என் நெஞ்சிலாடும் களபமே-28

என் நெஞ்சிலாடும் களபமே-28

களபம்-28

மோகன் லீவு எடுத்ததும் எடுத்தான். அன்று முழுவதும் மித்ராவோட தன் உறவை வளர்ப்பதிலும் அவளோட நேரம் செலவழிப்பதிலுமேதான் அந்தநாளைக் கடத்தினான்.

தனது அறைக்குள் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த மித்ராவை தூக்கிக் கொண்டு போய் தன்னருகே படுக்க வைத்தான்.

அப்படியே அவள் மீது கையை போட்டுக்கொண்டு அவளை தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டும் தூங்கினான்.

இன்னும் மித்ராவுக்கு மோகன் மீது சின்னதாகப் பயம் இருக்கத்தான் செய்தது.நல்லத்தூங்கி காலையில் எழுந்தவள்மோகன் அத்தான் குணம் அன்னைக்கு மாதிரியே கோபமாக மாறியிருக்குமோ என்று பயந்துதான் கட்டிலில் அத்தான் இருக்காங்களா என்று பார்த்தாள்.

அங்கு மோகன் கட்டிலிலும் இல்லை.அந்த அறையிலும் இல்லை. ”இந்த அத்தானை எங்க?அதுக்குள்ள ஆபிஸ் கிளம்பிப் போயிட்டாரோ? அவ்வளவு நேரமா நம்ம தூங்கியிருக்கோம். அச்சோ”என்று மணியைப் பார்த்தாள்.

அது ஆறுமணியைத்தான் காண்பித்தது.ஹப்பாடா இதுக்கும் ஏதாவது சொல்லிட்டா என்ன பண்றது என்று எல்லாம் எடுத்து செட் பண்ணிவைத்தாள்.

அதுவரைக்குமே அவனைக் காணவில்லை”இந்த அத்தான் நமக்கு முன்னாடி காலையில் எழும்பிட்டாரே? என்னாச்சோ தெரியலையே?ஏழு மணிக்கே ஆபிஸ் போக எந்த ஆபிஸ் திறந்துக்குமா? என்று வேகமாக வெளியே வந்து பார்த்தாள்.

அங்கே கிச்சனில் காபி போட்டுக்கொண்டிருந்தான். இதை நம்புறதா? வேண்டாமா? இந்த வாழ்க்கையை அனுபவிக்கிறதா? வேண்டாமா?

 மித்ரா ஒரே நாள்இராத்திரிக்குள்ள என்னமோ மாயாஜாலம் நடந்த மாதிரியே இருக்குதே? என்று கண்களை உருட்டி முழித்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்தவன் நல்லா அழகான புன்னகையுடன் “ குட்மார்னிங்டி நல்ல தூங்குனியா? போய் பிரஷ் பண்ணிட்டு வா காபி குடிக்கலாம். அப்படியே ஆபீஸ்க்கு கிளம்பி விடுவோம்” என்று அவன் கேஸுவலாகச் சொல்லிக் கொண்டே காபியோடு ஹாலிற்குச் சென்றுவிட்டான்..

“ஆஹா இந்த அத்தான் ஒரு மார்க்கமா இருக்காரே! கண்டிப்பா ஆஃபீஸ்க்கு போய்தான் ஆகணுமா? அந்த வெள்ளை கொழுக்கட்டை வேற அங்க இருக்குமே! இதுக்குத்தானே அந்த ஆபிஸுக்கு வரமாட்டேன் வேண்டாம், வரமாட்டேன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன். இவரை எப்படி சமாளிக்கிறது?” என்று தெரியாமல் உள்ளே போய் பிரஷ் பண்ணி குளித்துவிட்டு வெளியே வந்து சாமி அறையின் முன்புபோய் நின்றிருந்தாள்.

“பிரஷ் பண்ணிட்டு காபி குடிக்கதானே வர சொன்னேன் அதுக்குள்ள நீ குளிச்சிட்டு வந்துட்டியா? அப்போம் பிரேக் பாஸ்ட்டும் லஞ்சும் பண்ணிடு இரண்டு பேருக்கும் சேர்த்து எடுத்துட்டு போயிடலாம். இதுக்கு முன்னாடி லன்ச் கேண்டின்ல சாப்பிடுவேன்.இப்போ உன் சமையல். எங்க அம்மா சமையல்மாதிரியே இருக்கும். தினமும் இரண்டு பேரும் கொண்டுப்போய் சாப்பிட்டுக்கலாம்” என்று சொன்னவன் குளிக்க போயிட்டான்.

