என் நெஞ்சிலாடும் களபமே-27

என் நெஞ்சிலாடும் களபமே-27

களபம்-27

தன் மீது படுத்திருந்த மித்ராவின் முதுகை வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தான் மோகன்.

அவளும்”நம்ம ஏதாவது பேசினால் ஒன்னு இந்த அத்தான் திட்டுவாங்க, இல்லைன்னா எழுந்துப்போயிடுவாங்க. அதுக்கு நம்ம பேசாம இப்படியே படுத்து இருக்கலாம்” என்று அவன் முதுகை வருடிக் கொடுக்க கொடுக்க அப்படியே கண்களை மூடி சுகத்தில் படுத்திருந்தாள்.

“நாளைக்கு காலையில கிளம்பி ரெடியா இரு நானே உன்னை ஆபிஸிக்கு கூட்டிட்டு போறேன். ஆபிஸிலிருந்து வரும்போதும் நானே உன்னை கூட்டிட்டு வந்துடறேன். நீ தனியா பஸ்லயும் ட்ரைன்லயும் போய் அலைய வேண்டிய அவசியமில்லை. நான் சொல்றது புரியுதா?” என்று கேட்டான். 

“நான்தான் வேலைக்கு வர மாட்டேன்னு சொன்னனே அந்த கம்பெனி எனக்கு வேண்டாம். அந்த வெள்ளை கொழுக்கட்டை மூஞ்ச பாக்க எனக்கு பிடிக்கல. நான் வேற கம்பெனிக்கு போறேன்” என்று கொஞ்சம் அவன் மீதிருந்த பயம் போனதும் தெனாவெட்டில் சத்தமாக பேசினாள்.

அவளது பின் கழுத்தில் வேகமாக கையை வைத்து அழுத்திப் பிடித்தவன் “இங்கப் பாரு இந்த சவுண்ட் விடுற வேலையெல்லாம் இங்க இருக்க கூடாது சரியா. நான் என்ன சொல்றேன்னா அதைத்தான் கேட்கணும் புரியுதா? என்று ஒரு அதிரடியாகப் பேசினான்.

மித்ரா அப்படியே பயந்து அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் கலங்க அவனிடமிருந்து இறங்கமுயன்றாள்.

எதுக்கு இப்போ கீழே இறங்குற? சின்ன பிள்ளை மாதிரி பிடிவாதம் எல்லாம் பிடிக்காத. அதுதான் நான் சொல்லிட்டேன்ல நாளைக்கே வேலைக்கு வந்து ஜாயின் பண்ணு.உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.இவ்வளவு செலவுப் பண்ணிப் படிச்சிட்டு சும்மா வீட்ல இருப்பியா? உன் படிப்பை பயன்படுத்த மாட்டியா? உங்கப்பா எதுக்கு இவ்வளவு படிக்க வச்சாரு. என் மகள் நல்ல வேலை இருக்கணும்; நல்ல சம்பாதிக்கணும்; நல்லா இருக்கணும்னு நினைச்சு தானே படிக்க வச்சாரு. ஒழுங்கா வேலைக்கு வா.. இதை விட பெஸ்ட் கம்பெனி இங்க டெல்லியில் கிடையாது.அவ்வளவுதான் சொல்லிட்டேன்”

அவளோ தனது புறங்கையால் கண்ணீரைத் துடைத்தாள். அவன் புரியுதா என்று கேட்டதற்கு ஆமா, இல்லை என்று பதில் எதுவும் சொல்லாது அமைதியாக இருந்தாள்.

“நான் சொன்னது புரிஞ்சுதா? புரியலையா? தலையவாது ஆட்டலாம்ல.இப்படி மங்குனி மாதிரி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு பிடிக்குது பிடிக்கல என்கிறதெல்லாம் இங்க காரியமே இல்லை. நான் என்ன சொல்றேன்னா அதுதான் நீ கேட்கணும். என்னை நம்பித்தானே இங்கு வந்த. அப்போ நான் சொல்றதை கேளு”

ம்ம் என்று இப்போது தலையாட்டி சரியென்று சம்மதம் சொன்னாள்.

ஆனால் அவளோ மனதிற்குள்ளாக ‘என்னை இவ்வளவு தூரம் கட்டாயப்படுத்தி இந்த வேலைக்கு போக சொல்றீங்கள்ல. இருங்கத்தான் ஒரே மாசத்துல அந்த வேலையில் இருந்து அவங்களே வெளியே போன்னு தள்ளித் துரத்திற அளவுக்கு நான் வைக்கல என் பேரு மித்ரா இல்ல’என்று சபதம் எடுத்துக் கொண்டாள்.

