என் நெஞ்சிலாடும் களபமே-29

என் நெஞ்சிலாடும் களபமே-29

களபம்-29

மித்ராவுக்கு மோகன் முன்பு அடித்ததெல்லாம் பெரிய விசயமாகத் தோன்றவில்லை.

ஆனால் அவன் தன்னோடு நெருங்கி உயிருக்குள் ஊடுருவி வாழ ஆரம்பித்ததும் அதீத அன்பினால் பொசசிவ்னெஸ் வந்துவிட்டது என்று சொல்லுவதை விடவும் பிரீத்தாவின் மேல் ஒருவித வெறுப்பும்,தனக்கு முன்பாகவே தன் அத்தானின் காதலைப் பெற்றவள்,அவனது மனதை அசைத்தவள் என்ற ஆதங்கத்திலும் முற்றிலுமாக அவளை வெறுக்க ஆரம்பித்திருந்தாள்.

அவள் என்ன சொன்னாலும் கேட்பதில்லை என்ற முடிவோடு வேலை செய்தாள்.

ஆயுஷுக்கும் இந்த பனிப்போர் தெரியும்.ஆனாலும் அதை அவன் காண்பித்துக்கொள்ளாது பிரீத்தா செய்வதை மேனேஜ் பண்ணிட்டுப்போயிட்டே இருக்கான்.

இங்க மோகனுக்கு அவளை அடித்ததிலிருந்து மனதே சரியில்லை. முன்பெல்லாம் அவளை காயப்படுத்தினாலும் அதை கண்டுகொள்ள மாட்டாள்.

ஆனால் மோகனும் அவளும் நெருங்கி வாழ ஆரம்பித்தப்பின்பு இப்பொழுது ப்ரீத்தாக்காக தன்னை அடித்ததும் அதை நெஞ்சுக்குள் பெரும்வலியாக உணர்ந்து அதை ஃபீல் பண்ண ஆரம்பித்தாள்.

மோகன் அடித்தப்பின்பு அவளோடு கட்டிப்பிடித்து அணைத்து சமாதானம் என்ற பெயரில் அவளோடு இணைந்தாலும் அவளுக்கு ஏனோ அந்த உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது .

ப்ரீத்தாவை பத்தி நல்லவள் வல்லவள் என்று சென்னவனுக்கு தன்னை அடித்ததும் அதனுடைய வலியையும் புரிய முடியவில்லையே.

ஆனால் தன்னவன் இன்னொருத்திக்காக தன்னிடம் பேசும் போது வரும் வலி வேதனை என்பது எல்லாவற்றிலும் பெரியது என்று அவனுக்குப் புரியவில்லை.

ஒரு பெண் எதில் வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பாள்.ஆனால் தன்னவன் தனது மனதிற்குப் பிடித்தமானவன் என்று வரும்போது அதீதமானமான அன்பை மட்டுமே அவள் எதிர்பார்பார்ப்பாள். அவன்மேல் உயிரான உரிமையும் வரும்.

அதனால் பிரீத்தா மேல் மித்ராவுக்கு அவ்வளவு கோபம் வந்தது.அதை மோகனுக்காக மறைத்து வைத்துக்கொண்டாள்.

அன்றும் அப்படித்தான் ஆபிஸிற்குள் நுழைந்ததும் நேராகத் தனது கேபின் போய் எல்லாம் எடுத்து வைத்தவள் ஆயுஷைப் பார்க்கப்போனாள்.

அங்கே பிரீத்தா இருந்தாள்.அவளைப் பார்த்ததும் காலையிலயே இவக்கிட்டப்போனால் நம்மை மூளையை தின்றுவா என்று நினைத்து அப்படியே யூ டேர்ன் அடித்து வெளியே வந்து தனது வேலையை செய்யத் தொடங்கினாள்.

ஆயுஷுக்கும் அது புரிந்ததால் கண்டுக்காது தங்கையுடன் இப்போது முடிந்திருக்கும் பில்டிங்கினைப் பத்தியும் அதை ஒப்படைப்பதைப் பத்தியும் பேசிக்கொண்டிருந்தான்.

