என் நெஞ்சிலாடும் களபமே-1

என் நெஞ்சிலாடும் களபமே-1

என் நெஞ்சிலாடும் களபமே!

களபம்-1

டெல்லி ஜெகன்னாத் கன்ஸ்ட்ரக்ஷன் ஆபீஸ்…

பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் மேனேஜர் சுந்தர் தனக்கு முன்பு உட்கார்ந்துக்கொண்டே தன்னை மதிக்காது போனில் யோரையோ திட்டிக்கொண்டிருந்த ராம் சிங்கினை தனது சேரில் சாய்ந்து உட்கார்ந்தவாறே பார்த்திருந்தான்.

அவனோ இந்தியில் ”என்னடா நினைச்சிட்டிருக்கீங்க.இவ்வளவு பெரிய கண்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் இருந்து கொட்டேஷன் குடுத்து பில் பாஸ் பண்ணிருக்கோம் அதை வாங்கிட்டு வரமுடியலையா ஒரு மதராஸிக்கிட்ட படிஞ்சு பணிஞ்சு பேசிட்டு வருவீங்களா?அவன் என்ன பெரிய இவனா துக்கடா பையன் அவனைப் போட்டுத்தள்ளிட்டு வந்தா வேறொருத்தன் பில்லை பாஸ் பண்ணப்போறான்.அதுக்கு எதுக்குடா என்னை அனுப்பினீங்க.சாலா இனிமேல் இந்த விசயம் என்கிட்ட வந்துச்சுன்னா உங்களை கொன்னுருவேன்டா” என்று ஓரக்கண்ணால் சுந்தர் பயப்படுகிறானா? இல்லையா? என்று பார்த்திருந்தவாறே பேசிக் கொண்டிருந்தான்.

சுந்தரோ அவனைப் பார்த்தும் பார்க்காததுபோன்று தண்ணி பாட்டிலை எடுத்து ராம்சிங் கையில் குடுத்தான்.

அவனோ ‘நம்ம இவ்வளவு பேசிருக்கோம் இவன் அசாராமல் நமக்குத் தண்ணி எடுத்து தர்றான்.இவன் என்ன அவ்வளவு கெத்தா இருக்கான்? நம்மக்கிட்டயே இவன் கெத்துக் காண்பிக்கிறான். எங்கவந்து யாருக்கிட்ட திமிரா எதிர்த்து நிக்கிறான். நம்ம சொன்னதைக் கேட்காமல் அவன் இஷ்டத்துக்கு நேர்மை எருமைங்கிறான்’என்று நினைத்தவன் சுந்தர் கொடுத்தத் தண்ணி பாட்டிலைத் தட்டிவிட்டான்.அது சுந்தர் கையிலிருந்து கீழே விழுந்து உருண்டுஓடி அவன் காலிலயே விழுந்தது.

அதில் கோபமாக எழுந்தவன் “இப்போ கடைசி முறையா உன்கிட்ட கேட்கிறேன் என் கம்பெனி பில்லை பாஸ் பண்ணுவியா மாட்டியா? நீ இந்த ராம்சிங்குகிட்டயே மோதிப்பார்க்கணும்னு மோதுற. இது உனக்கு நல்லதுக்கில்லை சொல்லிட்டேன்”என்று கையை நீட்டி மிரட்டினான்.

