என் நெஞ்சிலாடும் களபமே-12

என் நெஞ்சிலாடும் களபமே-12

களபம்-12

டெல்லி…

சுந்தர் ஊருக்குப்போய் இருபது நாளுக்குமேல் ஆகிவிட்டதே! இன்னும் நமக்குப் போனும் பண்ணலை எப்போ வருவேன்னும் சொல்லலையே என்று பிரீத்தா சுந்தருக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் கைக்காயம் ஆறி மறுபடியும் ஆபிஸிற்கு வந்ததும் சைட்டு விசிட்டுக்காக போற பிரீத்தா காலையில் சீக்கிரமாகவே வந்து “ஹாய் சுந்த்த்த்தர். நல்லாயிருக்கியா?”என்று ஒருமையில் கேட்டுவிட்டு அவனைத் திகைக்க வைத்துவிட்டுத்தான் அந்த நாளையே தொடங்குவாள்.

அது வழக்கமாகப் போகவும் இருவருக்கும் புன்னகை தாண்டி ஒரு தலையசைத்தல் கையசைவுமாக நாட்கள் நகர்ந்தது.

இருவருக்குள்ளும் நல்ல நட்புதான் உருவாகியிருந்தது.அவனுக்கு இதை அடுத்தக்கட்டம் எடுத்துச் செல்ல தோணவில்லை. அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்க அவன் தயாராக இல்லை.

அதனால் அந்த நட்பு என்ற எல்லைக்கோட்டை அவன் தாண்டவேயில்லை.

அந்த எல்லைக்கோட்டை எப்போடா தாண்டலாம்? என்று ஆசையாகக் காத்துக்கொண்டிருந்தாள் பிரீத்தா!

ஆனால் அந்த நாள் வருவதற்கு முன்பே அவனுக்கு சென்னையில் இருந்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததும் ஆபிஸிலிருந்தே கிளம்பியவன் லீவுக்காக மெயில் போட்டுவிட்டான்.

அதைப்பார்த்த பிரீத்தா உடனே அவனை அழைத்தாள்.

அவனும் வீட்டிற்குப்போய் பேக்கினை எடுத்துக்கொண்டு கிளம்பவும் பிரீத்தாவின் கால் வந்தது.

“என்னாச்சு இவ எதுக்கு இந்த டைம்ல போன் பாண்றா?” என்று எடுத்துக் காதில் வைத்தான்.

”என்னாச்சு சுந்தர்? எதுக்கு இப்போ இவ்வளவு அவசரமாக ஊருக்குப் போறீங்க?எமர்ஜென்சி லீவுன்னு வேற போட்டிருக்கீங்க.ஊர்ல அம்மா நல்லாயிருக்காங்களா?”என்று சந்தேகத்துடனே கேட்டாள்.

“பிரீத்தா நான் எமெர்ஜென்சி லீவு எடுத்ததே அம்மாவுக்காகத் தான்.அம்மாவுக்கு மைல்ட்டா ஹார்ட் அட்டாக் வந்துட்டாம். ஊர்ல இருந்து தகவல் வந்துச்சு. நான் போயே ஆகணும் ரெண்டு வருஷமா என்ன பாக்காம இருந்தாங்கதானே ரொம்ப ஏங்கிப் போயிருப்பாங்க. இந்த நிமிஷத்துலயாவது அவங்கக்கூட நான் இருக்கணும்.அதுதான் ஊருக்குப் போறேன். பிளைட் புக் பண்ணியாச்சு இன்னும் ஒரு மணி நேரத்துல நான் கிளம்பி விடுவேன் இப்ப ஏர்போர்ட்டுக்கு போக போறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“சரி சுந்தர் நீங்க ஏர்போர்ட் வாங்க”என்று சொன்னதை அவன் சரியாக கேட்கவில்லை. ஏர்போட்டுக்கு வாங்க அப்படி என்றால் அவளும் அங்கே நிற்பாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அம்மாவுக்கு இப்படி ஆகிட்டே என்று பதட்டத்திலும் வேறு ஏதும் ஆகிட கூடாது என்று வேண்டுதலிலம் ஏர்போர்ட் போய் இறங்கியவன் பார்த்தது அங்கே இவனுக்காக காத்திருந்த பிரீத்தாவைதான்!