“அது நான் ஒன்னு சொல்றேன்னா அதுக்கும் காரணம் இருக்கும். நான் வாழ்க்கையில அடிப்பட்டு சில காரியங்களில் இருந்து பாடம் படிச்சதுனாலதான் உனக்கும் இதைச் சொல்றேன். உனக்கு இன்னும் இந்த உலகம் தெரியலை. சங்கரன மாமா உன்னை உன் தங்கச்சியையும் வீட்டுக்குள்ளே வைச்சுப் பொத்திப் பொத்தி வளர்த்துட்டார்.உங்களுக்கு வெளி உலகத்துல எது முக்கியம் எது முக்கியமில்லன்னு இன்னும் தெரியாமல் வளர்த்து வச்சிருக்கார். அப்படியெல்லாம் நீ நினைக்கிறமாதிரி வாழமுடியாது. வாழ்க்கையில சில இடங்களில் தணிந்துதான் ஆகணும்”என்று அவனுக்கு கிடைத்த பாடத்தை வைத்து மனைவிக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். 

‘அடேய் மோகனசுந்தரம் பொண்டாட்டிக்கு சொல்லிக் கொடுக்கிற படமாடா இது? அதுவும் கல்யாணம் ஆகி ஒரு மாசத்துல இந்த படமாடா நடத்துவாங்க? நீ எல்லாம் வேற லெவல் போ’ என்று மித்ரா அவனை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

அவன் பேசிமுடித்ததும் அவளது கழுத்திலிருந்து மெதுவாக கையை எடுத்தவன். அவளது முடிக்குள் விரலை நுழைத்து அப்படியே பிடித்து வருடி கொடுத்தான்.

அவன் வருடி கொடுக்கக் கொடுக்க அந்த சுகத்தில் கண்களை லேசா மூடியவள் “இந்த அத்தான் ஏன் இப்படி சிலநேரம் மனசாட்சியே இல்லாமல் நடந்துக்கிறார்? இவருக்கிட்ட எப்போ எப்படி நான் எப்படி நடந்துக்கணும்னு தெரியலையே.எப்போ பேசணும் எப்போ பேசக் கூடாதுன்னு எனக்கே தெரியலையே! இப்பதான் வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னதற்கு கழுத்தைப் பிடித்தாங்க. அந்தப்பிரச்சனை முடிஞ்சதும் இப்போ என்னுடைய தலையை வருடி கொடுக்கிறாங்க. இது எது உண்மை? எது பொய்? கடவுளே! ஏழுமலை வெங்கடேசா! என்ன இந்த ஆளவந்தான்‌ இந்த அத்தான்கிட்ட இருந்து என்னைக் காப்பாற்று’ என்றும் முணுமுணுத்தவாறே வேண்டிக் கொண்டாள்.

அவள் முணுமுணுப்பதை கேட்டவன் “என்ன நீயா மனசுக்குள்ள பேசிட்டிருக்க. என்னை திட்டிக்கிட்டு இருக்கியா? திட்டுறதா இருந்தா முகத்துக்கு நேராகவே அட மடச் சாம்பிராணி நீ சொல்றதெல்லாம் நான் கேட்க மாட்டேன் சொல்லு. நான் அதுக்கு பதில் சொல்றேன் என்று கோபத்தில் கத்தினான்.

“ஐயா! அத்தான் நான் அப்படியெல்லாம் உங்களைத் திட்டல, அப்படி திட்டவும் மாட்டேன்.நான் வேலைக்கு போறேன்ல அதுக்காகச் சாமிகிட்ட வேண்டிக்கிட்டு இருந்தேன்” என்று சன்னமானக் குரலில் சொல்லவும் நம்பிட்டேன் என்றவன் இப்பொழுது மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.

அப்பொழுது மித்ராவையும் கீழே இறக்கி விடாது தன் தொடையில் உட்காரவைத்து அவளை நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான்.

இவன் என்ன கோபத்தை காட்டினாலும் மொத்தமாகக் காட்டுறேன். அன்பையும் காட்டினாலும் மொத்தமாகக் கொட்டுறான்.இது மட்டும்தான் புரிய மாட்டேங்குது என்று கண்களைத் திருத்திருவென்று உருட்டி தனது முட்டக்கண்ணால் முழித்தாள்.

அதைப் பார்த்தவன் அவளது கண்களில் முத்தம் வைத்தான்.அவளது உதடுகளை அப்படியே தனது பெரு விரலால் இழுத்து அழுத்திவிட்டான்.

“உன்னாலதான் இன்னைக்கு ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டேன். அதனால் எனக்கு நேரம் போக மாட்டேங்குது. உன்கூட தான் விளையாடுக்கிட்டு இருக்கணும். அடுத்த ரவுண்டு போகலாமா?” என்று கண்களை சிமிட்டி கேட்டான். 

