என் நெஞ்சிலாடும் களபமே-19

களபம்-19
மித்ரா மோகனோடு பேசவேயில்லை.அவனும் ஒருவாரம் அவளோடு பேசாதுதான் இருந்தான்.
இருவருக்குள்ளும் எந்தவிதமான ம்ம் என்ற பேச்சும் இல்லை ஹ்ஹும் என்ற முணங்கலும் இல்லை.
அவன் காலையில் எழுந்து வேலைக்குப்போவான், அவளும் அவன் சென்றதும் வீட்டில் இருக்கும் வேலைகளை முடித்து வைத்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனையோடு தான் ஒருவாரத்தையும் ஓட்டினாள்.
மோகன் எப்போதும் போல மாலை ஆனதும் தனியாகச் சென்று தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறது என்று வழக்கம்போல தொடங்கியிருந்தான்.
அதைப்பார்த்தும் அவனிடம் ஏன் அத்தான்னும் கேட்கலை எதற்கு அத்தான்னும் கேட்காது அவளுண்டு அவள் தனிமையுண்டு என்றிருந்துவிடுவாள்.
அவனுக்கே இப்போது ஒரு குற்றவுணரச்சி தோன்றியிருந்தது. அவள் என்ஙற செய்கிறாள்? என்று அவள் படுத்திருக்கும் அந்த குஷனில் போய் எட்டிப்பார்ப்பான்.
இரண்டு நாள் ஒன்றும் செய்யாது இருந்தவள் மூன்றாவது நாள் அவன் காலையில் கிளம்பும்போதே அவன் பார்க்கும்படியாகவே அவனது பர்ஸை திறந்து காசு எவ்வளவு வேணும் என்று எண்ணி எடுத்துக்கொண்டாள்.
அதைப்பார்த்தவன் கண்கள் இடுங்கப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாது ஆபிஸ் கிளம்பிப் போய்விட்டான்.
மாலை வரும்போது அவளது வேலைக்கான எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து வரைந்துக்கொண்டிருந்தாள்.
அவளையே கொஞ்சநேரம் அங்குமிங்கும் நடந்தவாறே பார்த்திருந்தான்.அவளோ அவனைக் கண்டுக்கொள்ளவேயில்லை.
அவனுக்கு பிரீத்தா வந்து சட்டையைப்பிடிச்சு சண்டைப் போட்டதுனாலதான் இவ அதைப்புரிந்துக்கொண்டு கோபத்துல இருக்காளா? இல்லை நான் அடித்தக் கோபத்தில் இருக்காளா? என்று தெரியாமலயே சுத்தினான்.
ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு தனித்தனி தீவுகள்போன்று இருப்பது என்னவோபோல இருந்தது.
கணவன் மனைவியாக வாழ்க்கையைத் தொடங்காவிட்டாலும் ஒரே வீட்டில் இருந்தும் இப்படி இருக்கிறது சரியில்லையே என்று நினைத்தாலும் அவளுடன் போய் பேசாது இருந்தான்.
அதுவும் இல்லாமல் ஆபிஸிலும் பிரீத்தாவை பார்க்கவும் முடியாது பேசவும் முடியாது போனது அவனுக்கு அதுவும் ஒரு விதத்தில் மனவுளைச்சலைக் கொடுத்தது.
அவனுக்கு பிரீத்தா பேசாது போகிறதுக்கூட பிரச்சனையில்லை. ஆனால் தன்னிடமிருந்து ஒரு விளக்கத்தைக்கூட அவள்கேட்கவில்லை என்ற ஆதங்கம் வேறு அவனுக்கு இருந்தது.
அது அவனை இன்னும் மனதில் அதிக அரக்கனாக மாத்தியிருந்தது.அதை வெளிப்படுத்தத் தெரியாது மூர்க்கம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருக்க அதையும் மித்ராவிடத்தில்தான் காண்பித்தான்.
இங்கு பிரீத்தாவோ யாரிடமும் அதிகம் பேசாது தன்னைத்தனே எல்லா இடத்திலிருந்தும் தன்னை ஒதுக்கி நிறுத்திக்கொண்டாள்.
