என் நெஞ்சிலாடும் களபமே-16

என் நெஞ்சிலாடும் களபமே-16

களபம்-16

அருண் மோகனையும் மித்ராவையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.மித்ரா இறங்குவதற்குள் மோகன் வேகமாக இறங்கி உள்ளே சென்றவன் ருக்குமணியிடம்”அம்மாஆஆ நான் நம்ம வீட்டுக்குப் போறேன். நீங்க காரியம் முடிகிறவரைக்கும் இங்க இருங்க”என்றவன் அவரது பதிலைக்கூட கேட்காமல் அப்படியே வெளியே வந்தவன் சுமியிடமும் அருணிடமும்கூட சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டான்.

மோகன் கோபத்தில்தான் போகிறான் என்று அருணுக்கு நன்றாகத் தெரியும்.அதனால் உள்ளே வந்தான்.

ருக்குமணியிடம் அங்கு நடந்ததைச் சொன்னான்.ஆனால் தனது தங்கை மோகனிடம் பேசியதைச் சொல்லாது மறைத்துவிட்டான்.

தனம்தான் “மோகன் மாப்ள எதுக்கு அவங்க வீட்டுக்குப் போறாரு?மித்ரா எதுவும் பேசிட்டாளா?இல்லை அவசர அவசரமாக மாப்ள போறாரே” என்று கேட்டார்.

அருண்தான் “உன் மவ பேசுன பேச்சுக்கு அந்த சீனுக்குடும்பமே அடிவாங்கி ஆடிப்போச்சு. பின்ன உன் மருமகன் ஓடமாட்டானா என்ன பயம் தெளிஞ்சு வருவான் விடு”என்று தனத்தை சமாதானப்படுத்தினான்.

ஆனால் மித்ராவை முறைத்துக்கொண்டுதான் இருந்தான்.இப்போது மித்ரா மெதுவாக அங்கே நடந்ததை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்த்தாள்.

மோகனிடம் தான் பேசியது அதிகம் என்று தோன்றவும் அடுத்து என்ன செய்ய என்று தெரியவில்லை.

‘அதனால்தான் மோகன் அத்தான் கோபத்துல போனாரோ?கடவுளே என்னடி மித்ரா பண்ணி வைச்சிருக்க? ‘என்று தனது தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஏன்டி தலையில் அடிச்சிக்கிற?”என்று ருக்குமணி கேட்டார்.

“அது ஒன்னுமில்லை அத்தை ஏதோ ஞாபகம்”என்று முடித்துக் கொண்டாள்.

இப்போது அருணிடம் வந்தவள் அண்ணா என்று பதுங்கும் புலிபோல நின்றாள்.

“வாம்மா தங்கச்சி இந்தப்பூனையும் பால்குடிக்குமான்னு கேட்கிறளவுக்கு வந்து பாவம்போல நிக்கிற என்ன விசயம்?”

“அது! அது! மோகன் அத்தான் கோபமா போறாங்களோ?”

“எதுக்கு கோபமா போகணும்?”

“அது நான் நீங்க யாருன்னுக் கேட்டேன்ல அதுக்கு?”

“அப்போ அவன் கிட்டத்தான் கேட்கணும்”

“நானா கேட்கணும்?”

“உனக்கு வேணும்னா நீ கேளு?”என்று அந்தப்பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டான்.

இன்னும் சங்கரன் இறந்ததுக்கான பதினாறு காரியங்கள் எதுவும் முடியவில்லை என்பதால் மித்ராவால் இப்போதைக்கு போகமுடியாது. அதனால் அமைதியாகிவிட்டாள்.

அதன் பின் மோகன் இங்கு வரவேயில்லை.ருக்குமணியை வீட்டுக்கு வெளியே நின்றவாறே ஒரு நான்கு நாட்கள் கழித்து வந்து கூட்டிட்டுப் போயிட்டான்.