ஆனால் பிரீத்தா மித்ரா வந்துப்போனதையும் அவள் தன்னை மதிக்காது போனதையும் மனதில் குறித்துக்கொண்டு அமைதியாக பேசிமுடித்துவிட்டு எழுந்து வெளியே வந்தாள்.

அவளது கையில் மித்ராவின் ப்ளான் இருந்தது.அதை நேராக வந்து மித்ராவின் முகத்தில் தூக்கிவீசியவள் ஹிந்தியில் திட்ட ஆரம்பித்தாள்.

“நீயெல்லாம் எதுக்கு பட்டிக்காடு மாதிரி வந்து இங்க வேலைப்பார்க்கிற. உன் மைண்ட் உங்க சவுத் இண்டியன் புத்திக்குள்ளதான் இருக்கும். என்னதான் எம்.ஈ படிச்சிருக்கன்னு சொன்னாலும் உன்னால் ஒரு காம்ப்ளெக்ஸ்க்கான சரியான ப்ளான் போட்டு எடுத்துட்டு வரத்தெரியலை. நல்ல ஆபிஸ் ப்ளாட்டு ஆபிஸ் சாப்பாடுன்னு வந்துட்டுப் போகத்தெரியுது. இதை ஒழுங்கா பண்ணத் தெரியலையா? இப்பவே ரிசைன் பண்ணிட்டு ஓடிப்போயிடு.இதுதான் உன்னை நான் இந்த ஆபிலில் பார்க்கிறது கடைசியாக இருக்கணும்”என்று கத்தினாள்.

அடுத்த நொடியே “நான் ஏன் போகணும்?போகமுடியாது.நான் நீ சொன்னதும் அப்படியெல்லாம் போகமாட்டேன். இப்போ நீ செய்வ?”என்று தனது கையை வயிற்றுக்கு குறுக்காகக் கெத்தாகக் கட்டிக்கொண்டு கேபின் டேபிளில் சாய்ந்துக்கொண்டு இந்தியில் மித்ரா பிரீத்தாவிடம் கேட்டாள்.

மித்ரா ஹிந்தியில் அதுவும் சுத்தமான இந்தியில் பேசுவாள் என்று சத்தியமாக பிரீத்தா எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவ்வளவு தெனாவட்டாக கேத்தாக ஒரு மதராஸி பேசியதைக் கேட்டு பிரீத்தாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அதை விடவும் இப்பொழுதுதான் தனது கம்பெனியில் ட்ரைனிங்காக வந்து வேலை பார்க்கும் மித்ரா தன்னை எதிர்த்து பேசுவதா? என்று கோபம் ஆத்திரம் ஈகோ என எல்லாம் தலைக்கேறி அவளை ஒரு விதமான ஹிஸ்ட்டிரியா பேஷன்டைப் போல் மாற்றி இருந்தது.

“எனக்குக் கீழே வேலை செய்யுறவ நீ என்னை திமிராக எதிர்த்துப் பேசுறியா?”என்று அடிக்க கையோங்கியவளைத் தடித்துப் பிடித்தாள் மித்ரா.

“ஏய் ஏய் எப்படி நீ என் கையைப்பிடிச்சுத் தடுக்கலாம்?” என்று அவளைத் தள்ளிவிட்டாள் பிரீத்தா.

அதில் தடுமாறி விழப்போனவள் டேபிளைப்பிடித்து தன்னை நிதானப்படுத்தி நின்றுவிட்டாள். அடுத்த நொடியே மித்ரா பிரீத்தாவை ஓங்கி வேகமாக அறைந்திருந்தாள்.

அங்கே பிரச்சனையென்று ப்யூன் சொன்னதும் ஓடிவந்த மோகன் சரியாக மித்ரா பிரீத்தாவை அடித்ததைத்தான் பார்த்தான்.