ஆபிஸிற்கும் அதிகம் வருவதில்லை. ஆயுஷ் மெதுவாக அவளிடம் பேச்சுக்கொடுத்தான் ”பிரீத்து ஏன் ஒருமாதிரி இருக்க?”
“நானா? ஒருமாதிரியா? இல்லையே பையா.ஏன் கேட்கிற?”
“சும்மா கேட்டேன்”
“பையா என்கிட்ட எதுவும் பேசணுமா?”
“இல்லை பிரீத்து.நீ வொர்க்ல கான்ஸ்ட்ரேஷன் எதுவுமே பண்ணலையா அதுதான் கேட்டேன்”
“அப்படியெல்லாம் இல்லையே வொர்க் ஒழுங்கா போகுதே பையா”
“அப்போ ஓகே”
“பையா”
“என்ன பிரீத்து”
“நான் கொஞ்சநாள் லீவு எடுத்துக்கலாமா?ஸகொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் தேவைப்படுது.ஸநான் வெளிநாடு எங்கேயாவது போயிட்டு வரட்டுமா?”
“இந்த ப்ராஜெக்ட் இன்னும் இரண்டு மாசத்துல முடிஞ்சிடும் அப்புறம் நானே உன்கூட சேர்ந்து வர்றேன்டா”என்று பேசிவிட்டு குப்தாவிடம் போனான்.
“என்ன பேட்டா எதுவும் முக்கியமான விசயமா பேசணுமா?”
“ஆமா டாடீ”
“சொல்லு”
“பிரீத்துக்கு கல்யாணத்துக்கு பாருங்க டாடீ. இப்போதைக்குப் பார்த்தால் நல்லாயிருக்கும்னு தோணுது. நீங்க என்ன நினைக்கிறீங்க டாடீ”
நானும் அவளுக்கு வரன் பார்த்து வைச்சிருக்கேன்.ஆனால்இவ்வளவு சீக்கிரம் முடிக்கணும்னு நினைக்கலை. உன் ஒன்னுவிட்ட அத்தை அதுதான் ஜெய்பூர் அத்தை. அவன் மகன் ஜெர்மன்ல இருக்கான்.அங்கயே பிஸினஸ் வைச்சிருக்கான்.பிரீத்தாவையும் கூட்டிப்போயிடுவான். உங்கம்மாகிட்ட மட்டும்தான் சொல்லிருந்தேன்.இப்போ உன்கிட்டயும் சொல்லுறேன்”
“ஓஓ சூப்பர் டாடி அவன் பிரீத்தாவுக்கு நல்ல மேட்ச்.இன்னும் இரண்டுமாசத்துல இப்போ போற அந்த பெரிய பிராஜெக்ட் முடிஞ்சிடும் அப்புறம் அவளுக்கு உடனே கல்யாணத்தை முடிக்கிறமாதிரி பாருங்க”
“உனக்கும் அவள் கல்யாணத்தோடு சேர்ந்து முடிச்சிடுவோமா ஆயுஷ்” என்று நேரடியாகவே கேட்டார்.
“ஐயோ டாடீ நமக்கு இப்போ எல்லாம் கல்யாணம் வேண்டாம்.எனக்கு அது செட்டாகாது.கொஞ்சநாளா போகட்டும் பார்க்கலாம்.முதல்ல பிஸினெஸ்ல பெஸ்ட் குடுக்கணும்”
“அதுக்கும்ஜகல்யாணம் பண்ணாமல் இருக்கிறதுக்கும் என்ன ஆயுஷ் சம்பந்தம்?”
“உங்களுக்குச் சொன்னா புரியாது டாடீ.மைண்ட் அப்புறம் கமிட்மெண்டுக்குள்ள போயிடும்.பிஸினெஸ் சரியாக வராது”
“சரி சரி உன் விருப்பம்.நீ பிரீத்தாக்கிட்ட பேசிடுறியா?இல்ல நான் பேசிடட்டுமா?”
“நீங்களே பேசிடுங்க டாடீ.அப்புறம் என்கிட்டன்னா ஏதாவது சொல்லுவா.நீங்க அப்படின்னா சம்மதிப்பா”
“ஓகே டன்”
குப்தா அடுத்தநாளே பிரீத்தாவை அழைத்து அவளுக்கு கல்யாணம் பேசிருப்பதை சொன்னதும் என்ன நினைத்தாளோ படபடவென்று அழுதவள் அவரது தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
ஐயோ பிரீத்து பேட்டி என்னாச்சு? எதுக்கு அழற என்றுகேட்டதும் அப்படியே அமைதியானாள்.
