ஓ...காதல் நெஞ்சே 1-6

அத்தியாயம்-1
பெங்களூருவின் பிரதான சாலையில் உள்ள அந்த பெரிய வணிக வளாகத்தின் உள்ளே உள்ள ஒரு பிரபல ஆயத்த ஆடையின் கடைக்குள் நுழைந்தான் ஷ்ரவனும் அவனுடைய நண்பன் அஜயும்...
அஜய் கேட்டான் "டேய் யு.எஸ்.லயிருந்து வந்து... இங்க ட்ரஸ் எடுக்க வந்திருக்கியே, உன்னை என்ன செய்ய...அங்கயிருந்தே நல்ல பிராண்டடு ட்ரஸ் எடுத்திட்டு வந்திருக்கலாம்...நீ என்னடானா லீவுலத் தூங்கிட்டிருந்தவனை எழுப்பி இங்க கூட்டிட்டு வந்திருக்க" என்று பேசியபடியே வர... ஷ்ரவன் தனக்கு ஏற்ற ஆடையைத் தேர்ந்தெடுக்க... அவன்பின்னே இவன் சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தான்.
ஷ்ரவனோ தேர்ந்தெடுத்த ஆடையைப்போட்டுப் பார்க்க ட்ரையல் ரூமிற்குள் சென்றவன் ஒரு டீஷர்ட் போட்டுக்கொண்டு வெளியே வந்து அங்கே நின்ற அஜயிடம் “எப்படிடா இருக்கு” என்று கேட்க ,அவனோ ஷ்ரவனைப் பார்த்தவிட்டு, அவனின் அடுத்தப்பக்கம் பார்வையைச் செலுத்த, திரும்பி பார்த்தவனுக்கு சிறு அதிர்ச்சி...
பக்கத்து ட்ரையல் ரூமிலிருந்து வந்தப்பெண் இவன் அணிந்திருந்த அதே கலர், அதே எழுத்துக்கள் கொண்ட டீஷர்ட் போட்டிருந்தவள் தனது தோழி காவ்யாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“எப்படி இருக்கு நல்லாயிருக்கா” என்று...
இருவரும் ஒருவரைவொருவர் பார்த்ததும், நம்மளை மாதிரியே ட்ரஸ் போட்டிருக்கான் என்ற யோசனையோடவே... உள்ளே சென்று வேறுமாற்றி வந்து அவரவர் தோழமையிடம் காட்டிக் கேட்க...இப்போதும் காவ்யா மற்றும் அஜய் இருவரின் பார்வையும் பக்கத்தில் நின்றிருந்தவர்களைத்தான் சுட்டிக்காட்டியது....
மறுபடியும் இருவரும் திரும்பிப்பார்க்க...
இப்போது அணிந்திருந்த சட்டையின் கலர், டிசைன் எல்லாமே ஒன்றுபோல பேட்டிருந்தனர்.
இப்போது அந்தப்பெண் ஷ்ரவனிடம் நேரடியாகவே கேட்டாள்... “என்ன சார் பொண்பிள்ளைகளைத் தொடர்ந்து வருவீங்களோ...அதெப்படி நான் எடுத்ததையே நீங்க எடுக்க முடியும்” என்று சத்தம்போட...
“உன்னை எதுக்கு நான் பின்தொடரணும், நீயெல்லாம் அந்தளவுக்கு பெரிய அழகியில்லை சரியா...நான் அப்படிப்பட்ட ஆளுமில்லை” என்று அவனும் எகிற...
கடையின் ஊழியர் வந்து... “மேடம் மேடம் சத்தம் போடாதிங்க...நீங்க இரண்டுபேரும் எடுத்திட்டு வந்தது ஜோடிகளுக்கான கலெக்ஷன்ல இருந்து...அதுதான் ஒன்றுபோல இருக்கு.உங்களுக்கு வேணும்னா எடுங்க, இல்லை வேறு பாருங்க” என்றதும்...
அந்தப் பெண்ணோ திரும்பிப்போய் அவன் எடுத்தமாதிரியானது எனக்கு வேண்டாம் என்று வைத்துவிட்டாள்...
ஷ்ரவனோ “நான் போடுறமாதிரி வேறயாரும் போட்ருக்ககூடாது...” என்றவன் எடுத்ததை அங்கயே ஊழியரின் கையில் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டான்...
எப்படிச் சத்தம்போட்டுப் பேசுதுபாரு பொது இடம்னு இல்லாம என்று பொருமியவன்..வெளிய வந்து நடந்துக்கொண்டிருக்க... அஜய் அவனது கையைப்பிடித்து “பசிக்குது வா ரெஷ்ட்ராண்ட்க்குப் போவோம்...”என்று அழைத்துச் சென்றான்...
இருவருக்குமே லேசாக பசியாகயிருந்தது, முதலில் ஜூஸ் ஆர்டர் பண்ணுவோம்...என்று ஷ்ரவன் தனக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி ஜூஸை ஆர்டர் செய்தான்,அஜயோ ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்திருந்தான்... அவர்களின் ஆர்டரை சர்வர் கொண்டு வைத்ததும்...
ஸ்ரவன் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் தனது கையில் எடுத்துக்கொண்டான், அஜயோ முழித்துக் கொண்டிருந்தான்... என்னவென்று பார்க்க அவன் “ஆர்டர் செய்திருந்த ஆப்பிள் ஜூஸிற்குப் பதிலாக ஐஸ்கிரீம் வந்திருக்கு” என்றான்.
அதற்குள் பின்பக்கமாக இருந்த ஒரு டேபிளில் இரு பெண்கள் தங்கள் ஆர்டரில் “ஐஸ்கிரீமிற்குப் பதிலாக ஆப்பிள் ஜூஸ் வந்திருக்கு” என்று சர்வரிடம் புகார் செய்யவும்...
ஷ்ரவனும் அஜயும் திரும்பிப் பார்க்க, அங்கு துணிக்கடையில் சண்டையிட்ட அதே இரு பெண்கள் அங்கும் இருந்தனர்...
அவர்களும் இவர்களைப் பார்க்க இருவருக்கும் புரிந்துப்போனது, அவர்கள் இருவரும் ஆடர் செய்த உணவு மாறி இருந்தது...
அந்தப் பெண்ணோ வேகமாக எழும்பி வந்தவள் "என்னடா நினைச்சுட்டு இருக்கீங்க போற இடமெல்லாம் வந்து கன்பியூஸ் பண்ணீட்டு இருங்கீங்க,” என்று சத்தமிட்டு சண்டைப்போட்டாள்.
ஷ்ரவனுக்கோ இப்படி பொது இடத்தில் சத்தம் போட்டு பேசுவது பிடிக்காது... அதுவும் மரியாதை இல்லாமல் அவள் பேசியதும் கோபம் கொண்டான்.
தனது கையின் சட்டையை மேலே ஏற்றி விட்டவன் "என்னடி நினச்சிட்டு இருக்க பொது இடத்தில் எப்படி பேசணும் தெரியாது, அதுவும் மரியாதை இல்லாமல் பேசற...நாங்க போற இடமெல்லாம் நீங்க இரண்டுபேரும் பின்தொடர்ந்து வந்துட்டு , நீ எங்கமேலப் பழிபோடுறியா... கொஞ்சம் வாட்டசாட்டமா அழகா பசங்க இருந்தா இப்படித்தான் பின்னாடி வருவீங்களா?
மரியாதை இல்லாம பேசுற... உங்க வீட்ல உனக்கு மரியாதையா பேசுவதற்கு சொல்லித் தரலையா?...” என்று எகிறி பேசினான்.
அந்தப் பெண்ணோ "ராஸ்கல் பொண்ணுங்ககிட்ட எப்படி பேசுறதுனு தெரியல... டி போட்டு பேசுற. கொஞ்சம் அழகான பெண்களை பார்த்த பின்னாடி வால் பிடித்து அலையுற, உனக்கு எதுக்குடா மரியாதை டொமாட்டோ” என்று அவளும் சண்டைக்கு போக... அவளது தோழி காவ்யாவும் அவளது கையைப்பிடித்து... “ ஹரிதா ப்ளீஸ் வேண்டாம். பொது இடத்தில் இப்படி சத்தம் போடாத... சண்ட போட வேண்டாம் நம்ம வெளியப்போவோம்.
எல்லோரும் நம்மளைத்தான் பார்க்கிறார்கள் வா” என்று அவளை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே செல்ல முயன்றாள்.
ஷ்ரவனையும் அஜய் இழுத்து உட்காரவைத்தான்...
அவர்களது ஆர்டரை மாற்றிக் கொடுத்த சர்வர் வந்து “மேம்... தப்பா நினைச்சுக்காதீங்க இரண்டுலயும் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் இருக்கவும் மாற்றி வச்சுட்டேன்.. பிரச்சனை பண்ணாதீங்க” என்று மன்னிப்புக் கோரவும்.... இரு பெண்களும் வெளியே வந்தனர்.
ஷ்ரவன் நினைத்தான் ‘...ஓஓ .. இவ பெயரு 'ஹரிதா'வா...இவளுக்கு யாரு இப்படி அழகான பேரை வச்சது, ஆளு அழகா இருந்தப்போதுமா, எப்படி வாய்ப்பேசறா’ என்று நினைத்தவன்.... ரவுடி ரங்கம்மா.
நான் எதுக்கு இவளை நினைக்கிறேன் என்று தனது சிந்தனைக்கு தடைப்போட்டான்... மறுபடியும் இருவரும் ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர்... இப்போதும் ஷ்ரவனின் முகம் கடுகடுவென்று இருக்க அதை பார்த்த அஜயோ "என்னடா மச்சான் இன்னும் கோவமா, அதையே நினைச்சுட்டு இருக்கியா? விடுடா... இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தப்பா புரிஞ்சுகிட்டீங்க... இருந்தாலும் அந்த பொண்ணு பேசினது கொஞ்சம் அதிகம் தான் விடுடா” என்று வெளியே வந்தார்கள்.
ஷ்ரவனை சமாதனப்படுத்தியவன், “இன்னைக்கு லீவை சந்தோசமாகக் கடத்துவோம் வா... நாளையிலிருந்து ஆபிசுக்கு ஓடணும்...” என்று சொன்னான் அஜய்.
“வாடா படம் பார்த்துட்டு போவோம்” என்ற அஜய், ஷ்ரவனையும் அழைத்துக்கொண்டு அந்த மாலில் இருக்கும் சினிமா ஹாலிற்குள் டிக்கெட் எடுத்து நுழைந்தனர்...
உள்ளே சென்று இருவரும் அமர்ந்து படத்தில் கவனத்தை செலுத்தினார்கள் இடைவேளை நேரத்தில் பாப்கார்ன் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சினிமா பார்க்க ஷ்ரவனின் இடது கை பக்கமாக யாரோ ஒருவர் வந்து அமரவும்... யாருன்னு சரியாக இருட்டில் கவனிக்கவில்லை.. “எப்படிடி இருட்டுக்குள்ள கரெக்டா வந்து உட்கார்ந்து இருக்க, இந்த இருட்டுல சீட்டு கண்டுபிடிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும் என்றாகிட்டுது... நீ எப்படி அதுக்குள்ள பாப்கார்ன் வாங்கிட்டு சரியா வந்து உட்கார்ந்த” என்றவாறே... ஷ்ரவனின் கையிலிருந்த அந்தப் பாப்கார்னை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
இதைக்கண்ட ஷ்ரவன் என்னடா இது, யாரு என்கிட்டயிருந்து எடுத்து சாப்பிடுறது? அஜய் இந்தப்பக்கம்தான இருக்கான்,இது யாரு? என்று திரும்பிப் பார்க்க இருட்டில் ஒன்றும் தெரியாததால்.... தன் மொபைலில் டார்ச் லைட்டை உயிர்ப்பித்து பார்க்க, அங்கு அமர்ந்து இருந்ததோ ஹோட்டலிலும் துணிக்கடையிலும் சண்டையிட்ட அதே பெண் ஹரிதா...
இப்பொழுது ஷ்ரவன் தலையில் கை வைத்துக் கொண்டான்.. என்னடா இது எங்க போனாலும் இந்த பொண்ணு நம்மள சுத்திவந்து நிக்குது ... அவளும் இப்பொழுது அந்த சிறு வெளிச்சத்தில் ஷ்ரவனின் முகத்தை பார்க்க அதிர்ந்து இருந்தாள்...
எந்த சீட்டு என்று பார்த்தவள்... தன் தோழி எங்கயிருக்காளோ என்று எழுந்துப் பார்க்க அவளுக்குத் தெரியவில்லை...
அதற்குள் “என்னங்க மேடம்... நான் உங்க பின்னாடி வர்றேனு அந்த எகுறு எகுறுனீங்க,பார்த்தால் நீங்கதான் எங்கப்பின்னாடியே வர்றீங்கபோல” என்று சத்தம் போடவும், அஜய் என்னவென்று எட்டிப்பார்க்க... “ஐயோ! இந்தப்பொண்ணா என்னங்கடா இது வேதாளம் மாதிரி எங்களையே சுத்தி வருது” என்றவன்...
ஹரிதா இப்போ அமைதியாக “சாரி இருட்டுல சீட்டு மாத்திவந்து உட்கார்ந்திட்டேன், கொஞ்சம் அந்த டார்ச் லைட்ட காண்பிக்க முடியுமா,” என்று மென் குரலில் கேட்க... முறைத்துக்கொண்டே வெளிச்சம் காண்பிக்க எழும்பி காவ்யாவிடம் செல்ல சிறிது நடந்தவள்,திரும்பி ஷ்ரவனைப் பார்த்து ... “போடா டேய்” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
அஜய் அவனைப் பார்த்து சிரிக்க... “திமிருப்பிடிச்சது ஒரு நன்றிக்கூட சொல்லாம, போடானு சொல்லிட்டுப் போகுதுப் பாரு...
இதையெல்லாம் பெத்தாங்களா இல்ல ஆர்டர் பண்ணி வாங்கினாங்களா...”
என்று வாயில் வந்த கொஞ்சம் ஆங்கில நல்ல வார்த்தைகளால் அர்ச்சித்தான்...
கோபம் வந்தா இப்படித்தான் ஆங்கிலத்தில் நல்ல வார்த்தைகளைப் பேசுவான் ஷ்ரவன்.
படித்ததெல்லாமே ஆங்கிலவழிக்கல்வி,தமிழ் பேசமட்டுமே வரும் அவனுக்கு...
படம் முடித்து வெளிய வரவும், அஜயிடம் பேசியவன்... “ என்னோட ஃபிளாட்டுக்கு வந்திட்டுப்போறியா எப்படி...இல்ல அம்மா தேடுவாங்களா” என்று பேசியபடியே வெளியே வந்தவன்.
தனது பி.எம்.டபுல்யூ... பைக்கை ஸ்டார்ட் பண்ணவும், பின்னாடி இருந்த அஜய்... “இந்த பைக் ஓட்டுறதுக்கே தனியா சாப்பிடனும்டா...பேசாம என்னோட கார்லயே வந்திருக்கலாம்” என்று பேசிக்கொண்டே பார்க்கிங்கிலிருந்து வெளியே வண்டியை எடுத்து வரவும்... ஒரு கார் அவனது பைக்கிற்கு முன் வந்து நிற்கவும், எரிச்சலடைந்தவன், “கார் ஓட்டத்தெரியாதவன் கையில காரப் பாரு,காரெடுத்துட்டு வந்திடுறானுங்க” என்று நக்கலடித்துவிட்டு,ஹார்ன் வேகமாக அடிக்கவும்... அந்தக் காரிலிருந்து எட்டிப் பார்த்து “கொஞ்சம் பொறுங்க” என்று கையைக் காட்டி சொல்லிய முகத்தைப் பார்த்தவன்...
“ டேய் என்னோட ராசிக்கு இன்னைக்கு என்னடா போட்டிருந்துச்சு” என்று பின்னாடியிருந்தவனிடம் கேட்க... ஏன்டா இப்போ அதை கேட்குற...
“அதுவா அங்க முன்னடிப்பாரு அந்த ரவுடி ரங்கம்மாதான் காரை பார்க்கங்கிலிருந்து ஒழுங்கா எடுக்கமுடியாம...நமக்கு நந்திமாதிரி நிக்கிறா...”
அஜயோ “என்னது”! என்று ஷாக்கானவன்...