அவளை அங்கு எதிர்பார்க்காத சுந்தர் என்ன ஆச்சு? பிரீத்தா நீங்க ஏன் இங்க நிக்கிறீங்க? எதுவும் பிரச்சனையா?என்று போய் அவளிடம் இவன் விசாரித்தான்.

“ப்ச்ச் அப்படி பிரச்சனை எதுவும் இல்லை சுந்தர். நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். அம்மாவுக்கு எப்படி இருக்குதுன்னு கேட்டீங்களா? போன் பண்ணுனீங்களா?”என்று பதறிக்கேட்டவளின் அன்பு உண்மையானது என்று அவளது கண்களில் தெரிந்தது.

அதைப்பார்த்தவன் அவளை இழுத்து தன்னருகில் நிறுத்தி அவளது தோளில் கைப்போட்டு”மைல்ட் அட்டாக்குதானாம் உடனே ஹாஸ்பிட்டல் தூக்கிட்டுப் போனதுனால் தப்பிட்டாங்க. ஆனாலும் இனி கவனமாக இருக்கணுமாம். ரொம்ப டென்சன் குடுக்கக்கூடாதாம். எங்க அம்மாவுடைய மொத்த டென்ஷனுமே என்னை நினைத்தும் என்னுடைய எதிர்கால வாழ்க்கை நினைத்து தான் இருக்கும் அதனால்தான் நான் கிளம்புறேன்”

“ஏன்?நீங்கதான் நல்ல படிச்சிருக்கீங்களே,அதுவும் இப்போ நல்லவேளைப் பார்க்கிறீங்க.அப்புறம் எதுக்கு டென்சன்? நீங்க பக்கத்துல இல்லைன்னு டென்சனா?அப்போ இனி அவங்கப் பக்கத்துலயேதான் இருப்பீங்களா?”என்று சோகமாக கேட்டாள்.

“அப்படியில்லை பிரீத்தா. நான் ஒரு பெரிய தப்பு பண்ணிட்டு வந்திருக்கேன். அதுதான் அவங்களுக்கு வருத்தம் அதை நினைச்சுத்தான் டென்சன்”என்று சொன்னதும் அவள் பயந்தாள்.அது அவளது கண்களிலே தெரிந்தது.

அவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணம் வரவும் “இங்கப்பாரு நான் என்ன தப்புன்னு சொல்லிடுறேன். பயப்படாத ஒரு காதல் தோல்வின்னு சொன்னேன்தானே அதுதான்.எனக்கு ப்ளைட்டுக்கு இன்னும் இரண்டுமணி நேரம் இருக்கு.வா சொல்லுறேன்” என்று கூட்டிட்டுப்போய் அவளுக்கும் அவனுக்குமாக காபி ஆர்டர் செய்தவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“நான் என்னோடு ஆபிஸ்ல வேலைப் பார்க்கும் பெண் ராதாவை விரும்பினேன்.அவளுக்கு கல்யாணமாகி விவாகரத்தும் ஆகியிருக்கிறதென்றும் அதில் மூன்று வயதில் குழந்தையும் இருக்குன்னு அதுக்குப்புறம்தான் தெரிஞ்சது. ஆனாலும் அவள்மேல உள்ளக் காதலை என்னால் விட முடியாது அம்மாவோடு சேர்ந்துப் பொண்ணுக்கேட்கப் போனேன். அவளுக்கு என்மேல் இல்லை யாருமேலயும் இனி நம்பிக்கையும் காதலும் வராது என்பதே அப்போதான் தெரிஞ்சது. அவளது முன்னாள் கணவன் கிருஷ்ணனையேதான் இன்னும் நேசிக்கிறான்னு புரிஞ்சது. கடைசியிலப் பார்த்தால் அவனும் இவளுக்காக சென்னை வந்து அவங்க இரண்டுபேரும் மீண்டும் காதலிக்கத் தொடங்கிட்டாங்க.அவ புருஷன் என்னை அடிச்சுட்டான். அந்தக்கோபத்துல அவளைக் கடத்திட்டேன்”

“க்யா சுந்தர் நீ ஒரு பொண்ணைக் கடத்தினியா? உண்மையாவா? நீ அப்படிப்பட்ட ஆளா?”என அதிர்ச்சியில் வாயைப்பிளந்தாள்.