அவன் கையை நீட்டி மிரட்டவும் இதுக்குமேல இவனுங்கக்கிட்ட அமைதியாக பேசினால் வேலைக்காவாது என்று ராம்சிங்கிடம் கையை நீட்டி“யாருக்கு நல்லதுக்கில்லை எனக்கா? யோவ் பில்லுல அவ்வளவும் போர்ஜரி பண்ணி வைச்சிருக்க. இப்படித்தான் இதுக்கு முன்னாடியும் பண்ணிருக்க. நான் இப்போ வரைக்கும் அக்கவுண்ட்ஸ் மட்டும் பார்த்துக்கிட்டிருந்ததால் வந்ததை மட்டும் வரவு செலவு கணக்குப்பண்ணி எல்லாம் பண்ணிட்டிருந்தேன். இப்பதானே மொத்த பைனான்ஸ் ஹேண்டில் பண்ணும்போது நீ பண்ணின போர்ஜரி தெரிய வருது. உன் பில்லை என்னால் எல்லாம் பாஸ் பண்ணமுடியாது. என்ன வேணும்னாலும் பண்ணிக்க. எம்.டி கிட்டப்போய் பேசுறதா இருந்தாலும் பேசு போ போ இங்கிருந்து இடத்தைக் காலிபண்ணு” என்றுவிட்டு தனது கையில் இருக்கும் பைலில் கவனம் வைத்தான்.

அவன் பேசின விதத்தைக் கேட்டவனுக்கு அப்படி கொலைகாண்டாகி எழுந்த ராம்சிங்“ஏய் மதராஸி எங்க ஊருக்கு வந்து எங்களையே பகைச்சிக்கிறியா? நீ இந்த ஊர்ல வேலை செய்யமுடியாதபடி இன்னைக்கே உன்னை அடிச்சு விரட்டிடுவேன்.மரியாதையா இப்பவே பில் பாஸ் பண்ணக் கையெழுத்துப் போட்டுக்குடு. இதைப்பத்தி வேற யாருக்கிட்டயாவது சொன்னன்னா கொன்றுவேன்”என்று திட்டியவாறே கையில் இருந்தப் பேப்பரைத் தூக்கி சுந்தர் மீது வீசியெறிந்தான்.

அதை தடுத்துப்பிடித்தவன் “ ராம்சிங்கே உனக்கு இவ்வளவுதான் மரியாதை இதுக்குமேலே ஏதாவது பேசினன்னு வையேன் உன்னைத் தூக்கிப்போட்டுச் சங்குலயே மிதிப்பேன். மதராஸிவாலான்னு சொன்னதுக்கே உன்னைப் பொளந்திருக்கணும். மரியாதையா எழுந்துப்போயிடு.நான் எழுந்திருச்சு உன் பக்கத்துல வர்றதுக்குள்ள ஓடிரு இல்லை நல்லியெலும்பை உடைச்சு கையில தந்திருவேன்”என்று இந்தியில் சரளமாகப்பேசி அவனை மிரட்டினான்.

இதுவரைக்கும் அமைதியாகவே இருந்த சுந்தர் திருப்பி எதிர்த்து பேசியதைக் கேட்டுக் ராம்சிங் கொஞ்சம் ஜெர்க்கானவன். இவனெல்லாம் நம்மகிட்ட எதிர்த்துப் பேசுறானா என நினைத்தவன் “க்யா போல்ரே தூ சாலா. எனக்கே பில் பாஸ்பண்ணமாட்டேன்னு சொல்லுறியா.இருடா நான் யாருன்னு காண்பிக்கிறேன்” என்று கீழே விழுந்தப் பேப்பரை எடுத்து அவனுருகில் வந்தவன் கோபத்தில் சுந்தரின் கையைப்பிடித்து இழுத்து இந்தப்பேப்பர்ல நீ கையெழுத்துப் போட்டுத்தான் ஆகணும். எனக்குள்ள பலகோடி ருபாய் சிமெண்ட் உங்கக் கம்பெனிக்கு அனுப்பிருக்கேன்.அதுக்குள்ள எல்லா பணமும் என் கைக்கு வரணும்னா நீ கையெழுத்துப் போட்டுத்தான் ஆகணும். இப்போவே கையெழுத்துப் போடு”என்று மிரட்டினான்.

இதுவரைக்கும் இப்படியான பிரச்சனைகளை பெருசாக அவன் வளரவிட்டதே இல்லை. நமக்கெதுக்கு வம்பென்று அமைதியாகப் போய்விடுவான். இங்கு வந்து இரண்டு வருடங்களில் அவனுக்கு எதுலயுமே தலையிடும் பழக்கம் கிடையாது. தன் வேலையுண்டு தானுண்டு என்றிருப்பான்.

