என் நெஞ்சிலாடும் களபமே-20

களபம்-20
மித்ராவுக்கு அவன் பேசியது வலித்தது”எப்படி மோகனத்தான் இப்படி மாறினாங்க?அதனால்தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னாங்களா? இல்லையே இங்க வந்து இறங்கினதும் ஒரு பொண்ணு வந்து சண்டைப்போட்டுச்சே! அப்போ அவரு கல்யாணத்துக்கு எல்லாம் தயாராகத்தான் இருந்திருக்காங்களோ. என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தான் பிடிக்கலபோல! கடவுளே நான்தான் அத்தானை காதலிக்கிறேன். எனக்கு அந்தக் காதலெல்லாம் கனவுலக்கூட கிடைக்கக்கூடாதுன்னு கடவுள் எழுதி வைச்சிட்டாரு போலயே”என்று நொந்துக் கொண்டாள்.
அழுது முடித்து கண்ணீரைத் துடைத்துவிட்டுத் திரும்பினாள். அங்கே கதவைத்திறந்துக்கொண்டு உள்ளே வந்தான் மோகன்.
அவன் உள்ளே வரும்போதே சிகரெட் ஸ்மெல் கப்பென்று அடித்தது.அவனது கண்கள் சிவந்திருக்கவும் ‘ஏன் அத்தான் இப்படி வந்திருக்காரு?”என்று யோசனையோடு பார்த்தாள்.
அவனோ நேராக உள்ளே சென்று கதவை நங்கென்று அடைத்துக்கொண்டான்.அது அவளது முகத்தில் அறைந்ததுபோன்று இருந்தது.
அப்போதே அவளது மனதில் தோன்றிவிட்டது.இந்த கல்யாண வாழ்க்கை எனக்கு நிரந்தரமில்லை. இதைச்சொல்லி அம்மாவையும் அத்தையையும் கஷ்டப்படுத்தக் கூடாது.
நித்ராவுக்குக் கல்யாணம் முடிஞ்சதும் நம்ம அம்மாக்கூட போய் இருந்துக்கணும். அதுவரைக்கும் நமக்கு ஒரு வேலைத்தேவை. எப்படியாவது வேலையைத்தேடிட்டா இந்தப்பிரச்சனையில் இருந்துக் கொஞ்சம் வெளியேவரலாம்” என்று பலவாறு யோசித்து அப்படியே ஹாலிலே எப்போதும் போல படுத்துத் தூங்கிவிட்டாள்.
ஆனால் பசியில் வயிறு கிய்யமூய்யான்னு சத்தம்போடவும் எழுந்து காபியாவது போடலாம் என்று கிட்சனுக்குள் போனாள்.
அங்கே சத்தமேபோடாது அரைவெளிச்சத்தில் பாலைக் காய்ச்சிக்கொண்டிருந்தான் மோகன்.
ஐயோஓஓ என்று சட்டென்று பயந்து நெஞ்சில் கையைவைத்து நின்றுவிட்டாள்.
அவளது சத்தம்கேட்டு திரும்பிப் பார்த்தவன் ”உனக்கும் சேர்த்துப் பாலைக் காய்ச்சிக்கொண்டு வர்றேன் போய் சோபாவுலயே உட்காரு”என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி நின்றிருந்தான்.
“என்ன இவங்க அப்போ திட்டிட்டு இப்போ பாலைக் காய்ச்சிட்டிருக்காரு.ஸஇந்த அத்தானை எந்த லிஸ்ட்டுல சேர்க்கிறது?” என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே பால் கப்பினை அவள் முன்பு வைத்துவிட்டு அவன் பால்கனிக்குப்போய் அந்தக் குளிரில் நின்றிருந்தான்.
அவளோ பசியில் எதையும் யோசிக்காது பாலை எடுத்துக்குடிக்க அது நட்ஸ் எல்லாம் போட்டு காய்ச்சிய பால் என்று அப்போதுதான் பார்த்தாள்.
