்துடும், கூட இருந்து பார்த்த எனக்கே அது தெரியுது ... ஏன்டா உனக்கு தெரியல.. பாவம்டா மனுஷன் உடைஞ்சு போய் இருப்பார்..
"ப்ச்
"நீ பண்றது தப்பு அரவிந்த் .. ஒழுங்கா நீ ஊருக்கு கிளம்பி போய் , உங்க அப்பாவ போய் பாரு... பேசினா தீராத பிரச்சனை எதுவும் இல்ல ... முதல்ல நீ அங்க போ எல்லாம் சரியாகும் "என்று தினேஷ் நண்பனுக்கு புத்தி சொல்லி , பஸ்ஸில் ஏற்றியும் விட்டான்..
பாவம் துரைக்கு ராகு காலம் நடந்து கொண்டிருக்கிறது போல , அதே பஸ்ஸில் துர்காவும் வருவாள் என்று அவன் நினைத்திருக்க மாட்டான்... தன் தகப்பன் மீது குறைந்த கோபம் இருமடங்காக கூடும் என்றும் அறிந்திருக்க மாட்டான ...
ராகு காலத்தை ரப்பர் வைத்து அழிக்க முடியாத காரணத்தினால் மாட்டிக் கொண்டு முழிக்கப் போகிறார் துரை..
அந்த ராகு காலத்தையே ஹோல்சேல் பண்றது இந்த ரைட்டர் தான். போட்டுத் தள்ளுங்க எஜமான் என்று நீங்க கதறுவது கேட்கிறது..
என்னை போட்டு தள்ளினால் கதை இல்லை எனும் காரணத்தினால் , இப்போதைக்கு அந்த டீலை கிடப்பில் போட்டு விட்டார் கடவுள்...
துரை மகன் பண்ணும் வேதனையில் தூக்கம் வராது வீட்டு முற்றத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ... போன் மணி அலறியது .... மகனாக இருக்குமோ என வேகமாக ஓடினான் ...
அவன் நண்பன் சண்முகம்..
"இந்த நேரத்தில எதுக்கு, இவன் போன் போடுறான் மணியை பார்க்க ரெண்டு கடந்து விட்டது ...
"என்ன சண்முகம் ?
"துரை என் மகளுக்கு இடுப்பு வலி வந்துடுச்சின்னு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்துட்டேன், மருதாணி வீட்டுல ஒத்தையா இருப்பா முடிஞ்சா கொஞ்சம் வந்து பாத்துக்க, இந்த டாக்டர் பய வேற அப்பப்ப இங்க நடமாடுறான் கவனம்டே என்று வைத்துவிட..
"மருதாணிக்கு போனை போட்டு பார்க்க .. மருதாணி இரவு தூக்கம் வராது பின்னால் கிணற்றில் தண்ணீர் இறைத்து கொண்டிருக்க .. அவளுக்கு சத்தம் கேட்க வில்லை ...
"என்ன ஆச்சி?? அவனுக்கு அதற்கு மேல் நிதானம் இல்லை , சட்டையை எடுத்து மாட்டி கொண்டு மருதாணி இருகிறது வீடு நோக்கி கிளம்பி விட்டான்...
டொக் டொக் கதவு தட்டப்பட.. இரவு மட்டும் தூங்க அணியும் நைட்டியில் வண்ணம் தீட்டாத சித்திரம் போல மருதாணி இருக்க ..
"இந்த நேரத்தில யாரு? என யோசனையாக மருதாணி கதவு அருகே வர..
"மருதாணி!! துரை அழைக்கும் சத்தம் கேட்டு ..
"அச்சோ இவரா?? ஒழுங்கான டிரெஸ் கூட போடலையே கையும் ஓட வில்லை காலும் ஓடவில்லை அவளுக்கு ..
"மருதாணி ..
"ஹான் வர்றேன்ங்க .."
"என்ன பண்ற கதவை திற" என்றதும் மருதாணி கதவை திறக்க .... துரை மூச்சடைத்து போனான் நைட்டியில் மல்கோவா மாம்பழம் போல மருதாணி அவன் முன் மொத்த தாகத்தையும் கிளறி விட்டபடி நின்றாள் ...
"வாசலை அடைச்சிட்டு நின்னா , உள்ள எப்படி வர? ..
"அச்சோ வாங்க உள்ள ..என்ன இந்த நேரத்தில தலைவாசல் சின்னதாக இருக்க, மருதாணி ஒரு கரையில் நிறக துரை அவளை லேசாக உரசியது போல உள்ளே நுழைந்தான்..
"சண்முகம் மகளுக்கு வலி வந்திடுச்சுன்னு ஆஸ்பத்திரி போயிட்டான் போல, போன் போட்டான் நீ ஒத்தையா இருப்பியேன்னு வந்தேன்.. ஏன் வர கூடாதா? ..சட்டை பட்டனை விலக்கி கை வழியே சட்டையை துரை உருவ..
"அப்படி எப்போ சொன்னேன், கொடுங்க ஹேங்கர்ல மாட்டுறேன்" புருஷன் சட்டையை அழகாக மடித்து ஹேங்கரில் போட துரை போய் கட்டிலில் அமர்ந்தான் ... இரண்டு அறை .. ஒரு ஹால் , கிச்சன் பின்னே தோட்டம்.. ஓட்டு வீடு கொஞ்சம் வேட்கை அதிகம் தான் புழுங்கியது...
"இருங்க சேலை மாத்திட்டு வந்துடுறேன்.. மருதாணி ஆடை கவனிப்பு இன்மையால் நெளிய ..
"இருக்கட்டும் நல்லா தான் இருக்கு "என்றான் அவளை பார்வையில் மேலிருந்து கீழ் வரை பார்த்து கொண்டே.. அவளுக்கு இன்னும் அவஸ்தை ஆகி போனது ... துரை பார்வை வேறு அவளை புதிதாக பார்த்து வைக்க கவனத்தை மாற்றும் பொருட்டு..
"சாப்பிட்டீங்களா ??கதவை போய் அடைத்து விட்டு வந்தாள்...
"இல்ல ஏதாவது இருக்கா??" கட்டிலில் மல்லாக்க படுத்து கொண்டு அவள் போவது வருவதை ரசித்தான்..
"ரசம் வச்சி சாதம் தரவா ...
"இப்பவா மணி நேரம் ஆகுதுடி... டி விழி இருவருக்கும் கிக் கொடுத்தது உண்மை ...
"சட்டுன்னு வச்சிடுறேன் ...
"ம்ம் சரி வை ... அவள் அரக்க பறக்க சாதம் வடித்து ரசத்தை தட்டி போட்டு கொதிக்க கொதிக்க கொண்டு வந்து தரையில் வைக்க ... துரை சற்று கண் அயர்ந்து விட..
அச்சோ பாவம் சாப்பிடாம தூங்கிட்டாரே துரை அருகே போய்..
"சாப்பாடு ரெடி ரெண்டு வாய் சாப்பிடுட்டு படுங்களேன் "என்று அவன் அருகே போய் மருதாணி மெல்ல அவனை தட்டி எழுப்ப .. கண்களை திறந்தவன் பார்வையில் தாலி வந்து விழுந்தது.. அது மட்டுமா விழுந்தது?? குனிந்து அவள் எழுப்ப .. பூமி உருண்டையும் பிதுங்கி நைட்டி மீது அழகை கூட்டி காட்டியது அவன் பார்வை உணர்ந்து மருதாணி எழும்பி கொள்ள... துரை அதையும் ரசித்து கொண்டே கையை கழுவி கொண்டு நிற்க அவள் டவலை நீட்ட ... மருதாணி நைட்டியில் கையை துடைத்து அவளை சிவக்க வைத்து தரையில் அமர்ந்து சாப்பிட அவனுக்கு வியர்வை கொட்டியது ...
"கொஞ்சம் புழுக்கம் அதிகமா தான் இருக்கு ... காத்து வீசவா" இத்தனை நாள் அரவிந்துக்கு அவன்தான் பார்த்து பார்து செய்வான்... அவனுக்கு செய்ய ஆளே இருந்தது இல்லை... எதிர்பார்த்ததும் இல்லை இன்று ஒரே தாலி ஓஹோ வாழ்க்கை என்பது போல சுடச்சுட சோறு பக்கத்தில கும்முன்னு பொண்டாட்டி காத்து வீச , வெறுமையான இல்லற வாழ்வில் குளுமை புதிதாக பரவியது ...
"நீ சாப்பிட்டியாடி?...
"ஆச்சுங்க குழம்பு ஊத்தவா?...
"குடுகுடுன்னு வராத உட்கார்"" அவள் கையை அழுத்தி அமர வைத்தவன்...
"இந்தா ஒரு வாய் சாப்பிடு "என அவள் வாயருகே கையை நீட்ட மருதாணிக்கு முதல் முறை மகிழ்ச்சியில் கண் கலங்கியது
"என்னடி ஆ காட்டு ..
"ம்ம் "அவள் கண்ணை துடைத்து கொண்டு வாயை பிளக்க.. ஒரு உருண்டை உணவை மருதாணி வாயில் வைத்து சாப்பிட வைத்தான்...
"காத்து வீசி விடவா ??
"ரொம்ப ஆசையா இருந்தா பக்கத்தில நெருங்கி உட்கார்ந்து வீசி விடு, எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்ல" என்ற கணவன் பேச்சில் மருதாணி பெயருக்கு ஏற்ப சிவக்க, அவளை இழுத்து தன் அருகே அமர வைத்தவன்...
"பிள்ளைங்க கண் படாம வாழ்ந்தா ஒன்னும் தப்பு இல்லையே..."
ம்ம் ..
"யாருக்கும் சங்கோஜம் இல்லாம நாம வாழலாம் உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையேன்னு கேட்டேன் .. "
"என்ன பிரச்சனை வந்தாலும் நீங்க இருக்கீங்களே... என்றாலும் மருதாணிககு உடல் வெடவெடத்து போக
"முதல்ல பேசி பழகி இருப்போம் , அது தானா நடக்கும் பயப்படாத சரியா ...
"ம்ம் என்று மருதாணி பாத்திரத்தை எடுத்து கொண்டு உள்ளே வைத்து விட்டு வர ... கீழே பாயை விரித்து துரை படுத்து கொண்டு
"நீ மேல படுத்துக்க...
"ம்ம் என மருதாணி படுக்கையில் போய் படுத்தாள் அந்த மித ஒளியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ரசித்து கொண்டே இரவு முழுவதும் புது காதலர்கள் போல தூங்காது நெஞ்சை அடைக்கும் பருவ ஆசையில் விரதம் காக்க முடியாது கிடந்தனர் ...
மோக காய்ச்சல் வேகமாக பரவி காத்து வைத்திருக்கும் விரதத்தை கொல்லும்..காதல் புது ஜனனம் எடுக்கும் ... அவன் வனத்தில் மருதாணி ஆழமாக பதியம் போட்டு கொள்ளும் ..
13 வனம் சேர்ந்த ஐவணம் !!
துரை பாயில் படுத்து அவள் பக்கம் தலையை திருப்பி பார்க்க , மருதாணி ஒருக்களித்து படுத்து அவளும் அவனையே பார்த்து கொண்டிருக்க... பார்வையில் ஓராயிரம் கவிகள் தோன்றியது...
இதழ் சேர்வது காமம் என்றால்
கண்கள் சேர்வது ராஜபோதையோ??
விரல் சேர்வது காதல் என்றால்
பார்வைகள் சேர்வது மீகாதலோ ??
பனியன் நடுவே சுருள் சுருள் முடிகள் அதில் வைரம் போல முத்து முத்து வியர்வை , அதில் புகுந்து படுத்து கொள்ள தொடர் ஆசை பெண்ணுக்கு ... ஆசைகள் தானே மனித ஓட்டத்தை நிர்ணயிக்கிறது ..பணம் வேணும் ஓடணும் உழைக்கணும் , பிள்ளையை கரை சேர்க்கணும் என்று இத்தனை நாள் ஓடிய ஓட்டம் இன்று அவன் கை சேர்ந்த பின்பு தூரம் போனது வியப்பான ஒன்று, எல்லாம் அவன் பார்த்து கொள்வான் , சுமையை அவனுக்கும் பங்கீடு செய்ததால் வந்த அடுத்த கட்ட உணர்வுகள், இது நாள் வரை இளமையை பற்றி யோசிக்காத உடலும் , மனமும் இன்று துரை அருகே மெல்ல அலையாக ஆடி அசைந்தது தன் அறையில் துரை கணவன் என்ற சகல உரிமையில் மகிழ்ச்சியை தாண்டி ஒரு நிம்மதி பரவியது .. நிம்மதியான உடலும் மனமும் தான் காதல் ஆசையை தூண்டி விட வல்லது அவளுக்கும் அவன் பார்வை தூண்டலில் உடல் முழுக்க அவனுக்காக துலங்கி நின்றது ..
"இது என்ன ஆசை , அய்ய" என்று உதட்டை கடித்து கொண்டாள்..
"என்னாச்சி ?அவள் முனகலில் துரை மூங்கில் காடு செழித்து வளர்ந்தது ...
"ம்ஹூம் சும்மா "ராத்திரியில் அவள் குரலே போதை ஏற்றியது.. நைட்டி மீது மலர்ந்து தொங்கிய மரகத நாணய வட்டம் அவன் கண்ணில் கபடி விளையாடியது மருதாணி நன்று ஓங்கி உயர்ந்த உடல் , சுமார் எடை என உருண்டு திரண்டு அழகு வடிக்க இடம் இல்லாது அம்சமாக இருப்பாள் ... மாலை அவன் வைத்து விட்ட பூவை கழட்ட மனம் இல்லாது அப்படியே வைத்திருக்க .. அது ஒரு புறம் வாசத்தை பரப்பி அவனை ஏதோ புதிதாக ரணம் செய்தது ...ஆண் கற்றாழைமலர் தொடை நடுவே பூனையாக உரசிட கால்களை போட்டு அமுக்கி கொண்டான் .. அவனும் ஆசைகள் உள்ள அரை மனிதன் தான் .. மகனுக்காக தன்னை அடக்கி வாழ்ந்தாலும் மனைவி என்று வந்த ஒருத்தியிடம் தன் தேவையை கூற ஆசையை அடக்க தோன்றவில்லை .. அப்படி அடக்கி ஓடுக்கினால் அவன் எப்படி நல்ல கணவனாக முடியும்.. இன்னும் இஞ்ச் இஞ்சாக அவள் உடலை வருடினான்... துடி இடை எல்லாம் இல்லை உரல் போல மடிந்து உருண்டு ஒரு மாதிரி அழகாக அவனுக்கு சவால் விட்டது ...
மகன் மீது உள்ள ஆற்றாமைக்கு மனைவி தரும் புது ஆசை வைபவம் சற்று மனநிலையை மாற்ற உதவியது மறுக்க முடியாத மெய் ..
என்ன பேச, எப்படி தொடங்க என தெரியாது இருவரும் பார்வையிலேயே பேச...
"பக்கத்தில வர்றியாடி?
"ம்ம் இடம் இருக்கா" இருவருக்கும் தனிமை தவிக்க வைத்தது ... முதல் படி எடுத்து வைக்க தயக்கம் உடைத்து விட்டனர் ...
"இருக்கு வா..
"சிரமமா இருக்காதே .. எழும்பி கொண்டையை இழுத்து போட அவள் முன் குலுங்கி குதித்த டிராகன் பழங்கள் மீசைக்கு நடுவே இதழை ஈரம் ஆக்கியது... தன் மேல் அவள் ஏறி அமர்ந்து மரம் ஏற ஏற மனைவி கனிகளை குலைத்து விளையாட துரைக்கு ஆசை வந்தது ...
"நீ என்ன, என் மேலவாடி படுக்க போற, பாய்லதான படுக்க போற வா.. என்று துரை தள்ளி படுத்து கொள்ள ... மருதாணி கணவன் பேச்சில் சிவந்து போனாலும்... இறங்கி வந்து அவன் அருகே இடைவெளி விட்டு படுத்தாள்... துரை அவளை நோக்கி படுத்து தலைக்கு கையை வைத்து கொண்டு மருதாணியை பார்க்க ... மல்லாக்க படுத்து கிடந்த அவளுக்கோ நரம்பு நரம்பாக வலி எடுத்தது.. இரட்டை பூ தென்றல் காற்றில் ஆடியது போல துரை கண்ணால் பூத்து நேராக குத்தி கொண்டு நிற்க ... மருதாணி தன் ஒரு காலோடு இன்னொரு காலை உரசி உதட்டை கடிக்க , அவள் காலின் நடுவே இன்னொரு கால் உராய அவளுக்கு வெடவெடத்து கொண்டு வந்தது .. துரை கால்கள் அவள் காலோடு மெல்ல தேய ..
ஸ்ஆஆஆஆஆ அவளையும் மீறி முனகிவிட துரை கைகள் மெல்ல மருதாணி இடையில் பட , வெட்கம் கொண்டு திரும்பி படுத்து கொண்டவள், பின் புறமாக நெருங்கி படுத்த துரை ... அவள் நெளிந்த இடையை மெல்ல வருடி கொண்டே .
பிரச்சனை சரியான பிறகு ஒரு குழந்தை பெத்துக்கலாம் சரியா ? அவள் தலையை திருப்பி அவனை பார்க்க ...
"ஏன் தப்பா ?
"இல்ல அரவிந்த் துர்கா என்ன நினைப்பாங்க.." கல்யாணம் முடிஞ்சது வரை ஓகே, இனி குழந்தை எல்லாம் சங்கோஜமாக இருந்தது ...
"ஏன் உனக்கு வேண்டாமா ?
"வேணும்" இழுத்தாள்... ஆனா ??
"பின்ன என்ன விடு.. இது நம்ம ரெண்டு பேர் விருப்பம் ஏன் உனக்கு என் ஜாடையில புள்ள வேண்டாமா? அவள் எப்படி சொல்வாள் அவனை போல ஒன்று இல்லை நிறைய வேணும்னு ... மித ஒளியில் அவள் முக மாற்றம் கண்ட துரை கைகள் மெல்ல மேலேறி அவள் திமிரிய திமில்களை ஆடை மீது தடவ ..
"ஆஆஆஆஆ யோவ் வேண்டாம்" .. நெளிந்து மருதாணி நகர ... மரியாதை குறைய, அதில் துரைக்கு பரம போதை வர, காலிடையில் மண்ணுளி படம் எடுத்து அவளை தாக்க..
"எது வேண்டாம்டி" ஜிப்பை மெல்ல கழட்டி விட்டு உள்ளே கை விட , அவளே அவனோடு பின்னே தள்ளி படுத்து அவன் தடவ தடவ கண் கிறங்கிட ...
'எது வேண்டாம் சொல்லுடி.."
"ஸ்ஆஆஆஆ எதுவும் சொல்லலை "அவன் கைகள் அபூர்வ அன்னம் ரெண்டையும் மாற்றி மாற்றி மெல்ல பிசைய ஆரம்பிக்க.... இன்பத்தில் எல்லை அருகே கண்டார்கள்...
"நல்லா பஞ்சு போல மெதுமெதுன்னு இருக்குடி...
""சீசீ
"உதட்டை காட்டு அது எப்படி இருக்குன்னு கடிச்சி தின்னு பார்க்கிறேன் "
"ம்ஹூம்
"ஏன் ? அப்ப போகவா?
"ம்ஹூம் ...
"என்னடி எல்லாத்துக்கும் ஒரு வரி பதில் சொன்னா மேலே எப்படி போறது .. அப்ப போகவா??"என்று அவன் நகர , மருதாணியோ அவன் விலகலை தாங்காது துரை கையை இழுத்து மறுபடியும் மத்தாப்பு மலர் மீது வைத்து..
"போகாதய்யா, எனக்கு உங்ககூடவே இருக்கணும் போல இருக்கு" என்று மருதாணி திருப்பி அவனை பார்க்க ....
"இந்த அழகி இத்தனை நாள் எங்கடி இருந்த ..
"இந்த அழகன் ஏன் இத்தனை நாள் என்ன தாங்க வரலை "என்றவள் முகத்தை தன் முகத்தோடு அணைத்து பிடித்த துரை ..
"நாற்பதுல இதை எல்லாம் அணுபவிக்கணும்னு எழுதி இருக்கு போலடி ஆனா இது கூட நல்லாதான் இருக்கு .... "என்றவன் உதடு அவள் முகத்தை மெல்ல உரசி உதட்டு பக்கம் வர மருதாணி அவன் உதடு ஊர்வலத்தை ரசிக்க... துரை அவள் சதைப்பற்றான உதட்டை நிதானமாக உறிஞ்சி கொள்ள .. மருதாணியும் குறையாத ஆசையில் அவன் மீசையோடு உதட்டை கவ்வி உறிஞ்ச.... அவன் கையில் அவள் முன் மஞ்சள் இரண்டும் சுகமாக பிசைந்து கசக்கப்பட, இவள் கைகள் அவன் பிடறி முடியை தேட ... அவனோ அசைவ விரும்பியாக அவள் இதழில் நாவை விட்டு துலாவி சப்பி கொண்டே, தன் வேட்டியை மெல்ல உருவி நகட்டி விட்டு அவள் கை பிடித்து அடி வயிறு கொடுக்க..
"ஸ்ஆஆஆஆ இங்கதான் வேதனை தாங்க முடியலடி.. என்று அவள் கைக்கு உயர்ந்த மலை ஏந்தி கொடுக்க, மருதாணி அவன் குரலில் இருந்த ஆசையில் தன்னை மறந்து அவன் தேர் நுனியை ஆசையாக உரசி உச்சியில் உயிர் துளி உருவாக வைக்க ...
"ஆஆஆஆஆ ம்மா மாயாஜாலம் பண்ணுதுடி" என்றவன் அவளை மல்லாக்க தூக்கி போட்ட துரை ... ஜிப் கழண்டு வெளியே தொங்கிய வில்வ இலை இரண்டோடு கண்கள் சொக்கி கிடந்த மனைவியை லைட் வெளிச்சத்தில் ரசித்து கொண்டே ..அவள் மீது மெல்ல ஏறி படுக்க , மருதாணி அவன் காட்டு உடலை அழகாக தாங்கி அவன் முதுகை இறுக்கி பற்றி கொண்டு , அவன் முடி மறைத்த மார்பை கடித்து அவனை அணைக்க , ஆசை உச்சி சுகம் தேட பாயில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் உருண்டு கசங்கி மேலே கீழே உருண்டனர்...
இருவருக்கு உள்ளும் வெளியும் ஆசை பெருமழையாக இடியோடு பெய்ய ஆரம்பித்தது இந்த ஏகாந்த சுகவேதனை இரவு மட்டும் கழியவே கூடாது என்ற பேராவல் மிகுந்தது ...
என் அழகிடி நீ !! மொச் மொச் முத்தம் அவள் பெரிய இலந்தை கொடி வாங்க..
"ஸ்ஆஆஆஆஆ யோவ் முடியல என்று முனங்கிய மனைவி வரண்ட திராட்சை அவன் விரல் இரண்டில் நசுக்கபட...
"ஆஆஆஆஆ துடித்தது பெண்மை, அவள் துடிப்பு அவனுக்கு பேராசை கொடுக்க , குனிந்து நாணயம் இரண்டையும் உதட்டில் ஒத்தி எடுக்க .. தூதுவளை மலர் இரண்டும் அவன் பல் கடிக்கும் நேரத்துக்கு ஏங்கி ஆணியாக தலை தூக்கி நின்றது .... அதை இரட்டை விரலில் நசுக்கி எடுக்க ...
ஊஊஊமஅமாஆஆஆ இடையை எக்கி அலறிய மருதாணி தொடை மறைத்த நைட்டியை பொறுமை இன்றி எழும்பி கழட்டி கைவழியே உருவி போட்ட துரை, தன் ஆடைகளையும் கழட்டி போட்டு விட்டு .. அவள் வெற்று உடலை கண்ணில் பேராசை தோன்ற ரசனையாக பார்த்தவன்
"இப்ப இன்னும் அழகா இருக்கடி அழகி "என்று அவள் வயிற்றில் நாவை வைத்து சப்பி விளையாட
"ஸ்ஆஆஆஆ நீங்க மட்டும் என்னவாம்.. கட்டுமஸ்தா தோரணை கூடி போய் உசுர அள்ளுறீங்களே... உங்களை பார்க்க பார்க்க ரொம்ப பிடிக்குது" அவள் வாயால் அழகன் பட்டம் பெற்ற துரைக்கு வாழ்வில் சாதித்த மகிழ்ச்சி...
"அப்படியா அழகி இச் இச் "அவள் வயிறு தாண்டி அவன் முகம் கீழிறங்க மருதாணி உள்ளங்கை உவர் நிலம் வனம் நடுவே செழித்து கிடக்க தன் கணவன் காணும் இடம் கண்டு அவள் நாணத்தில் கையால் மறைக்க போக , அதை பிடித்து தன் விரலோடு அமுக்கி கொண்ட துரை நச் என்று கருமணல் நடுவே முக்கோண நகரம் கண்டு பிடித்து இச் இச் வைக்க ..
ஆஆஆஆஆஆ துள்ளி விட்டாள், அவள் துள்ளலில் முகத்தில் வந்து மருதாணி மலர் உரசிட, அவள் பின் சதையில் கைவிட்டு பிடித்து தன் முகத்தோடு முல்லை நிலத்தை புதைத்து கொண்டு மூக்கால் மேலும் கீழும் தேய்த்து அவளை உளற வைத்தான்
ஆஆஆஆஆ யோவ் வேண்டாம் சிணுங்கலில் அடியில் சிவப்பு விளக்கு எரிந்தது ... அவன் உதட்டில் பதனீர் வாசம் கண்டு தலையை தூக்கி பார்க்க அவள் அவனை குனிந்து பார்த்து உதட்டை கடித்து கிறங்கிய ஓர விழிப்பார்வை பார்க்க, தவம் கிடந்த ஒற்றை அசைவ கொக்குக்கு இன்று மாமிச விருந்து என துள்ளாட்டம் போட்டது.. அவள் காலில் வழுக்கி விளையாடிய கனரக வாகனம் புகை கக்க ஆசையாக துடித்து மனைவி வைர குகை நடுவே மெல்ல மெல்ல இடுப்பை அசைத்து திணிக்க ...
அவன் முதுகில் பிடித்த மருதாணி கைகள் ஆழமாக அவனை அழுத்தி கொண்டு தன் நகத்தில் கீற... முக்கு திரும்பாது வழுக்கி வாழை வெளியேற... துரை மனைவி முகத்தை எட்டி பார்க்க .. அவள் இடை எக்கி புருஷன் அவஸ்தைக்கு அவன் இடை சுற்றி தன் காலை போட , அவள் மிஞ்சியின் முத்துகள் சில் சில் என ஒலி எழும்ப மெல்ல மெல்ல புகைவண்டி வலிக்க மருதாணி காட்டுக்குள் நழுவி போக..எவ்வளவு முயன்றும் அவளால் கத்தாமலு இருக்க முடியவில்லை..
"வெளிய சத்தம் கேட்டுட போகுதுடி" இடை மெல்ல அசைய ...
"ஆஆஆ வலிக்குதுய்யா..."
"இப்ப" எக்கி எக்கி வெள்ளை நெருப்பில் காய்ச்சி வைத்த இரும்பு மனைவிக்கு சுகத்தை வாரி வழங்கி அவனுக்கும் பேரானந்த வெள்ளத்தை பெரு வெள்ளமாக சுரக்க வைத்து கொண்டிருக்க..
"சொல்லு அழகி இப்ப வலிக்குதா??" ஓங்கி ஓங்கி வேலை நடந்தது.. மருதாணி கண்களை மெல்ல திறந்து அவனை பார்த்தாள்.. தன் முகம் முன்னே அவன் முகம் வந்து வந்து போனது.. அவளுக்கு இரண்டு பக்கமும் கையை ஊன்றி, நெஞ்சு முடி வியர்வை துளி அரும்ப பாலர் பாடம் தாம்பத்தியத்தில் பழகினான் ..
"ஸ்அஆஆஆஆ பல்லை கடித்து கழுத்து நரம்பு புடைக்க மருதாணி இடுப்பை இழுத்து வைத்து வளர்ந்த விருட்சம் வளையாது, அவள் அடி வரை பாய்ந்து பாய்ந்து வர..
"யோவ் ..
"என்னடி..
"ஆஆஆஆ அவன் முகம் எங்கும் முத்தம் கொடுத்து கண் சொக்க.. இன்னும் வேகம் கூட்டியவன் கூடலில் குலுங்கும் நறுவல்லி பழத்தை தன் வாய்க்குள் திணித்து சப்பி கொண்டே அடியை அசைக்க ...
"மாஆஆஆஆஆ பெண் மான் சுகத்தில் அலற... துரை பல்லை கடித்து கொண்டு இடை அதிர அதிர இளமை ரசத்தை மனைவிக்குள் சூடாக ஏற்றுமதி செய்தவன் வியர்வை அவள் மார்பை நனைக்க.. அவன் இளமை பெண்மையை நனைக்க, இழுத்து கட்டி கொண்ட மருதாணி..
"படுய்யா" என்று அவனே இழுத்து தன் மேல் போட்டவள் ,கைவிட்டு நைட்டியை எடுத்து அவன் முகத்தை துடைக்க போக
"ம்ஹூம் இங்க இடம் இருக்குடி" என்று அவள் திமில் மீது முகத்தை வைத்து தேய்த்து எடுக்க, அவள் வியர்வையையும் பூசி கொண்டு சிரித்தான்...
நிறைவு எனும் வார்த்தை இருவரும் எங்கோ கேள்வி பட்டிருக்கிருக்கிறார்கள்.. ஆனால் கண்டதில்லை இன்று கண்டார்கள் ... அது காமத்தில் வந்த நிறைவு இல்லை... எனக்கு இவன் இருக்கிறான் என்ற நிறைவு, எனக்கு இவள் இருக்கிறாள் என்ற நிறைவு... அந்த நிறைவு புது உற்சாகத்தை கொடுக்க... துயில் எழுந்த தும்பிக்கை மறு ஆட்டம் போட்டு மனைவி இடைவெளியில் நடுங்கிட அவள் சிணுங்கி இடம் கொடுக்க, திகட்டாத தேன்சுவை கண்டு கொண்ட இருவரும் ஒருசேர சோர்ந்து விழுந்து கிடந்தார்கள்...
இருபதில் இன்பம் தேடும்
நாற்பதில் இருப்பதில் இன்பம் தேடும்
இருபதில் உடல் தேடும்
நாற்பதில் உளம் தேடும்
இதுதான் வாழ்கை !!
கொடு +இன்பம் = குடும்பம் ..
இன்பத்தை கொடுத்து இன்பத்தை வாங்குவது தான் குடும்பம் என்ற தாரக மந்திரம் இருவருக்கும் பக்குவத்தை கொடுத்து வாழ்க்கையை அடுத்த கட்டத்தை நோக்கி அழகாக நகர்த்தியது ...
எப்போதும் இன்பத்தை அனுபவிக்க முடியாதே.. இன்பமும் துன்பமும் .. சூரியன் சந்திரன் போல ஒன்று மாற்றி ஒன்று குடும்பம் எனும் பூமி உருண்டையை சுற்றிவந்த தான் தீரும் ...
ஆப்புக்கு சுஜா கேரண்டி!!
அறை வாங்க போற, அதுக்கு நாங்க கேரண்டி அதான??
14 வனம் சேர்ந்த ஐவணம் !!
தூக்கத்தை தேடி இத்தனை ஆண்டுகள் நகர்வலம் வந்த கண்கள் இன்று ஆசையில் தள்ளாடி கிடந்தது... தன் மேல் ஆடைகள இல்லாது ஒட்டி கிடந்த மனைவி புது தேஜஸ் கொடுத்தாள்
"தூக்கம் வருதாடி....
"ம்ஹூம் இத்தனை வருடம் துங்கியாச்சி,உங்களுக்கு வருதா? அவன் சுருணட முடி மார்பில் படுத்து கிடந்து கதை பேசுவது சொர்கத்தை விட அதிகம் சுகம் தந்தது ...
"இல்ல, தூங்கி நேரத்தை கழிச்சது போதும் நீ பேசு" .. அவள் சுருட்டை முடி கூடலில் கலைந்து அவன் மார்பில் கிடக்க அதை விரலில் கோதி விட்டான் அவள் மச்சப்பூ அவன் நெஞ்சில் பிதுங்கி கிடக்க.... சொர்கத்தின் வாயில் தன் மனைவியிடம் தான் இருக்கிறது என கண்டு கொண்டு கொண்டான்
"என்ன பேச ?
"எதாவது பேசுடி .... கேட்கிறேன்...
"என்ன பேசன்னு சொன்னாதான பேச முடியும் அவன் கற்றை மீசை தன் கழுத்தில் உராய மறுபடி உளி வாங்கி அவனில் ஊடுருவ ஆசை வந்தது ...
"பேசினா தான உன்ன பத்தி புரிஞ்சிக்க முடியும் ... புரிஞ்சி வாழ்க்கைக்குள்ள போனதான் காலத்துக்கும் வாழ்க்கை நிலையா நிற்கும் .. என்ன தோணுதோ பேசு ...
"ம்ம் சரிதான்" என்றவள் மல்லாக்க படுத்து கொண்டு பெருமூச்சு விட ... மருதாணி தான் கடந்து வந்த பாதையை கூற கூற, அவள் கண்ணில் கண்ணீர் தடம் ... துரை உடலில் சற்று அதிர்வு ...
"அவ்வளவு தான்ங்க ... என்று முடிக்கும் போது அவளை இழுத்து அணைத்து தட்டி கொடுத்த துரை மருதாணி தலையை வருடி விட... அவளுக்கு திருப்தியான புன்னகை...
"அப்போ துர்கா?
"என் குழந்தை இல்லைங்க...
"ம்ம் நினைச்சேன் ... முதல் முறை அவளை இடையை உளி உடைக்கும் போதே உணர்ந்தான் அவள் பதப்படுத்தபடாத ரோஜா என்று ...
"துர்கா , என் அண்ணன் குழந்தை ... எங்க அப்பா குமாரசாமி பெரிய சாதி பைத்தியம்.. எங்க ஊர்ல ரெண்டு ஜாதியா பிரிஞ்சு இருந்தாங்க ... எங்க அண்ணன் மாதவன், ரொம்ப நல்லவன்.. என் மேல உயிரையே வச்சிருந்தான்... அண்ணனுக்கும் எங்க ஊர் கீழ் ஜாதி பொண்ணுக்கும் காதல் ரெண்டு பேரும் காதலிச்சது எனக்கு நல்லா தெரியும் அவங்களுக்கு சில நேரம் தூது கூட போய் இருக்கேன் .. இது எங்க அப்பாவுக்கு தெரிஞ்சு ஒரே கலவரப்பட்டு போச்சு, எங்க அண்ணன் கட்டினா அவளதான் கட்டுவேன்னு நிற்க , எங்க அப்பாவுக்கும் அவனுக்கும் சண்டை... கடைசியா ஊர் கண்ணுல மண்ண தூவிட்டு எங்க அண்ணன் அந்த பொண்ண கூட்டிகிட்டு மெட்ராஸ் போய் சேர்ந்துட்டான்.. எங்க அப்பாவும் அதை அப்பவே மறந்துட்டாருன்னு தான் நாங்க நினைச்சோம்... ஆனா இல்லைன்னு அதுக்கு பிறகு தான் தெரிஞ்சது சரி நாலு வருஷம் ஆயிடுச்சு.. இனி எல்லாம் சரியா இருக்கும்னு எங்க அண்ணன் அப்பப்போ ஊர்ல உள்ள அவங்க நண்பர்கள் கிட்ட என்கிட்ட எல்லாம் பேச ஆரம்பித்தான்... என் அப்பாவும் அண்ணன் கிட்ட கொஞ்சமா பேச தொடங்கினார்.. எல்லாம் சரியாயிடுச்சுன்னு நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம் , அப்பதான் அண்ணி நாலு வருஷம் கழிச்சு முழுகாம இருந்தாங்க அவங்களும் தன்னோட தாய் வீட்டுக்கு வர ஆசைப்பட .. எங்க அப்பா இங்க இனிமே பிரச்சனை இல்ல நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு இங்க வந்து ஒரு பத்து நாள் இருந்துட்டு போன்னு கூப்பிட்டார்... அண்ணனும் நம்பி அண்ணியை கூட்டிகிட்டு ஊருக்கு வந்தான்... வந்த இடத்துல பத்து நாள் அப்பா பாசமா அண்ணியையும் அண்ணனையும் பார்த்துக்கிட்டாங்க...பரவாயில்லை அப்பா மாறிட்டார்ன்னு நான் கூட நினைச்சேன் .. அப்பதான் அண்ணிக்கு வயித்து வலி வந்து குழந்தை பிறந்தது.. குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்து அண்ணன் அண்ணி, நான் அப்புறம் பிறந்த குட்டி குழந்தை அதான் துர்கா அவளை நான்தான் மடியில வச்சி இருந்தேன்... எனக்கு அப்போ 17 18 வயசு தான் இருக்கும் ... ஊர் எல்லையில நாங்க வரும்போது எங்கள சுத்தி நிறைய வண்டி வந்து நின்னது .... என்ன ஏதுன்னு புரியாம நாங்க பயந்து போக... எங்க அப்பா எல்லாருக்கும் நடுவுல அருவாளோட நின்னார்...
