என் நெஞ்சிலாடும் களபமே-32

களபம்-32
மோகன் மன்னிப்புக் கேட்டதே பெரிய விசயம்.அவனைப் பொறுத்தவரை பேசியதோ செய்ததோ முடிந்துப்போன ஒன்று அதற்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கமாட்டான்.இத்தனை நாளில் அவளிடம் எவ்வளவு சண்டைப்போட்டு வார்த்தைகளை வீசியிருக்கிறான்.
அந்த வார்த்தைகள் அவளுக்கு வலிக்குமென்று தெரிந்தும் பேசியிருக்கிறான்.ஆனாலும் அவளது கண்ணீருக்கோ வலிக்கோ அவன் பதில் சொன்னதேயில்லை.
இன்று இப்போதுதான் முதன்முறையாக விளக்கம் சொன்னதோடு மன்னிப்பும் கேட்டுவிட்டுப் போகிறான்.
ஆனால் இன்னும் அவன்மேல் இருந்தக் கோபம் போகவில்லை. அப்படியே அமைதியாக தூங்காது உட்கார்ந்திருந்தாள்.
அவனும் உருண்டுப் புரண்டுப் படுத்துவிட்டு அவளோடு சேர்ந்து எழுந்து உட்கார்ந்தான்.
அவன் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டு என்னாச்சு என்று முழித்தாள்.
அதைப் பார்த்தவன் “என்ன என்னாச்சு? இரண்டு மாசமா உன்னைக் கட்டிப்பிடிச்சுட்டுத் தானே தூங்கினேன்.வா வந்துப்படு” என்று அவளை இழுத்து தனது கைவளைவில் வைத்துக்கொண்டு படுத்தவன் கண்ணை மூடித் தூங்கப்போனான்.
“எனக்கு அந்த பரதேசி சீனுக்கூட கல்யாணம் ஆகியிருந்தா பிரீத்தாவைத்தானே கல்யாணம் பண்ணிருப்பீங்க.அவ்வளவு அழகான மெழுகு பொம்மையை விட்டுட்டு என்னையக் கல்யாணம் பண்ணினதுக்காக இங்க வந்தும் வருத்தப்பட்டிருப்பீங்கள்ல? அதனால்தான் என்கிட்ட அப்படி நடத்துக்கிட்டீங்களா? அதேதான் இப்பவும் நினைக்கிறீங்க இல்ல?அப்புறம் எதுக்கு என்கூட வாழ்ந்தீங்க.தாலிக்கட்டிட்டோம்னா.அப்படி பச்சாதாபமெல்லாம் பட்டு என்கூட வாழ்ந்ததுக்குப் பதிலாக ஒரு பாட்டில் விசம் வாங்கி என் சாப்பாட்டுல ஊத்தி என்னை நீங்களேகொன்னிருக்களாம்”என்னு அழுத்தமான வார்த்தைகளை அசராது பிரயோகித்தாள்.
மோகன் அவள் பேசுவதை கேட்டு அப்படியே அதிர்ந்து அவளை பார்த்தவன் “உன்னால் எப்படி இப்படி பேச முடியுது? கொஞ்சமாவது அறிவு இருக்கா? அப்படி அவதான் வேணும் நினைச்சு இருந்தா உன் கழுத்துல தாலி கட்டி இருக்க மாட்டேன் புரியுதா?அவள் மேல் ஒரு ஆசை விருப்பம் இருந்தது உண்மை.அவளுக்கு என்மேல் காதல்.அந்தக்காதலைக்கூட நான் ஏத்துக்கலை என்பதுதான் உண்மை.உனக்குவேற கல்யாணம் நிச்சயம் பண்ணறதுக்கு அருண் கிட்டதான் சொன்னேன்.நான் வரமாட்டேன்னு சொல்லுன்னு. அதைத்தான் அவன் உன்கிட்டச் சொன்னேன்.முதல்ல இருந்தே வேண்டாம்னு தோணுச்சு அதுதான் என் காதல்தோல்விக்கு அப்புறமும் சொன்னேன். நான் ஒரு இடத்துல ஏமாந்துட்டேன் காதலில் தோல்வி அடைஞ்சிட்டேன் அதனால் எனக்கு வாழ்க்கை இல்லை என்று நினைத்து உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது பெரிய பாவம். அதனால்தான் கல்யாணம் பண்ணிக்காமல் நீ வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணி நல்லா இருக்கணும்னு நினைச்சேன். அதுதான் அருண்கிட்ட சொல்லி உன் கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணச் சொன்னேன்.எல்லாம் நல்லபடியா முடியும்னுதான் இருந்தேன். ஆனால் ஒப்படி ஒரு ட்விஸ்ட் கடவுள் வைப்பாருன்னு கனவுலக்கூட நினைக்கலையே”