உடனே போனை கையில் எடுத்தவள் ருக்குமணிக்கு அழைத்து வேலைக்கு போறதை பத்தியும் அவரது மகன் என்ன செய்கிறான் என்பது பத்தியும் டீட்டைலாக சொல்லி முடித்திருந்தாள்.

ருக்மணிக்கு இப்பொழுது சந்தோஷமா இருந்தது. எது எப்படியோ நம்ம மகன் நம்ம நினைத்த மாதிரி மித்ராவோடு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டான். இதுவே பெரிய விஷயம்தான் என்று நினைத்தவர் இப்பொழுது சாமிக்கு வேண்டி கொண்டார்.

அப்படியே நித்ராவுக்கும் அழைத்து அம்மாவிடம் பேசி வேலைக்கு போறது சொல்லி அவளுக்கான ஆசீர்வாதத்தை போன் வழியாகவே வாங்கிக் கொண்டாள்.

சமையல் எல்லாம் முடித்து அவள் எல்லாம் டேபிளில் வைத்துவிட்டு முதல் முறையாக வேலைக்கு செல்கிறோம் புடவை கட்டிட்டுப் போவோம் என்று அறைக்குள் சென்றாள்.

அவன் இன்னும் குளித்துவிட்டு வரவில்லை என்ற தைரியத்தில் நிதானமாக கதவைத் தாட்பாள் போடாது சாத்திவைத்துவிட்டு புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாள்.

சும்மாவே மோகன் சைக்கிள் கேப்பில் டிப்பர் லாரியே ஓட்டுவான் வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவானா என்ன!

மோகன் குளித்து முடித்து டவுலைக் கட்டிக்கொண்டு அறைக் கதவை திறந்து வேகமாக உள்ளே வந்தவன் பார்த்தது பாவாடையும் பிளவுஸும் போட்டிருந்தவள் புடவைக்கு மடிப்பு எடுத்துக் கொண்டிருந்த மித்ராவைத்தான்.

அவன் இந்த நேரத்தில் உள்ளே வருவான் என்று எதிர்பார்க்காதவள் அப்படியே புடவை கையில் வைத்தவாறே அதிர்ந்து அப்படியே அவனை பார்த்திருந்தாள்.

அவன் அப்பொழுதுதான் தலையை அரைகுறையாக துவட்டிவிட்டு இடுப்பில் ஒரு டவலோடு வந்து நின்றிருந்தான்.அவனது நெஞ்சில் இருந்தா ரோமங்களின் நடுவே நீத்திவலைகள் திட்டுத்திட்டாய் இருக்கவும் அதையே ரசித்துப் பார்த்திருந்தாள்.

அவனோ அவள் அறைகுறை ஆடையில் இருக்கும் அந்த கோலத்திலும் எவ்வளவு அழகு என்று அவளது அழகை இன்னும் அதிகமாக உணர்ந்தவன் கண்ணெடுக்காது பார்த்தவாறு மெதுவாக அவளருகில் நடந்து வந்தான்.

மோகன் தன்னருகில் வந்தவுடன் மித்ரா தன்னை அறியாது கைகளை நீட்டி அவன் நெஞ்சில் இருந்த தண்ணீரைத் தொட்டு அதை துடைத்து விட்டாள்.

அவளது அந்த பூப்போன்றகரம் தன்நெஞ்சில் ஒட்டிக் கொள்ளவும் அவளது மென்கரத்தைதனது நெஞ்சிலே ஒட்டிப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

மித்ரா வெட்கம் கலந்த புன்னகையோடு அவனை ஏறிட்டு பார்த்தாள். அந்த கண்களுக்குள் என்ன கண்டான் என்று தெரியாது?உடனே குனிந்து அவளது இதழில் அவ்வளவு மென்மையாக ஒரு முத்தம் வைத்து மீண்டான்.