என் மானத்தை வாங்கிட்டு நீ நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சியா, உன்னை இத்தனை வருஷம் கழிச்சு இங்க கூப்பிட்டது கொஞ்சி குலாவ இல்ல உன் தலையையும், உன் பொண்டாட்டி தலையையும் இந்த ஊர் எல்லையில காவு வாங்கதான் அப்படி செஞ்சாதான் இனிமே இங்க சாதி விட்டு சாதி கல்யாணம் கட்ட மாட்டான்கன்னு அண்ணன் சுதாரிக்கும் முன்ன , எங்க அண்ணனையும் அண்ணியையும் வெளியே இழுத்து என் கண்ணு முன்னாடியே எங்க அப்பா வெட்டி கொன்னுட்டாரு ... எனக்கு உடம்பு எல்லாம் ஆடிப் போச்சு ... இப்போதும் மருதாணி பயத்தில் நடுங்க.. துரை அவளை மெல்ல தன்னோடு அணைத்து பிடித்துக் கொண்டான்...
இப்படியும் கொடூரமான ஜாதி வெறி பிடித்தவர்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்களா?
"அப்போ ஒரு ஆளு அவங்களுக்கு பிறந்த குழந்தையை மட்டும் ஏன் விட்டு வைக்கணும் கொல்லுங்கன்னு" ஈவு இரக்கம் இல்லாம சொல்ல..எனக்கு இங்க மிருகம்னு தெரியும், ஆனா பச்சை குழந்தையை கொல்ற அளவுக்கு மிருகம்னு தெரியாதுய்யா...
அச்சச்சோ!! இந்த குழந்தையும் ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு நினைச்சு பயந்து எங்க அண்ணன் குழந்தையை தூக்கிக்கிட்டு ஓட ஆரம்பிச்சேன் ... கிடைச்ச பஸ் புடிச்சு நாகப்பட்டிணம் போய் சேர்ந்தேன் ... அங்க ஒரு மடத்துல போய் என் நிலைமையை சொல்ல அவங்க எனக்கு இடம் கொடுத்தாங்க... நர்ஸ் படிக்க வச்சது கூட அவங்க தான், எனக்குன்னு ஒரு தனி வாழ்க்கை அமைஞ்சா.. எங்க என் அண்ணன் குழந்தைக்கு யாருமே இல்லாம ஆகி போகுமோன்னு நினைச்சுதான் எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கல ... அவ நான்னு எங்க வாழ்க்கையில சந்தோஷம் குறைவில்லாம போகுது.. நானும் அப்படியே வாழ ஆரம்பிச்சுட்டேன் ... ஊருக்கு பயந்து விதவை வேஷம் விரும்பியே போட்டுகிட்டேன்.. உங்க கூட புது வாழ்க்கை ஆரம்பிக்கும் போது உங்களுக்கு எந்த உறுத்தலும் இருக்க கூடாதுல்ல அதான் இப்ப கூட நான் இதெல்லாம் சொல்றேன் ... ஏன் உடம்பு மேல உங்க கை தவிர இதுக்கு முன்ன யாரு கையும் பட்டது இல்ல... நீங்க தான் என் மனசுக்குள்ளேயும் என் உடம்புலயும் புகுந்த முதல் ஆண் அத உணர்ந்தீர்களா ?என்றாள்..
ம்ம் என மனைவி கீழ் உதட்டில் மெல்ல முத்தமிட்ட துரை ..
"என் உடம்பிலும் மனசுலையும் இடம் பிடிச்ச முதல் பொண்ணு நீ தான்னு உணர்ந்தியா ??" என்ற துரையின் கேள்வியில் மருதாணி அதிர்ந்து அவன் நெஞ்சில் இருந்து தன் முகத்தை எடுத்து அண்ணாந்து துரையை பார்க்க... அவளை தன் மார்பில் படுக்க வைத்த துரை..
"அரவிந்த் என் மகன் இல்லை ,
"என்ன சொல்றீங்க?
"அவர் உங்க மகன் இல்லையா.. அப்போ அவரு யாரு ?? ஊருல எல்லாரும் அவர் உங்க மகன்தான்னு சொல்றாங்க பெருமூச்சு விட்டவன்..
"அவன் என் நண்பன் மகன் .. அருணா என் நண்பன் மனைவி என்னோட கூட பிறக்காத தங்கச்சி ...
"நான் எங்க வீட்டுக்கு ஒரே ஒரு பையன் எனக்கு மிலிட்டரில சேர ரொம்ப ஆசை 20 வயசுல எல்லாம் மிலிட்டரில போய் சேர்ந்துட்டேன்.. அங்க என் கூட இருந்தவந்தான் விஸ்வநாதன்..
அப்படியே என் அரவிந்த் போல முறுக்கு மீசை அவன போலவே இருப்பான்... துடு துடுன்னு பேச்சு சிரிப்பு எல்லாம் என் மகனைப் போலவே இருக்கும் ரெண்டு பேருக்கும் இயற்கையாக ஒத்துப் போச்சு நட்புன்னா அப்படி ஒரு நட்பு .. நாங்க இருந்த இடம் பெங்காலிகள் நிறைய இருந்த இடம் ..அங்கு ஒரு குக்கிராமத்தில் இருந்த பொண்ணுதான் அருணா... என் நண்பனுக்கும் அவளுக்கும் பழக்கமாகி பழக்கம் காதலையும் தாண்டி கட்டில் வர போயிருக்கு .. எனக்கு அது தெரியாது, அந்த சமயம் சீனாவுக்கும் நமக்கும் சண்டை நடந்துக்கிட்டு இருந்தது.. சண்ட தீவிரமாயிடுச்சு எல்லாரும் பார்டர்ல வாழ்வா சாவா நிலையில நின்னோம் ... அந்த கடைசி நாள்ல விஸ்வநாதன் என்கிட்ட எதுவோ சொல்ல ட்ரை பண்ணினான் ... ஆனா அதுக்குள்ள அங்கங்க குண்டு மழை பொழியவும் எங்களுக்கு பேசுறதுக்கு கூட வாய்ப்பு கிடைக்கல அதுக்கு பிறகு அந்த வாய்ப்பு கிடைக்காதுன்னு எனக்கு தெரியாம போச்சு... ரெண்டு பேரும் ஒண்ணா தான் போருக்கு போனோம்.. ஆனா வரும்போது அவனோட பொணத்தை மட்டும் தான் என்னால தூக்கிட்டு வர முடிஞ்சது ... அவன் பிணத்தை பார்த்த அருணா கதறி அழுதது இப்பவும் என் கண்ணுக்குள்ள அப்படியே நிக்குது.. அவன் செத்ததை பார்த்த அந்த நொடியே அந்த பொண்ணுக்கு சித்த பிரம்மை புடிச்சு போச்சு.. மயங்கி விழுந்த அவள செக் பண்ணி பார்த்தாங்க குழந்தை உண்டாகி இருக்கான்னு தெரிஞ்சு எனக்கு இடியே விழுந்துடுச்சு ... அவங்க ஊர் வழக்கப்படி .. இந்த மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி புள்ள உண்டான உயிரோட ஊர் நடுவுல விட்டு எரிச்சிடுவாங்களாம்.. எனக்கு என்ன பண்ணனும் தெரியல... செத்த அவனை எழுப்பி அவ கூட சேர்த்து வைக்க முடியுமா.. அந்த பெண்ணையும் , முகம் தெரியாத அந்த குழந்தையையும் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியாம, நான்தான் அந்த குழந்தைக்கு தகப்பன்னு , அவளை என் கையோட நான் கூட்டிட்டு போய்டுறேன் விட்டுவிடுங்கன்னு கெஞ்சாத குறையா கெஞ்சி அருணாவ எப்படியோ ஊருக்கு த கூட்டிட்டு வந்தேன் ...இது எதுவும் தெரியாம எங்க அம்மா அப்பா நான் காதல் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன்னு சொல்லி ஊரை கூட்டி விமர்சையாக அவளுக்கு வளைகாப்பு வச்சாங்க... கழுத்துல தாலி இல்லைன்னு என்ன தாலி கட்ட சொல்ல, ஏதோ ஜோசியர் அவளுக்கு தாலி பாக்கியம் இல்லை அதனால குழந்தை பிறந்த பிறகு தாலி கட்ட சொல்லுங்கன்னு சொல்ல அப்பாடான்னு இருந்தது.. நான் உண்மையை சொலல ஒரு நொடி போதும் ஆனா அதுக்கு பிறகு யார் பிள்ளையோன்னு அவளை வேறு ஒருத்தியா பார்க்க ஆரம்பிச்சா என்ன பண்றது , தங்கச்சி இல்லாத எனக்கு அருணா தங்கச்சியாவே மாறி போன துரை துரைன்னு எங்க போனாலும் என் பின்னாடியே சுத்தி வரும் குழந்தை அவ. பைத்தியமா இருக்குற அந்த பொண்ணுக்கு தனக்கு என்ன நடக்குதுன்னு கூட தெரியல... சரி எதுக்கு அந்த களங்கம் இல்லாத புள்ளைய அசிங்கப்படுத்துவானேன்னு நானும் யாருகிட்டயும் இந்த உண்மைய சொல்லல... அருணாவுக்கு நினைவு திரும்பி அவளா சொன்னா சொல்லட்டும்னு அப்படியே விட்டுட்டேன் ... ஆனா அந்த உண்மைகள் அவளோடையே புதைஞ்சி போயிடும்னு எனக்கு தெரியாது ... அரவிந்த பெத்து எடுத்ததோடு அவ உயிரை விட்டுட்டா.. என் நண்பன் கூட அவளும் போய் சேர்ந்துட்டா.. கையில பச்சை குழந்தை என் அம்மா அப்பா வேற ஒன்னுக்கு பின்னாடி ஒன்னா போயிட்டாங்க, எனக்கு இவனை வச்சுக்கிட்டு எப்படி வளர்க்கணும்னு கூட தெரியாது ஆனால் என்னைத் தவிர அரவிந்த வேற யாராலேயும் நல்லா பாத்துக்க முடியாது என்கிற எண்ணம்.... எனக்குன்னு ஒரு பொண்டாட்டி எனக்குன்னு ஒரு வாழ்க்கை வந்துட்டா அதுக்கு பிறகு அரவிந்தோட நிலைமை கேள்விக்குறியாகிடும்னு நினைச்சேன் ...
காதலும் காமமும் வாழ்க்கையில ஒரு அங்கம் தான் அது இல்லாம கூட வாழலாம் , எனக்கு அரவிந்த் எல்லாமா மாறிட்டான் அவன் அப்பான்னு சொன்ன போது இந்த உலகத்தையே என் காலுக்கு அடியில் கொண்டு வந்த மாதிரி ஒரு தனி சுகம் ..அந்த சுகத்தை இதுவரைக்கும் நான் அனுபவிச்சது இல்லை அப்படியே என் வாழ்க்கையில் இதுவரைக்கும் வந்துடுச்சு .. ஆனா இப்படி இரண்டாவது பாதியில் நீ வந்து என் கூட சேருவன்னு நான் நினைச்சு கூட பாக்கலடி எனக்கும் ஆசைகள், விருப்பங்கள், தாபங்கள் எல்லாம் இருக்குன்னு இதோ இப்பதான் புரிஞ்சுகிட்டேன் என்று அவள் வியர்த்த உடலை தன் இதழ் கொண்டு துடைத்தான்...
அவளுக்கு அப்பட்டமான அதிர்வு .... நானாவது அண்ணன் மகள் ரத்த சம்பந்தமான உறவுக்கு போராடினேன் .. ஆனால் துரை எந்த உறவும் இல்லாத இருவருக்கு தன்,சுகத்தை வாழ்க்கையை இழந்து நிற்கிறானே..
ஒருவருக்காக ஒருவர் வாழ்வது காதல் என்றால் யாரோ ஒருவருக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து வாழ்வதற்கு பெயர் என்ன என்று இருவருக்கும் புரியவில்லை... ஆனால் அவன் வைரம் என்றால் இவளும் வைரம்தான் .. அவன் தியாகி என்றான் இவளும் தியாகிதான் அதனால்தான் கடவுள் இருவருக்கும் அழகாக முடிச்சை போட்டு விட்டிருக்கிறார்..
பொருளை இழுப்பது மட்டும் தியாகம் இல்லை ஆசைகளை துறப்பது கூட பெருந் தியாகம் தான் என இருவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்
வாழாத பெருவாழ்வு இனியாவது வாழ்வார்கள் என்று அவர்களை கடவுள் இணைத்து இருக்கிறார்...
மருதாணி
"ம்ம் சொல்லுய்யா...
"அரவிந்த் என் மகன் இல்லைங்கிற உண்மை நான் செத்தாலும் என் மகனுக்கு தெரிய கூடாது சத்தியம் பண்ணு என்று துரை தன் கையை நீட்ட ..
"யோவ் என்னய்யா பெரிய வார்த்தை பேசுற... இப்பதான் வாழவே ஆசை வந்திருக்கு, இப்ப போய் என்று மருதாணி கண்ணீரை துடைக்க ..
"இந்த உண்மை அவனுக்கு தெரிஞ்சா என் உசுரு உடம்பை வி்ட்டு போயிடும் ..
"நீ போன பிறகு நான் மட்டும் எதுக்குய்யா இங்க வாழ போறேன் உன்ன கண்ணீர் வர வைக்கிற எதையும் நான் சாகுற வரை பண்ண மாட்டேன் "என்ற மருதாணியை இழுத்து அணைத்து கொண்டான் துரை ....
புரிதல் என்பது பாடம் எடுத்து வருவது இல்லை காதலை உணர்ந்து வருவது என்று இருவரும் காட்டினார்கள்...
கெட்டவர்களாக சுயநலமாக இந்த உலகத்தில் வாழ்வது மிக எளிது ஆனால் நல்லவனாக பிறர் துன்பம் அடைந்து விட கூடாது என வாழ்வது மிக சவாலானது..துரையும் மருதாணியும் சுயநலமற்ற உள்ளம் கொண்டவர்கள் கல்லடி பல பட்டுத்தான் கரை சேர வேண்டும் ...
அவனுக்கு சத்தியம் செய்து கொடுத்த மருதாணியே சத்தியத்தை மீறும் காலம் வெகு விரைவில் ...
15 வனம் சேர்ந்த ஐவணம் !!
விடிந்ததும் விடாமல் எழும்பிய மருதாணி தன்னை அட்டை போல ஒட்டி கொண்டு தூங்கிய துரையை விட்டு நகர நெளிய ...
"என்னடி" என்று அவளை இழுத்து படுக்க வைக்க போக..
"விடிய போகுதுய்யா..
"அதுக்கு என்னடி ?
"ப்ச் வீட்டுக்கு போங்க
"எதுக்கு போகணும் படு ..
"அச்சோ இன்னும் உங்க மகன் கோவம் தீரல என்னால தான் பிரச்சனைன்னு நினைச்சுட்டு இருக்கார் இந்த நேரத்தில் நீங்க இஙக வந்து போறது தெரிஞ்சா அவர் கோவம் அதிகமாகும்ல..
"அதுக்கு கள்ள குடித்தனம் நடத்த சொல்றியா ...
"அப்படி சொல்லலைங்க..
"அவர் கோவம் குறையும் வரை கொஞ்சம் கவனமா இருப்போமே பாவம் அவர் உங்க மேல உள்ள அலாதி பிரியத்துல தான அப்படி பேசிட்டார்..
அது சரி அவன பார்த்தா அப்ப நீ ... உன்ன விட முடியுமா ?
விட சொல்லலைங்க அவர் நார்மல் ஆகும் வரை இங்க வந்து போறது அவருக்கு தெரியாம இருக்கட்டுமே, பாவம் ஏற்கனவே கவலையில இருப்பார் இது தெரிஞ்சா இன்னும் விரிசல் பெருசாகிட கூடாதுல்ல..
"ம்ம் நீ சொல்றதும் வாஸ்தவம் தான் ...ஆனா இனி நீ இல்லாம இருக்க முடியாதுடி அவள் கையை தூக்கி விலாங்கு மீன் நீந்துவை பிடித்து காட்ட ..
"அவர் கண்ணுல பட்டிராமன்னு தான் சொன்னேனே தவிர ,இங்க வரவே வேண்டாம்னு சொலலவே இல்லையே என்று அவள் பூனையாக வருட..
"ஸ்ஆஆஆ அப்ப ராவு கதவை திறந்து வை ஒரு மணிக்கு போல வர்றேன் ..
"ம்ம் அவள் வெட்கத்தில் நெளிய ....
"நீ சொல்றது சரிதான்டி துர்கா இங்க லீவுக்கு வந்தாலும் நான் வரலை ... வளர்ந்த புள்ளைங்க சங்கட பட வைக்க கூடாது ... அவ என்னைக்கு வர்றா" என எழும்பி முகத்தை கழுவ டவலை எடுத்து அவனுக்கு நீட்டினாள்..
"இன்னைக்கு" என்றதும் இருவரும் ஏக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்..
"அப்ப இன்றைக்கு முடியாதாடி..
"ம்ஹூம்" மருதாணிக்கும் சின்ன ஏக்கம் அவனை பார்க்க முடியாதே...
"அது இருக்கட்டும் அரவிந்த் தம்பியும் இன்னைக்கு வருவாரே
"அட ஆமா , வார கடைசில்ல புள்ள வருவான் என்றதும் துரை முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் அடுத்த நொடியே முகம் வாடி போக ..மருதாணி சட்டையை எடுத்து அவனுக்கு கையில் மாட்டி விட்டபடி ..
"கோழி மிதிச்சி குஞ்சு சாகாதுங்கறது எவ்வளவு உண்மையோ?? அதேபோல குஞ்சு மிதிச்சு கோழியும் சாகாதுய்யா.. அவருக்கு உங்க மேல அதிக பிரியம். அதனாலதான் என்ன பேசுறோன்னு தெரியாம பேசுறார் ... அவர் சின்ன பையன்தானே அவருக்கு என்ன தெரியும்? எல்லாம் சரியா போயிடும். அதோட நீங்க வச்சிருக்க அன்பை புரிஞ்சுக்க வருஷ கணக்கு எல்லாம் யாருக்கும் தேவைப்படாது, இரண்டு நொடி உங்க கைய கோர்த்துக்கிட்டு இருந்தாலே .. உங்க அன்பும், அரவணைப்பும் நேசமும் புரிஞ்சிடும்..
"ம்ம்" கதவண்டை வந்து துரை செருப்பை மாட்டினான்..
"அவர் கோபத்தில் ஏதாவது வார்த்தை விட்டாலும் கொஞ்சம் பொறுத்து போங்க.. வேற யாரு பேசுறா நம்ம மகன்தானே நினைச்சு விட்டு குடுங்க..
"ஏண்டி நான் என்ன அவன் கூட கட்டிப்பிடிச்சு சண்டையா போடப்போறேன்.. இத்தனை நாளும் நான் அப்படி தாண்டி போறேன் ... ஆனா ஒரு நாள் கூட இப்படி எல்லாம் அவன் முகத்தை திருப்பிவிட்டு போனதே கிடையாதுடி... எங்க அப்பாவுக்கு கல்யாணம் கட்டணும்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் .. இப்போ இப்படி எல்லாம் பேசுறத பார்க்கும்போதுதான் மனசு சங்கடமா இருக்கு... சரி இதையும் பாக்கணும்னு எனக்கு தலையில எழுதி இருக்க போல .. என் மகன் மறுபடியும் சேர்ந்து என் மேல கை போட்டு நடப்பான்ல "துரை கொஞ்சம் ஏக்கமாக மனைவியை பார்க்க..
"உங்க மகனுக்கு நீங்க கொடுத்தது தூயஅன்பு... அது எங்க சுற்றினாலும் மறுபடியும் உங்ககிட்ட வந்தே தீரும் , என்ன அது வரைக்கும் பொறுமையா காத்திருக்க தைரியம் வேணும் கவலைப்படாதீங்க"என்ற மனைவியை சட்டென்று இறுக கட்டி இதழில் முத்தமிட்டு நகர்ந்தவன்
"யானை பலம் வந்தது போல இருக்குடி போயிட்டு வரவா ...
"போறானே" என அவளும் போகணுமே என அவனும் ஏக்க பெருமூச்சு விட ...
"போகவா ??
"ம்ம்
"போகவாடி
ம்ம் என்றவளுக்கு போகாதே என்று கத்த தோன்ற கதவை இறுக்கி பிடித்து கொண்டு நிற்க ...கதவு பக்கம் நின்ற மருதாணியை துரை சட்டென்று தூக்கி கொண்டு வந்து வீட்டுக்குள் விட்டவன்.. அவளை இறுக்கி கட்டி அணைத்து உதட்டை கவ்வி இழுக்க. மருதாணி மட்டும் குறைந்த காதலியா? துரை சட்டையை வேகமாக கழட்டி அவன் நெஞ்சு முடியை சுருட்டி எடுக்க .
"ரொம்ப மோசமானவனா மாத்திட்டடி.. அவள் சேலை முந்தானையை வேகமாக விலக்கி அவரச கதியில் கொக்கியை கழட்ட முடியாது உள்ளே கை விட்டு ராட்சத மலரை பிதுக்கி வெளியே எடுத்து முகத்தை வைத்து தேய்க்க
"ஸ்ஆஆ இங்க மட்டும் என்னவாம்" என்றவள் விரல்கள் அவன் வேட்டி தாண்டி முயல் குட்டி தேடி பிடித்து கொள்ள..
"ஸ்ஆஆஆஆ இன்னும் இன்னும்னு ஆசையா இருக்குடி... வெதுவெதுப்பா உள்ளேயே வச்சிகிட்டு கிடக்கணும் போல தோணுதுடி... "
எனக்கும் உங்க கூடவே இணைஞ்சி கிடக்கணும் போல தோணுதுய்யா 'என்றவள் கட்டியிருந்த சேலையோடு மருதாணியை சுவற்றில் புல் மேயும் ஆடாக நிற்க விட துரையின் அவசரத்தில் மருதாணி கிளுக்கி சிரிக்க
"என் அவஸ்தை உனக்கு சிரிப்பா இருக்காடி என்று படீர் படீர் என செல்லமாக பின் பிரமீடில் அடித்து அவளை பார்த்ததும் கம்பீரமாக முறுக்கி கொண்டு நிமிர்ந்த கோரைப்புல்லை அவள் உதட்டை கடித்து தாக்குதலை தாங்க முட்டி பிடித்து தன்னை ஆவலாக பார்க்கும் மருதாணியை பார்த்து கொண்டே ஆணியை பெண் சுவற்றில் நச் நச் என சத்தம் வர அடிக்க
ம்மாஆஆஆஆ சுகமா வலியா இரண்டும் கலந்த சுகமோ..
ஆஆஆஆ முட்டி நடுங்கி போய் அவன் இழுத்து இசைக்க இசைக்க மருதாணி, நிறம் மாறி அவனை எட்டி எட்டி பார்க்க .. துரை பல்லை கடித்து கொண்டு எக்கி அவள் மாமலை இரண்டையும் கைக்கு ஒன்றாக பிடிமானமாக பிடித்து கொண்டு தும்பை பூவை ஒரு வழி செய்து ... உள்ளங்கை சுனைக்கு வற்றாத நீரை ஊற்றி அவள் கண் சொக்கி அவன் இடை நடுங்கும் வரை மருதாணியை விடவே இல்லை ...
"இன்னைக்கு சூரியன் சீக்கரம் வந்திடுச்சி ச்சை என துரை திட்டி கொண்டு ஆடையை மாற்ற ...
"வரும் வரும் ... நாளைக்கு சூரியனை புடிச்சு கூண்டுல அடைச்சி வச்சிடலாம்" என்று சிரித்த மனைவி கன்னத்தை கிள்ளி எடுத்தவன் ..
"ரெண்டு நாள் இங்கன வர முடியாதுடி.. துர்கா வயசு புள்ள அவளுக்கு எப்பவும் நாம சங்கடத்தை வர வைக்க கூடாது
"ம்ம் .. அவள் முகமும் தொங்கி போனது ..
"அந்த பய கண்ணுல படாம வயலுக்கு போகும் போது உனக்கு போன் போடுறேன்.. உன்கிட்ட நிறைய பேச வேண்டியது இருக்கு" என்று துரை சூட்சமமாக சொல்ல ..
"பேசுங்க யாரு வேண்டாம்னு சொன்னா" என மருதாணி கால் கட்டை விரலை, நிலத்தில் உரசிக் கொண்டே அவனைப் பார்த்து சிரிக்க ..
காதல் எந்த வயதிலும் பேரழகுதான்!! என்று சொல்லாமல் சொன்னது இருவரின் சம்பாஷணையும்...
காதல் ஆக்ரா பளிங்கு மாளிகையில் தான் உருவாக வேண்டுமா என்ன ? தாலி தந்த உறவில் கூட உருவாகும் என பாதிக்கு மேல் தங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ நினைத்தனர் ...
*********
பஸ்ஸில் துர்கா ஏறி அமர, அன்று போல அரவிந்த் சீட்டில் தலை சாய்த்து அமர்ந்திருக்க .. இவள் பகீர் என ஆகி போனது ... அவன் பார்க்க வில்லை என்றதும் இறங்கி வேறு பஸ்ஸில் போய் விடலாமா என நினைத்து இறங்க போக அதற்குள் பஸ் நகர்ந்து விட்டது ... தன் சீட் நம்பரை பார்க்க கிரகம் அரவிந்த் சீட்டுக்கு பக்கத்து சீட் அச்சோ போச்சே!! என்று ஆகி போனது ..
"எம்மா இந்த சீட் தான் உட்காரு, பின்னாடி வர்றவங்க உட்கார வேண்டாமா? என்று நடத்துனர் சத்தம் கொடுக்க ... அரவிந்த் கண்களை திறக்க துர்கா நின்று கொண்டிருந்தாள்..
"அண்ணா வேற சீட் மாத்தி தர முடியுமா?" துர்கா நடத்துனரிடம் ரகசிய வேண்டுதல் வைக்க
"அட ஏம்மா இந்த சீட் மட்டும் தான் காலி.. அதுவும் துரை அய்யா சொன்னதுனால தான் சீட்டே கிடைச்சது என்று போட்டு கொடுத்து விட்டு பக்கி போக , அரவிந்துக்கு எரியும் நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றியது போல இருந்தது ..
ஆக !! எல்லாரும் ஒரு குடும்பமாக சேர்ந்து கொண்டு என்னை மட்டும் கழித்து விட்டார்கள் என புசுபுசுவென வர ... துர்கா வேறு வழி இல்லாது அவன் அருகே அமர்ந்தாள்...
வெகு நேரம் அமைதி பயணம்.. துர்கா அவன் முகத்தை கூட திரும்பி பார்க்க வில்லை .... அரவிந்த் அவளைத்தான் பார்த்து கொண்டிருந்தான் கையில் அவன் வைத்திருந்த அதே மாடல் போன் யார் வாங்கி கொடுத்திருக்க கூடும்? என அவனுக்கு தெரியுமே... தன் தந்தையின் மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் ஜன்னல் ஓரம் கடந்து போகும் காட்சிகள் போல கலைந்து போக ஆரம்பித்தது ...
"டீ காப்பி வேணும்னா போய் குடிங்க வண்டி அரை மணி நேரம் நிற்கும் என்றதும் அனைவரும் இறங்கி போய்விட துர்கா ,அரவிந்த் மட்டும் வண்டியில் ...
"நான் உனக்கு போன் போட்டேன், ஏன் எடுக்கல என்று அவனே பேச்சை தொடங்கினான்.. துர்கா சற்று அதிர்ந்து போய் தன் பையைத் திறந்து உடைந்து போன செல்போனை எடுத்து அவன் கையில் கொடுத்தவள்..
" உடைஞ்சு போச்சு"
" போனா இல்ல நம்ம உறவா?
" ரெண்டும் தான்
"ஓஹோ புதுசா வசதியான பார்ட்டி கிடைச்சதும் அம்மாவும் பொண்ணும் மனசு மாறிட்டீங்களோ என்ற அவன் அவதூறு பேச்சில் துர்கா அவனை முறைத்துப் பார்த்தவள்..
"அநாகரீகமாக பேசாதீங்க அரவிந்த், அவர் உங்க அப்பா..
"என் அப்பாவா?? அது நேத்துவர, இன்னைக்கு உன் அம்மாவுக்கு புருஷன் சொல்லு.. கேட்கவே நாராசமா இருக்கு அவருக்கு தான் புத்தி இல்லாம பண்ணினாருன்னா.... உன் அம்மாக்காகாரியும் இதுதான் சாக்குன்னு என் அப்பன் கூட ஒட்டிக்கிட்டு உறவாடிக்கிட்டு இருக்கா , நீ அவங்களுக்காக என்ன வெட்டி விட்டுட்டு வேடிக்க பார்க்கிற.. உங்களுக்கு இது அசிங்கமா இல்ல" அவன் தராதரம் இல்லாத பேச்சில் துர்கா முகத்தை சுளித்தாள்..
"நான் தாண்டி உங்களையெல்லாம் பார்த்து முகம் சுளிக்கணும் நான் என் அப்பான்னு சந்தோஷமாக இருந்தோம்... எங்க வாழ்க்கைக்குள்ள வந்து மொத்தமா கெடுத்துட்டீங்கல்ல....
"போதும் அரவிந்த் நீங்க பேசுற அளவு இங்க எந்த தப்பும் நடந்துடல .. சொல்ல போனா உங்க அப்பா பண்ணினது நல்ல விஷயம்தான் படிச்ச உங்களுக்கு ஏன் இது எல்லாம் புரிய மாட்டேங்குது..
"எதுடி நல்ல விஷயம் கல்யாணத்துக்கு வளர்ந்து நிக்கிற பையன் நான் இருக்கும்போது, புது கல்யாணம் முடிச்சு பொண்டாட்டி கூட கொட்டம் அடிக்கிறது தான் நல்ல விஷயமா?
" உங்க பிரச்சனை உங்க அப்பா கல்யாணம் கட்டுனது கிடையாது, எங்க அம்மாவை கல்யாணம் கட்டினதுதான் உங்களோட பிரச்சனைன்னு ஓப்பனா சொல்லுங்க
"ஆமாடி அதுதான் பிரச்சனை நான் காதலிக்கிற பொண்ணோட அம்மாவ அவர் கல்யாண கிட்ட நீ எனக்கு தங்கச்சி முறைடி,
"இங்க பாருங்க அரவிந்த் உங்க வருத்தம் கவலை எல்லாம் எனக்கு புரியுது , ஆனா இது நாம நினைச்சு நடத்தின செயல் கிடையாது .. அந்த ஆண்டவன் நடத்துன செயல் .. இதுல யாரையும் பழி போட நம்மளால முடியாது ... அதோட உங்களுக்கும் எனக்கும் இன்னொரு துணை அமைச்சுக்குறது ஒன்னும் அவ்வளவு கடினமான செயல் கிடையாது ஆனால், அவங்க வாழ்க்கை அப்படி இல்ல .. எங்க அம்மாவுக்கு துரை ஆங்கிளை விட நல்ல கணவன் கண்டிப்பா கிடைக்காது ... அதே மாதிரி உங்க அப்பாவ எங்க அம்மாவை தவிர யாரும் இவ்வளவு எளிதா புரிஞ்சுகிட்டு வாழ முடியாது .. அவங்களோட வாழ்க்கைக்காக நம்மளோட சந்தோஷம், ஆசைகளை தள்ளி வைக்கிறது ஒன்னும் தப்பு இல்லையே அரவிந்த் "
"ஓ புரிஞ்சு போச்சுடி இப்படி பேசி பேசி தான் ஆத்தாளும் மகளும் ஆம்பள பிடிக்கிறீங்களோ என்றதும் துர்கா அவன் சட்டையை கொத்தாக பிடித்தவள்
"ச்சை நீ அவர் மகன்தானா ?அவர் குணம் எங்கே உன் குணம் எங்க தூஊஊஊ.. உன்ன போல ஒருத்தனுக்காக நான் வருத்தப்பட்டதே தப்பு ... சுயநலம் பிடிச்சவனே.. உன் ஆசை நிறைவேற முடியலைன்னு , அடுத்தவங்க மேல பழி போடுற .... என்ற துர்கா கையை தட்டி விட்டவன் ...
"உன்ன மாதிரி காசை பார்த்ததும் பஞ்சோந்தியா மாறுற குணம் உள்ள உன் விட , நான் ஒன்னும் குறைஞ்சவன் இல்லைடி" என்று அவனும் பதிலுக்கு கத்த.. பயணிகள் வண்டியில் வந்து ஏறவும் .. துர்கா கண்ணீரை துடைத்து கொண்டு அமைதியாக எழும்பி , ஒரு முதியவரிடம் பேசி இடத்தை மாத்தி கொண்டு போய் அங்கே அமர்ந்து கொள்ள அரவிந்துக்கு தப்பு எது? சரி எது என பிரிக்க முடியாத அளவு மதி கெட்டு போய் நின்றான் ...
துரை எப்போதும் போல தன் மகனை அழைத்து போக பேருந்து நிலையத்தில் காத்திருக்க ... துர்கா வந்து இறங்கினாள்... அவளை பார்த்ததும்
வாம்மா துர்கா ஆட்டோ பிடிச்சி விடவா? ..
ம்ம் என்றவளை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்துவிட்டு ஆசையாக அரவிந்தை தேட .. முழு போதையில் தள்ளாடி கொண்டு நின்ற தன் மகனை கண்டு அதிர்ந்து போய் துரை அருகே போக..
"சாமி என்னய்யா இது ...."
"ச்சீ தள்ளு என்ன விட உனக்கு அவளும், அவ பெத்த மகளும் தான முக்கியம் "என்று துரையை பிடித்து தள்ளிய அரவிந்த் லம்பி கொண்டே தன் நண்பன் பைக்கில் ஏறி வீட்டுக்கு போக ...
விளையாட்டுக்கு கூட மதுவை தொடாத தன் மகன் மதுவில் மூழ்கி அசைய முடியாது தள்ளாடி போவதில் துரை உடைந்து போனான் ...
16 வனம் சேர்ந்த ஐவணம் !!
ஆட்டோ சத்தம் கேட்டு ஓடி வந்த மருதாணி
"வாடி பஸ்ஸூ லேட்டா என ஆட்டோவில் இறங்கிய மகளை மருதாணி சிரித்த முகத்தோடு ஓடி வந்து மெல்ல அணைத்து கொள்ள ..
நாவல் நிற சேலையில் பூவும் பொட்டுமாக கழுத்தில் தாலிச்சரடு மின்ன முத்து கொலுசு சிணுங்க நின்ற அன்னையை பார்த்து துர்காவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ... தான் எடுத்த முடிவு சரி என்று மருதாணி முகத்தில் இருந்த சிரிப்பும் நிறைவான அழகும் அவளுக்கு கூற ..