‘நீங்கதான் சரியான நேரத்துல அங்க வந்துட்டீங்களே.நாங்காள உங்களைக் கூப்டோம்”
அதுசரி இப்படி எங்கம்மாவுக்கும் ஹார்ட் பிராப்ளம் வந்து, அதனால் நான் ஊருக்கவந்து,உன் கல்யாணத்துல பிரச்சனை வந்து,உங்கப்பாவுக்கு அட்டாக் வந்து,எங்கம்மா என் கையில தாலியைத் தந்து மொத்தமாக உன் கழுத்துல தாலிகட்ட நின்னுன்னு எல்லாம் மாறிப்போச்சு. அதனால்தான் எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்பட்டது அவ்வளவுதான். அதுக்காக பிரீத்தாவையும் உன்னையும் நான் என்னைக்குமே கம்பேர் பண்ணி நினைச்சதுக்கூட இல்லை.உன்கூட வாழ ஆரம்பிசசதுக்கூட இனி இந்த ஜென்மத்துல நீ மட்டும்தான் என் வாழ்க்கைன்னு நினைச்சதுனால தான். அப்படி வாழ ஆரம்பிச்சிட்டா எவா பின்னாடியும் என் மனசு போகாதுன்னு என்னை நானே சமாதானப்படுத்தி கட்டுப்படுத்திக்க அது தேவையா இருந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழத்தான் நான் ஆசைப்பட்டேன். அது மனதளவிலும் அப்படித்தான் இருக்கணும்னு நினைச்சேன். இரண்டிலும் ஜெயிச்சிட்டேன்.நீயாக எதையாவது கற்பனைப் பண்ணிக்காத.வேணும்னா நீ ஒன்னு பண்ணு கொஞ்சமா விசத்தை வாங்கி என் சாப்பாட்டுல ஊத்திடு இப்படியான கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவேண்டாம் பாரு. உன்கூட வாழும்போது என்னை உனக்குப் புரிஞ்சுக்க முடியலையா என்ன?அப்போ உன் காதல் என்னக் காதல்?”என்று இப்போது கோபத்தை ஒதுக்கிவைத்துவிட்டு பொறுமையாக பேசியவனுக்கு அந்த கடைசி வார்த்தை கொஞ்சம் வலி கலந்துதான் வந்தது.
அதைக் கேட்டவள் தனது நெஞ்சில் கை வைத்து “ஐயோ நம்ம நம்ம ஒன்னு சொன்னா இவரு ஏதோ ஒரு ஒன்றும் சொல்ல்றாரே”அவன் சொன்ன வார்த்தையின் பாரம் தாங்காதுஎன்று நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
அவளது நெஞ்சிலிருந்து கையை எடுத்துவிட்டவன் “உனக்கு வலிக்கிற மாதிரி தானே எனக்கு வலிக்கும். விஷத்தை வைச்சு என்னனை கொன்னுடுங்கன்னு நீ சொன்னா மட்டும் எனக்கு வலிக்காதா? எனக்கும் வலிக்கும்.
இதுக்கு மேல இந்த விஷயத்திற்காக இனி நான் எந்த விளக்கமும் உனக்கு கொடுக்க மாட்டேன். நீ என்கிட்ட எதுவும் விளக்கமும் கேட்காத.எதுவுமே பேசாத.
இது நம்ம வாழ்க்கை. நம்ம இரண்டுபேரு மட்டுமே வாழப்போற வாழ்க்கை. அதை முடிவு செய்யுறது நீயும் நானும் மட்டும்தான். அதனால் வேறு எந்த விளக்கமும் இனி தருவதற்கு நான் தயாரா இல்லை புரிஞ்சுதா? என்று கேட்டுவிட்டு தூங்குவதற்காக அப்படியே தனது கண்களை மூடினான்.