அதற்குமுன்பு பிரீத்தா தன்மனைவியைத் திட்டியது, அடிக்கவந்தது, அவள் தடுத்தது என்று எதுவுமே தெரியாது வந்து நின்றவன் கண்முன்னால் பிரீத்தாவை மித்ரா அடித்ததுதான் பட்டது.

‘நான் இவ்வளவு சொல்லியும் அவள்மேல் வன்மத்தோடு இருந்து அடிச்சிட்டாளே’ என்று ஓடிவந்தவன் பிரீத்தாவை அவளிடமிருந்து விலக்கி நிறுத்தியவன் மொத்த கோபத்தையும் தனது கைகளில் இறக்கி மித்ராவை அறைந்து விட்டான்.

அதில் அப்படியே உறைந்து நின்றவளுக்கு அந்த இடத்தில் அத்தனைபேர் முன்பும் பிரீத்தா அடிக்கவந்ததையே கேவலமாக நினைத்தவளுக்கு இப்போது தனது புருஷனே பிரீத்தாவுக்காக வந்து தன்னை அடித்ததும் துடித்துப்போனாள்.

அவளது கண்களில் அனல் பறக்க அப்படியே தள்ளாடி நின்றவள் அரைமயக்கத்தோடு சரிந்து உட்கார்ந்துவிட்டாள்.

ஆயுஷும் வெளியே வந்து நடந்ததைப் பார்த்துவிட்டு பிரீத்தாவைப் பிடித்து அடித்தவன்”உனக்கு அறிவிருக்கா அவள் ப்ளான் சரியில்லைன்னு நான் சொன்னேனா? இல்லையே! அப்புறம் எப்படி நீயா ஒன்றை உருவாக்கிஅவகிட்ட சண்டைபோட போன ? நீ அவளை அடிக்க போனதுனால்தானே அவளும் தடுத்து திருப்பி அடிச்சா .நீ செய்தது தப்புத்தானே!”என்று அவளை திட்டினான்.

தனது அண்ணன் தன்னை அடித்ததும் அப்படியே பதறி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு பிரீத்தா அழுதாள்.

அதைவிடவும் ஆயுஷ் பேசியதை கேட்டதும் குற்ற உணர்ச்சி வந்தது. அதனால் கண்களை தாழ்த்திக் கொண்டு அப்படியே அமைதியாக நின்றாள்.

மொத்த ஆபிஸும் வேடிக்கைப் பார்க்க இப்போது ப்யூன் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து மோகனிடம் கொடுத்தான்.

மோகனுக்கு இன்னும் மித்ராவின் மேல் கோபம் போகவில்லை. ஆனாலும் மயங்கிவிட்டாளே! என்று முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை எழுப்பினான்.

தண்ணீர் தனது முகத்தில் பட்டதும் மெதுவாக கைகைளை ஊன்றி எழுந்து நின்றவளால் சரியாக நிற்கமுடியாது தள்ளாடவும் மோகன் வந்து அவளது கையைத் தாங்கிப்பிடித்தான்.

அவனது கையைத் தன் கையிலிருந்து விலக்கிவிட்டவள் வேகமாக ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து எழுதி அதை ஆயுஷிடம் நீட்டினாள்.

ஆயுஷோ “என்ன மித்ரா நீங்க கொஞ்சம் பொறுமையானவங்க. இப்படி அவசரப்பட்டு ரிசைன் பண்ணலாமா?என் தங்கச்சி செய்ததுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.

மன்னிச்சிடுங்க அவள் எதையோ மனசில் வைத்துக்கொண்டு என்னத்தையோ செய்து வைச்சுட்டா.சாரி” என்று கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டான்.

“பையா என்னதிது. நீ எதுக்கு மன்னிப்புக் கேட்கிற.நான் வேணும்னா மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என்று பிரீத்தா உண்மையை உணர்ந்துப் பேசினாள்.

அதற்குள் மித்ரா அங்கு நின்றிருந்த யாரையும் கவனிக்காது வேகமாக வெளியே நடந்தாள்.

