என் நெஞ்சிலாடும் களபமே-6

என் நெஞ்சிலாடும் களபமே-6

களபம்-6

சுந்தருக்கு ஒருவாரம் எப்படி ஓடியது என்று நினைப்பதற்குள்ளாகவே எல்லாம் காயமும் ஆறி கட்டுக்களைப் பிரித்து இனி நார்மல் வொர்க்கிற்குப் போகலாம் என்று டாக்டர் சொன்னதால் சனி ஞாயிறு என்று இரண்டு நாட்களும் கொஞ்சம் ரிலாக்ஸாகியவன் திங்களன்று வேலைக்குச் சென்றான்.

உள்ளே போகும்போதே அவனுக்கு பயங்கரமான வரவேற்பு இருந்தது.எப்போது சிரிக்கும் செக்யூரிட்டி முதற்கொண்டு உள்ளே வரவேற்பறையில் இருக்கும் ரிசப்ஷனிஸ்ட் வரைக்கும் குட்மார்னிங் சார் என்று வலிந்து வணக்கம் வைத்தனர்.

அதுசரி முதலாளி பொண்ணைக் காப்பத்தினதுக்காக இவ்வளவு மரியாதைக் கொடுக்குறாங்களா! சரிதான் அப்போ முதலாளியைக் காக்காபிடிக்க நம்மளுக்கு மரியாதைக் கொடுக்குறாங்க.உங்க மரியாதையில ஆணியை அடிக்க என்று நினைத்துக்கொண்டான்.

அவன் வழக்கம்போல எவனையும் மதிக்காது தனது கேபினுக்குள் சென்றவன் ஒரு வாரம் பெண்டிங்கான வேலை எல்லாம் பார்த்தான்.

எதை எதை எப்போ செய்ய வேண்டும் என்று தனித்தனியாக பிரித்து எடுத்துவைத்தவிட்டு தனது வேலையில் மும்முரமாக இருந்தான். 

அப்பொழுது அவனது கேபினின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.யாராக இருக்கும் என்று நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே வேலை செய்யும் ப்யூன் நின்றிருந்தான்.

“என்ன பாய்?” எனக்கேட்டான்.

“பெரிய சார் உங்களை கூப்பிட்டாங்க” என்று தகவல் மட்டும் சொன்னவன் வேறு எதுவும் பேசாதே சென்றுவிட்டான்.

“அது சரி இவன் பெரியசாரோட கையாள். அவர் என்ன சொல்லச் சொன்னாரோ அதை மட்டும் தானே சொல்லுவான்” என்று திட்டிக்கொண்டே ஃபைல் எல்லாம் மூடி வைத்தவன் குப்தா சாரின் அறைக்குள் சென்றான்.

“சார் என்று போய் நின்றவனைக் குப்தா சிரித்தவாறு “வா வா வந்து உட்காரு சுந்தர்”என்று அழைத்து அவருக்கு முன்பாக உட்கார வைத்தார்.

ஆயுஷோ அவனே மதிக்காது உட்கார்ந்து இருந்தான். 

அவனுக்கு எப்பொழுதும் வேலைக்காரர்கள் வேலைக்காரர்கள்தான். அதைத் தாண்டி அவன் வேறு எதற்கும் இடம் கொடுப்பதில்லை என்பதால் அமைதியாக இருந்தான்.

“எப்படி இருக்கீங்க சுந்தர் உங்க கைக்காயமெல்லாம் ஆறிட்டா? பரவாயில்லையா இப்போ?” என்று கேட்டவர் ஒரு பைலை எடுத்து அவன் முன்பு வைத்தார். 