ஆனால் அவன் தூங்கவில்லை என்பது அவனது கருவிழிகள் அசைவதை வைத்து புரிந்து கொண்டாள். இதற்கு மேல் இவனிடம் பேசினால் கோபப்படுவான், இல்லையா பிரச்சனைகள் வேறமாதிரி வெடிக்கும் என்று அமைதியாக அவளும் கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் மித்ரா எழும்போது மணி பதினொன்றாக இருந்தது. தனது பக்கத்தில் படுத்திருந்த மோகனை தேடினாள் அவன் வீட்டில் எங்கும் இல்லை அப்பொழுதுதான் யோசித்து ஆபீஸுக்கு போயிருப்பாங்க என நினைத்து மெதுவாக வந்து தனத்தின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“ஏன்டி தூங்குறதுதான் தூங்குற மருமகனுக்கு எல்லாம் செய்துக்குடுத்துட்டுத் தூங்கக்கூடாதா?பாவம் காலையிலயே நீ எழும்பி வருவ வருவன்னு காத்திருந்துட்டுப் போறாரு.இந்தா இதுல உனக்கும் சேர்த்து ஊருக்குப்போக டிக்கெட் போட்டிருக்காராம்.ஊருக்கு எங்கக்கூடவே வருவியாம். அப்புறமா குழந்தைப் பிறந்தப்பிறகு நீ இங்க வருவியாம்.உனக்குள்ளது எல்லாத்தையும் எடுத்து வை.எப்படியும் ஒரு வருஷமாவது அங்கதானே இருக்கணும்”என்று மகளைக் கூட்டிட்டுப் போகும் சந்தோசத்தில் சொன்னார்.
“எப்போ இந்த டிக்கெட்டைத் தந்தாங்க?”என்று சந்தேகத்தில் கேட்டாள்.
“முதல்ல ஆபிஸுக்குப் போயிட்டாரு.அப்புறம் டிக்கெட் எடுத்துட்டு வந்துத் திரும்பத் தந்துட்டுப் போறாரு”
அப்படியா என்று கேட்டவள் ருக்குமணியைப் பார்த்தாள்.அவர் ஒன்றுமே பேசாது கண்டுக்காமல் இருந்தார்.
நான் இவ்வளவு தூரம் சொல்லியும் இரண்டு பேரும் பிரிஞ்சி இருக்கணும்னு முடிவெடுத்தால் அதுக்கப்புறம் உங்க வாழ்க்கையை நீங்கதான் சரிபண்ணிக்கணும் என்று அமைதியாக இருந்துவிட்டார்.
அவளுக்கு மோகன் டிக்கெட் எடுத்துட்டு வந்ததெல்லாம் பெருசாகத் தெரியவில. ஆனால் தனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுட்டு வந்திருக்கான் என்றதும்தான் ஒரு மாதிரியாக உணர்ந்தாள்.
ஒருவேளை இதுக்கப்புறம் என்னை உண்மையாகவே இந்த அத்தான் வெறுத்திருவாரோ?என்றும் யோசனைப்போனது.ஆனாலும் வெறுத்தால் வெறுக்கட்டுமே! எனக்குத்தான் அவங்க வேண்டாமே என்றும் மூளை யோசித்தது.
அவளது யோசனை பலமாக இருக்க அவளருகில் வந்து உட்கார்ந்த நித்ரா அவளது கையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
“என்னடி திடீர்னு கையைப்பிடிச்சுட்டு உட்கார்ந்திருக்க என்ன விசயம்?”
ஒன்ன்க்ஷுமில்லக்கா சும்மா போசத்தான் என்று பால்கனி பக்கம் தனியாக போனாள்.அவள் பின்னாடியே மித்ராவும் போய் நின்றவளை திரும்பி பாசமாகப் பார்த்தாள்.
“என்னடி இப்படி பார்க்கிற?ஏதாவது சொல்லணுமா?”
