காதலின் மீதியோ நீ-28
காதலின் மீதியோ நீ-28
ஒருவேளை ஜெகன்னாத் உயிரோடிருந்தால் இந்த நிம்மதியும் சந்தோசமும் அவளுக்குக் கிடைத்திருக்காது என்று தெரிந்தேதான் கடவுள் அவரை எடுத்துக்கொண்டாரோ என்னவோ?
மூன்று மாதம் மனைவியையும் மகனையும் மாமியார் வீட்டில் விட்டிருந்தாலும் வாரத்துக்கு மூணுநாள் சென்னையில்தான் வாசம் பண்ணினான்.
காதலின் பொன்வீதியில் நடக்காமல் பிரச்சனைகள் போராட்டங்கள் என்று பிரிந்து வாழ்ந்தும் தவமாகக் கிடைத்த மகனல்லவா! அதனால் மனைவியையும் மகனையும் பொக்கிஷம்போல் பார்த்துக்கொண்டான்.
மூன்றுமாதம் முடிந்து டெல்லிக்கு அழைத்துச் சென்றான்.அவர்களது பழைய வீட்டிற்குப் போகவில்லை.
இப்போது தனக்கென்று எழுதிக்கொடுத்திருக்கும் வீட்டிற்குப்போயிருந்தான்.
அங்கேதான் பூர்வியும் மருமகளுக்காகவும் பேரனுக்காகவும் காத்துக் கொண்டிருந்தார் உண்மையில் அந்த வீட்டை பணத்தால் கட்டியிருந்தாலும் இப்போது அந்த வீட்டில் அன்பு மட்டுமே ஆளுகைச் செய்கிறது.
தகப்பன் இறந்த பிறகு அந்த வீட்டில் எந்தவிதமான நல்ல காரியங்களும் நடக்கவில்லை என்பதால் முதன்முதலாக தனது மகனுக்கு பெயர்சூட்டும் விழா வைத்து மொத்த குடும்பத்தையும் அழைத்து விமரிசையாக கொண்டாடினான்.
அத்தனை குடும்பங்களும் பூர்விக்காகவும் ஆயுஷுக்காகவும் வந்தாலும் அவர்களது வாய்க்கு அவலாக ஆயுஷ் நித்ரா காதலும் அவர்களது வாழ்க்கையும் மாறி இருந்தது,அதையெல்லாம் ஆயுஷ் கண்டுக்கொள்ளவே இல்லை.
அவன் அந்த பணம் கொடுக்கும் கௌரவத்திற்கும் மதிப்பு மரியாதைக்கும் விலகப் பழகிருந்ததால் அதெல்லாம் அவனுக்கு பெரியதாக தெரியவில்லை.
நித்ராதான் கொஞ்சம் சுணங்கி போனாள் ஆனாலும் அதை தனது அன்பால் மாற்றிக் கொண்டான்.
அவனது நெஞ்சத்தை மஞ்சமாக நினைத்து படுத்திருந்தவளின் மனநிறைவு அவளது கண்களில் காதலாக வெளிப்பட்டது.
அந்தக் காதல் பார்வையும் அவளது ஆசையும் வெளிவரவேண்டும் என்பதுதானே ஆயுஷின் இத்தனைநாள் ஏக்கமாக இருந்தது.
அப்படியொரு காதலை மீண்டும் அவள் கண்ணில் கண்டதும்தான் உண்மையாகவே அவளது மனதினை தான் ஜெயித்துவிட்டோம் என்று தோன்றியது.
இனி வாழ்க்கை முழுவதும் அந்தக் காதல் மட்டும்தான் அவர்களை ஆளும்!
இந்த பிரபஞ்சமதின் காதலின் மீதிதான் அவனும் அவளும்!
வாழ்க வளமுடன்