“ரொம்ப நன்றி சுந்தர். உங்களால்தான் இதுக்கு முந்தைய வருடமெல்லாம் ராம்சிங் எவ்வளவு ஃபோர்ஜரி பண்ணி நம்ம பணத்தை கையாடல் பண்ணிருக்கான் என்று தெரிய வந்தது.அந்த பைல்ஸ் எல்லாம் இதுல இருக்கு சுந்தர்.இதுல அவன் எவ்வளவு போர்ஜரி பண்ணிருக்கான்னு முழுத்தகவலும் இருக்கு.அவனுக்கு கொடுக்கவேண்டியதுல இருந்து கழிச்சுப்போக மீதி எவ்வளவு பணம் அவன் தரவேண்டியதுன்னு பார்த்து டேலி பண்ணிடுங்க.அவன் மேல கேஸ்போட்டு வாங்கிடணும்”

“சரிசார் எல்லாம் ரெடி பண்ணிடுறேன்”

“சுந்தர் ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க.நான் உங்களுக்காக டின்னர் ரெடி பண்ணச் சொல்லுறேன். பிரீத்தாவை அந்த ராம்சிங்கிடம் இருந்து பத்திரமாக உங்க உயிரையும் பார்க்காது காப்பத்தினதுக்கு நன்றி.உங்களை என் குடும்பத்துல எல்லோரும் பார்க்கணும்னு சொன்னாங்க”

அதைக்கேட்டு ஆயுஷ் ஒரு நொடி அதிர்ந்துப் பார்த்தான்.அதிலயே இது குப்தா சாருடைய ஆசை மட்டும் என்று புரிந்துக்கொண்டான்.

அதனால் இதை நம்ம ஏற்ககூடாது என்று மனதிற்குள்ளாகவே ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டான்.

“ஓகே சார்.டைம் கிடைக்கும்போது வர்றேன்” என்று சிரித்தவாறே சொன்னவன் கண்டிப்பாக வரமாட்டான் என்று அவருக்கும் புரிந்தது.

“ஓகே சுந்தர் இந்த வேலையை இன்னைக்கே முடிச்சிடுங்க என்று முடித்துக்கொண்டார்.

சுந்தர் எழுந்து வெளியே வரும்போது ஆயுஷை ஒரு பார்வை பார்த்து விட்டுப்போனான்.

‘அதில் நீ கூப்பிட்டாலும் உங்க வீட்டுக்கு வரமாட்டேன்’ என்ற பதில் இருந்தது.

‘பணத்தையும் பணக்காரங்களையும் கண்டவுடன் வாலாட்ட நான் என்ன நாயா? இவனுங்க தர்ற சம்பளத்துக்குத்தான் வேலைப்பார்க்கிறேன். அதுக்காக இவனுங்க கூப்பிட்டுச் சாப்பாடு போடுறானுங்கன்னு சொன்னதும், நாய் மாதிரி பல்லைக் காண்பிச்சிட்டு போவேன்னு நினைச்சாங்களோ?”என்று கடுப்பில் வெளியே வந்தான்.

அவன் வெளியேவரவும் பிரீத்தா உள்ள வந்தாள். இருவரும் அந்த அறையின் வாசலிலே முட்டிக்கொண்டு நின்றிருந்தனர்.

அவுச் என்று சத்தமிட்டவள் சுந்தரின் கையைப் பிடித்துக் கொண்டு விழாது தன்னை நிலைப்படித்திக் கொண்டாள்.

ப்ச்ச் என்று சலிப்போடு அவளைப் பிடித்தவன் “பார்த்து வரமாட்டீங்களா பிரீத்தா? கொஞ்சம் கவனம் வைச்சு நடங்க” என்று சொன்னவன் அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு அவனது கேபினுக்கு போய்விட்டான்.

‘இவன் எதுக்கு என்மேலக் கோபத்துல போறான்?ஸஎன்னாச்சு?அப்பா எதுவும் சொல்லிட்டாரா?’ என்று யோசித்தவாறே உள்ளே சென்றவள் குப்தாவிடமே நேராகக் கேட்டுவிட்டாள்.

“டாடீ சுந்தரை எதுவும் சொன்னீங்களா?”என்று கேட்டுவிட்டு நாக்கைக் கடித்தவள் “சுந்தர் சாரை எதுவும் சொன்னீங்களா? ஒருமாதிரி கோபத்துல போறாரு”என்று கேசுவலாகக் கேட்பதுபோன்று கேட்டாள்.