“இல்ல நீ எதுக்கு அத்தான்கிட்ட பேசாமல் இருக்கன்னுலாம் எனக்குத் தெரியாது.ஆனால் என் அக்காவை எனக்குத் தெரியும்.அவளால் மோகன் அத்தானை பிரிந்தெல்லாம் இருக்க முடியாது.அதுவும் அவள் எதிர்பார்த்தக் கல்யாண வாழ்க்கையை கையிலிருந்துத் தூக்கியெறிஞ்சுட்டு வரமாட்டாள்னு நினைச்சேன்.ஆனால் இப்போ அது பொய்யாகிடும்னு தோணுது”
“நித்து”
“எங்க அக்காவைப் பத்தி எனக்கு ஏ டு இஸட் தெரியும். எங்க அக்காவுக்கு மோகனத்தான் தான் உயிர். அவர் என்ன செய்தாலும் மன்னித்து இருக்கக்கூடிய காதல் அவகிட்ட இருக்கு.அந்தக் காதல்தான் மோகனத்தானை அவளோடு வாழ வைத்திருக்கும்னும் எனக்கு தெரியும். அதே பழைய மித்ராவா அத்தை மகன் மோகனை எந்த எதிர்பார்ப்பும் இன்றி காதலித்தாளென்றால் அவள் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் இப்போ அவளுக்கு அத்தான்மேல பேராசை வந்துட்டு. அத்தான்கிட்ட நிறைய எதிர்பார்த்து ஏமாந்து நிக்கிறா”என்று உண்மை நிலையைப் புட்டுப்புட்டு வைத்தாள்.
‘நித்ரா சொல்லுவதும் உண்மைதானே!இப்போ இருக்கிற கோபத்துல அத்தான்கிட்ட இருந்து பிரிச்சிப்போயிடணும்னு தோணுது. ஆனால் அவங்கக்கிட்டயிருந்துப் பிரிஞ்சுப்போயிட்டா அதுவே எனக்கு மரணவலியாக இருக்குமே! அத்தனைக் காதலை அவங்கமேல வைச்சிருக்கனே!இப்போ நான் என்ன பண்றது?’ என்று பரிதாபமாக முழித்தாள்.
அவளது தோளில் கைவைத்து அழுத்தி அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தவள் “உன் கோபத்தை அத்தான்கிட்ட காண்பி.உங்களுக்குள்ள பிரச்சனைன்னு மட்டும் தெரியுது, உன் முகமே அதைக் காட்டிக்கொடுக்குது. அம்மா மசக்கையினால சோர்ந்திருக்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. அதில்லன்னு எனக்குத் தெரியும்”
அவள் அப்படி சொன்னவுடனே படபடவென்று கண்களில் கண்ணீர் வந்துவிட்டது நித்ராவின் தோளில் சாய்ந்து அழுதுவிட்டாள்.
யாரிடமாவது பகிர்ந்துக்கணும்னு இருந்தவளுக்கு தங்கையே தோள்கொடுத்து தோழியாக வந்ததும் எல்லாத்தையும் முக்கியமா பிரீத்தாவை அடித்ததும் மோகன் அவளை திருப்பி அடித்ததையும்தான் பெரிய விசயமாகச் சொன்னாள்.
மித்ரா எல்லாம் சொல்லி முடிக்கட்டும் என்று அதை பொறுமையாகவும் அமைதியாகவும் கேட்டுக் கொண்டிருந்த நித்ரா” அதுக்கு பதிலாகத்தான் நீ நல்ல வசமா அத்தானை அடிச்சிருக்கியே அதுவே அவருக்கு போதும் நீ கொடுத்த அடியையே வாங்கிட்டு அமைதியா இருக்காருன்னா பொண்டாட்டி மேல எவ்வளவு காதல் வைத்திருக்கிறாரு பாரு. எதுக்குபோய் இவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க நீ” என அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதுபோல் பேசினாள்.
