என் நெஞ்சிலாடும் களபமே-17

என் நெஞ்சிலாடும் களபமே-17

களபம்-17

டெல்லி செல்லும் விமானத்தில் அருகருகே அமர்ந்தும் எதிரிகளைப்போல பேசாது மித்ராவும் மோகனும் உட்கார்ந்திருந்தனர்.

அவன் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் கேட்காது அருணும் ருக்குமணியும் பிடிவாதமாக மித்ராவை அவனோடு பேக் பண்ணி அனுப்பிட்டாங்க. அந்தக்கடுப்பில் மோகன் அவளோடு பேசாது அமைதியாக இருந்தான்.

மித்ரா ப்ளைட் ஏறும்போது எல்லோரும் வழினுப்ப வந்திருந்தனர்.

ருக்குமணி மெதுவாக மித்ராவிடம்”நீதான் அவன் பொண்டாட்டி அதை மட்டும் நல்ல மனசுல வைச்சிக்க.உன்னைத் தாண்டி வேற யாருக்கும் அவன்கிட்ட உரிமைக் கிடையாது. எனக்கும் சேர்த்துத்தான் சொல்லுறேன்.அவனை பத்திரமா பார்த்துக்க.நான் சொன்னது புரிஞ்சுதா?” என்று மகனையும் அடிக்கண்ணால் பார்த்துச்சொன்னார்.

அது மித்ராவுக்கான அறிவுரையில்லை.அது தன் மகனுக்காக சொன்ன அறிவுரை. அட மடையா இவதான் உன் பொண்டாட்டி இவளைத்தவிற வேற எவளுக்கும் உன்கிட்ட உரிமை எடுத்துக்க முடியாது.இனி வாழ்வோ சாவோ இவதான் உன் பக்கத்தில் இருக்கணும்.இதுதான் இனி உன் வாழ்க்கை என்பதை மண்டையில் ஆணி அடிக்கிறமாதிரி சொன்னார்.

அதில் கோபத்தில் நேரடியாக அம்மாவை முறைத்து பார்த்தவன் அப்படியே விறுவிறுவென்று போர்டிங் பாஸ் போட போனான்.

அருண் அவன் பின்னாடியே வந்தவன்”மச்சான் சாரிடா அன்னைக்கு கோபத்துல அடிக்க வந்துட்டேன்” என்று அவனது கையைப்பிடித்துக்கொண்டான்.

அவனது கையைத் தட்டிவிட்டவன் இப்போது அவனது கையை இறுக்கிப்பிடித்து திருக்கியவன் ”அன்னைக்கு உன்னை அடிக்கிறதுக்கு எனக்கு ரொம்ப நேரமாகியிருக்காது.ஸநீ நினைக்கிறமாதிரி நான் பழைய மோகன் இல்லை.ஸபுது மோகன் அடிச்சா திருப்பி அடிக்கிறவன். உன்னை அடிக்காததுக்குக் காரணம் நண்பன்கிறதுனால்தான். என் வாழ்க்கையை எப்படி வாழணும்னு நீங்க யாரும் சொல்லித்தரணும்னு அவசியமில்லை”என்று அவனது கையைவிட்டான்.

அருணும் மோகனும் பேசிமுடிக்கவும் மித்ரா அவனருகில் வந்தாள்.

இருவரும் சண்டைப்போட்டதை அவர்கள் காண்பித்துக்கொள்ளாது அமைதியாக நின்றனர்.

அந்த பிரயாணம் முழுவதும் எப்படி இருக்குமோ என்று பயந்து பயந்துதான் வந்தாள். ஆனால் இப்போது அவன் பேசாமல் இருக்கவும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஏர்ஹோஸ்டஸ் சொன்னபிறகும் அவள் சீட் பெல்ட் போடாது அமர்ந்திருந்தாள்.உடனே அதை அவனே எடுத்துப்போட்டுவிடவும் கண்களைத் திறந்தவள் என்ன செய்கிறான் என்று பார்த்துவிட்டு சீல்ட் பெல்ட் போடுறானா?என்று நினைத்துவிட்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டாள்.

இவளுக்கு இருக்கிற கொழுப்பைப்பாரு. இவளுக்கு நானே சீல்ட் பெல்ட் போட்டுவிடுறேன் ஒரு நன்றிக்கூட சொல்லாமல் முறைத்துப் பார்த்தவன் ”ஒரு பேசிக் மேனர்ஸ்கூட கிடையாது போலிருக்கு. அதெப்படி இருக்கும் வலுக்கட்டாயமா என்கூடத்தான் வாழ்ந்து ஆகணும்னு வர்றவக்கிட்ட இதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ச்சை” என்றவன் இப்போது கண்களை மூடிக்கொண்டான்.