“ நான் கல்யாணம் பண்ணிக்கவிரும்பல டாடீ” என்றதும் கொஞ்சம் ஜெர்க்கானவர் ஆயுஷ் எதுக்கு பிரீத்தாவுக்குக் வரன் பார்க்கலையான்னு திடீர்னு கேட்டான் என்று யோசித்தார்.
‘ஏதோ நடந்திருக்கு. அதுதான் பிரீத்தா கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறா,ஆயுஷ் அவளது கல்யாணத்தைப் பத்தி அதிகமாக யோசிக்கிறான். ஒரு தகப்பனாக முழித்துக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று முடிவெடுத்துவிட்டார்.
உடனே மெதுவாக மகளிடம் பேச்சுக்கொடுத்தார்” பிரீத்தா பேட்டி உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது எங்களுடையக் கடமை.அதை நாங்க சரியா செய்யணும்னு நினைக்கிறோம்.நீ வேற யாரையாவது விரும்பிறன்னாக் கூட சொல்லு பேசிப்பார்க்கிறோம். நமக்கு ஒத்துவந்தால் கட்டிவைக்கிறேன் ”என்று சூசகமாகக் கேட்டார்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அழுகை மீண்டும் வெடித்து வருவதுபோன்று இருக்கவும் “உங்களுக்கு என்ன விருப்பமோ அதுபடி செய்யுங்க டாடீ” என்றுவிட்டு தனது அறைக்குள் போய் கத்தி கதறி அழுதாள்.
குப்தா மகளையே நினைத்துக் கொண்டிருந்தார்.ஏதோ காதல் தோல்வியில் மகள்ஜஇருக்கிறாள் போல.அதுதான் ஆயுஷ் நம்மிடம் வந்து பேசியிருக்கிறான்.அதை தோண்டிக்கிளறாமல் அவளுக்குக் கல்யாணத்தை பண்ணி வைச்சிடுவோம் என்று முடிவே எடுத்துவிட்டார்.
பிரீத்தாவுக்கு இப்போது சுந்தர்மேலதான் கோபம் வந்தது.
“பிராடு என்னை ஏமாத்திட்டான். என்னைவிட்டுட்டு இன்னொருத்தியை எப்படிக் கல்யாணம் பண்ணினான்? அவன் எனக்கு வேண்டாம் அவன் எனக்கு வேண்டாம்” என்று அறிவு அவளை சாந்தப்படுத்தியது.
ஆனால் மனமோ அவன்தான் வேண்டும் என்று அடம்பிடித்தது. அவளது மனதிற்குள் சுந்தர் இன்னும் இருக்கிறான்தான் ஆனாலும் அவன்மேலுள்ள கோபம் வருத்தமும் இன்னும் இருக்கிறது.
அவனுக்குக் கல்யாணமாகிட்டு என்று தெரிந்தும் மனம் அவனுக்காக ஏங்குகிறது என்றதும் இன்னும் அவன் மேல் அப்படியொரு கோபம் வந்தது.
உடனே கிளம்பி ஆபிஸிற்குச் சென்றாள்.அங்கே மோகன் கேபினுக்குள் ஏதோ பிரச்சனை போய்கொண்டிருந்தது.
என்னவென்று விசாரிக்க உள்ளே போனாள்.அதில் பைனான்ஸ் டிபார்ட்மென்ட்ல ட்ரான்சேக்க்ஷன் ஏதோ மாத்திப் பண்ணிருக்காங்க. அது பிரச்சனையாகி இப்போ வந்து மோகன் கிட்ட வந்திருக்கு. அது மோகன் ஊருக்குப் போயிருத்த சமயப் நடந்திருக்கு.அவன் வந்துதான் அதைக் கண்டுபிடித்து விசாரித்துக்கொண்டிருந்தான்.
பிரீத்தா இப்போது அவனது கேபினுக்குள் அனுமதி இல்லாமலே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் தப்புசெய்தவன் உட்பட எல்லோரும் பயந்து நின்றிருந்தனர்.