"ம்மா ரொம்ப அழகா இருக்க என்று துர்கா மருதாணியை நெட்டி முறிக்க ..
"சீசீ போடி வெட்கத்தில் சிணுங்கி விட்டு
"அண்ணா காசு எவ்வளவு ?
"துரை அண்ணன் தந்துட்டார் அக்கா..
"ஓஓ சரிண்ணே
"அக்கா அண்ணன் மட்டன் தந்து விட்டாங்க என கறிக்கடை பையன் வந்து கொடுக்க ...
"மதியம் சாப்பாடு வயலுக்கு தந்து விட்டிடுறேன்னு சொல்லிடுங்க தம்பி...
"சரிங்க அக்கா என கிளம்பி விட ..
"எலும்பு ரசம் வச்சிடலாமா துர்கா, அவருக்கு அது ரொம்ப பிடிக்கும் என தாயின் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடி வேலை செய்ய ..
"ம்மா "
"சொல்லு துர்கா ? தாயின் முகம் காட்டிய நவரசம் இன்று வரை அவள் பார்த்திராத ஒன்றே..
"இத்தனை நாள் இந்த சிரிப்பை எங்கம்மா வச்சிருந்த்தீங்க??" என்றதும் அருவாள் முனையில் கறியை வெட்டி கொண்டிருந்த மருதாணி தலையை தூக்கி துர்காவை பார்த்து சங்கோஜமாக நெளிய..
"அழகா இருக்கு ம்மா இப்பதான் உன்ன பார்க்க சந்தோஷமா இருக்கு .. "
"அது உனக்கு ஒன்னும் ..
"ம்மா இதை எல்லாம் நீங்க என்கிட்ட கேட்கவே தேவை இல்லை .. இத்தனை நாள் எனக்காக மட்டும் வாழ்ந்தீங்க .. இனி உங்களுக்காக வாழுங்க... அங்கிள் ரொம்ப நல்லவர்மா ... அன்னைக்கு பேசும் போதே அம்மாவுக்கு பெஸ்ட் பார்ட்னர் இவர்தான்னு நினைக்க வச்சிட்டார் .. டெய்லி என்கிட்ட போன் போட்டு பேசுவார்.. அலட்டல் இல்லாத அன்பான மனிதர் .. உங்களை நல்ல பார்த்துப்பார்னு முழுசா நம்ப வச்சிட்டார் .." என்று புரிதலுடன் பேசிய துர்காவை மருதாணி நன்றி உணர்வு மீதுற பார்த்தாள் ... எத்தனை பிள்ளைகள் இதை புரிந்து கொள்கிறது அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள் என புரிந்தது..
"சரிம்மா நீங்க உங்க புருஷருக்கு கறியை வச்சி கொடுத்துட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் ... "
"அடிங்க ஓடுடி" என்று மகளை செல்லமாக அடித்து விட்டு துரை நியாபகம் வந்து இதயத்தை மெல்ல வருட , இரவு நடந்த கூடலில் கசங்கிய பாய் கொடியில் காய்ந்து கொண்டு கிடக்க
"யப்பா கசக்கி எடுத்துட்டார்" என்றவளுக்கு இரண்டு நாள் துரையை பார்க்க முடியாதே என்ற சின்ன வருத்தம் தான்... அதோடு அரவிந்த் அவனை சங்கட படுத்தி விட கூடாதே ..
"பாவம் மனுசன் அரவிந்தை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறார் கடவுளே அப்பாவும் மகனும் பழைய படி சரியாக நீதான் அருள் புரியணும்.. என வேண்டுதல் வேறு வைத்து கொண்டு துர்காவுக்கு பிடித்தது துரைக்கு பிடித்தது என தனித்தனியாக ரெடி செய்து வைத்தாள் ...
அரவிந்த் இரவு துர்காவோடு பேசிய பேச்சில் ஏற்கனவே கோவத்தில் இருந்தவன்... பஸ்ஸை விட்டு இறங்கவும் துரை துர்காவை ஆட்டோவில் ஏற்றி அனுப்புவதை பார்த்தவனுக்கு, இளம் மீசை துடிக்க ஆரம்பித்து விட்டது... அவனுக்கு துர்காவை இழந்ததை விட இதயத்தில் சொல்லவொன்னா வலி அது என்ன தெரியுமா ??
தன் தகப்பன் பாசத்தை யாரிடமும் அவனால் பங்கு போட முடியவில்லை. இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக அவன் கரம் பிடித்து அவன் தோள் சாய்ந்து ,சுயநலமாக துரை பாசம் மொத்தத்தையும் தனியாக வாங்கி வளர்ந்த அவனால், அந்த பாசத்தை அவ்வளவு எளிதாக விட்டு விட முடியாமல்தான் கோபத்தில் போனவன் மறுபடியும் தன் தந்தையை தேடி வந்தான்... வந்தவனுக்கு தூபம் போடுவது போல துரையின் பாச பங்கீடு அமைந்து போக,,
அப்படி என்றால் என்னை விட அவருக்கு இன்று வந்த மருதாணியும் ,அவள் மகனும் தான் முக்கியம் என்றால் நான் யார்? என்ற கேள்வி அவன் கண் முன்னால் பூதாகரமாக தொங்க.. கை கால் எல்லாம் ஆற்றாமையில் ஆட ஆரம்பித்தது ...
'என்னோட சந்தோஷம், நிம்மதியை எல்லாத்தையும் இந்த மருதாணி எடுத்துக்கிட்டா, அவ வந்ததுனால தான் என் வாழ்க்கை இப்படி திசை திருப்பி போயிடுச்சு 'என்று புலம்பிக்கொண்டே போனவன் குமரன் மீது மோதி நின்றான்.... அவனே எப்போ எப்போன்னு அலைஞ்சவன் விடுவானா? பாசமாக அரவணைப்பது போல் அரவணைத்து அரவிந்தன் முதுகில் குத்த ஆரம்பித்தான்...
"பரவாயில்ல அரவிந்த் நீ சொன்ன மாதிரியே உன் அப்பாவுக்கு கல்யாணம் நடந்துடுச்சு போலிருக்கு ஆனா உன்னு நினைச்சா தான் பாவமா இருக்கு... அவங்க எல்லாரும் கூட்டா சேர்ந்துட்டாங்க..
நீ பொங்கல்ல வேண்டா வெறுப்பா கிடக்கிற கருவேப்பிலையா மாறிப்போன போ .. "
"என்ன சொல்ற??..
"உண்மையை சொன்னேன் ... ம்ம் எனக்கே உன்ன பாத்தா பாவமா இருக்கு .. நீ வேலைக்கு ஊருக்கு போன பிறகு என்ன நடந்தது தெரியுமா??
"என்ன நடந்தது ..அடுத்தவன் பேச்சுக்கு காது கொடுத்தால் பூமியே நரகமாகிவிடும் என இளம் கன்று அறியவில்லை .. சூதில் தடுக்கி விழுந்தான்...
"என்ன ஆச்சி ?
"அதை ஏன் கேட்கிற அரவிந்த் .. உன் அப்பாவும் அவர் புது பொண்டாட்டியும் அடிச்ச கொட்டத்தை பார்த்துருக்கணுமே.... ரெண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்கும் ஷாப்பிங்னு ஒரே ஜமாய் பண்ணிட்டாங்க... சின்ன சிறுசுக கூட இப்படி ஓட்டிக்கிட்டு அலைய்துங்க ..ஊரே மூக்கு மேல விரல் வைக்கிற அளவுக்கு உங்க அப்பா பொண்டாட்டி முந்தானையை புடிச்சுக்கிட்டே சுத்துறார் என்னத்த சொல்ல...
"பொய் அவர் அவங்க கூட இல்லையே ..தனியாதான் இருக்கார்
"அட உன்னையும் ஏமாத்திட்டார் போல .. பாரு என தன் போனை தூக்கி காட்ட.துரையும் மருதாணியும் கோவில் மண்டபத்தில் அமர்ந்து பேசினது , நகைக் கடையில் , கோவிலில் அவள் காலில் மிஞ்சி மாட்டி விட்ட புகைப்படம் கண்டு பல்லை கடித்தான் ..
என்ன ஏமாத்திட்டார்.. அவனால் ஜீரணிக்க முடியாத வலி ... தன்,தந்தை தள்ளி தள்ளி போனது போல யாருமே தனக்கு இல்லாததது போல புது புது குழப்பம் ..
"ம்ம் , இனிமே அவருக்குன்னு ஒரு புள்ள வந்தா உன்ன அனாதைன்னு கூட சொல்லுவாரு போல இருக்கு ... அந்த அளவுக்கு மனுஷன் பொண்ணு சோக்குல மயங்கி போய் இருக்காரு... சரி சரி நீ எதுவும் கவலைப்படாத அரவிந்த்.. வளர்ந்த பையன் தானே புரிஞ்சிது நடந்துக்கோ வரவா??" என்று கொளுத்தி போட்டு விட்டு போய்விட ..
தன் தந்தை முதன் முறை தன்னிடம் ஒன்றை மறைத்திருக்கிறார் அவள் இல்லாமல் வீடு வந்த பொழுது அவளை தன் வாழ்க்கையை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார் என்று நினைத்து அரவிந்த் சற்று நிம்மதி அடைந்திருக்க...
ஆக அவர் என்னைத்தான் ஒதுக்கி வைத்து விட்டார் என அவனுக்கு புரிய ... விரக்தியின் உச்சிக்கே போய்விட்டான் அரவிந்த் .. டாக்டர் அவனை கொண்டு வந்து விட்ட இடம் ... ஒயின் ஷாப் கவலையை மறக்க குடிங்கள் என்று சொன்ன புண்ணியவான் எவனோ தெரியவில்லை... எதையும் யோசிக்காமல் நேரே போய் தன் மனக்கவலை மொத்தத்தையும் மதுவில் தீர்த்துவிட நினைத்தவன் குடித்து வெறித்து வெளியே வந்தான்..
மகனை எப்படி சமாதனம் பண்ண? பழைய படி தன் மகன் தன் முதுகில் தொங்க மாட்டானா? என ஏக்கமாக இருந்தது ..
அதெல்லாம் நான் வச்ச அயிரை மீன் குழம்பு என் மகனுக்கு உசுரு தின்னா சரியாகிடுவான்' என அத்தனை வேலை சுமையிலும் , வெகு நாள் கழித்து மகனுக்கு குழம்பு வைத்து காத்திருக்க அவனை காணவில்லை ...
'ஒரு வேளை நான் இருக்கிறதுனால வரல போல வயலுக்கு போயிட்டு வருவோம் சாப்பிட்டா என் மேல கோவம் போயிருக்குன்னு அர்த்தம் .. "
"சாப்பிடுவானா?? அதெல்லாம் சாப்பிடுவான் சண்டை பிடிச்சா எத்தனை நாள் அயிரை மீன் குழம்பு வச்சி சரிக்கட்டி இருக்கேன் என தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டான்...
வயலுக்கு வெற்று வறிற்றோடு துரை நடக்க ஆரம்பித்து விட்டான் மகன் சாப்பிடாமல் தின்ன மனசு இல்லை ...
வயலில் பாத்தி கட்டி கொண்டு நிற்க, அவன் மணிக்குயில் போனில், இருந்த வருத்தம் போன இடம் தெரியவில்லை ... உடனே தூக்கி கொண்டு ஆலமர நிழலில் போய் அமர்ந்தான்...
"என்னடி புருஷன் நியாபகம் இப்பதான் வருது போல ??
"அங்க இப்ப கூட வரல போலவே...
"ம்ம் இருக்கு இருக்கு துர்கா இருப்பாளேன்னுதான் போன் போடல எங்க அவ .. வெறும் துண்டை பூமித்தாய் மீது விரித்து துரை படுக்க ...
"அவ இப்பதான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்னு போறாய்யா ..
"ஓஓஓ உடனே புருஷன் ஆசை வந்துடுச்சி போல ...
"ம்ம் அது எப்பவும் இருக்கு ...
"ஆசையில முரட்டு தனமா ஏறி விழுத்துட்டேன் ... வலி எதுவும் இல்லையே" .. மனைவியிடம் கவுச்சை பேச்சு தாமபத்தியத்தை இன்னும் அழகாக்கும் என்று கண்டு கொண்ட இருவரும் பச்சை தமிழுக்கு வித்திட்டனர்..
"வலிக்கலேன்னு சொல்ல மாட்டேன், வலிதான் ஏன்யா அப்படி ஏறி, ப்பா நடக்க முடியல தொடை உரசினா வலிக்குது ..."
"அப்படியா??" பொய்யாக பாவம் கொண்ட கெண்டை மீன் தூண்டிலில் தானாக போய் சாக துயில் எழுந்து கூரை போட்டது ...
"ஆமா
"வலிக்கு மருந்து என்ன வேணும்
"அது ஊஊஊ ..
"தனியாத்தான் இருக்கேன் சொல்லுடி...
"வலிக்கு மருந்து இன்னொரு மருந்து தான் ...
"என்ன மருந்து அதையும் நீயே சொல்லு உன் புருஷன் இந்த விஷயத்துல கொஞ்சம் தத்தி ..
"ம்க்கும் சும்மா நானும் பெரிய மனுசன் சூதானமா நடப்பார்ன்னு பார்த்தேன், யானை புகுந்த கரும்பு தோட்டம் போல முன்னும் பின்னும் அசைய முடியல என்று சலித்தாலும் மறுமுறை அவனை தொடை நடுவே சுமக்க ஆசையில் நீர் ஊற்றடித்தது..
ஆணுக்கு , நாற்பதுக்கு மேல ஆசை இருக்காது , முப்பது மேல பெண்ணுக்கு உணர்வு செத்து விடும் என்பது எல்லாம் பொய் .. நாற்பத்தில் ஆணுக்கு நாய் குணமும் அதோடு கட்டிலில் பெண் தேவையும் அதிகரிக்கும்.. தன் உணர்வுகளை கொட்ட அதிகம் மனைவி தேவைப்படுவாள்... திருட்டு மாங்காய் போல மனைவியை ரூசி பார்க்க அலைவார்கள்... பெண்ணுக்கு முப்பதுக்கு மேல் உணர்வுகள் கூடும் ... தன் கணவன் மோகம் அப்போது ரெண்டாம் கட்டம் துவங்கும் இங்கே இருவரும் நடுநிலை வயதில் சேர்ந்திருக்க , ஆசையும் மோகமும் போட்டி போட்டு வந்தது ....
"நான் சூதானமா நடந்ததாலதான் எழும்பி நடக்க முடியுதுடி "
"இல்லேன்னா..
"படுக்கையை விட்டு எழும்பவே முடியாது வர்றியா மாமா திறமையை பார்க்க..
"சீசீ போய்யா ...
"சொல்லு வலிக்கு ஏதோ மருந்து கேட்டியே அது என்ன ? தென்னை உரம் வைக்காது உயர்ந்து நின்றது ... அதை மெல்ல தடவி கொடுத்தான் மனைவி இப்போதே வேணும் போல ஆசை தோன்றியது ... இங்க வந்தா நல்லா இருக்கும் என்று முகம் கருத்து போனான் ..
"அது உங்க எச்சில் பதிய முத்தம் தந்தா வலி போயிடும்யா
"எனக்கும் கிடைக்குமா ?
"தர நான் தயார் தான் ..
"வாங்க நானும் தயார்தான் ...
"அப்பறம் சாப்பாட்டாச்சாய்யா.. மகள் வந்து விட்டாள் என புரிந்து
"ஆமா அயிரை மீன் குழம்பு வச்சி சாப்பிட்டேன் .
"பொய் குரல் சாப்பிட்டது போல இல்ல ...குரலில் தன் நலன் கணித்த மனைவியை நேசிக்க இன்னொரு ஜென்மம் கேட்டான் ...
"நான் சாப்பாடு ஆக்கிட்டேன் கொண்டு வரவாய்யா... "
"அது
"அரவிந்த் தம்பி கண்ணுல படாம வர்றேன்யா" அவள் குரலில் ஏக்கமும் பசியும் அவனை சரி சொல்ல வைக்க
"துர்கா அவருக்கு சாப்பாடு கொடுத்துட்டு வர்றேன் கதவை பூட்டிக்க "என்று தனக்கும் சேர்த்து சாப்பாட்டை எடுத்து கொண்டு வேகாத வெயிலில் ஓடும் தாயை துர்கா நிம்மதியாக பார்த்தாள்...
இணைகள் இருவருக்கும் விருப்பம் எனில் புனிதத்தில் ஒன்றுதான் காமமும், காதலும் ....
17 வனம் சேர்ந்த ஐவணம் !!
கூடலுக்கு பழகாத உடல் வலி எடுத்தது .. துரை கிராமத்து காளை ஏர் பிடித்த கை அவள் பட்டு தேகம் சும்மா விடுமா உழுது விட்டான் சுக வலிதான்..காலம் முழுக்க அவனில் கரைய ஆசை தான் .... அவன் குரலில் மெல்லிய வருத்தம் தாங்க வில்லை .. அவனுக்கு வலி நிவாரணி இனி அவள்தானே உடனே சோற்றை எடுத்து கொண்டு ஓட்டமும் நடையுமாக வயல் வரப்பில் ஏறி நடக்க ஆரம்பித்தாள்... நேற்று வரை பூமித்தாய் மீது பாசம் உண்டு பக்தி இல்லை.. ஆனால் நெஞ்சில் தொங்குவது விவசாயி கட்டிய தாலி ஆயிற்றே செருப்பை கையில் தூக்கி கொண்டு நிலத்தின் புனிதத்தை காப்பாற்ற பழகி கொண்டாள்.. தூரத்திலேயே கால் சூடு தாங்காது நின்று நின்று வரும் மருதாணியை துரை பார்த்துவிட
"அட கோட்டி எதுக்குடி செருப்பு போடாம வர்ற காலு வேக போகுது என்ற் துரை அவளை நோக்கி ஓடி வர..
"நீங்க போடலையே
"ப்ச் நான் பழகினவன்டி"..
"நானும் பழக்கிறேனய்யா... என்றவள் பேச்சில் சிந்தை அவளை மட்டும் பின்தொடர சுற்றி ஆள் நடமாட்டம் பார்த்தான்.. யாரும் இல்லை என்றதும் அவளை இடையில் கை விட்டு கையில் குழந்தை போல தூக்கி கொள்ள ...
"இதுக்குதானடி ஆசைப்பட்ட
ம்ம் என்றவள் அவன் நெஞ்சில் முகத்தை வைத்து அவனை அண்ணாந்து பார்க்க... குனிந்து அவள் உதட்டில் நாவை நீட்டி எச்சில் பண்ணியவன்..
"செம பசி ..
"அதான் சோறு கொண்டு வந்தேன்
"நான் இந்த பசி சொன்னேன் "என்று இடையில் பிடித்திருந்த கையை நகர்த்தி பசி கொண்ட இடத்தை கையில் அமுக்கி காட்ட ...
"தெரியும் அதான் வந்தேன் ..,என்ன தேடிருறீங்கன்னு தூது வந்திச்சு" அவளே ஏந்தி இளம் பஞ்சை அவன் பிடிக்க வசதியாக கொடுக்க குனிந்து துருத்திய மேகத்தில் முத்தமிட்டவன்...
"என் மனசு என்ன தேடுதுன்னு புரிஞ்சிகிட்ட போல..
"ஆமா என்,மனசு என்ன சொல்லுது சொல்லுங்க பார்ப்போம்..
"வலிக்கு மருந்து நாக்கு வச்சி எப்ப போடுவேன்னு கேட்குது" என்றவன் விரல்கள் வசதியாக மனைவி சோளி உள்ளே போய் இரவில் முத்து எடுத்த முந்தானை மறைவு போய் முத்தை தேடியது
"இல்ல ..
"ஆமா
"இல்ல ...
"ஓஓ அப்ப என் வலிக்கு உன் உதட்டை வச்சி வலி போக்க நினைச்சியோ.."
"அதுவும் இல்ல..
"அதுதான் நீ பொய் சொல்லாத..
"யோவ் நீதான பொய்யா சொல்ற, போய்யா என்று திமிரி ஓட போக அவளை கையிலிருந்த உணவை வாங்கி மரத்தில் மாட்டியவன்..
"முதல்ல வலிக்கு மருந்து அப்புறம் சாப்பாடு" என்று அவளை பார்த்து காதலையும் காமத்தையும் குலைத்து சிரிக்க ..
"முடியாதுப்பா யாராவது வந்திட போறாங்க
"மோட்டார் ரூம்ல வசதியா கட்டில் இருக்கு அங்கன யாரும் வர மாட்டாங்க வா ..
"ம்ஹூம்" என்றாலும் அவளுக்கும் இப்படி கள்ள ருசி காண ஆசைதான்...
மோட்டார் ரூமை திறந்து, பாதி உடைந்த நிலையில் கிடந்த கயிற்று கட்டிலில் மருதாணியை தூக்கி போட... அவள் சேலை முட்டுக்கு மேல் ஏறி , தங்க கொலுசு பாதத்தை இன்னும் அழகாக்க முந்தானை விலகி மைனாக்கள் கூர் மூக்கோடு அவன் கடிக்க ,வெளியே பிதுங்கி கிடக்க .. அவள் கிடக்கும் அழகை ரசித்தபடி துரை அவளை தேடிய ஒற்றை மலரை வருடி காட்ட ... சிவந்து நின்ற செவ்வானம் கண்டு மருதாணி முகத்தை பத்து விரல் நடுவே மறைக்க .. துரை ஆசை அலைமோத கதவை வேகமாக போய் அடைத்து விட்டு வந்தவன்.. சத்தம் இல்லாது மருதாணி விரல்கள் பிடித்து ஆடை இன்றி அவளை தேடும் அவனும் , அவன் நரம்பும் அவள் இதழ் தேடி நகர்வலம் வருவதை கண்டு மருதாணி சிக்கென்று முகத்தை மூடி கொள்ள , துரையோ அவள் தலை பக்கம் வந்து நின்றவன்..
"ரெண்டு நாள் தாங்குற மாதிரி நல்லா சப்பி எடுத்து விடுடி" .. என்று கிசுகிசுக்க மருத்தாணி விரல்களை விலக்க ... அவன் இதழ் தேடி இன்பச்சாறல் தூவ வந்த புங்கை மரத்தை விரலில் மருதாணி பிடிக்க
ஆஆஆஆஆ அவளை தலையை ஏந்தி தூக்கிய துரை அவள் இதழில் ஏழுதுகோல் பழக்க மெல்ல திணிக்க
"ம்மாஆஆஆ முனங்கி மருதாணி மெல்ல நாவை சுழட்டி சுவைக்க தொடங்க...
ஆஆஆஆஆஆ அவன் தாப வியர்வை அவள் நெஞ்சிக்குழியில் விழ, மெல்ல உடலை வளைத்து அவள் வேலைக்கு தடை செய்யாது கட்டிலில் கிடந்த மருதாணி தொடை தேடி தலைகீழ் இலக்கமாக துரை ஊர்ந்து போக.. அவள் வெட்கம் கொண்டாலும் இந்த தேடல் அவனும் அவளும் ரசித்து ருசித்து முக்தி பெற வேண்டியது ... அவனை அன்றி அவள் ஆசை யார் நிறைவேற்ற முடியும்? கால்கள் துரை சிரசு உள்ளே போக இடம் கொடுத்து நகர்ந்து விட ...அவன் ஆசையில் மன்மத வாசத்தில் புன்னை மரம் அடர்ந்த பெண் பூமி பளபளத்து ஏற்கனவே பண்ணிய கூடலில் சிவந்து கிடக்க துரையின் இச் இச் முத்தத்தில் சாப விமோச்சனம் பெற்றது ...
ஆஆஆஆஆ அவன் உதடு உள்ளே இடம் தேட தேட நாவில் நாரை உயிர் பெற்றது , அவள் நாவின் ரிதம் அவனை கண் சொக்க செய்ய.. விரல் மெல்ல இறுகிய பாதையில் இடம் தேடி வழி அமைத்து பிடித்து கொள்ள அவன் விரல் முந்திரி விதை தேடும் சுகத்தில் இவள் ரசனையாக விளையாட... அவன் நாவு சொரசொர என்று கற்றாழை காட்டுக்குள் நுழைந்து கொள்ள ...
ஆஆஆஆஆ யோவ் ம்மா ஸ்ஆஆஆஆஆ
"எப்படி இருக்குடி ??"
ம்ம் ம்மாஆஆ தூக்கி ஏந்தி கொடுத்து அவன் பேச்சை நிறுத்த ... நித்திலம் அவன் எச்சில் பட்டு துடித்தது.. அவள் கைகள் அவன் தொடையை வலிக்க பிடித்து கொண்டு உடலை முறுக்கி தள்ள மீசை ஈரமாக எழும்பிய கணவன் முன் , தாலியும் கொலுசும் மட்டும் பளபளக்க மனைவி கயிற்று கட்டிலில் கையை விரித்து அழைக்க , துள்ளி அவள் மீது ஏறிய துரையின் அதிரடி ஆட்டத்தில் கட்டில் நொடிந்து விழுந்தது ...
துரை கையை நெட்டி முறித்து உடலை வளைக்க..மருதாணி உடைந்து கட்டிலை சிவந்து போய் பார்த்து கொண்டே கூடலில் கலைந்த சேலையை சரி செய்து உடுத்தியவள்... அவன் ஆடை அணியவும் ...
"இப்ப சாப்பிட போவோமாய்யா..
ம்ம் வா மனசை லேசாக்கி அவனுக்கு சாப்பாடு பரிமாறி அவன் பசியாறிய பின்பு ...
"போகவாய்யா..
"இரு கொண்டு போய் விடுறேன்
"வேண்டாம்ய்யா தம்பி ஊர்ல தான் இருக்காக அவுக சரியாகும் வரை இப்படியே இருப்போம் ... நான் குறுக்கால நடந்து போய் பஸ் பிடிச்சு போயிடுறேன்..
"ம்ம் சரிடி பார்த்து போ என மனைவி மறையும் வரை பார்த்து விட்டு துரை வயலில் இறங்கி வேலையை செய்ய ஆரம்பித்தான்....
தன் வீட்டுக்கு போன அரவிந்த் , அயிரை மீன் குழம்பு பார்க்கவும்..
தன் தந்தை மீது ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் ஒட்டி கொள்ள ...
நான்,சண்டை போட்டா இவரும் சாப்பிட மாட்டாரே இன்னும் தன்,தந்தை மாறலை.. நான்தான் வீண் கோவம் கொள்கிறேன் என நினைத்து வயல் நோக்கி அரவிந்த் வர ... மிஸ்டர் ராவுவை அமேசானில் ஆர்டர் போட்டு வாங்கி வைத்திருக்கும் துரை அன்ட் கோவை கண்டு கொதித்து போனான்..
மருதாணி சோற்றை உருண்டை பிடித்து துரை கையில் வைக்க அவன் ஒரு பிடி பிடித்து கொண்டிருக்க.. தன் தந்தை தன்னை விட்டு தொலைவில் போவது போல அரவிந்துக்கு தெரிய குறைந்த போதையை மறுபடி ஏத்த போய் விட்டான் ...
துரை வயலில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வர .. ஹால் சோபாவில் அரவிந்த் குப்புற கிடந்தான்.. ஓடி போய் கிச்சனில் சாப்பாட்டு பாத்திரத்தை திறந்து பார்க்க , வைத்து விட்டு போனது போல இருந்து .. துரைக்கு ரத்த கண்ணீர் வந்து விட்டது ..தன்னை இந்த அளவு வெறுத்து ஒதுக்க நான் என்ன பாவம் செய்தேன் புரியவில்லை .... தன் மீது தான் தவறோ? என்று உறுத்த ஆரம்பித்தது .. இவனை மறந்து தானாக ஒரு முடிவு எடுத்து மருதாணி கழுத்தில் தாலி கட்டியது தவறோ என்று ஒரு நொடி தடுமாறினான்..
பாவம் அவளும் என்ன செய்வா? இந்த பய புரிஞ்சிக்காம பண்றானே .... முதல் முதல் குடித்து தலைக்கு போதை ஏறி குடலை பிரட்டி கொண்டு வர
உவாக் ,உவாக் என அரவிந்த் வாந்தி எடுக்க.. துரை ஓடி போய் அர்விந்த் முதுகை தடவி கொடுத்து ... அவன் தலையை பிடித்து விட்டவன்..
"ஏன் சாமி என்னய்யா இது புது பழக்கம் .. என்ன துரையை விட்டு திமிரி விலகிய அரவிந்த்
"நீ புதுசு புதுசா பண்ணும் போது நான் பண்ணினா ஒன்னும் தப்பு இல்லை
"என்ன சாமி சொல்ற , நீ சொன்னது போல தானய்யா நான் இருக்கேன் ..
"பொய் பொய் ... எல்லாம் என் கண்ணால பார்த்தேன் ... அவ கூட கோவிலுக்கு போறது என்ன கடையில போய் நகை எடுத்து கொடுக்கிறது என்ன.. அவ மகளுக்கு ஆட்டோ பிடிச்சு அனுப்பி வைக்கிறது என்ன இது எதுவும் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா ... இங்க வந்து என்கிட்ட பாசமா இருகிறது போல நடிக்காத என்று அரவிந்த் கத்த ...
"அரவிந்த்
"ஓஓஓ சாமி அரவிந்த் ஆகியாச்சி, இனி யாரோ ஆக நாள் ஆகாதுல்ல.. நான்தான் உசருன்னு சொன்ன இப்ப எங்க போச்சு உன் பாசம் எல்லாம் ஆக என்கிட்ட இத்தனை நாள் நடிச்சிருக்க அப்படிதான?? வாய்ப்பு கிடைச்சது பயன்படுத்திக்கிட்ட ச்சை உன்ன போய் பெரிய மனுஷன்னு நினைச்ச என்ன சொல்லணும்.... "
"என்னடா ஏதோ போல பேசுற" .. துரைக்கு கண்கள் கட்டி விட்டது மகன் இப்படி எதிர்த்து நின்று வலிக்க செய்வான் என கனவிலும் நினைத்திருக்க மாட்டானே ..
"நானா ஏதோ போல பேசுறேன் .. நீ தான் என்ன விட அந்த ____ போதும்னு..
"அரவிந்த் இஇஇஇஇஇஇஇஇஇ" என்ற துரை காட்டு கத்தலில் அரவிந்த் கூட ஒரு நொடி பயந்து விட்டான் துரை கண்கள் சிவக்க தன் மகனை பார்த்தவன்..
"அவளை அசிங்கமா பேசின தொலைச்சு புடுவேன் படவா , உனக்கு அவ அம்மா இல்லாம இருக்கலாம் ஆனா அவ என் பொஞ்சாதி..என் தாலிக்கு சொந்தக்காரி அவளுக்கு மரியாதை குறைவை நான் அனுமதிக்க மாட்டேன்... அது என் மகன் நீயா இருந்தாலும் சரிதான்.. இன்னொரு வாட்டி அவளை மரியாதை இல்லாம பேசின நடக்கிறதே வேற ... தந்தையின் முதல் அதட்டல் அரவிந்தை வெறிக்க வைக்க அவன் ஆடாத விழி கண்டு துரை அவனை எட்டி அணைத்து கொள்ள தகப்பன் அணைப்பில் அடங்கி நின்ற மகன் முதுகை தடவி விட்ட துரை
"ஏன் சாமி மாறி போன ..இந்த அப்பா வேண்டாமா சாமி
"உனக்கு இந்த மகன் வேண்டாம போனேனா துரை ..
"ஏன்யா இப்படி பேசுற நீதான்யா என் உசுரு
"பொய் அது நேத்து வரை, இன்றைக்கு உசுர நாலா பங்கு போட்டுட்ட உனக்கு நான் ரெண்டாம் பட்சம் அதான், அவங்கள பேசினதும் நீ என்ன அடிக்க கூட தயாரா இருக்க.. போப்பா நீ எனக்கு வேண்டாம் என்று ஊடல் கொள்ளும் குழந்தையை என்ன செய்ய புரியாது துரை கலங்க..
""என்ன ராசா பண்ணனும்
"அவங்களை எங்கேயாவது போக சொல்லுங்க நீ நான் மட்டும் பழைய படி சந்தோஷமா இருக்கலாம் ஏக்கமாக அரவிந்த் தன் தந்தையை பார்க்க ..
"முடியாது ராசா நேத்து வரை அவ என் தாலிக்கு சொந்தக்காரி இப்ப இந்த துரைக்கு உரிமைக்காரி அவளை விட முடியாது "என்ற தந்தையை ஓங்கி தள்ளிய அரவிந்த்
"அப்ப என்ன விட்டிரு , என் சொத்தை பிரிச்சு கொடு நான் போயிடுறேன் "என்ற மகனை அதிர்ந்து துரை பார்க்க
"மொத்தமாக உறவை வெட்டி விடு, நான் உன் மகன் இல்லைன்னு ஊர் மத்தியில பந்தத்தை முறிச்சி விடு ...
"சாமிஇஇஇஇஇஇ" ஆறடி உடல் நடுங்கி போனது மகன் பேச்சில் ...
"நாளைக்கு பஞ்சாயத்தை கூட்டி நான் சொன்னது நீயே செஞ்சா, உனக்கு மரியாதை.. இல்லை நான் பஞ்சாயத்தை கூட்ட வேண்டி வரும் என்று போகும் மகனை பார்த்து கொண்டே துரை பொத்தென்று சோபாவில் அமர்ந்தான்..
பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது எத்துனை உண்மை ...
இங்கு பெறாத மனம் உடைந்து கிடந்தது ..
18 வனம் சேர்ந்த ஐவணம் !!
"யக்கா மருதாணி அக்கா" காலையில் முற்றம் தெளித்து கோலம் போட்டு கொண்டிருந்த மருதாணி முன்னே அவளோடு வேலை பார்க்கும் பெண் மூச்சு முட்ட வந்து நின்றாள் ...
"என்ன தேவி எதுக்கு இப்படி மூச்சை பிடிச்சி ஓடி வர்ற ....
"தெய்வமே இதை எப்படி உன் கிட்ட சொல்லுவேன்... துரை அய்யா, துரை அய்யா இருக்காகல்ல
"என்னாச்சிடி அவருக்கு மருதாணிக்கு உடல் பதறி போனது... பயத்தில் உடல் நடுங்கியது மூளை எங்கு எல்லாமோ சுற்றி வந்து விட்டது ...
"சொல்லி தொலைடி ,அவருக்கு என்ன ஆச்சி ..
"அவருக்கும், அவுக மகனாருக்கும் சண்டை போல.. அவுக மகன் காலைமற பஞ்சாயத்தை கூட்டி அவுக அப்பார பஞ்சாயத்துக்கு வர சொல்லி தண்டோரா ஊர் புல்லா போடுறாவ என்றதும் மருதாணி உடைந்து போய் அருகே உள்ள தூணை பிடிக்க..
"என்ன பிரச்சனை தேவி?
"எல்லாம் உன்ற பிரச்சனைதான் போல , உன்ன ஒதுக்கி வைக்க சொல்லி அரவிந்த் சண்டையாம்..
"அச்சோ !!
"அதோட , சொத்தை பிரிச்சு அவனுக்கு கொடுத்து தகப்பன் மகன் உறவையும் ஊர் நடுவுல வெட்டி விட சொல்லி பஞ்சாயத்தை கூட்டி இருக்காங்க போல" என்றதும் மருதாணிக்கு துக்கத்தில் தொண்டை அடைத்து விட்டது ...
"அய்யோ!! என் குலசாமி இதை எப்படி தாங்கிச்சோ தெரியலேயே கடவுளே!!" என்று தன்னை மறந்து மருதாணி அழ துர்காவும் கேட்டு கொண்டு தான் இருந்தாள்..
"ம்மா வாங்க அங்க போய் பாக்கலாம்..
"இல்லடி நாம போனா பிரச்சனை பெருசு ஆகிட கூடாது..
"இப்ப அவருக்கு உங்க அரவணைப்பு தேவை வாங்க ..
"இல்ல என்னால பிரச்சனை பெருசாகிட்டா..