அவரது எம்.டீ குப்தாவிடம் மட்டும் எல்லாத்தையும் சொல்லுவான். அவருக்கும் சுந்தரிடம்தான் எல்லாம் டிஸ்கஸ் பண்ணி செய்யப் பிடிக்கும்.

உண்மையா நேர்மையாக என்ன தோணுதோ அதைச் சொல்லிவிட்டு எந்த பிரதிபலனையும் எநிர்பார்க்காது போய்விடுவான். அந்த கேரக்டர்தான் அவருக்குப் பிடித்திருந்தது.

ஆபிஸ்ல பணம் எடுக்கிறது கமிஷன் அடிக்கிறது இப்படி எதுவுமே கிடையாது. இப்போது தவறான பில்லை செட்டில் பண்ணு கமிஷன் தர்றேன்னு ராம்சிங் சொல்லும்போது வேண்டாம் என்று மறுத்துக் கையெழுத்துப் போடமாட்டேன் என்று சொன்னதால் மிரட்டிக்கொண்டிருக்கிறான்.

சுந்தர் வாழ்க்கையில் அடிபட்டு தனது மனசு வெறுத்து வந்திருக்கிறான். இங்கே வந்து பட்டினியில் வாடி வாழ்க்கையின் அடிமட்ட பாடங்களைப் படித்துவிட்டு இப்போது யாருக்கும் பயப்படாது இருப்பவன் முன்பு வந்து ராம்சிங் பீலா விட்டுட்டு இருந்தால் சுந்தர் சும்மாவா இருப்பான்?

அதுதான் ராம்சிங்கை அப்படியே லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணிக்கொண்டிருக்க அதை சகிக்க முடியாது அவனது கையைப்பிடித்து பில்லில் கையெழுத்துப்போட மிரட்டிக் கொண்டிருந்தான்.

எப்போது ராம்சிங் தனது கையைப்பிடித்து மிரட்ட ஆரம்பித்தானோ இதற்குமேல் பொறுக்கமுடியாது என்று சுந்தர் ராம்சிங்கிடமிருந்து தனது கையை வேகமாக உருவியெடுத்தவன் சுள்ளென்று சுந்தர் அடித்த அடியில் மூக்கில் இரத்தம் ஒழுக அப்படியே தரையில் பொத்தென்று ராம்சிங் விழுந்திருந்தான்.

அவன் விழுந்ததும் வெளியே நின்றுப் பார்த்துக்கொண்டிருந்த ப்யூன் கதவைத் திறந்துக்கொண்டு வந்து “சாப் க்யா கியா?(சார் என்ன செய்திட்டீங்க)”என்று அதிர்ந்து இந்தியில் கேட்டான்.

அவனையும் ஒரு விரலால் எச்சரித்தவன் “இவனோட ஆட்கள் வெளிய நின்னா கூப்பிட்டு இவனை இங்கிருந்துத் தூக்கிட்டுப் போகச்சொல்லு. இதுக்குமேல இவனை என் கேபினுக்குள்ள அனுமதிச்ச உன் மூக்கையும் சேர்த்து உடைச்சிடுவேன். இவன் உனக்குப் பணம் தந்தால் வாங்கிட்டு உன்னோட வைச்சுக்க. என்கிட்டலாம் இப்படிப் பட்ட சில்லறைகளை அனுப்பாத அது எனக்குச் சரி வராது புரியுதா” என்றவன் ராம்சிங்கை அடித்தக் கையை உதறிக்கொண்டு தனது சட்டையை முழங்கைக்கு ஏத்திக்கொண்டு கோபத்தில் வேகமாக வெளியே நடந்துச்சென்றான்.