அவளுக்கும் அவனோடான நேரத்தை இப்படி செலவழிப்பது மிகவும் பிடித்திருந்தாலும்,எங்க நம்ம சரின்னு சொன்னால் தப்பாக நினைத்து விடுவானோ என நினைத்தவள் வேண்டாம் என்று தலையை இரு பக்கமும் ஆட்டிச்சொன்னாள்.

அதைப் பார்த்ததும் சத்தமாக சிரித்தான். அந்த சிரிப்பில் அப்படியே லயித்துப்போனவள் அவனையே கண்ணெடுக்காது பார்த்து சைட்டடித்துக் கொண்டிருந்தாள் மித்ரா!

அதை ரசித்தவன் சிரித்தவாறே “என்னடி இப்படிப் பாக்குற? உன் பார்வையே என்னை திங்கிறமாதிரி இருக்கு. அவ்வளவு அழகாவா நான் சிரிக்கிறது இருக்கு” என்று அவளிடம் கேட்டான்.

“ஆமாத்தான் நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க. ஆனா நீங்க இதுவரைக்கும் நீங்க இப்படி சிரிச்சுப் பேசினதை நான் பார்த்ததே இல்லை. என்னையும் அப்பாவையும் கண்டதும் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுந்துட்டு அப்படியே வெளியே போயிடுவீங்க. அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிட்டு இங்கக் கூட்டிட்டு வந்ததுக்கு அப்புறமும் நீங்க இப்படி வாய் விட்டு சிரிச்சதே இல்லையா! அதுதான் நீங்க சிரிக்கிற அழகைப் பார்த்து ரசிச்சுட்டிருந்தேன்” என்றவளுக்கு ஒரு பயமும் இருந்தது.நம்ம பேசினதுக்கு எங்கே ஏதும் சொல்லி விடுவானா? என்ன பயந்தக் குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

“உண்மையாவா!அப்போ நான் பேசி சிரிக்கிறது உன் பார்வைக்கு அவ்ளோ அழகாவா இருக்குது.அதுவும் நீ ரசிக்கிற மாதிரியா இருக்கு?” என்று கேட்டவன் மீண்டும் சத்தமாக சிரித்தான்.

அவனது சிரிப்பில் லயித்தவள் அப்படியே மோகனின் நெஞ்சில் அழகான ஒரு முத்தம் வைத்தாள்.

ஆக அப்போ அதிகமா சிரிச்சாலும் சத்தமா சிரிச்சாலும் உன்கிட்ட இருந்து முத்தத்தை வாங்கிடலாம் அப்படித்தானே! மீண்டும் மீண்டும் கேட்டுச் சிரித்தான்.

அவனது ஒவ்வொரு சிரிப்புக்கும் ஒவ்வொரு முத்தம் வைத்தாள்.

அவனது நெஞ்சில் ஒன்று தாடையில் ஒன்று கண்ணில் ஒன்று என்று முத்தம் வைத்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

அவளது ஒவ்வொரு முத்தத்திலும் அவன் மீதான காதல் நேசம்‌ என்று மொத்தமாக வெளிப்பட்டது.

அவளின் கண்களையே கவனித்திருந்தவனுக்கு அடுத்தும் அவளோடு ஒன்றாகக் கூடியிருக்க வேண்டும் என்று உடல் உந்த, உள்ளம் ஏங்க, அப்படியே அவளை ஆரத்தழுவிக்கொண்டான்.

அவளது காதில் மறுபடியும் “முதல்ல இருந்துத் தொடங்குவோமா?”என்று கேட்டவன் அவள் பதில் சொல்லுவதற்கு முன்பே தொடங்கிவிட்டான்.

அவளது காதுக்கடித்து தொடங்கியவன் அவளது காதிலயே நாக்கினால் தொட்டு நகர்ந்தான். அந்த நகர்தல் அப்படியே பின் முதுகின் வழியாகப் பயணித்தது.

மித்ராவால் அவனை எட்டிப்பிடிக்க முடியாது நெளிந்தவள் “அத்தாஆஆஆன் என்ன பண்றீங்க?”என்று கூச்சத்தில் நெளிந்தாள்.

“உனக்கு அப்போ என் உதட்டின் ஈரம் தெரியலையா?இல்லை என் கைகள் செய்கிறது உணரலையா? என்ன செய்றீங்கன்னு கேட்கிற? அப்போ இன்னும் அழுத்தம் கூட்டிக்கிறேன்டி”என்று பின்பக்கம் இருந்து கைகளை முன்பக்கமாக கைகளுக்குள்ளாக போட்டுப் பட்டென்று பிடித்து அவளின் மென்மேடுகளை இரு கைகளாலும் விரல்களால் பதமாக நீவினான்.