அந்த ச்சை என்ற வார்த்தையில் மனதில் அடிவாங்கியவள் சட்டென்று கண்களைத் திறந்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் மனம் கலங்கியிருப்பது கண்கள் வழியாகத் தெரிந்தது.

அவனோ அதைக் கண்டுக்கொள்ளாது ”என்ன பார்க்கிற? உங்க அண்ணனும் அத்தையும் சொன்னவுடனே என்கூட வந்திட்டியே எனக்குன்னு ஒரு மனசு இருக்கு, எனக்கும் கொஞ்சம் மனசு மாற அவகாசம் கொடுக்கணும்னு உனக்குக்கூடவா தோணலை? அதுசரி எப்போடா இவனைக் கட்டிக்கலாம்னு இருந்தவதானே சமய சந்தர்ப்பம் கிடைச்சதும் ஒட்டிக்கிட்ட. உன்கிட்டலாம் வேற என்னத்தை எதிர்பார்த்திட முடியும்”என்று வாயிற்கு வந்ததைத் திட்டிவிட்டு கண்களைமூடிக்கொண்டான்.

அவ்வளவுதான் மித்ராவுக்குக் கோபம் வந்தது’அப்படியென்ன பண்ணிட்டேன்னு இப்படி பேசுறீங்கத்தான்.சின்ன வயசுலயிருந்தே ஒருத்தி மனசுல இவன்தான் புருஷன்னு சொல்லி சொல்லி அவ மனசுல ஆசையையும் வளர்த்துட்டு அது இல்லை பொய்யா போயிடுச்சுன்னு சொன்னால் எப்படி இருக்கும்?அந்த வலி உங்களுக்குத் தெரியுமா?’ என்று அவனிடம் சொல்லுவதுபோன்று மனதிற்குள்ளே திட்டிக்கொண்டாள்.

அவள் என்னவோ சொல்ல வருகிறாள் என்று பார்த்தான்.க்கும் அவள் வாயே திறக்கவேயில்லை.

க்கும் என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

டெல்லி வரும்வரைக்கும் இருவருமே பேசவேயில்லை. டெல்லியில் இறங்கியதும் அவன் நடந்து போகும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது பின்னாடியே ஓடினாள்.

அதைப்பார்த்தும் பார்க்கது போன்றே நடந்தான். இது சரியில்லையே என்று நினைத்தவள் கொஞ்சம் நின்று மெதுவாக மூச்சுவாங்கியவள் பின் மெதுவாக நடந்தாள்.

அவள் தனது பின்னாடிதான் வருகிறாள் என்று நினைத்தவன் திரும்பிப் பார்க்க அவளோ மெதுவாக வேடிக்கைப் பார்த்தவாறே நடந்தாள்.

மோகனுக்குக் கடுப்பாகியது. ஏய் அங்க என்னப்பண்ற சீக்கிரம் வா என்று சத்தமாகக்கூப்பிட்டான்.

ஏய்யா? அதுசரி மித்ரா இன்னும் மெதுவாக போ என்று உள் மனசு சொல்லவும் இரண்டு எட்டு மெதுவாக நடந்தாள்.

அப்புறம் எதுக்குப் பிரச்சனை என்று வேகமாகப்போய் அவனருகில் நின்றாள்.அதற்குள் டேக்ஸிக்கு அழைத்தவன் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு உட்காரவும் அவனது செல்போனின் இளையராஜா பாட்டு ஒலிக்க அழைத்தது யார் என்று புரிந்துக்கொண்டான்.

அவனது முகமே ஒரு மாதிரியாகிவிட்டது. போனை எடுத்தவன் அட்டென்ட் பண்ணாமலேயே பார்த்திருந்தான்.

மித்ராவுக்கு அவனது முகம் மாற்றம் வித்தியாசமாகத் தெரியவும் அவனது கையைப் பிடித்து அத்தான் என்று இரண்டுமுறை கூப்பிட்டபின்பு உணர்வுக்கு வந்தான்.