இந்த அத்தானுக்கு டேஸ்ட்டெல்லாம் நல்லாதான் இருக்கு.ஆனால் வாயிக்குத்தான் வாஸ்த்து சரியில்லை என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
அதைக்கேட்டவன் “எதுவும் சொன்னியா?” என்ன என்று எட்டிப்பார்த்தான்.
‘க்க்கும் திட்டுறது அடிக்கிறது இதையெல்லாம் செய்துட்டு அப்புறம் ஒன்னுமே தெரியாத நல்லபுள்ளைமாதிரி வந்து கேட்கிறது.இதையெல்லாம் சகிக்க நமக்குத்தான் மானங்கெட்ட மனசு வேணும்போலிருக்கு’ என்றவாறே பாலைக்குடித்து முடித்தவள் எழுந்துப்போய் பால்கப்பினை கழுவி வைத்துவிட்டு வந்தவளுக்கு சிகரெட் ஸ்மெல் வரவும் பால்கனிக்குப்போய் பார்த்தாள்.
பால் காப்பு ஒரு கையிலயும் சிகரெட் ஒரு கையிலயும் வைச்சிருந்தான்.
“எனக்கு இந்த சிகரெட் ஸ்மெல் பிடிக்காது.அதைக் கொஞ்சம் தூரப்போடுறீங்களா அத்தான்” என்று சொன்னாள்.
அதைக்கேட்டதும் ஒருமார்க்கமாகப் பார்த்து கையால் ‘இங்க வான்னு’ அருகில் கூப்பிட்டான்.
“என்னத்தான்”உடனே அருகில் வந்து நின்றாள்.
“உனக்கு சிகெரட் ஸ்மெல் பிடிக்காதா?”
அதைக்கேட்டவள் ம்ம்ம் என்று கைவிரல்களால் மூக்கினை பிடித்து அந்த வாடை பிடிக்கவில்லை என்பதுபோன்று காண்பித்தாள்.
அவ்வளவுதான் பால்கப்பினை திண்டில் வைத்துவிட்டு அடுத்த நொடியே அவளது இடையில் கையைக்கொடுத்து தன்பக்கம் இழுத்தான்.
மித்ராவைத் தன்னோடு சேர்த்துப்பிடித்து சட்டென்று அவளது உதட்டைக் கவ்விப்பிடித்து முத்தம் வைத்து கண்களை மூடிக்கொண்டான்.
அவளுக்கு அந்த சிகரட்டின் வாடை குமட்டிக்கொண்டு வர அவனிடமிருந்து விலக முயன்றாள்.மோகன் அடுத்தக்கையில் இருந்த சிகட்டினை அணைத்து எறிந்துவிட்டு அவளதுத் தலையைத் தனக்கு வாகாகப் பிடித்துவைத்துக்கொண்டான்.
மித்ராவின் மனம் கவர்ந்தவன்; அவளது காதலன்: மோகன் முத்தம்கொடுக்கும்போது பிடிக்காமல் இருக்குமா என்ன?அந்த ஸ்மெல் எல்லாம் இப்போது தெரியவில்லை.அவனது உதட்டுத் தீண்டலில் தன்னை மறந்து நின்றிருந்தாள்.
மோகனும் அந்த மலரவளின் தேன் சிந்தும்இதழில் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தான்.
மோகன் மெதுவாக கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
அவளது முகத்தைப் பார்த்ததும் ஏனோ மனதிற்குள் ஒருவித அமைதியை உணர்ந்தான். அவளது உதட்டிலிருந்து விலகி அவளை நேரிட்டுப் பார்த்தான்.
மித்ராவும் கண்களைத் திறந்து என்ன நடக்கிறது என்று உணரும் முன்னே”இப்போ உன் உதட்டுலயும் சிகரட் ஸ்மெல் அடிக்குமே என்ன பண்ணுவ?”என்று கேட்டான்.
அவளுக்கு ஒருமாதிரியாக இருந்தது.இப்படியா பராக்காவெட்டி மாதிரி ஒரு முத்தத்துல மொத்தமா விழுவ? என தன்னைத்தானே திட்டிக்கொண்டவள்,தனது உதட்டைக்கடித்து கண்களைத் தாழ்த்தினாள்.
