என் நெஞ்சிலாடும் களபமே-35

களபம்-35
மூன்று மாதம் கழித்து…
மோகன் மித்ரா தம்பதியினருக்கு ஆணும் பெண்ணுமாக இரட்டை குழந்தைகள் சரியாக ஒன்பதாவது மாதம் முடியவும் பிறந்து விட்டார்கள்.
இரட்டைக் குழந்தைகள் என்றதும் ருக்குமணிக்கு தலைகால் புரியவில்லை .ஏற்கனவே ஸ்கேன்லயே தெரிந்திருந்தாலும் நேரில் பார்த்து கைகளில் இரு குழந்தைகளை ஏந்தியதும் சந்தோஷத்தில் சுற்றி வந்தவர் மகன் வீட்டிலே டேரா போட்டு விட்டார்.
தனத்துக்குமே அங்கே யாரும் இல்லை என்பதால் நித்ராவோட மகளுக்கு பிரசவம் பார்க்க வந்தவர் இங்கயேதங்கிவிட்டார்.
அந்த வீடு இப்போது அவர்களுக்குப் போதாது..அந்த வீட்டையும் விலைக்கு வாங்க முடியாது. அதனால் அதே பில்டிங்கில் எதிர் பிளாட்டை வாங்கிவிட்டான்.
இருந்த வீட்டை ஆயுஷிடம் ஒப்படைத்து விட்டான்.
நித்ராவுக்கு மோகன் ஆயுஷிடம் வேலைக்குச் சொல்லியிருந்தான். ஏற்கனவே மித்ரா வேலையைவிட்டு வந்தபின்பு அந்த இடம் காலியாகத்தான் இருக்கிறது என்பதால் வேலைக்கு நேரடியாகவே வரச் சொல்லிவிட்டான்.
அதனால் இனி நித்ராவும் இங்கேதான் இருப்பாள்
மோகன்தான் இப்போது பாவம் மனைவியின் அருகில் சென்று நலம் விசாரிக்கமட்டுமே முடிகிறது என்று ஏங்கிப்போய் இருந்தான்.
இந்தப்பெரியவங்களுக்காவது கொஞ்சமாவது புத்திவேண்டாமா? புருஷன் பொண்டாட்டி தனியாக பேசுவாங்களேன்னு பிரைவசி தர்றாங்களா பாரு என்று கோபத்தில் இருந்தான்.
ராசா உன் வேகம் உன் பொண்டாட்டிக்கும் மட்டும்தான் தெரியும் ஆனால் நீ அவ மேல வைச்சிருக்கக் காதல் ஊருக்கே தெரியும்,
உன்னையும் மித்ராவையும் தனியாக பேசவிட்டாளே அடுத்தமாசமே அவள் வாந்தியெடுத்து அடுத்த பிரசவத்துக்கு தயராகி தயாராக்கிடுவன்னும் தெரியும்.
அதனால்தான் பெருசுங்க இரண்டும் இங்கயே டேரா போட்டுட்டாங்க. எப்படியும் உனக்கு ஆறு மாசத்துக்கு அவ பக்கத்துலே போக முடியாது மோகன் என்று விதி சத்தமாக சிரித்தது.
குழந்தைங்களுக்கு ஒருமாதம் முடிந்ததும் ஊருக்கு வந்து பேரு வைக்கிற பங்கஷன் வைத்தார்கள்.
அவர்கள் இருவருமே இரண்டுக் குடும்பத்துக்கும் சேர்த்து செல்லப்பிள்ளையாகியிருந்தனர்.
இப்போது குழந்தைங்க இரண்டுபேரும் தூங்கிவிட மெதுவாக மித்ராவைத் தனது கையில் தூக்கியவன் பால்கனிக்குப் போய் நின்றான்.
“என்னத்தான் இப்படி திருடன் மாதிரி தூக்கிட்டு வந்திருக்கீங்க?”
“என்னடி செய்ய? என் பீலிங்க்ஸ் உனக்குமா புரியமாட்டேங்குது? நீயில்லாமல் முடியலடி.ப்ளீஸ்டி என் தங்கம்ல ஒரு முத்தமாவது தாடி” என்று கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“ஐயோ அத்தான் மூணுமாசம் முடியறவரைக்கும் உங்கப்பக்கத்துலயே வரக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க”
“அத்தைக்கு ஏன்டி இந்த வில்லத்தனம்”
“எங்கம்மா இல்லத்தான் உங்கம்மா சொல்லிருக்காங்க”
“உங்கம்மாக்கூட சேர்ந்து இந்த ருக்குவும் எனக்கு வில்லியாகிட்டாங்களாடி”
“அப்போ எங்கம்மா உங்களுக்கு வில்லியா?போங்கத்தான்” என்று அவனைத் தள்ளிவிட்டாள்.
“இதுதான் இப்ப ரொம்ப முக்கியமான விஷயமாடி? வாடி கட்டி பிடிச்சுக்கலாம்”என்று கட்டிக்கொண்டவன் தனது மூன்று மாத தவத்தையும் ஒற்றை முத்தத்தில் தீர்த்துக் கொண்டிருந்தான்.
அவளது உடல் முன்பைவிடவும் இப்போது அவனுக்கு கட்டிப்பிடிக்க வசதியாக இருந்தது.
“செமக்கட்டையாகிட்டடி! யப்பா என்னா அழகா இருக்கடி! ஐயோ தளதளன்னு தக்காளி மாதிரி இருக்கஅப்படியே கடிச்சுத் திங்கணும்போல இருக்க”என்று கன்னத்தைக் கடித்து வைத்தான்.
அடுத்து அவள் போட்டிருந்த நைட்டியின் பட்டன்களை கழட்ட “யோவ் அத்தான் உன் வேலையை காட்டுற பார்த்தீங்களா. இதுக்குத்தான் இரண்டு பெரியவங்களும் உங்களை என் பக்கத்துலயே விடுறதில்லை.சும்மா இருங்கத்தான்.இன்னும் என் பக்கத்துல வர ஆறுமாசமாகுமாம்”
“என்னடி சொல்லுற?அதெல்லாம் நமக்குத் தாங்காது. நான் இப்பவே உன்னைத் தொடுவேன்” என்று இழுத்து இறுக்கிக் கட்டிக்கொண்டான்.
அதற்குள் மகள் அழவும் மகனையும் சேர்த்து எழுப்பிடுவாள் என்று ருக்குமணி “மித்ரா பையன் அழறான் பாரு” என்று குரல் கொடுக்க அவனிடமிருந்து யாருக்கும் தெரியாமல் ஓடினாள்.
அவள் போவதைப் பார்த்து மோகன் ஏங்கி நின்றான்!
எப்படியும் அடுத்து ஒருமாதமோ இரண்டுமாதமோ இவனால் பொண்டாட்டி இல்லாம எல்லாம் இருக்கமுடியாது.
திருட்டுக்காதல் செய்தாவது மனைவியோடு சேர்ந்திடுவான்.
அடுத்தும் இரண்டா மூன்றா என்று தெரியாது தடுமாறப்போகிறான் இந்த மோகனசுந்தரம்!
வாழ்கவளமுடன்.