“என்ன பிரச்சனைப் போயிட்டிருக்கு மிஸ்டர் மோகன்? ஏதோ இஸ்யூஸ் போகுதுன்னுதான் பார்க்க வந்தேன். என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க.நான் பேசிக்கிறேன்” என்று கேட்டாள்.
அவள் சுந்தர்ர்னு கூப்பிடுவாள் என்று நினைத்திருக்க மிஸ்டர் மோகன் என்றானதும் அந்த அழைப்பின் தொனியும் அவள் அழைத்த விதமுமே அவன் அவளிடமிருந்து தூர நிறுத்திவிட்டாள் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.
அதுவே அவனுக்கு உள்ளுக்குள் கோபம் கணனன்றது.அதை வெளிப்படுத்தாது என்ன நடந்தது என்று சொன்னான்.
அவ்வளவுதான் புது பிரீத்தாவை அன்று அவன் பார்த்தான்.அவனது காதலியான பிரீத்தா அது இல்லை.அது முதலாளி பிரீத்தா குப்தாவாக பார்த்தான்.
“என்ன மிஸ்டர் மோகன் உங்க நேர்மையை நாங்க பார்க்கணும்னு ராம்சிங் விசயத்துல நாடகமாடிட்டு இப்போ உங்க உண்மை முகத்தைக் காண்பிங்கிறீங்களா என்ன? இப்படி தப்பா டிரான்சாக்ஸன் பண்ணிட்டு உங்க கமிஷன அந்த கம்பெனிக்காரனுங்கக்கிட்ட வாங்கிடுவீங்களா என்ன? உங்களுக்கு கீழே இருக்கிற ஸ்டாப்புக்கு எவ்வளவு கமிஷன் குடுக்கிறீங்க?ஸபைனான்ஸ் அண்ட் அக்கவுண்ட் இரண்டுமே உங்கக்கிட்டதானே இருக்கு.ஸஉங்களை மீறி இவ்வளவு பெரிய ஆபிஸ்ல இப்படி தப்பான ட்ரான்சாக்ஷ்ன் நடக்கும்?”என்று சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தாள்.
அது இலட்சக்கணக்கானத் தொகை என்பதால் அதற்கான பதிலை மோகன்தான் சொல்லணும். வேறவழியின்றி பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.
அவள் திட்டி முடித்ததும் பொறுமையாக “இதை நானே சால்வ் பண்ணிடுறேன் மேடம்.இன்னைக்குள்ள சால்வ் பண்ணிடுறேன்.எங்க பக்கம்தான் தப்பு” என்று தன்மையாகப் பேசினான்.
“உடனே இன்னைக்குள்ள இதை சால்வ் பண்ணலைன்னா உங்களைப் போலீஸ் பிடிச்சுக்குப்பேன்.ஜாக்கிரதை” என்று எச்சரித்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
பிரீத்தா போலீஸ்ல பிடிச்சிக்குடுத்திடுவேன்னு சொன்னது அவனது ஈகோவைத் தட்டிவிட்டிருந்தது.உடனே உட்கார்ந்து சம்பந்தபட்டவர்களிடம் பேசி அந்த பணத்தை எப்படி வாங்கி கொடுக்க வேண்டியங்களுக்குக் குடுக்கலாம் என்று மாலை வரைக்கும் போராடி அதை முடித்துவிட்டுத் தான் நிமிர்ந்தான்.
அங்கே ஆயுஷும் குப்தாவும் வந்தவர்கள் நடந்ததைக் கேட்டார்கள்.
“அவனோ எல்லாம் சரி பண்ணியாச்சு சார்.உங்க பிரீத்தா மேடம்கிட்ட சொல்லிடுங்க.நான் நேர்மையாக நடிக்கவும் இல்லை, பணத்தை கமிஷனா எடுக்கவுமில்லை. அப்புறம் இந்த பிரச்சனையைக் கண்டுபிடித்ததும் சரிபண்ணினது மட்டும்தான் நான்.இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த பணப்பரிவரத்தனை நடந்தது எல்லாம் நான் லீவுல இருந்தபோது நடந்திருக்கு,அப்போ அது யாருன்னு கண்டுபிடிக்க உங்க மகள்கிட்டச் சொல்லுங்க.நான் வேணும்னா வேலையை ரிசைன் பண்ணிடுறேன்.எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை”என்று தெளிவாகச் சொல்லிவிட்டான்.