ஏய் எதுக்கு இப்படிபோட்டு உசுப்பிட்டிருக்க எனக்குத் தெரியும் போன் எடுக்கிறதுக்கு நீ பேசாமல் இரு போதும் என்று எரிந்துவிழுந்தவன் போனை எடுத்து காதில் வைத்தான்.

அந்தப்பக்கம் இருந்து பிரீத்தா “ஹாய் சுந்தர்ர் எங்க இருக்க? இன்னைக்கு வர்றேன்னு” சொல்லிருந்தல்ல. எப்போ வருவ?” 

ஆன் தி வேதான் இன்னும் இருபது நிமிஷத்தில் வீட்டுக்குப் போயிடுவேன்.வீட்டுக்குப்போனதும் கால் பண்றேன்.பை”என்று வைத்துவிட்டான்.

அருகிலிருந்த மித்ராவுக்கு அவன் திட்டியதும் ஒருமாதிரி உண்ர்ந்தாள். இவங்க அம்மா சொன்னதும் தாலிக்கட்டத் தெரியுது. ஆனால் அம்மா சொன்னதும் வாழத்தெரியல. அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கு தாலிக்கட்டினான் என்று நாக்கைப்பிடுங்கிற மாதிரி கேட்கத்தோன்றியது.

அவள் முன்பு பார்த்து வளர்ந்த மோகன் அத்தான் இது இல்லையென்று மட்டும் புரிந்துக்கொண்டாள். அதற்கான காரணம் முந்தையக் காதல் தோல்வியென்று நினைத்தாள். அங்கேதான் அவள் தவறு செய்துவிட்டாள்.

எதற்காக அவன் தனக்கு கொஞ்சம் டைம் குடுங்கன்னு கேட்டான்னு யாருக்குமே புரியலை.அது தெரியவந்தால் மித்ராவின் நிலை என்னவாகும்?அது அந்தந்த சூழ்நிலையை பொறுத்தது!

இப்போது இருவரும் அவன் தங்கியிருத்த பில்டிங் முன்பு இறங்கி அங்கிருந்து பொருட்களை லிப்ட்டில் கொண்டுவந்து இறக்கிவிட்டு சாவியைப்போட்டு வீட்டைதா திறக்க முயன்றான்.அது உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

மித்ரா தழையத்தழைய மஞ்சள் தாலியோடு அவனருகில் நின்றிருக்கு உள்ளிருந்துக் கதவைத் திறந்து சட்டென்று பிரீத்தா சந்தோசமாகச் சிரித்தவாறே “ஹாய் சுந்தர்ர்! சர்ப்பரைஸ்”என்று அவன் முன்பு காதலோடு வந்து நின்றாள்.

அதை முற்றிலும் எதிர்பார்க்காத மோகன் அதிர்ந்து நிற்க இவ எவ என்று மித்ரா மிரண்டுப் பார்க்க, பிரீத்தா மோகனும் மித்ராவும் ஜோடியாக வந்து நின்றதைப் பார்த்து ஜெர்காகி அதிர்ச்சியில் அப்படியே நின்றிருந்தாள்.

இப்போது பிரீத்தான் உணர்வுக்கு வந்துக் கோபத்தில் மித்ராவைப் பார்த்து”சுந்தர்! ஏ கோன் கேய்!”என்று தன்னை மீறி வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டுக் கேட்டாள்.

மோகன் தைரியமாக இது என் மனைவி என்று இந்தியில் சொன்னான்.

“வாட் தேரா பீவியே! க்யா போல்ரே பாகல்! தெர்க்கு கபி சாதி ஹோகய். மெர்க்கு பத்தா நய் சலா. க்யா ஐஸ்ஸா கியா சுந்தர். தேரேலியே மே வெயிட் கர்ரே ஃபிர் பி க்யூன் ஐஸ்ஸா கியா?து மே தில் தோடுதியா சுந்தர்”(ஏது இவ உன் மனைவியா?என்ன சொல்லிட்டிருக்க பைத்தியம்?உனக்கு எப்போ கல்யாணமாச்சு?எனக்குத் தெரியலையே.உனக்காக நான் காத்திருக்கேன்.ஏன் இப்படி பண்ணின சுந்தர்) என்று அவனது சட்டையைப் பிடித்து அவனிடம் நெருக்கமாக நின்று அழும் குரலில் கேட்டாள்.

அவள் கேள்விக்கேட்ட விதமுமம் அவர்களது நெருக்கமும் மித்ராவைத் திகைக் வைத்தது.