"ப்ச் , அதெல்லாம் ஆகாது, துரை ஆங்கிள் பார்த்துப்பார் வாங்க என்று ஆட்டோ பிடித்து மருதாணியை அழைத்து கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடம் நோக்கி வந்தார்கள்...
ஊர் பஞ்சாயத்து நடைபெறும் இடத்தில் ஊரே திரண்டு நின்றது .. துரை ஒருபக்கம் , அரவிந்த் ஒருபக்கம் என நின்றனர் ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அந்த அளவு அமைதி ...
துரை துவண்டு போன பார்வையோடு குமரனோடு தெனாவெட்டாக நின்ற மகனை உணர்வு இல்லாத கண்களோடு பார்த்து கொண்டிருந்தார்...
"யய்யா துரை உனக்கு இந்த நிலை வரும்னு நாங்க யோசிக்கல சாமி , உனக்கு நல்லது செய்றோம்னு நாங்களே உன் சந்தோஷத்தை கெடுத்து புட்டோம் போல என்று பெரியவர்கள் வருந்த ....
"துரை முதல்ல நீ இங்கன வந்து உட்கார் சாமி குற்றவாளி போல கையை கட்டி நீ நிற்கிறது பார்க்க முடியல.... ""
"பஞ்சாயத்துன்னு வந்து பிறகு எல்லாருக்கும் ஒரே மரியாதை தான் பெரியவரே நான் நிற்கிறேன் விசாரிங்க" ... அவன் குரலே உடைந்து போய் வந்தது ... காலை தண்டோரா அடிக்கும் போதுதான் துரை விஷயம் அறிந்தான்.... அவன் போதையில் பேசுகிறான் காலை சரியாகி விடுவான் என விட்டிருக்க ,. காலையே பஞ்சாயத்தை கூட்டும் அளவு மகன் போகவும் அவன் வேதனையை சொல்ல வார்த்தை வேண்டுமா ? தன் மகனை தேடி போக அறையில் அவன் பொருட்கள் எதுவும் இல்லை.. நைந்து போனது மனம் ..
"போய்விட்டானா என்னை விட்டு, என் வனத்தை விட்டு போய்விட்டானா..
ஐயகோ!!இதை எங்கனம் தாங்கிக் கொள்வேன் ... இன்னுமா ஜீவன் என் நாசியில் சுற்றுகிறது என்று கதறியது மனம் ...
"என்ன பிரச்சனை அரவிந்த் ..என அவனை விசாரிக்க ஆரம்பிக்க
"என் சொத்தை பிரிச்சு தர சொல்லுங்க ..
"அதுக்கு இப்ப என்ன அவசரம் தம்பி??
"நேற்று வரை அந்தாள் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது .. ஆனா இப்ப இல்லை ..எப்போ அந்த மருதாணி கூட கல்யாணம் ஆகி போச்சோ , இனி அவளுக்கு பிறக்க போற பிள்ளைக்கு தான சொத்தை எல்லாம் கொடுப்பார், நான் தெருவுல நிற்க முடியாது என் பங்கை தர சொல்லுங்க நான் இந்த ஊர் பக்கமே வரல ....எங்கேயாவது போயிடுறேன்.... "
தன் மகன் முதல் வார்த்தை அப்பா என்ற போது அடைந்த உவகை.. என் மகன் பேசுறான் என ஊருக்கே உணவு போட்டு மகிழ்ந்தான் இன்று பேசுகிறான் வலிக்க வலிக்க பேசுகிறான் ...துரை இதழ் இப்போதும் வலியில் சிரித்தது ...
"நீயே பிராது சொன்னா சரியா இருக்குமா, துரை மனசுலயும் என்ன இருக்குன்னு தெரிய வேண்டாமா?? அவன் ஒன்னும் மத்தவங்க போல கிடையாது இன்னொருத்தி வந்த உடனே உன்னை தூக்கி போட்டுட்டு அவ பின்னாடி போறதுக்கு..
" நானும் அப்படித்தான் நினைச்சேன் ஆனா நடக்கிறது எதுவும் எனக்கு சரியா படல ,, நான் சொன்னத நீங்க செய்யலைன்னா சட்டப்படி பார்த்துக்கறேன் .."என்றதும் குமரனுக்கு ஒரே புன்னகை அவனுக்கு கீ கொடுப்பதே அவன் தானே, தன்னை அசிங்கப்படுத்திய துரையும், மருதாணியும் நிம்மதியாகவே இருக்கக் கூடாது அதற்கு ஆயுதமாக அவன் எடுத்தது அரவிந்த்.. அரவிந்தும் எடுப்பார் கைப்புள்ளை போல ஆட தெரியாமல் ஆடினான்..
"இப்படி வெட்டிக்கிட்டு நிற்கிற அளவுக்கு துரை ஒன்னும் தப்பு செஞ்சது இல்லையேடே... தப்போ சரியோ ..கல்யாணம் முடிஞ்சிடுச்சி .. இனி மருதாணி தானே அவன் பொண்டாட்டி.. நீ கொஞ்சம் அனுசரிச்சு போக வேண்டியதுதானே
" நான் எதுக்கு அனுசரிச்சு போகணும் .. அவர் எக்கேடோ கெட்டுப் போகட்டும் அவங்க கூட எப்படியும் வாழ்ந்துட்டு போகட்டும்... எனக்கானதை பிரிச்சு கொடுங்க, அதோட இவர் உறவையும் இங்கேயே முடிச்சு விடுங்க ... அடமாக நின்றான் ..
"என்ன வார்த்தை பேசுற அரவிந்த் , துரை சாதாரண தகப்பனாடா உன்னைய உயிருக்கு உயிரா வளர்த்தவர்டா .. அவன் ஆடிப் போய் நிக்கிறான் இப்படி எல்லாம் பேசி சங்கடப்படுத்தாத, குடும்பத்து பிரச்சனையை வீட்டுக்குள்ளேயே முடிக்க பாருங்க முதல்ல கிளம்புங்க என்று ஒரு பெரியவர் பேச..
"யோவ் அவன்தான் சொல்லிக்கிட்டு இருக்கான்ல்ல வெட்டிவிடுன்னு சும்மா வளவளன்னு பேசிகிட்டு இருக்கீங்க என்று குமரனும் அவன் கூட இருந்தவர்கள் ஆதரவு கரம் நீட்ட
"ம்ம் வெட்டி விட முடியுமா, முடியாதா ...என்றான் அர்விந்த் கோவமாக
'துரை நீ என்னைய்யா சொல்ற ,,
"சொத்த வேணும்னா விட்டுக் கொடுக்கிறேன் உறைவை வெட்டிவிட முடியாது "என்ற துரை கனீர் குரலில் அரவிந்த் சட்டென்று தன் தந்தையை நோக்கி பார்வையை செலுத்தினான்..
"என்னைக்கா இருந்தாலும் இந்த சொத்துக்கு அதிபதி நீதான் சாமி, நீயே வச்சுக்கோ.. உன்ன விட இந்த சொத்தும் பணமும் எனக்கு முக்கியமில்லை ஆனா இந்த அப்பாவ விட்டு மட்டும் போயிடாத சாமி, நீ போனா , என்ன விட்டு மூச்சு போய்விடும்" என்று துரை அரவிந்தை கையெடுத்து கும்பிட்டு விட்டான்... பார்த்த அத்தனை பேருக்கும் பதறி போனது... மருதாணி அப்போது தான் வந்து இறங்கியவள் .. தன் புருஷன்.. மகன் பாசத்துக்கக கையெடுதுது கும்பிடுவதை கண்டு குமுறி முந்தானை கொண்டு வாயை மூடி கொண்டாள்..
"நான் உன்ன விட்டு போகல" என்ற அரவிந்த் பதிலில் மருதாணி துரை முகத்தில் நிம்மதி பரவ , அடுத்த நிமிடம் அதையும் தவிடு பொடியாக்கினான்...
"நான் உன்ன விட்டு போகல , போகாம இருக்கேன் ஆனா நீ அந்த மருதாணியோட பந்தத்தை ஊர் நடுவே முடிக்க முடியுமா ? ஒன்னு மகன் இல்லை உன் புதுப்பொண்டாட்டி யார் வேணும்" .. என்ற மகனை பார்த்து பெருமூச்சு விட்ட துரை ...
"ரெண்டு கண்ணுல எது வேணும்னு கேட்டா நான் என்ன முடிவு சொல்ல சாமி...
"என்னைவிட அவங்க தான் உனக்கு முக்கியமா?
"அதுக்கு பதில் நான் சொல்ல அவசியம் இல்ல நீயும் வேணும் அவ்வளவுதான் ...
"எனக்கு நீ வேண்டாம் ..உன்ன அப்பான்னு சொல்லவே எனக்கு பிடிக்கலை .. யோவ் என்னய்யா பார்த்துட்டு இருக்கீங்க மகன் செத்தா என்ன காரியம் பண்ணி முடிப்பீங்களோ அதை பண்ணி உறவை முடிச்சி விடுங்க "என்று கலச நீரை கை காட்டினான் ... யாரும் அதை தூக்கி துரை கையில் கொடுக்க தயாராக இல்லை ...
ஊர் மத்தியில் ஒரு உறவை முடிக்க வேண்டும் என்றால் அந்த உறவுக்கு சொந்தமானவர் இறந்தால் என்ன சம்பிரதாயம் செய்ய வேண்டுமோ அதே போல கலசத்தில் நீரை கொடுத்து அந்த நபரை நடுவில் விட்டு மூன்று முறை சுத்தி வந்து பானையை உடைத்து போக வேண்டும்...
அரவிந்த் பானையை எடுத்து கொண்டு வந்து துரை கையில் திணித்து
"ம்ம் சுற்று என்க ..
"ஒரு தகப்பன் உசுரோடு இருக்கும் போது பார்க்க கூடாதது தன் புள்ளைங்க சாவை .. என்னால இது முடியாது சாமி..உனக்கு தானய்யா இந்த அப்பா வேண்டாம் நீயே நான்... நான் செத்து போயிட்டேன்னு நினைச்சு கலசத்தை உடைச்சிடு" என்று கூறி முடிக்க ,. கண்ணீர் வடியாத கண்கள் இல்ல ... சில நேரத்தில் ஆத்திரம் கண்ணை மறைக்கும் அப்படித்தான் அரவிந்தும் ஆத்திரத்தை தலையில் சுமந்து பொல்லா காரியம் செய்ய துணிந்தான் ... துரை தலையில் நீரை ஊற்றி நடுவே நிற்கவிட... மருதாணி தலையில் அடித்து கொண்டு கதற ஆரம்பிக்க துரை பார்வை தன்னை சுற்றும் மகனையே பார்த்தது...
அய்யோ அய்யோ!! என் கண்ணு முன்னால இந்த கொடுமையை பார்க்க வச்சிட்டியே , என்று மருதாணி சத்தம் போட்டு அழ .... துர்காவுக்கு அரவிந்த் செயலில் ச்சை என்றாகி போனது ..
"இவன் எல்லாம் ஒரு மனுசனா ... இவன் எல்லாம் பாசத்துக்கு ஏங்கி சாகணும்" என்று உணர்ச்சி செத்து மரமாக நின்ற துரையை பாவமாக பார்த்தாள் ...
"சொத்து பாதியை பிரிச்சி இதுல எழுதி இருக்கேன் கையெழுத்து போடு "என பத்திரத்தை அரவிந்த் துரை முன்னால் நீட்ட, மறுக்காமல் துரை கையெழுத்து போட்டு கொடுக்க ...
"நீயும் போடு அரவிந்த் என்றதும் த. அரவிந்த் என்று முத்தாக கையெழுத்து போட துரை இதழ்கள் சிரித்தது ...
உறவை அவனால் கூட வெட்ட முடியவில்லை என்று கூறியது அவன் கையெழுத்தில் இருந்த "த" என்ற தகப்பன் அடை மொழி .... பத்திரத்தை எடுத்து கொண்டு நகர போன அரவிந்த் தடுக்கி விழ போக, துரை வேகமாக அரவிந்தை பிடித்து கொண்டு
"பார்த்து போ சாமி... என்று அவன் தோளை பிடிக்க... அரவிந்த் துரையை தட்டி விட்டுவிட்டு மருதாணியை முறைத்து கொண்டே போய் விட ...
"தலையில் வடிந்த நீரோடு துரை போகும் மகனையே பார்த்து கொண்டு நிற்க ... ஓடி வந்த மருதாணி தன் முந்தானை சேலை எடுத்து அவன் தலையை துடைத்து விட்டவள்
"ஏன்யா நான் உனக்கு என்னய்யா செஞ்சிட்டேன் என்ன பாவி ஆக்கி புட்டியே.. பேசாம என்ன தலை முழுங்கிட்டு அவன் கூட நிம்மதியா"" என்றவள் வாயை பொத்திய துரை ..
"அப்படி செஞ்சிருக்கலாம்னா அவன் முதல் நாள் சண்டை போட்ட அன்றைக்கே உன்ன விட்டு கொடுத்திருப்பேன்...
"இதுக்கு என்னதான்ய்யா தீர்வு ...
"அவனுக்கு வேணும்னா நான் தகப்பனா இல்லாம போகலாம் ஆனா எனக்கு தலைமகன் அவன்தான்..
"அவர்கிட்ட உண்மையை சொன்னா உங்கள விட்டு போக மாட்டார்யா என்றதும் அவளை முறைத்த துரை
"என் உசுரு போனாலும் அவன் என் ரத்தம் இல்லைன்னு புள்ளைக்கு தெரிய கூடாது புரியுதா?
"ம்ம் என்றவள் உயிரற்ற உடலாக நடக்கும் கணவனோடு நடந்தாள்...
"அரவிந்த் நாம சாதிச்சிட்டோம்டா" என குமரன் கொக்கரித்து சிரிக்க படுக்கையில் சுருண்டு கிடந்தான் அரவிந்த் ..
சாமி பார்த்து போய்யா என்று தன் தகப்பன் தழுவி தூக்கிய வேளையில் அரவிந்த் மனதை ரம்பம் கொண்டு ஒரு வலி அறுத்து போனது....கையிலிருந்த பத்திரத்தில் உள்ள தன் தந்தை கையெழுத்தை மெல்ல தடவினான் , அதில் துரையின் கண்ணீர் துளிகள் ...
"ஏம்ப்பா எனக்காக எல்லாத்தையும் இழப்பேன்னு சொன்ன மருதாணிக்காக என்னையே விட்டுட்டியேப்பா, உன்ன நம்பினேன் என் மகன் தான் எனக்கு வேண்ம்னு சொல்லுவேன்னு ஏமாத்திட்டியேப்பா" என்றவன் தன் தந்தை உறவை இழந்த துக்கத்தை அடக்க கூட தந்தை மடி தேடிய சாபத்தை என்ன என்று கூற ..
உண்மையான பாசத்தை குப்பையில் போட துணிபவர்கள் ஒரு நாள் அந்த பாசத்தை பிச்சை எடுக்க வேண்டிய நிலை வரும் என்பது மெய்யிலும் மெய்..
19 வனம் சேர்ந்த ஐவணம் !!
"அரவிந்த் நீ மாஸ்டா உன் அப்பாவையே தெறிக்க விட்டுட்ட .. அந்த மருதாணி மயக்கம் இப்படி அவரை ஆட வைக்குது .. நீ செய்யறது தான் சரி" ... என்று குமரன் அவன் போக்கில் பேசி கொண்டே போனான் .. அரவிந்த் கண்களோ எதிரே கிடந்த போட்டோவை பார்த்தது...
பிறந்த குழந்தையை காலில் போட்டு குளிக்க வைக்க கொண்டிருந்த துரை, தவழும் வயதில் மகனோடு சேர்ந்து குழந்தை போல தானும் தவழ்ந்த துரை , நடக்கும் வயதில் மகனை கை பிடித்து நடத்தப் பழக்கும் துரை , கோவில் திருவிழாவில் தோளில் மகனை அமர வைத்து சாமி தரிசனம் காட்டும் துரை , வளர்ந்த பிறகு தோளில் கை போட்டு இருவரும் விளையாடி கொள்வது போல என அது வெறும் நிழலாக தெரியவில்லை .. துரையின் ஒட்டு மொத்த அன்பின் வெளிப்பாடாகத்தான் ஒவ்வொரு நிலையும் தெரிந்தது..
"அரவிந்த் இன்னொரு விஷயம் சொல்றேன் அதை மட்டும் நீ செஞ்சிட்டேன்னு வை , உன் அப்பா முகத்துல கரிய பூசினது போல ஆயிரும்" .. அரவிந்த் தலையை தூக்கி குமரனை பார்க்க..
"இந்த வீட்டை இடிச்சுட்டு பேசாம ஹாஸ்பிட்டல் கட்டிடுவோம் , அந்த ஹாஸ்பிடலுக்கு எதிரா நாம இங்க ஒரு ஹாஸ்பிடல்ல கட்டுவோம். ரெண்டு பேரும் ஒர்க்கிங் பார்ட்னராக இருக்கலாம், உன் அப்பாவை பழி வாங்குனது மாதிரியும் ஆகிடும் அவருக்கு போட்டியா தொழில தொடங்கி நீயும் பெரிய ஆள் ஆன மாதிரி ஆயிடும், என்ன சொல்ற என்று நரியாக தந்திரத்தை செயல்படுத்த குமரன் நினைக்க... அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அரவிந்த் வேகமாக எழும்பி கோவததில் பல்லை கடித்தவன் ..
"இதோடு நிறுத்திக்க நீ பேசுறது எல்லாம் நான் கேட்டுட்டு ஆடுறேன்னு நினைச்சு , உன் இஷ்டம் போல கண்டதையும் பேசிட்டு இருக்கியா... எனக்கு என் அப்பா மேல கோபம், அதனாலதான் இப்படி எல்லாம் பண்ணுனேன், மற்றபடி உன் பேச்சை கேட்டு நான் எதுவும் பண்ணல , இப்படி எல்லாம் பண்ணுனா என் அப்பா எல்லாரையும் விட்டுட்டு என் கூட வந்துடுவார்னு நினைத்து தான் இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.என் அப்பனையும் என்னையும் பிரிக்கணும்னா, அது எங்க சாவால மட்டும்தான்டா முடியும்... " குமரன் அதிர்ந்து போனான் ..
"அவர் மேல வருத்தம் இருக்கு, ஆனா அவர் எனக்கு வேண்டாம்னு இப்போ வர நான் நினைக்கல.. இதுல கிடக்கிறது எல்லாம் வெறும் ஃபோட்டோ கிடையாது எனக்கும் என் அப்பாவுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான பந்தம் , அந்த பந்தத்தில் வேற யாருக்கும் இடம் கொடுக்க கூடாதுன்னு சுயநலம் பாசம் என் அடி வரைக்கும் இருக்கு .. அதை யாருக்கும் கொடுக்க மாட்டேன்... அது அவர் தாலி கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் சரி , என் அப்பா எனக்கு மட்டும்தான் சொந்தம், அவரோட பாசத்தை பங்கு போட என்னால முடியாது... அவர் எனக்கு மட்டும்தான் அப்பா , என்ன விட அந்த மருதாணி முக்கியம்னு போயிட்டாருல்ல அவர் திரும்பி வர வரைக்கும் நான் விடமாட்டேன்... இதுக்கு இடையில நீ ஏதாவது கேம் விளையாடனும்னு நினைச்ச தலையை துண்டா வெட்டிடுவேன் , போ வெளியே "என்று அரவிந்த் கத்த குமரனுக்கு பெரிய அவமானம் ஆகிவிட்டது.... இவனை வைத்து பல பிளான்களை போட்டு இருக்க இவனோ அப்பனுக்கு மேல் இருந்தான்
"என்னையவே வெளியே போக சொல்றியா பரவால்லடா இப்பதான் சின்ன விரிசல் உண்டாகி இருக்கு ,இதுவே எனக்கு பெரிய வெற்றிதான்... இத சாதகமாக வச்சி அப்ப மகன் ரெண்டு பேரையும் நிரந்தரமா பிரிச்சு நான் இஷ்டப்பட்டதை எல்லாம் செய்கிறேன்" என கொடூரமாக சிரித்துக் கொண்டே அவன் வெளியே போய்விட்டான் ...
தன் தந்தை இல்லாத வீடும் அவன் சத்தம் இல்லாத வாழ்க்கையும் நரகத்தை விட கொடுமையாக இருக்க குடியே கதி என்று கிடந்தான்...
"ஏன்யா எழும்பி இந்த சட்டையை மாத்துய்யா ஈரத்துணியில் வீட்டு வாசலில் கட்டிலில் படுத்து கிடந்து நிலவை வெறித்து கொண்டு கிடந்த துரை அருகே வந்து மருதாணி மாற்று சட்டையோடு அமர்ந்தாள் ..
"எப்படி வந்தோம் எங்கோ இருக்கிறோம் என்ற நினைவு கூட இல்லாமல் துரை கட்டிலில் கிடந்தான் ..
"எய்யா ..
"ஹான் என்று திருப்பி மனைவியை பார்க்க, அவள் முகமும் அழுது அழுது சிவந்து போய் இருந்தது ..
"சட்டையை மாத்துய்யா..
"ம்ம் கொடு சட்டையை எழும்பி மாற்றி கொண்டவன்..
"துர்கா சாப்பிட்டாளா?
"இல்லைய்யா..
"எதுக்கு பிள்ளையை பட்டினி போடுற, போ நீயும் துர்காவும் சாப்பிடுங்க இது என் பிரச்சனை நான் பார்த்துக்கிறேன் .எதுக்கு அழுது உடம்பை கெடுத்துக்கிற...
"நானும் என்ன சார்ந்த எல்லாரும் உங்களுடைய பிரச்சனைன்னா , உங்களோடது எல்லாம் என்னோட பிரச்சனை தானே .. அதோட நீங்க இப்படி கவலையா இருக்கும்பொழுது நாங்கள் மட்டும் சாப்பிட்டு நல்லா படுத்து தூங்கினா கடவுளுக்கே அடுக்காதுய்யா, இந்த வாழ்க்கை சந்தோஷம் நீங்க கொடுத்தது ... உங்கள தாண்டி எனக்கும் எதுவும் இல்ல ... தயவு செஞ்சு கொஞ்சமா எழும்பி சாப்பிடுய்யா நீ இப்படி கிடக்கிறத பாத்தா உயிரே போன மாதிரி வலிக்குது ... இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த ஊருக்குள்ளே கால் எடுத்து வச்சிருக்க மாட்டேன் அப்பனுக்கும் மகனுக்கும் இடையில இப்படி ஒரு பிணக்கு வர நான் காரணமா இருப்பேன்னு சத்தியமா யோசிக்கல... ஏன் உயிரை கொடுத்தா உங்க ரெண்டு பேருக்கும் இடையில பிரச்சனை தீரும்னா அதை கூட கொடுக்க நான் தயாராதான் இருக்கேன் என்றதும் துரை கோபத்தில்..
"கிறுக்கி மாதிரி பேசிக்கிட்டு இருக்காதடி, நான் ஏற்கனவே வெந்துபோய் இருக்கேன்... நீயும் ஏதாவது பேசி என்ன வலிக்க வைக்காத மருதாணி, முதல்ல எழும்பி உள்ள போய் மகளை பாரு , அவன் சரியாவான் அப்படி ஆகலைன்னாலும் அவனை நான் சரி செய்வேன் எனக்கு நம்பிக்கை இருக்கு எங்களுக்காக வருத்தப்படவோ துக்கப்படவோ வேண்டாம் ... எதெல்லாம் கடவுள் நடக்கணும்னு எழுதி வச்சிருக்காரோ அதெல்லாம் நடந்து தான் ஆகணும் நாம அழுறதாலையோ, இல்ல சாகிறதாலையோ எதுவும் மாறிடாது... "
"ம்ம்
"நீ சாப்பிட்டியா ?
"இல்ல
"சாப்பாடு போட்டு கொண்டு வா ..
"நீங்க சாப்பிடுவீங்களா ?
"ப்ச் எனக்கு பசிக்கல போ ..இப்படியே கிடந்தால் நோயாளி ஆகி போவான் என நினைத்த மருதாணி ....
"நாளைக்கு துர்கா காலேஜுக்கு போகணும்யா அவளுக்கு கொஞ்சம் பொருள் வாங்கணுன்னு சொன்னாங்க ..
"ஓஓஓ, பில் போட்டு வாங்கிட்டு வா , நான் போய் கடை தெருவுல வாங்கிட்டு வந்துடுறேன்...
"ஆமாங்க .. கொஞ்சம் அப்படியே காத்தாட போனா மனசும் உடம்பும் கொஞ்சம் லேசா இருக்கும் என்றதும் ..
"ம்ம் துர்கா இருவர் நோக்கி வந்தாள்
"என்ன துர்கா ?
"எனக்கு கொஞ்சம் கோவிலுக்கு போகணும் போயிட்டு வந்துடவா...
"சரிடா பார்த்து போ அன்னைக்கு யாரையோ பார்த்துட்டு ஓடி வந்தது போல வராத, நான் வேணும்னா துணைக்கு வரவா ?
"இல்லம்மா நான் போயிக்கிறேன் என்று துர்கா கிளம்பி விட மகளை அனுப்பி வைத்துவிட்டு வந்த மருதாணி , துரைக்கு கொஞ்சமாக சாப்பாட்டை பிசைந்து தூக்கிக் கொண்டு வந்தவள்... அவன் மறுக்க மறுக்க நான்கு வாய் அள்ளிக் கொடுத்தவள்...
"கடைக்கு போயிட்டு ராவு இருட்டுறதுக்குள்ள வந்துடுங்க ""என பைக்கில் ஏறிய துரையை பார்த்துக்கொண்டு வாசலில் நிற்க....
கோவிலுக்கு போன துர்கா அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள்...
"என்ன ஆச்சும்மா,, எதுக்கு இப்படி பயந்து ஓடிவர..துரை உடனே வண்டியை விட்டு இறங்கி அவளை நோக்கி ஓடினான்
"அங்க அங்க என்று பின்னால் கையை காட்டினாள்.. அங்கே யாருமே இல்லை,
"என்ன ஆச்சு என்று துரை தெருவை நோட்டம் விட யாரோ சுவர் மறைவில் நின்று இவர்களை உத்து பார்ப்பது போல் தோன்றியது ...
"அம்மா நான் கோவிலுக்கு போனேனா, அங்க ஒரு பைத்தியக்காரன் என்ன பார்த்துட்டு பின்னாடியே விரட்ட ஆரம்பிச்சுட்டான், நான் பயந்து ஓடி வந்துட்டேன் அன்னைக்கு கூட நான் கோவிலுக்கு போகும் போது என்ன வெறிச்சு வெறிச்சு ஒருத்தர் பார்த்தார்னு சொன்னேன்ல அதே பைத்தியக்காரன் தான் ... இன்னைக்கு ஏதோ ஒரு பேரை சொல்லிட்டு என் பின்னாடியே ஓடி வந்தார் பயமா இருக்கும்மா "என்று துர்கா மருதாணியை கட்டிக்கொள்ள..
"யாரங்க ?? வெளிய வரியா இல்ல கட்டி வச்சி தோலை உரிக்கவா" என்று துரை சத்தம் கொடுக்க.. இருட்டிலிருந்து ஒரு பாடாதி உருவம் வெளியே வந்தது.... முகம் முழுக்க தாடியும் மீசையும் கையில் மஞ்சள் பையும் என பரிதாபமாக வயதான தோற்றத்தில் ஒருவர் நின்றார்.... விளக்கு ஒளியில் அவரின் உருவம் மெல்ல மெல்ல இவர்கள் கண்ணை அடைய மருதாணியின் விழிகள் ஆச்சரியத்தில் அப்படியே விரிந்து கொண்டது..
மாதவா என்று அலறிக்கொண்டு அங்கே நின்ற உருவத்தை நோக்கி மருதாணி ஓட ஆரம்பித்தாள்..
ஆம், அவள் அண்ணன் மாதவன்.. துர்காவின் தந்தை மாதவன்....தன் தங்கையை அவனும் இங்கே எதிர்பார்க்க வில்லை
"மாதவா நீயா? நீ உயிரோடவா இருக்க... கடவுளே நான் உன்ன இப்படி பாப்பேன்னு நினைச்சு கூட பாக்கல" என் அண்ணன் உயிரோட இருக்கான் .. அவனை கட்டி அணைத்து ஆறத் தழுவி கண்ணீரில் குளிப்பாட்ட... தன் தங்கையை எத்தனை வருடம் கழித்து பார்க்கிறான் பாப்பா என்று அவள் தலையை வருட..
"அண்ணே என்னை ஞாபகம் இருக்கா? நான் உன் தங்கச்சி மருதாணி நீ செத்து போயிட்டேன்னு நினைச்சேன்... எப்படி என்ன கண்டுபிடிச்ச...
"அதோ என் மகள வச்சுத்தான் , எப்படி இந்த உருவத்தை மறக்க முடியும்.. என் பொண்டாட்டியோட மறு உருவமால்ல என் பொண்ணு நிக்குது... அவளை பார்த்ததுமே என் பொண்ணு உயிரோட இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன், ரெண்டு நாளா அவளதான் இந்த ஊருக்குள்ள தேடிக்கிட்டு இருக்கேன்... அதான் அவ பின்னாடியே வந்தேன்... நான் தான் உன் அப்பான்னு சொல்ல என்னால முடியல, ஒரு அப்பனுக்குரிய கடமையோ அன்பையும் கொடுக்காம வெறுமனே நான்தான் உன் அப்பான்னு எப்படி அவ கிட்ட சொல்ல முடியும் துரைக்கும் துர்காவுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி எத்தனை வருடங்கள் கழித்து இறந்ததாக நினைத்த மாதவன் வந்திருக்கிறான்.... துர்கா அவர்கள் பேசுவது எதுவும் புரியாமல் நின்றாள்
"இதுதான் தன் தாய் என்று இத்தனை நாளாக நினைத்து இருக்க அவளோ தன் அண்ணனிடம் இதுதான் உன் மகள் என்று சொல்ல, அப்படியானால் நான் யாருடைய மகள்?
மருதாணி வேகமாக துர்காவிடம் ஓடி வந்தவள்..
"துர்கா இந்த அம்மாவை மன்னிச்சுடுடா, இந்த உண்மைய மறைக்கணும்னு நான் மறக்கலைடா இரண்டு பேரும் உயிரோட இல்லைன்னுதான் அதை சொல்லி உன்ன கஷ்டப்படுத்த விரும்பல..
"ம்ம் அப்போ இது ?
"இதுதான் உன் அப்பா மாதவன் , என் அண்ணன் மாதவன் ... என்று நடந்த விஷயங்களை கூறிட துர்கா மருதாணி காலடியில் விழுந்து விட்டாள்
"தியாகத்தின் மறு உறுவமாக நின்ற தன் அத்தையை அன்னை என்று அழைத்த அவள் நாவுகள் பாக்கியம் பெற்றது ...
"என்ன துர்கா இது எழும்பு ..
"உங்க வயித்துல பிறக்காம போயிட்டேனேம்மா.... எனக்காக நீங்க எவ்வளவு கஷ்டம் தாங்கி இருக்கீங்க .. மாதவனுக்கும் தன் தங்கை கடவுள் போலத்தான் தோன்றினாள்...
"ப்ச் விடு உன் அப்பனை போய் பாரு ... போ , துர்கா உடைந்து போன தன் தந்தையை பாவமாக துர்கா பார்க்க அவர் கைகளை விரித்து வருவாயா என்பது போல் கண்களால் கெஞ்ச, துர்கா ஓடிப் போய் தந்தை அணைத்துக்கொண்டாள்..
"ஏம்பா இத்தனை நாள் என்னை தேடி வரலை
"நீ உயிரோடு இருக்கன்னு எனக்கு தெரியாதே தங்கமே...
உள்ள வாங்க மச்சான்... என்று துரை அவனை அழைத்து உள்ளே வந்து அமர வைத்து
"என்ன நடந்து எப்படி தப்பிச்சீங்க... என்றதும் மாதவன் அன்றைய நாளில் நடந்ததை கூறினார் ..
அன்னைக்கு நடந்த அடிதடியில் என்னையும் என் பொண்டாட்டி மேகலையையும் கத்தியால் குத்தி போட்டுட்டாங்க ரெண்டு பேரும் குத்துயிரா ஊர் எல்லையில் கிடந்தோம்.. மேகல அதே இடத்திலேயே செத்துப் போயிட்டா.. எனக்கு குறை உயிர் கிடந்தது... அந்த வழியா போன யாரோ ரெண்டு பேரை என்னை தூக்கிக்கொண்டு போய் தர்ம ஆஸ்பத்திரியில போட்டாங்க பிழைக்க மாட்டேன்னு இருந்த நான் .. எப்படியோ பிழைச்சுட்டேன் ..."
என் பொண்டாட்டி , பிள்ளை இல்லாத இந்த உலகத்துல வாழ விருப்பம் இல்லாம சாகத் துணிஞ்சேன்.. கடவுள் உனக்காக உன் மகள் இருக்கான்னு சொல்ல நினைச்சாரோ என்னவோ? என் உயிர் அவ்வளவு சீக்கிரமாக போகல அதுக்கு பிறகு ஏதுலையும் பிடிப்பு இல்லாமல் இப்படியே ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கேன்.. யாராவது இரக்கும் குணம் உள்ளவங்க இரண்டு வாய் சோறு தந்தா பிச்சைக்காரன் போல வாங்கி தின்னுட்டு வாழ்றேன் எதுக்கு வாழ்றோம்னு தெரியாம வாழ்ந்துகிட்டு இருந்தேன் , கோவில்ல என் மனைவி சாடையில பொண்ண பார்த்த பிறகுதான் என் மக உயிரோடு இருக்கான்னு தெரிந்து பின்னாடியே வந்தேன் ....
"மருதாணி நான் உங்கிட்ட ஒன்னு கேட்பேன் தருவியா "
"என்ன அண்ணா ?
"என் மகளை எனக்கு தந்திடு என்றதும் மருதாணி மருண்டு போய் துர்கா கையை இறுக்கி பிடித்தாள்....
"இத்தனை நாள் என் மகளை நீ வளர்த்ததுக்கு உயிரை கூட நன்றிகடனா கொடுக்கிறேன், இனிமே இருக்குற காலத்துக்கு என் மகளை என் கண்ணுல வச்சு பாத்துக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு .. அவளுக்கு ஒரு தகப்பனா இதுவரை நான் செய்யாதத , அவ கல்யாணம் முடிஞ்சு போற வரைக்குமாவது செய்ய ஆசைப்படுறேன்.. தயவு செஞ்சு என் மகளை என் கூட அனுப்பி வைப்பியா... இந்த அண்ணனுக்காக மறுக்காம செய் மருதாணி" என்றதும் மருதாணிக்கு அழுகை முட்டிவிட்டது இத்தனை நாள் தன் பிள்ளையாக துர்காவை வளர்த்து விட்டாள்.. திடீரென அண்ணன் வந்து மகளை கேட்க எப்படி கொடுக்க முடியும்?...துரை அவளை ஆதரவாக தட்டி கொடுத்தவன்...
"பாருங்க மாதவன், அவ துர்காவை பெத்த தாய் இல்லேனனாலும் இத்தனை வருஷம் கூடவே வச்சு வளர்த்திட்டா , இப்போ திடீர்னு உங்ககிட்ட தந்துட்டா , அவளால எப்படி நிம்மதியா வாழ முடியும்.. நீங்க ஏன் வேற எங்கேயோ போயி வாழனும் , பேசாம இங்கேயே ஏதாவது ஒரு தொழில் பண்ணலாமே... உங்க மக அங்க இருந்தா என்ன இங்க இருந்தா என்ன, எங்க பக்கத்துல இருந்தா மருதாணிக்கும் எதுவும் தெரியாது, அங்கேயும் இங்கேயுமா புள்ள சுத்தி வந்துக்கும் ... திடீர்னு அவள நீங்க இந்த கூட்ட விட்டு பிரிச்சு அங்க கூட்டிட்டு போனாலும், துர்காவுக்கும் கஷ்டம்தான் என்ன நான் சொல்றது, நீங்க நினைச்சா யாருக்கும் வேதனை இல்லாமல் இந்த பிரச்சனையை முடிச்சிடலாம் என்று துரை சுமுகமாக ஒரு தீர்வை சொல்ல..