இருவருக்கும் உள்ள இடையே ஒரு மெல்லிய உணர்வு அவர்கள் அறியாத உருவாகிக்கொண்டே வந்தது. அதை இப்பொழுதும் உயிரின் பிணைப்பாக இறுக்கியிருந்தது.

மித்ரா மோகனின் நெஞ்சிலிருந்தத் தனது கையை மெதுவாக எடுத்தாள். அப்பொழுதுதான் தான் ஒரு கையில் புடவையை பிடித்துக் கொண்டு வெறுமனே பிளவுஸோட அவன் முன்பாக நிற்கிறோம் என்பதை புரிந்து உண்ர்ந்து சட்டென்று அந்த புடவையால் தனது நெஞ்சை மறைத்துக் கொண்டாள்.

தனது நாக்கைக் கடித்துக் கொண்டு அவனை ஏறிட்டு பார்க்காது வேறு பக்கமாக முகத்தை திருப்பி நின்றாள்.

அவள் அருகில் நெருங்கியவன் அவளது முகத்தை தன் பக்கமாகத் திருப்பி தன்னை பார்க்க வைத்தான்.

“ஆமா இப்ப எதுக்கு இந்த புடவை கொண்டு உன் நெஞ்சை மறைக்கிற? எனக்கு தெரியாம எதுவும் புதையலை மறைச்சு வச்சிருக்கியா என்ன?: என்று கேட்டான்.

“ச்ச்சீ அத்தான்” என்று முகம் சிவந்து சிணுங்கியவளின் கையைப்பிடித்து விலக்கி இருமலைக்குன்றென நிற்கும் மலர்கூம்புகளைக் கண்களாலே கொய்தெடுத்தான்.

அவ்வளவுதான் மொத்தமாக அந்த வெட்கத்தில் விழுந்தே போனான் அந்த மானஸ்தன் மோகனசுந்தரம்!

அவளின் தோளில் கைவைத்தவன் கழுத்தை மெதுவாகப் பிடித்து தனது ஈர உதட்டினால் அவளது கன்னத்தில் தடவிக்கொடுத்தான்.

அவ்வளவுதான் மித்ராவின் கையில் இருந்த புடவை நழுவியது.அவனது கைகள் தானாக அவளது பிளவுசிற்குள் சென்றது.

அதனது கொக்கிகளை அவ்வளவு பொறுமையாக கழட்டியவனின் விரல்கள் நுனிமொட்டுக்களைத் தடவிக்கொடுக்க மித்ரா சட்டென்று அவனை நெருங்கி நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.

“ஏய்ய் செய்யிற வேலையை முழுசா செய்யவிடுடி” என்று மென்குரலில் ரகசியம் பேசியவன் அவளைத் தூக்கி கட்டிலில் சரித்து தன் விரல்கள் பதம் பார்த்ததை நாவினால் ருசிபார்க்க சுழற்றினான்.

இப்போதுதான் குளித்து வந்தவனின் கைகள் குளிரைக்கொடுக்க நாவோ அனலைக்கொடுத்தது.அதில் துடித்தவளின் வயிறு அதிர்ந்தது.

இடதுகையால் வயிற்றினைத் தடவியவாறே வலதுகையால் பூமொட்டுக்களைப் பிடித்துத் திருக்கி வாயில் வைத்து கடித்து இழுத்து இளமைக்கு தீனிப்போட்டுக்கொண்டிருந்தான்.

ஆகமொத்தம் குளித்துவந்தவர்கள் மீண்டும் வியர்வையில் குளித்து இரு தேகமும் உரசி உரசி மோகத்தீயை உண்டுபண்ணி அதில் குளிர்க்காய்ந்து ஒருவருக்குள் மற்றவர்கள் புதையல் எடுத்தனர்.

அதன்பின் மணியைப் பார்த்து அரக்கபறக்கக் கிளம்பிய ஆபிஸிற்குள் ஒன்றாகவே நுழைந்தனர்.

புதியதாக வந்திருக்கும் சிவில் இன்ஞ்சினியர் மோகன் சாரின் மனைவியென்று இப்போது ஆபிஸ் முழுவதும் பரவியது.அவளுக்கு கூடுதல் மரியாதையும் கிடைத்தது.

