என் நெஞ்சிலாடும் களபமே-25

என் நெஞ்சிலாடும் களபமே-25

களபம்-25

மோகன் கார் ஓட்டிக்கொண்டிருக்க மித்ரா தீவிர சிந்தனையில் கையில் இருந்த ஆர்டரைப் பார்த்திருந்தவள் மெதுவாக அதையெடுத்து இப்போது கிழித்துப் போடப்போனாள்.

மோகன் சட்டென்று இடதுகையால் அவளைப் பிடித்து நிறுத்தி அதை தனது பாக்கெட்டுக்குள் வைத்தவன் ”எதுக்கு இப்போ இவ்வளவு கோபம். இந்த ஆர்டரை ஏன் கிழிக்கிற? உன் தகுதிக்குத்தானே வேலை தந்திருப்பாங்க. அப்புறம் எதுக்கு இப்படிப் பண்ற?”என்று விட்டால் அடித்துவிடுவான் அந்தக் கோபத்தில் பேசினான்.

நான் வரும்போது எதிர்ல வந்தப் பொண்ணுதானே அன்னைக்கு நம்ம வந்ததும் சண்டைப் போட்டுட்டுப்போன பொண்ணு?என்று கேட்டாள்.

“ஆமா அதுக்கென்ன?”

“அவ இருக்கிற இந்த ஆபிஸ்ல நான் வேலைக்கு இருக்கமாட்டேன்”

“அந்த ஆபிஸே அவளோடதுதான் லூசே. நம்ம இருக்கு வீடுக்கூட அவங்கப்பா நமக்குத் தந்ததுதான். இதுல எங்கிருந்து நீ ஓடி ஒளிய நினைக்கிற?அவளைப் பத்தி நீயேன் யோசிக்கிற?”

அவனைத் திரும்பிப் பார்த்து நான் ஏன் யோசிக்கிறானா? யோவ் நான்தான்யா யோசிக்கணும்,நான் மட்டும்தான் யோசிக்கணும் .இதுக்குமேல ஏதாவது பேசினீங்க அப்படியே கார்ல இருந்துக் குதிச்சிடுவேன்”என்று அவ்வளவு கோபத்தில் பேசினாள்.

உடனே காரை ஒரு பக்கத்தில் நிறுத்தி ஸ்டீரியங்கில் தன் தலையை சாய்த்து என்ன பேசுறா என்று உதட்டில் புன்னகையுடன் பார்த்தான்.

என்ன சிரிப்பு? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா அத்தான்.எல்லாம் எனக்கும் தெரியும் என்றவளுக்கு அழுகைதான் வெடித்துக்கொண்டு வந்தது.

அவளது அழுகையைப் பார்த்ததும் கோபப்பட்டவன் காரை வேகமாக எடுத்து பில்டிங் கீழே கொண்டுவிட்டவன் அவளை இறக்கிவிட்டுவிட்டு நாளையில் இருந்து நீ வேலைக்கு வர்ற.உனக்குப் பிடிக்குதோ இல்லையோ நீ வர்ற அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்?

அவளுக்கு ஒன்றும் சொல்லமுடியாத நிலை. வேலைக்குப்போனால் நம்ம கொஞ்சம் ரிலாக்ஸாகலாம் என்று நினைத்தால் இப்போ உள்ள நிம்மதியும் போயிடும்போலயே! ஏழுமலை வெங்கடேஷா என்னை ஏன் இப்படி சோதிக்கிற?என்னால் தாங்கமுடியாது என் இதயம் வெடிச்சு செத்துப்போயிடுவேன் போலிருக்கே! என்று சொல்லமுடியாத வலியை உணர்ந்தாள்.

அந்த நேரத்தில் நித்ரா போன் பண்ணியதும் அதையெல்லாம் மறைத்து இன்டர்வீயூ எப்படிப் போச்சு என்று தொடங்கி வேலைகிடைச்சது வரைக்கும் மொத்தமாகத் தங்கையிடம் ஒப்பித்தாள்.

ருக்குமணியும் அங்கே இருந்ததால் அவரும் அவளோடு பேச போனை வாங்கியவர் தனியாகப்போய் மருமகளிடம் பேசத்தொடங்கினார்.

“மித்ரா எப்படி இருக்க?”