இவா எப்போ காரை எடுத்து நம்ம எப்போ போறது என்று தனது பைக்கில் இருந்தவன் தனது ஹெல்மெட்டோடு இறங்கியவன்... காருக்கு அருகில் சென்று தனது சைகையால் கேட்க. அவளும் அடையாளந்தெரியாமல், “வெளிய எடுக்க முடியல” என்க... அவளைத் தள்ளி இருக்கச் சொல்லிவிட்டு காரை லாவகமாக ஓட்டி வெளியக்கொண்டுவந்து விட்டவனுக்கு...
ஹரிதா “நன்றி” சொல்லவும்...
தனது ஹேல்மெட்டை இப்போது கழட்டித் தனது முகத்தைக் காண்பித்து புருவம் உயர்த்தி எப்படியென்று கேட்க...
ஹரிதாவின் முகம் போனபோக்கைப் பார்த்து நக்கலாக சிரித்தவன், தனது பைக்கை ஓட்டி அவளது காரைத் தாண்டிச் சென்றான்...
பைக்கில் செல்லும்போதே ஷ்ரவன் சிரித்தான், “கடைசியில் அவமுகத்தைப் பார்க்கணுமே... இஞ்சித்தின்னமாதிரி... ஹாஹாஹா... பல்பு வாங்கிட்டா நம்மக்கிட்டயே...”
ஹரிதாவோ கடைசியில அந்த நெட்டக்கொக்குகிட்ட பல்பு வாங்கிட்டமே என்று தனது கோபத்தைக் காரின் வேகத்தில் காண்பித்தாள்.
அத்தியாயம்-2
ஷ்ரவனும்,அஜயும், அதே புன்னகையுடன் ஷ்ரவனுடைய ஃபிளாட்டுக்கு வந்திருந்தனர்...
அங்கயோ ஹரிதா காரை வேகமாக ஓட்டிச்செல்ல... “ஏன்டி என்ன பரலோகம் அனுப்பனும்னு முடிவோடதான் என்னைக்கூட்டிட்டு வந்தியா... அப்படி என்னடி இவ்வளவுக்கோபம்...
நான் ஒரே பொண்ணு, அதுவுமில்லாமல் என்னை நம்பி நிறைய பேஷன்ட்ஸ், உங்க ஹாஸ்பிட்டல்லதான் காத்திருக்காங்க,
பார்த்து வண்டியோட்டுமா தாயே!”
மெதுவாக காரின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள்... “கடைசியில் அந்த நெட்டக்கொக்குகிட்ட பல்பு வாங்கிட்டனே அதுதான் கொஞ்சம் மூட் ஆஃப் டி.
அவனும் அவன் மூஞ்சியும், என்னையவே டி போட்டுப் பேசுறான் கல்ட்சர்லஸ்” என்று ஷ்ரவனை திட்டிக்கொண்டே வந்தாள்.
“நீ மட்டும் ஏன் பொதுயிடத்துல அவ்வளவு சத்தம்போட்ட,ஏன்டி எல்லாரையும் கூலா சமளிக்குற நீயேன் இப்படி ஹாட்டா பேசின.”
“தெரியலை அவனுக்கும் எனக்கும் எதோ வைப்ஸ் செட்டாகலடி...
இன்னைக்கு முழுவதும் அவனைத்தான் பார்த்திருக்கேன்... அவனைப் பார்த்தாலே எரிச்சலாயிருக்கு... இனி இவனை வாழ்க்கையில எங்கயும் பார்க்ககூடாது கடவுளே...” என்று சொன்னவள் தன் தலையை ஆட்டிக்கொண்டாள்.( நீ வேண்டும்போது கடவுள் கொஞ்சம் பிஸியாகிட்டாரும்மா... உன் வேண்டுதலை அவர் கேட்டகவேயில்லை...அதனால இனி தினமும் அவனைப் பார்க்கப்போற)
உள்ளே நுழைந்ததும் அஜயோ அப்படியே முன்னறையில் இருந்த சோபாவில் ஹாயாகப் படுத்துவிட்டான்.
ஷ்ரவனோ உள்ளே சென்று ஃபிரஷ் அப் ஆகிவரவும், அஜய் கேட்டான்...
“ஏன்டா யு.எஸ்ல இருந்து நம்ம ஊருக்கு வந்த, அங்க நல்ல சம்பளத்துல வேலை, அதைவிட்டுட்டு இங்க வந்திட்ட...
எவளாவது வெள்ளைக்காரிகிட்ட மாட்டிக்கிட்டு தப்பிக்க இங்க ஓடிவந்துட்டியோனு நினைச்சேன்...”
இதைக்கேட்டதும் கையிலிருந்த துண்டை அவன் மேல வீசியெறிந்தவன் ஷ்ரவன்...
“மேகா அக்கா எப்படிடா உன்னை இங்க விட்டாங்க?...”
ஷ்ரவனோ அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அதை ஒதுக்கியவன்.
ஃப்ரிட்ஜிலிருந்து இரண்டு பீர் பாட்டிலை எடுத்து ஒன்றை அஜயிடம் கொடுத்துவிட்டு, தானும் அப்படியே சோபாவில் அமர்ந்தவன்...
“இங்கயே இருந்திறேன்... நாளைக்கு எப்படியும் ஒரே ஆபிசுக்குத்தான் போகணும், ஒன்னாப் போயிடுவோம்.”
அஜயோ "ஐயயோ...கீதாம்மா அடி பின்னிடுவாங்க...ஏன்டா நான் நல்லாயிருக்கது உனக்குப் பிடிக்கலையாடா? வீட்டுக்கு போகிறவரைக்கும் அம்மா காத்திட்டிருப்பாங்க,நான் கிளம்புறேன்” என்று எழும்பியவனைப் பார்த்து...
“ஓ...சரி நான் கொண்டுவிடவா எப்படி” என்று ஷ்ரவன் கேட்க..
“ஆஹான்... நீ கொண்டுவந்துவிட்டா யாரு என்னோட வண்டியை எடுத்துட்டு வருவா?அதுக்கும் ஆள் வைப்பியா நாளைக்கு அதுலதான்டா ஆஃபிஸ்க்கு வரணும், கார் எடுத்துட்டுவந்தா ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டு முழிக்கனும்... சரி நான் கிளம்புறேன்” என்று சென்றுவிட்டான்.
தனக்கு உணவை ஆர்டர் செய்துவிட்டு அறைக்குள் சென்றவன்...தனது போனை எடுத்துப்பார்த்தான் அதில் ஏகப்பட்ட தவறிய அழைப்புகள் இருக்க, எடுத்துப் பார்த்துவிட்டு இரண்டு அக்காவும், அவங்கம்மாவும் அழைத்திருந்தனர்.
முதல்ல தனது அம்மாவிற்கு அழைத்தவன்... அம்மாவிடம் செல்லம், கொஞ்சிக் கொண்டிருந்தான்...
ஷ்ரவன் இரண்டு பெண்குழந்தைகளுக்கு பின் பிறந்தவன்,வீட்டில் எல்லோருக்குமே அவன் செல்லப்பிள்ளை.
தேவானந்த் சென்னையில் பெரியபுள்ளி. அவருடைய மனைவி நிருபமா. மூன்று குழந்தைகள் மூத்தது அக்க்ஷரா, அவளை தனது அக்காள் மகன் ஸ்ரீராமிற்கே கட்டிக்கொடுத்து தன்னோட கம்பேனியிலயே எம்.டி பதவிக்கொடுத்து தன்னுடனே வைத்துள்ளார்...
இரண்டாவது மகள் மேகாவை அமெரிக்காவில் பெரிய பிஸ்னஸ்மேனான ஆத்விக்கிற்கு கல்யாணம் செய்துக்கொடுத்துவிட்டார், அவள் அங்கயே இருக்கின்றாள்.
அங்கு தங்கித்தான் தன்னுடைய மேல்படிப்பை முடித்து வேலையும் செய்தான் ஷ்ரவன்.
அம்மாவிடமும் தன் பெரியக்கா அக்ஷ்ராவிடமும் பேசிவிட்டு வைத்தவன்.
மேகாவிற்கு அழைக்கவேயில்லை,
அப்படியே சாப்பிட்டுப் படுத்துவிட்டான்.
இங்கு ஹரிதாவோ அவங்கம்மா சுமித்ராவிடம் பாட்டு வாங்கிக்கொண்டிருந்தாள்.
“இன்னும் சின்னபிள்ளைனு நினைப்பு ஒரு கம்பெனியில பெரிய பொசிஷன்ல இருக்கறவா மாதிரியா நடந்துக்குறா...” என்று.
அவளோ அவங்கப்பாவின் அருகில் சோபாவில் அமர்ந்து சாப்பாட்டுத் தட்டை கையில் வைத்துக்கொண்டு,மெதுவாக
கொறித்துக்கொண்டிருந்தாள்...
அவங்கம்மா கல்லூரியின் விரிவுரையாளர் எல்லாவற்றிலும் சரியாக நடக்கவேண்டும் என்று இருப்பவர்... அப்பா கிருஷ்ணாவோ மருத்துவர், ஒரு மருத்துவமனையிருக்கு பெரிசாகவும் இல்லாமல் சிறியதாகவுமில்லாமல்..
அங்குதான் காவ்யாவும் வேலை செய்கிறாள்... இருவரும் பள்ளிக்காலத்திலிருந்தே தோழிகள்.
கிருஷ்ணா-சுமித்ரா தம்பதிகளுக்கு இரு பெண்குழந்தைகள். பெரியவள் சஹானா திருணம் முடித்து பெங்களூருவிலயே இருக்கின்றாள்.
இப்போது ஹரிதா வெளியே போய் சுற்றிவிட்டு வந்ததிற்குத்தான் சுமித்ரா திட்டிக்கொண்டிருந்தார்.அதெற்கெல்லாம் அவள் அசரவேமாட்டாள்.
தனது தகப்பனைப் பார்த்து "நீங்க பொண்ணுப் பார்க்கப்போகும்போதே கொஞ்சம் யோசிச்சிருக்கலாம் டாடி.
இப்போ பாருங்க எப்படி வாய்ப்பேசுறாங்க” என்றவள், தனது தட்டிலிருந்த சப்பாத்தியை பிய்த்து வாயில் வைக்கவும். சரியாக அந்தப்பக்கம் வந்து நின்றார் சுமித்ரா.
“ஆமாடி நான் வாய்தான் பேசுறேன்.நீ எங்கப்போய் சுத்திட்டு வந்த?அதை உங்கப்பாகிட்ட சொன்னியா...
சென்னைலயிருந்து வந்தியே உன்னோட பொருட்களையெல்லாம் அடுக்கி வச்சியா?
அப்படியே போட்டுட்டுப் போயிட்ட,
நாளைக்கு வேலைக்குப்போகணுமே எல்லாம் எடுத்து வைக்கணும்னுத் தோணுச்சா உனக்கு” என்று பேசிக்கொண்டே போனார்.
“மம்மி ப்ளீஸ்...எனக்குத் தோணும்போது செய்துக்றேன்...உங்க ரூல்ஸ்க்கு என்னைக்கொண்டு வரணும்னு முயற்சிப்பண்ணாதிங்க...” என்றவள் எழும்பி சென்றுவிட்டாள்.
சுமித்ரா போகும் மகளையே பார்த்துக்கொண்டிருக்க, கிருஷ்ணாவோ “என்னம்மா இது எப்பவும் நீங்க இருண்டுபேரும் எதிரும்புதிருமா இருக்கீங்க...மாமியார் மருமக சண்டைக்கூட நம்ம வீட்ல இப்படியில்ல... “என்றதும்.
“சந்தடி சாக்குலா உங்கம்மாவ நல்ல மாமியாருன்னு சொல்லறீங்க அப்படித்தான...” என்று முறைக்க.
“நான் ஒன்னுமே சொல்லலைத் தாயே
உன்னோட பேச்சுத்திறமையை என்கிட்ட காட்டாத...” என்றவர் தொலைக்காட்சியில் கவனம் வைத்தார்.
சுமித்தராவோ நான் பேசினாமட்டும் முகத்தை திருப்பிருங்க... “அப்பாவும் மகளும் இவ்வளவு நேரமா பேசிட்டுதான இருந்தீங்க...” என்று நொடித்தவர் தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
ஹரிதாவோ தனதறைக்குள் வந்தவள் வாங்கி வந்தப்பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தவளுக்கு காலையில் நடந்த நிகழ்வுகள்தான் மனதில் ஓடியது...
எப்படி அவன்கிட்ட பொது இடத்துல வச்சு சண்டைபோட்டேன். ச்ச என்று தன் தலையைத் தட்டியவள்... ஆனாலும் அந்த நெட்டக்கொக்கு ரொம்பதான் பேசினான் என்றுவிட்டு, வேறு கடையில் வாங்கிய துணிகளையும், நாளைக்கு போட வேண்டிய துணியையும் எடுத்து தனியாக வைத்தாள்.
அவளும் நாளைக்கு புது ஆஃபிசிற்கு போவதால் சீக்கிரமாக போகவேண்டும் என்று படுத்துக்கொண்டாள்...
நன்கு தூக்கத்தில் மொபைலில் அழைப்பு சத்தம்கேட்க... ஷ்ரவன் எடுத்துப் பார்த்துவிட்டு அழைப்பை எடுக்கவில்லை, மறுபடியும் மறுபடியும் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது...
இவளுக்கு வேற வேலையே இல்லையென்று போனை அணைத்துப் போட்டுவிட்டு மறுபடியும் தூங்கினான்.
காலையில் வைத்த அலாரச்சத்தம் கேட்கவும் எழும்பியவன், மெதுவாக சென்று தனக்கு கெட்டிலில் காபி வைத்துவிட்டு குளித்துமுடித்து அவசரமாகக் கிளம்பி தனது மொபைலை உயிர்ப்பித்து, அம்மாவிற்கு அழைத்தான்...
“அம்மா இன்னைக்கு வேலைக்கு சேரப்போறேன்... எனக்காக உங்க கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே... நிருபமா கேட்டார் “மேகா நேத்து உனக்குப் போன் பண்ணினதுக்கு எடுக்கலையாம், அவ மேலக்கோபமா இருக்கியா என்ன?...”
“அம்மா காலையிலயே சந்தோசமா இருக்கேன்... பாளீஸ் மூட மாத்தாதிங்க, நான் நைட் கால் பண்றேன்மா" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
அஜயிற்கு அழைத்தவன் “நான் கிளம்பிட்டேன், வர்ற வழியிலயே சாப்பிட்டு வந்திர்றேன்” என்று முடித்தவன்...தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
பெங்களூருவின் பிரபலமான ஐ.டி ஆபிஸ்ற்கு சென்றுக்கொண்டிருந்தான்...
ஹரிதா காலையில் எழும்புவதற்குள் சுமித்ரா மூன்று முறை அறைக்குள் வந்து அவளின் முதுகில் தட்டிவிட்டு சென்றார், “அம்மு எழும்பு” என்று.
பின்பு அவசரவசரமாக எழும்பி அவங்கம்மாகிட்ட போனவள் காபிக் குடித்துக்கொண்டே அவரிடம் பேசியபடியிருந்தவளிடம், “ஆபிஸ் எப்படி போவ” என்று கேட்க...
“கார்ல போறேன்” என்றதும்... சுமித்ரா சொன்னார் “நேத்தே கார் வேண்டாம்னு சொன்னதுக்கு கேட்காம எடுத்துட்டுப் போன.
ரொம்ப நாளு ஆச்சுது வேண்டாம், நீ ஸ்கூட்டி எடுத்திட்டுப்போ...” என்றார்.
இதை சொல்லும்போதே நேத்து மாலில் கார் பார்க்கிங்கில் கார் எடுக்க முடியாமல் திணறியதும், அந்த நெட்டக்கொக்கு வந்து எடுத்து லாவகமாக ஓட்டியதும் நினைவுக்கு வந்ததும் தலையை உலுக்கினாள்... காலையிலயே அவனோட நியாபகம் நமக்கு எதுக்கு.
"மா, நான் ஸ்கூட்டியிலப் போகல, ஆட்டோவிலயே போயிக்கிறேன்” என்று குளிக்க சென்றவள், ஆபிஸிற்கு செல்ல தயாராகி வந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
சுமி வந்தவர் "வீட்ல காரும், வண்டியும் இத்தனை இருந்தும், நீ ஆட்டோவிலப் போறியா வேண்டாம்டா... அப்பாவ கொண்டு விட்டுட்டுப் போகச் சொல்றேன்...”