ருக்குமணிக்கு விசேஷம் கழித்து மித்ராவை முறைப்படி அழைத்து வரணும் என்று அண்ணன் தயாளனிடம் பேசிவைத்திருந்தார்.

ஆனால் இங்கு மோகனோ டெல்லிக்கு கிளம்பவேண்டும் என்று எல்லாம் ரெடி பண்ணிக் கொண்டிருந்தான்.

அதைப்பார்த்த ருக்குமணி “என்னடா தம்பி பண்ணிட்டிருக்க?” என்று கொஞ்சம் கோபம் கலந்தக்குரலில் கேட்டார்.

“என் வேலையைப் பார்க்க வேண்டாமா? நான் இங்க வத்து இதோட ஒருமாசம் முடிஞ்சுட்டு. இதுக்குமேல இங்கிருந்தா என் சீட்டைக் கிழிச்சு உன் ஊருலயே உட்காருன்னு மெயில் போட்றுவானுங்க. அதென்ன என் மாமனார் கம்பெனியா?” என்று கேட்டவனுக்கு அத்தனைக் கடுப்பும் வலியாகவும் இருந்தது.

அவனது குரலே சரியில்லை என்றதும் ருக்குமணி என்னாச்சு சுந்தரம் என்று ரொம்பப் பாசமாகக் கேட்டார்.

வெகுநாளைக்குப் பின்பு அவர் சுந்தரம் என்றதும் அவனுக்கு அப்படியே பலமிழந்ததபோன்று மனதில் தோன்றவும் பெட்டில் பொத்தென்று உட்கார்ந்துவிட்டான்.

அவனது தலையைத் தடவிக்கொடுத்தவர் “என்னாச்சு சுந்தரம்?”என்று ஆதூரமாகக் கேட்டார்.

“இல்லம்மா நீ இப்படி சுந்தரம்னு கூப்பிட்டு ரொம்ப நாளாகுதும்மா. அப்பா இருக்கும்போது செல்லமா கூப்பிட்டது. இப்போதான் இப்படிக்கூப்பிடுற அதுதான் அப்பா ஞாபகம் வத்துட்டு” என்றவன் அவரது மடியில் படுத்துக் கொண்டான்.

அதைப்பார்த்தவர் அவனது முகத்தைத் தடவி”என்னாச்சு தம்பி?நான் மித்ராவைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லிட்டேன்னு கோபமா? இல்லை அவளைக் கட்டிக்கிட்டமேன்னு வருத்தமா?”

“அது அது அப்படியெல்லாம் ஒன்னுமில்லம்மா நீ எதுக்கு அப்படி யோசிக்கிற?”

“நான் முன்னாடியிருந்தே உன் மேல என் விருப்பத்தைத் திணிக்கிறேன்னு நீ நினைக்கிறல்ல அதுக்காகத்தான் கேட்கிறேன். வாழ்க்கையில நிறைய அனுபவ பாடம் உங்க அப்பாவும் இல்லாம காத்துக்கிட்ட அத வச்சு தான் சொல்றேன். ஒரு ஆளைக் கணிக்கவும் அவங்க எப்படின்னு புரிஞ்சுக்கவும் ரொம்ப நாள் எல்லாம் ஒன்னு வேண்டாம். அவங்க கண்ணு தானகாவே நம்மக்கிட்டக் காட்டிக்கொடுத்திடும். அவங்க நம்மக்கிட்ட பேசுறவிதைத்தைக் கவனிச்சாலே போதும். உதடுகள் பொய் சொல்லும் ஆனா கண்ணு பொய் சொல்லாது. அந்த பாடத்தை நீ இன்னும் படிக்கல. 