“உண்மையைச் சொல்லணும் மித்ரா”

அத்தை என்று அவள் இங்கு வந்த நாளில் நடந்ததையும் அவளையே ஆபிஸ்ல பார்த்ததையும் சொன்னாள்.அவர்களுக்குள் நடந்ததை பட்டும் படாமலும் என்கூட பிடித்தமில்லாமல் வாழத்தொடங்கிட்டாரென்று சூசகமாகச் சொன்னாள்.

ருக்குமணி சிறிது யோசித்தவர் “இங்கப்பாரு நீ டெல்லி போகும் போது நான் என்ன சொன்னேனா அதேதான் இப்பவுமே சொல்லுறேன்.உன் கழுத்துல தாலிக்கட்டிருக்கான் அவன் .உனக்குமட்டுமே உரிமையானவன். அதை மட்டும் நல்ல ஞாபகத்துல வச்சுக்கோ வேற எதையும் யோசிக்காத.அவ்வளவுதான் சொல்லுவேன்.எனக்கு என் மகனை நல்லாவே தெரியும் அதனால்தான் சொல்லுறேன்.நீ இழுத்துப்பிடிச்சா உன் கட்டுக்குள் நிப்பான்.நீ எப்படியும் போறான்னு விட்டுட்டன்னா சோலிமுடிஞ்சுது. புரியுதா உன் புருஷன் அவன் எவள் எந்தப்பக்கம் குறுக்கால வந்தாலும் இடுப்புலயே மிதிச்சு அடிச்சு விரட்டியனுப்ப உனக்குமட்டும்தான் உரிமை இருக்கு. அந்த உரிமையைக் கையில எடு. எல்லாவிதத்திலும் அந்த உரிமையைக் கையில எடு. அவன் உன் கைக்குள்ள வந்திடுவான்(அட அட நீங்கள்ல நவீனத்துவ மாமியார்.என்னா மாதிரி வாழ்க்கையை வாழச் சொல்லிக்குடுக்கிறீங்க ருக்குமணி.உங்களை நாங்க என்னமோ வில்லி ரேஞ்சுலல வைச்சிருந்தோம்.கலக்கிட்டீங்க போங்க) மித்ரா இது புரிஞ்சா உன் வாழ்கை உன் கையில் ஞாபகம் வைச்சுக்க” என்று நல்ல மாமியார் மந்திரம் போட்டு மருமகளுக்கு மகனைக் கையிலெடுக்கும் சூட்சுமத்தைச் சொல்லிக் குடுத்தார்.

“சரித்தை” என்று இந்தப்பக்கமிருந்தே தலையாட்டினாள்.

“தலையாட்டுறதெல்லாம் சரிதான். இந்தப்பக்கம் ஊருக்கு வரும்போது ஒன்னு குழந்தையோடு வரணும், இல்லை குழந்தைப்பெத்துக்க வரணும். அதைத்தாண்டி சண்டைப்போட்டுட்டு வந்தேன். கோபத்துல வந்தேன்னு ஏதாவது சொல்லிட்டு வந்தன்னு வையேன் நானே உன்னை விரட்டிவிட்றுவேன் பார்த்துக்க”என்றவர் போனை வைத்துவிட்டார்.

அவர் போனை வைத்ததும் மித்ரா தனது தலைக்குள் அவர் சொன்னது எல்லாம் போட்டு குழப்பிக் கொண்டிருந்தவர் கடைசியாக ஒரே ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். என் அத்தானை யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஒரே முடிவோடு எழுந்து சாப்பிட உட்கார்ந்தாள்.

அங்கே ஆபிஸிற்குள் நுழைந்த மோகன் எதிரே பிரீத்தாவைப் பார்த்தான்.

“ஹலோ குட்மார்னிங் மேடம்” என்றவன் தலையைசைத்துவிட்டு தனது கேபினுக்குள் நுழைந்துவிட்டான்.

அவளுக்கு ஏற்கனவே மித்ரா இங்கேதான் வேலைக்கு வரப்போகிறாள் என்று தெரிந்ததுமா உடனே தனது அண்ணன் ஆயுஷிடம் ஓடினாள்.

“பையா நீ எதுக்கு அந்த மோகனோட வைப்க்கு நம்ம ஆபிஸ்லயே வேலைப்போட்டுக் குடுத்திருக்க? மோகன் ரெக்கமெண்ட் பண்ணிருக்கார். நீ எப்படி ரெக்கமெண்ட்ல அவளை எடுத்த?”என்று சண்டைப்போட்டாள்.