சுந்தர் ராம்சிங்கையே அடித்துவிட்டான் என்று கேட்டதும் அத்தனைபேரும் அவரவர் கேபினுக்குள் இருந்து வெளியே எட்டிப்பார்த்தனர்.

அதற்குள் ராம்சிங்கின் ஆட்கள் உள்ளே ஓடிவந்திருந்தனர். ராம்சிங்கை தாங்கிப்பிடித்து என்னாச்சு சாப்? இரத்தம் வருது. யாரு அடிச்சது? என்று விசாரித்தனர்.

அவனோ வலியில் மூக்கைப் பிடித்துக்கொண்டு”அவன் என்னைஅடிச்சிட்டான்டா. இந்த மதராஸி நாயைத் தூக்கிப்போட்டு மிதிச்சிட்டு வாங்கடா. இந்த ராம்சிங் யாருன்னு நான் அவனுக்குக் காண்பிக்கணும்” என்று வெளியே போகும் சுந்தரைக் கையைக் காண்பித்து சத்தம்போட்டான்.

அவனது ஆட்கள் கும்பலாக வந்து சுந்தரைச் சுற்றி வளைத்தனர். அதிலிருந்து இரண்டுபேர் ராம்சிங்கை ஹாஸ்பிடலுக்கு போவோம் என்று அழைத்துக் கொண்டு இருந்தனர்.

“இல்லடா இவனை இங்கயே அடிச்சு துவைச்சு நம்ம இடத்துக்குத் தூக்கிட்டுப் போகணும்.அங்க இவனை என் காலைப்பிடிக்க வைக்கணும்.நான் இங்க எவ்வளவு பெரிய ஆளு.இங்க இருக்கிற அத்தனை பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் நான்தான் சிமெண்ட் அனுப்புறேன். எல்லாவன்களும் எனக்குப் பில்லை ஒழுங்கா பாஸ் பண்றானுங்க. ஆனால் இவன் மட்டும்தான் எனக்கு இடர் பண்றான்.இந்த மதராஸிக்கா குத்தாவை எனக்கு அடிமையா வைக்கணும்.இல்லையா அவன் ஊருக்கே அவனைப் பார்சல் பண்ணனும்.இந்தக குப்தாவே என்னைப் பார்த்தால் பயப்படுவான்.இவன் என்ன பிஸ்கோத்து மேனேஜர்தானே நானா அவனான்னு பார்த்துக்கிறேன்” என்று கத்தினான்.

அதற்குள் விசயம் தெரிந்து வெளியே நின்றிருந்த செக்யூரிட்டி முதற்கொண்டு எல்லோரும் வந்துவிட்டனர்.

குப்தாவிற்கும் செய்திப்போய் அவர் உடனே மேலிருந்து படபடவென்று கீழே இறங்கிவந்தார்.

அங்கே தனது சட்டையை ஏத்திவிட்டு கோபத்தைக் அடக்கியவனாக சுந்தர் நின்றிருப்பதைப் பார்த்தவர் வேகமாக அவனருகில் “சுந்தர் என்னாச்சு?என்று அவனிடம் கேட்டார்.

அதற்கு பதில் ராம்சிங்கிடமிருந்து வந்தது”அவனை எதுக்கு கேட்கிறீங்க குப்தாசார். என்னைப் பார்த்தால் தெரியலையா? என் பல்லும் வாயும் உடைஞ்சுது மட்டுமில்லால் மூக்குலிருந்தும் இரத்தம் பொலபொலன்னுக் கொட்டுது பாருங்க.நான்தான் அவன்கிட்ட அடிவாங்கிட்டு நிக்கிறேன்.அவன் கிட்டப்போய் என்னாச்சுன்னு கேட்கறீங்க குப்தா சார்?இந்த டெல்லியில் எவன் கன்ஷ்ட்ரக்ஷன் பிஸினஸ் செய்தாலும் என் தயவு இல்லாமல் நடத்தமுடியாதுன்னு தெரிஞ்சும் உங்க மேனேஜரைவிட்டு என்னை அடிச்சிட்டீங்கல்ல.இனி உங்க தொழில் எப்படி நடக்குதுன்னு நான் பார்த்துக்கிறேன்”என்று குப்தாவையே மிரட்டினேன்.