நான் ராதாவை பார்த்த அடுத்த நொடியே அவளுக்கு உன்னைப்பிடிக்கலைன்னுக் கண்டுபிடிச்சிட்டேன். நீ தலைகீலாக நின்னாலும் அவளை நீ கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று தெரிஞ்சுப்போச்சு. ஏன்னா அவள் கண்ணில் உன்னைப் பார்க்கும் போது பரிதாபம் கூட வரவில்லை ஏதோ புள்ள பூச்சி பாக்குற மாதிரி தான் பார்த்தாள். சரி ஒரு வேளை என்ன பாத்ததுனால இருக்கலாம் அவங்க வீட்டுக்கு போனால் நிலைமை தெரிஞ்சுடுன்னு வீட்டுக்கு போனால் அவள் நம்மளை ஏதோ புளுக்களைப்போல பார்த்தால் அவளுக்கு நமக்கு செட் ஆகாதென்று அதுல தெரிந்து விட்டது.

அதைவிட அவள் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சு தான் அப்படி பேசிட்டு வந்தேன். உனக்கும் ராதாவுக்கும் இடையில சண்டை வரணும் பிரிச்சுவுடனும்னு நினைக்கவேயில்ல. இதெல்லாம் புரிஞ்சிக்கிறதுக்கு இன்னும் நிறைய கத்துக்க வேண்டியதிருக்கு” என்று பொறுமையாக சொன்னார்.

அதைக் கேட்டவன் அம்மாவின் முகத்தை பார்த்தான் அவ்வளவு வேதனையோடு அவர் பேசிக் கொண்டிருந்தார்.

அவரோ மீண்டுமாக “ஆனால் உனக்கான தேடலும் காதலும் மித்ராவின் கண்களில் இருக்கு. அவ உதடு மட்டும் அல்ல கண்களும் உனக்கான காதலையே பேசும். ஆனால் நீ அதை கவனிச்சிருக்க வாய்ப்பே இல்லை.அதை அவள் உன்முன்னாடி கண்பிக்கவே மாட்டாள்.உன்னைக் கண்டாலே ஒதுங்கிப்போயிடுவாளே!”

“ம்மாஆஆ மித்ராவைப்பத்தி இப்போ பேசவேண்டாம்மா விடு”என்று எழுந்து உட்கார்ந்தவன் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.

“அவ இப்போ உன் பொண்டாட்டிடா!”

அப்படிச் சொல்லும் அம்மாவைத் திரும்பிப் பார்த்தான்.

“அம்மா நீ தாலிக்கட்டச் சொன்னேன்னு கட்டியிருக்கேன் அவ்வளவுதான்.இன்னும் நாங்க இரண்டுபேரும் பேசிக்கவேயில்லை. இரண்டுபேரும் எப்படி சேர்ந்து வாழணும்னு சத்தியமா எனக்குத் தெரியவேயில்லை.நானே குழப்பத்துல இருக்கேன்மா அடுத்தவாரம் வேற நான் டெல்லியில் இருக்கணும்.நான் அங்கப்போறேன்”என்று அவரது முகத்தைப் பார்க்காமலயே சொன்னான்.

“அப்போ எதுக்கு இங்க வந்த?மித்ரா கழுத்துல நான் சொன்னதும் தாலிக்கட்டின? இப்பவே போ.நான் செத்துப்போயிட்டேன்னு நினைச்சிக்க அவ்வளவுதான். இதுக்குமேல மித்ராக்கூடத்தான் வாழணும்னு நான் எதுவும் சொல்லப்போறதில்லை.ஒரு தகப்பன் இல்லாத பொண்ணை அநாதையா யாருமில்லாதவளா விடடுட்டுப் போகணும்னு நினைக்கிறியே.அவளுடைய வாழ்க்கையைப் பத்தி நீ யோசிக்கலை.சரி விடு,டெல்லிக்குப்போ இல்ல அந்தமானுக்குப் போ”என்றவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

மித்ரா வீட்டில் இப்பொழுது தயாளனும் ருக்குமணி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் எல்லாம் முடிந்து ஓரளவுஅவர்கள் அந்த தூக்கத்திலிருந்து மீண்டுவரத் தொடங்கியிருந்தனர்.