என்றதும் சரியென்று தலையசைத்தவள் எல்லாம் எடுத்துக்கொண்டுவர உள்ளே சென்றாள்.
பார்க்கத்தான் சுமித்ராவை ஹரிதா எதிர்த்துப்பேசுற மாதிரி இருக்கும், ஆனா அப்படியில்லை.அம்மாவை டென்சன் படுத்துனாதான் அவளுக்கு தூக்கம் வரும்... இரண்டு பிள்ளைகளும் பெற்றோர் சொன்னாக் கேட்டுக்கொள்வார்கள்.
ஒருவழியாக ஹரிதா கிளம்பி சுமியிடம் சொல்லிக்கொண்டு காரில் ஏறியவள் தந்தையின் அருகில் அமர்ந்துக்கொண்டாள்.
கிருஷ்ணா "அம்மு, நீ அங்கயிருந்து இங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோசம்டா... இங்கயும் உனக்கு நல்ல சூழல் அமைய டாடியோட வாழ்த்துக்களடா, ஆனா ஒன்னுமா,கொஞ்சம் அவசரப்பட்டு கோபப்படுறது மட்டும் குறைச்சிக்க, யாரோட குணத்தையும் முதல்லயே எடைப்போடாத, அதவச்சித்தான் உனக்கு பிரச்சனையே, அதுதான்டா நீ செய்யுற பெரிய தப்பு...சரியா கவனமாயிரும்மா" அவளும் “சரிப்பா” என்றவள் இறங்கிக்கொண்டாள்...
அங்கே நுழைவில் எல்லா விசாரிப்பும் முடித்து, அவள் செல்ல வேண்டிய கட்டிடத்திற்கான வழியையும் சொல்லி அனுப்பினர்.
உள்ளே வரவும்...மெதுவாக நடந்து அங்கவுள்ள அந்த சூழலை ரசித்துக்கொண்டே நடந்தாள்... ‘இன்று மட்டுமே ரசிக்கமுடியும், நாளையிலிருந்து இந்தயிடத்தைக் கடந்துப்போறதுக் கூடத் தெரியாது’ என்று யேசித்துக்கொண்டே சென்றாள்.
அவள் போகவேண்டிய கட்டிடத்திற்குள் நுழைந்தாள். அங்கயும் இதைப்போன்றே ஸ்க்ரீனிங்க் செய்து உள்ளே போவதற்கு கிட்டதட்ட ஒருமணிநேரமாகிற்று... அதன் பின்பு அனுமதிக் கிடைத்ததும், அவள் சந்திக்கவேண்டிய நபர் இருக்கும் மூன்றாவது தளத்திற்குப் போக லிப்டிற்குள் செல்ல அங்கு நின்றிருந்தவனைப் பார்த்து ஒரு நொடி அதிர்ச்சியானவள் அதைக் காண்பித்துக்கொள்ளாமல், ஒன்றும் பேசாமலயே நின்றாள்... இப்போது முதல் தளத்தில் கொஞ்சம்பேர் ஏற லிப்ட்டிற்குள் இருவரும் நெருங்கி நிற்க வேண்டிய சூழல், நெருங்கி நிற்கும்போதே ஹரிதா அவனை முறைத்துப்பார்க்க, ஷ்ரவனோ அவளைக்கண்டுக் கொள்ளவேயில்லை தன்னுடைய மொபைலில் கவனமாக இருந்தான்...
மூன்றாவது தளம் வந்ததும் ஹரிதா இறங்கி திரும்பி பார்த்தாள், ஷ்ரவன் பின் தொடருகின்றானா என்று... இல்லை என்றதும், ‘நாமதான் அவனைத் தப்பா நினைச்சிட்டமோ’ என நினைத்தவள்...
அவன் எதுக்கும் இங்க வந்திட்டுட்டு போறான் நீ ஏன் டென்சனாகுறடி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, அவள் பார்க்கவேண்டிய நபரின் அனுமதிக்காக காத்திருந்தாள்.
ஷ்ரவன் ஐந்தாவது தளத்தில் இறங்கி, தான் சந்திக்கவேண்டிய நபரை பார்ப்பதற்கு அமர்ந்திருந்தான்...
இருவரும் அவரவர் வேலையில் சேர்ந்தனர்... அதற்கே மதியமாகிற்று.
ஷ்ரவனுக்கோ பசி புட்கோர்ட் சென்று தனக்கு தேவையானது வாங்கிக்கொண்டு அமர்ந்தவன் அஜய்யை அழைத்து விசயத்தைச் சொல்லி அங்கே வரச்சொன்னான்...
அஜயும் ஷ்ரவனும் பேசிக்கொண்டே சாப்பிட... திடீரென்று அவனருகில் ஒரு பெண் கையில் சாப்பாடுடன் தடுமாறுவதைப் பார்த்து சட்டென்று பிடித்து தனது அருகிலிருந்து சேரில் இருத்தினான்... அந்தப்பெண் இவனுக்கு நன்றி சொல்லிவிட்டு முகத்தைப்பார்க்க இவனும் திரும்பிப்பார்க்க...
இருவரும் முறைத்துக்கொண்டனர்.அஜய் அந்தப்பெண்ணைப் பார்த்ததும்... ‘ஷ்ரவன் சொன்னமாதிரி இவ வேதாளமா இருப்பாளோ? ஐயோ! எங்க முதுகுலத் தொங்கிட்டு வர்ற மாதிரி நேற்றிலிருந்து பின்னாடியே வர்றாளே’ என்று நினைத்தவன்...
“மிஸ்... நீங்க இங்கதான் வேலைப் பார்கறீங்களா?...” என்று யேசனையாக வார்த்தைகளை இழுக்க.
“எஸ்... இன்னைக்குத்தான் இங்க ஜாயின் பண்ணேன்... டேட்டா அனலிஸ்ட் டீ.எல்” என்க... அஜய்க்கோ ஒரு நிமிடம் தலைசுத்தல்...கடவுளே எனக்கே பாறையா வந்து நிற்காளே என்று.
ஷ்ரவனுக்கோ ‘அப்படியா வாடி என் குரங்கே... எப்படினாலும் என்கிட்ட வந்த்துதான ஆகனும்...’ என்று நினைத்தவன் சாப்பிட்டு முடித்து அஜயிடம் தலையசைத்து விட்டு சென்றான்...
அஜயோ ஹரிதாவின் முன்பாக அமர்ந்திருக்க முடியாமல் அவனும் எழும்பி சென்றுவிட்டான்...
அவளுக்கு அங்கு யாரையும் தெரியாது, அதனால தனியாகவே சாப்பிட்டு சென்றாள்.
ஹரிதாவிற்கு கம்ப்யூட்டருடன் சின்னதாக ஒரு கேபின் கொடுத்திருக்க, அதில் வேலை செய்துக்கொண்டிருக்க...
எல்லோருக்கும் குறிப்பாக டீம் லீடர்களுக்கு தகவல் வந்தது...
மீட்டிங்க் இருக்கு... அதனால கான்ஃபரன்ஸ் ஹாலிற்கு வருமாறு என்று...
வந்த முதல் நாளே மீட்டிங்கா? என்று யோசித்தவள். ‘இது சகஜம்தான’ என்று நினைத்தவள் எழும்பி கான்ஃபரன்ஸ் ஹாலிற்கு சென்றாள்.
அங்கு மற்ற டீம் லீடர்களும் அமர்ந்திருக்க.உள்ளே வந்தது ஷ்ரவன், அவனுடன் மேனஜரும் உள்ளே வந்திருந்தனர்...
ஹரிதாதான் திரு திருவென விழித்தாள்... மேனஜர் ஷ்ரவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.
“இது மிஸ்டர்.ஷ்ரவன் எம்.எஸ்.,எம்.பி.ஏ .யு.எஸ்.ஏ.லயிருந்து, நம்ம கம்பேனியில் ஐ.டீ.டைரக்கடரா வந்திருக்காங்க.
இனி ஷ்ரவன்தான் உங்களை கைடு பண்ணுவாங்க” என்றதும்.
ஷ்ரவன் எழுந்து மேனஜருக்கு நன்றி சொல்லிவிட்டு தங்களது வேலை சம்பந்தமாக பேசிவிட்டு...எல்லாரையும் அறிமுகப்படுத்த சொல்லி விபரங்களை கேட்டுக்கொண்டு மீட்டிங்கை முடித்துக் கொண்டான்.
ஹரிதாவோ தன் இடத்திற்கு வந்தவள்... இந்த நெட்டக்கொக்கு எனக்கு மேலயா இருக்கான்...ச்ச என டென்சன் ஆனவள், உடனே காவ்யாவிற்கு அழைத்து விபரம் சொன்னவள், சிறிது நேரம் அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்தாள்...
அத்தியாயம்-3
ஷ்ரவன் எதற்கோ தன் கேபினில் இருந்து வெளியே வந்தவன் பார்த்தது, ஹரிதா தன் தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தான், இவ எதுக்கு தலையில் கை வைத்திருக்கா? தலைவலி போல...என்று தானகவே ஒன்றை யூகித்துக்கொண்டான்.
‘இவதான் எல்லாருக்கும் தலைவலி கொடுப்பாள். இவளுக்கே தலைவலியா’ என்று நினைத்தவன்.தனக்கு காபி எடுத்துக்கொண்டு குடித்துக் கொண்டிருந்தான்.
ஹரிதா மெதுவாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தனது வேலையில் மீண்டும் கவனம் செலுத்தினாள்.
ஹரிதா இப்பொழுது தனிமையாக உணர்ந்தாள். சென்னையில் வேலை பார்க்கும் போது அவளுக்கு நிறைய தோழிகள் உண்டு, அங்கே அவள் என்றுமே தனிமையை உணர்ந்ததில்லை.
இங்கோ டி.௭ல் எல்லோரும் சற்று இறுக்கத்துடனே இருந்தனர். டி.எல் குரூப்பில் நான்கு பெண்களும் இருந்தனர், ஆனாலும் அவர்கள் இவள் புதுசு என்பதால் கொஞ்சம் கெத்து காண்பித்தார்கள்.
இந்த ஆபீஸ் பிடிக்கவில்லை முதல் நாளே வெறுமையாக தோன்றியது... ‘ஏன்டா இங்க மாற்றலாகி வந்தோம்’ என்று நினைத்தாள்.
மாலையில் வேலை முடிந்து ஆபீஸிலிருந்து வெளியே வந்தவள், தனது தந்தைக்கு போனில் அழைத்து, தன்னை அழைத்துப்போக வருமாறு கூறிக்கொண்டிருந்தாள். அப்படியே பேசிக்கொண்டே மெதுவாக அந்த வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருக்க,
திடீரென்று அவள் பின்னால் கேட்ட பயங்கர ஹார்ன் சத்தத்தில் விலகுவதற்கு எத்தனித்தவள், பயத்தில் ஐயோ பரிதாபமாக விழுந்து விட்டாள்.
போன் ஒரு பக்கம் அவள் ஒரு பக்கமாக விழுந்து கிடந்தாள், பின்னாடி வந்தவன் வண்டியை அவசரமாக நிறுத்தி, அவளிடம் ஓடிச் சென்று, சட்டென்று அவளைத் தூக்கி நிறுத்திருந்தான் ஷ்ரவன். பின்னாடி வந்த அஜயும் ஓடி வந்து அவளது போன் மற்றும் பேக்கை எடுத்திருந்தான்.
அவளைத் தூக்கியதும் தான் பார்த்தான் அவளது கைமூட்டுகளில் உராய்ந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது.
இப்போதுதான் ஹரிதாவும் திரும்பி அவனை ஏறிட்டுப் பார்க்க, அது ஷ்ரவன் என்றதும், உடனே கோபம் வந்தது அப்படியே அவனை முறைத்தவள்...
சுற்றிலும் பார்க்க எல்லோரும் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். போகிற வருகிறவர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் நின்று அவளை பார்த்து சென்றனர்... அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது... இப்போது அவளையும் மீறி கண்களில் கண்ணீர் தானாக கன்னங்களில் வழிந்தது.
“சாரி சாரி நான் தெரியாம ஹார்ன் அடிச்சிட்டேன், விலகிப்போவீங்கனு நினைச்சேன், இப்படி விழுந்திருவீங்கனு எதிர்பார்க்கவில்லை...சாரி அகேய்ன்” என்றான் ஷ்ரவன்.
மறுபடியுமாக மன்னிப்பு கேட்டவன், “வாங்க ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவளது கையை பிடித்து அழைத்தான்.
சட்டென்று அவனது கையை தட்டி விட்டவள் அவனை முறைத்துக்கொண்டே "நேத்து நடந்ததற்கு இன்னைக்கு என்ன நல்ல பழி வாங்கிட்டீங்கல்ல, நடு ரோட்டில வச்சு எல்லார் முன்னாடி கேவலப் படுத்திட்டீங்க... படிச்சு பெரிய ஆளா பெரிய வேலையில் இருந்தாலும்...இப்படி கேவலமாக நடக்க தோணுது இல்ல உங்களுக்கு?” என்றவள் இப்பொழுது அழுகையை அடக்கிக்கொண்டு நின்றாள்.
“ நேத்து மாலில் நடந்தது எதேச்சையான ஒரு விஷயம். பெண்களுக்கு உள்ள ஒரு பாதுகாப்பு உணர்வுதான், இரண்டு ஆம்பளை பசங்க நம்ம போற இடமெல்லாம் பின்தொடர்ந்து வந்தால் எல்லா பெண்களுக்கும் வரக்கூடிய ஒரு பயம்தான் எனக்கும் இருந்தது... அதனாலதான் உங்க கிட்ட சண்டை போட்டேன்.
அதுக்காக இவ்வளவு சீப்பா பழிவாங்கறதுக்காக ரோட்ல எல்லார் முன்னாடியும் வைத்து, கீழ விழவச்சு பழிவாங்கிட்டீங்க சார்...
உங்களுக்கும் அக்கா தங்கை இருக்குல்ல அவங்களுக்கு இப்படி யாரவது செய்தா எப்படியிருக்கும்...
என்னை விட மேலான ஒரு பொசிஷன்ல இருந்தா இப்படித்தான் செய்வீங்களா...” என்று சொல்லிவிட்டு மெதுவாக நடக்க முற்பட அவளால் நடக்க முடியவில்லை.
ஷ்ரவன் அவளது முறைப்பைக் கண்டுக்கொள்ளாது... மறுபடியும் அவள் விழாமலிருக்க கையைப் பிடித்தான், சட்டென அவனது கையை தட்டி விட்டவள் "கையை தொட்டீங்க அப்புறம் நடக்குறதே வேற, உங்களோட உதவி எனக்குத் தேவை இல்லை” என்று... மெதுவாக நடக்க காலில் அதிகமாக வலிக்க ஆரம்பித்தது.
இதற்கு மேலும் எல்லார் முன்னாடியும் காட்சிப்பொருளாக இருக்க விரும்பாமல் ஷ்ரவன் கிளம்ப எத்தனிக்கும்போது.
ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து கிருஷ்ணா சத்தமாக அழைத்தார் "அம்மு" என்று... இதைக்கேட்டவள்.
தந்தையைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் வெளிப்படுத்தினாள்,வலியும் இப்போது அதிகமாகத் தெரிந்தது
அவள் அழுவதைப் பார்த்த கிருஷ்ணா காரிலிருந்து இறங்கி ஓடிவந்து அவளைப் பிடித்துக்கொண்டார்.
கிருஷ்ணாவும் ஒரு தந்தையாக “என்னாச்சுடா?” என்று பதறி கேட்க, ஷ்ரவனோ உண்மையை சொல்ல முன்வர ஹரிதா அவனை முறைத்துப் பார்த்து, கையால் நிறுத்து என்று சைகை செய்துவிட்டு "தெரியாமல் கீழே தட்டி விழுந்துட்டேன் டாடி. எனக்கு இப்ப ரொம்ப வலிக்குது” என்று அழுதுகொண்டே சொன்னதும்,
மெதுவாக அவளை அழைத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அவளது காயங்களுக்கு மருந்திட்டு ஊசி போட்டு விட்டவர், வீட்டிற்கு அழைத்து சென்றார்.
வீட்டிற்குள் நுழையும்போதே சுமித்ரா மகளைப் பார்த்து "ஐயோ! என்னாச்சு” என்று ஓடி வந்து, மகளது கையை பற்றிக்கொண்டு காயங்களை பார்த்து அழுதுவிட்டார் காயங்களை ஆராய்ந்தார் பெரிய காயம் இல்லை என்றாலும்...