“அம்மா தாயே! நான் சொல்லுறதை முழுசாக்கேளு. நீயே ஒரு கற்பனைக்குள்ள போகாத!”

“ம்ம்ம் சொல்லுங்க”

“நான் கடத்தினது அவ புருஷனை பயமுறத்த மட்டும்தான் நினைச்சேன் புரியுதா. நான் காதலிச்ச பொண்ணை தப்பா நடத்தமாட்டேன்.அவளுக்கும் அது தெரியும்.நா,அ அப்போ எல்லாம் அம்மாஞ்சி அம்பி” 

அதைக்கேட்டதும் சட்டென்று சிரித்துவிட்டாள்.

“நான் சீரியஸ்ஸா பேசிட்டிருக்கேன்”

“ஓகே ஓகே”

“நான் செய்தது தப்புன்னு குற்ற உணர்ச்சியினால்தான் இங்க ஓடி வந்தேன்.அதுவும் இல்லாமல் அம்மாவோட தம்பிப்பொண்ணு மித்ராவை எனக்குக் கட்டி வைச்சிடுவாங்கன்னும் பயத்துதான் ஓடிவந்துட்டேன்”

“அப்படியா!அப்போ எப்போ போனா மறுபடியும் அவளை உனக்கு கட்டி வைக்க பார்ப்பாங்களா?” என தனது காதலின் நிலை என்னவாகுமோ?” என்று பயந்து கேட்டாள்.

“ச்ச்ச ச்ச்ச அப்படியெல்லாம் இனி நடக்க வாய்ப்பே இல்லை. அவளுக்கு வேறொருத்தங்கக்கூட திருமண நிச்சயதார்த்தம் முடிஞ்சிட்டு. இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் முடிஞ்சு போயிடுவா.அதனால். உனக்கு அதிலெல்லாம் இனி எந்தவிதத் தடையும் வராது.நீ பயப்படாதே!” என்று சொன்னவனின் வார்த்தைகளில் அவளது காதலுக்கான சம்மதம் இருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள்.

உடனே சுந்தரின் கையைப்பிடித்தவள் “தேங்கஸ் சுந்தர்” என்றவள் அவனது கையைத் தனது கையோடும் கைவிரல்களோடும் பின்னிக்கொண்டவள் அவனது பின்கையில் முத்தமிட்டுத் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.

அதை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் வெட்கம் கலந்த “பிரீத்தா என்ன பண்ற? இது பப்ளிக் ப்ளேஸ் எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க!” என்று அவளிடமிருந்துத் தனது கையை மெதுவாக உருவியெடுத்தான்.

“ஏன் மேன் நீ என்ன நைண்டீஸ் கிட்ஸா? லேசா வெட்கமெல்லாம் வருது.உனக்கு ஏன் லேசாக வெட்கம் வருது.ஆனாலும் இந்த ரவுடி லுக்குல இருக்கிற உன் முகத்துல வர்ற இந்த வெட்கம் பிடிச்சிருக்கு” என்று கேட்டுவிட்டு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டாள்.

“ஹேய்” என்றவன் சத்தமாகச் சிரித்து லேசாக அவளது தலையை செல்லமாகத் தட்டிவிட்டு பிளைட்டுக்கு நேரமாச்சு.நான் போய் அமாமாவைப் பார்த்தால்தான் மனசுக்கு கொஞ்சமாச்சும் நிம்மதியாக இருக்கும்”என்று எழுந்தவனது கையைப்பிடித்துக்கொண்டாள்.