இதுக்குமேல் இந்த ஆபிஸ் வேலைப் பார்த்தால் தனக்கான மரியாதையும் சுயமும் போய்விடும் என்று யோசித்துதான் ரிசைன் பண்றேன் என்று சொன்னான்.
அதற்குள் குப்தா “என்ன மோகன் இதுக்குப்போய் யாராவது ரிசைன் பண்ணுவாங்களா என்ன?பிரீத்தா பேசினதுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றவர் அவனை அங்கயே வேலையைத் தொடரச்சொன்னார்.
மோகனும் சரியென்று தலையாட்டிவிட்டுத் திரும்ப பிரீத்தா அங்கே நின்றிருந்தாள்.அவளது கண்களும் சிவந்திருந்தது.
அவள் அழுதிருக்கிறாள் என்று புரிந்தது.தன்னைக் கோபத்தில் திட்டிவிட்டுத் தனியாகப்போய் அழுதிருப்பாள் என்று புரிந்தது.அதுவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது.
தன்னால் அவள் வேதனைப்படுகிறாளே என்று நொந்துப்போனான்.இதுக்கு என்ன தீர்வு என்று தெரியாது வீடு வந்தவனுக்கு அங்கே பாவமாக நின்றிருந்த மித்ராவைப் பார்த்து தன்னைத்தானே அடித்துக் கொள்ளும் அளவுக்குக் கோபம் வந்தது.
அவன் வந்ததும் சமையல் எல்லாம் வேகமாக முடித்து சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு அவனுக்காக காத்திருந்தாள்.
அவன் வரவில்லை என்றதும் பசியில் எடுத்து வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தவளின் முன்பு வந்தவன்”ஒரு பத்து நிமிஷம்கூட எனக்காக வெயிட் பண்ணமுடியாதா என்ன? அதுக்குள்ள கொட்டிக்கணுமா ? ஏன் எனக்காக வெயிட் பண்ணினால் உன் கொழுப்புக் குறைஞ்சிடுமா என்ன?” என்று வேண்டுமென்றே திட்டினான்.
இப்போ இரண்டு நாள்தான் அவளே கொஞ்சமாக சாப்பிடுகிறாள். கன்னத்தின் வலியெல்லாம் குறைஞ்சு கொஞ்சம் இயல்புக்குத் திரும்பியிருந்தாள். அதையும் ஒரு வார்த்தையில் கெடுத்து விட்டுட்டான்.
மித்ரா வாயிற்குக்கொண்டுபோன சாப்பாட்டை அப்படியே தட்டில் போட்டவள்”உங்களுக்கு என்ன பிரச்சனை அத்தான். நான் சாப்பிடுறதா?இல்லை உங்களைக் கவனிக்காததா?”
“இரண்டும்தான்”
“உங்களுக்குக் கைக்கால் நல்லாதானே இருக்கு போட்டுச் சாப்பிடுங்க.அப்புறம் இந்த கொழுப்பு கொட்டிக்கிறது இப்படியான வார்த்தை வந்துச்சுன்னா அப்புறம் அது நல்லாயிருக்காது. தாலிக்கட்டியிருக்கீங்கன்னு இந்த வார்த்தையெல்லாம் நான் கேட்கவேண்டிய அவசியமில்லை. நானா கெஞ்சினேன் என்கழுத்துல தாலிக்கட்டுன்னு. யாரு கேட்டாங்களோ அவங்களை திட்டமுடியுமா உங்களால்?அப்போ நான்மட்டும் என்ன இளைச்சவளா?” என்று பேசினாலும் அந்த சாப்பாட்டை மறுபடியும் தொடுவதற்கு மனம் வரவில்லை அவன் முன்னாடியே தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு போய்விட்டாள்!
இதை அவனுமே எதிர்பார்க்கவில்லை.அவனுமே சாப்பிடாது எழுந்து வெளியே சென்றுவிட்டான்.
அவனது மனம் பிரீத்தாவுக்கும் மித்ராவுக்கும் இடையில் இப்போது நின்றாடியது.