ஆயுஷிற்கு அசிஸ்டென்டாக வேலை என்பதால் முதலில் ட்ரெயினி என்று நிறைய வேலைகள் இருந்தது.

மோகனும் மித்ராவும் அடிக்கடிப் பார்த்துக்கொள்ளாவிட்டாலும் மனைவி இங்கு புதுசு என்று அவனே தேடிவந்து அடிக்கடிப் பார்த்துக்கொண்டான்.

“அதைப்பார்த்தப் பிரீத்தாவுக்குத்தான் மனசெல்லாம் வலித்தது. இந்த வாழ்க்கைக்குத்தானே நான் ஆசைப்பட்டேன். ஏன் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை கடவுள் எனக்கு தராமல் வேற ஒருத்திக்கு அந்த வாழ்க்கையை கையில் கொடுத்து எனக்கு எதிரியாக நிறுத்தி இருக்கிறார்” என்று மனம்நொந்துபோனாள்.

அந்த மன வேதனையோ அவளது கோபத்தை அடிக்கடி கிளறியது. அந்தக் கோபத்தை பிரீத்தா வேலை விஷயத்தில் மித்ராவிடம் காண்பிக்க தொடங்கினாள்.

அடிக்கடி அவளைத் திட்டுவதும் மற்றவர்கள் முன்பில் வைத்து ஏளனமாகப் பேசுவதுமாக வந்து ஒரே வாரத்தில் பிரீத்தா அவளை கார்னர் செய்யத்தொடங்கினாள்.

மித்ரா இதைப்பத்தி எதையுமே மோகனிடம் சொல்லவில்லை. ஆனால் அவனுக்கே அது தெரியவந்தது.

அவள் வேலைக்கு வந்து மாதம்கூட ஆகவில்லை தங்களது காரில் இருவரும் வீடு நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போதே மித்ரா சோர்வாகப் படுத்துவிட்டாள்.

“என்னடி?இப்படிபடுத்துட்ட?”

“முடியலத்தான் ஒரு மாதிரி சோர்வா இருக்கு அதுவும் இல்லாம அந்த வெள்ளை கொழுக்கட்டை என்னை எப்போப்பாரு அது சரியில்லை இது சரியில்லைன்னு நோண்டிக்கிட்டே இருக்காள்.

ஆனால் ஆயுஷ் சார் அப்படி இல்ல அவர் பர்பெக்டா பண்ணி இருக்கேன்னு சொன்னாலும் இவ வந்து டிராயிங் சரியில்ல பிளான்ஸ் சரியில்லன்னு சொல்றா.அது இதுன்னு சொல்லிட்டேயிருக்கா.. என்னைக்கு என்கிட்ட அடிவாங்க போறாளோ என்று வேதனையிலும் கோபத்திலும் சொன்னாள்.

“ஏய் அப்படி எல்லாம் அடிச்சு கிடிச்சு வைச்சிடாதடி.அவ ஒரு பாவம். எங்கேயோ உள்ள காண்டுல உன்கிட்ட காட்டப் பாக்குற அவளுக்கான மன வேதனைக்கு அது ஒரு சின்ன ஆறுதலா இருக்கட்டும் அவ்வளவுதான் விடு.அவளுக்கு வரன் பாக்குறாங்களாம் என சீக்கிரம் கல்யாணம் முடிஞ்சு போயிடுவாள். அதனால் கொஞ்சம் பொறுமையா இரு புரியுதா”

“ம்ம்ம்”என்று தலையாட்டியவளுக்குக் கண்ணீர் வந்தது.அதை துடைக்கவும் கண்டுக்கொண்டவன் அவளது நாடியைப்பிடித்து திருப்பிப் பார்த்தான்.

“நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கேன் இந்த அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினா என்கிட்ட எந்த காரியமும் நடக்காது. நான் சொன்னா ஒரு காரணம் இருக்கும். நீ அங்க மோகன் சார் பொண்டாட்டின்னு எல்லாத்துக்கும் தெரியும் .அதனால் அவளை யாரும் என்னோட பொண்டாட்டின்னு சொல்ல போறதில்லை. நான் என்ன சொல்லுறேன்னு புரியும்னு நினைக்கிறேன். நான் உன் கழுத்துலதான் தாலி கட்டிருக்கேன். உன்கூடத்தான் வாழ்ந்துட்டிருக்கேன். அதனால் நீ என்ன மட்டும் நம்பு மத்தவ பேசுறதையெல்லாம் எதுக்கு காதுல எடுக்குற? உனக்கு நான் இருக்கேன்ல”என்றுவிட்டு காரை வேகமாக எடுத்தான்.