“இல்லையே பிரீத்தா” என்று சொன்னவர் சுந்தர் என்ன கோபத்துலயா போறான். இல்லையே நல்லதானே பேசிட்டுப்போனான். அவரை நம்ம வீட்டு லன்ச்சுக்கு ஒருநாள் வாங்கன்னுக் கூப்பிட்டேன். அவரு டைம் கிடைக்கும்போது வர்றேன்னு சொன்னாரு அவ்வளவுதான்.ஆமா நீ என்ன அவரு கோபமா போறாரு சொல்லுற?அப்படிக் கோபமா போக வாய்ப்பையில்லையே?”என்று மகளோடு சாதாரணமாகப் பேசினார்.

ஒரு இளவயது மேனேஜரை தனது தங்கை இவ்வளவுதூரம் விசாரிக்கக்கூடாதே? என்று அவளை யோசனையோடு ஆயுஷ் பார்த்தான்.

அவனது பார்வையைப் புரிந்துக்கொண்டவள் “இல்ல பையா எனக்காக அன்னைக்கு 

அந்த ராம்சிங்கோடு எதிர்த்து நின்னவருல அதனால்தான் விசாரிச்சேன்.வேறென்னுமில்லை பையா”என் ஆயுஷிற்கு தான் சுந்தரைப் பற்றிப்பேசியதற்காக விளக்கம் கொடுத்தாள்.

“எதுக்கு இரண்டுபேரும் அந்தாளை ரொம்ப தூக்கிவைச்சுப் பேசுறீங்கன்னு எனக்கும் தெரியல.ஏதோ நம்ம குடும்பத்துக்கே அவன்தான் குலசாமி மாதிரியே பேசுறீங்க. இவன்தான் ராம்சிங்கிடம் முதல்ல கையெழுத்துப் போடமாட்டேன்னு பிரச்சனை பண்ணினது. அதுக்கப்புறம்தான் அவன் ஆபிஸ் முன்னாடி தங்கச்சியைத் தூக்க நினைச்சது.ஸஇவன் மூடிட்டிருந்தா எல்லாமே சரியாகப் போயிருக்கும்”என்று கோபத்தில் பல்லைக் கடித்தான்.

“என்ன பேசுற ஆயுஷ் அவன் நம்ம கம்பெனிக்கு உண்மையா இருக்கா. அதுதான் ராம்சிங்கிடம் சண்டைப்போட்டான். இப்படியான வொர்க்கர்ஸ்தான் நமக்குத் தேவை. அவனுங்களை நம்மத் தட்டிக் கொடுத்தால்தான் அவனுங்க நமக்கு இன்னும் விசுவாசமாக இருப்பானுங்க. இதுக்கூட உனக்குப் புரியலையா?ஸஸஓஓ நீ முகத்தை இப்படி வைச்சிட்டுத்தான் இருந்தியாஅதுலயே உனக்கு அவன் லன்ச்சுக்கு வர்றது பிடிக்கலைன்னு கெஸ் பண்டிருப்பான்.ஸஹேய் அவன் மதராஸி ரொம்ப தன்மானம் பார்ப்பானுங்க ஷார்ப்பா வேற இருப்பானுங்க. அவன்கிட்ட உன் குணத்தைக் காண்பிக்காத புரியுதா?” என்று குப்தா சத்தம்போட்டார்.

அப்போதுதான் பிரீத்தா அப்பாவையும் அண்ணனையும் கவனித்தாள்.அவர்களுக்கு சுந்தர்மேல எல்லாம் அவ்வளவு பாசமெல்லாம் இல்லை. ஜஸ்ட் ஒரு எம்ப்ளாயி அவன் உண்மையாக இருக்கான். அவனை தங்கள் பக்கமே வைச்சுக்கணும்னு முனைப்பு மட்டுமே இருக்குதுன்னு தெரிந்துக்கொண்டாள்.