உடனே பிரீத்தாவின் அருகில் சென்றவள் அவளது கையை மோகனின் சட்டையில் இருந்து எடுத்துவிட்டு அவளைத் தள்ளி நிறுத்தியவள்”ஹீ இஸ் மை ஹஸ்பண்ட்!”என்ற ஒரு வார்த்தைத்தான் சொன்னாள்.

பிரீத்தா அவளது பார்வையையும் அவளது அந்த ஆட்டிட்யுடையும் பார்த்து என் புருஷனை நீ எப்படித் தொடலாம்னு அவள் உரிமையாகக் கேட்பதைப் புரிந்துக்கொண்டாள்.

உடனே அவனிடமிருந்து விலகி நின்றவள் சாரி என்றுவிட்டு மோகனிடம்”நீ இப்படி செய்வன்னு கனவுலக்கூட நினைக்கலை சுந்தர்.நீ என்னை நம்ப வைச்சு ஏமாத்திட்ட? ஊருக்கு அம்மாவுக்கு சுகமில்லைன்னு போயிட்டு இப்போ கல்யாணம் முடிச்சுட்டு வந்திருக்க.அப்போ உனக்குத் தெரிஞ்சேதான் ஊருக்குப் போயிருக்க.எனிவே கங்கிராட்ஸ்.உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை.உன்னை வெறுக்கிறேன்”என்றுவிட்டு வேகமாக ஓட்டையும் நடையுமாக சென்றவள் லிப்ட்டிற்குள் ஏறி அவனதுகண்களிடமிருந்து மறைந்துவிட்டாள்.

அவன் அப்படியே உறைந்து நிற்கவும் இது சரிப்பட்டு வராது என்று தனது சூட்கேஸை தூக்கிக்கொண்டு வலது காலை எடுத்துவைத்து உள்ளே சென்றாள்.

அங்கே உள்பக்கம் டீபாயில் இரண்டு கப்புக்களில் ஆவிப்பறக்க டீயும் அதில் ஒரு வாழ்த்து அட்டையும் பொக்கேவும் இருந்தது.

அவள் உள்ளே செல்லுவதைப் பார்த்ததும் வேகாமகப் பின்னாடியே போனான்.அதற்குள் அந்த பொக்கேயையும் வாழ்த்து அட்டையையும் மித்ரா கைக்கு இடமாறியிருந்தது.

அதைப் பிரித்துப் பார்த்தாள்.மோகன் அலைஸ் சுந்தர் அலைஸ் மோகனசுந்தரம் என்வனது மேல் உள்ள தனது காதலை அவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் எழுதி முத்தமிட்ட தடத்தோடு வைத்திருந்தாள். பொக்கேயில் வில் யூ மேரி மீ என்ற வாசகம்?இருந்தது!

அதை அப்படியே வைத்தவள் அங்கிருந்த டீ கப்பில் ஒரு கப்பினை எடுத்தாள்.அதிலும் அழகாக பிரீத்தா ஹார்ட்டின் வரைந்து வைத்திருந்தாள்.

அதுவும் ஒரு கப்பில் மட்டும் அது யாருக்கான கப் என்று தெரிந்தும் மித்ரா அதை எடுத்துக்குடித்தாள்.

அதைப்பார்த்தவன் இவள் புரித்துதான் செய்கிறாளா? இல்லை புரியாமல் அதை எடுத்து குடிக்கிறாளா? என்று குழம்பிப்போய் அவளைப் பார்த்தான்.

அவளோ எதையும் கண்டுக்காது டீயையைக் குடித்தவாறே மெதுமெதுவாக நடந்தவள் அவன் அந்த டீயை குடிக்க எடுக்கவும் அந்தப்பக்கமாக நடந்தவள் அவனை இடித்துவிட அந்த டீ கப் அப்படியே விழுந்து உடைந்து டீயெல்லாம் சிதறியது.

அச்சோ சாரித்தான் நீங்க ஆசையா குடிக்க வந்த டீ கொட்டிடுச்சே நான் வேணா வேற டீ போட்டுத்தரவா என்று பாவமாகக் கேட்டாள்.

இவள் தெரியாமல் செய்யல தெரிஞ்சே செய்யுறாள். இதுக்குமேல இவக்கிட்ட பேசக்கூடாது என்று குளிக்கச் சென்றவன் ஆபிஸுக்குக் கிளம்பிவந்தான்.

அவளோ அவனையே அசையாது பார்த்திருந்தாள்!