குப்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது”டேய் யாருடா நீ?

நான் சிமெண்ட் ஆர்டர் பண்ற டீலர்னா அத்தோட நிக்கணும். இங்க வந்து என் ஸ்டாப்கிட்ட என்ன சண்டைப்போட்ட. யாருக்கூடவும் வம்புக்குப் போகாத சுந்தரே உன்னை அடிச்சிருக்காருன்னா நீ என்ன செய்த?”என்று கேள்வியை அவன்பக்கமே திருப்பினார்.

அதற்குள் சுந்தர் நடந்த விசயத்தைச் சொல்லிவிட்டான்.

“ஒரு சாதாரணமான டீலர் நீ! எப்படி என் ஆபிஸுக்கு வந்து என் ஸ்டாப்பை நீ மிரட்டலாம்?” என்று கோபத்தில் அவர் திருப்பி ராம்சிங்கினைப் பிடித்துச் சத்தம் போட்டார்.

இங்குப் பிரச்சனை போய் கொண்டிருக்கிறது என்று சைட்டில் இருந்தவர்களும் இஞ்சினியர்களும் வந்துவிட்டனர்.

அதில் சீஃப் சைட் இஞ்சினியரான குப்தாவின் மகள் பிரீத்தாவும் சீ.இ.ஓவாக இருக்கும் மகன் ஆயுஷும் ஓடிவந்துவிட்டனர்.

அவர்கள் இருவரும் ஒரு பெரிய பேலஸ் கட்டிக் கொண்டிருப்பதால் அதற்கான சைட் விசிட்டிற்காக கிளம்பி சென்று கொண்டிருக்கும்போது தான் ஆபிஸில் பிரச்சனை என்று தகவல் சேர்ந்து வந்ததும் அப்பாவுக்கு ஏதும் பிரச்சினையாகிடுமோ என்று பயந்து ஓடிவந்தனர்.

அவர்களும் வந்து நிற்க ராம்சிங் சவால் விட குப்தா எகிறிப் பேச என்று போய்கொண்டிருந்ததைப் பார்த்து அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டனர்.

இதற்குமேல் நாம் சும்மா இருக்கக்கூடாது என்று இருவரும் ஓடிவந்து குப்தா பக்கம் வரவும் சுந்தர் அப்படியே குப்தாவின் கையைப்பிடித்து “நீங்க உள்ள போங்க சார். இவனுங்கமாதிரி ஏமாத்துக்காரனைப் பார்த்து நீங்க எதுக்கு சார் பயப்படணும்? ”இவன் உங்களையே மிரட்டுறான். போலீஸ்லதான் பிடிச்சுக் குடுக்கணும்” என்று சுந்தர் கோபத்தில் பேசியதை முதன்முறையாகக் கேட்ட பிரீத்தாவுக்கு அப்படியே புல்லரிச்சுப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த மௌனச்சாமியாரா பேசியது!என்று ஆச்சர்யம் அவளுக்கு! அதுதான் அப்படிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் இப்படியெல்லாம் கோபத்தில் பட்டாசாக வெடிப்பானா?இதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது. இங்கே வேலைக்கு வந்து இந்த இரண்டு வருஷத்துல ஒரு பத்து வார்த்தை அவளிடம் சேர்த்து பேசியிருக்க மாட்டான்.

அவன் மேனேஜர்னுதான் பேரு.ஆனால் இன்னும் அவனது கேபினுக்குக்கூட அவள் போனதில்லை. அவனாக குப்தா அறையில் இருக்கும்போது பார்த்து ஏதாவது பேசியிருக்கிறானே தவிர தனியாக பேசியது கூட இல்லை.