இன்னும் இரண்டு நாளில் மோகன் டெல்லிக்கு கிளம்பு இருப்பதால் ருக்குமணி மெதுவாக தயாளனை அழைத்துக் கொண்டு மித்ராவோடு பார்த்து பேசுவதற்காக வந்திருந்தார்.

மோகனோடு ருக்குமணி பேசி இன்றோடு ஒரு வாரத்துக்கும் மேலாகுது. அன்று கண்ணீரோடு அவங்க பேசியதுதான் அதற்குப் பிறகு அவரிடம் முகத்தைக்கூட கொடுத்து பேசியதில்லை.அவனும் எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறான் ஆனாலும் பேசுவது போலில்லை.

இப்போது அவனிடம் சொல்லாமலே மித்ராவைக் கூப்பிட்டு வருவதற்காக போய்விட்டார்.

மோகனுக்கு அவரிடம் எதுவும் பேசமுடியாது சூழ்நிலை அதனால் அருணிடம் பேசவேண்டும் என்று கிளம்பினான்.அதற்குள் அருணே வீடு தேடி வந்துவிட்டான்.

“என்னடா இந்த டைம்ல வந்திருக்க?எதுவும் தகவல் சொல்ல வந்திருக்கியா என்ன?”என்று நக்கலாகக் கேட்டான்.

“ஆமாடா!எங்க அத்தையும் உங்க பெரிய மாமாவும் என்னை தூதுக்கு அனுப்பிருக்காங்க.அவங்க மித்ரா வீட்டுல இருக்காங்க.உங்க வாழ்க்கையைப் பத்திதான் பேசிட்டிருத்தாங்க,உன்கூடவே மித்ராவை அனுப்பிடணும்னு சொல்லிருக்காங்க.நாங்கதான் டிக்கெட் போடப்போறோம்.எப்போ போறன்னு மட்டும் சொல்லு”

“என்னது மித்ராவை என்கூட அனுப்பப்போறீங்களா? நீங்கெல்லாம் என்ன நினைச்சிட்டிருக்கீங்க. என்கிட்ட ஒரு முடிவை கேக்க மாட்டீங்களா என்ன? நான் இப்போதைக்கு யாரையும் அழைச்சிட்டுப் போகிற ஐடியாவுல இல்லை”

“ஏன்?”அருண் கோபம் கலந்தக் குரலில் கேட்டான்.

அவனது கோபத்தை புரிந்துக்கொண்டவன் ”உனக்குமாடா அறிவில்லை.நான் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்திலயே இல்லை. அதைவிடவும் நான் வேறொரு எண்ணத்துல இருந்தேன். அதையும் இப்போ கெடுத்துவிட்டாச்சு. அதுல இருந்து நான் மீண்டு வரவேண்டாமா. என்னை மனுஷனா நினைக்க மாட்டீங்களா?”என்று கத்தினான்.

“அதைக்கேட்ட அருண் எனக்கும் அத்தைக்குமே அதுதான் பயம்.நீ எங்க அந்தப்பொண்ணுக்கிட்டயே போயிடுவியோன்னு கவலைப்படுறாங்க. மித்ராவைவிட்டு போயிடுவியோன்னு பயப்படுறாங்க. மித்ராவோட வாழ்க்கை என்னாகும்னு பயப்படுறாங்க?”

“என்ன?”

“ஆமாடா அதுதானே உண்மை.உன் மனசு மித்ரா மேல திரும்பாதுன்னு தெரியுமே.பின்ன அவள் வாழ்க்கை என்னாகும்னு எங்களுக்குப் பயமாக இருக்காதாடா? அத்தனைபேரோட முன்னாடியும் தாலிக்கட்டி அவளைப் மனைவியாக்கிருக்க.அப்போ அவளை உன்னோடுதானே கூட்டிட்டுப் போகணும்.அதுதான் அனுப்பிவைக்க ஏற்பாடு பண்றோம்”

“ப்ச்ச் என்னடா பேசிட்டிருக்க.ஸ்ஸோப்பா முடியலடா உங்களோட”

“டேய் ஏன்டா இப்படி பேசுற?”