அதானே இவங்க குணத்தை சுந்தர் புரிஞ்சிக்கிட்டார்போல. அதுதான் கோபத்தை என்மேல் காண்பிச்சாரோ என்று அமைதியாகிவிட்டாள்.

“ப்ச்ச் இதுக்கே பையாவுக்கு கோபம் வருதே. எனக்கு சுந்தரைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாலோ இல்லைத்தெரிஞ்சாலோ என்னவாகும்?. அவ்வளவுதான் போச்சு சுந்தரைப் பேக் பண்ணிடுவாங்களோ? இப்போதைக்கு எதையும் வெளியே காண்பிச்சுக்காத பிரீத்தா” என்று நினைத்தவள் தனது முகத்தை எப்போதும்போல நார்மலாக்கிக் கொண்டாள்.

அவர்களிடம் பேசிமுடித்துவிட்டு வெளியே வந்தவளுக்கு சுந்தர் கேபினுக்குள் போய் அவனைப் பார்க்கலாம் என்று தோன்றவும் ஒரு எட்டு எடுத்து வைத்தாள்.

அதன்பின் வேண்டாம் அவரே கோபத்துல இருக்காரு அப்புறமாக போய் பார்த்துக்கலாம் என்றவள் சைட்டு விசிட்டுன்னு சுத்தினதில் ஒருவாரம் அவனைப் பார்க்கவே முடியாது திணறத்தான் செய்தாள்.

அவனுக்கு ஆபிஸிற்குள்ளாகவே தான் வேலை . அவளுக்கோ சைட்டுலதான் வேலை. இருவரும் பார்ப்பது என்பது எப்போவாவதுதான் நிகழும். கொஞ்சம் சிரமம் எடுத்தால்தான் தினமும் பார்க்கலாம்.

இதற்காகவே அவள் ஒருவாரம் கழித்து காலையிலே ஆபிஸ் வந்தவள் அண்ணனும் அப்பாவும் வர்றதுக்கு முன்னாடியே அவனைப் பார்த்திடணும்னு அவனது கேபினுக்குள் வந்தாள்.

அவள் வேகமாக வந்து நிற்பதைப் பார்த்தவன் புருவம் உயர்த்தியும் சுருக்கியும் “என்னச்சு?” என்று கேட்டான்.

“நத்திங்” என்று தவையாட்டியவாறே அவனுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.

அவளும் பேசவில்லை அவனும் பேசவில்லை. இருவரும் அமைதியாக இருந்தனர்.

பிரீத்தா மெதுவாக தனது கைவிரல்களைப் பார்த்தவாறே ”சுந்தர் எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு?” என்று திக்கித்திணறி சொன்னவள் அவனது ரியாக்ஷன் எப்படியிருக்குன்னு பார்த்தாள்.

அவனோ ஏதோ வேலை விசயமாக தகவல் சொன்னதுபோன்று பார்த்திருந்தான்.

“என்னாச்சு நான் உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன். இப்படி இருக்கீங்க?”என்னு முகம் சிவந்து ஒருமாதிரி ரெஸ்ட்லெஸ்ஸாகக் கேட்டாள்.

“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னால் நான் அதுக்கு என்ன செய்யமுடியும் பிரீத்தா? நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க?”

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னு காதலிக்கிறேன்னு சொன்னேன் சுந்தர். உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா?” 

“காதலிக்கிறீங்களா? எப்படி?” என்று நிதானமாக பொறுமையாக் கேட்டான்.

“எப்படின்னு கேட்டா எப்படி சுந்தர்.ஸஉங்களைப் பிடிச்சிருக்குக் காதலிக்கிறேன்.ஸஇதுல எப்படின்னுக் கேட்டா எப்படி பதில் சொல்லுவேன்?”

“பிரீத்தா நான் அப்படி உங்களை காதலிக்க வைக்கிறஸமாதிரி நடந்துக்கலையே அதுதான் கேட்டேன்”

“இது என்ன பதில் சுந்தர்” என்று கண்கள் கலங்கிக்கேட்டாள்.