உடனே மோகன் அவள் பின்னாடியே ஓடிப்போய் அவளது கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான்.

அவனது கையின் பிடியில் இருந்து தனது கையை விலக்கிவிட்டவள் “இதுக்குமேல உன் கை என்மேலப்பட்டுது அப்புறம் நடக்கிறதே வேற உனக்குப் பிடிச்சவளுக்காக என்னை அத்தனைபேர் முன்னாடியும் அடிச்சிட்டல்ல.நீயும் வேண்டாம் உன்கூட வாழ்ற இந்த வாழ்க்கையும் வேண்டாம்” என்று வேகமாக வெளியே வந்தாள்.

அதைப்பார்த்த பிரீத்தாவும் தன்னால் சுந்தரோட வாழ்கையிலும் பிரச்சனையாகிட்டே என்று பிரீத்தாவும் வெளியே ஓடிவந்தாள்.

சரியாக மித்ரா வெளியே ஓடி வரவும் அவளுக்கு முன்பாக ஒரு கார் வந்து நின்றது.

அந்தக்காரைக் கோபத்தில் ஓடிவந்த மித்ரா கவனிக்காது போனாள்.

மித்ராவின் அருகே பிரீத்தாவும் வந்துநிற்க இருவரையும் ஒன்றாக அந்தக்கார் தனது கதவைத் திறந்து உள்ளவாங்கிக்கொண்டு வேகமாகப் பறந்தது.

தனது தங்கையின் பின்னாடி ஓடி வந்த ஆயுஷும் அந்தக் காரின் பின்னாடி ஓடினான்..

மித்ரா கோபத்தில் போவாள் என்று விபரீதத்தை உணராது மெதுவாக நடந்துவந்த மோகன் வரவும் காரும் அவர்களைக் கடத்தியிருந்தது.

மோகனும் ஆயுஷின் பின்னாடி ஓடினான்.மோகனுக்கு மொத்தமாக மூளை வேலைசெய்யாது ஓடாது அப்படியே நின்றுவிட்டான்.

ஆயுஷ்தான் நம்பரை குறித்து வைத்துக் கொண்டான் இருவரும் பின்னாடியே ஓடியும் அந்தக் கார் எங்குப்போனது என்று கண்டுப்பிடிக்க முடியாது போனது.

மித்ராவை நான் ஏன் பின்னாடியே ஓடிப்ப பிடிக்கணும் என ஆண் என்ற திமிரில் பாதியிலே நின்ற மோகனுக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அந்த கடத்தலை கண்டதும் பயம் வந்துவிட்டது.

அப்படியே பேயறைந்தது போன்று நின்றிருந்தான். என்னடா நடக்குது? என் பொண்டாட்டி இந்த ஊருல யாருடா கடத்தினது? என்று திக்குத்தெரியாது நடுரோட்டில் நின்றான்.

ஏற்கனவே ஆயுஷின் மாமா நரேஷ் குப்தா தானே கமிஷனர்.உடனே ஆயுஷ் தனது மாமாவுக்கு அழைத்து பிரீத்தா மித்ரா இருவரையும் ஒன்றாக யாரோ கடத்திசென்றுவிட்டனர் என்று புகாரளித்தான்.

அவன் குறித்து வைத்திருந்தக் காரின் நம்பரையும் கொடுத்தான். உடனே தனது அப்பா குப்தாவிற்கும் அழைத்து பிரீத்தாவும் மித்ராவும் கடத்தப்பட்ட செய்தியை சொல்லிவிட்டான்.

அந்தக் காரை மூன்றாவது சிக்னலிலே போலீஸார் மடக்கிப் பிடிக்க முயன்றனர்.ஆனால் கார் வேறு திசையில் போய் போலீசாரையே திகைக்கவைத்தனர்.

கடத்திய கார் நம்பரை வைத்து தேடி பிடிக்கலாம் என்று அந்த நம்பரும் பொய்யான நம்பர். உடனே என்ன செய்யலாம் என்று போலீசார் தலையை பிய்த்துக்கொண்டனர்.