இரத்தம் நிறைய வந்திருந்தது. இரு கால் மூட்டுகளிலும் அடிபட்டிருந்தது... சரியாக நடக்கவும் முடியவில்லை.
சுமித்ரா அழுததைப் பார்த்து ஒண்ணுமில்லம்மா,லேசான அடிதான் என்று அவரை சமாதானப்படுத்தியவள், அவளுக்கு உடல் வலிக்க ஆரம்பித்ததும் படுக்கைக்கு செல்ல முற்பட்டாள்.
சுமித்ராவோ "சாப்பிட்டு போய் படு இல்லைன்னா நீ அப்படியே தூங்கிடுவ" என்று அவளை வற்புறுத்தி இருக்க வைத்தவர். மகளுக்கு சாப்பாடும் ஊட்டிவிட்டார். சாப்பிட்டு முடிந்ததும்... அவளை மெதுவாக நடத்தி அறைக்குள் கொண்டு விட்டு, தூங்கும் வரைக்கும் அங்கே இருந்தார்.
அவள் தூங்கியதும் கீழே இறங்கி வந்து
தனது கணவனிடம் "என்னங்க முதல் நாள் ஆபிசுக்கு போயிட்டு இப்படி விழுந்து அடிபட்டு வந்திருக்கா... நம்மளுக்கு இருக்கிறதே போதும், இவ வேலைக்கு போகணும்னு அவசியமே இல்லை... பேசாமல் வீட்டிலேயே இருக்கட்டும். கொஞ்ச நாள் கழித்து கல்யாணத்திற்கு பார்க்கலாம்...”என்றதும்.
அதற்கு கிருஷ்ணா "இல்லம்மா அவ சொந்த கால்ல நின்னாதான் அவளுக்கு ஒரு தைரியம் இருக்கும். வேலைக்குப் போகட்டும் கல்யாணம் முடியர வரைக்கும்...
இப்போதைக்கு கல்யாணத்தை பத்தி அவகிட்ட எதுவும் பேச வேண்டாம் சரியா” என்றவர் தூங்குவதற்கு சென்றுவிட்டார்.
அங்கு ஷ்ரவனின் நிலைமையோ மிகவும் மோசம் ஹரிதா நடந்து போவதை பின்பக்கமிருந்து பார்த்துவிட்டுதான்... அவளை சீண்டுவற்காகவும் பயமுறுத்துவதற்காகவும்தான் திட்டம் போட்டுத்தான் ஹார்னை வேகமாக அடித்தான்....அவனுமே அவள் பயந்து விலகுவதைப் பார்க்கவே இப்படிச் செய்தான்... ஆனால் அவளோ இப்படிக் கீழே விழுந்து வைப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.
அஜயிடம் கண்ணைக் காண்பித்து விட்டுத்தான் இதை செய்தான். விளையாட்டு இப்போது வினையாக முடிந்திருந்தது... அவள் விழுந்து இரத்தத்தோட நின்றது அவனது மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.
மாலில் நடந்து நிகழ்வை வைத்து ஹரிதாவை மிகவும் தைரியமான பொண்ணு என்று நினைத்திருந்தான். அவன் பார்த்த பெண்களை வைத்து எடை போட்டு விட்டான்.
அவனுக்கு மனசே கேட்கவில்லை அவளது கைகளிலிருந்து இரத்தம் வழிந்ததும், அதைவிட அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அந்த கண்கள் அவனை புரட்டிக்போட்டுக் கொண்டிருந்தது...
இப்பொழுது சாப்பிடக்கூட மனதில்லாமல் ஐயோ! காயப் படுத்தி விட்டோமே என்று வருத்தப்பட்டான்... அஜயும் அவனைப் பார்த்து வருந்தினான்... என்னடாயிது விளையாட்டாக செய்யப் போக இப்படி ஆகிட்டுதே என்று...
எழும்பி சென்றவன் பிரிட்ஜில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து வந்து குடித்துக் கொண்டே இருந்தான்... மூன்று நான்கு என்று உள்ளே போக.. ஏனோ மறுபடியும் மறுபடியும் அவளது...கண்ணீரில் நனைந்த விழிகள் கண்களுக்கு முன்பாக வந்து வந்து போயின.
தனது போனை எடுத்து அன்னைக்கு அழைத்தவன் “நிரு பேபி... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று நடந்ததை சொல்லி பேசிக்கொண்டே இருந்தான்... இப்படியாக அந்தப் பக்கம் நிருபமா அவனுக்கு சமாதானம் சொல்ல, இவன் பேச என்று அவர்கள் பேசி முடிப்பதற்கே ஒரு மணி நேரம் ஆகிற்று.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அஜய்தான் "டேய் எப்படா பேசி முடிப்ப... பசி வயிற்றை கிள்ளுது, சீக்கிரம் புட் ஆர்டர் பண்ணுடா பசிக்குது என்றவன்...”அப்படியே சரிந்து படுத்து விட்டான்.
சாப்பாடு வந்ததும் சாப்பிட்டு முடித்து, அஜய் கிளம்பவும்... அவனிடம் ஷ்ரவன் கேட்டான் “போயிடுவியா இல்ல கால் டாக்ஸி எதுவும் புக் பண்ணி விடவா” என்று... “இல்லடா போய்டுவேன்...டேக்ஸியில மட்டும் போனேன் அவ்வளவு தான்,கீதாம்மா என்னை அடி மொத்திடுவாங்க.ஒரு பீர்தான்டா உள்ள தள்ளினேன்... ஏதோ குடிகாரன் மாதிரியே நினைச்சுக் கேட்குற... பை” சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அப்படியே தனது அறைக்குள் சென்று தூங்கமுற்பட... தூக்கம் எங்கே வர. புரண்டு புரண்டு படுத்தான்.
அவன் கண்களுக்கு முன்பாக மீண்டுமாக ஹரிதா அழுததுதான் வந்து வந்து போயின...ஷ்ரவனால் தூங்க முடியவில்லை.... அதிகாலையில் மெதுவாக தூங்கியவனுக்கு, எங்கேயோ அழைப்பு மணியின் சத்தம் கேட்கவும் மெதுவாக திரும்பி படுத்தான்.
மீண்டுமாக சத்தம் கேட்கவும் மெதுவாக எழும்பவும், அது அவன் வீட்டின் அழைப்புமணியின் சத்தம் என்றதும்
ஓடிச்சென்று திறந்தவன் அப்படியே நின்றுவிட்டான்...
“என்ன அப்படியே வாசலோடவே திருப்பி அனுப்பிடலாம் என்று யோசனையா? என்ன?..” என்று கேட்டபடி வாசலிலே நிருபமா நின்றிருந்தார்.
"நிரு பேபி எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க? காலையிலேயே அம்மா தரிசனம்" என்று சந்தோசமாக, அவரை கட்டிக்கொண்டான்..
உள்ளே வந்தவர் அவனை லேசாக தள்ளிவிட்டு, “போட அழுக்கு பையா, குளிச்சிட்டு வா, நேரம் என்ன ஆகுது பாரு” என்று அவர் வீட்டை சுற்றி கண்களால் நோட்டம் விட...
“அது வந்தும்மா நேத்து கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்ததா அதுதான் க்ளீன் பண்ணலை...” என்று தலை குனிந்து நின்றான். அவர் கையைக் காண்பித்து நிறுத்து போதும்.... என்று சொல்லிவிட்டு அப்படியே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். தனது வீட்டில் தனக்குக் கீழாக அத்தனை வேலைக்காரர்கள் வேலை செய்ய, இங்கோ தனது மகனுக்காக எல்லாம் தானாக செய்தார் இதுதான் மகனதிகாரமோ...
குளித்து உடைமாற்றி வந்தவன் அப்படியே அம்மாவின் மடியில் படுத்து கொண்டான். அவரோ மெதுவாக மகனின் தலையை கோதிவிட்டவர் "இங்கு வந்து இப்படி தனியா கஷ்டப்படனுமா? நம்ம கம்பெனியில் ஏதாவது ஒரு ஒன்றை எடுத்து நடத்தேன். நீ எப்படி தனியாக இருக்கறதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது என்று சொல்லவும்" அவன் அமைதியாக இருந்தான்... எந்த பதிலும் அவனிடமிருந்து வரவில்லை.
அவருக்குமே தெரியும் இந்த வேலை அவனது கனவு வேலை... அதுக்காகதான் மேகா வீட்டில் தங்கியிருந்து, ஐந்து வருட படிப்பை முடித்து அங்கயே இரண்டு வருடமாக வேலையும் செய்தான் ... இப்பொழுது இங்கு வந்தும் தனியாக இருக்கிறானே என்று வேதனைப்பட்டார்
“ஏன்மா இவ்ளோ கஷ்டப்பட்டு காலையிலேயே கிளம்பி வந்தீங்க? அவ்வளவு தூரம் பயணம் வேற உங்களுக்கு கால் வலிக்கும்...”என்று தாய்க்காக நினைத்து பேசினான்.
"அதுவா நேத்து ஒருத்தன் ஒரு மணி நேரமா போன்லயே என்கிட்ட புலம்பினாள் நிரு பேபிய பார்க்கணும்.. எப்ப வரீங்க... அப்படி இப்படினு பேசிட்டு இருந்தானா...அதுதான் கிளம்பி வந்தேன். இங்க வந்து பார்த்தா ஏன் வந்தீங்கனுக் கேட்கிறான்" என்று சொல்லி சிரித்தார்.(அவன் தனது மனதுக்குள்ளே பீர் அடிச்சிட்டு இப்படியாடா... அம்மாகிட்ட பேசிவச்ச...என்று தனது மனதிற்குள் சிரித்தான்)
ஷ்ரவன் "அம்மா கார்ல தானே வந்தீங்க? வாங்க அப்படியே நம்ம போய் சாப்பிட்டுட்டு. என்னை கொண்டு ஆபீஸ்ல விட்டுருங்க. ஒன்னு செய்யுங்க, சனிக்கிழமை வரைக்கும் இங்க இருங்களேன்,நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சனிக்கிழமை ஊருக்கு போகலாம்” என்றான்.
அவரோ “அவ்வளவுதான் நான் மட்டும் இன்னைக்கு சென்னைக்குப் போகலை... நாளைக்கு அப்பா,அக்கா குடும்பம் எல்லாம் இங்க வந்து நிப்பாங்க...உனக்கு ஓகேவா?” என்றவர்.
“நீ பார்க்கணும் போல இருக்குனு சொன்ன,அதனாலதான் அவசரமா கிளம்பி வந்தேன்” என்று சொன்னார்.
“உனக்காக வேணும்னா இன்னைக்கு ஒரு நாள் இங்க இருக்கேன்.... நாளைக்கு காலையில சென்னைக்கு கிளம்பிவிருவேன் சரியா...”
“யு ஆர் மை ஸ்வீட் மாம்” என்றவன் நிருபமாவின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் வைத்தான், அவருக்கு ஒரே சிரிப்புத்தான் மகனைப் பார்த்து... அப்படியே இருவரும் கீழே கிளம்பி செல்ல, அங்கே டிரைவர் இவர்களுக்காக காத்திருந்தான்...
ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு ஆபீஸில் ஷ்ரவனை இறக்கிவிடவும்... அங்கே அஜயோ நிருபமாவைப் பார்த்தவன் அவர் அருகில் வந்து, “எப்படி ஆன்டி இருக்கீங்க? அங்கிள் அக்கா குட்டீஸ் எல்லாம் எப்படி இருக்காங்க?..” என்று விசாரித்துவிட்டு, அவரிடம் விடைப்பெற்றுகொண்டு இருவரும் ஆபீஸிற்குள் நுழைந்தனர்.
ஷ்ரவனுக்கோ அங்கே வேலை காத்திருந்தது... இன்று புது புராஜக்ட்டிற்கு ரிசோர்ஸ் அலார்ட் பண்ண வேண்டியது இருந்ததுனால... ரிசோர்ஸ் பிரித்து டி.எல்லிற்கும் கொடுக்க வேண்டிய வேலையிருந்தது...அதற்காக எல்லா
டி.எல்லையும் அழைத்திருந்தான்.
அப்பொழுது அங்கே வந்த ஹரிதாவை பார்த்தவனுக்கு வருத்தமாக இருந்தது கையில் சிறிதாக கட்டுப்போட்டிருந்தாள் கன்னம் லேசாக சிராய்ப்புகளினால் கருத்திருந்தது.
அத்தியாயம்-4
எல்லோருக்கும் ரிசோர்ஸ் லிஸ்ட் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்தவன் பேச ஆரம்பித்தான்.
“இது ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட், இதுல எப்படி வேலை பார்க்குறீங்களோ அதைப் பார்த்து உங்களை ஆன் சைட்டிற்கு அழைக்க வாய்ப்புகள் அதிகமா இருக்கு, அதனால் இந்த ப்ராஜெக்ட்டில், உங்களால் எவ்வளவு உழைப்பு மற்றும் நேரத்தை கொடுக்க முடியுமோ... முடிஞ்ச அளவுக்கு கொடுத்து உழையுங்கள்” என்றான்.
பேசிமுடித்துவிட்டு எல்லாரையும் அனுப்பியவன் “ஹரிதா நீங்க கொஞ்சம் இருங்க நீங்க சென்னையிலிருந்து மாற்றலாகி வந்து இருக்கீங்க அதான் கொஞ்சம் ரிசோர்ஸ் பத்தி பேசணும்” என்றான்.
ஹரிதா தனதிடத்திற்கு போவதற்காக நடந்து சென்றவள் மீண்டும் திரும்பி வந்து அமர்ந்தாள்.
ஷ்ரவன் இப்போது அவளிடம் பேசினான் "காயம் எப்படி இருக்கு? இப்போ வலி பரவாயில்லையா?... எக்ஸ்ட்ரீம்லி சாரி நான் இதை எதிர்பார்க்கவில்லை” என்று ஷ்ரவன் பேசிக்கொண்டே இருக்க, அவள் எதுவும் பேசாமல் கண்களாலயே அவ்வளவுதானா?இல்ல வேற இன்னும் இருக்கா? என்ற கேள்விகள் தொக்கி நிற்க அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்...
அவளது கண்களைப் படித்தவன், “வேற ஒன்றும் இல்லை,அப்புறம் உங்க டீம்ல அஜயை சேர்த்து இருக்கேன்.
அவன் இந்த ஆபீஸ்ல மூணு வருஷத்துக்கு மேல வேலை பார்க்கின்றான்,அவனுடைய வேலை அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கு உதவியாக இருக்கும்...” என்றான்.
அவன் பேசி முடிக்கவும் எழும்பி வெளியே செல்ல கதவைத் திறந்தவள், திரும்பி அவனை பார்து தனது நெற்றியில் பக்கவாட்டில் கை வைத்து, “இங்க கடவுள் எனக்கு கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருக்கான் அதை நான் பயன்படுத்திக்குறேன்,எனக்கு எவனோட உதவியும் தேவையில்லை” என்று அவனை அற்பமாகப் பார்த்துச் சென்றாள்.
ஷ்ரவனுக்கோ இப்பொழுதுதான் ஹரிதாவிடம் ஒரு சுவாரஸ்யம் பிறந்திருந்தது...
ஷ்ரவனும் அஜயும் சென்னையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் தான் இளங்கலை இஞ்ஜினியரிங்க் ஒன்றாகப் படித்தனர். அங்கே படிக்கும் போதும் சரி,யு.எஸ்ல படிக்கும் போதும் சரி, அவனிடம் வழிந்து நெருங்க முற்பட்ட பெண்களைத்தான் பார்த்திருக்கிறான்.
அப்படி வரும் பெண்களை தனது கோபமான பார்வையால் விலக்கி வைத்து விடுவான். ஆனால் இங்கு ஹரிதா விலகிப் போக அவனுக்கு அந்த குணம் லேசாக ஈர்க்கவைத்தது...
சிறிது நேரம் தனது மற்ற எண்ணங்களை எல்லாம் விலக்கி வைத்தவன்,தனது வேலையில் கவனம் செலுத்தினான்
எவ்வளவு நேரமோ தெரியாது திடீரென்று அவனது மொபைல் சத்தமிட எடுத்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு அழைப்பை எடுத்து “சொல்லுடா” என்றான்...