இறுக்கமான முகம், தாடி, மீசை என்று சவுத் இந்தியன் லுக்கில் இருக்கும் அவன்மீது அவளுக்கு ஒரு கிரஷ்தான்.

ஆனால் அவனது பார்வை எப்போதும் ஊசியாகத்தான் துளைக்கும். எதுக்கு என்னைப் பார்க்கிற?என்பது போன்றதொரு எதிர்பார்வையாகத்தான் இருக்கும். அதனால் அவன்மேல் எப்போதும் ஒரு சின்ன பிடித்தம் பிரீத்தாவுக்கு உண்டு.

அவள் நடந்து சென்றாலே திரும்பிப் பார்க்கிறவன் இருக்கும் இதே ஆபிஸில் தான் ஒரு கம்பெனியின் முதலாளிப்பொண்ணுன்னுத் தெரிஞ்சும் பேசுறதுக்கோ பழகுறதுக்கோ முயற்சிக்காது அவன்போக்கில் வேலை செய்துக்கொண்டிருப்பதால் ரொம்பப்பிடிக்கும்.

ஆயுஷ் அவனிடம் ஓடிப்போய் “என்ன நடந்துச்சு சுந்தர்?ரொம்பக் கோபப்படாதிங்க அவனுக்கு நிறைய லோக்கல்ல ஆளிருக்காங்க. நாங்க பார்த்துக்கிறோம்.நீங்க அவன்கிட்ட வம்பு வளர்ந்துக்காதிங்க” என்று அவனை சமாதனப்படுத்த முயன்றான்.

“விடுங்க சார் இவனுங்களுக்காகப் பத்துபேரு நின்னா நம்ம ஒத்தையா தனியா நிக்கலாம். எவன்கிட்டயும் பணிஞ்சுப்போகணும்னு இல்ல. என்னால் தப்பான பில்லை பாஸ்பண்ணமுடியாது. அவ்வளவுதான். அதுல எனக்கு கமிஷன் தர்றேன்னு சொன்னாலும் தேவையில்லை. என் சம்பளம் எனக்குப்போதும். நேர்மையாகத்தான் இருப்பேன். எவன் வந்து சொன்னாலும் அந்த புள்ள பாஸ் பண்ண மாட்டேன் அது சரியா பில் கொட்டேஷன் போட்டு எந்த விதத் தில்லுமுல்லு வேலை இல்லாமல் வந்தா மட்டும்தான் கையெழுத்து போட்டுக் கொடுப்பேன். எல்லா பில்லுகளையும் பாஸ் பண்ணி விடுவேன் அதுக்கு மேல யாராவது ரெக்கமண்டேஷன் வந்தால் நான் பண்ணமாட்டேன் எனக்கு அப்படித்தான் பிராடு செய்து வாழணும்னு அவசியமில்லை. பண்ணனும்னா இந்த வேலையை எனக்கு வேண்டாம். இங்கேயிருந்து ரிசைன் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்” என்று தில்லாக நின்றான்.

இந்த நேர்மைக்காக மட்டும்தான் சுந்தரை குப்தா இன்னும் அதிகம் நம்பிக்கையோடு மேனேஜர் போஸ்ட்டில் வைத்திருக்கிறார்.

ஒரு வழியாக குப்தா ராம்சிங்கினை போலீசில் பிடித்துக் கொடுத்து, அவனை அங்கிருந்து வெளியேற்றிவிட்டார்.

இப்போது சுந்தரைத்தான் எல்லாரும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

சுந்தருக்கு இப்போதெல்லாம் எதிலுமே பயம் கிடையாது. அவன் கடந்து வந்த பாதைகள் எல்லாம் அவனை அவ்வளவாக செதுக்கியிருந்தது.

முன்பென்றால் எதற்கெடுத்தாலும் அம்மாதான். எதுவாக இருந்தாலும் மாமாவிடம் தான் சொல்லுவான். அவரிடம் போய்தான் ஆலோசனைக் கேட்பான். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த இரண்டு வருடத்தில் தலைகீழாக மாறி இருந்தது.