"எனக்கு என் பொண்ணு வேணும் அவ்வளவுதான் எங்க இருந்தா என்ன?இங்கயே இருக்கேன் மச்சான் , ஏதாவது ஒரு வேலை மட்டும் வாங்கி கொடுங்க . தன் மகளை வளர்க்க மொத்த வாழ்க்கையும் தொலைந்து விட்டு நின்ற தங்கைக்கு இனியும் பாரத்தை கொடுக்க அவன் நினைக்கவில்லை .. அவள் துரையோடு நன்றாக வாழட்டும் என்று நினைத்தான் ..
"என்ற மில்லுல கணக்கு வழக்கு பாருங்க மச்சான்" என்றதும் மாதவனுக்கு புதிதாக பிறந்த உணர்வு ... துர்காவுக்கும் மருதாணிக்கும் நிம்மதி உணர்வு ....
துர்காவுக்கு தன்னை அறியாது ஒரு குட்டி மகிழ்ச்சி... அப்போ அரவிந்த் எனக்கு மாமா முறை இந்த விஷயம் தெரிஞ்சா கண்டிப்பா ஆங்கிள் கிட்ட சண்டை போட மாட்டான் சேர்ந்துடுவான் என்று ...
அரவிந்த் தன் தந்தையை காதலுக்காக கூட விட்டு கொடுக்க போவது இல்லை என்று அவள் அறிந்திலள் ..
20 வனம் சேர்ந்த ஐவணம் !!
தந்தையும் மகளும் வளவள என்று பேசி கொண்டே கடைத்தெரு சுற்ற போய்விட மருதாணி கட்டிலில் படுத்திருந்த துரை முட்டியில் முகத்தை புதைத்து கொண்டவள் கண்ணீர் அவனை சுட்டது ..
"என்னடி ...
"ரொம்ப நன்றிய்யா எங்க துர்காவை அவர்கூட அனுப்பி வச்சிடுவீங்களோன்னு பார்த்தேன் ..
"என்னடி பேசுற எனக்கு அரவிந்த் உசுருன்னா, உனக்கு துர்கா உசுருன்னு தெரியாதா?? ,
"யோவ் ..
"ம்ம் சொல்லு இதயத்தில் பொத்தல் கிடந்தாலும் இணையின் அருகாமை வலியை கூட வருடி விட்டது ...
""யோவ்..
"சொல்லுடி
"எனக்காக எல்லாம் செய்ற உனக்காக என்னால எதுவுமே செய்ய முடியலைய்யே...
"ஏன் முடியாது என்ன போல ரெட்டை புள்ள பெத்து கொடு போதும்" என்று கிண்டல் செய்தாலும் அவன் முகத்தில் நிம்மதி பைசாவுக்கு இல்லை, மகன் என்ன செய்வான் என்ற எண்ணம்தான் மனது முழுக்க அடைத்து கிடந்தது ...
"எல்லாம் சரியா போகும்ய்யா..
"ம்ம் அப்படி நினைச்சுதான் பலர் வாழ்க்கை ஓடுதுடி .. அது சரி இவ்வளவு வருத்தப்படுற நீ, துர்காவை கட்டி கொடுத்து அடுத்த வீட்டுக்கு அனுப்பனுமே, அப்ப என்ன செய்வ ..
"ம்ம் அதை நினைச்சு நான் கூட எப்பவும் வருந்துவேன் , ஆனா கட்டி கொடுத்தா வேற வீட்டுக்கு போய்தானே ஆகணும்" ... என்றதும் துரை முகத்தில் ஏதோ தோன்ற ..
"ஏன் போகணும் பேசாம நம்ம துர்காவை அரவிந்துக்கு கட்டி வச்சிட்டா.. அவளும் எங்கேயும் போக மாட்டாள்ல..
"ஏது அது எப்படி முடியும் ..
"ஏன் முடியாது மாதவன்தான் துர்கா அப்பான்னு ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சி , இப்ப அவ அரவிந்துக்கு என்ன முறை..
"அது ... மாமா முறை...
"கட்டிக்க வேண்டிய முறைதேன் சரியா இருக்கும் ... துரை எடுக்கும் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் என அறிந்தவள் ..
"அரவிந்த் தம்பி சம்மதிக்குமா? ஏற்கனவே உங்க கிட்ட கோவத்துல இருக்கு
"நாளைக்கேவா கல்யாணம் கட்டி வைக்க போறோம் , போகட்டும் அதுக மனசுல என்ன இருக்குன்னு பார்த்துட்டு மேற்கொண்டு பேசுவோம் சரியா?? ...
"ம்ம் ..
தனக்கு பார்த்து பார்த்து செய்யும் துரைக்கு ஏதாவது செய்ய அவளுக்கு ஆசை பேராசையாகி போனது... அவர் மகனை சேரத்து வைக்கணும் அரவிந்த் கிட்ட போய் பேசினா என்ன ? என்று விபரீத எண்ணம் தோன்றியது ...இவன்கிட்ட சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார் இவருக்கு தெரியாம அரவிந்த் தம்பியை பார்த்து பேசிட்டு வரணும் என்று நினைத்து கொண்டாள் ..
"டேய் அரவிந்த் விஷயம் தெரியுமா ? குடிக்க பாட்டிலை வாங்கி வைத்திருந்த அரவிந்த் முன் அவன் நண்பன் தினேஷ் வந்து அமர்ந்தான் ...
"என்ன ... பாட்டிலை தட்டி திறக்க அதை புடுங்கி தூர எறிந்தான் ..
"____ என்னடா வேணும் நீயும் ஏன்டா உசுர எடுக்கிற ...
"ஏன்டா உன் புத்தி இப்படி போகுது ...
ப்ச் "
"நீ எக்கேடோ போ, ஆனா சொல்ல வந்த நல்ல செய்தியை சொல்லிட்டு போறேன் ..
"என்ன அந்த மருதாணி செத்துட்டாளா..
"ஏன்டா ??
"அவ சாவுறது மட்டும் தான் எனக்கு நல்ல செய்தி
"அப்படி அவங்க உனக்கு என்னடா பண்ணினாங்க
"என் அப்பாவை தூக்கிட்டு போயிட்டா "சிறு குழந்தை போல புகார் வாசித்தான்...
'ப்ச் அதை விட, துர்கா பத்தி ஒரு செம மேட்டர் கிடைச்சு இருக்கு ... அதை கேட்ட அத்தனை பிரச்சினையும் சால்வ் ஆகிடும் ..
"என்ன ?
"துர்கா மருதாணி அக்கா மக இல்லை ..அவங்க அண்ணன் மகளாம் மருதாணி அக்கா அவளுக்காக தான் கல்யாணமே பண்ணாம இருந்தாங்கலாம் ஊரெல்லாம் மருதாணி போல ஒரு பொண்ணு உண்டான்னு புகழுறாங்க ,நீதான் அவங்கள திட்டுற ..
"அதுக்கு என்ன இப்ப ??"
"என்ன இப்பவா துர்காவை கல்யாணம் பண்ண முடியாதுன்னு தானே உன் அப்பாகிட்ட சண்டைக்கு நின்ன, இப்ப துர்கா உன் மாமா பொண்ணு ஆகிடுச்சி டா சோ, இனி உன் லவ்வுல பிரச்சனை இல்லை .. அரவிந்த் சரக்கை எடுத்து குடிக்க தொடங்கி விட தினேஷூக்கு சப்பென்று ஆகி போனது..
"நாயே நான் பேசுறது கேட்குதா
"கேட்குது கேட்குது
"பின்ன என்ன அப்பாவை போய் பாரு
"நான் ஏன் போய் அவரை பார்க்கணும்
"என்னடா இப்படி பேசுற ?
"எனக்கு காதலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் அவரை மட்டும் அனுப்பி விட சொல்லு , போதும் எனற அரவிந்தை பார்த்து தினேஷ் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்..
"குச்சி மிட்டாய் வேணும்னு சொல்றது போல அப்பா வேணும்னா எபபடி டா நீதான அவரை வேண்டாம்னு விரட்டி விட்ட.. இப்ப வான்னா எப்படி ?
"எனக்கு என் துரை மட்டும் போதும்னு அர்த்தம் ... பேசாம அந்த மருதாணியை கொன்னுட்டா என்ன??" என்று அரவிந்த் கூற அங்கிருந்த அனைவரும் திரும்பி அவரை பார்த்தனர்.. தினேஷ் வேகமாக போய் அர்விந்த் வாயை மூடியவன்
"காரியத்தையே கெடுத்த , சும்மா இருடா எவனாவது போய் பத்தி வச்சிட போறான் ... நீ ஏன்டா இப்படி முட்டாள் போல பேசுற"
"இல்லடா அவளாலதான் பிரச்சினை அவ செத்துட்டா என் துரை என்கிட்ட வந்துடுவான்.'. என்ன நண்பனை பார்த்தது பரிதாபம் தான் கொள்ளத் தோணியது
சுவருக்கும் காது உண்டு என்று அரவிந்த் எப்படி அறிவான் மருதாணியை கொல்வேன்னு அரவிந்த் சொல்லிட்டு திரியுறான் என்ற செய்தி குமரன் காதுக்கு போக..
"இது நல்லா இருக்கே மருதாணி செத்தா பழி யாரு மேல விழும் ??
"
அரவிந்த் மேல
"அப்போ துரை என்ன செய்வான்..
"தானா மகனை விட்டு மொத்தமாக பிரிஞ்சிடுவான்..
"அப்போ நான் நினைச்சது..
"ஈசியா நடந்துடும் குமரா என்றதும் ..
"நடத்திடுவோம் நாலு கூலிப்படை ஆட்களை வர சொல்லு" என்று தன் அல்லக்கைக்கு கூறி விட்டு வனத்தை பாலைவனமாக மாற்றும் செயலில் ஈடுபட ஆரம்பித்தான் ...
இரவு துரை தோட்டத்து கட்டிலில் படுத்துகிடக்க,,இன்னொரு பக்கம் மாதவன் படுத்திருக்க, துர்கா , மருதாணி இருவரும் உள்ளே படுத்திருந்தனர் ... நடு ஜாமம் தூக்கத்தில் இருந்த மருதாணி ஏதோ பூந்தொட்டி நகரும் சத்தம் கேட்டு வேகமாக எழும்பி ஜன்னலை திறந்து பார்க்க அரவிந்த் நின்றான்...
"இவரா இங்க என்ன பண்றார்? " .. என கூர்ந்து பார்க்க அரவிந்த் தன் தந்தை அருகே சத்தமில்லாது வந்து அவன் பக்கம் அமர்ந்தவன் , துரை நெஞ்சில் வைத்திருந்த கையை நகட்டி தன் தலையை வைத்து படுத்து கொண்டவன்...
"ப்பா நீ என்ன விட்டு ரொம்ப தொலைவா போனது போல இருக்கு மறுபடி நீயும் நானும் சேட்டை பண்ணி, வம்பு செஞ்சி ஒரே பைக்கில சுத்த மாட்டோமான்னு ஏக்கமாக இருக்கு, உனக்கு என் நினைப்பு இல்லையா? என்ற மகன் தலையை தூக்கத்தில் கூட துரை கைகள் வருடி..
"சாமி சாப்பிட்டியா??" என்று துரை உதடுகள் தானாய் கேட்க.. அரவிந்த் தலையை தூக்கி துரையை பார்க்க அவன் நல்ல நித்திரையில் இருந்தான்.. ஜன்னல் காற்றில் அசையும் சத்தம் கேட்டு அரவிந்த் வேகமாக எழும்பி ஓடி விட , பார்த்து கொண்டிருந்த மருதாணிக்கு அவர்கள் இருவரும் வைத்திருக்கும் அன்பில் இடைச்செருகல் நான்தான் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது..
"உன்ன விட்டுட்டு இனி என்னால வாழ முடியாதேய்யா நான் எப்படி இந்த சிக்கலை தீர்க்க போறேன் "என்று கண்ணீரை துடைத்து கொண்டவள்... துரையும் எழும்பி அமர்ந்து பெருமூச்சு விட்டு சத்தமில்லாது கண்களை துடைத்து கொள்ள.. மரணத்தின் வலியை மூவரும் உயிரோடு இருக்கும் போதே அனுபவித்தனர்...
அரவிந்த் வேகமாக ஓடியவன் படீரென்று ஒரு உருவத்தின் மீது மோதி விழுந்தான்.. யார் இந்த நேரத்துல இங்க? என்று அரவிந்த் தலையை தூக்கி பார்க்க நைட்டியை இடையின்,குறுக்காக கட்டி கொண்டு துர்கா ரவுடி போல போஸில் நின்றாள்..
"நீயா ?நீ என்ன இங்க பண்ற
"என்ன மாமா குவார்ட்டர்ல மூளை குழம்பி போச்சா, இது எங்க வீடு , இங்க அத்துமீறி வந்தது நீங்க தான்
"என்னது மாமாவா.?..
'பின்ன உங்க அப்பாவை கல்யாண கட்டின மருதாணிக்கு என் அப்பாரு அண்ணன்னா நான் உமக்கு முறைப்பொண்ணு தான , அதான் மாமா என்று துர்கா கண்களை சிமிட்டியவள் அரவிந்த் அர்கே வந்து
அரவிந்த் ""
"போதும் நீ என்ன பேச போறேன்னு தெரியும் ..என்னங்கடி காதல் பிச்சை போட வந்தியா.. போங்கடி நீங்களும் உங்க காதலும் எனக்கு நீயும் தேவையில்லை, உன் அனுதாப காதலும் தேவையில்லை.. என் துரையை மட்டும் என்கிட்ட அனுப்பி வைக்கல ஆத்தா மக ரெண்டு பேரையும் வெட்டி பலி போட்டிருவேன்" ... அவன் நெஞ்சோடு நெஞ்சை வைத்து தள்ளிய துர்கா
"அப்படியா? எங்க முதல்ல என்ன வெட்டி பலி போடுங்க பார்ப்போம்.."
"தள்ளி போடி, அன்னைக்கு பெருசா உத்தமி போல பேசிட்டு போன இன்னைக்கு உரசிட்டு வர்ற வெக்கமா இல்லை
"இல்லைன்னு வச்சுக்கோங்க மாம்ஸ்" என இன்னும் அவனை நெருங்கிய துர்கா அரவிந்த் சட்டை மறைவில் தன் முகத்தை நுழைக்க..
"சீச்சீ போ" என்று அவளை அரவிந்த் உதறி தள்ள துர்கா போய் வைக்கோல் போரில் விழுந்தாள்..
"என்ன மாமா உள்ள குத்தின பச்சையை நான் பார்த்திருவேன்னு பதறினது போல இருக்கு" என்று கலகலவென சிரிக்க,. அரவிந்த் அவளை முறைத்து கொண்டே நடக்க ஆரம்பிக்க , அவனுக்கு குறுக்காக இந்த கையை நீட்டி தடுத்த துர்கா அவன் விலகி நடக்க போக வேகமாக அர்விந்த் நெஞ்சில் பிடித்து தள்ள இருவரும் சேர்ந்து வைக்கோல் மீது விழுந்தனர்... அரவிந்த் மேலை கிடந்த துர்கா ,அவன் சட்டையை நீக்கி துர்கா என்ற பேரின் மீது நச் என இச் வைக்க.. அரவிந்த் அவளை விலக்க முயல அவன் மீது ஒய்யாரமாக படுத்து கொண்டவள் அவன் வாயை வன்மம் கக்க திறக்கும் முன் லபெக்கென்று அவன் உதட்டை கவ்வி கொள்ள அர்விந்த் கைகள் தடுமாறி நடுங்கிட, துர்கா அவன் ரெட்டை கைகளையும் விரித்து பிடித்து, தன் கையோடு நசுக்கி கொண்டவள் , அவன் திமிரும் காலையும் தன் காலால் அவன் காலை கிடுக்கிப்பிடி போட்ட துர்கா மெல்ல தன் உதட்டை அவன் உதட்டுக்குள் கொடுக்க அரவிந்த் கண்கள் மூடி கொண்டது.... இருவர் நாவும் சண்டை மறந்ததுவோ உறவாடி உயிர் உறிஞ்சி எச்சில் அமுதம் உண்டு கொண்டிருந்தது... அவள் பிடித்த விரல்களை அவன் பின்னி இறுக்கி தன் காலால் அவள் கால்களை உராய விட.. தீ இருவருக்கும் இடையே மெல்ல எரிய , அவள் இதழில் வன்மையாக ஒரு காதல் மடல் எழுதிய அரவிந்த் அவளை நகர்த்தி அருகே போட்டவன் சட்டையை உதறி கொண்டே,எழும்பியவன்..
"நல்லா ஆம்பள பிடிக்க உன் அத்தை பழக்கி கொடுத்திருக்கு போல பரவாயில்லை நல்லாவே பண்ற" என்ற அரவிந்த் சட்டையை இழுத்து பிடித்த துர்கா..
"தூஊஊ உன்ன போய் நேசிச்சு உன் கூட சேர முடியாம போச்சேன்னு வருத்தப்பட்டு கிடந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் , வாயா இது வதைக்கிற கொடுக்கு .. இப்படி பேசுற நீ ஒருத்தரும் இல்லாம அனாதையா நிற்க போற பாரு" என்று அழுது கொண்டே துர்கா போக போக அவளுக்கு அவன் பேசிய வார்த்தையில் மொத்தமாக செத்து விட்டாள், தண்ணீர் குடிக்க எழுப்பிய துர்கா எழும்பி கிச்சன் செல்லும் போது அர்விந்த் துரை அருகே உட்கார்ந்து பேசுவது கேட்கவும் பாவமாக போனது அவளுக்கும் இனி காதலை ஏற்று கொள்ளவதில் தவறு இல்லை இந்த அன்பின் போர் முடிந்து தந்தையும் மகனும் சேர்ந்து விடுவார்கள் என்று நினைத்து தான் காதலை கூற வந்தது.. ஆனால் அரவிந்த் அதற்கும் கண்ட மேனிக்கு பேச ...
இவனை போய் காதலித்து விட்டோமே?? என்று அவளுக்கு உள்ளம் குமுறியது.. நீ பேசின பேச்சுக்கு கால்ல வந்து விழுந்தாலும் இனி உன்ன ஏத்துக்க மாட்டேன் போடா எனக்கும் தன்மானம் உண்டு நான் மருதாணி வளர்த்த பொண்ணு , உனக்காக இனி ஒரு சொட்டி கண்ணீர் கூட வடிக்க மாட்டேன் என்று கண்ணீரை துடைத்து கொண்டு படுக்கையில் படுத்து கொண்டாள்..
"போங்கடி எனக்கு எவளும் தேவையில்லை .... என் அப்பனை அவ பிடிச்சா என்ன நீ பிடிக்க பார்க்கிறியா , என்ன ஒரு பய சாய்க்க முடியாது என்று கத்தி கொண்டே உதட்டில் இருந்த அவள் எச்சில் சுவையை அழுத்தி துடைத்தான்..
மருதாணி மீது உண்டான கோவத்தை இவளிடம் காட்டினான்.. சுமூகமாக மாறி கையில் கிடைத்த காதலை நா செய்த நய வஞ்சகத்தால் வி்ட்டு விட்டான்... இனி அந்த காதல் அவன் தொட முடியாத தூரம் போய்விடும்.....
நம்ம ரைட்டர் ஒரு சிட்டிகை வன்மம் ரெண்டு சிட்டிகை சூனியம், மூணு சிட்டிகை குதர்க்கம் பிடிச்ச ஆளுன்னு நினைக்கிறேன் என்ன பண்ணினாலும் குண்டக்க மண்டக்க பண்ணுது
அதானே??
21வனம் சேர்ந்த ஐவணம் !!
துரை மகன் நியாபகத்தில் கட்டிலில் நிம்மதி இன்றி புரண்டு கிடக்க, மருதாணிக்கு பாவமாகி போனது...
"அன்பு வச்சாலே வலிதான் மிஞ்சும் போல அவன் மனதின் பாரத்தை தன்னால் கொஞ்சமாவது எடுக்க முடியுமா ??என யோசிக்க...
"ஏன் முடியாது ரெண்டு நாளா என் கூட இருக்கும் போது எல்லாம் மறந்து என் நெஞ்சு மேல நிம்மதியா தூங்கினாரே..." கூடலில் தன் கவலை மறந்து சிறுது நேரம் நிம்மதியா இருப்பான், தன்னை தவிர அவன் வலியை போக்கும் வலி நிவாரணி வேறு எதுவும் இல்லை என அறிந்தவள்..
"எப்படி அவர்கிட்ட போறது, மாதவன் துரைக்கு சற்று தொலைவில் இன்னொரு கட்டிலில் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தான் ... அவன் பாவம் தன் மகளை, தங்கையை பார்த்த பின்பு தான் தூங்கவே செய்கிறான்... இத்தனை நாள் தூங்காத தூக்கத்தை இபபோது தூங்குகிறான்..மகள் அறையை எட்டி பார்த்தாள்... துர்கா படுக்கையில் அசைவின்றி கிடக்க ... மெல்ல தன் கால்களில் கிடந்த தங்க கொலுசுகளை கழட்டி மேஜை மீது வைத்தாள் சத்தம் வந்து மற்ற இருவரும் முழித்து விட கூடாதே ... அடி மேல் அடி வைத்து துரை படுத்திருந்த கட்டில் நோக்கி நடந்தாள்... துரை கண்களை மூடி கொண்டு கிடக்க மாதவனை உற்று பார்த்து , அவன் தூங்குவதை உறுதி செய்து கொண்ட மருதாணி மெல்ல துரை கால் பக்கம் உள்ள போர்வையை விலக்கி , போர்வை உள்ளே பதுங்கி ஏற தன் காலில் உணர்ந்த பாரத்தில் துரை கண்களைத் திறந்து ..
யா என பேச போக மருதாணி வேகமாக போர்வை உள்ளே புகுந்து அவன் மீது படுத்து கொண்டவள்
"நான்தாய்யா வேற எவ இந்த ராத்திரி உன்ன தேடி வருவா..
"இங்க என்னடி பண்ற? தன் மீது முழு உடலையும் போட்டு சொகுசாக படுத்து கொண்டு கதை பேசும் மனைவியை முறைத்தான்..
"இங்க ஒரு ஈ சுத்தி வந்தது அடிக்க வந்தேன் .. அவன் முறைக்க ...
"சும்மா முறைக்காதய்யா, உன் கூட இருக்கணும் போல இருந்தது அதான் வந்தேன் , அங்க தூக்கமே வரல, என்று மருதாணி கிசுகிசுக்க... அவள் இடையை மெல்ல அவன் இடையோடு தேய்த்து தேக புள்ளியை எழுப்பி விட ஆரம்பிக்க.. அவள் விளையாட்டு புரிந்தது .. தன் ஆற்றாமையை நீக்க வெட்கம் தொலைத்து சுக தொல்லை தர வந்திருக்கிறாள் என புரிய ... அவள் முட்டி மேலும் கீழும் உராய்ந்து எரிமலையின் முனையில் தீப்புள்ளி உருவாக்குவதில் உடலில் வெப்பம் உண்டாக...
"துர்கா முழிச்சிட போறாடி எழும்பி உள்ளார போ
"ஸ்ஊஊஊ ஏன்யா கத்துற, நீயே காட்டி கொடுத்திடுவ போல போர்வைக்குள்ளதான இருக்கேன் யாருக்கும் தெரியாதுய்யா, அவ நல்லா தூங்குறதா , என் அண்ணன் தலை மேல இடியே விழுந்தாலும் எழும்ப மாட்டார் போல "என்றவள் உதடு அவன் மார்பின் மச்சத்தை மெல்ல கவ்வி நாவில் நிரடி விளையாட,,துரைக்கு நுனிப்புல்லில் பனித்துளி உருவாக ஆரம்பித்தது ..
"வயசு புள்ள இருக்கிற வீட்ல என்ன விளையாட்டுடி எழும்பு "... என்றவன் அவள் தொடை தன் ஆபரணம் மேலும் கீழும் தடவ கால்களை நகட்டி நத்தையை ஏந்தி கொடுத்தான் ..
"நான் எப்போ கிழவி ஆனேன், நானும் வயசு பொண்ணுதான், அதுவும் புது கல்யாணம் முடிஞ்ச குமரியை இப்படி தவிக்க விட்டுட்டு, தனியா வந்து மல்லாக்க படுத்து கிடந்தா எப்படிய்யா "என்றவள் நாவு மெல்ல அவன் மார்பு முழுவதும் சுவைத்து கீழே இறங்கி அவன் நாபி பள்ளம் வர துரை போர்வையை இழுத்து அவளை உள்ளே போட்டு மூடினான்..
"வேண்டாத வேலை பார்க்கிறடி" என்றாலும் கண்கள் அவள் நாவு அசைந்து நாபி பள்ளத்தை சுழட்டி விளையாட கட்டிலில் துள்ள முடியாது அவள் உச்சி முடியை வலிக்க பிடித்து கொண்டு சத்தமில்லாது முனங்கினான் ....
"என்னவோ வேண்டாத புள்ளை போல பேசுறீங்க பின்ன எதுக்கு இவன் எழும்பி நின்னு நடனம் ஆடுறார் "என இடையில் ஒற்றை காலில் நடனம் புரியும் மயில் மீது செல்லமாக இச் வைக்க
"ஸ்ஆஆஆஆஆஆ ____ என்னடி இப்படி மயக்கிற ..." இருளின் ஆதிக்கத்தில் அவர்கள் முனகல் சத்தம் வண்டுகளின் இணை தூண்டி விட்டு கொண்டிருந்தது போர்வைக்குள் கிடந்த மருதாணி அவன் எழும்பிய சேவகனை மெல்ல விரலில் பிடித்து இச் இச் இச் என கணக்கில்லாது கொடுக்க துரை கைகளை உள்ளே விட்டு அவள் முன் கலசம் தேட ...
"இருய்யா கொக்கி கழட்டி தர்றேன் "என்று மருதாணி முந்தானை நீக்கி இரண்டையும் தூக்கி வெளியே போட்டு அவன் கையில் தூக்கி கொடுத்து விட்டு போர்வைக்குள் சேவை செய்ய போக ... துரை கைகள் இந்த கள்ள விளையாட்டில் போதை அதிகம் என கண்டு கொண்டு கிடைத்த காற்புள்ளியை முழுப்புள்ளி ஆக்கிடும் நோக்கில் விரலில் நசுக்கி, மெல்ல நிரடி எடுக்க ... துரை கைகள் பட பட பட்டாம்பூச்சி போல துடித்த மருதாணி, வளர்ந்து இதழில் இடித்த பனைமரத்தை முழுதாக இதழில் வாங்கி தலையை அசைத்து மேலும் கீழும் அவன் கண் சொக்க சொக்க சப்பி எடுக்க ஆரம்பிக்க கட்டிலில் இருவர் பண்ணும் காதல் விளையாட்டில் குட்டி சத்தம் உண்டானது..போர்வைக்குள் மோகத்திருவிழா கொண்டாட ஆரம்பித்தனர்...
ஸ்ஆஆஆஆஆ..
"கத்தாதய்யா காரியத்தை கெடுத்துடாத, மானம் போயிடும் "புருஷன் இதழில் விரலை நுழைக்க அவன் அதை சப்பி எடுக்க இவள் இங்கிதம் இல்லாமல் அவன் ஆசை முக்கனியை விழுங்க..
"ம்ம ஆஆஆ முனங்கி அவள் தலையை பிடித்து அவனே வேகமாக அசைக்க மருதாணி அவன் கொண்ட ஆசையில் திணறினாள்....
"யோவ் இதுதான் வாசின்னு உள்ள போட்டு அமுக்காதய்யா அய்யோ பாவமாக கிடந்து அல்லாடுறீயேன்னு மனசை மாத்த வந்தா, நீ இதுதான் சாக்குன்னு பச்சையா பண்ற "என்றவள் சிணுங்கல் கேட்டே இன்னும் பச்சையாக அவள் வேண்டும் என்று ஆசை கொண்டான் ... ஆண் இனம் எப்போதும் கட்டிலில் பேராசை கொண்டதுதானே...
"வந்துட்டல்ல வந்தததுக்கு நல்லா இழுத்து சப்புடி, பேசி வாயை வலிக்க வைக்காத பண்ணி வலிக்க வச்சா புண்ணியம் "என்று அவள் முதுகில் கால் போட்டு அமுக்கி சிவந்த கிளியை இடை தூக்கி அவள் நாவில் கொடுக்க... இந்த ஏகாந்தம் இருவரையும் எங்கோ கொண்டு சென்று கொண்டிருந்தது நெறித்து பிடித்து அவள் பின் மேனி குலுங்க பின் பாளத்தில் பாசனம் செய்ய ஆசை கொண்டவன் மருதாணியை இழுத்து மேலே போட்டவன்...
"பச்சைக்குதிரை ஏறணும் போல இருக்குடி...
"இங்க எப்படிய்யா
"ஏன் உனக்கு முட்டி நடுங்க ஆசை இல்லையா ?
"அது இருக்கே நீ ஒவ்வொரு தடவை அதிர வைக்கும் போதும் அப்படி கண் சொருகும் தெரியுமா ரொம்ப பிடிக்கும் ..
"அப்படியா ?
ம்ம்
"அப்ப எதுக்கு தாமதம் வா பின்னாடி தொட்டி நிறைய தண்ணீ கிடக்கு அங்கே போய் சத்தமில்லாம நண்டு பிடிக்கலாம் "என்று மனைவியை அசப்பு இல்லாது தூக்கி கொண்டு பின் பக்கம் இருந்த நீர் தொட்டி உள்ளே மரு்தாணியை தூக்கி போட்டவன்.. தொட்டி நிறைய கிடந்த நீரில் மூழ்கி காமதேவதை போல முந்தானை நடுவே சுருண்டு இரட்டை தங்கம் கொழுகொழுவென ஆட மருதாணி முகத்தில் வடிந்த நீரை வழித்து கொண்டு எழும்ப நீருக்குள் போன துரை அவள் உதட்டை கவ்வி கொண்டு மறுபடியும் நீருக்கு அடியில் பதுங்கி கொள்ள ..தலை மட்டும் இருவருக்கும் வெளியே தெரிந்தது .. யாராவது வந்தால் நீருக்குள் புகுந்து மறைந்து கொள்ளலாம் காதல் இருந்தால் போதும் , காதல் ஆசையை எப்படியும் தணித்து விடலாம் என புது கொள்கை வகுத்து கொண்டிருந்தனர் .. அவன் முத்தம் ஒரு புறம் அவளை சிணுங்க வைக்க அவன் கைகள் தொடை மறைத்த புடவையை உருவி தங்க சுரங்கம் கையில் தேடி நீருக்குள் வலம் வர அவளும் விடுவாளா நீரில் நீந்திய ஒட்டகத்தை விரலில் வீணை வாசிக்க..
"யாரும் வந்துடாம திரும்பி திண்டை பிடி "தொட்டி விளிம்பு பிடிக்க வைத்தவன் நீரில் இடை மறைத்த மனைவி சஹாரா பாலைவனம் தேடி நீருக்குள் போய் அங்கே ஒரு இச் வைத்து நாவில் வெள்ளை அடிக்க .
"யோவ்ஊஊஊஊஊ ஸ்ஆஆஆஆ அவன் நீருக்கு அடியில் செய்யும் மன்மத செயலில் இவள் நீருக்கு மேல் தொட்டி விளிம்பு பிடித்து கொண்டு அலறினாள்... அவள் தொடையும் வயிறும் கிடுகிடுவென ஆட கணவன் தலை தெரிந்து பின்னே எட்டி பார்க்க, அவளை மயக்கும் பார்வை பார்த்து கொண்டே கட்டுப்பாடு இல்லாமல் வளர்ந்து நின்ற வைர ஊசியை மனைவி இடை கொண்டை ஊசி வளைவில் சரக்கென்று சொருகி ஆரம்பமே அதிரடி ஆட்டக்காரனாக களம் இறஙக ..
"யோவ் மெதுவாய்யா.."
"நீ என்ன புதுசா பழசுதானடி பழகு நச் நச் என இன்னும் வேகம் கூட்ட
"அதிருதுய்யா..
"நல்லா இருக்கா அதை சொல்லு
"ம்ம் அவள் திரும்பி அவனை பார்க்க
"தள்ளி வா "அவளே இடை நெளித்து அவன் இடிகள் ஆனந்தமாக வாங்க கையை முன்னால் விட்டு மசியாத உருளையை கையில் மசித்து கொண்டே ஆட்டத்தை முடிக்க மனம் இல்லாது மறுபடி கண்ணீர் விட்ட காளையை நுழைந்து அடுத்த ஆட்டம் தொடங்க ,மருதாணி உதட்டை கடித்தாள் எத்தனை சுகம் தான் இளம் உடல் தாங்கும்...
"ப்பா என நீரில் அப்படியே விழுந்த துரையை அவளும் அணைத்து கொண்டு ..
"எப்படிய்யா இத்தனை நாள் இந்த சுகத்தை தேடாம கிடந்த என்ன பிழிஞ்சு எடுக்கிற.."
"உனக்காக அதுவும் காத்திருந்து இருக்கு போல ஆசை காதல் எல்லாம் நமக்கு உண்டான ஒருத்தி மேல வந்தாதான் அதுக்கு பேர் புனிதன், எனக்கு உன் மேல வந்திருக்கு .. இத்தனை வயசுல இது எல்லாம் அனுபவிக்கணும்னு எனக்கு எழுதி இருக்கு ... "
"சும்மா வயசானவர் போல பேசாதீங்க அவளுக்கு முகம் சுண்டி போக...
"ஏன் பாசமா ?
"ம்க்கும் நீங்க கிழவன் ஆனா நானும் கிழவி ஆகிடுவேன்ல அந்த வருத்தம்யா "என்ற மனைவியை நீ குமரி என்பதை காட்டு என அவளை ஆள துடித்த தூங்கா வனத்தை தூக்கி காட்டி அவள் நான் கிழவிதான் விடும்யா முடியல என அலறும் வரை விடவே இல்லை ..
எண்பது வயதில் கூட காதலும் காமமும் தித்திக்கத்தான் செய்யும் இருவர் மனதிலும் இளமையான காதல் உணர்வுகள் பெளர்ணமி போல ஒளிர்ந்து கொண்டே இருந்தால் காதலும் காமமும் இனித்து கொண்டேதான் இருக்கும் ...
அசப்பு இல்லாமல் இருவரும் குளித்து வேறு ஆடையில் தங்கள் இடங்களில் படுத்து நிம்மதியா கண்களை மூடினர் ... இதுவரை ஆட்டம் காட்டிய நித்திரை, இருவரையும் இனிதாக தழுவி கொண்டது ...
கூடலில் களைத்து மருதாணி உறங்கி கொண்டிருக்க விடியலில் உடம்பை அசைக்க முடியாது அசைத்து மணியை பார்த்தாள் மணி ஐந்து .. சத்தம் இல்லாது பின் புறம் வந்து காப்பி போட உட்கார பின்வாசல் பக்கம்
"மருதாணி அக்கா என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு மருதாணி எட்டி பார்க்க .. அரவிந்த் நணபன் தினேஷ் நின்றான் ...
"தம்பி யார்னு தெரியலையே ..
"அரவிந்த் நண்பன் க்கா
"ஓஓ என்ன தம்பி அவுக தூங்குறாங்க எழுப்பவா
"வேண்டாம் அக்கா உங்கள பார்க்க த்தான் வந்தேன்
"என்னையா எதுக்கு தம்பி ?
"அரவிந்த் உங்ககிட்ட பேசணுமாம்
"என்கிட்டேயா?
"ஆமாக்கா வாழைத்தோப்புல காத்துகிட்டு நிற்கிறான் போவீங்களாம்...
"இப்பவா?
"ஆமாக்கா நீங்க போய் பேசினா எல்லா பிரச்னையும் தீர்ந்து போகும் போங்களேன் ..மருதாணிக்கும் அதுவே சரி என்று பட
"ம்ம் சரி தம்பி "என்று தூங்கும் கணவனை பெருமூச்சு விட்டு பார்த்தவள் அந்த விடிந்ததும் விடாயாத காலை அரவிந்தை பார்க்க வாழை தோப்பு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..