தங்கை சண்டைப்போடக் காரணம் என்னவென்று அவனுக்குத் தெரியுமே. அதனால் சன்னமாகச் சிரித்தவன் ”பிரீத்துமா அந்தப்பொண்ணு செம டேலெண்ட். உன்னைவிட அதிகம் படிச்சிருக்கு. எம்.ஈ சிவில் அதனால்தான் எடுத்தேன். அப்புறம் மோகன் ஒன்னும் அவளுக்கு ரெக்கமெண்ட் பண்ணல. இவன் அவனுக்கும் இந்த இன்டர்வீயூவிற்கும் சம்பந்தமே இல்லை. அந்தப்பொண்ணு போட்டிருந்த அட்ரஸ்ஸை வைச்சுத்தான் நான் மோகன் மனைவின்னு தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறம் பார்த்தா செம ஷார்ப் பிரெயின் அதுதான் நம்ம கம்பெனிக்கு எடுத்தேன்”

“ஓஓஓ எம்.ஈயா?நானும் அடுத்து அடுத்து படிக்கிறதுக்கு ஏதாவது பண்ணட்டுமா பையா?”

“நீ படிக்கிறன்னா நான் சீட்டு வாங்கித்தர்றேன். ஆனால் உன்னால் அவ கிட்ட படிப்புல மட்டும் தான் போட்டி போட முடியும். அவளுக்குச் சொந்தமான பொருளை வாங்குவதற்காக எல்லாம் போட்டி போட முடியாது. நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும்னு நான் நினைக்கிறேன். கண்ட்ரோல் யுவர் மைண்ட் அண்ட் கண்ட்ரோல் யுவர் ஹார்ட். அதைத் தாண்டி ஒரு அண்ணனா உன்கிட்ட வேற எதையுமே சொல்ல விரும்பல” என்று முடித்துக் கொண்டான்.

இதற்கு மேல் மோகனிடம் பேசாமல் இருக்க முடியாது என்று யோசித்தவள் இப்பொழுது நேரடியாக மோகனின் கேபினுக்குள் நுழைந்தாள்.

வாங்க மேடம் ஏதாவது தகவல் சொல்ல வந்திருக்கீங்களா இல்ல என்கிட்ட இருந்து ஏதாவது ஃபேன்சி தேவைப்படுதா இல்ல மறுபடியும் யாராவது சான்ஸ் ஆக்சன் தப்பு பண்ணி அந்த பழியை மேல போட வந்தீங்களா?” என்ற நக்கலாகக் கேட்டான்.

“சுந்தர்ர்ர்”என்று கண்கள் கலங்கி நின்றாள்.

“சாரி மேடம் நான் மோகன். எங்கம்மாவுக்கும் என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் நான் சுந்தர்.நீங்க என்னை மோகன்னே கூப்பிடுங்க.அதுதான் சரியாக இருக்கும்”

“சுந்தர்ர் ப்ளீஸ் இப்படிப் பேசாதிங்க.நான் அன்னைக்குக் கோபத்துல அப்படி நடந்துக்கிட்டேன்”

“என்ன கோபம் மேடம்.நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி வாக்கு கொடுத்த நான் இல்ல காதலிச்சு ஏமாத்திட்டனா அப்படின்னா எந்த விதத்தில் உனக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன்னு நீ சொன்னா நான் உன் கோபத்தையும் சண்டையையும் தப்பில்லன்னு ஒத்துக்கிறேன்”

“அப்படியெல்லாம் இல்ல சுந்தர்ர்.நான் உங்களை எவ்வளவு விரும்புறேன்னுத் தெரிஞ்சும் எப்படி உங்களால இன்னொருத்தி கழுத்துல தாலி கட்ட முடிஞ்சது சுந்தர் எனக்கு அது மனசெல்லாம் வலிக்குது. இப்ப நினைச்சாலும் வலிக்குது. அதுக்கு நீங்க என்ன காரணம் சொன்னாலும் அது என்னால ஏத்துக்க முடியாது. ஆனால் இப்பொழுது உங்கள் மனைவியை இங்கயே வேலைக்காக என் கண் முன்னாடியே கூட்டிட்டு வந்து இருக்கீங்க. அது எனக்கு எவ்வளவு வேதனையான விஷயம் என்று யோசிக்கலையா நீங்க? எனக்கு வலிக்கனும்தானே அவங்கள இங்கே வேலைக்கு கூட்டிட்டு வந்தீங்க”என் நேரடியாகவே அவன்மீது குற்றம்சாட்டிக் கேட்டாள்.