அதற்குமேல் அங்கு நிற்க வெட்கம் தடுக்க அவனிடமிருந்து விலகி ஓடிப்போய் உள்ளே ஹாலில் உட்கார்ந்துக்கொண்டாள்.
அவளது இதயம் தாறுமாறாக எகிறிக் குதித்துத் துடித்தது.அவன் திட்டியது அடித்தது எல்லாம் ஏதோ ஜென்மத்தில் நடந்ததுபோன்று பின்னுக்குப்போய்விட்டது.
அவன் கொடுத்த முத்தத்தின் நினைவில் மொத்தமாக மூழ்கினாள்.ஆனாலும் சின்னதாக ஒரு நெருடல் பிரீத்தாவைப் பத்தி இருந்தாலும் அதை அவள் பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை.
அங்கே பால்கனியில் நின்றிருந்த மோகனுக்கு முத்தம் மட்டும் போதாது என்று தோன்றியது. அவனுக்கு இப்போது மித்ராவின் நெருக்கம் தேவையாக இருந்தது.
அவனது மனதின் பயம் வேறாக இருந்தது.அதனால்தான் தடுமாறுகின்றான்.
அவளோடு இணைந்துக்கொடுத்த அந்த முதல் முத்தம் அவனுக்கு மீண்டும் வேண்டும்போல் இருந்தது. அதனால் மெதுவாக பால்கனியில் இருந்து உள்ளே எட்டிப்பார்த்தான்.
ஊரில் இருந்து வந்த நாளில் இருந்தே ஹாலில் உள்ள சோபாவில்தான் அவள் தூங்குகிறாள்.நாலஞ்சு நாளாகிட்டு இன்னும் அங்கதான்படுத்துத் தூங்குறா இதைக்கூட நான் ஏன்னு கேட்கலையே? என்றும் அவன் மனது யோசித்தது.
அவனுக்கே அவன் நிலையை நினைத்து எரிச்சல் வந்தது.
ஒருநேரம் அவளைத் திட்டவும் செய்கிறான்.மறுநேரம் அவளை நினைத்து வருந்தவும் செய்கிறான். ஆகமொத்தம் பைத்தியம் பிடிக்காதக் குறைதான்.
இப்போது மெதுவாக அவளருகில் போய் உட்கார்ந்தான்.அவள் சட்டென்று எழுந்துநின்று “என்னத்தான்?” என்று பயந்துக்கேட்டாள்.
ஒன்னுமில்லை என்று தலையாட்டியவன் அவளது கையைப்பிடித்து தனது தாடிநிறைந்த கன்னத்தில் வைத்தான்.
மித்ராவுக்கோ “இந்த அத்தானுக்கு என்னாச்சு?” என்று பயந்து முழித்தாள்.அவனோ கண்களை மூடிக்கொண்டு யோசனையோடு இருந்தவன் அவளது உள்ளங்கையில் முத்தம் வைத்தான்.
அவனது மீசைக்குத்தி கூச்சமானதும் கையை உருவியெடுத்தாள்.அதில் கோபப்பட்டவன்”ஏன் நான் உன் கையைப் பிடிக்ககூடாதா என்ன? நீ நான் தாலிக்கட்டிக்கூட்டிட்டு வந்திருக்கிற பொண்டாட்டி. நான் கையைமட்டுமில்லை எல்லாத்தையும் தொடுவேன்” என்று கையை நீட்டி தொட்டான். அவன் தொட்ட இடம் மென்மையான இடமாக இருந்தது.
மித்ரா சட்டென்று அவனது கையைத் தடுத்துப்பிடித்துக்கொண்டு ”அத்தாஆஆன் என்னதிது?”என்று அதிர்ந்துக் குழப்பத்தில் கேட்டாள்.
“என்ன என்னதிது?ஏன்டி நான் உன்னைத் தொடக்கூடாதுடி ஹான் தொடக்கூடாதுடி. சொல்லுடி”
“அதுதான் முதல் நாளே தொட்டுத்தானே அடிச்சீங்க. உங்களை யாரு தொடக்கூடாதுன்னு சொன்னா?”