அன்புக்கு ஏங்கும் மனங்கள் என்றும் சுய மரியாதை பார்ப்பது இல்லை .. துரையின் அன்பை அடைந்த மருதாணியும் தன் சுய மரியாதை இழந்தாலும் பரவாயில்லை இருவரையும் இணைத்து வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் அரவிந்தை பார்க்க விரைந்தாள்..
22 வனம் சேர்ந்த ஐவணம் !!
மருதாணி வெளிச்சம் வராத அந்த தன்னந்தனி வாழை தோப்புக்குள் வரப்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்... அரவிந்த் காலிலாவது விழுந்து துரையோடு அவனை சேர்த்து வைத்து விட வேண்டும் என்ற ஆசை மட்டுமே அவள் இதயம் முழுவதும்... காதல் என்பது அதுதானே!! நான் மட்டும் உன் அன்பை பெற்றுக் கொள்கிறேன் என்று அவனுடைய அன்பையும் அரவணைப்பையும் அவள் மட்டும் வாங்கிக் கொண்டால் அதில் என்ன உண்மையை நேசம் இருக்கும்... அவனுக்கு என்ன பிடிக்கும் என்பதை பார்த்து செய்வதில் தானே இவளுடைய பதில் காதல் காட்ட முடியும்...
துரை என்னதான் கலங்காமல் இருப்பது போல் நடித்தாலும் அவன் இருதயம் முழுவதும் தன் மகனை நினைத்து ஊசலாடுவதை அவள் அறிவாளே... இப்படியே போனா மன நோவும் உடல் நோவும் சேர்த்தே கொண்டு வந்துவிடும் என்று நினைத்தவள்... துரிதமாக பேசி இதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே அரவிந்தை தேட ...
உதித்து வரும் சூரியன் பார்த்துக்கொண்டு கிழக்குப் பார்க்க திரும்பி நின்றான் அரவிந்த்.. அவள் வந்த சத்தம் அறிந்தான், ஆனால் திரும்பி அவள் முகத்தை பார்க்கவில்லை ...
"ம்க்கும் ... தம்பி ..கூப்பிட்டு விட்டீங்கலாமே..
"ம்ம் , ஆமா..குரலில் மெல்லிய நடுக்கம்
"என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னதா அந்த தம்பி சொன்னாரு ...
"ஆமா பேசணும்"... மருதாணிக்கு உதறல் தான் என்ன நடக்க போகிறதோ என்று ... அவளும் இப்போதுதான் நிம்மதியா வாழ்கிறாள் மறுபடி நிம்மதி இல்லாத வாழ்வை தேடி ஓட சொன்னால் முடியுமா ? இதுவரை தன் இதயம் யாரையும் சுமக்க வில்லை பளு இல்லை ஓட எளிதாக இருந்தது..இப்போது மனம் துரையை முழுதாக சுமக்கிறதே..ஆனால் பேசித்தான் ஆக வேண்டும் மூவர் காலிலும் குத்திய கண்ணாடி துண்டை எடுத்து எறிந்தால்தான் மீதி வாழ்க்கை தொலைவை கடக்க முடியும் என்ற நிர்பந்தம் வந்ததுவே...
"என்ன பேசணும் தமபி ?
"எங்க அப்பாவை பற்றி "என்றவன் திரும்ப... அவன் கண்ணெல்லாம் கண்ணீராக நிறைந்த நின்றது
"தம்பி" மருதாணிக்கு அதிர்வு ஆண் அழுகிறான் என்றால் இதயத்தில் வலியை சுமக்க முடியவில்லை என்று தானே அர்த்தம் ..
அவள் அருகே நடந்து வந்தவன்...மருதாணி எதிர்பாராத நேரம் சட்டுன்னு அவள் காலில் விழுந்து கையெடுத்து கும்பிட்டவன்..
"தயவு செஞ்சு எங்க அப்பாவோட வாழ்க்கையை விட்டு போயிடுங்க.. அவரை என்னால உங்களுக்கு விட்டுக் கொடுக்க முடியாது , நான் அவர் இல்லாம இப்படியே இருந்தா ஒருநாள் மூச்சு அடைச்சு செத்துப் போனா கூட போயிடுவேன்....
"ஐய்யோ தம்பி என்ன பண்றீங்க எழும்புங்க " என்று மருதாணி பதறினாள்..தன்னை மிரட்டுவான் என நினைக்க , அவனோ இப்படி காலில் விழுவான் என நினைக்கவே இல்லை .. அரவிந்த் எழும்பி கண்களை துடைத்து கொண்டவன்..
"நான் பேசுறது நியாயம் இல்லாததுதான், ஆனா இது தவிர எனக்கு வேற வழி தெரியல ... இதுநாள் வரைக்கும் எங்க அப்பா மேல இவ்வளவு பாசமும் அன்பு வச்சிருக்கேன்னு எனக்கு தெரியாது இப்பதான் புரிஞ்சுகிட்டேன் ... காதல் மட்டும் தான் சுயநலமானதுன்னு நினைச்சேன் ஆனா அதைவிட தகப்பன் பாசம் சுயநலமானதுன்னு , அவர் எனக்கு காட்டுன அன்பும் நேசமும் எனக்கு உணர்த்திடுச்சு எத்தனையோ நாள் அவரை நான் உதாசீனப்படுத்தி இருக்கேன்.. அவ்வளவு ஏன்? இந்த ஊர் மத்தியில நீ எனக்கு அப்பாவே இல்லன்னு உறவை வெட்டிட்டு வந்தேன் , இதுக்கெல்லாம் காரணம் அவர் நேசத்தையும் அன்பையும் இன்னொருத்தவங்க வாங்குவதை என்னால தாங்கிக்க முடியல .. அவர் சந்தோஷமா இன்னொரு வாழ்க்கை வாழனும்னு நினைச்சேன்தான் ... ஆனா , என்ன தாண்டி அவர் இன்னொருத்தர் கூட போகும் போது அத பாத்துக்கிட்டு என்னால கடந்து போக முடியல இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு என்னை ஏத்துக்க வேண்டியதுதானேன்னு நீங்க சொல்லலாம்.. எனக்கு அதுவும் பிடிக்கல எங்க வனத்துல நான் அப்பா ரெண்டு பேர் மட்டும்தான்... அந்த வாழ்க்கை எங்களுக்கு அவ்வளவு பிடிக்கும் ... என் அப்பாவோட கைப்பிடிச்சு நடந்து அவரோட மடியில படுத்து அவர் உருட்டி தந்த ஒருவாய் சோறு சாப்பிடுட்டு, அவர் கூட கதை பேசி நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்த அந்த அழகிய வாழ்க்கை மறுபடியும் வேணும்னு ஆசையாக இருக்கு இனி அது நடக்காதுன்னு தெரியும்.. ஆனா நீங்க துரையோட வாழ்க்கையை விட்டு போயிட்டா அது நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு ... எனக்கு என் அப்பா வேணும் ப்ளீஸ், அவர விட்டுப் போயிடுங்க இந்த ஊரை விட்டு எங்கேயாவது போயிடுங்க .. நீங்க போயிட்டீங்கன்னா...என் அப்பா எனக்கு கிடைச்சிடுவார்.... என்ற அரவிந்தை பாவமாக மருதாணி பார்த்தாள் ...
"எனக்கு காதல் வேண்டாம், பணம் வேண்டாம் வசதி வேண்டாம் எதுவும் வேண்டாம் என் துரை மட்டும் போதும் நாங்க ரெண்டு பேரும் எப்போதும் போல அவருக்கு நான் எனக்கு அவர்னு சந்தோசமா வாழ்ந்துட்டு போறோம்.. எங்கள விட்டுடுங்க "என்று உள்ளம் குமுறி அரவிந்த் அழ ஆரம்பித்தான்...
இதுவும் ஒரு அன்பின் பைத்தியக்காரத் தன்மை தான் .. காதலில் மட்டும்தான் நீ இல்லாமல் நான் இல்லை என்று வாழ்கிறார்கள் என்பது இல்லை.. சில உறவுகளிலும் இந்த நிலை உண்டு அரவிந்துக்கு துரையின் மீது வெறித்தனமான அன்பு, தன் தந்தையை மருதாணியின் கையில் கூட கொடுக்க விரும்பாத பேரன்பு.. அவன் முடிவுகள் பேசுவது அத்தனையும் தவறு என்று தெரிந்தாலும் மருதாணி இதனால் பாதிக்கப்படுவாள் என்று புரிந்தாலும், அவளுக்கும் துரையை தவிர வேறு யாரும் இல்லை என்ற உணர்வு இருந்தாலும் தங்கள் இருவருக்கும் நடுவில் மருதாணி வருவதை அவன் சுத்தமாக விரும்பவில்லை.... அன்று துர்கா மீது காதல் பெரிதாக தெரிந்தது இன்று அந்த காதல் கூட வேண்டாம் துரை போதும் என்ற நிலையில் நின்றான்
அரவிந்தன் கண்ணில் வடிந்த கண்ணீர் அது அவன் தந்தை மீது வைத்திருந்த பாசத்தை பறைசாற்றியது..
எங்கே துரை மட்டும்தான் அரவிந்த் மீது அன்பு வைத்திருக்கிறாரோ? இவனுக்கு அந்த அன்பு இல்லையோ என்று மருதாணி நேற்று மாலை வரை நினைத்திருக்க ... ஆனால் நடு இரவில் வந்து தன் தகப்பன் நெஞ்சில் படுத்துக் கொண்டானே அப்போதே அவருக்கு இருக்கும் அதே பாசம் இவனுக்கும் குறையாது இருக்கிறது என்ன பாசத்தை அவன் வேறு மாதிரி காட்டுகிறான்.. . என்று புரிந்தது....
வளர்ந்து இத்தனை வயது ஆன இவர்களுக்கே சில நேரம் குடும்பமும் அதன் நிலைபாடும் புரிவதற்கு தடுமாறும் பொழுது... அரவிந்துக்கு இப்போதுதான் இருபத்திஐந்து வயதில் புதிதாக சமுதாயத்திற்குள் ஊடுருவும் அரவிந்த் எப்படி அன்பின் கட்டமைப்புகளை தகுதி வாரியாக பிரிக்க பழகுவான்.. நம்மை சுற்றி எத்தனை குடும்பங்களை பார்க்கிறோம் இரண்டாவது திருமணம் முடிந்த பிறகு முதல் மனைவியின் மகவை ஒதுக்கி வைப்பது, இல்லை அவர்களுக்கு என்று இன்னொரு குழந்தை பிறந்த பிறகு, முதலாம் தாரத்தின் குழந்தை வேண்டாத ஒன்றாக வீட்டில் கிடக்கும் பொருளைப் போல் ஆவது ... இப்படித்தானே ஊடகங்களும் சமுதாயமும் இரண்டாவது திருமணத்தையும் , முதல் தாரத்தின் குழந்தையையும் காட்டுகின்றார்கள்.... இதுநாள்வரை விளையாட்டாக என் தகப்பனுக்கு இன்னொரு திருமணம் செய்து அவன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்றவன் மருதாணியோடு துரை வாழ்க்கையை பார்த்த பின்பு... எங்கே தன் மீது உள்ள அன்பு குறைந்து போகுமோ, தான் இவர்களுக்கு வேண்டாத பொருளாகிப் போவோமோ என்று பயம் பிடித்துக் கொண்டது அந்த பயத்தின் வெளிப்பாடு துரையிடமிருந்து மருதாணியை பிரிக்க நினைப்பது...அவனும் பாவம்தான் தன் தந்தை என்று மட்டும் வாழ்ந்து பழகியவனுக்கு புதிதாக இந்த சூழ்நிலை மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...
"தம்பி நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு ஓரளவுக்கு நானும் யோசிச்சு தான் இங்கே வந்தேன்...உங்க மனசுல உள்ளதை நீங்க சொல்லிட்டீங்க... நான் என் மனசுல உள்ளது சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா??" என்றதும் அரவிந்த் அமைதியாக மருதாணியை பார்த்துக் கொண்டிருக்க ...
"இந்த உலகத்தில் நான் தனியா ஓட ஆரம்பிக்கும் போது எனக்கு உங்களை விட சின்ன வயசுதான் காட்டுல வழி தெரியாம ஓடுன எனக்கு அழகான வாழ்க்கையை காட்டி தந்தது உங்க அப்பா கட்டின துரித தாலி அவர் கூட இருந்த இந்த சொற்ப நாட்கள் நான் இழந்த , நான் பார்க்காத சந்தோஷங்களை மொத்தமாக கொட்டிக் கொடுத்தது... அவர் மனைவி என்கிற ஒரு அந்தஸ்தே நான் தலை நிமிர்ந்து நடக்க வைக்குது எனக்காக தோள் சாய ஒரு தோள் இல்லைன்னு ஏங்கின காலங்கள் போய் , எனக்காக அவர் இருக்காருன்னு நிம்மதியை கொடுத்தது அவருடைய அன்பு , நானும் சக மனுஷி போல சந்தோஷமா வாழலாம்னு கத்துக் கொடுத்தது அவருடைய காதல் ... எந்த ஒரு எதிர்பார்ப்பும் பிரதிபலனும் இல்லாததுதான்.. ஆனா அவர் எனக்கு கொடுத்த அன்புக்கும் காதலுக்கும் நானும் ஏதாவது அவருக்கு செய்யணும்னு நினைச்சேன் ... நீங்க நினைக்கிற மாதிரி அவர் உங்களை வெறுக்கவோ விலகவோ மாட்டார் ... நீங்க அவருக்கு இதயம் போல, நான் அவருக்கு உயிர் போல ரெண்டுல எது போனாலும் அவருக்கு வலிக்கும் தம்பி , ஆனா ஏதாவது ஒன்று இழந்தே தீரணும்னு அவருக்கு இருக்கு போல, நீங்க ஆசைப்படுற மாதிரி நான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் இருந்து போயிட்டா நீங்க நிம்மதியாக இருப்பீங்கன்னா ... அவருக்காக அவர் எனக்கு தந்த அன்புக்காக, அவரோட மகனை அவர்கிட்ட சேர்த்து வைக்கிறது என் காதல் கடமையா நான் நினைக்கிறேன்.... அவருக்காக எதுவுமே செய்ய முடியாமல் போயிடுமோன்னு நெனச்ச எனக்கு நீங்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்காக உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும் .... நீங்க இப்போ இதை என்கிட்ட கேட்கலன்னாலும் நானே நாளைக்கு காலையில இந்த ஊரை விட்டு போயிருப்பேன் தம்பி, எனக்கு கொடுத்து தான் பழக்கம் யார்கிட்டேயும் எதையும் பிடுங்கவோ எடுத்தோ பழக்கம் இல்லை ... அவர் கூட வாழ்ந்த இந்த பத்து நாட்களே போதும் அவர் நினைவோடு எங்கேயோ ஒரு இடத்துல சந்தோஷமா வாழ்ந்திடுவேன்,, உங்க அப்பாவ எதற்காகவும் ஏங்க விட்றாதீங்க தம்பி , பாசத்தை மட்டுமே கொடுக்க தெரிந்த ஒரு தகப்பன்.. அவரை இன்னொருவாட்டி கலங்க வச்சிடாதீங்க அதை மட்டும் தான் நான் உங்ககிட்ட பிச்சையா கேட்கிறேன் அவர் இங்க கலங்கி நின்னா, என் உயிர் எங்க இருந்தாலும் ஆடிப் போகும் ... எவ்வளவு கோபம்னாலும் அவர்கிட்ட பேசிடுங்க .... தயவு செய்து இப்படி பேசாமல் இருந்து அவரை தவிக்க விடாதீங்க ... உங்க வாழ்க்கையில என்னைக்கும் நான் தடையாக இருக்க மாட்டேன்.... நாளைக்கு போயிடுறேன் தம்பி .... காதலை கொடுக்கிறது மட்டும் காதல் இல்ல , நேசித்த அவருக்கு விட்டு கொடுக்கிறது கூட காதல் தான் என் வாழ்க்கையை உங்களுக்காக விட்டு கொடுக்கிறேன் சந்தோஷமா இருங்க" என்ற மருதாணியின் பேச்சில் அரவிந்த் எப்படி உணர்ந்தான் என்று புரியவில்லை..ஆனால் அதிசயித்து போனான் ..
அவர் என் கணவர் நீ யாருடா? என்று கேட்காமல் என் வாழ்க்கையையே விட்டு கொடுக்கிறேன் என்ற மருதாணியை அரவிந்த் பிரமிப்பு குறையாது பார்த்து கொண்டு நிற்க ...குமரன் ஏற்படுத்திய கையாள் இருவர் மருதாணிக்கு பின் பக்கம் அருவாளோடு ஓடி வர ... இமைக்கும் நொடியில் அனைத்தும் நடந்து முடிந்திருந்தது...
"ம்மாஆஆஆஆஆஆஆ என கத்தி கொண்டே ஓடி வந்த அரவிந்த் மருதாணியை விலக்கி விட, அவளை தாக்க வந்த அருவாள் , தடம் மாறி இடம் மாறி அரவிந்த் கழுத்தில் அருவாள் பாய்ந்திருந்தது....
ஹக்இஇஇஇஇஇஇஇஇஇஇ என துடித்து அரவிந்த் கீழே விழ....
"அய்யோ தம்பிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ என்று அலறி துடித்த மருதாணி , அரவிந்தை மடியில் தூக்கி போட்டவள் தன்,முந்தானை கொண்டு கழுத்தில் குபீர் என கொப்பளித்த ரத்தத்தை நிறுத்த பார்க்க...
"என் துரையை பார்த்துக்கோங்க ஏஏஏ உங்கள தவிர அவருக்கு நல்ல துணை யாரும் இல்லலலலல" என்றவன் தலை தொங்கி விழ...
"ஆஆஆஆஆஆஆஆஆஆ அய்யோ ஆண்டவா " என்று அலற
"மருதாணி அரவிந்தை கொன்னுட்டா.... துரையை அவனுக்கு விட்டு கொடுக்க கூடாதுன்னு அரவிந்தை தனியா வர வச்சி கொன்னுட்டா "என்று இருவர் கத்தி கொண்டே ஊருக்குள் ஓட ... மருதாணியை தேடி வந்த துரை அவள் கையில் அருவாளையும் மகன் ரத்த வெள்ளத்தில் அவள் மடியில் சரிந்து கிடப்பதையும் தான் பார்த்தான் ...
"சாமிஇஇஇஇஇஇ" என்று அலறி துரை வரப்பில் அப்படியே விழ மருதாணி கண்கள் நிலை குத்தி போய் சித்த பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்..
தராசிற்கு நியாயமெல்லாம் தெரியாது எந்தப்பக்கம் கணம் இருக்கிறதோ அந்தப் பக்கம் சாய்ந்து கொள்ளும் .. அதே போல மருதாணிதான் அரவிந்தை கொன்றால் என ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது இந்த நேரத்தில் மருதாணியின் இங்கே அவனைப் பார்க்க வந்தாள் என்ற கேள்வி பிடிபட்ட கூலிப்படையின் கையில் மருதாணி கலட்டி வைத்த ரெட்டை கொலுசு, அவள் கையில் ரத்தக்கரையோடு அருவாள் இப்படி அவளை கொலையாளியாக அனைத்து ஆதாரங்களும் காட்ட
உயிரானவண் மூச்சு இல்லாமல் தரையில் கிடப்பதையும், உயிரானவள் தன் மகனை வெட்டிவிட்டு அரக்கி போல இருப்பதையும் காணவா இருவர் மீதும் அன்பை அளவில்லாமல் கொடுத்தான்...
இனி காலம் தான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்...
ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களோ?
நான் பிரிச்சி விடுற வேலையில பிஸி மக்களே,
23 வனம் சேர்ந்த ஐவணம் !!
ஊரே கூடி விட்டது ... உடனே போலீஸ் தகவல் கேட்டு குவிந்து விட... வெட்டிய இருவரையும் பிடித்து வைத்திருந்தனர்..
"டேய் யார் இதை பண்ண சொன்னதுன்னு உண்மையை சொல்லுங்க" என இருவரையும் எஸ் ஐ அடிக்க
"மருதாணிதான் சார் இதை பண்ண சொன்னது .." அங்கே அனைவரும் அதிர்ந்து போயினர்
"என்னடா சொல்றீங்க?
"ஆமா சார், மருதாணி அக்காவுக்கு அரவிந்த பிடிக்கல, அவ இருக்கும் வரை எப்பவும் எனக்கு பிரச்சனை தான் அதனால அவன முடிக்கணும்னு சொல்லி அட்வான்ஸ் ஒரு லட்ச ரூபாய் தந்தது அதுக்காக நாங்க நேரம் பார்த்துகிட்டு இருந்தோம், இன்னிக்கி காலையில போன் போட்டிச்சி அரவிந்த் என்ன வர சொல்லி இருக்கான் .. நீங்க ரெண்டு பேரும் வந்தா, அவனை சத்தமில்லாம முடிச்சிடலாம்னு சொல்லவும்... நாங்க கிளம்பி வந்தோம் மீதி பணம் கேட்க என்கிட்ட பணம் இல்ல இந்த தங்க கொலுசு தான் இருக்குன்னு என்கிட்ட களட்டி கொடுத்தாங்க , என்று மருதாணி மேஜையில் கழட்டி வைத்த ரெட்டை தங்கை கொலுசை தூக்கி காட்டினார்கள் ...
ஊருக்கே தெரியுமே துரையின் மனைவி மட்டும்தான் காலில் தங்க கொலுசு போட்டு நடமாடுவாள் என்று தன் மனைவி எதிலும் குறைந்து விடக்கூடாது என்று வெகு பகுமானமாக அல்லவா அவளை வைத்திருக்கிறான் ..
நாங்க ரெண்டு பேரும் வாழை மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி நின்னோம் இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏதோ வாக்குவாதம் நடந்து சண்டையாகி போச்சு இதுதான் சமயம் என்று நாங்க அவரை வெட்ட போக அதுக்குள்ள அக்காவே வெட்டி போட்டிடுச்சி.. நாங்க சுதாரித்து ஓடும் முன்ன ஊரு எங்களை வளர்ச்சி புடிச்சுடுச்சு , இதுதான்யா நடந்தது சத்தியமா மருதாணி தான் அரவிந்த கொல்றதுக்கு எங்கள கூப்பிட்டு விட்டது "என பழியை மருதாணி மீது அலுங்காமல் குலுங்காமல் போட்டனர்
துரை எதையும் கவனிக்கவில்லை அவன் கண்கள் சரிந்து கிடந்த மகனை வெறித்து பார்க்க மருதாணி எதுவும் உணராத நிலையில் இருக்க ..
"பாதகத்தி!! என்னைக்கு எங்க துரை ஐயா வாழ்க்கைக்குள்ள வந்தாளோ அன்னைக்கே அவனுக்கு சனி பிடிச்சிருச்சு.. இவ குணம் தெரியாம நாங்க எல்லாரும் இவள புடிச்சி அவன் தலையில கட்டி வச்சி , அவன் வாழ்க்கை மண்ணா போச்சு.. முதல்ல அவன் மகன அவகிட்ட இருந்து பிரிச்சா, இப்போ அவனையே கொன்னுட்டாளே இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்காளோ தெரியலையே .. சார் அவள புடிச்சுட்டு போய் ஜெயில்ல போடுங்க, சிரிச்ச முகமா ஊருக்குள்ள அங்கேயும் இங்கேயும் சுத்திக்கிட்டு இருந்த அரவிந்த சாட்சிபுட்டாளே, இந்த இழப்புல இருந்து துரை எப்படி மீண்டு வருவான்" என்று ஊர் மக்கள் அனைவரும் அன்று அவளுக்கு புகழாரம் சூட்டியவர்கள், இன்று அவளுக்கு இகழாரம் சூட்டி மண்ணை வாரி மருதாணியின் முகத்தில் அடித்தார்கள் , அவள் தான் அரவிந்த் ரத்தத்தை பார்த்த பொழுதே மரணித்து விட்டாளே..
இதற்காகவா?? இத்தனை போராட்டம்.. கடைசியில் மூச்சின்று கிடக்கிறானே?? அவள் ஊமை விழியில் எத்தனை எத்தனை வலிகள் .... அவள் கண்ணீர் மட்டும் சொட்டு சொட்டாக அரவிந்த் கண்ணில் விழ..அரவிந்த் தொண்டைக்குழியில் மட்டும் ஒரு ஈன குரல் வந்து கொண்டிருக்க .. அதை கண்ட ஊரார் ...
"எய்யா துரை மகனுக்கு உசுரு கிடக்குதுய்யா, தூக்கு ஆஸ்பத்திரி போவோம் "என்று அவன் தோளை தட்டி எழுப்பவும் அதிர்ச்சி விலகிய துரை மகன் உயிர் இருக்கிறது என்ற பின்தான் உயிர் வந்தது போல முழித்தான் ..
"சாமி எய்யா, சாமி கண்ணை திறந்து அப்பாவை பாருய்யா" என்றதும் அரவிந்த் கஷ்டப்பட்டு தன் கண்களை திறந்து துரையை பார்த்தவன் ஏதோ சொல்ல வாயசைக்க பேச முடியாமல் கண்கள் சொருக... அவனை அப்படியே தன் மார்போடு அணைத்துக்கொண்ட துரை .... தன் சட்டையை கழட்டி அவன் கழுத்தை சுற்றி பிடித்து கொண்டு அரவிந்தை தூக்கி தோளில் போட்டு கொண்டு ஓடினான் ... ஊரார் அவன் பின்னால் போக .. மருதாணியை போலீசார் அழைக்க
"நான் வர மாட்டேன்னு சொல்லல... இப்ப அவர் கூட நான் பக்கத்தில இருக்கணும், உங்களுக்கு புண்ணியமா போகும் அதுக்கு மட்டும் உதவி செய்ங்க என்று கையெடுத்து கும்பிட ...
"அந்த பையன் வாயை திறந்து நீ காரணம் இல்லைன்னு சொன்னா தப்பிச்ச, செத்துட்டான் அப்ப இருக்கு வா "என்று காவலர்கள் பந்தவஸ்தோடு மருதாணி மருத்துவமனை வந்து சேர்ந்தாள் .. துர்கா விஷயம் கேள்வி பட்டு உடைந்து போனாள் .. அவன் கேவலமாக பேசினான் என்று கோபம் இன்னும் இருக்கிறது.. ஆனால், அரவிந்தை இப்படி இரத்த வெள்ளத்தில் துரை தூக்கிக் கொண்டு ஓடி வரும் பொழுதும்.. அவன் மீது வன்மத்தையோ கோபத்தையோ பிடித்து வைக்க எப்படி அவளால் முடியும்... அரவிந்தை அந்த நிலைமையில் பார்த்தவளுக்கு கண்ணீரைத் தவிர வேறு எதை தன் காதலுக்கு பரிசாக கொடுக்க என்று தெரியவில்லை. .
"அம்மா அரவிந்த், அம்மா அரவிந்த் "என்று மருதாணியை கட்டிக்கொண்டு அவன் பெயரை ஓயாது சொல்ல மருதாணி நிதானமாக இருந்திருந்தால் தன் மகள் மனதில் இருக்கும் அரவிந்தை கண்டுபிடித்து இருப்பாள்.. அவளே குற்ற உணர்ச்சியின் குறுகி நின்றாள் மருத்துவர்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்றார்கள் ...
"துரை கழுத்துல வெட்டுப்பட்டு இருக்கு , நரம்பு எதுவும் பாதிச்ச மாதிரி இல்ல தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையில் வெட்டு விழுந்து இருக்கு அஞ்சு மணி நேரம் பொறுத்து பார்ப்போம், நினைவு திரும்பலேன்னா,அதற்கு பிறகு நம்மால எதுவும் செய்ய முடியாது கழுத்துல சின்ன ஆபரேஷன் பண்ண வேண்டியது இருக்கு அதுக்காக சென்னையில இருந்து பெரிய டாக்டர வர சொல்லி இருக்கோம் , முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணி பார்ப்போம் என டாக்டர் கூற... துரை தடுமாறி பக்கத்தில் ஆதரவுக்கு கை தேட , மருதாணி ஓடிப்போய் அவன் கையை பிடித்துக் கொள்ள மருதாணியின் கையை இறுக்கிப்பிடித்துக் கொண்டான் துரை.
"ஒன்னும் ஆகாதுய்யா பயப்படாத உன் மகன் மறுபடி வந்து அப்பான்னு கூப்பிடுவான், உன்கிட்ட சண்டை இழுப்பான் , உன்ன சீண்டி விட்டு விளையாடுவான் ... அவனுக்கு உன் மேல கொள்ளை பிரியம் இருக்கிய்யா, உன்னை விட்டுட்டு போயிட மாட்டான்" என்று மருதாணி அவன் முதுகை தடவி கொடுக்க ... இருக்கும் இடம் மறந்தான், தன் நிலை மறந்து, கதறிய துரை மனைவியை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்...
அவனுக்கு பேச தெரியவில்லை நாவுகள் வரண்டு போனது கம்பீரம் தொலைந்து போனது, தான் ஒரு ஆண்மகன் என்பதையும் மறந்து வானம் பார்த்து கதறி அழுதான்.... பெரிய மருத்துவர் உடனே வந்தார் அரவிந்த் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்ற கைவிரிக்க ..
"சாரி துரை எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம் பட் நினைவு திரும்பல , ரெண்டு தடவை பிக்ஸ் வந்துடுச்சு ஓவர் பிளட் லாஸ், உயிரை காப்பாத்த வழியே இல்லை வேணும்னா போய் பாருங்க கடைசி வாய்ப்பா கடவுள் அவனுக்கு நினைவு கொடுத்தார்னா, மேற்கொண்டு சிகிச்சை அளிக்கலாம்... ஒரே ஒரு வாய்ப்பு இருக்கு , அதுவும் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள அவருக்கு நினைவு திரும்பணும் , பேசி பாருங்க இல்ல இதுதான் அவர்கூட பேசுற கடைசி பேச்சா கூட இருக்கலாம் என கூறி விட .. துரை உடைந்து போய் மறுப்பாக தலையாட்டியவன்...
"ம்ஹும் அவனை இப்படி என்னால பார்க்க முடியாது அவன் சாகறதுக்கு முன்னாடி என் உடம்ப விட்டு உயிர் போயிடும் நான் போக மாட்டேன், அவன் என் முன்னாடி துடிச்சு சாவுறதை நான் பார்க்க போக மாட்டேன்" என்று மறுப்பாக தலை அசைக்க... மருதாணியோ
"தயவு செஞ்சு போய்யா, உன் குரலை கேட்டா உன் மகனுக்கு புது தெம்பு வந்து முழிச்சாலும் முழிப்பான் எனக்கு நம்பிக்கை இருக்கிய்யா, நீங்க எந்த அளவுக்கு அவர் மேல அன்பும் பாசமும் வச்சிருக்கீங்களோ , அதைவிட ஒரு படி மேல அவர் உங்க மேல வச்சிருக்கார்ய்யா, இந்த உலகத்துல எல்லாத்தையும் விட என் அப்பன்தான் எனக்கு முக்கியம்னு சொன்ன புள்ளய்யா அவரு... எனக்காககூட உங்களை கொஞ்சமா விட்டுக்கொடுக்க முடியாம தவிச்சு போய் என் கால்ல விழுந்த கொலை சாமிய்யா , உங்க மூச்சு காத்து அவர் மேல பட்டாலே போன ஜீவன் திரும்பி வந்துடும்யா, ஒரு தடவ போய்யா.. நீயே உன் புள்ளைய கொன்னுடாத" என மருதாணி துரையை உள்ளே தள்ள .... இவன் உயிரற்ற சடலம் போல் கிடந்த தன் மகனை பார்க்க வலுவின்று உள்ளே போக மறுக்க.. கட்டிலில் அரை அடி உயரத்திற்கு அரவிந்த் உடல் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிக்க துறையின் கையும் காலும் நடுங்கி போய் நின்றான்
மருதாணி வேகமாக அவனை இழுத்துக்கொண்டு வந்து அரவிந்த் முன்னால் விட்டவள்... அரவிந்த் துடித்த கைகளை தூக்கி துரையின் கையோடு சேர்த்து பிடித்தவள்..
"உன் அப்பாவுக்காக ஏதாவது செய்யணும்னு உனக்கு ஆசை இருந்தா, மறுபடியும் பிழைச்சி வந்துடு தம்பி.. யாரோ பெத்த குழந்தைக்காக தன்னுடைய இளமையை , வாழ்க்கையை சந்தோஷங்களை விட்டுட்டு,தன் நண்பன் பெற்ற பிள்ளையை தூக்கிக்கிட்டு இதுதான் என் பிள்ளைன்னு ஊர் போற்ற உன்னை வளர்த்தார்... அந்த தகப்பனுக்கு வலியை கொடுத்துடாத சாமி, என் மகன் என்னை அடிச்சாலும் உதைச்சாலும் அவன் மேல இருக்கிற பாசம் பொட்டளவு கூட குறையாதுன்னு , அந்த பாசத்துல தெனமும் ராவு தூக்கத்தை இழந்து பொலம்புறாரு , அந்த தகப்பனுக்கு தீராத வலியை, நித்திரை இல்லாத இரவுகளை கொடுத்துட்டு போயிடாத ராசா , எங்க நீ அவர் ரத்தததில உண்டான புள்ள இல்லன்னு தெரிஞ்சா உடைந்து போவியோன்னு இந்த நொடி வரைக்கும் , தகப்பன் என்கிற ஸ்தானத்தை விட்டு நகராம உனக்காக காத்துக் கிடக்கிற அவர நிரந்தரமா அழ வச்சிட்டு போயிடாத சாமி, கண்ணை முழிச்சு பாருய்யா , நீ இல்லாத இந்த உலகத்துல உன் அப்பாரு வாழ மாட்டார், நானும் அவர் பின்னாடியே வந்து சேர்ந்திடுவேன்.. கண்ணை திற சாமி என்று மருதாணி அழ .. துரை மெல்ல தன் மகன் கண்ணில் முத்தமிட்டவன்..
"அப்பாவுக்கு தண்டனை உன் சாக பார்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா சாமி .. ஆனா உன் அப்பா உனக்கு முன்னாடி செத்து போவேன்னு புரியாம போனியே" என்ற துரை தன் தலையை படீர் படீர் என்று சுவற்றில் மோத..
"யோவ் ஊஊஊஊஊஊ என்று மருதாணி அவனை போய் பிடிக்க..
"என் அன்பு ஒரு நாளும் குறையாதுன்னு இதுக்கு மேல எப்படிடா உனக்கு புரிய வைப்பேன், உன் கூடவே செத்து போறேன், வா சேர்ந்தே போவோம் என்று துரை நிறுத்தாமல் தலையை மோத...
"அய்யோ என்ன பண்றீங்க "மருதாணி யாரை காக்க என தெரியாது அலற...
"என் புள்ள இல்லாம நான் மட்டும் வாழ்ந்து எதுக்கு" என்றவன் கத்திரிக்கோலை எடுத்து தன் தொண்டையில் குத்த போக அவன் கையை அசைக்க முடியாது அரவிந்த் கைகள் தடுத்து பிடித்து வைத்திருந்தது ....
"யோவ் ... மருதாணி அவனை அசைக்க...
"ப்பாஆஆஆ என்ற மகன் சத்தத்தில் துரை திரும்ப அவனையே பார்த்து கொண்டிருந்தான் அரவிந்த் ..தலை மறுப்பாக ஆடியது
"எய்யா" என்று ஓடி வந்து அவன் அருகே துரை அமர ... அரவிந்த் துரை கையை எக்கி பிடித்து தன் உதட்டில் வைத்தவன்..
"உன்ன அப்பான்னு கூப்பிட அனுமதி தருவியா துரை ..."