“என்ன சொல்லுடா அந்த வேதாளத்துக்கிட்ட என்னை மாட்டி விட்டிருக்கிற... நீயெல்லாம் ஒரு நண்பனாடா? நண்பனில்லைதான் துரோகி. எத்தனை நாளா என்னை மாட்டி விட காத்திருந்த? எனக்கு ஆப்பு வைக்கத்தான் என்னைத்தேடி இங்க வந்தியா?”என்று அஜய் மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தான். இப்போது அடக்கிவைத்திருந்த சிரிப்பு வெளிவர சத்தமாக சிரித்தவன் "அது இல்லடா அவங்க இந்த பிராஞ்சுக்கு புதுசு.. அதுதான் எனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் நீ மட்டுந்தான். அதனாலதான் உன்னை அவங்க லிஸ்டில் சேர்த்து விட்டேன்... நீதானடா என் நம்பிக்கையின் நட்சத்திரம்...”
“நீ என்னத்த சொன்னாலும் அவ கிட்ட என்னை மாட்டி விட்டது விட்டதுதானடா போடா” என்று அழைப்பை துண்டித்து வைத்துவிட்டான்.
சிரித்துக் கொண்டே தனது வேலையில் மறுபடியும் மூழ்கியவனுக்கு எல்லா விஷயங்களும் பின்னுக்கும் போய்விட்டது. பசியையும் மறந்து வேலை செய்து கொண்டிருந்தான் மறுபடியுமாக மொபைலில் அழைப்பு வரை எடுத்துப் பார்க்க அது அஜய் என்றவுடன் எடுத்துப் பேச...
"அடேய் பசியில உயிர் போகுதுடா, என்னை ஏன்டா இப்படி சோதிக்கிற. கடவுளே நண்பன் ஒருத்தன் வந்து என்ன கொலையா கொன்னுட்டிருக்கான்... வாடா சீக்கிரம் சாப்பிடறதுக்கு நான் ஃபுட் கோர்ட்டில் தான் இருக்கேன்” என்று போனை வைத்தான்.
ஷ்ரவன் புட் கோட்டிற்குள்ளே நுழையும்போது அங்கே ஹரிதா சாப்பாட்டை வைத்துக் கொண்டு சாப்பிட முடியாமல்,சாப்பாட்டை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவாறே அஜயிடம் சென்று அமர்ந்தான். அங்கு அவன் உணவை வாங்கி வைத்துக்கொண்டு இவனுக்காக கத்திருந்து... அதன் முன் சாப்பிடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அஜய்க்கு எதிரே இருந்த டேபிளில் அமர்ந்தவன் "என் மேல கோவமா இருக்கியாடா” என்று அஜயை சீண்டிக்கொண்டே கேட்டுவிட்டு இன்னும் அவனைக் கோப படுத்தினான்.
தனது சாப்பாட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தவன் லேசாக திரும்பி திரும்பிபார்த்துக் கொண்டிருந்தான்... ஹரிதா எப்படி சாப்பிடுகிறாள்,என்ன செய்கிறான் என்று...
அவள் இப்பவும் அப்படியே சாப்பாட்டை முறைத்துக் கொண்டே இருக்க, சுற்றிலும் பார்த்தான்... அவளது அருகில் யாரும் இல்லை தனியாகத்தான் அந்த டேபிளில் அமர்ந்து இருந்தாள்.
ஷ்ரவன் அஜயிடம் மெதுவாக கண்ணை காண்பித்து “என்னவென்று ஹரிதாவிடம் போய் கேளு” என்றான்.
“நான் என்ன உனக்கு நல்லெண்ணத்தூதுவரா? போக முடியாது போடா... என்னை வேற அவ டீம்ல கோர்த்துவிட்டுட்ட...
நா அவகிட்ட இப்ப ஏதாவது கேட்டேன் வை, என்னை வேலையில் வைத்து செய்துவிடுவாள். நான் போக மாட்டேன்.. நீ வேணா போய் அடி வாங்கிட்டு வா” என்று சாப்பிடுவதை தொடர்ந்தான் அஜய்.
“ச்சே...நீ எல்லாம் ஒரு நண்பனாடா.. நண்பனுக்காக இதைக்கூட செய்ய மாட்டியா?” என்று ஷ்ரவன் டயலாக் பேச.
“அடங்கு டா இந்த டயலாக்கை நான் சொல்லணும்... நீ என் நண்பனாடா?துரோகி இவ்வளவு நேரமா என்ன வேலையில் வச்சி ஆட்டி வைத்தடா!என்ன ஒரு மண்டைடா சாமி அவளுக்கு. எக்ஸ்ட்ரா மூளைக் கடவுள் வச்சிட்டார் போல...”என்று பேசி பெருமூச்சொன்றை விட்டான் அஜய்.
அவன் பேசுவதைக் கேட்ட ஷ்ரவன்
"ஏன்டா வேலையில் கரெக்டா இருக்கிறது தப்பாடா? இப்படி சொல்ற...”என்று வார்த்தைகளை குழைவாக இழுத்துப்பேச.
“ஏதேது நீயே அவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்ப போல...என்னடா தலை கொஞ்சம் அந்தப் பக்கமா சாயுது மவனே. என்னை எதுலயாவது மாட்டிவிட்ட,கொன்றுவேண்டா” என்று காய்ந்தான் அஜய்.
“டேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா தனியா இருக்காங்களே அதுதான் என்னன்னு போய் விசாரினு சொன்னேன்..நீ சாப்பிடு... நான் போய் அவகிட்ட கேட்கிறேன்” என்று எழுந்து அவளருகில் சென்றான்.
அவன் பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்ததும், ஹரிதா திரும்பிப் பார்க்க ஷ்ரவன் என்றதும் முகத்தை அலட்சியமாக வைத்தாள்.
“ஏன் தனியா இருக்க? அதுவும் சாப்பாட்டுகூட என்ன சண்டையா? சாப்பாட்டை முறைத்து பார்த்துட்டு இருக்கீங்க...”
அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க... “கை ரொம்ப வலிக்குதா? சாப்பிட முடியலையா? நான் வேணும்னா உங்களுக்கு ஊட்டி விடவா?” என்று கேட்டதும்தான் அவள் கண்கள் இரண்டையும் விரித்து பத்திரகாளியானாள்.
அவள் கோபத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்தவனோ "ஐயோ நான் உங்களை கிண்டல் பண்ணலை... உண்மையாகத்தான் கேட்டேன். இது ஒரு பிரெண்ட்லி ஹெல்ப் தான்... என்னங்க நான் என்ன பேசினாலும் நீங்க தப்பாக அர்த்தம் எடுத்திருக்கிறீங்க?
ப்ளீஸ் நேத்து நடந்தது தெரியாமல் செய்த தப்பு ஓகேவா.நம்ம பிரண்ட்ஸா இருக்க வேண்டாம். எனிமியா இல்லாம இருக்கலாம்” என்று சொல்ல.
அதை கண்டுகொள்ளாமல் மெதுவாக கையை மடக்க முடியாமல் மடக்கி சாப்பிட ஆரம்பித்தாள். ‘இதுக்கு மேல இவ பக்கத்துல நம்ம உட்கார்ந்திருந்தால் பைத்தியக்காரன் ரேஞ்சில் நம்மளை மாத்திடுவா’ என்று நினைத்தவன்... தன் டேபிளுக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தார்.
“தேடிப்போய் பல்பு வாங்கிட்டு வர்ற பார்த்தியா உன்னைப் பாராட்டனும்.
எனக்கு எப்படி ஒரு நண்பன் இருக்கான் பாரு...” என்று அவனை முறைத்தான் அஜய்...
“என்னடா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சாக்கும்,அதை இறக்கப் போகாம...சாப்பிட்டு வேலைய பாருடா நேரமாகுது” என்று அஜய் அவனிடம் கோபப்பட்டான்.
ஒவ்வொரு வாய் சாப்பாட்டிற்கு ஒரு முறையும் அவள் சாப்பிடுகிறாளா? இல்லையா? என்று திரும்பித் திரும்பி பாரத்துக்கொண்டே சாப்பிட்டான்.
அதைப் பார்த்து அஜயோ "டேய் இது சரி இல்லை ஒழுங்கா சாப்பிட்டு, உன் கேபினுக்கு ஓடிப் போயிரு என்று விரட்டினான்.”
இப்போது அவனும் ஹரிதாவைத்தான் பார்த்தான்.ஹரிதா நல்ல அழகிதான்,ஆனாலும் ஷ்ரவனுக்கோ இவளைவிட அழகிகள் காலேஜில் புரோபோஸ் பண்ணியிருக்காங்க,யாரையும் கண்டுக்கவே மாட்டான் அப்படிப்பட்டவன்...இன்று ஹரிதாவைத் தேடித்தேடிப் போறான்.
இந்த ஹரிதா அவனை மதிக்ககூட மாட்டுக்காள்... அவகிட்ட தேடித் தேடிப் போய் பேசுறான். இவன் இப்படிப்பட்ட ஆள் இல்லையே?போடின்னு போய்கிட்டே இருப்பானே என்று யோசனையில் இருக்க.
ஷ்ரவனோ அவனைத் தட்டி “சாப்பிட்டு முடிச்சிட்டு வா போலாம்” என்று அவனையும் சேர்த்து கிளப்பினான்.
ஹரிதாவை தாண்டி போகும்போது அவள் தட்டையும் ஒரு நிமிடம் எட்டிப்பார்த்து, அவள் சாப்பிட்டிருக்காளா,சாப்பாடு குறைந்திருக்கா என்று கவனித்தே சென்றான்.
தனது கேபினுக்குள் நுழைந்தவன் அவள் சாப்பிட முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தது மனசைப் பிசைய, தண்ணீர் எடுத்து குடித்து தன்னை சமன்படுத்தியவன்...கண்ணாடி வழியாக பார்க்க மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள் ஹரிதா.
லீவு எடுக்க முடியாமல்தான் இவ்வளவு வலியையும் வைத்துக்கொண்டு வேலைக்கு வந்திருக்கின்றாள் என்று யூகித்தான்.
அவனாலும் இப்பொழுது எதுவும் செய்யமுடியாத நிலை. வந்து இரண்டே நாளில் அவனால் சில முடிவுகள் எடுக்க முடியாது அமைதியாக உட்கார்ந்தவன் வேலையில் மூழ்கிவிட்டான்.
இப்பொழுதோ ஷ்ரவனின் கேபின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு அவன் நிமிர்ந்து பார்க்க ஹரிதா வாயிலில் நின்று "மே ஐ கமின் சார்" என்று கேட்டுக் கொண்டு நின்றாள்.
அவளைப் பார்த்ததும் முகம் பிரகாசமானவன் "எஸ்" என்றவன் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளது கையில் ரிப்போர்ட்டுகள் பிரிண்ட் அவுட்களாக எடுக்கப்பட்டு வைத்திருந்தாள்.
அதை அவனிடம் கொடுத்தவள் இன்றைக்குள்ள வேலை முடிந்தது "நோ மோர் பெண்டிங் வொர்க் சார்". இது ஏற்கனவே உங்களுக்கு மெயிலும் பண்ணியாச்சு சார்.. "கேன் ஐ லீவ் சார்" என்று ஒரு கெத்தோடு கேட்டவளை... சிறு புன்னகையுடனே பார்த்திருந்தவன் " யு கேன் லீவு "என்று தலையசைத்தான்.
அவள் திரும்பி கதவருகில் செல்லவும் "ஹரிதா டேக்கர்" என்றான்.
அதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தவள், தனது கையால் “எனக்குத் தெரியும், நீங்க...” என்று மீதிவார்த்தைகளை முடிக்காமல் விட்டாள்.
அவள் சொன்னதும் அலட்சியமாக தனது தோளை குலுக்கி, தனது வேலையை தொடர்கின்ற சாக்கில் திரும்பிக்கொண்டான்.
அவள் சென்றதும் அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது... இப்போது நேரத்தை பார்த்தவன் ஆபீஸ் விடும் நேரமென்றதும் மெதுவாக எல்லாம் எடுத்து வைத்தவன் அஜய்க்கு அழைத்து, “உனக்கு வேலை முடிஞ்சு இருக்குமே” என்று கேட்டான்.
"ஆமாடா ஆமா அந்த வேதாளம் நல்ல கசக்கி புழிஞ்சு வேலையே வாங்கிட்டுதாண்டா விட்டாள். எப்பா நாளைக்கு செய்யலாமா அப்படிங்கற பேச்சு அவகிட்ட எடுக்க முடியல, டிராகுலா என் ரத்தத்தையெல்லாம் உறிஞ்சுடுவாப்போல இருக்குடா, நல்ல லிஸ்ட் செலக்ட் பண்ணி வச்சிருக்க போடா... நான் கீழ வெயிட் பண்றேன் வந்து தொலை” என்று வைத்து விட்டான்.
ஹரிதா மெதுவாக நடந்து வெளியே வந்து தனது தந்தைக்காக காத்திருக்க, அங்கயோ ஷ்ரவன் வந்து நின்றான். அவனை சந்தேகத்தோடே அளவிட்டாள் ‘என்ன மேலதிகாரி நடந்து இங்க வரான்’ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள்ளாக அஜயும் வண்டியை எடுத்துக் கொண்டு வந்தவன், ஷ்ரவனிடம் கூறிவிட்டு விடை பெற்றுச் செல்லவும், ஹரிதா மெதுவாக திரும்பி சந்தேகப் பார்வையுடன் அவனை பார்க்க "அம்மா தாயே பரததேவதை உனக்குத் துணைக்காகலாம் இங்க வரலை,என் வண்டிக்காக வெயிட்டிங்” என்று சொல்லி திரும்பவும்... நிருபமா காருடன் அவனை அழைக்க வந்திருந்தார்.
காருக்கு அருகில் சென்று அவரிடம் பேச அவர் கீழே இறங்கி வந்தவர், ஹரிதாவிடம் வந்து "நல்லா இருக்கியாம்மா? உடம்பு இப்போ பரவாயில்லையா?” என்று கேட்க..
அவளுக்கு அவரை யாரென்று தெரியாவிட்டாலும் தலையசைத்து “இப்போ பரவாயில்லை” என்று மெதுவாக சொன்னாள்.
இப்போது ஷ்ரவன் “இது எங்க அம்மா பேரு நிருபமா” என்றாதும், மரியாதை நிமித்தமாக “வணக்கம்” என்றவள் அவ்வளவுதான் அமைதியாக நின்றாள்.
அதற்குள்ளாக கிருஷ்ணாவும் காரோடு வந்துவிட்டார் மகளை அழைக்க.
அப்பா வந்துட்டாங்க வரேன் என்று தலையசைத்துவிட்டு காரில் அமர்ந்தவள் ஒரு நிமிடம் கழித்து திரும்பிப் பார்க்க இப்போது ஷ்ரவன் தலையசைத்தான்.
நிருபமாவோ மெதுவாக சிரித்துக் கொண்டே அவனிடம் என்னடா நடக்குது இங்க? என்று மகனின் முதுகில் அடித்தவர்.
“இந்த பொண்ணு ரொம்ப அமைதியா இருக்கா” என்றதும்... ஷ்ரவன் நன்றாக சிரித்து இரண்டு நாட்கள் முன்பு வணிக வளாகத்தில் நடந்ததை ஒன்றுவிடாமல் சொன்னான்.அவள் நடந்து கொண்டதையும் சொல்லிவிட்டு, “அவளைப்போய் அமைதினு சொல்றீங்களேம்மா” என்றான்.
அதற்கு அவரோ “அது எல்லா பெண்களும் பண்றது தாண்டா. அதுக்காகவெல்லாம் ஒரு பெண்ணை வாயாடினு சொல்லிட முடியாது.. உன் மேல இவ்வளவு கோபம் இருந்தும் பெரியவளான என்கிட்ட காண்பிக்கவே இல்லை பார்த்தியா... எனக்கான மரியாதை அவள் கொடுத்தாள் நல்ல பெண் இங்கிதம் தெரிந்தவள்” என்றார்.
அவளை பெருமையாக சொல்லும்போது அவனுக்கு அது பிடித்திருந்தது
இப்படியாக பேசியபடியே காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.
ஹரிதாவிற்கோ காரில் செல்லும்போதே யோசனை... ‘அவங்கம்மாகிட்ட நான் பேசியதையெல்லாம் சொல்லிருப்பானோ.
அப்படியே சொன்னாலும் நமக்கென்ன’ என நினைத்தாலும் அதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.