ஆனால் மோகன் இப்போது கொஞ்சம் தெளிவாக யோசித்து” என் மனைவியையும் பிரீத்தாவையும் சேர்த்துக் கடத்தனும்னா அது ராம்சிங்கால் மட்டும்தான் முடியும். எதுக்கென்றால் என்னாலயும் இந்தக் கம்பெனியாலயும் பாதிக்கப்பட்டவன் அவன் மட்டும்தான்.அதனால் அவன்தான் கடத்தியிருக்க அதிக வாய்ப்பு. அவனை தேடி கண்டுபிடித்தாலே என் மனைவி எனக்கு கிடைத்து விடுவாள்” என்று மித்ராவுக்காக பேசினான்.

அப்பொழுதுதான் ஆயுஷ் மோகன் மனதில் முழுதாக இருப்பது மித்ரா மட்டும்தான் என்று புரிந்துக் கொண்டான்.அவன் மனதில் பிரீத்தா என்ற ஜீவன் இல்லவே இல்லை .அவனது மனதில் முழுக்க முழுக்க மித்ரா தான் உட்கார்ந்து இருக்கிறள்.மித்ராதான் தன் மனைவியென்று முழுதாக உணர்ந்து விட்டான். அவனது தவிப்பு முழுவதும் மித்ராவின் மீதுதான் இருக்கிறது தவிர அவளோடு கூட கடத்தப்பட்ட பிரீத்தாவை பற்றி அவன் சிந்திக்கவே இல்லை.இந்த பிரீத்தாதான் அநாவசியமாக மித்ராவிடம் சண்டை போட்டு இவ்ளோ பெரிய பிரச்சனையாகிக் கொண்டாள்”என்று தனது தங்கைக்காக மிகவும் வருந்தினான்.

இருவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்தான்.

அதற்குள் கார் சென்ற திசையையும் அங்கிருந்த சீ.சீடிவியையும் பார்த்து அவர்கள் கடத்தப்பட்டு வைத்திருக்கும் இடத்தை ஓரு மணிநேரத்தில் கண்டுப்பிடித்துவிட்டனர்.

மோகன் ஆயுஷ்கூடவே சென்றான். எல்லோரும் அவரவர் காரில் போலிசார் சொன்ன இடத்திற்குப்போய் இறங்கினார்கள்.

அங்கே சென்று இறங்கியதும் மோகன் வேறு யாரையுமே கவனிக்காது மித்ரா எங்க இருக்காள் என்று தேடி ஓடினான்.

அவள் பயத்தோடு நடுக்கத்தோடு நின்றிருப்பதைக் கண்டதும் ஓடிப்போய் தாவி கட்டிக்கொண்டு இறுக அணைத்துக்கொண்டான்.

அங்கு பிரீத்தா கடத்தப்பட்டாளே அவளை காப்பாற்றினார்களா? அவள் என்னவானாள்? என்று எதையுமே அவன் யோசிக்கவேயில்லை.

மித்ரா தனக்கு கிடைத்துவிட்டாள் என்ற நிம்மதியில் அப்படியே அவளை கட்டிக் கொண்டிருந்தான். அவனைப் அப்படிப் பார்த்ததும்தான் பிரீத்தாவுக்கு ஒரு உண்மை மண்டையில் அடித்தது போன்று உரைத்தது.

என்ன இருந்தாலும் மோகன் தன்னால் காதலிக்க பட்டவன் மட்டுமே! ஆனால் மித்ராவுக்கு அப்படியில்லையே!

அவனோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் அவனது எதிர்காலமே அவள்தான்.அவனது உயிரானது மனைவியிடமே இருக்கிறது. அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவே உண்மையானது.அவள் அவனுக்கு யாருமில்லை என்று வாழ்க்கை கன்னத்தில் அறைந்து பிரீத்தாவுக்கு புரியவைத்திருந்தது.