அவ்வளவுதான் அவளது அத்தான் என்ன செய்தாலும் மயங்குவாள்.இப்போது இந்த பெண் சேவையை இதமா பதமா செய்யும்போது மயங்கமாட்டாளா என்ன!

தனது உதட்டைக்கடித்துக்கொண்டு கண்களை மூடியவாறே அவனது கைகளில் சரிந்தவளைத் தூக்கினான். அப்படியே முன்பக்கமாக தனது மடியில் இறுத்திக்கொண்டான்.

அவளோ வில்லாக வளைந்து அவனது காலில் நிமிர்ந்துப்படுத்துக்கொள்ள, தொடையிரண்டும் அவனது கைகளில் பாந்தமாக மாட்டிக்கொண்டது.

மோகன் குனிந்து வளைந்து நெளிந்த வில்லாகிய வயிற்றில் காற்றை ஊதினான்.அதில் உடல்சிலிர்க்கவும் மீண்டுமா எழுந்து அவனது தோளில் கைப்போட்டு உட்கார்ந்தவளின் மாம்பூ குலைகள் குலுங்கி தன்னிருப்பை அவனுக்குக் காட்டியது.

அவனது இளமையின் பசிக்கு அவளையே மொத்தமாக எடுத்து விழுங்கிடுவான் அந்தளவுக்கு அவனது வேகம் இருந்தது.

அன்பின் பசியோடு இருந்தவனுக்கு மொத்தமாக அது கிடைத்ததும் திக்குமுக்காடிப்போனான்.

தலைகால் புரியாது திக்கித்திணறி எல்லாவழிகளிலும் அவளைத் தின்றுதீர்க்க முயன்றான்.அதற்கு அவளும் ஈடுகொடுத்து வளைந்துக்கொடுத்தாள்.

இருகைகளாலும் இறுக்கிப்பிடித்து அணைத்து மோகமுத்தத்தின் சத்தம் கேட்கின்றளவுக்கு மித்ராவின் செம்மேனியில் ஊர்ந்துப்போனான்.

ஒவ்வொரு அணுவிலும் அவளோடு இயைந்து இருக்க நினைத்து செயல்படுத்திக்கொண்டிருந்தான்.

அழகான புல்லாங்குழலில் தனது மூச்சுக்காற்றினை செலுத்தி இசைக்க முயலும் கலைஞன் போல் அவளது உந்திச்சுழியில் நாதம் வாசித்தான்.

அதற்கேற்றாற்போன்று அவளது மத்தளங்களும் தாளம்போட்டன.

தொடைகள் இரண்டலும் தன் விரல்களால் அழுத்திப்பதித்து அவளது உயிர்வழித்தேடி பயணித்தான்.

மித்ராவின் உடலுக்குள் இருக்கும் இன்ப ஊற்றை அடையும் வழியறிந்து சென்றவன் மொத்தமாக அவளுக்குள் மூழ்கினான்.

இருவரும் ஒன்றாகி ஒருவராகி இயங்கி முயங்கி மயங்கித் தழுவிக்கிடந்தனர்.

அந்தத் தழுவல் இளந்தென்றலானது பூவின் தலையைக்கோதுவதுபோன்று இதமானதாக மாறியிருந்தது.

மோகனுக்குள் மோகம் மட்டுமே இப்போது நிறைந்து ததும்பி வழிந்தோடிக்கொண்டிருந்தது. அதையும் தாண்டி வாழ்க்கையில் சில தீர்மானங்களை எடுத்துக்கொண்டுதான் அவளோடு வாழ ஆரம்பித்தான் என்பதால் இனி மித்ராவைவிட்டு பிரியவோ அவளை விட்டுக்கொடுக்கவோ அவன் தயாராகயில்லை.

அந்தமுடிவினால்தான் அவன் இன்னும் இன்னும் அதிகமாக மித்ராவோடு ஒட்டினான் உரசினான் அப்படியே அவளுக்குள் புகுந்தும்கொண்டான்.

மித்ராவுக்கோ அவன் எப்படி இருந்தாலும் அவளது அத்தான்.அவன் என்ன செய்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளும் காதல் அவளிடம் இருந்தது.இன்னும் இருக்கின்றது.

ஆனால் அவனை மட்டும் எதற்காகவும் யாருக்காகவும் அது மோகனாகவே விருப்பப்பட்டாலும்கூட விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

அவன்மேலுள்ள அந்த அதிகமான காதலே அவர்களுக்கிடையில் பெரும்பிரச்சைனயாக உருமாறியிருந்தது.