“என்ன பிரீத்தா?”என்று திரும்பிக்கேட்டவனின் கண்களைப் பார்த்தவாறே திரும்பி அம்மாவைக் கூட்டிட்டு இங்க வருவல்ல என்று பாவமாகக் கேட்டாள்.

“இங்கதான் வருவேன். இப்படியொரு நல்ல அழகான எம்.டி இருக்கிற கம்பெனியை விட்டுட்டு எந்த மடையனாவது வராமல் இருப்பானா? நான் வருவேன். உனக்காகவே வருவேன்”என்று அவளுக்கு சின்னதாக ஒரு சந்தோஷத்தைக் கொடுத்து விட்டுத்தான் கிளம்பினான்.

“நான் உனக்காக காத்திருக்கிறேன் சுந்தர்.ஐ மிஸ் யூ. ஐ லவ் யூ”என்று உதடுக்குவித்து முத்தம் வைத்தாள்.

“அவனும் மிஸ் யூ”என்று சொன்னவன் அவளது முத்தத்திற்கும் பதில் முத்தம் கொடுக்கவில்லை.அவளது ஐ லவ் யூவுக்கும் பதில் சொல்லாது தலையை ஆட்டியவாறே அங்கிருந்துக் கிளம்பிவிட்டான்.

அவன் சொன்ன அந்த ஒற்றை மிஸ் யூவே அவளுக்கு ஆயிரம் லவ் யூக்களுக்குச் சமானாம்.சுந்தர் எப்போதுமே அவளிடமிருந்து ஒதுங்கியேதான் நிற்பான். ஆனால் இன்றுதான் அவளிடம் ஓரளவு நெருக்கமாகப் பேசியிருக்கிறான். அந்த மிஸ் யூவும் அதில் சேர்த்தி!

அவ்வளவு பெரிய கம்பெனியின் எம்.டி பொண்ணு வலியவந்து காதலைச் சொல்லியும் ஒதுங்கிப்போகிறானே!என்று ஏற்கனவே அவன் மேல் நல்ல அபிப்பராயம் வந்திருந்தது.

அதைவிடவும் அவனுக்குள்ளாக இருந்த நல்லமனதை ஒருவிவாகரத்தான பொண்ணை உண்மையாக நேசித்துக் காதல்தோல்வி என்று சொன்னதும்தான் புரிந்துக்கொண்டாள்.அது அவன்மேல் உள்ளக் காதலை இன்னும் ஆழமாக உணரச்செய்தது.

அவனுக்காக காத்திருக்கணும் என்ற முடிவோடு கையசைத்து டாட்டா காண்பித்துவிட்டுத்தான் திரும்பினாள்.

அதற்குப்பிறகு இன்னும் அவன் போனும் பண்ணவில்லை. அவளாகப் போன் பண்ணியும் அவன் எடுக்கவில்லை. அதில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் வந்திடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள்!

சென்னை…

மித்ரா கல்யாணத்துக்கு இன்னும் ஒருவாரம்தான் இருந்தது.எல்லா வேலைகளும் எந்தப் பிரச்சனையும் இல்லாது ஒழுங்காகத்தான் நடந்துக்கொண்டிருக்கிறது.

சங்கரன் ஹாஸ்பிட்டலில் வைத்து மித்ராவை அடித்ததும் அவள் நேராக பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குச் சென்றுவிட்டாள்.

தனமும் பயந்துப்போய் அவளுக்கு போன் பண்ணிப்பார்த்தார்.

அவளோ யாரோட போனையும் அட்டெண்ட் பண்ணாது கோபத்தில் உட்கார்ந்திருந்தாள்.

‘அப்படி நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்னு அப்பா இப்படி என்னை அடிச்சாரு? நான் அத்தானைப் பார்த்து எப்படி இருக்கீங்கன்னு கேட்கத்தானே போனேன். அத்தனைபேர் முன்னாடி வைச்சும் அடிச்சுட்டாரே’ என்று கண்ணீரோடு உட்கார்ந்திருந்தாள். மாலை வரைக்கும் அங்கயே இருந்தாள்.

திடீரென்று அவளது தோளில் யாரோ கைப்போட்டு உட்காரவும் திடுக்கிட்டுப் பார்த்தாள்.சுமி உட்கார்ந்திருந்தாள்.