அதில் கொஞ்சம் வார்த்தையின் கடுமையைத் தவிர்த்தவன் ”என்னைப் பத்தி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?ஸநான் யாருன்னு முழுசா தெரியாது.நான் ஏற்கனவே காதலில் அடிபட்டு அந்தக்காதல் தோல்வியில் இங்க வந்திருக்கேன்.இது தெரியாமல் காதலிக்கிறேன்னு சொல்றியே இதுக்கு நான் என்ன பதில் சொல்லுறது நீயே சொல்லு?”

“பொய் சொல்லாதிங்க சுந்தர்”

“நான் எதுக்குப் பொய் சொல்லப்போறேன்? உண்மையைத்தான் சொல்லுறேன்” 

“எனக்கு ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருக்கு பிரீத்தா”

அதைக்கேட்டதும் ஆஆஆவென்று வாயைப்பிளந்து அதிர்ச்சியில் உறைந்தாள்.

“அந்தத் தோல்வியினாலதான் இங்க யாருக்கும் தெரியாமல் ஓடிவந்தேன்”

அவளுக்கு தலை சுத்தாதக் குறையாக பார்த்தாள்.

“என்ன பிரீத்தா? ஏன்டா இவனைக் காதலிச்சோம்னு பீல் பண்ணி அடிக்கப்போறீயா என்ன?ஸஇப்படி எழுந்து வந்து பயமுறுத்துற?”என்னு நக்கலாகக் கேட்டான்.

அவளோ அவனது முகத்தைப் பற்றி தன் பக்கமாக இழுத்து பட்டென்று நெற்றியில் முத்தம் வைத்தவள் இப்போதான் உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. வாழ்க்கையில் உன்னை மாதிரி ஒருத்தனைக் காதலிச்சதுக்காக பெருமையா இருக்கு என்றவள் அவனது கண்களையே பார்த்திருந்தாள்.

அவள் தன்னருகில் வந்து முத்தம் வைப்பாள் என்று எதிர்பார்த்திராத சுந்தர் சட்டென்று அடிக்க கையோங்கியவன் அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தினான்.

“நான் இன்னோரு முறை காதலிக்கவோ கல்யாணம் பண்ணவோ நினைச்சதுக்கூட கிடையாது.என் வாழ்க்கையில் இனி பெண்கள் வருவாங்களான்னு தெரியாது.ஏன்னா நான் யாரையும் என் வாழ்க்கைக்குள் ஏத்துக்கொள்ள விரும்பலை.அது யாராக இருந்தாலும் சரிதான்.கொஞ்சம் என்கிட்ட இருந்து விலகியே நில்லு”

“ஓகே உங்களோட மனநிலை எனக்குப் புரியுது.சப்போஸ் நீங்க காதலிக்கவோ கல்யாணம் பண்ணவோ நினைச்சா அது நானாகத்தான் இருக்கணும்னு நினைக்கிறேன்.அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க.எனக்கு நீங்கதான் என் வாழ்க்கையில் வேணும்னு. உங்களைத்தான் காதலிக்கிறேன். எனக்கு ஒரு பதில் சொல்லுங்க”

“நான் என்ன பதில் சொல்லமுடியும் பிரீத்தா?”என்று அவளது கண்களைப் பார்க்காமலயே பதில் சொன்னான்.

“அவளோ அவனருகில் வேண்டுமென்றே நெருங்கி வந்து என்னையும் என் கண்ணையும் பார்த்துப் பதில் சொல்லுங்க சுந்தர்.இத்தனை நாளும் நான் உங்க பக்கத்துலயே வந்ததில்லை.ஆனாலும் உங்களை எனக்குப் பிடிக்கும்.என்னையும் உங்களுக்குப் பிடிக்கும்னு தெரியும் .நான் உங்கக் கண்ணுல எனக்கான ஆசையைப் பார்த்தேன்.பொய் சொல்லாதிங்க.ஒருவேளை காதல் மேல உள்ள நம்பிக்கைப் போயிடுச்சா”

“அதெப்படி போகும் நான் உண்மையாகத்தான் ஒருத்தியை நேசித்தேன்.அப்புறம் எப்படி அந்த நம்பிக்கைப் போகும்”

“அப்போ என்மேல நம்பிக்கை இல்லையா?”