அதிலயே அவனது கோபம் தெரிந்தது.இருவரும் வீட்டுக்கு வந்துமே எதுவுமே பேசவில்லை. மித்ரா சமையல் செய்தாள் அவளுக்கு பக்கத்தில் நின்று உதவி செய்தான் அவ்வளவுதான்.

மித்ரா சரியாக சாப்பிடவில்லை.தூக்கம் தூக்கமாக வந்தது.அதனால் சீக்கிரமாகவே போய் படுத்துக்கொண்டாள்.

அவன் டீவி பார்த்துவிட்டு ரொம்ப நேரம் கழித்துதான் வந்தான்.அவன் அருகில் வந்து படுத்ததும் கண்களை முழித்து பார்த்தவள் மீண்டும் மூடிக்கொண்டாள்.

உடனே எழுந்து உட்கார்ந்தவன் அவளது கையைப்பிடித்து தூக்கி உட்கார வைத்தான்.

“உனக்கு என்ன பிரச்சனை?”

“ஒரு பிரச்சனையும் இல்லை”

“அப்புறம் எதுக்கு என்னைப் பாரத்தும் பார்க்காதது மாதிரியே தூங்குற”

“ப்ச்ச் இப்போ என்ன செய்யணும் அத்தான்?அந்த பிரீத்தாவுக்கும் உங்களுக்கும் விளக்குப் பிடிக்கணுமா?”

அந்த வார்த்தையைக் கேட்டதும் அவ்வளவுதான் கோபத்தில் சட்டென்று மித்ராவை அடித்துவிட்டான்.அவளும் அதை எதிர்பார்க்கவில்லை.ஒருமாதம் நல்லாத்தானே போச்சுத்துன்னு நினைச்சேன்.இந்தா தொடங்கிட்டாங்க என்று நினைத்தவளுக்கு ஒருமாதிரி விரக்தியாக இருந்தது.

அவனுமே அடிக்கணும்னு ப்ளான் எதுவும் போட்டு அடிக்கலை.அவள் சொன்ன வார்த்தைக்காக அடித்துவிட்டான்.

“பேசுற வார்த்தையை கவனமாக பேசணும்.உன்கூடதான தினமும் படுத்து எழும்புறேன்.அப்புறம் எப்படி அப்படி பேசின?ப்ரீத்தா நல்ல பொண்ணு என் மேல உள்ள அன்பு காதல்னால பொசசிவ்னஸ்னால உன்கிட்ட வம்பு இழுக்குறாள் அவ்வளவுதான். மத்தபடி அவ யாரையும் காயப்படுத்தவும் வேதனைப்படுத்தவும் மாட்டாள். உன்னை திட்டிட்டு அவளும்போய் தனியாக உட்கார்ந்து அழுதிட்டிருப்பா. அப்படிபட்ட பொண்ணு அவ.அவளைப்பத்தி அசிங்கமா பேசாத.அதைவிட ரொம்ப முக்கியம் நான் ஒருத்திக்குதான் தாலிக்கட்டணும் அவளோட மட்டும் தான் வாழனும்னு கொள்கை உடையவன். அப்படித்தான் இப்போ உன்னோட மட்டும்தான் வாழ்ந்துட்டிருக்கேன். சும்மா கண்டவனுங்க மாதிரி இங்க அங்கன்னு பன்னி மாதிரி மாற்றி மாற்றி எல்லாயிடத்துலயும் வாய் வைக்க மாட்டேன் புரியுதா. இதை உன் மனசுல வச்சுக்கோ” என்றுவிட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஆனால் மித்ரா அந்த வார்த்தைகளைக் காற்றோடு விட்டுவிட்டாள்.

பிரீத்தாவை உண்மையாகவே எதிரியாக பார்த்ததின் விளைவு மோகன் மித்ராவின் பிரிவில் கொண்டுபோய்விட்டுவிட்டது!