“அப்புறம் எதுக்குடி கையில முத்தம் வைச்சா பிடிக்காதமாதிரி இழுத்த”
“ப்ச்ச் கூச்சமா இருந்துச்சு அத்தான்.எனக்குத் தூக்கம் வருது. நான் தூங்கப்போறேன். நீங்க உங்க ரூமுக்குப் போங்க” என்று சொன்னவள் அங்கயே சரிந்துப்படுத்துக் கண்ணை மூடிக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அவன் போயிருப்பான் என்று கண்ணைத் திறந்துப்பார்த்தாள்.
அங்கே அவளை முறைத்தவாறே அவன் உட்கார்ந்திருந்தான்.
“ஐயோ!”என்று மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.ஆனால் அவனோ அவளருகில் அதே சோபாவில் இடித்துக்கோண்டு அவள்மேல் கையைப் போட்டுக்கொண்டுப் படுத்தான்.
எங்கே கண்ணைத் திறந்தால் ஏதாவது சொல்லுவானோ? இல்லை நம்மை இன்னைக்கு ஒரு வழியாக்கிடுவானோ? என்று கொஞ்சம் நடுக்கத்தோடு படுத்திருந்தாள்.
அவளது நடுக்கத்தை அவனது உடலும் உணர்ந்தது.தனது முகத்தை வைத்து அவளது கழுத்தில் மெதுவாகத் தேய்த்தான்.
‘கடவுளே இந்த அத்தானுக்கு திடீர்னு என்னாச்சு.அத்தை சொன்னாங்கன்னு தாலிகட்டினேன்னு சொன்னாரு ,கோபத்துல அடிச்சாரு இப்போ என்னடான்னா கணவனா அருகில் நெருங்கிறாரே! எந்தக் காதலும் அன்பும் இல்லாமல் இதுமட்டும்னா எனக்கு வேண்டாம்.கடவுளே நான் என்ன பண்ணப்போறனோ?’என்று தெரியாது குழம்பிக் கொண்டிருந்தாள்.
கழுத்திலிருந்து மெல்ல மெல்ல அவளது கன்னத்தில் தனது முகத்தை வைத்துத் தேய்த்தான்.அவனது மீசையும் தாடியும் கன்னத்தில் பட்டுக் கூச்சத்தைக் கொடுக்க நெளிந்து உருண்டுத் திரும்பினாள்.
இருவரது நெஞ்சமும் உரசித்தீப்பிடிக்க பார்வை இரண்டும் ஒன்றை ஒன்று கவ்வியது.அவனது பார்வையிலயே அத்தனை காமமும் அவளை ஆண்டுக் கொள்ளவேண்டும் என்ற வேட்கையும் இருந்தது.
இது சரிவராது என்று அவனது நெஞ்சில் கைவைத்துத் தள்ளிவிட்டு இறங்கலாம் என்று நினைத்தாள்.
அதற்குள்ளாக அவளது கையைப் பிடித்துத் தனது தோள்களில் வைத்து தூக்கிப்பிடித்துக்கொண்டான்.
“என்ன பண்றீங்கத்தான்?விடுங்க விடுங்கத்தான்” என்று சொன்னவளின் சத்தம் காத்துப்போலதான் அவனுக்குக் கேட்டது.
மோகனோ தெளிவாகத்தான் அவளோடு நெருங்கினான்.அதனால் அவள் சொல்லுகிறதைக் கேட்பது போன்று அவனில்லை.
“அத்தான் ப்ளீஸ்த்தான் என்னை விடுங்க எனக்கு வேண்டாம்”
“யாரு வேண்டாம்? நான் வேண்டாமா?”
“ஐயோ இப்போதைக்கு இது வேண்டாம். நமக்குள்ள கொஞ்சம் புரிதல் வரட்டும்த்தான். போங்கத்தான் போய் படுங்க”
“புரிதல் வந்தால்தான் வாழ்வன்னா புரிதல் வரலைன்னா போயிடுவியா?”
“உங்களுக்கு என்னத்தான் வேணும்?”என்று கேட்கும் கிடுக்குப்பிடிக்கேள்வியில் இருந்துத் தப்பிப்பதற்காகக் கேட்டாள்.