“ப்ச்ச் அப்படியெல்லாம் இல்லை”

“அப்புறம் என் இந்த ஸ்டேட்டஸ்ஸா எங்க அண்ணன் அப்பா அவங்களா?எதுக்கு தயங்குறீங்க?”

“தயக்கமெல்லாம் இல்லை.நான் எதுக்குத் தயங்கணும்”

“அப்போ நான் காத்திருக்கேன். என்னைத் தவிற வேற யாரும் உங்க மனசுல வரமுடியாது வரமாட்டாங்கன்னு நம்புறேன். எனக்கான காதல் உன்கிட்டயிருந்து கிடைக்கும்.காத்திருக்கேன்”

“யாரும் யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை”

“ப்ச்ச் என்ன சுந்தர் இது.அப்போ இப்பவே சொல்லு என்னை பிடிக்காதுன்னு சொல்லு நான் கொஞ்சம் யோசிக்கிறேன்”

“பிடிக்காதுன்னு சொல்லுறதுக்கும் காதலிக்கிறேன்னு சொல்லுறதுக்கும் சம்பந்தமேயில்லையே”

“அப்ப காதலிக்கலன்னு சொல்லு பிடிக்கலைன்னு சொல்ல ரெண்டும் சேர்த்து சொல்லு நான் போயிடுறேன்”

அவனால் எதுவுமே சொல்லமுடியவில்லை.அப்படியே அமைதியாக இருந்தான்.

“ஏன் பிடிக்கவில்லை என்று சொல்ல முடியலையா சுந்தர்?” என்ற லேசாக சிரித்துக் கொண்டே அவனைத் தன் தோளினால் இடித்தாள்.

“உங்க அப்பாவும் அண்ணனும் வந்துட்டாங்க போ.அதுக்கு வேற என்ன கூப்பிட்டு உங்க அண்ணன் முறைச்சிக்கிட்டு இருக்கபோறேன். போ இதெல்லாம் தேவையில்லாத ஆணி வாழ்க்கைக்கு உதவாது. போய் வேலையை பாரு” என்று விரட்டினான்.

“பிடிக்கலைன்னு சொல்லலையே” என்று குனிந்து அவனது முகத்தைப் பார்த்துக்கேட்டவள் சிரித்தாள்.

அதைக்கேட்டதும் அவனும் அவளைப்பார்த்துச் சிரித்தவன் “போ போ போய் வேலையைப்பாரு” என்று தனது வேலையில் கவனம் வைத்தான்.

அவனது சிரிப்பே அவளுக்கு போதுமான பதிலாக இருந்ததால் வர சொன்னான் அல்லது என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து கண்ணடித்து உதட்டை குவித்து முத்தம் வைத்தவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

சுந்தருக்கு அவளிடம் காதலைச் சொல்லவெல்லாம் விருப்பம் கிடையாது. அவளது காதலிலயே விருப்பம் இல்லை . ஆனாலும் அவள் மேல் ஒரு சிறிய பிடித்தம் இருக்கிறது.அதை அப்படியே விட்டுவிடலாம் என்று எண்ணியிருந்தான். அது காதலாக மாறினால் நல்லது மாறாவிட்டாலும் நல்லது என்று ஒரு நிதானத்திற்கு வந்திருந்தான்

ஆனால் ப்ரீத்தா அதை ஆழமாக எடுத்துக் கொண்டு அவன் தன்னை கண்டிப்பாக காதலிப்பான். அவனது காதல் எனக்காக இருக்கும் என்று நம்பினாள் அந்த மெழுகு பொம்மை! 

நம்பிக்கை வீண்போகாது என்று நம்மளும் நம்புவோம்!