"எய்யா என்னய்யா இது .... "
"நான் உன் மகன் இல்லையா??".. தொண்டை கரகரத்து வந்தது ... இந்த உத்தமம் மகனாக இந்த உத்தமி ரத்தத்தில் நான் ஏன் உதிக்க வில்லை என்று வருந்தினான்... அவன் யார் என்ற உண்மையை மருதாணி கூற கூற இந்த உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர்கள் இருவரையும் மறுமுறை காண கண்களை திறந்து விட்டான்
"அப்படி எல்லாம் இல்ல சாமி ...
"ஏன்பா எனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நின்ன
"உன்ன விட எனக்கு வேறு எதுவும் பெருசா தெரியல சாமி ...
"உயிரை கூட கொடுக்கிற அளவு என்ன பிடிக்குமா..
"ஆமா சாமி அப்பாவுக்காக திரும்பி வந்துடுய்யா...
"உங்க ரெண்டு பேருக்கும் இடைஞ்சலா இருக்க கூடாதுன்னுதான் போக நினைச்சேன்.. ஆனா போக முடியலப்பா... உன் மகனா கடைசி வரை இருக்கிற பாக்கியம் மட்டும் எனக்கு தாப்பா... உன்ன அப்பான்னு கூப்பிட்டாலே என் பிறவி புண்ணியம் ஆகிடும் ப்பா" என்ற மகனை கட்டி கொண்ட துரை ...
"ரத்தம் வேணும்னா ஒன்னா இல்லாம இருக்கலாம் சாமி , ஆனா நீதான் கடைசி வரை இந்த துரைக்கு தலைச்சம் புள்ள ... என்ற தந்தை நெஞ்சில் பேச்சற்று அரவிந்த் கிடக்க ..
"எய்யா எய்யா அரவிந்த்... அரவிந்த் என பதறி அவனை தூக்க ..
"உன்ன தொல்லை பண்ணி வருவேன்பா, காத்திரு" என்றவன் கண்ணை சிமிட்ட ... மருத்துவர்கள் ஓடி வந்து அவனுக்கு மறு சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்கள் ... மறுபடியும் கோமா சென்று விட்டான்....
சூனியம் வைக்கிற உன் கையை உடைச்சி அடுப்புல வைக்க
அதான ??
அதேதான்!! வேகமாக சொல்லுவீங்களே??
24 வனம் சேர்ந்த ஐவணம் !!!
அரவிந்த் மறுபடி கோமா சென்றாலும் , பிழைக்க ஐம்பது சதவிகிதம் வாயப்பு இருக்கு என்று கூற இம்முறை துரை திடமாக நின்றான் ...
வருவேன்னு சொன்னான் வருவான் என வெளியே காத்திருந்தான்...காவலர்கள் மருதாணியை கைது செய்ய நினைக்க ... அவளும் அமைதியாக அவர்களோடு நடக்க துரை போய் குறுக்கே நின்றான் ...
"எதுக்கு கைதி செய்றீங்க ?
"அந்த தம்பி முழிச்சி இந்த சம்பவத்துக்கு இவங்க காரணம் இல்லேன்னு சொல்ற வரை, போலீஸ் கஸ்டிடியிலதான் உங்க மனைவியை வைக்கணும் துரை ..எஸ்எஸ் கூற
"எவன் வெட்டினானோ அவனை வை, என் பொண்டாட்டியை கூட்டிட்டு போக எவனுக்கும் உரிமை இல்லை ..
"இல்லை துரை ஆதாரம் எல்லாம்
"பொல்லாத ஆதாரம், அதை ஐஞ்சு ரூபாய் கொடுத்தா தயார் பண்ணலாம் ... அவ கொலுசையும் போனையும் தூக்கிட்டு போய் ஆதாரம் உண்டாக்கினா அதுக்கு பேர் ஆதாரமா .. ஹான், என் பொஞ்சாதிக்கு உசுரு கொடுக்க தெரியுமே தவிர, உசுரை எடுக்க தெரியாது வாழைத்தோப்புல பூட்ஸ் தடம் கிடக்கு, இந்த ஊர்ல வயல் வரப்புல பூட்ஸ் போடுற ஒரே ஆளு அந்த குமரன் பயதான் , சம்பவம் நடந்த இடத்தில அவனுக்கு என்ன வேலை அவனை போய் விசாரிங்க..அப்படி இல்லையா என்ற மொவன் முழிச்சி உண்மையை சொல்லுவான், அதுக்கு பிறகு வாங்க மருதாணி நீ உள்ள போ என்று கூறவும் மருதாணி தன் கணவன் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையில் புல்லரித்து போனாள் ..
ஏழு நாள் கழித்து இதோ அரவிந்த் கண்களை திறந்தான்... மருதாணி நர்ஸ் என்பதால் அவளே உள்ளே இருந்து ராவும் பகலும் அவன் முழிக்க காத்து கிடந்தாள்... அரவிந்த் கண்ணை முழித்து
அப்பா?? என்று துரையை தேட
இருங்க தம்பி வெளிய தான் இருக்காரு, கூட்டிட்டு வர்றேன்" என்று மருதாணி துள்ளி கொண்டு வெளியே ஓடி வந்தவள்
"யோவ் உன் மகன் கண்ணை திறந்துட்டார்யா என மருதாணி துரையை தேட, அவன் இருந்த இருக்கை காலியாக கிடந்தது ... துர்கா அருகே உள்ள இருக்கையில் தூங்கி கொண்டிருக்க..
துர்கா அவர் எங்க?
தெரில இந்த லெட்டரை கொடுக்க சொல்லிட்டு போயிட்டார்' என மருதாணி கையில் கடிதத்தை கொடுக்க அதை திறந்து பார்த்தவள் அப்படியே அதிர்ந்து கீழே விழுந்தாள்...
என்னை விட்டு பிரிய நினைத்த இருவரும் எனக்கு தேவை இல்லை, போய் வருகிறேன்... என முடித்து வைத்திருக்க மருதாணி வேகமாக வெளிய ஓடி போய் துரையை தேட .. அவன் பஸ் ஏறி சென்று விட்டதாக கண்டவர்கள் கூற.. அரவிந்தும், மருதாணியும் உலகே நின்று போனது போய் அதிர்ந்து போயினர்...
இவளை விட்டு அரவிந்தையும் ,அரவிந்தை விட்டு மருதாணியை என்று துரை ஒரு நாளும் விலக நினைக்க வில்லை ..இருவரும் வேண்டும் என்று இறுதி வரை முடிவாக இருந்தானே.. ஆனால் இவர்களோ தன்னை பிரிய நினைத்து ஒருவன் மரணத்தை தேரந்தெடுத்தான், ஒருத்தி தூரம் போக நினைத்து விட்டாள் நான் இல்லாத அருமை தெரியட்டும் என நினைத்து தலைவன் சென்று விட்டானோ? அரவிந்த் குமரனின் அவன் ஆட்களும் தான் என்னை கொல்ல முயற்சித்தது என வாக்கு மூலம் கொடுக்க குமரன் இப்போது ஜெயிலில் ..
மருதாணியும் அரவிந்தும் உடைந்து போய் அமைதியாக அறையில் உட்கார்ந்து இருந்தனர் .... அவனுக்கு அவளிடம் என்ன சமாதானம் சொல்ல என்று தெரியவில்லை.. இவளுக்கு அவனுக்கு எப்படி ஆறுதல் கூற என்று தெரியவில்லை ஆலமரம் இல்லாத பறவைகள் போல இருவரும் தவித்தனர்..
"பீல் பண்ணி முடிச்சாச்சுன்னா சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க" என துர்கா உள்ளே வந்தவள் , அரவிந்த் பார்வை அவளை காணலாக வருடவும்..
லேலை இருக்கு நான் போயிட்டு வர்றேன் என துர்கா உடனே கிளம்ப நினைக்க
"எங்கடி போற ? மாதவன் ஏதோ வேலையா பாண்டிச்சேரி போறேன்னு சொன்னான் .. நீ மட்டும் வீட்டுல போய் தனியா என்ன பண்ண போற மருதாணி அந்த நிலையிலும் அவளை பாதுகாப்பாக வைக்க நினைக்க
"ஹான் நான் ஏன் தனியா இருக்க போறேன் ஆங்கிள் வீட்டுக்கு போறேன் ...
"அங்கேயா அவரே எங்க போனார்னு தெரியாம உட்ககார்து இருக்கோம் நீ அங்க போய் என்னடி பண்ண போற ..
"என்னது ஆங்கிளை காணமோ , அவர் என்ன குழந்தையா? காணாம போக.. அவர் வீட்டுல தான் இருக்கார் .. சாப்பாடு அவர்தான் செஞ்சி தந்தார் பீல் அவர் தான் கட்ட பணம் தந்தார் , நீங்க என்ன லூசா? ..
"ஏது அவர் இங்க இருக்காரா? பஸ்சுல எங்கேயோ போனார்னு சொன்னாங்க
"பின்ன உங்க தொல்லை தாங்காம ஓடியா போவார் ஆங்கிள் செம ஸ்ட்ராங் , உங்களத்தான் ஓட விடுவார்?.
"அப்பாடி!!! என்று அரவிந்த் மருதாணி நிம்மதி மூச்சு விட
"ரொம்ப நிம்மதி படாதீங்க, நீங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் தலை வச்சு படுக்க கூடாதுன்னு சொல்லிட்டு வர சொன்னார்..."
"எதுக்கு?
"தெரியாது இருங்க ஆங்கிள்தான் போன் போடுறார் என போனை ஆன் செய்து ..
"ஆங்கிள் லைவுட் ஸ்பீக்கர் போட்டிருக்கேன் பேசுங்க , நல்லா திட்டுங்க என்று கிசுகிசுக்க...
"அந்த ரெண்டு நாயும் என் கண்ணுல முழிக்க கூடாது,, நான் அன்பை கொடுத்து மட்டும்தான ரெண்டும் பார்த்திருக்கும், கோவப்பட்டு பார்த்திருக்காதுல்ல, இனி பார்க்கும் உங்க ரெண்டு பேருக்கும் நான் அவ்வளவு இளப்பமா போனேனா? ஆளாளுக்கு ஒரு முடிவு எடுத்து , என்ன சுத்த விடுறீங்களோ இனி நான் உங்கள சுத்த விடுறேன் அடியாத மாடு பணியாதுன்னு இப்ப தான தெரியுது , இந்தாருடி உன் மகனை தேத்தி எடுத்து, கூட்டிட்டு வந்தாலும் சரிதான் ... இல்ல ரெண்டு பேரும் அந்தால எங்கேயாவது போய் செத்து ஒழிஞ்சாலும் சரிதேன், என்னை தேடி வந்தீங்க, நடக்கிறதே வேற துர்கா நீ என்ன அங்க பண்ற , சோறு கொடுத்தாச்சா ?"
"ஆமா ஆங்கிள்
"கிளம்பி வா அதுக என்னவும் செஞ்சிட்டு போகுதுக, கிறுக்கு கூட்டணி அமைச்சிருக்கு பாரு" என்றதும் துர்கா சிரித்து கொண்டே ...
"நல்லா வேணும் அனுபவி என்று அரவிந்தை பார்த்து உதட்டை சுளித்து கூறி விட்டு
"ஓகே அத்தை வரவா என்று துர்கா மருதாணியை இடித்து கொண்டு நிற்க
"என்னது அத்தையா ??
"யா யா என் அப்பாவுக்கு சகோதரி அத்தை தான ... என்று இவளும் அவள் பங்குக்கு இருவரையும் ஓட்டி விட்டு ஓடி விட்டாள்...
அரவிந்துக்கு தொண்டை காய்ந்து வயிறு பசி கிள்ளியது.. மருதாணி துரை போனுக்கு போட போட அவன் கட் செய்து வைத்தான் ..
"நான் என்ன செய்தேன்னு இப்படி பண்ணுறார் என்று புரியவே இல்லை ...
"ம்க்கும் என அரவிந்த் கனைக்க ..
"என்ன தம்பி பாத்ரூம் போகணுமா? கூட்டிட்டு போகவா என்று மருதாணி உடனே எழும்பி ஓடி வர ..
"இல்லங்க வேண்டாம்" புதிதாக வந்த உறவு ஒட்ட முடியாது முட்டினான்..
"என்ன உங்க அப்பா மனைவியா பார்த்தா சங்கோஜமாத்தான் இருக்கும், ஒரு நர்ஸா பாருங்க ... வாங்க கூட்டிட்டு போறேன் "என்று அரவிந்தை அழைத்து கொண்டு பாத்ரூமில் விட்டுவிட்டு காத்திருந்து அவனை அழைத்து கொண்டு வருது படுக்கையில் அமர வைத்தவள் சாப்பாட்டை அள்ளி அவன் வாயருகே கொண்டு போக மருதாணி கையை பிடித்து கொண்டு அப்படியே அழ ஆரம்பித்து விட்டான்
"சாரி என்னால தான் அப்பா உங்ககூட பேச மாட்டைக்கிறார்..
"அட விடுங்க தம்பி, எத்தனை நாள் நம்ம தொல்லை இல்லாம இருப்பார்னு பார்ப்போம் .. ஆளு இங்க தான இருக்கு எப்படியும் உள்ள நுழைஞ்சிடலாம் நீங்க கவலை படாதீங்க என்று மருதாணி அனைத்தையும் மறந்து விட்டு அவனை தன்,உறவாக ஏற்று கொள்ள.. அரவிந்துக்கும் நிம்மதி பத்து நாள் மருத்துவமனை வாசம் .. துரை இந்த பக்கமே வர வில்லை .. ஆனால் வேளா வேளைக்கு இளநீர், சாப்பாடு, காப்பி என துர்கா மூலம் வரும் ... இந்த பத்து நாளில் அரவிந்தும் மருதாணி உட்கார்ந்து சீரியல் பார்த்து அரட்டை அடிக்கும் அளவு மாறி விட்டனர் ..
"மம்மி எங்க இருக்க ? என்று அரவிந்த் குளித்து விட்டு தலையை துவட்டிவிட மருதாணியை தேடி வெளியே வர .. துர்கா மட்டும் தான் அமர்ந்திருந்தாள்...
"மருதாணி அவன் நெஞ்சில் குத்திய பச்சையை பார்த்த அன்றே என்ன இது ?என்று கேட்க அவன் ஒன்னு விடாது கூறி விட்டான்
"அதுவும் ஒரு காரணம் உங்களை ஏற்க முடியாம போனதுக்கு
"அவ உங்கள? மருதாணி துர்கா தன்னிடம் மறைத்து விட்டாளே என்ற கோவத்தில் கேட்க
"அவளுக்கு நான் காதலிக்கிறது தெரியும், பட் அவ இதுவரை ஓகே சொல்லல சாரி நான்தான் அவள லவ் பண்ணினேன் அவள எதுவும் சொல்லிடாதீங்க என்று கூற
"உங்க அப்பாரும் உங்க ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னாக..
"அப்படியா??
"ம்ம் அவளும் வேற எங்கேயும் போக மாட்டாள்ல...
"அப்போ உங்களுக்கு ஓகேவா ?
அவர் முடிவு எடுத்தா சரியா இருக்கும் தம்பி எதுக்கும் அவரே பேசட்டும் அதுவரை?
அவளை தொல்லை பண்ண மாட்டேன் என்றவன் திரும்ப வரும் துர்காவை ஆசையாக பார்க்க அவளோ இவனை ஏறிட்டு கூட பார்க்க மாட்டாள், மருதாணியிடம் உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டு போய்விடுவாள் இன்றுதான் தனியாக மாட்டி இருக்கிறாள்.. துரை மாதவன் கவணிப்பில் ரெட்டை சுற்று கூடி விட்டாள் .. மாதவன் பொறுப்பான தந்தையாக தோழன் போல மகளை சீராட்ட அப்பா அப்பா என இவளும் ஒட்டி கொண்டாள்..
"மம்மி எங்க ?"
"அது என் அம்மா என்றாள் கோவத்தில்.. அது எப்படி அவன் மம்மி சொல்லலாம் என புசுபுசுவென துர்காவுக்கு வந்தது
"வச்சிக்க எனக்கு மம்மியா இருந்துட்டு போறாங்க.. தலையில நீர் வடியுது காயம் உள்ள தண்ணீ பட்டிரும் மம்மி எங்க .
"உங்க அம்மி இங்க இல்லை.. வீட்டுக்கு போயிருக்காங்க...
"ஓஓஓ என அரவிந்த் டவலை எடுத்து துவட்ட முடியாது தடுமாற, துர்கா போய் டவலை பிடுங்கி அவன் காயம் படாது துவட்டி விட, வெகு நாள் கழித்து கிடைத்த தனிமையும் அவள் அருகாமையில் அரவிந்த் அவளை இடையோடு கைவிட்டு பிடித்து .
"துர்கா" என்று அவள் உதடு நோக்கி குனிய
"நான் ஆள் பிடிக்கிற பொண்ணு ... என்கிட்ட போய் எதை தேட போறீங்க உடம்பை காட்டி மயக்கிற எனக்கும் உங்களுக்கும் செட் ஆகுமா ?என்று குத்தலாக கூற
"ஏய் அன்னைக்கு ஏதோ கோவத்துல பேசிட்டேன் டி
"கோவத்துல பேசினா எனக்கு வலிக்காதா? உங்களுக்கு கோவம் வந்தா அசிங்கமா பேசுவீங்க மூட் வந்தா முத்தம் கொடுப்பீங்க, நான் சுரணை இல்லாம காட்டிட்டு நிற்கணுமா அப்படி எல்லாம் இருக்கு முடியாது.. "
"சாரி துர்கா
"பேசிட்டு சாரி கேட்டா முடிஞ்சு போச்சா, எவ்வளவு தாழ்வா பேசுனீங்க அது எப்பவும் மறக்காது ஆங்கிள் பையன்னு தான் உங்களுக்கு இதை எல்லாம் பண்றேன் வேற எந்த நோக்கமும் இல்லை ...." என்று துர்கா புக்கை தூக்கி கொண்டு போய் பெஞ்சில் அமர்ந்து படிக்க ஆரம்பிக்க அரவிந்த் பாவமாக அவளை பார்த்த படி அமர்ந்திருந்தான்.. சொல்லும் நெல்லும் கொட்டிய பிறகு சேர்ப்பது கடினம் தான் என காலம் கடந்து அறிந்தான் .. தன் தகப்பனை பேசிய பேச்சுக்கு எப்படி மன்னிப்பு கேட்க போகிறோம் என்ற பெரும் பாரம் அவனை நிம்மதி இழக்க வைத்து விட்டது .. துர்கா அவனை விலகி விலகி போக இது வேறு டபுள் வருத்தம் ஆகி போனது ..
மருதாணி அரவிந்த் ஒரளவு சரியான பின்பு தான் துரையை தேடி வந்தாள் ... வீட்டுக்கு வர துரை வயலில் இருக்கிறான் என கேள்விப்பட்டு அங்கே போக ... துரை மகன் வெட்டுப்பட்ட இடத்தில் அமர்ந்திருக்க...
"யோவ் "என்ற மருதாணி சத்தத்தில் திரும்பினான் .. முகம் முழுக்க கோவம் ..
இங்க எதுக்கு வந்த ? "
"நான் என்னய்யா பண்ணினேன்
"புரியல
"ம்ஹும்
"உங்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் அவன் என் மகன் இல்லைங்கிற உண்மையை சொல்லிடாதன்னு... போட்டு உடைச்சிட்டு என்ன பண்ணினான்னு கேட்கிற ...
"மன்னிச்சிடுய்யா அந்த நிலைமையில"
"வாயை மூடு இனி அவன் என்ன தியாகி போலத்தான் பார்ப்பான் , எனக்கும் அவனுக்கும் இடையில இடைவெளி தானா விழுந்திடும்.. உனக்குதான் நான் வேண்டாம்னு போக நினைச்சல்ல, இப்ப எதுக்கு இங்க வந்து நிற்க கிளம்பு நான் என் மகனும் சந்தோசமா இருக்கோம் உனக்கு அதுதான தேவை போ போ கிளப்பு ...
"யோவ் அவன் அருகே மருதாணி நகர...
"பக்கத்தில வராதன்னு சொன்னேன் அவன் மட்டும் முன்ன போல என்கிட்ட இருக்கல , நானே உன்னை கொண்டு போய் ஊர் எல்லையில போட்டுட்டு வந்துடுவேன் தள்ளு "என அவளை விலக்கி விட்டுட்டு போய் விட்டான் ....
தன் மகன் தன்னை தெய்வமாக நினைக்க வேண்டாம் தகப்பனாக நினைத்தால் போதும் அவனுக்கு யாரும் இல்லை என்று எண்ணம் வர கூடாது என்று தானே உண்மைகளை ஒளித்து வைத்திருந்தான்... இப்படி உண்மையை கூறி விட்டாளே அவன் தயங்கி தயங்கி அப்பா என்ற போது உயிரே போய் விட்டது ... எத்தனை உரிமையாக அவனை சுற்றி வருவான் , இனி அப்படி இயல்பாக இருப்பானா என்ற ஏக்கமும் துரைக்கு புது வலியை உண்டாக்கி விட்டது ... மருதாணி மீது தவறு இல்லைதான், தன்னை விட்டு போக தயாராக இருந்தால் என தெரிந்த உடனே அவனுக்கு எங்கோ வலித்தது ..மகன் மீது உள்ள பாசம் வேறு, மனைவி மீது வந்த நேசம் வேறு இரண்டையும் அவனால் எப்போதும் எதற்காகவும் இழக்க முடியாது என்றுதானே இந்த தர்க்கம் .. அவள் முடிவில் சற்று அதிருப்தி கொண்டது மனம் , தன் ஆற்றாமையை காட்டி விட்டு போய்விட்டான்..
மருதாணி துரையின் புது ஒதுக்கத்தில் மருண்டு விழித்தாள்... அவன் அன்பை மட்டுமே கண்டவளுக்கு அவன் கோபத்தை எப்படி குறைக்க என்று தெரியவில்லை ...
ஆக ஒரு ரொமான்ஸ் வருது அதான ?
ஹிஹி சொன்னாலும் சொல்லலைன்னாலும் அதான் நிசம்..
25 வனம் சேர்ந்த ஐவணம் !!
"தம்பி" என்று மருதாணி அறைக்குள் வர , துரை வருகிறாரா என அரவிந்த் ஆர்வமாக எழும்பி பின்னால் எட்டிம் பார்த்தான்... மருதாணி எப்படியும் துரையை அழைத்து வந்து விடுவாள் என்று அவள் மட்டும் ஒத்தையாக வர ..
"அவரை எங்க ?
"ப்ச் அதை ஏன் கேட்கிறீங்க தம்பி" என்று புராணமாக கூறி முடிக்க..
"நானும் அதை சொல்லி இருக்க கூடாதுதான் தம்பி ..
"அது தெரிஞ்சதாலதான் நான் பொழைச்சேன்.
"அது அவருக்கு தெரியலேயே , அதோட நீ எப்படி என்ன விட்டு போறேன்னு சொன்னன்னு திட்டுறார்..
"எல்லாம் என்னால்தான் என்று அரவிந்த் கவலையாக ..
"இப்ப டிஸ்சார்ஜ் ஆகிடுவோம்ல நேரே அங்க போயிடுவோம் மம்மி..
"ஏத்துப்பாராடா
"ஏத்துக்கல உண்ணாவிரதம் இருந்ததாவது ஏத்துக்க வைக்கிறேன், நீங்க வாங்க" மகனும் மனைவியும் வாசலில் வந்து இறங்க.. துரை நியூஸ் பேப்பரை புரட்டி கொண்டு இருந்தவன் இருவரையும் மேலும் கீழும் பார்த்து விட்டு மறுபடி பேப்பரை வாசிக்க ஆரம்பிக்க.. இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பி உதட்டை பிதுக்கி கொண்டனர்..
"என்ன மம்மி கண்டுக்கவே மாட்டைக்கிறார்..
"நீதான சொன்ன போனா சரியாகிடுவார்னு இப்ப எப்படி உள்ள போக..
"அப்படியே நைசா உள்ள புகுந்துடுவோம் ஏதாவது திட்டினா..
"பின் வாசல் வழியே ஓடிரலாம்ங்கிறியா...
"அட இரு மம்மி, கால்ல விழுந்து மன்னிச்சிடுன்னு கெஞ்சுவோம்..
"அதுக்கும் சரி ஆகலேன்னா "
"பயம் காட்டாத மம்மி வா "இருவரும் குசுகுசுவென பேசுவதை பேப்பர் மறைவில் துரை பார்த்து கொண்டு தான் இருந்தான் ..
தன் தந்தையை பங்கு போட்டு விட்டாள் என்ற எண்ணம் இருக்கும் வரை அரவிந்தால் மருதாணியின் அன்பை வாங்கவே இயலாது இவளும் அவனை அந்நியமாகத்தான் பார்ப்பாள்.. இவள் என் வனத்தில் ஒரு மரம் என இருவருக்கும் ஒரு பாலம் உண்டாக வேண்டும்.. அது துரை அருகில் இருக்கும் வரை நடக்க வாய்ப்பு இருக்காது எனவேதான் தனியாக வி்ட்டுவிட்டு வந்தான்.. மற்ற கோவம் ஆற்றாமை உண்டுதான்.. ஆனால் மெயின் காரணம் இரண்டும் வழியில்லாம பேசி பழகி வீட்டுக்கு வரும் போது குடும்பத்துல ஒருத்தரா வாங்க என அவன் கணிக்க.. அது சரியாக நடந்தது .. மருதாணி அரவிந்தை பார்க்கும் போது உண்மையாகவே தாயும் மகனும் சேட்டை செய்து பிடி பட்டு மாட்டியது போலவே முழித்து கூட்டணி அமைத்து கொண்டு நிற்க ஏக திருப்தி... துர்கா மாதவன் மருதாணி இருந்த பின்வீட்டில் இருக்க சொல்லி விட்டான்.. வயசு பையன் இருக்கும் வீடு கல்யாணம் ஆகுற வரை தனிதனியாக இருக்கட்டும் என மாதவனிடம் துரை சம்மந்தமே பேசி முடித்து விட்டான்..
துரை பேப்பரை மடித்து வைத்து விட்டு உள்ளே போய்விட
"இதுதான் சாக்கு உள்ள ஓடிரலாம் வாங்க" என அரவிந்த் மருதாணியை அவனே கை பிடித்து அழைத்து வந்து உள்ளே விட்டான் ..அவள் எங்கே போக திணற ..
"ப்ச் அப்பா ரூம் இங்க இருக்கு போங்க "
"இல்ல தம்பி அது
"என்ன அது இது இனி நீங்க அப்பா கூடத்தான் இருக்கணும் ஹான் இருங்க வர்றேன் என ஓடி போய் தன் தாய் போட்டோ முன்னால் தொங்கிய கொத்துசாவியை எடுத்து கொண்டு வந்து மருதாணி கையில் திணித்த அரவிந்த்
"இனி இது உங்க வீடு, அவள் சங்கோஜமாக தெளிய
"கெட்டது நடந்த வீட்டுல நல்லது நடட்கணுமாம் மம்மி
"ஆமா தம்பி உங்களுக்கு சீக்கரம் கல்யாணம் பண்ணணும்
"கிழிஞ்சுது, துர்கா முகத்தை தூக்கிட்டு போறது பார்தா அறுபதாம் கல்யாணம் கூட நடக்கிறது கஷ்டம் தான் அது என் வேதனை நான் பார்த்துக்கிறேன் நீங்க சீக்கிரம் ஒரு பிள்ளை பெத்து கொடுங்க, பேர் வைக்கிற விழா வைப்போம் என்றதும் மருதாணி வெட்கத்தில் சிவக்க .
இதெல்லாம் நல்லாதான் இருக்டு மம்மி உங்க ஆத்துக்கார் கோவத்துல இருக்காரே எப்படி சமாளிக்க போறீங்க ..
"தெரியல தம்பி"
"நம்மள உள்ள விட்டதே பெருசு தான் போக போக அப்படியே இடத்தை பிடிப்போம், எனக்கு உங்க கையால நெடி கூடுதலா மாங்காய் போட்டு மீன் குழம்பு வச்சி வைங்க நான் கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வர்றேன் என அரவிந்த் எதிரே வந்த தகப்பனை ஆசையாக பார்த்து கொண்டே பேச முடியாது அறைக்குள் போனான்..துரை ஏனோ கடவுள் போல தெரிந்தான் மரியாதை வந்தது .. என் அப்பா என கர்வம் வந்தது ..
மருதாணி புலம்பி கொண்டே பின் பக்கம் மீனை கழுவி கொண்டிருந்தாள்..
"எல்லாம் என் தரித்திரம் ஒன்னு மாத்தி ஒன்னு நடந்துட்டே இருக்கு , இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டு இருக்கார் .. நான் அவர் நல்லா இருந்தா போதும்னு நினைச்சுதான் போக நினைச்சேன் மனுசன் அதை பிடிச்சி வச்சிக்கிட்டு என்கிட்ட சண்டை போடுறார் .. புருஷன் இருக்க அவளுக்கு என்ன பயம் சேலை முந்தானையை நல்லா நடுவுல இழுத்து போட்டு ரெட்டை குலை குலுங்க குலுங்க உப்பு போட்டு மீனை உரச அதுவோ ஒருவன் மீசையை உரசி கொண்டிருந்தது... இருவரும் வந்த நேரம் தொட்டு பார்க்காதது போல இருவரையும் துரை பார்த்து கொண்டுதான் இருக்கிறான் இருவரும் ஜாடை பேசுவதும், பாவமாக அவனை பார்த்து வைப்பதும் என இருக்க .. பார்க்கவே கண் கொள்ளா காட்சி... மம்மி என அவள் பின்னால் மகன் சுத்த நிம்மதி தானாக வந்து ஒட்டி கொண்டது ஒரு விசை கூட தனக்கு யாரும் இல்ல என அவன் நினைத்து விட கூடாது என நினைத்துதானே இந்த ஓட்டம் ஓடினான்...
"ப்ச் இப்படி பேசாம இருந்து உசுர வாங்குறார் பேசாம இன்னைக்கு போர்வைக்குள்ள போய் பிடிச்சது பண்ணி கூல் பண்ணிடலாமோ, ச்சை புத்தி ஏன் இப்படி போகுது, வயசுக்கு வந்த பையன் இருக்கான்..""
"அதுக்கும் இதுக்கும் என்னடி சம்மந்தம் உன் புருஷன் தான் தாராளமா பண்ணலாம் என்று துரை சத்தம் வர மருதாணி அங்கும் இங்கும் தலையை தூக்கி அவனை தேட ,ஆள் இல்லை
"அவர் பேசுனது போலவே இருந்தது
"என் நினைப்பாவே இருப்ப, அதனால பேசுறது கேட்குமா இருக்கும் மறுபடி குரல் வர ..
"இப்படி எல்லாம் தோணுமா என்ன??" அவள் வாயை பிளக்க
"தோணுமே துரை மேல காதல் முக்தி நிலை வந்திருக்கும்..
"ப்ச் அவர்தான் கண்டுக்கவே மாட்டைக்கிறாரே..
"நீ கண்டுக்க வை இல்ல ராவு உன் மகன் தூங்கின பிறகு கும்முன்னு சேலை கட்டி தலை நிறைய பூ வச்சி மாடிக்கு போ, எப்படியும் உன் புருஷன் தூங்காம அங்க தான் இருப்பான் ,அதை இதை காட்டி ஆள மயக்கிடு
"மயங்குவாரா
"பின்ன இத்தனை வருசம் கழிச்சி மயங்கி உன் முந்தானையே கதின்னு கிடந்தவன் மயங்க மாட்டானா என்ன ..
"அப்படியா
"அப்படிதான் என்று துரை சிரித்து கொண்டே சொன்னவன் அவள் எழும்பி சத்தம் வந்த திசை நோக்கி நடந்து வரவும் , நகர்ந்து போய் விட்டான்
"காதல் முக்தி நிலை வந்தா இப்படி அவர் சவுண்ட் எல்லாமா கேட்கும் ...
"ஆமா மம்மி எனக்கு துர்கா பேசுறது கேட்குது அதுவும் கட்டிலுக்கு அடியில இருந்து, தூங்க முடியல என அரவிந்த் வர ..
"அப்போ உண்மைதான் போல அரவிந்த் .
"மம்மி
ம்ம் "குழம்பை தாளிக்கும் தாய் அருகே நின்றான் . அவள் அன்பை புரிந்து கொண்ட பின்பு அவளை வேற்று ஆளாக பார்க்க முடியவில்லை , தன் அன்னை அருணாவை அவன் கண்டது இல்லை காணாத தாயின் பாசத்தை மருதாணியிடம் வாங்க ஆரம்பித்தான்... தாய்மை என்பது உலக பொது மொழி போல, அம்மா என்ற வார்த்தை எல்லோருக்கும் உரியது .. தெய்வம் எப்படி பல பேரில் உலா வருகிறதோ அப்படியே தாய்மையும் , அம்மா என்ற மந்திர வார்த்தை பெத்தால்தான் சொந்தம் என்று இல்லை.. அன்பை பொழிந்தாலே வந்து விடுமே அவளுக்கு துர்கா போல அரவிந்த்தும் அன்பை கொடுக்க தயங்க வில்லை ..
"என்னடா ? "
"துர்கா பேச மாட்டைக்கிறா..
"அதுக்கு ?
"கொஞ்சம் மகனுக்கு சிபாரிசு பண்ணுங்களேன்..
"இந்த வேலை வேறையா ...நான் மாட்டேன் உன் காதல் நீ தான் பேசி சமாளிக்கணும் ..
"அப்ப மாட்டீங்க என்று அவன் முறைக்க.
"நைட் பேசுறேன் போதுமா ?
"கண்டிப்பா
"கண்டிப்பா ஆனா உங்க அப்பார, என்கூட பேச வைக்கிறது உங்க பொறுப்பு
"டன் டன் என்று துள்ளி கொண்டு ஓடிய அரவிந்த் இரவு நல்ல தூக்கத்தில் இருக்க, துரை சத்தம் வராது கதவை அவன் அருகே போய் அமர ..
"சாமி" என்று அவன் வெட்டப்பட்ட கழுத்தில் காயத்தை தடவிட..
"ப்பாஆ என்று உருண்டு வந்து தகப்பன் தொடையில் தலை வைக்க குனிந்து முத்தமிட்ட துரை ..
"உன்ன எப்படி மறப்பேன்னு நினைச்ச சாமி , எத்தனை குழந்தை பிறந்தாலும் என்ன அப்பான்னு முதல்ல கூப்பிட்ட செல்வம் நீதானடா... ஒரு நாள் கூட என் வாழ்க்கை இப்படி ஆகி போச்சேன்னு நான் நினைச்சதே இல்ல சாமி ஏன்னா நீ எனக்கு நிறைவான சந்தோஷத்தை, நிம்மதியை கொடுத்தடா உன்ன எப்படி நான் விலகி போவேன் சாமி ... அவளும் நீயும் இங்க நீங்காத இடம் புடிச்சி இருக்கீங்கடா அவ்வளவு சீக்கிரமா உங்க ரெண்டு பேர் பெயரையும் என் இதயம் விட்டு அழிக்க முடியாது .. நீ என்ன தியாகி போல பார்க்காத ராசா நீதான் என் வாழ்க்கை உள்ள வந்த முதல் வசந்தம் எப்பவும் போல துரைன்னு தோள் மேல கை போட்டு பேசுவியே அந்த மகனை நான் ரொம்ப மிஸ் பண்றேன் என்று அவன் முடியை கோதி விட ... மருதாணி வாசலில் நின்றாள்... அவளை கண்டதும் மகனை படுக்க வைத்து விட்டு எழும்பி வெளியே போக ..
"யோவ் ஊஊஊ
என்ன? அவன் முரட்டு குரலில் சற்று பம்மி
"இல்ல தம்பி துர்காவை லவ் பண்றார் , சண்டை போல
"தெரியும் என்ன தூது போக போறியா ?
"நான் பேசினா சரியா வராது நீங்க பேசினா சரியாகும் ..பாவம்யா அரவிந்த் , கொஞ்சம் பேசி சமாதானம் பண்ணி வைங்க..