அத்தான் ஒன்னும் ப்ரீத்தாவுக்காக உன்னை ஒன்னு அடிச்சிருக்க மாட்டாரு. எங்க ப்ரீத்தாவும் உன்னை எதிர்த்து அடிச்சிடுவாளோ? இல்லை அவளது குடும்பத்தார் வந்து உன்னை ஏதோ பண்ணிடுவாங்களோ?என்று நினைத்து ஆளுக்கு முன்னாடியே உனக்கு தண்டனை கொடுத்து உன்னை காப்பாத்திருக்காரு அக்கா. இது தெரியாமல் அத்தான்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கியே. உண்மையாகவே இது தான் நடந்திருக்கும்.போய் அத்தானிடம் கேளு” என்று அவள் யோசிக்காத கோணத்தில் யோசித்து அவள் மனதில் இருக்கும் கோபத்தை நீர்த்துப் போக செய்திருந்தாள் நித்ரா!
ஓஹோ இப்படியும் இருக்குமோ என்று யோசிக்கத் தொடங்கிய மித்ராவுக்கு இப்போது ஊருக்குப் போகும் எண்ணமெல்லாம் மறைந்துப்போயிற்று.
அன்று இரவு மோகன் மித்ராவோடு எதுவுமே பேசாது,பக்கத்தில் படுக்காது அவளிடமிருந்து விலகி பால்கனிலபோய் படுத்துக் கொண்டான்.
அவனுக்கு மித்ராவின்மேல் வருத்தமாக இருந்தது இவ்வளவு சொல்லியும் என்மேல் கோபப்பட்டு ஊருக்கு போறாளே.அதை எப்படி நான் தாங்கிக் கொள்வேன் என்று பிரிவு துயரில் உழன்று கொண்டிருந்தான்.
அடுத்தநாள் காலையில் ஏர்போர்ட் போக எல்லாரும் தயாராகி வந்தனர்.
மித்ராவும் அம்மாவோடும் தங்கையோடு ஆளுக்கு முன்னாடிக் கிளம்பி காருக்குள் போய் உட்கார்ந்துக்கொண்டாள்.
ருக்குமணிக்கு மித்ரா மீது கோபம்.அதனால் அவளோடு பேசாது வந்தார்.
ஏர்போர்ட் வந்ததும் போர்டிங் போட நித்ராவும் தனமும் உள்ளே சென்றனர்.மித்ரா வெளியே நிற்க ருக்குமணி அவளை ஏறயிறங்கப்பார்த்துவிட்டு நீ வரலை?என்று சந்தேகமாகக் கேட்டார்.
“ஹான் அதெப்படி வருவேன் என் புருஷர் இங்க இருக்கும்போது அவரை விட்டுட்டு எப்படி உங்கக்கூட வருவேன்.பிரசவம் பார்க்க எல்லாரும் இங்க வாங்க” என்றவள் டாட்டா காட்டி வழியனுப்பி வைத்தாள்
ருக்குமணிக்கு இப்போதான் மனசுக் குளிர்ந்தது.அந்த சந்தோசத்தில் மித்ரா கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
மித்ரா சொன்னதைக் கேட்ட மோகனுக்கும் உள்ளுக்குள் குளுகுளுன்னு இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனால் அதை வெளிக்காட்டாது அமைதியாக நிற்க மித்ரா அவனிடம் வந்தவள்”யோவ் புருஷ் இதுக்குமேல எல்லாம் இறங்கி வந்து அத்தான் பொத்தான்னுலாம் கொஞ்ச முடியாது.நான் இங்கயே நிக்கவா இல்லை உள்ளபோய் சென்னைப் போகவா”என்று எகிறிப்பேசிக் கேட்டாள்.
“ஹான் அப்படியே ஓடிப்போயிடு. உனக்கும் சேர்த்துத்தானே டிக்கெட் போட்டேன்.போ போ உங்கம்பா மடியிலப்போய் படுத்துக்க. வந்துட்டா புருஷான்னு போடி”என்று அவன் வாய்தான் திட்டியது.
அவனது கையோ அவள் கையிலிருந்த விமான டிக்கெடை வாங்கிக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தது.
மித்ராவுக்கு சிரிப்பு வந்ததும் வேகமாக அவனைக் கட்டிக்கொண்டாள்.
ச்சை ஒரு கெத்துக் காண்பிக்க விடுறியா?உடனே வந்து கட்டிப்பிடிச்சு கவுத்திடுறது என்று வாய் ஒன்று சொன்னாலும் கையோ அவளை வாரியணைத்துக்க கட்டிக்கொண்டது!!!