அத்தியாயம்-5
நிருபமா அதிகாலையிலேயே கிளம்பி மகனுக்காக எல்லாம் செய்து வைத்துவிட்டு அவனை எழுப்பியவர்... “நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு சென்னைக்கு பயனப்பட்டார்.
அவர் கிளம்பியதும் ஷ்ரவன் இப்போது தனிமையாக உணர்ந்தான். எப்பவுமே ஷ்ரவனுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும், தேடுவான்.
தன்னுடைய தகப்பனின் பிசினஸில் தோள்கொடுத்து, பிள்ளைகளையும் சரியாக வளர்த்து, இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார்.
தாயை நினைத்து எப்பொழுதும் பிரமிப்பான்...இப்போதும் அப்படியே! இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து அவனுக்காக வந்ததாகட்டும், இதற்கு முன்பாக தன்னுடைய படிப்பிலும், அவனுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவருடைய பங்காகட்டும்...எல்லாவற்றிலும் சரியாக இருந்தார்...
காலையில் எழும்பி கிளம்பியவனுக்கு மனதில் அழையாமலயே ஹரிதாவின் எண்ணங்கள் வந்தது.
இரவு வேகுநேரம் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவனின் பாதி பேச்சு ஹரிதாவை பற்றிதான்.
ஆபிஸிற்கு வந்தவன் வேறு எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தன்னுடைய வேலைகளில் மூழ்கி விட்டான்.
புது ப்ராஜெக்ட்டில் அவனின் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அதனால் வேறு சிந்தனை வரவில்லை. அந்த வாரம் முழுவதும் எல்லோருக்கும் இப்படியே விரைவாக சென்றது.
சனிக்கிழமை கிளம்பி சென்னைக்கு சென்றான். எல்லோருக்கும் வீக் எண்ட் என்றால் பப், பார்டி என்று சுற்றும் இளைஞர்களுக்கிடையில் , இவனுக்கு சென்னை வீட்டிற்கு செல்வதுதான் பார்டிக்கு போவதுபோல் இருக்கும்.
சென்னை வீட்டிற்கு இவன் சென்றால் போதும் வீடு அமர்க்களப்படும்.
தேவானந்த் வெளியேயுள்ள எந்தப் பிரச்சினைகளையும் அந்த வீட்டிற்குள் கொண்டு வருவதில்லை. அதனால் வீட்டில் எப்பொழுதுமே அமைதியான சூழலும் சந்தோஷமும் மட்டுமே இருக்கும்...நிருபமா அப்படித்தான் வீட்டினுள் அமைதி நிலைக்கும்படி சரியாக குடும்பத்தை நிர்வாகித்தார். வேண்டாத எந்தவிசயங்களும் வீட்டினுள் நுழைய அனுமதிக்கமாட்டார்.
நாட்கள் வேகமாக நகர்ந்தது ஷ்ரவன் வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்துவிட்டது... அன்று வாரத்தின் முதல் நாள் சென்னையிலிருந்தே நேரடியாக வந்திருந்தான் ஷ்ரவன். ஆபீஸ் அறைக்குள் நுழைந்ததும் எல்லோருக்கும் தகவல் அனுப்பினான் பத்து மணிக்கு மீட்டிங் என்று... எல்லோரும் அமர்ந்திருக்க மேனேஜரும் அவனும் உள்ளே வந்ததும்,மேனேஜர் பேச ஆரம்பித்தார்... “நம் கையில் இப்போது இருக்கும் ப்ராஜெக்ட் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ப்ராஜக்ட் செய்து முடிக்க மூன்றுமாதம் தந்தவர்கள், இப்போது வந்து இரண்டே மாதத்தில் கேட்கிறார்கள்.அதனால் உங்க எல்லாருடைய ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவை.
நீங்களும் அதற்கு தயாராக இருங்கள்.இதில் எல்லாமே இனி நம்ம ஐடி டைரக்டர், மற்றும் டீம் லீடர்ஸ். உங்களை முழுவதும் லீட் பண்ணுவாங்க” என்று முடித்து அனுப்பி விட்டார்.
ஷ்ரவன் எல்லா குழுத்தலைவர்களையும் நிறுத்தியவன், “உங்க கையில் தான் இந்த ப்ராஜெக்ட் எப்படி முடிக்கணும் என்கிறது இருக்கு, ஒரு மாதத்தில் முடித்துக் கொடுப்பதற்கு, உங்களுக்கு கீழ் இருக்கிறவங்களை எப்படி வேணா வேலை வாங்குங்க, நமக்கு ப்ராஜெக்ட் முடிக்கணும் அவ்வளவுதான்” என்று சொல்லிமுடித்து விட்டான்.
அதனால் அவர்களின் வேலையில் இரவும் இருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலையிருந்தது... டி.எல்..எல்லோரும் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை இரவும் வேலையில் இருக்க வைத்திருந்தனர்.
இரவு 9 மணி மேல் இருக்கும் எல்லோரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஹரிதாவோ மெதுவாக எழும்பி வெளியே போனவள் மறுபடியும் சிறிது நேரத்தில் வந்து தனது இருக்கையில் அமர்ந்தாள் இப்படியாக இரண்டு முறை வெளியே போனவள் சீக்கிரமாக வந்து அமர்ந்துக் கொண்டாள்.
ஹரிதா வெளியே செல்லும் பொழுது ஷ்ரவனின் கேபின் தாண்டி தான் செல்ல வேண்டியிருந்தது. இரண்டு முறை அவள் சென்று வந்ததை பார்த்தவன் இப்பொழுது தனது மொபைலை எடுத்து, அஜயை அழைத்தான் "சாப்டியா” என கேட்டான்,
அவனும் பதிலுக்கு “இல்லை,
லேசா பசிக்குது ஒரேடியா வேலை முடிச்சுட்டு எழும்பலாம்னு இருந்தேன்.
உனக்கு பசிக்குதா? ஃபுட் ஆர்டர் பண்ணவா?..”
என்று அஜய் இவனிடம் கேட்கவும்... ஷ்ரவன் “சரி” என்றவன், “ஹரிதாவிற்கும் சேர்த்து ஆர்டர் பண்ணு” என்க... அஜயோ சரி என்றதும்... “ஹரிதாவக் கொஞ்சம் இங்க வரச் சொல்லு” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
இப்போதெல்லாம் அஜயிடம் ஹரிதா நன்கு பழகியிருந்தாள்,அதனால் ஹரிதாவிடம் ஷ்ரவன் உங்களை கூப்பிடுறான், அவன் கேபின் போவிங்களாம் என்றதும், எரிச்சலானவள் இந்த நேரத்துல எதுக்கு கூப்பிடுறான் என்று கோபத்தில் ஷ்ரவனிடம் சென்றாள்.
ஹரிதா தனது கேபினுக்குள் வந்ததும் நேரடியாகவே கேட்டான், “எதற்கு இரண்டு முறை வெளியே எழும்பி எழும்பி போயிட்டு வந்து உட்கார்ந்த, ஏதாவது பிரச்சனையா?..”
அவளோ ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக நிற்க..."சரி வா எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு என் கூட வந்து கொஞ்சம் கம்பெனி கொடு” என்று அழைத்தான். அவள் எப்போதும் போல அவனை முறைத்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“இப்போ எதுக்கு முறைக்கிற வா” என்று அவன் முன்னாடி நடந்து சென்று அஜயையும் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.
ஹரிதாவோ போகவா? வேண்டாமா? என யோசித்து...பின் அஐயும் வந்து சேர்ந்து கொண்டதும் அவர்களோடு நடந்தாள்.
மூவருமாக வெளியே இருந்த காபி வெண்டிங் மெஷின் அருகில் சென்றனர், அஜய் காப்பி எடுக்க திரும்பி நிற்க ஹரிதாவிடம் கண்களாலே வாஷ் ரூமை காண்பித்துப் போயிட்டு வா என்று சைகை செய்தான்.
ஹரிதா இப்பொழுது கண்கள் விரிய அவனை ஏறிட்டு பார்த்து நின்றாள்.
மறுபடியும் அவளைப் பார்த்தவன், இப்பொழுது அவன்... “போ” என்று மெதுவாக சொன்னான்.
ஹரிதா வாஷ் ரூம் செல்வதற்காகதான் இரண்டு முறை வெளியே வந்தாள்.. அந்த இடமே அமைதியாக ஒருமாதிரி திகிலாக இருக்கவும் அப்படியே திரும்பி வந்து விட்டாள்..இரவு நேரம் என்பதால் சிறிதாக பயம் இருந்தது இதை கணித்தவன் அவளுக்காகவே ஷ்ரவன் வெளியே வந்திருந்தான்.
அஜய் கவனிக்கும் முன்பாக ஹரிதா வாஷ்ரூமிற்குள் நுழைந்தவள்,இப்பொழுது திரும்பி வந்தவளது கையில்... ஷ்ரவன் காப்பி எடுத்து கையில் கொடுத்தான் நன்றி சொல்லி வாங்கியவள்.குடித்துக்கொண்டே கண்களால் அவனுக்கு மீண்டும் நன்றி சொன்னாள்.
ஷ்ரவனின் பார்வை முழுவதும் ஹரிதாவின் மேலயே இருந்தது...ஹரிதா அந்தக் காபியை ரசித்துக் குடிப்பைதைப் பார்த்தவன், அவளது அந்த ரோஸ்பட் நிற உதட்டை தடவி விட ஆசை வந்தது...
ஹரிதாவோ சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்க அவனது பார்வை வித்தியாசத்தைக் கண்டுக்கொண்டவள், அஜயிடம் எதோ கேட்பதுப்போல திரும்பிக்கொள்ள,
இப்போது அவளது முகத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்து அவள் பேசும்போது அளது காதின் சிறு கம்மல் அசைய அப்படியே ரசனையோடு, அவளது கண்கள் காட்டும் பாவனை ஒவ்வொன்றையும் ரசிக்க, அஜயும் இப்போது ஷ்ரவனின் பார்வை மாற்றத்தை புரிந்துக்கொண்டான்.
ஹரிதாவைப் பார்த்து "நீங்க போங்க... நாங்க வர்றோம்" என்று அனுப்பிய அஜய். அவள் போனதும்தான் "என்னடாயிது, கவுந்திட்டியா? இப்படி அவளைப் பார்க்குற?”
"தெரியல"
அவன் முதுகில் மொத்தியவன்... “தெரியலைனு சொல்ற...ஆனா உன் பார்வையே காட்டிக்கொடுக்குதுடா...” என்க.
“எனக்கும் உண்மையாகவே தெரியலை, ஆனா பார்த்திட்டே இருக்கனும்னு தோணுது...”
“சரிதான் இது அந்த நோய்க்கான அறிகுறிடா... இனி உன்னைக் காப்பாத்த யாரலையும் முடியாதுடா,பார்த்துடா இது தெரிஞ்சது.வேதாளம் உன்னை ஆட்டி வைச்சிருவா...” என்று சத்தாமாக சிரித்தான்.
“போடா நிறைய வேலையிருக்கு” என்ற ஷ்ரவன், அஜயின் முதுகில் கைவைத்து தள்ளிக்கொண்டே உள்ளே போனான்..
ஷ்ரவன் ஹரிதா இருவரின் கண்களும் அவர்களின் மௌன மொழியைப் புரிந்துக்கொண்டது...அவர்களது மூளைதான் புரிந்துக்கொள்ளவில்லை...
பின்பு மூவருமாக திரும்பி வந்து தங்களுடைய வேலையை தொடர்ந்தனர் கிட்டத்தட்ட பனிரெண்டு மணிக்கு மேல் ஆகியது, அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்த சாப்பாடும் வந்து சாப்பிட்டுவிட்டு...அவர்களின் வேலை தொடர்ந்தனர்... வேலை முடித்து எல்லோரும் வெளியே வரவும். கேப் வரவும் சரியாக இருந்தது... இப்பொழுது கேப்பில்தான் வந்து கொண்டிருந்தாள்... ஹரிதா அதிலே சென்றுவிட்டாள்..
வீடு சென்று சேர்ந்ததும் தனது அறைக்குள் நுழைந்தவளுக்கு மனம் முழுவதும் ஷ்ரவனின் எண்ணங்களே.. எப்படி என் முகத்தைப் பார்த்துப் படித்து தெரிந்து கொண்டான்... என்ற சிந்தனை தான் அவளது எண்ணம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது அப்படியே உறங்கிப்போனாள்.
அதிகாலையில் அடித்துப்பிடித்து எழுந்தவள் கண்ட கனவை நினைத்துப் பார்த்து தலையை உதறிக்கொண்டாள்.
காலையில் கண்ட கனவு பலிக்குமே என்று யோசித்து நின்றாள்.அது ஒன்றுமில்லை ஷ்ரவனோடு இவளது திருமணம் கனவில் நடந்து இருந்தது.அதை நினைத்துதான் பயம் எழும்பியவள் சிறிது தண்ணீர் குடித்து தன்னை சமன்படுத்தி கொண்டு மீண்டும் படுத்து தூங்கினாள்.
அங்கோ ஷ்ரவனுக்கு முழுவதுமே ஹரிதாவின் நியபகமே.
சண்டைக்கோழி இப்படி வந்துப்படுத்துறாளே...இவ்வளவா அவளை பிடிக்குது நமக்கு...என்னடா ஷ்ரவன் இப்படியாகிட்ட?... என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டே, எழும்பியவன் அறைக்குள்ளயே நடை பழகியவன்...கால்வலியில் அப்படியே படுத்து தூங்கினான்.
ஷ்ரவன் காலையிலயே ஆபிஸிற்குள் நுழைந்தவுடனே, அவனின் கண்கள் ஏதேச்சையாகவே ஹரிதாவைத்தான் தேடியது.
அவளைப் பார்த்ததும் மனதிற்குள் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் மற்றும் பரவசம்...புது உணர்வை உணர்ந்தான்.
ஆனால் அன்றைய தினம் வேலையின் நிமித்தமாக அவனுக்கு நாள் கோபத்தோடவே தொடங்கியது.
ஒரு குழுத்தலைவர் கொடுத்த அறிக்கை மொத்தமாக தப்பாக இருக்க...எல்லாமே மாற்றவேண்டிய நிலை.
கேபினிற்கு வெளியே வந்து அந்த டி.எல்லை அழைத்து எல்லோருக்கும் முன்பாகவும் வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டான்.
இதில் ஹரிதாவிற்கு வருத்தமும் கோபமும் தனியாகக்கூப்பிட்டு சொல்லிருக்கலாமே! என்று நினைத்தவள் தனது வேலையைச் செய்ய, அஜயோ இன்று மொத்தமாக ப்ரோக்ராமில் சொதப்பி வைத்திருந்தான்.
அதைப் பார்த்த ஹரிதாவோ அஜயை இன்று ரொம்ப படுத்திவிட்டாள்.
“படிச்சிட்டுத்தான வந்திருப்பீங்க, இதுல மூணு வருசம் இங்க வேலைப் பார்த்திருக்கீங்க...ஒரு வேலையை ஒழுங்கா செய்யத் தெரியலையா” என்று கேட்க... அஜயிற்கு ரொம்ப அவமானமாக இருந்தது...இவாகிட்டப்போய் அவமானப்பட்டுட்டமே என்று வருந்தினான்.
மதியம் சாப்பிடும்போது அஜயோ அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருக்க, ஷ்ரவன் கேட்டான் “என்னாடா இப்படியிருக்க” எனக்கேட்க, அஜயோ “ஒன்னுமில்லடா” என்று சிரித்து மழுப்பினான்.
“உண்மையா சொல்லுடா உன் மூஞ்சியே சொல்லுது என்னவோ நடந்திருக்குனு...சொல்லு.” என்று வற்புறுத்த, நடந்ததை சொல்லிவிட்டான் அஜய்.
"ஓ...அப்படியா அதுக்கா இப்படியிருக்க விடுறா, நான் பார்த்துக்குறேன்"
“நீ ஒன்னும் செய்யவேண்டாம் நான் தப்பு பண்ணினேன் திட்டினாள் விடுறா,” என்று சொல்லிவிட்டு அஜய் சாப்பிட ஆரம்பித்தான்.
ஷ்ரவன் அமைதியாக சாப்பிட்டு முடித்து தனது கேபினிற்கு சென்றவன் ஹரிதாவை அழைத்தான்.