"ம்ம் "என்று மாடியேறி போனவனை ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றவள்.. நடு இரவு வரை சமாளித்து பார்த்தாள்... துரை அறைக்கு வரவே இல்லை என்றதும்.. அக் குரல் சொன்னது போல சிக்கென்று சேலையை கட்டி பூவை வஞ்சனை இல்லாது வைத்து கொண்டு மேலே ஏறி போக... துரை பாயில் படுத்து கிடந்தான் நல்ல தூக்கத்தில் குறட்டை வேறு .. எல்லாம் நடிப்புதான் .. மனைவி படியேறி வரும் போதுதான் அவசரமாக வந்து பாயில் படுத்து கொண்டான்..
ஊடலில் கூடல் நல்லா இருக்கும் என கேள்விப்டட்டிருக்கிறான் அது உண்மையா பொய்யா பார்க்கணும்ல...
அரவிந்த் தகப்பன் அறையை எட்டி பார்த்தான்.. அறை பூட்டி கிடந்தது ... உடனே பூ போல எழும்பி துர்கா வீட்டு சுவற்றில் ஏறி குதித்து அவள் அறைக்குள் நுழைந்து கொண்டான்..
கள்ளத்தனங்களின் கூட்டமைப்பு தான் காதலோ?
26 வனம் சேர்ந்த ஐவணம்!!
துர்கா தூக்கத்தில் புரண்டு படுத்தவள், தன்னையே பார்த்து கொண்டிருந்த உருவத்தை பார்த்து
"ஹாய் அரவிந்த்" என கையை ஆட்டி விட்டு திரும்பி படுக்க போனவள்
"ஆஆஆஆஎன அலற போக அவள் வாயை பாய்ந்து போய் அர்விந்த் பொத்தினான் ...
"ஏய் நான்தான் , கத்தி என் மாமனாரை எழும்பி விட்டு அடுத்த பஞ்சாயத்தை கூட்டி விட்டிராதடி.."
"ம்ம் ஆஆகக ம்ம் "
'என்னடி பேசுற ஒன்னும் புரியல" என்றதும் துர்கா அவன் பொத்தி வைத்திருக்கும் கையை காட்ட .
"ஓஓ சாரி இப்ப பேசு" என கையை நகர்த்த
"இங்க என்ன பண்றீங்க??"..
"பொண்டாட்டி எப்படி தூங்குறேன்னு பார்க்க வந்தேன் ... "
"நான்தான் அப்பவே முடிவா சொல்லிட்டேன்ல, உங்களுக்கும் எனக்கும் எதுவும் இல்லைன்னு "..
"நீ சொல்லுவ அதுக்கு உன்ன அப்படியே விட முடியுமா.. என் கற்பு போச்சே, அதை திருப்பி கொடு..
"கற்ப்பா ???"
"ஆமா அன்னைக்கு எனக்கு முத்தம் கொடுத்தல்ல அதுல என் கற்பு போயிடுச்சு நீதான் அதை அழிச்ச, இனி எப்படி நான் இன்னொரு பொண்ண பிக்கப் பண்ணுறது அவள் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து கொள்ள
"சாரிடி இதுக்கு மேல எப்படி உங்ககிட்ட மன்னிப்பு கேட்கன்னு தெரியல..
"ப்ளீஸ் அரவிந்த் நீங்க என்ன சொன்னாலும் என் மனசு நீங்க பேசிய வார்த்தையை மறக்காது.. கோவத்துல நிதானம் தவறி வார்த்தையை விட்ட நீங்க நாளைக்கும் இதே போல பேச மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் .. ஏன் உங்களுக்கு மட்டும் காதல் போன ஆற்றாமை இருந்ததா.. எனக்கு இல்ல .. நான் நிதானமா இல்லை, பேசிட்டு வந்து சாரி , தெரியாம நடந்து போச்சுன்னு சொன்னா எப்படி... ஒரு வார்த்தையால நம்ம காதலை சாகடிச்சிட்டீங்க" அரவிந்த் அவளை பாவமாக பார்க்க..
" எஸ் நானும் உங்கள காதலிச்சேன் , ஆனா அதுக்கு இடையில இப்படி ஆகும்னு தெரியாது அம்மா சிரிப்புக்கு முன்ன என் காதல் ஒன்னும் பெருசா தெரியல... ஆனா நீங்க எத்தனை பேரை காயம் பண்ணிட்டு
"அதுக்கு தான் நல்லா அனுபவிச்சுட்டு இருக்கேனே"..குரலில் வருத்தம் தெரிந்தது ..
"என்ன அனுபவிச்சீங்க எதுவும் அனுபவிக்கல உங்களால கஷ்டப்படுறது கஷ்டப்பட்டது எல்லாம் துரை மாமா தான், இப்ப கூட உங்க கூட பேசாம இருக்கிறதுக்கு உங்களை விட அவர் தான் வருத்தப்படுவார். ஏன்னா, அவருக்கு அவரவிட நீங்க மட்டும் தான் முக்கியம் இது பார்த்துகிட்டு இருக்க எங்களுக்கே தெரிஞ்சது ... ஆனா அவர் அன்பை முழுசா வாங்குன உங்களுக்கு புரியல போல , தேவையில்லாம எதையெல்லாம் செஞ்சு வச்சி , அப்படி என்ன நிதானம் இல்லாத பேச்சும் நடத்தையும்... அதுதான் எனக்கு பிடிக்கல இதே நிதானம் இல்லாத செயல்களைதான கல்யாணம் முடிஞ்ச பிறகும் என்கிட்டயோ, இல்ல நமக்கு பிறக்கிற பிள்ளைங்ககிட்ட நீங்க பண்ணுவீங்க அப்படி நிதானம் இல்லாத ஆளு எனக்கு தேவையில்லை.. காதல இழந்தது வலிதான் ஆனா அந்த காதல் வலியை விட பெரியது நாளைக்கு நீங்கள் இன்னொரு வார்த்தை பேசி வாழவும் முடியாமல் சாகவும் முடியாம நிக்கிறது அதைவிட கொடிய தண்டனை .. அதுக்கு இந்த காதல் தண்டனை எனக்கு போதும் , உங்கள காதலிச்சதுக்கு இந்த கஷ்டம் எனக்கு போதும் சாமி தயவு செஞ்சு இனிமே சமாதானம் பண்றேன், உன்ன கண்ணுக்குள் வைத்து பாதுகாத்துக்கறேன்னு வந்து தொல்லை பண்ணாதீங்க... நான் துரை மாமாவுக்காகதான் இங்கே இருக்கேன் , இதே மாதிரி தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருந்தீங்கன்னா , நான் ஹாஸ்டல்ல போய் ஒரேடியா இருந்துக்குவேன் அவ்வளவுதான் சொல்லுவேன்..." என்றதும் முகத்தை சுருக்கி யோசித்த அரவிந்த்
"ஏன் பேபி ஒருவேளை உன்ன இப்ப ரேப் பண்ணிட்டா என்ன செய்வ??" என்றதும் துர்கா அதிர்ந்து கத்த போக, அவள் வாயை பொத்தி சுவற்றில் சாய்த்து விட்டவன்..
"நான் துரை மகன் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் அதே சமயம் நீ என்ன கல்யாணம் கட்டிக்கலேன்னு வை ... "அவன் பார்வை துர்காவை மேலிருந்து கீழ் வரை வருட துர்கா நெளிந்தாள்..
"முதல் நாள் பூச்சி போல இருந்த இப்ப வாயும் நீண்டிருச்சி, ஆளும் சைஸ் மாறிட்ட' நைட்டியில் வாடாமல்லி மலர்கள் தெறிக்க நின்ற காதலியை கடித்து தின்னும் ஆசையில் அரவிந்த பார்க்க ..
த..ள்ளு...ங்க... அவள் நெளிய நெளிய இடித்து நின்ற அரவிந்த் நெஞ்சில் காதல் வீரத்தழும்பு அவள் அழகால் உண்டாக .. அவள் தந்தி அடித்த சுளை போன்ற இதழில் முழ்கிட ஆசை வர அரவிந்த் அவள் கையை இறுக்கி பிடித்து வைத்து கொண்டு ஒற்றை கையால் அவள் இடையை வளைத்து தன் நெஞ்சில் மதகுகள் தானாக பதுங்க இடம் கொடுத்து கொண்டே துர்காவின் இதழை கவ்வி கொள்ள அங்கும் இங்கும் அசைய முனைந்த துர்கா தீடிரென அவன் நாவு அவள் நாவை தேடி சுவை மொட்டை உறிஞ்ச ஆரம்பிக்க... இமைகள் மூடி கொண்டது எத்துனை நேரம் தனை மறந்து முத்த சுவையில் உலகம் மறந்து கிடந்தனரோ மாதவன் இருமல் சத்தம் கேட்டு துர்கா அவனை விலகி விட ..
"ஸ்ப்பா புளிப்பு மிட்டாய் டேஸ்ட்டி"... என்று உதட்டை நாவால் நக்கி கொண்டே அவளை பார்க்க .. சிடுசிடு என முகத்தை வைத்து கொண்ட துர்கா
"என்ன சார் பேசி பார்த்தீங்க, மடியலேன்னதும் உடம்புக்கு சுகம் தந்து மடிய பார்க்கிறீங்களோ?? என்று கேட்டுவிட.
"ஏய்இஇஇ அரவிந்த் கோவத்தில் அவளை அடிக்க போய் சுவற்றில் அடித்து விட்டு ஆழ மூச்செடுத்து கோவம் அடக்க
"வலிக்குதா , இப்படித்தான் எங்களுக்கும் வலிக்கும்.. பொண்ணுன்னா உங்களுக்கு அடிமை ஒன்னும் இல்ல .. நீங்க பேசுறது அடிக்கிற அடியை வாங்க எல்லாம் ஆள் தேவைன்னா, அதுக்கு ஆயிரம் அடிமைகள் இருப்பாங்க வாங்குங்க காதல்னு கல்யாணம்னு ஒரு பொண்ண கூட்டிட்டு வந்து அடிமைபடுத்த நினைக்கிற ஆணாதிக்கம்தான் நீங்க பண்றது ... உங்களுக்கு பேசினா வலிக்குது, எங்களுக்கு பேசினா மரப்பாச்சி பொம்மை போல போகணுமோ? கோபத்தை நாங்க காட்டினா , இவ அடங்காப்பிடாரின்னு பட்டம் வேற... நான் மருதாணி அம்மாவோட சுயமரியாதை வளர்ப்புல வளர்ந்த பொண்ணு தப்புன்னா தப்புன்னுதான் சொல்லுவேன்" என்ற துர்காவை ஆற்றாமையில் பார்த்த அரவிந்த்
" தப்புதான்டி , என்னவோ பெருசா பேசுறியே என் அம்மாவுக்காக காதலை விட்டு கொடுப்பேன்னு சொன்னியே .. நான் உனக்காக என் அப்பனை கூட எதிர்த்து நின்னேன்டி யார் காதல் பெருசு .. உன்ன இழக்க முடியாமதான்டி இப்படி வந்து நிற்கிறேன் உன் காதலை விட என் காதல் எங்கேயும் குறைஞ்சது இல்ல .. போ எங்க வேணும்னாலும், ஆனா உன் கழுத்துல தாலி நான் கட்டுறதாதான் இருக்கணும் என் பொண்டாட்டியா எங்க வேண்டுமானாலும் போ" என்றவன் முதுகு பக்கம் கையை விட்டு தாலியை எடுத்து, அவள் முன் நீட்ட .. துர்கா தலையை அங்கேயும் இங்கேயும் ஆட்டி மறுக்க... அரவிந்த் தாலியை அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சி போட்டவன்..
"இப்ப போ , என்று கதவை திறந்து கொண்டு அரவிந்த் போக ..
"லூசு" என்று மேஜை மீது வைத்திருந்த கல்யாண பத்திரிகையை பார்த்து சிரித்து கொண்டு படுக்கையில் படுத்தாள்.. யாரிடமும் வாய் திறந்து கூட பேசாத துர்கா. இவனிடம் தன் சுயமரியாதையை எதிர்பார்க்கிறாள் என்றால் அவனோடு வாழ்க்கை முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் ... வேறு யார் அவளை அலட்சியம் படுத்தினாலும் தாங்கிக் கொள்ள முடியும்.. ஆனால் தன் காதலனாக கணவனாக அரவிந்த் அவளை அலட்சியப்படுத்தி விட்டால் அந்த அலட்சியத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது அதனால் தான் அவன் பேசிய வார்த்தைகள் தவறு என்பதை உணர வைக்கிறாள் .. இப்படி செய்வான் என அவள் ஏற்கனவே அறிந்தது தான்...
"மாமா படிக்கணுமே என துர்கா , அரவிந்துக்கு துரை திருமணம் நாள் குறிக்கும் போது கூற..
"அவன் பொண்டாட்டியா படி தாயி, என் சொல்லு பேச்சு எதையும் என் மகன் கேட்க மாட்டான் , ஆனால் நீ அதட்டி உருட்டினா வேலைக்கு ஆவான்.. கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்துட்டேன் இவன் இப்படியே இருந்தா சரிபட மாட்டான் அவனுக்குன்னு ஒரு குடும்பம் குழந்தை என்று வந்தால் தான் இனி கொஞ்சம் சரியா வருவான் ... பாரு நீ பேச மாட்டேன்னு சொன்னா என்ன செய்வான் தெரியுமா? தாலியை தூக்கி கட்டிட்டு போவான், அவன் ஒரு அவசரகுடுக்கை நாளைக்கு என்ன நடக்கும்னு யோசிக்க மாட்டான் "என்றதும் துர்கா அதிர்ந்து
"தாலியா?
"ஆமா நீ இப்படியே பேசாம இருந்தா கட்டுவான் பாரு ."
"அச்சோ என்ன பண்றது ?
"என்ன பண்ண, நீதானா அந்த லூச சமாளிச்சி ஆகணும் ..நீ ஒரு இடத்துல மருதாணி ஒரு இடத்துல இருந்தா உங்க ரெண்டு பேருக்கும்தான் வருத்தம்.. மருதாணி சொல்ல மாட்டா ஆனா உன்ன அவ கொஞ்சம் கூட மிஸ் பண்ண கூடாது .. அது அவ என் மேல வச்சிருக்க நம்பிக்கைக்கு நான் செய்ய வேண்டிய கைமாறு ... நீ கல்யாணம் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன்னா இதையே சாக்கா சொல்லி மாதவனையும் நம்ம வீட்டோடவே வர சொல்லிடலாம். எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் .. அதுக்காகவாவது இந்த கல்யாணம் அவசியம் , கல்யாணமாகாத பொண்ண வீட்டுக்குள்ள கொண்டு வச்சா ஊரு தப்பா பேசும் .. அதோட என் மகன் சும்மா இருக்க மாட்டான்" என்று சிரித்தான்..
"ஆனா மாமா உங்க மகன் என்ன பேசுனதுக்கு ரிவென்ஜ் எடுக்காம விட மாட்டேன்... என்ன பேசி இருந்தா கூட நான் மறந்து இருப்பேன்.. மன்னிச்சிருப்பேன் ஆனா எனக்காகவே வாழ்ந்த அம்மாவை போய் தப்பா பேசிட்டாரு அத தான் என்னால ஜீரணிக்க முடியல கொஞ்சம் கூட நிதானிக்கிற சக்தியே இல்ல உங்க மகனுக்கு.. நாம இப்படி பேசுறோமே அவங்களுக்கு வலிக்குமேன்னு யோசிக்கிறது இல்லை .. இப்போ பாவமா முகத்தை வச்சுக்கிட்டு சுத்துறார் , அதனால அவ்வளவு சீக்கிரமாக அவரை ஏத்துக்க எல்லாம் மாட்டேன்" என்று சொன்ன துர்கா தலையை வருடிவிட்டவன்..
"அவன் இப்படி இருக்கிறதுக்கு ஒரு வகையில நானும் காரணம்தான், என் மகன் மேல அளவு கடந்த பாசத்தை வச்சு எதிலும் கண்டிக்கல கண்டிக்கிற பிள்ளைகளே இந்த காலத்துல தப்பா இருக்கும் போது, அவன் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த பையன், அதுக்காக அவன் செஞ்சது சரிதான்னு நியாயப்படுத்த மாட்டேன் உன் புருஷனை அடிக்கிறதுக்கு கூட உனக்கு உரிமை இருக்கு ஆனா கல்யாணத்தை முடிச்சிட்டு அடிபிடி சண்டை போட்டுக்கோங்க அவ்வளவுதான் "என்று துரை போய்விட்டான்..
துரை தன் மகனை எவ்வளவு புரிந்து வைக்கிறான் என்பது அவன் கட்டி விட்டு போன தாலியை பார்த்தே தெரிந்தது .. ...
புரிதல்தான் உறவுகளின் உறுதித்தன்மையை நிலைக்க வைக்கும் வாழ்க்கை சூத்திரம் ... சிலருக்கு அந்த புரிதல் இருபதில் வரும், பலருக்கு அந்த புரிதல் நாற்பத்தில் வரும் ..
27 வனம் சேர்ந்த ஐவணம் !!
மனைவி பூனை போல நடந்து துரை அருகே பாயில் வந்து அமர ... துரை உடலை கூட அசைக்காது அமைதியாக படுத்திருந்தான்..
மருதாணி மெல்ல போர்வையை தூக்கி இருவருக்கும் இழுத்து போர்த்த ...
"என்ன வேணும்?? என்ற அவன் குரலில் சற்று அதிர்ந்தாலும்...
"கொடுக்க வந்திருக்கேன்
"என்னது ??அவன் காதில் பச்சையாக அவள் கூறிவிட..
ஒன்னும் வேண்டாம் போகலாம் ... எழும்பி கீழே போய் படு
"யோவ் யோவ் தெரியாம போறேன்னு சொல்லிட்டேன்யா, அதுக்கு இப்படி முகத்தை திருப்பி சண்டை பிடிக்காதய்யா.. இனிமே அப்படி பேசவே மாட்டேன் ..."
"உன்ன போன்னு சொன்னேன்...
"யோவ்" என்றவள் உதட்டை பிதுக்கி கொண்டு
"ஆசையா பூ எல்லாம் வாங்கி வச்சேன், புது பட்டு புடவை எல்லாம் கட்டி வந்து வேஸ்டா போச்சி, அந்த குரலை நம்பி வந்ததுக்கு எல்லாம் ப்ளாப் ச்சைக்" என்று புலம்பி கொண்டே பூவை உதிர்த்து துரை வெற்று மார்பில் போட
"இன்னும் நீ போகலையா ...
"இந்தா போறேன் "என எழும்ப போனவள் சட்டென்று துரை மீது ஏறி படுத்து கொண்டு அவன் இதழை விரலில் இழுத்து நசுக்கி, கீழ் உதட்டை கவ்வி கொள்ள ... துரை அவளை உருட்ட பார்க்க அவளோ ஜம்பமாக அவன் வயிற்று மீது அமர்ந்து கொண்டு. அவன் கோபத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோகத்தை அளவு இல்லாமல் தெளிக்க நினைத்து தன் முந்தானை வேகமாக நீக்கி உருண்டை ஒன்றை தூக்கி வெளியே போட்டு துரை உதட்டில் திணிக்க..அவன் தான் இலவச ரொமான்ஸ் காட்சிக்கு பாய் போட்டு, பாய் மேல பூ போட்டு காத்திருந்தானே.. மணக்க மணக்க மனைவி தந்த சத்து உருண்டையை இழுத்து சப்ப ஆரம்பிக்க .. அவன் உறிஞ்ச உறிஞ்சதான் இவளுக்கு தெளிவு வந்தது ..
அச்சச்சோ!! நான்தான் வம்பா வந்து மாட்டிக்கிட்டேனா?. என்று மருதாணி சப்பும் புருஷன் முகத்தை குனிந்து பார்க்க துரை கண்ணடித்து விட்டு உருட்டி கொண்டே சப்ப ஆரம்பிக்க... அவன் உதடு உறிஞ்ச உறிஞ்ச இவளும் பத்து நாள் கழித்து கிடைத்த துரை எச்சில் சுவையில் தள்ளாடி அவன் அடி தேட, துரை அவளை தூக்கி தேக்கு மரத்தல் அமர வைக்க அவள் சிவந்து போனாள் ..
ஏற்கனவே ஆடையை நீக்கி ஈச்ச மரம் ஈரம் வாங்க காத்து கிடந்தது ...
"பண்ணின வேலை எல்லாத்துக்கும் போய் வாய் வலிக்க வேலை பாரு , இதுதான் தண்டனை போ" என்று போர்வை உள்ளே மனைவியை அமுக்க அவளுக்கா வலிக்கும் ? நெட்டி நெட்டி எடுத்து துரையை ஆசையில் கருக்க வைத்திட ஆகாயத்தை அழகாக்கும் நிலா கூட துரைக்கு அழகாக தெரியவில்லை தன் மேல் ஜாக்கெட் இரண்டு பக்கமும் விரிந்து கிடக்க உச்சாணி கொம்பில் அவளே ஏறி அமர்ந்து , முன் பின் துரை உதட்டை கவ்வி கொண்டு அசையும் மனைவியின் அதிசய ரெட்டை நிலா தான் அழகாக தெரிந்தது ..போதை வந்தால் வரும் அழகி விளி தானாக வந்தது ..எடுப்பாக தொங்கிய நட்சத்திரம் ஒன்றை பிடித்து தன் உதட்டில் வைத்து பல்லால் கடிக்க அவள் சறுக்கு மரத்தில் ஏறி ஏறி இறங்கி விரும்பி வாளின் கீறல் வாங்க .... அவளை கண்டு இன்னும் இன்னும் எடை கூடி ஆரவார கோஷம் போட்டு கொத்தி பெண்ணை தின்ன
"யோவ் என்னய்யா இது" அவனே இடையை தூக்கி அபார தாக்குதல் பண்ண வியர்வை ஆறாக வடிந்தது
""என்ன?
"ஸ்ஆஆஆஆ இன்னைக்கு புதுசா பண்றீங்க
"ம்ம் அப்படியா?? பத்து நாளும் நீ வந்ததும் எப்படி எல்லாம் பண்ணலாம்னு யோசனையில தான் காலம் தள்ளிட்டு இருக்கேன் ... ஓங்கி ஓங்கி அவளை உயர பறக்க வைக்க ... மருதாணி மஞ்சள் பொதி டப் டப் என அவன் நெஞ்சில் அடிக்க இடைகள் இரண்டும் கலந்து கிடந்து அது வினோத சப்தம் கொடுத்து, அந்த இரவை வெட்கம் கொள்ள வைக்க ..
ஸ்ஆஆஆஆ அவள் இடையை நெரித்து கைக்குள் வைத்து கொண்டு அவனே தன் ஆசைப்படி அவளை உரலாக சுற்றி எடுத்து திரிந்து வந்த எண்ணெய்யை அவள் செக்கில் சேர்த்து வைத்தவன்.. இன்னும் கண் சொருகி கிடந்த மனைவியை கீழே படுக்க போட... மொட்டை மாடியில் தளம் அரை அடி பள்ளம் ஆகி போனது துரை போட்ட ஆட்டத்தில் ... போர்வை உள்ளே துரை நெஞ்சில் மருதாணி படுத்து கிடந்தாள் ..
"உங்கள விட்டுட்டு போகணும்னு நினைச்சது தப்புதான்யா .. ஆனா , அதை தவிர அரவிந்த் தம்பியை உங்கிட்ட சேர்த்து வைக்க வழி தெரியல...
"ப்ச் விடு... குட்டி வருத்தம் தான், இப்ப அம்மாவும் மகனும் சேர்ந்து சுத்தறது பார்க்கும் போது நிம்மதியா இருக்கு ... "
"ஆமாய்யா, எனக்கு வந்த ஆபத்தை அவர் வாங்கிட்டு கிடந்தார் பாருங்க"" என்று மருதாணி இப்போதும் அழ ..
'அவன் என் மகன்டி, பாசத்துல கூடினவன்.. என்ன காட்ட தெரியாம பண்ணிட்டான்" என்ற துரையை அண்ணாந்து பார்த்த மருதாணி ...
"தனிமரமா நின்னேன் எனக்கு ஒரு தோப்பு கிடைச்சிருக்கு..
"எனக்கும் நிம்மதியா இருக்குடி... என்று வெகு நேரம் மனைவியோடு கதை பேசி இரவை கழித்தான் ..
திருமண வாழ்க்கை பலருக்கு கசப்பாக பலருக்கு இனிப்பாக... இணையை கொண்டாடத் தெரிந்தவனுக்கு திருமண வாழ்வு இனிப்பாக இருக்கும், இணையை தன் இணையாக நடத்த தெரியாதவனுக்கு அது கசப்பாகத்தான் இருக்கு.. ம் வீட்டிற்கு வந்தால் நிம்மதியே இல்லை என்று சொல்லும் ஆண்கள் வீட்டில் இருக்கும் தன் மனைவியை தன் சகபாதியாக நினைத்து இருக்கவே மாட்டார்கள் .. அவர்களைப் பொறுத்தவரை தான் பெரிய முதலாளி போலவும் வீட்டில் இருக்கும் மனைவி தனக்கு வேலை செய்யும் அடிமை போலவே பாவிப்பது.. பிறகு எப்படி மனைவி தன் கணவனை நிம்மதியாக இருக்க விடுவாள் ... ஒருவர் பரிபூரணம் அடையும் பொழுது தான் அங்கே அமைதியும் , நிம்மதியும் உருவாகும் பரிபூரணத்தை கொடுத்தால்தான், அந்த பரிபூரணத்தை எடுக்க முடியும் என்ற சிம்பிள் எத்திக் பல ஆண்களுக்கு புரிவதே இல்லை... நான் சம்பாதித்துக் கொட்டுகிறேன் சம்பளம் அத்தனையும் மனைவிதான் வைத்திருக்கிறாள் என்று ஜம்பவாக பேசும் ஆண்கள் அறியவில்லை அந்த சம்பளம் நீங்கள் அவளோடு பேசும் அரை மணி நேரத்திற்கு ஈடாகாது என்று... மனைவிக்கு மதிப்பு கொடுத்து பாருங்கள் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் தானாக கூடி விடும்.. எத்தனை வயது கடந்தாலும் ஆண்களின் ஆசைக்கும் நேசத்திற்கும் குறைவே வராது பெண்களுக்கு ஆயிரம் வேலை பளுக்கள் இருந்தாலும் அவளின் முதல் குழந்தையாக கணவன் இருக்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு கணவனும் ஆசைப்படுவான்..அவனுக்கான நேரத்தை கடன் வாங்கியாவது கொடுத்து விட வேண்டும் கட்டிலில் மட்டுமல்ல , அவனுக்குக் கொடுக்கும் காதலிலும் குறைவில்லாமல் கொடுத்துக் கொண்டே இருந்தால்.. நாற்பதில் அல்ல எண்பதில் கூட காதல் மொட்டுவிட்டு, பூவாக மலர்ந்து கொண்டே இருக்கும்...
காலை துர்கா அரவிந்த் கட்டிய தாலியோடு வந்து மருதாணியிடம் சண்டை ..
"எனக்கு தெரியாது இவன எல்லாம் கல்யாணம் கட்டி வாழ முடியாது" என்று வேண்டுமென்றே அரவிந்த் காது கேட்க துர்கா கத்த ... துரை அருகே உட்கார்ந்து தோசையை மொக்கி கொண்டிருந்த அரவிந்த் துரையை ஓரக்கண்ணால் பார்த்தான்..
"என்னடா இது ?
"பேசி பார்த்தேன் செட் ஆகல , அதான் என்று தலையை சொரிய , துரை எழும்பி வெளியே போக போக ...
"துரை இஇஇஇ உனக்கு இந்த மூஞ்சு செட் ஆகல எனக்கும் இந்த அழு மூஞ்சி சரி வரல , எப்ப" சரியாவ.. என்று அரவிந்த் கத்தி கேட்க .. துரை புன்னகை முகமாக திரும்ப, அரவிந்த் ஓடி போய் தகப்பனை தூக்கி சுத்த ஆரம்பித்தான்..
"கிறுக்குப் பயலே காயம் இருக்குடா...
"அது ஒன்னும் செய்யாது" என்று துரையை இறக்கி விட அரவிந்தை இறுக்கி கட்டி கொண்ட துரை ...
"அந்த ரகசியம் நம்ம மூணு பேர் தாண்டி எப்பவும் வெளியே போக கூடாது "
"ஏன்ப்பா ?
"நீ எப்பவும் துரை மகனாகவேதான் இருக்கணும் உன்ன பாவமாக யாரும் பார்க்க விட மாட்டேன் நீ எப்பவும் என் உயிர்டா" என்ற தகப்பன் அன்பில் பிரமித்துப் பார்த்தான் ...
துர்காவுக்கு ?
உனக்கு பிறக்கும் குழந்தைக்கு கூட தெரிய கூடாது. கடைசி வரை நீ என் மகன்தான் .. என்ன தந்தை தோளில் கை போட்டு கொண்ட அரவிந்த் ..
லவ் யூ துரை ... என்று பச்சக் என முத்தம் கொடுக்க ... துர்கா முறைத்து கொண்டே அறைக்குள் போக
பேசி கல்யாணம் வைப்பா என்று பாவமாக தன் தந்தையை பார்க்க
அதான் தாலி கட்டிட்டியே
ஆங் அது அவசரத்துக்கு கட்டினது துட்டு செலவு பண்ணாம மகனுக்கு கல்யாணம் கட்டி வைக்க பார்க்கிறியா டிஜே, கச்சேரி , போட்டோ ஷூட்னு உனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு கல்யாண செலவு வச்சிருக்கேன் ஒழுங்கா கல்யாணம் பண்ணி வை ..
இல்லன்னா என்ன பண்ணவ..
மம்மிஇஇஇ..
என்ன தம்பி...
நாம பத்து நாள் கோவிலுக்கு போயிட்டு வருவோமா..
எதுக்கு தம்பி
அப்பாவுக்கு ஏதோ தோஷமா அதான் ..
எப்படி உன்ன வச்ச மம்மியை கரெக்ட் பண்ணிடுவேன்
ராஸ்கல் என்று மகன் கன்னத்தில் அடி போட்டான் துரை ..
அய்யோ ஒரு மாசம் கூட போயிட்டு வரலாம் தம்பி இப்பவே கிளம்புவோம் என்று காப்பி கப்போடு இருவரையும் நோக்கி வந்த மருதாணி மயங்கி சாய ஒரு புறம் அரவிந்த் , ஒருபுறம் துரை பிடித்து கொள்ள ... டாக்ட்டர் வந்து பார்த்துவிட்டு , குழந்தைஉண்டாகி இருப்பதாக கூற துரை முகத்தில் வந்த வெட்கம் ஆண்களின் வெட்கம் பேரழகு என சொல்லாது சொன்னது ...
ஐஐஐஐஐஐஐ என அரவிந்த், துர்கா குதிக்க .... மருதாணி துரை நெஞ்சில் முகத்தை மறைத்து கொண்டாள்..
துர்கா பல சண்டை போட்டு அரவிந்தை கல்யாணமே வேண்டாம் சாமி என ஓடவிட்டு திருமணத்துக்கு சரி சொல்ல இதோ மருதாணி எட்டு மாத பேர்கால வயிற்றோடு தாலி எடுத்து கொடுக்க அரவிந்த் துர்கா கழுத்தில் மறுதாலி ஊர் மத்தியில் கட்டினான் ..
மருதாணி வளைகாப்பு விழாவில் , துரை அரவிந்த் தோளில் கைபோட்டு ஏதோ பேசி கொண்டு நிற்க அரவிந்த் தந்தையோடு பேசி கொண்டு வர, மருதாணி பட்டு புடவையை மடிப்பு எடுக்க குனிய போகும் முன் அரவிந்த் வந்து ..
"மம்மி இரு நான் எடுத்து விடுறேன் என குனிந்து எடுத்து விட... துரை மனைவியின் மேலிட்ட வயிற்றை மீசையை முறுக்கி பார்த்தான் ..
துரைக்கு பெண் குழந்தை பிறக்க, அரவிந்த் தான் முதலில் வாங்கி கொஞ்சியது ... தந்தை தன் பெயரில் எழுதி தந்த சொத்து பத்திரத்தை அந்த பிஞ்சு கரத்தில் கொடுத்த அரவிந்த் ..
"எனக்கு துரை மட்டும் போதும் "என்று கூற மருதாணி அயர்ந்து கிடக்க..
அப்படியே கொஞ்சம் இந்த டம்மி மம்மியும் எனக்கு வேணும் விட்டு கொடுத்திடு, உன்ன நான் பார்த்துக்கிறேன் .. என்று அரவிந்த் தங்கையோடு டீல் பேசிட அது அண்ணன் நீட்டிய கையோடு தன் கையை கோர்த்து கொண்டது...
துர்கா படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம் என அரவிந்த் பல கள்ள வேலை பார்த்து தள்ளி இருக்கிறான் ...
துரை பொறுப்பான தந்தையாக இருந்தாலும் மனைவி விஷயத்தில் ரோமியோதான் யார் கண்ணிலும் படாது காம சூத்திர பாடம் அத்தனையும் மனைவியிடம் கரைத்து குடித்து கொண்டிருக்கிறான் ..அவளும் புருஷன் கண்ணை காட்டினால் போதும் அசப்பு இல்லாது உருவி அவனுக்கு காம தேவதை ஆகி போவாள் அனுபவித்து வாழ வயது தடை இல்லை என்று வாழ்கிறார்கள் ..
இரண்டு வருடங்கள் கழித்து
துரை வீட்டு சுவற்றில் அரவிந்த் , துரையின் மகள் துளசியை குளிப்பாட்டுவது போல புகைப்படம், தன் தங்கைக்கு தலைவாரி விடுவது போல , தன் மகள், தங்கை இருவரையும் பைக்கில் வைத்து வளம் வருவது போல சாமி தரிசனம் பார்க்க தங்கையை தூக்கி தலைமேல் வைத்திருப்பது போல ..
அன்று துரை கொடுத்த தகப்பன் பாசத்தை இன்று தன் தங்கைக்கு, கொடுக்கிறான்..மகளையும் கொஞ்ச மறுக்க வில்லை ...
அன்பு ஒரு நாளும் குறைந்து போகாத சொத்து ..தன் தந்தை காட்டிய பாதையில் இதோ அன்பில் பாதையில் அவனும் சேர்ந்து கொண்டான்...
சோலைவனம் போல குடும்ப புகைப்படத்தில் மருதாணி சிரித்த முகமாக துரை கைவளைவில் நின்றாள் ..
நம் வாழ்வு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று ஐயா அப்துல் கலாம் கூறியது போல, ஏதோ வாழ்ந்தோம் கடமைக்கு நாமளும் திருமணம் முடிந்து மனைவி குழந்தை என்று இருக்கும் வரை இருந்து விட்டுப் போய் விடுவோம் என்பது வாழ்க்கை அல்ல .. நம்முடைய வாழ்க்கை நான்கு பேருக்கு உதாரணமாக இருக்க வேண்டும் துரை மருதாணியின் தன்னலமில்லாத குணங்கள் தான் அன்பால் ஒரு குடும்ப வனத்தை உருவாக்க காரணம்... ஒருவருக்கு ஒருவர் சுயநலமோ, கர்வமோ கொண்டு தன் வழியில் நடந்திருந்தால் இப்படி ஐக்கியம் கண்டிப்பாக வந்து இருக்காது.. விட்டுக் கொடுத்தலும், பொறுமையும் நீ என்ன செய்தாலும் நான் உனக்கு அன்பை மட்டுமே கொடுப்பேன் என்ற அன்பதிகாரமும் கொண்டிருக்கும் வரை, இந்த வனத்தில் மருதாணிக்கு மதிப்பு குறையாது , இந்த வனத்தில் நரிகளுக்கு இடம் கிடையாது ,இந்த வனத்தில் சந்தோஷத்திற்கும் செழிப்பிற்கும் பஞ்சம் இருக்காது ...
வனம் அன்பில் செழிக்கட்டும்!!
நன்றி
வாழ்க வளமுடன் !!
வாழ்க தமிழ் ,
வாழ்க தமிழ்நாடு !!