“என்ன அண்ணி?” என்று கண்களைத் துடைத்துக்கொண்டு கேட்டாள்.

வா வீட்டுக்குப்போவோம் என்று கையைப்பிடித்துக் கூப்பிட்டாள்.

“நான் வரலை அண்ணி.அப்புறமா வர்றேன்”

“மாமாவைப்பத்தி தெரியாதா உனக்கு?அவருதான் சட்டுன்னுக் கோபப்படுவாறே.அவருக்கு உன் கல்யாணத்தை எப்படியாவது நல்லபடியா நடத்திடணும்னுதான் ஆசை.அதுதான் நீ அண்ணன்கிட்டப் பேசப்போனதும் கோபம் வந்துட்டு.விடு உன் அப்பாதானே உன் நல்லதுக்குத்தானே செய்வாரு”என்று சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துக்கொண்டு விட்டுவிட்டுத்தான் வந்தாள். 

ஹப்பாடா ஒருவழியாக மித்ராவின் கல்யாணம் நடக்கப்போகுது என்று மோகன் நினைத்தானென்றால் சங்கரன் என் பொண்ணுக்கு நல்லபடியாக ஒரு வாழ்க்கை அமைதி கடவுளே!அவ நால்வயிருக்கணும் என்று அவரும் மனதிற்குள் நினைத்துக்கொண்டனர்.

அதெல்லாம் நான் மனசு வைச்சா மட்டும்தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.இல்லையா எல்லாமே குழறுபடிமாகத்தான் நடக்கும் என்று விதி நக்கலாச் சிரித்து வைத்தது.

ருக்குமணி மித்ராவின் கல்யாணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தார். அவரையே பார்த்திருந்த “மோகன் அதுதான் நான் போயிட்டு வர்றேன்னு சொன்னேன்லம்மா இப்போ எதுக்கு நீ கிளம்பிட்டிருக்க?”

“என்ன இருந்தாலும் அவ நான் தூக்கி வளர்த்தப்போண்ணு. நம்ம வீட்டுக்கு வர்ப்போறான்னு நினைச்சிட்டிருந்தவ, இப்போ அவளுக்கும் ஒரு நல்லவரன் வந்து கல்யாணமாகப்போகுது.நான் போய் ஆசிர்வதிக்க வேண்டாமா?”

“நிச்சயத்துக்கு போயிட்டு வந்ததுக்குத்தான் இருபது நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டு வந்திருக்க.உன் தம்பியும் பயங்கர ஆளுதான்.நீ அவளை நம்மவீட்டுக்கு மருமகளா எடுப்பன்னு சொன்னபோது அவ்வளவு பணிஞ்சாரு.அது இல்லைன்னு ஆனதும் உன்னையே விரட்டிவிடணும்னு நினைச்சுத்தானே பேசுனாரு”

“விடுறா அவனுக்கும் ஆதங்கம் இருக்கும்ல! எல்லாம் உன்னால் வந்தப்பிரச்சனைதானே. அப்புறம் கோபப்படாமல் எப்படி இருப்பான் சொல்லு? அதெல்லாம் இப்போ பேசக்கூடாது.நம்ம இரண்டுபேரும் கல்யாணத்துக்குப் போய் மித்ராவை வாழ்த்து ஆசிர்வதிச்சுட்டு வரணும்.அதுதான் முறை”என்று வேகமாகக் கிளம்பினார்.

இவங்களையெல்லாம் திருத்தமுடியாது மக்களே என்று சொல்லிவிட்டு அவனும் கிளம்பி காரில் போய் இறங்கினர்.

இதுதான் அவனது சுயத்தில் நடந்தது.மீதி அங்கே நடந்ததெல்லாம் மற்றவர்களின் வற்பறுத்தலில் நடந்திருந்தது.

இப்போது ஏன் இப்படியாகிற்று?என்று ஒட்டுமொத்தக் கோபத்திலும் வெறுப்பிலும் அவனது அம்மா ருக்குமணியைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்!