ஹரிதா அவன் அழைத்ததும் உள்ளே சென்றவளுக்கு நேற்று இருந்த அந்த இளக்கம் முகத்திலில்லை... அனுமதி பெற்று உள்ளே சென்றவளிடம் "என்ன எல்லாரும் சேர்ந்து சங்கம் ஆரம்பிக்கப் போறீங்களா? நான் அந்த டி.எல்லைத் திட்டினா, நீ அஜயை திட்டுவியா?"என்று கோபத்தில் கேட்டான்.
"என்னது சங்கமா?... நீங்க யாரைவேணாத் திட்டுங்க எனக்கு அது பிரச்சனையில்லை, நானும் அப்படியொரு நிலையில் நான்குபேரு முன்னாடி நிற்க விரும்பவில்லை, அதனால் தப்பு வந்தா திட்டாத்தான் செய்வாங்க...நீங்க எப்படி காலையில் நடந்துக்கிட்டது சரியோ, அதே மாதிரிதான் நான் அஜயை திட்டினதும் சரிதான்...உங்க பிரண்ட்னா வேலை தப்பா செய்யலாமா?”
அவள் பேசியதும் சரிதானே என்று நினைத்தவன்...கொஞ்சம் சாந்தமானான். மீண்டும் அவளிடம் “கொஞ்சம் பொருமையா அவன்கிட்ட சொல்லிருக்கலாமே அவனோட முகமே சரியில்லை...”
“நீங்க மட்டும் காலையில வெளிய வைத்து, எல்லார் முன்னாடியும் ஒரு டி.எல்லுனுக்கூட பார்க்கமா திட்டுனீங்க..அவங்களுக்கும் அப்படித்தான இருந்திருக்கும்.”
“இப்போ என்ன சொல்ல வர்ற...நான் செஞ்சா நீயும் செய்வ அப்படித்தான... நீ சொன்னதுக்கு அதுதான் அர்த்தம்.
பதிலுக்குப் பதில் எப்படினாலும் செய்வ, அப்படியா?...”
“ஆமா...நீங்க செய்யும்போது நான் செய்யக்கூடாதா...” என்று பதிலுக்குப் பதில் பேச.
“பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணு, இப்படி வாய்க்கு வாய் எதிர்த்து சத்தமா பேசாத...அன்னைக்கு மாலில் வச்சும் இப்படித்தான் கத்துன...”என்று அவனும் வாயைவிட.
“ஹரிதாவிற்கு ஏகக்கோபம் நீங்க மட்டும் பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணலாமோ?...”என்று பதில் சொல்ல.
“என்ன பொறுக்கியா? உன்னோட ஹையர் ஆபிஸர் நான்...என்ன பொறுக்கினு சொல்ற...இதுக்கே உன் மேல கம்பெளயின்ட் பண்ணி வேலையவிட்டுத் தூக்கலாம் தெரியுமா?..”என்று சொல்லிக்கொண்டே எழும்பவும்.
அவள் தனது வாய்க்குள்ளே “போடா டேய்” என்று முனங்கினாள்...
“என்ன சொன்ன இப்போ? போடா டேயா.
என்னடி நினைச்சுட்டடிருக்க” என்று அவளருகில் வரவும்.
ஹரிதா “என்ன நீங்க டீ போட்டு பேசுறீங்க இது சரியில்லை தெரியுமா” என்று கையை நீட்டி எச்சரித்தவளின் விரலைப்பிடித்தவன்... அப்படியே அவளது கை அவளது முதுக்குபின்னாக திருப்பி பிடித்து தன்னோடு சேர்த்துக்கொண்டான்...
“கை நீட்டிப் பேசுற நீ...எப்போபாரு எது சொன்னாலும் நிதானமா யோசிக்கமப் பேசறது,என்ன பொறுக்கினு சொல்ற,போடானு சொல்ற...ம்ம்..என்னடி நினைச்சிட்டிருக்க” என்றவன்... “நான் டீ சொன்னமட்டும் கோபம் வருதோ உனக்கு...
பொறுக்கி எப்படி நடந்துப்பானு உனக்கு காண்பிக்க வேண்டாமா?..” என்று சொன்னவன் அவள் சுதாரிக்கும் முன்பே இன்னும் அவளைத் தன்னோடு நெருக்கி குனிந்து அந்த ரோஸ்பட் இதழ்களை தனது பற்களால் கடித்தவன், அப்படியே அவளது வாயை மூடியிருந்தான்...
அவள் சுதாரித்து திமிற, அவளது கையோ அவன் வசம், சுவற்றோடு சாய்த்து உடலோடு உடல் ஒன்றிருந்தான்...
அவளுக்கு இப்போது வலியில் கண்ணீரே வந்துவிட்டது...
அவனோ இதுதான் கிடைத்த வாய்ப்பு என்று தனது எண்ணத்தின் முத்திரையைப் பதித்திருந்தான்.
மெதுவாக விடுவித்து அவளைப் பார்க்க கை வலி, அவன் முத்தமிட்டது வேற வலி என்று அழுதவள்...
அவன் விட்டதும்தான் அவனின் நெஞ்சில் “பொறுக்கி பொறுக்கி” என்று சொல்லி சொல்லி அடித்தாள்...
மறுபடியும் ஷ்ரவன் அவளது கையைப்பிடிக்க.
“விடுறா... உன்னை நல்லவனு நினைச்சேன்..அப்படியில்ல பொறுக்கினு நிருபிச்சிட்ட என்றவள்...உனக்குகீழ் வேலைப்பார்த்தாள் பொம்பளை பிள்ளைங்களை இப்படித்தான் நடத்துவியா? நான் உன்மேலப் புகார் கொடுப்பேன் பாரு” என்று இப்பவும் பேசிக்கொண்டேயிருக்க...
மீண்டுமாக அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தவன், இறுக்கமாக கட்டிக்கொள்ள...அவளது காதில் மெதுவாக “எவ்வளவு பேசினாலும் இப்படி கெத்தா பேசுற பாரு அதனாலத்தான் இன்னும் எனக்கு உன்னை அதிகமா பிடிக்குது... ஐ லவ் யூ சண்டைக்கோழி " என்றவன் “உன்னைத் தவிர வேற எந்தப் பொண்ணாவது என் கேபினுக்குள்ள வந்து பார்திருக்கியாடி...எதையும் யோசிக்கமாட்டியா...இப்படி பேசாதக்கோபம் வருது.”
அவள் எதையும் கேட்காமல் இன்னும் அவனிடமிருந்து திமிற... “அடங்குடி எப்போ பாரு தலையறுத்தக்கோழி மாதிரி வெடவெடத்திட்டிருக்க...
இந்த இரண்டு மாசத்துல என்னைக்காவாது உன்கிட்ட அசிங்கமா பேசிருக்கனா? இல்லை பார்த்திருக்கனா?
எப்படி பொறுக்கினு சொன்ன,வார்த்தைகளைக் கவனமா பேசு...சரியா” என்றவன் மறுபடியும் அவளது இதழ்களைப் பார்க்க.
சட்டென்று உதடுகளை உள்ளே கடித்து வைத்தாள் அதைப்பார்த்து “என் மேல ரொம்ப நல்ல எண்ணம் வச்சிருக்கம்மா தாயே போ...” என்று விடுவித்தான்.
அவனது கண்களை பார்த்தவள் “உங்ககிட்ட இதை எதிர்பார்க்கவில்லை” என்றாள்...
இது எதுவுமே வெளியே தெரியாது
ஹரிதா உள்ளே வரும்போதே...தனது அறையின் கண்ணாடித்தடுப்பின் திரையைப்போட்டிருந்தான்...
அத்தியாயம்-6
இப்பொழுதுதான் ஷ்ரவன் தான் கோபத்தில் செய்த செயலின் வீரியத்தை உணர்ந்தான்...இன்றும் அவளது கண்ணீர் அவனது மனதை பிசைந்தது.
என்னடாயிது எங்க ரெண்டு பேருக்கும் எப்போதும் ராசி சரியாவே வரமாட்டேங்குது. இப்போதுதான் கொஞ்சம் சமாதானமாகப் பேச ஆரம்பித்தாள், அதற்குள்ளகத் திரும்பவும் சண்டையா!
ஷ்ரவன் உனக்கு நேரமே சரியில்லைடா சொதப்புற எல்லாத்துலயும் என்று தனக்குத்தானே பேசியவன்.
தனது வலது கையான அஜய்யை அழைத்தான்... தனது போனில் அழைப்பு வரவும் அஜய் எடுத்து மெதுவாக ஹஸ்கி வாய்ஸில் "என்னடா" என்று கேட்டான்.
ஷ்ரவனோ புரியாமல் “ஏன்டா லவ்வர் கிட்ட பேசுற மாதிரி ரகசியமா பேசுற? என்னடா விஷயம்?...”
"மவனே வேதாளம் என் பக்கத்துலதான் நிக்குறா. பக்கத்துல இருக்க பிள்ளையைப் போட்டு பாடா படுத்திட்டு இருக்காள். அவளோட முகமே சரியில்லை அழுதிருப்பாள் போல ஏண்டா நீ எதுவும் திட்டுனியா?”
ஷ்ரவன் "ஆமாடா கொஞ்சம் சண்டை வந்துட்டு... அதுதான்"
அஜயோ என தன் தலையில் அடித்துக் கொண்டவன், “புருஷன் பொண்டாட்டிக் கூட இவ்வளவு சண்டை போட்டிருப்பாங்களானு எனக்கு தெரியலை.. நீ என்னடானா லவ்வ சொல்லவே இல்ல,அதுக்குள்ள இவ்வளவு சண்டைப் போட்டுக்குறீங்க.... தாங்காதுடா சாமி. இப்ப எதுக்குடா கால் பண்ணுன அதச்சொல்லு முதல்ல...”
“அதுவா அவ அழுதுட்டு இருக்காளானு கேக்குறதுக்குதான் போன் பண்ணேன்” என்று ஷ்ரவன் சொன்னதும்.
“இந்த வேலையை பாக்குறதுக்காடா என்னை அவ டீம்ல நீ சேர்த்துவிட்ட,நல்ல வருவடா” என்ற அஜய் போனை வைத்து விட்டான்.
ஹரிதா விஷயத்தில் மட்டும் எல்லாமே தப்பு தப்பா நடக்குதுடா என்ற சிந்தனையில் இருந்தவன். இப்பொழுது அதை ஒதுக்கி வைத்து விட்டு தனது வேலையில் மூழ்கினான்.
என்னதான் வேலையில் மூழ்கினாலும் மனதின் ஓரத்தில் ஹரிதாவிடம் பேசணும் என்று உணர்த்திக் கொண்டே இருந்தது.
‘எப்படியும் ரிப்போர்ட் கொடுக்க வருவாதானே’ என்று நினைத்துக் கொண்டே தனது வேலையை செய்தான்.
இரவு அதிக நேரம் இருக்கவேண்டிய நிலை என்பதால் பின்பு வருவாள் என்று காத்திருந்தான். இரவு 7 மணிக்கு மேல் ஆகியும் அவள் வரவில்லை என்றதும் மெதுவாக எழும்பி வெளியே நடந்தான்.
மதியத்திலிருந்து உட்கார்ந்தே வேலை பார்த்ததால் இப்பொழுது கொஞ்சம் நடந்தால் நன்றாக இருக்குமே! என்று வெளியே வந்தவன் அஜயின் அருகில் வந்து என்னவென்று கண்களால் வினவ, இருவருமே சிரித்துக் கொண்டனர்.
அப்படியே ஹரிதாவை பார்க்க... அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை தன் வேலையில் கவனமாக இருக்க காண்பித்துக் கொண்டாள். அவன் வந்தது அவளுக்கும் தெரிந்தே இருந்தது, சிறிது நேரம் அவளது பின்னாடியே நின்றிருந்தவன்...மெதுவாக குனிந்து கம்ப்யூட்டரை கைகாட்டி சந்தேகம் தீர்க்கின்றவன் போல அவளது கன்னத்தில் கன்னத்தோடு உரசுமாறு வைத்துக்கொண்டு காதில் மெதுவாக... "சாரிடி நீ பொறுக்கி என்று சொன்னதும் கொஞ்சம் கோபம் வந்திட்டு... நமக்கு ரொம்ப பிடிச்சவங்க இப்படி சொன்னா எப்படி இருக்கும்.. நீ எனக்கானவள் என்ற உரிமையை எடுத்துக்கிட்டேன்” என்று திரும்பவும் சாரி சொன்னான்.
அதைக்கேட்டு குழப்பமாகப் பார்த்தாள்...அவனை லூசா நீ என்று ரீதியில்...
அதைப்பார்த்து லேசாக கண்ணடித்தவன்.அப்படியே எல்லா இடத்திலும் ஒரு சுற்று சென்று பார்த்துவிட்டு தனது கேபினுக்குள் நுழைந்தான்.
நேற்று போல் இல்லை என்றாலும் இன்று எல்லா வேலையும் முடிக்க கொஞ்சம் நேரம் ஆகியது.
இப்போது அஜய் ஷ்ரவனின் கேபினுக்குள் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர அவனது கைகளில் அன்றைய தினத்தின் வேலைக்கான ரிப்போர்ட்டுகள் எல்லாம் பிரிண்டுகளாக இருந்தது.
அதை சுட்டிக்கட்டி “என்னது இது” என்று அஜயிடம் நேரடியாகவே கேட்டான்...
“இன்னைக்கு உள்ள ரிப்போர்ட் எங்க டீம் லீடர் என் கையில் தந்து, உன் கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று அஜய் சொன்னான்.
“ரிப்போர்ட் நேரடியாக டீம் லீடர் தான் கொண்டு வந்து கொடுக்கணும்னு ரூல்ஸ் இருக்கு. உங்க டீம் லீடருருக்கு இது தெரியாதா போய் அவளை வரச் சொல்லு...” என்று கொஞ்சம் கோபமாகவே பேசினான்.
“போடா நீ வேற ஹரிதா அப்பவே என் கையில் தந்துவிட்டு போயிட்டங்க.
என்னன்னு தெரியலை முகமெல்லாம் வீங்கி சிவந்து ஒரு மாதிரியா இருந்தாள்.. என்கிட்ட வந்து கேட்டுகிட்டாங்க..ப்ளீஸ் பிரதர் இந்த ரிப்போர்ட்டை சார்கிட்ட கொஞ்சம் கொடுத்திடுங்கனு சொன்னாளா, அதுதான் பாவம்னு நான் கொண்டு வந்தேன்.”
“பிரதர்ன்னு சொன்னவுடனே நண்பனை மறந்து பாசத்தில் அப்படியே பொங்கிட்டயோ? காலையில உனக்காக பேசப் போய்தான்டா எங்களுக்குள்ள சண்டையே வந்தது.இப்போ நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி ஆகிட்டீங்க என்னை மறந்துட்டீங்க அப்படித்தான” என்று கத்தினான்.
இதைக் கேட்ட அஜய் இவனுக்கு என்னாச்சு? இப்படி எல்லாமா பேசுவான் என்று திருதிருவென முழித்தான்.
ஷ்ரவனோ ‘இருக்க கோபத்தை இவன்கிட்ட எதுக்கு காண்பிக்கணும்’ என்று நினைத்தவன். “ஒன்னும் இல்லடா பத்து நிமிஷம் ஆகும் எல்லா வேலையும் முடித்துவிட்டு வரேன்”என்றவன் தன் வேலையில் மூழ்கினான்.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
இருவரும் தங்களது வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வர ஹரிதாவும், அவளுடன் வேறு ஏரியாவுக்கு செல்லக்கூடிய சிலரும் அங்கு நின்றிருந்தனர்.
சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தான் ஷ்ரவன். அங்கு இப்பொழுது ஹரிதா மட்டும் தனியாக நின்றிருந்தாள், அவளோடு கூட நின்று கொண்டிருந்தவர்களுக்கும் கேப் வந்ததும் கிளம்பிவிட்டனர்.
ஷ்ரவன் இப்பொழுது அஜயை அழைத்தவன், வண்டியை திருப்பி வந்து ஹரிதாவின் அருகில் கொண்டு விட்டனர். ஷ்ரவன் ஹரிதா விடம் கேட்டான் "நீ மட்டும் நிக்கிற உன்னோட கேப் வரலையா என்று கால் பண்ணி கே”ளு என்க
அவளோ யாரோ யாரிடமோ பேசுகிறார்கள் என்று தனது முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்... ‘இது வேலைக்காகாது’ என்று நினைத்தவன் அவளை அழைத்து செல்லும் வண்டிக்கு கால் செய்து கேட்டான், அது பாதி தூரம் கடந்து இருந்தது.