அதைக்கேட்டவன் “எனக்கு என்ன வேணுமோ அதைத்தான் எடுத்திட்டிருக்கேன். நீ அமைதியாக இருந்தாலே போதும்” என்றவன் அவளது இடுப்பில் இருந்துக்கையை அப்படியே மேலோக ஏற்றினான்.
“அத்தான் ப்ளீஸ்தான்” என்று அவள் கெஞ்ச அவனோ மிஞ்சினான்.
“ப்ச்ச் விடுங்கத்தான் இது சரியில்லை”என்ற சொல்லிமுடிக்கும்போது அவளது உதட்டை தனது விரல்கொண்டுப் பிடித்து இழுத்தவன் “எனக்கு எல்லாமே சரியாத்தான் தோணுது. பேசியவன் சரியாத்தான் இருக்கு”என்று பேசியவன் அவளை ஒரு மார்க்கமாக ஏறயிறங்கப்பார்த்தான் குடித்திருப்பதே இப்போதான் கண்டுபிடித்தாள்.
“நீங்க நீங்க ரொம்ப குடிப்பீங்களா?”
“என்னத்தை ரொம்பக் குடிப்பீங்களான்னு கேட்கிறன்னு தெளிவாகச் சொல்லு, இப்போதானே பால் குடிச்சேன்”
“நீங்க லிக்கர் குடிப்பீங்களான்னு கேட்டேன்”
“எஸ் ரொம்ப ரொம்பக் குடிப்பேன் பாட்டில் பாட்டிலாக் குடிப்பேன். இப்போதான் ஒருவாரமா கொஞ்சம் குறைச்சிருக்கேன். ஆனால் இன்னைக்கு ஆபிஸ்ல அந்தப் பிரீத்தா என்னைக் கேவலமாகத் திட்டிட்டா அதுக்காகக் குடிச்சேன் அவ்வளவுதான்”
“அவா திட்டினா அவளைத் திருப்பித் திட்டவேண்டியதுதானே குடிச்சா சரியாகுமா?உங்களுக்குக் குடிப்பழக்கம் முன்னாடியிருந்தே இருக்கா?எனக்குப் பிடிக்காதுத்தான்”
“உன்னையும்தான் எனக்குப்பிடிக்காது என்கூட வைச்சிக்கலையா உனக்குப் பிடிக்கலைன்னாலும் கூடவே இரு அதுபோதும்”
அந்தவார்த்தை மீண்டும் அவளைக் காயப்படுத்தியது.அவனைத் தள்ளிவிட்டுவிட்டாள்.
அவன் சோபாவில் இருந்து பொத்தென்று கீழே விழுந்தவன் அவளது கையையும் பிடித்துத் தன்னோடு சேர்த்தே கீழே இழுத்தான்.அவன்மீதே பொத்தென்று கவிழ்ந்தாள்.
மித்ராவும் அவன் மீது விழுந்தாள்.அவளை மோகன் இறுக்கியணைத்தவன்.
அவளது முடியோடு தனது கையைப்போட்டு அங்கும் இங்கும் அசையாதுப் பிடித்துக்கொண்டவன்”ஏன்டி தள்ளிவிட்ட, நீதானே எங்கம்மா சொன்னாங்கன்னு என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட,அப்போ என்னை நீ ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.நான் எப்படி இருந்தாலும் நீ ஏத்துக்கணும்”என்று மூர்க்கமா அவளை அணைத்தான்.
அவனது அந்த இறுகிய அணைப்பில் வலியெடுக்கவும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.
அந்தக்கண்களிலே முத்தம் வைத்தான்.
அவனை புரிந்துக் கொள்ள முடியாது திணறியவளுக்கு ஒரு மாதிரி மூச்சு முட்டுவதுபோலவே இருந்தது.
அவனிடமிருந்து விலகி விடத்தான் எத்தனித்தாள்.
ஆனால் அவனது கரங்களுக்குள்ளும் அணைப்புக்குள்ளும் இருந்தவளால் விடுபட முடியவில்லை.