இந்த இரண்டு வருடத்தில் தனியாளாக தன்னைத்தானே மெருகேற்றி நிற்கும் சுந்தர் எதற்கும் துணிந்தவன் என்பது அவன் ராம்சிங்கினை எதிர்த்து நிற்பதிலே புரிந்தது.

குப்தா சுந்தரைப் பார்த்து “இதுக்குமேல இவன் நம்மகிட்ட பிஸினஸ் பண்ண வரமாட்டான். ஆனால் நமக்கு தொந்தரவும் குடைச்சலும் குடுக்க வருவான். இவன்கிட்ட இனி நம்ம கவனமாக இருக்கணும்” என்று சுந்தரை எச்சரித்தார்.

“ம்ம்ம் ஓகே சார். ஆனால் இவன்லாம் நம்மளை என்ன செய்திடமுடியும்னு நினைக்கிறீங்க? நம்மளை மாதிரி பிஸினஸ் நடத்துறவங்க இவனுக்குப் பயந்தும் நிறைய மேனேஜர்கள் ஆபிஸ் ஸ்டாப்ஸ் பணத்தை வாங்கிட்டு அவனுக்கு இறங்கிப் போறதுனாலயும்தான் இப்படியான அடாவடி ஆட்கள் சில முக்கியமான பொருள் வியாபரத்தைக் கையில் எடுத்துக்கிட்டு இப்படி ஆட்டம்போடுறானுங்க. நீங்கெல்லாம் உங்க சங்கக் கூட்டதுல சொல்லி இப்படியாட்களைத் தடை பண்ணுங்க. அதுதான் நல்ல தீர்வாக இருக்கும் சார்” என்று முதலாளிக்கே புத்தி சொன்னான்.

அதைக்கேட்டு குப்தா சிரித்தவாறே செய்திடாலாம் சுந்தர் என்று அவனது தோளில் கைப்போட்டவர் ”சத்தியமா உங்களை மாதிரி நேர்மையான ஆட்கள் முதல்லயே என்கூட இருந்திருந்தால் இன்னும் நல்ல வளர்ந்திருப்பேன்.இன்னும் பெரிய ஆளாக மாறியிருப்பேன். ப்ச்ச்.. எங்க எல்லா இடத்துலயும் குள்ளநரிகதானே இருக்காங்க சுந்தர்.தேங்கஸ் சுந்தர்”என்று அவனை பாராட்டினவர் அவனுக்கு இன்க்ரிமெண்ட்டும் கொடுத்திருந்தார்.

ஆயுஷுகுமே அவனை முன்பிருந்தே பிடிக்கும் என்றாலும் ஒரு மேனேஜர்தானே என்ற எண்ணம் இருக்கும்.அது இப்போதும் இருக்கிறது.

என்னதான் இருத்தாலும் கூடுதல் பணமும் வேலையும் கொடுத்தால் வேற இடத்துக்குப் போகத்தான் போறான்னு ஒரு நினைப்பு இப்போதும் இருப்பதால் வெறும் புன்னகையுடன் அங்கிருந்துப் போய்விட்டான்.

“பிரீத்தாதான் கவனமாக இருங்க சுந்தர். இந்த ராம்சிங் மோசமானவன்” என்று அறிவுறுத்தி எச்சரித்தாள்.

அவளது பதட்டத்தைக் கண்களில் கண்டவன் அதைக் கண்டுக்காது குப்தாவிடம் ஒரு சிறு தலையசைப்புடன் சென்றுவிட்டான்.

‘க்கும் இவன் சிரிச்சதே பெருசு.இவனை அப்படியே பிடிச்சு இழுத்துவைச்சு ஒரு முத்தம் கொடுத்து கதற வைக்கணும்’ என்று நினைத்தாள்.

யம்மாடி இந்த நினைப்பு ஆபத்தாச்சே!!!