“அதுதான் கேப் போயிடுச்சுன்னு தெரியுதுல்ல.. உங்க அப்பாவிற்கு ஃபோன் பண்ண வேண்டியதுதானே?..” என்று கேட்க அவள் இப்போதும் முகத்தை திருப்பிக் கொண்டேதான் நின்றிருந்தாள்.
அஜயைப் பார்த்து “உன் பாசமலர்க்கிட்ட என்னனு கேளுடா” என்று சொல்ல.
அஜய் ஹரிதாவிடம் கேட்டான், “வண்டி போயிடுச்சுன்னா அப்பாக்கு கால் பண்ணு, நீ இப்படியே நின்னா நாங்க எப்படி உன்னைத் தனியா விட்டுட்டு போகமுடியும்... அதுல வேற இவன் என்னத்தையாவது செய்து வைக்கப்போறான்,சொல்லு” என்க.
“அப்பா ஹாஸ்பிட்டல்ல ஏதோ எமர்ஜென்சி வரமுடியலை, இன்னும் அங்கதான் இருக்காங்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆகும் சொன்னாங்க,அதுதான் இங்க நிற்கிறேன்” என்றாள் ஹரிதா.
அதைக் கேட்டவன், “சரி வா நான் கொண்டு உன்னை உன்னோடு வீட்டில் விடுறேன்” என்று கேட்கவும்... “வண்டினாலதான் உன்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு இருக்கேன்,கார்ல வந்து இருந்தா உன்ன பேசாமல் தூக்கி போட்டு கொண்டு போயிட்டே இருந்திருப்பேன்...” என்று சொன்னதும். ஒரு இரண்டடி பின்னே நகர்ந்து சென்றாள்.
இவர்கள் இருவரும் பேச ஆரம்பிக்கும்போதே அஜய் கொஞ்சம் நகர்ந்துப் போய்விட்டான்.
“லூசாடி நீ...எதுவுமே யோசிக்கமாட்டியா ?காலையில நடந்தது கோபத்துல...நீ பேசுன வார்த்தை அப்படி.பொறுக்கினு சொல்ற...உன்னைத்தவிர வேற எந்தப் பொண்ணுக்கிட்டயாவது இந்த இரண்டு மாசத்துல பேசியிருக்கனா?
இல்லை சைட் அடிச்சிருக்கேனா? இல்லை வேறெதும் பண்ணினேனா?
உன்கிட்ட சண்டைப் போட்டாலும்,அசிங்கமா பார்த்திருக்கேனாடி, கடுப்பை கிளப்பாத...
வண்டியில் ஏறு வீட்லக்கொண்டு விடுறேன்...” என்று பேசிக்கொண்டிருக்கும்பேதே.
ஹரிதாவின் போன் அலறியது, சுமித்ராதான் அழைத்திருந்தார்.
எடுத்துப்பேசியவள் "அப்பவுக்காக நிக்குறேன்மா"
சுமித்ரா "அப்பா வரமுடியாதும்மா இன்னும் ஆப்ரேஷன் முடியலையாம், ஒன்னுப் பண்ணு கால் டேக்ஸில வந்திடேன், எனக்கு நம்பர்லாம் மெசேஜ் பண்ணிடு, கவனமா வா, உன்கூட யாராவது இருக்காங்களா என்ன” என்று சிறிது பதட்டத்துடனே கேட்டார்.
"இருக்காங்கம்மா... என்னோட டீம்ல உள்ளவங்க இருக்காங்க, பயமில்லைம்மா” என்று ஷ்ரவனைப் பார்த்துக்கொண்டே சொல்லியவள்... “நீங்க டென்சனாகாதிங்க” என்றாள் ஹரிதா.
சட்டென்று அவளிடம் நெருங்கி அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தியவன் "புரிஞ்சுக்கோடி, உன்னை என்னோட சொந்தமாகதான் நினைக்கமுடியுது, வேற யாரோனு நினைக்க முடியல...” என்று அவளுடை கண்களை ஊடுருவிப் பார்த்தான்...அவளும் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"இந்த சண்டக்கோழி எப்படி என் மனசுக்குள்ள வந்தானுத் தெரியால,வாழ்க்கை முழுவதும் உன்கூடத்தான் இப்படியே உன்னை சீண்டனும், சண்டைப்போடனும், அப்புறம் இப்படி வந்து கொஞ்சனும், இப்பவே என்கூட வந்திடுறயா...” என்றுக் கேட்டதும்தான் ஹரிதா உணர்ந்தாள்... அவனது கண்கள் உண்மையாக அவளிடம் அப்படி மயங்கி கிறங்கி காதலை சொல்வதை...
காலையில் அவன் நடந்துகிட்டதுக்கு இப்போது நடந்துக்கறதுக்கும் வித்தியாசமாக இருந்தது...கோபம் வந்தாலும் அதிரடியாக காதலைச் சொல்லும் இவன்,இப்போது இருக்கும் ஷ்ரவன் புதிதாகத் தெரிந்தான்...
அவளது மனம் அப்படியே அவனை ஏற்கத் தயாராகத்தான் இருந்தது...அது அவளது மனதுக்குப் புரியவில்லை.
அதற்குள் டேக்ஸி வரவும் ஷ்ரவன் ஹரிதாவை விடுவித்தவன்.ஹரிதாவை விழுங்குவிடுவதுப்போலப்
பார்த்துவைத்தான்.
டேக்ஸியில் ஏறியதும் ஹரிதா ஷ்ரவனைப் பார்த்து தன்னையறியாமல் தலையைசைத்து வைத்தாள்.
பாதி தூரம் சென்றதும் டிரைவர் "மேடம் நம்ம வண்டியை இரண்டுபேர் தொடர்ந்து வர்றாங்க பாருங்க...போலிஸ்ல சொல்லலாமா?..” என்று கேட்டதும்..பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்தவளுக்கோ அதிர்ச்சி...ஷ்ரவனும் அஜயும் பின்னாடியே தொடரந்து வந்தனர்.
ஹரிதாவிற்கோ ஷ்ரவனின் இந்தச் செயல் அவள்மீதான அவனது பிரியத்தை பறைசாற்றியது.
அவள் ட்ரைவரிடம் "அவங்க என்னோட சொந்தம்தான், நான் பாதுகாப்பா போறனானுப் பின்னாடி வர்றாங்க, ஒன்னும் பயமில்லை" என்றாள்.
தன்னுடைய வீடு வந்ததும் ஹரிதா இறங்கி வீட்டினுள் போவதற்கு முன் ஷ்ரவனைப் பார்த்து சிறிது நேரம் நின்றவள், உள்ளே சென்றாள்.
மாடி அறைக்குள் செல்ல எத்தனித்தவள், கீழே எட்டிப்பார்க்க,ஷ்ரவனும் அஜயும் அங்கயே நின்றிருந்தனர், தன்னுடைய மொபைலின் டார்ச்சை அவனின் மீது அடித்தாள்... வெளிச்சம் பட்டதும் மேலே நிமிர்ந்து பார்த்தவனுக்கு கை காண்பித்து போ என்க...அவன் அவளைத்தான் அசையாமல் பார்த்திருந்தான்...மறுபடியும் “போ” என்று வாயசைத்து சைகைச் செய்யவும் தன் வண்டியை எடுத்தான்.
அஜயோ தலையில் அடித்துக்கொண்டான்... “ஐயோ கடவுளே இந்தப் பைத்தியங்ககிட்டயிருந்து என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்துங்க” என்றதும்.
ஷ்ரவன் "கத்தாதடா எருமை அவங்கம்மா வந்திடப்போறாங்க" என்றான்.
“இனி அது ஒன்னுத்தான் குறைச்சல்...வாடா டேய். தூக்கம் வருது, நாளைக்கு லீவு விடுற எண்ணம் எதுவுமிருக்கா...” என்று அஜய் புலம்பவும்தான் கிளம்பினான்.
அறைக்குள் நுழைந்தவளுக்கு மனசுக்குள்ள ஒரு மிதக்குற உணர்வு...படுக்கையில் படுத்தவளுக்கு காலையில் அவன் நடந்துக்கொண்டது ஞாபகம் வந்ததும் கோபமாக எழும்பியவள் எந்த தைரியத்தில் முத்தம் கொடுத்தான் என்று கோபம் வந்தாளும் அவன் " ஐ லவ் யூடி சண்டைக்கோழி " வாசகம் திரும்ப திரும்பக் காதில் வந்து மோத...
கோபம் காதல் இரண்டும் கலந்தக் கலவையான மனநிலையில் இருக்க...இப்போது தனது உதடுகளைத் தொட்டுப்பார்த்தவளுக்கு அவன் முத்தமிடும்போது இருந்ததைவிட, இப்போது அவளது உடலோ இழைந்து குழைந்து சுகமாகத்தோன்றியது...
காதலையும் எப்படி சொல்றான் பாரு...ராஸ்கல் ...செல்லமாகத் திட்டிக்கொண்டே, அப்படியே படுத்து தூங்கியவளுக்கு எல்லாமே சுகமான கனவாகத் தோன்றியது... நித்திரையும் அவளைத்தொட உறங்கிப்போனாள்.
அஜய் விடைப்பெற்று செல்ல...வீட்டிற்கு வந்த ஷ்ரவனுக்கும் ஹரிதாவுடன் காலையில் நடந்த நிகழ்வுதான் கண்முன் வந்தது.
வாய்தான் அதிகமாப் பேசறா...ஒரு பிடிக்குத் தாங்கமாட்டாப்போல, உடல் இளவம்பஞ்சுபோல மென்மையாக அவனை உள்ளிழுத்ததை நினைத்தான்...அவளின் வாசனை இப்போதும் அவன்மேல் இருப்பதுபோல தோன்ற, சட்டையக்கூடக் கழற்றாமல் அப்படியே படுக்கையில் சரிந்தவனுக்கு, இளமைக் கனவுகளோடான தூக்கம் கண்களைத் தழுவியது.
காலையில் எழும்பியதும் இருவருக்குமே மனசுக்குள்ளாக ஒரு பரவசம்... கிளம்பி ஆபிஸ்ற்கு செல்ல...எப்போதும் போல ஷ்ரவனின் கண்கள் ஹரிதாவைத் தேடியது...அவளுக்கும் அவன் வருவது தெரியும், தெரிந்தும் கண்டுக்ககூடது என்று திரும்பியே அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு வேலையே ஓடவில்லை...நேற்று இரண்டு முறை தனது காதலை சொல்லியாகிற்று அதற்கான பதிலினை எதிர்ப்பார்த்துதான் காத்திருந்தான்.
இரண்டு முறை அவளை அழைத்து வேலை விசயமாகப் பேசும்போது அவளது முகத்தினைப் பார்க்க... அவளோ எந்த உணர்வுகளையும் முகத்தினில் கொண்டுவராமல் ‘மவனே இப்படியே திணறு, சண்டைப்போடுவானாம்,அப்புறம் கோபத்துல முத்தம் கொடுப்பானாம், திடீர்னு காதலிக்குறேன்னு சொல்லுவானாம்.
இவன்கிட்ட நம்ம உடனே மயங்கி காதலை சொல்லனுமாம்...போடா டேய் இப்போதைக்கு எதுவும் கிடையாது, சொல்லவும் மாட்டேன்’ என்று நினைத்தவள் திரும்பி வர.
ஷ்ரவன் "ஹரிதா எதாவது என்கிட்ட சொல்லாமப் போறீங்களா?.."
ஹரிதா "இல்லை சார், எல்லத்தையும் எக்ஸ்ப்ளேன் பண்ணிட்டனே" என்க...
ஷ்ரவன் "ஓஓ, சரி நீங்க போங்க" என்றவன், இரட்சஷி என்னை சுத்தல் விடுறியா...இருடி என்கிட்டத்தான வருவ...உன்னைப் பார்த்துக்குறேன் என்று பொறுமியவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.
கிட்டதட்டா ஒருமாதம் முடித்து அந்த ப்ராஜக்ட் முடித்துக் குடுத்தாகிவிட்டது.
ஷ்ரவனிற்குத்தான் ஏகப்பட்ட பாராட்டு, இங்கே இவனுக்கு இது முதல் ப்ராஜக்ட், அதுவும் வெற்றிகரமாக முடித்தது ரொம்பவும் சந்தோசம்.
கம்பேனி சார்பாக பார்ட்டி மற்றும் அவர்களின் ரிலாக்சேஷனுக்காக என்று சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் ஒரு ரிசார்டில் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...
பிடிக்குதோ பிடிக்கலையோ போகவேண்டிய சூழல் ஹரிதாவிற்கு,
அஜயிடம் மெதுவாக சொன்னாள். நான் சென்னையில் வேலைபார்க்கும்போது அங்க பிரண்ட்ஸ் இருப்பாங்க...இங்க எனக்கு வரபிடிக்கலை என்று.
அஜய் "டேய் உன் சண்டைக்கோழிக்கு வரப்பிடிக்கலையாம்...என்னனுக் கேளு,” என்று ஷ்ரவனிடம் போட்டுக்கொடுத்தான்.
ஷ்ரவனோ ஏற்கனவே கோபத்தில் இருந்தான்.இன்னும் பதில் சொல்லாமலயே நாட்களைக் கடத்துறா என,விட்டுப்பிடிப்போம் என்றிருந்தான்.
அவளை அழைத்து காரணம் கேட்க...காரணம் சொல்லாமல் “வரப்பிடிக்கலை” என சொல்ல.
ஷ்ரவன் "எதுவும் பயமா, நீதான் டீம் லீடர்..நீயே வரலைனா மற்றவங்களும் அதைத்தான் செய்வாங்க, நான் இருக்கேன் அப்புறமென்ன பயம்...வர்ற"என்று சொல்ல.
ஹரிதா தன் தலையை அரைகுறையா ஆட்டியவள். “நான் நாளைக்கு பார்ட்டிக்கு வர்றேன்” என்று சம்மதம் சொல்லி வெளியே சென்றாள்.
அடுத்த நாள் எல்லாரும் சரியா நேரத்திற்கு வந்து சேர ஹரிதாவைக் காணவில்லை.
ஷ்ரவன் அவளின் வரவிற்காகவே எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
அஜயும் அவனருகில் நிற்க, கடைசி நிமிடத்தில் கிருஷ்ணா மகளை காரில் கொண்டுவந்துவிட.
ஷ்ரவன் கோபத்தில் முறைத்துக் கொண்டு நின்றான். அவளைப் பார்த்தவுடனே ஹரிதாவும் அவறது கோபமுகத்தைக் கண்டுக்கொண்டாள்...
மெதுவாக அஜயின் அருகில் சென்றவள் “ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டோம் ப்ரோ அதான்” என்று பார்வை ஷ்ரவனிடமும், வார்த்தைகள் அஜயிடமும் இருந்தது.
அவளது விருப்பத்தை அன்று காபி குடிக்கும்போதே அவளது கண்களில் கண்டுக்கொண்டவன், தனக்கு தண்ணிக்காட்டுகிறாள் என்று தெரியும்...அதானால்தான் இன்று கோபம் வந்தது...
அன்றைய நாள் முடிந்து... ரிசார்டில் இருந்து எல்லோரும் இப்போது திரும்பிவருவதற்குத் தயாராகிக் கொண்டிருக்க.
அஜயோ கூட வந்த இரண்டு பேரையும் காணவில்லையே எனத்தேடி வர..மாலை மயங்கிய அந்த இருட்டில் யாரோ இரண்டுபேர் கட்டிப்பிடித்து ஈருடல் ஓருடலாக நிற்க..
நம்ம ஆபிஸ்ல உள்ளவங்களா இருக்கமோ என்று யோசிக்கவும், ஒருவேளை ஷ்ரவனும் ஹரிதாவுமாயிருக்கமோ என்று கொஞ்சம் ஜெர்க்கானவன், சிறிது அருகில் பக்கத்தில் சென்று பார்த்தவன்.
“அடப்பாவிகளா...சண்டைப்போடுறோம் சண்டேபோடுறோம்னு...இந்த இரண்டும் இப்போ இப்படிக் கட்டிபிடிச்சிட்டு நிக்குதுக” என்று சத்தமாக பேசவும்.
ஹரிதாவும் ஷ்ரவனும் பதறி விலகி நின்றனர்...இரண்டுபேருமே வெட்கத்தில் குனிந்து சிரித்துக்கொண்டே அஜயை நோக்கி வந்தனர்.