இப்பொழுது அவளது கன்னங்களை அழுத்திப்பிடித்தவன் உதடுகளைப் பார்த்தான்.
‘ஐயோ அடுத்தும் முத்தமா?முத்தம் கொடுத்தே இந்த அத்தான் என்னை மொத்தமாக காலிபண்ணிடுவாரு போல” என்று அவள் யோசிக்கும் முன்பே தனது உதடுக்கொண்டு அவளது உதட்டினை மெதுவாகத் தீண்டினான்.
அந்தத் தீண்டல் பிடித்திருந்தாலும் அவன் மொத்தமாக தன்னை இப்போதே எடுத்துக் கொள்ளுவான் என்ற பயம்வந்து அதை பிடிக்காததாக மாற்றியிருந்தது.
அவன் உதட்டை உதட்டால் தொடவும் அவள் தனது உதட்டைக் கடித்து உள்பக்கமாக வைத்துக்கொண்டாள்.
அதைப்பார்த்து அவளது செய்கை புரிந்து உதட்டை வளைத்து நக்கலாகச் சிரித்தவன் ”ஏன்டி இப்படி பண்ணினா விட்றுவேன்னா என்ன?ம்ம்ம்”என்று பேசியவாறே அவனது கைகள்தொட்ட இடம் அவளது கண்களை விரியச்செய்து இதழ்களின் தாழ்களைத்திறந்தது.
இப்போது இருவரது கண்களும் கண்களோடு மோத மோகன் எதையுமே அவளிடம் பேசாது அவளின் கழுத்தில் முத்தம் வைத்தான்.
மித்ராவால் அதற்குமேல் அவனைத் தள்ளிவிட முடியவில்லை.அதற்கான மனோபலமும் இல்லை.
ஏனென்றால் அவனோடு வாழ்த்தானே ஏங்கிக் காத்திருந்தாள். அவன் அவளைக் காதலித்தாலும் காதலிக்காவிட்டாலும் என் காதல் அவன்மேல்தானே இருக்கும் என் நினைத்தவளுக்கு அவனை எப்படி இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருந்தது.
அதனால் அவன் கொடுத்த முத்தம் உயிருக்குள் ஊடுருவியது. அப்படியே கண்களை மூடியவளின் துடிக்கும் உதடுகளைப் பார்த்தவனால் இதற்குமேலும் தாங்காது என்று தோன்றவும் அவள்மேல் சரிந்து விரிந்த இதழ்களுக்குள் தனது நாக்கை நுழைத்து அவளது நாக்கோடு கோர்த்துப்பிடித்து கூடலுக்கான அஸ்திவாரம் போட்டான்.
அவனது நாக்கும் உதடுகளும் சுழன்று மித்ராவின் வாயோடு விளையாட கூச்சம் நெட்டித்தள்ள துடித்தவளை தனது கைளால் அடக்கிப்பிடித்துக்கொண்டான்.
மோகனின் மூளைக்குள் இப்போது இருக்கும் நினைப்பெல்லாம் அவளோடு வாழ்ந்திட வேண்டும் என்பதே!
அதனால் அவனது கைகள் அவசர அவசரமாக அவளது உடைகளைப் பிடித்து இழுத்தான்.
அவள் இங்கே வந்து இப்போதுவரைக்கும் சுடிதார்தான் போட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதால் அதை கழட்டுவதற்கு முயன்று தோற்றவன் கொஞ்சம் விலகியவன் ட்ரஸ்ஸ கழற்றி என்று வேகமாக தூக்கினான்.
“அத்தாஆஆஆன்” என்று அவனது கைகைளைப் பிடித்துக் கொண்டாள். அவளது கண்கள் பயத்தையும் பதட்டத்துயும் வெளிப்படுத்தியது. அதைக்கண்டவன் உடனே எழுந்து வெளியே போய்நின்றுக் கொண்டான்.
மோகன மீண்டும் ஒரு சிகரட்டை எடுத்துப் பற்றவைத்து வேகவேகமாக இழுத்தான். அந்தநேரத்தில் தன்னைதானே நிதானப்படுத்த அதிமாகப் போராடிக்கொண்டிருந்தான்.