“ஹலோ மேடம் .அவளது நினைவு தெரிஞ்ச நாளில் இருந்தே என்னைத்தான் அவளது உலகமாக நினைத்துக் காதலித்தவள். எனக்காக நான் வருவேன்னுக் காத்திருந்தவள்.நான் முன்னாடி சொன்னனே என்னுடைய காதல்தோல்வி மற்றும் பிரச்சனை எல்லாத்தையும் சாட்சியாக நின்று பார்த்திருந்தவள். ஆனால் ஒரு நாள் கூட என்னை கோபத்தினால் வார்த்தையினாலும் அதை சுட்டி காட்டியதே இல்லை. அதைவிடவும் அவளை எந்தமாதிரி சூழ்நிலையில் அவளுக்குத் தாலி கட்டி இங்க கூட்டிட்டு வந்தேன் தெரியுமா?” என்று நடந்த விஷயம் அனைத்தையும் சொன்னான்.

இப்போ சொல்லு உன் காதல் உண்மையானதா? இல்லை அவள் காதல் உண்மையானதா? இந்தக் காலம் அவள்தான் எனக்கு தகுதியான மனைவி என்று தந்திருக்கு.நான் உன்கிட்ட பேச வந்ததுக்கு காரணம் மறுபடியும் உன் கிட்ட பல்லை காட்டுறதுக்காகவோ,இல்லை அவ வேண்டாம் நீ தான் வேணும் சொல்றதுக்காகவோ இல்லை. எனக்கு திருமணம் ஆகிட்டு இப்படி ஒரு சூழ்நிலை அப்படின்னு என் நிலையை உன்கிட்ட விளக்கத்தோடு சொல்லுறதுக்குத்தான் வந்தேன். ஆனால் நீயே என்னிடமிருந்து விலகியிருக்க நிறைய காரணங்களை எனக்கு தேடி கண்டுபிடித்து தந்ததற்கு நன்றி. அப்புறம் மித்ராவை நான் காதலிச்சாலும் காதலிக்காது போனாலும்கூட எங்கும் போகாமல் என்னை மட்டுமே காதலிப்பாள். அவள் காதல் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.நான் இப்போது மித்ராவின் கணவன் மோகன் மட்டுமே!”என்றவன் அவளிடம் வேறு எதுவும் பேசாது தனது வேலையை மட்டும் பார்த்தான்.

அவன் வேறு ஏதாவது சொல்லிருந்தால் கூட அவளால் அதைக் கேட்டுத் தங்கிக்க முடிந்திருக்கும்

ஆனால் உன் காதலை விட சிறப்பானது மித்ராவின் காதல்தான்தான்,அது உண்மையானதுகூட என்று சொன்னதும் பிரீத்தாவின் மனது வலிக்க விம்மிவெடித்து அழுதாள்.

அவளது அழகை சத்தத்தை கேட்டுத் பிரீத்தா தயவு “செய்து முன்னாடி இருந்து அழாத. எனக்கும் கொஞ்சம் உணர்ச்சி இருக்கு. நீ அழறதைப் பார்த்தால் மனசு வலிக்குது. நான் யாரையும் எதற்குமாம் காயப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறவன். ஆனால் உன்னால்தான் என் மனைவியை காயப்படுத்திட்டிருக்கேன்.எனக்கு அது பயமா இருக்கு,அதனால் தயவு செய்து நீ என்கிட்ட இந்தக் காதல் அது இதுன்னு சொல்லிக்கிட்டு வராத” என்று தன்மையாக சொன்னான்.

அதைக் கேட்டதும் பிரீத்தா தனது கண்களைத் துடைத்தவள் ஒரு முடிவோடு எழுந்து நின்று சுந்தர் என்று அழைத்தாள்.

அவன் நிமிர்ந்து பார்க்கவும் “உங்களை நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க விரும்பல மித்ரா உங்களை காதலிச்சா நான் உங்களை உயிருக்கு உயிரா காதலிச்சேன். அதனால் உங்களை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் மித்ராக்கிட்டக் கூட விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்றவள் வேகமாக வெளியே சென்றுவிட்டாள்.

பிரீத்தா பேசி சென்றதை கேட்டவன் என்னடா இது புது புயல் கிளம்புது. நானே என் பொண்டாட்டி கூட இப்பதான் ஆசையாக போறேன் .அதையும் கெடுக்க இவள் மொத்தமா பிளான் போட்டுட்டாப் போலிருக்கே என்று தலையும் புரியாத வாலும் புரியாது முழித்துகொண்டிருந்தான் மோகனசுந்தரம்!