“கொஞ்சமாவது என்னை புரிஞ்சுக்கோங்கடா.நான் சத்தியமா என் மனசு மாறினதும் வந்துக் கூட்டிட்டுப் போறேன்டா”

“அதுதானேடா பிரச்சனை.உன் மனசு மாறணுமே?”

“மச்சான்னும் பார்க்கமாட்டேன் பிரண்டுடன்னும் பார்க்கமாட்டேன். மிதிச்சிருவேன்டா”

“நீ மிதிச்சாலும் மித்ராவை கூட்டிட்டு போன்னுதாண்டா சொல்லுவேன். ஏன்னா நான் இப்போ அவளுக்கு அண்ணன்டா அவளோட வாழ்க்கை பற்றி ஒரு அண்ணனாக நான் யோசிக்கணும் டா அதான் யோசிச்சு சொல்றேன் எங்க சித்தப்பா இறந்து போயிட்டாரு அவரோட ஸ்தானத்திலிருந்து அவளுக்கு எல்லாத்தையும் நான் செய்யணும் அவளோட வாழ்க்கைக்கு ஏதும் நல்லதோ அதை நான் செய்யணும் அதனால்தான் உன் கிட்ட இருந்து பேசி இருக்கேன் இல்ல தூக்கிட்டு போய் என் வீட்ல விட்டிருப்பேன்”

“நீ அப்படி விட்டா மட்டும் நான் அவளோட வாழ்ந்திட முடியுமா என்ன? என் மனசு என்ன சொல்லுதோ அதன்படி தான் செய்வேன். என் மனசு இப்ப மித்ராக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்ல. நான் ஏற்கனவே ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்கத்தான் ஓடிப்போனேன். திரும்பவும் என்னைத் தலையைப்பிடிச்சுட்டு ஓட வச்சிடாதீங்க” என்று மிரட்டல் தொனியில் பேசினான்.

“அப்படியா நீ போய் தான் பாரேன் எந்த ஊர்ல இருந்தாலும் தேடி வந்து உன்னை வெட்டுவேன்டா.என் தங்கச்சி வாழ்க்கைதான் எனக்கு முக்கியம். அவள் நட்டாத்துல விட்டுட்டு போகலாம் என்று நினைத்து தான் இப்ப பிளான் பண்ணிட்டு இருப்பேன் தெரியும்” என்று அவனது கழுத்தை கைய வைத்திருந்தான் அருண்.

இதை சத்தியமாக அருணிடமிருந்து மோகன் எதிர்பார்க்கவில்லை. அதனால் அப்படியே அவனது கையை தட்டி விட்டவன் போய் உட்கார்ந்து சிறிது நேரம் யோசித்தான்.

பின்பு “சரி உன் தங்கச்சி நான் கூட்டிட்டு போறேன் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் போடு அடுத்த இரண்டு நாளைக்கு கிளம்ப வேண்டியது இருக்கும்” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

அந்த முடிவு மத்த எல்லாத்துக்கும் சந்தோஷம் கொடுத்தது என்றால் அந்த முடிவை எதனால் மோகன் அத்தான் எடுத்தான்? எப்படி எடுத்தான்? என்று மித்ரா தான் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு தெரியும் மோகனது மனது நம்ம பக்கம் திரும்பாதே. ஆனால் இவர்கள் என்னவோ செய்து இந்த முடிவை எடுக்க வைத்து விட்டார்களோ? ஆனால் அந்த முடிவின் பலன் என்னை பாதிக்கும் என்று மோகனை பற்றி சரியாக கணித்தாள்.

அந்தக்கணிப்பும் சரியாகவே இருந்தது!