என் நெஞ்சிலாடும் களபமே-15

என் நெஞ்சிலாடும் களபமே-15

களபம்-15

அருணுக்கும் மித்ரா சொல்லுவது சரியென்று படவும் மோகனைத் திரும்பிப் பார்த்தவன் “டேய் மச்சான் வா.உன் பொண்டாட்டியோடு நீயும் சேர்ந்து வா போலீஸ்ல புகார்கொடுத்து பணத்தை வாங்கிடுவோம்.நேத்து நம்ம அங்கிருந்து வந்தபிறகு என்ன நடந்ததுன்னுக்கூட விசாரிக்கலை.நம்ம பணத்தை வாங்கிட்டு வரலாம்”என்று அழைத்தான்.

உன் பொண்டாட்டி என்றதும் மோகனும் அவளைப் பார்க்க மித்ராவும் ஒரு நொடி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அந்த ஒருநொடியில் இருவருக்குமே இதுதானே நிதர்சனம்! மூணுநாளுக்கு முன்னாடிதானே நம்மக் கல்யாணம் நடந்துச்சு!என்று இருவருக்குமே அப்போதுதான் அதை உணர்ந்தார்கள்.

அருண் உடேன தனது காரை எடுத்தவன் இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றனர்.

சீனுவின் மீதும் அவனது குடும்பத்தின் மீதும் மொத்தமாக கேஸ் குடுத்துட்டான்.

மித்ராவும் மோகனும் அருகருகே உட்கார்ந்திருந்தும் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இல்லாது அமைதியாக இருந்தனர்.

சீனுவின் குடும்பம் மொத்தத்தையும் இப்போது ஜீப்பில் தூக்கிப்போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

சீனுவுக்கு பயம் முகத்தில் தாண்டவமாடியது.அவனது பெயரில் கேஸ் என்றதும் அவனது எதிர்காலம் வெளிநாட்டு வாழ்க்கை என்று எல்லாமே மொத்தமாக போய்விடும் என் பயமும் இருந்தது.ஆனால் அவனோடு ஒட்டிகொண்டு வந்தவளைப் பார்த்ததும் ஆச்சர்யமாக இருந்தது.

‘இவள் தான் நேற்று பிரச்சனை பண்ணினாள்.இந்தச் சீனு என்னை ஏமாற்றி விட்டான்.என்னையையும் குழந்தையையும் அனாதையாக்கிட்டான்” என்று தனது பெற்றோரோடு வந்து மண்டபத்தில் பிரச்சனை செய்தவள். இப்பொழுது கணவன் மனைவியாக ஒட்டிக் கொண்டும் உரசிக்கொண்டு வருகிறார்களே?’ என்று ஆச்சரியமாக பார்த்தாள். 

அதைவிட பெரியவிசயம் என்னவென்றால் வந்தனாவின் குழந்தையை சீனு வைத்திருந்தான்.அதாவது அவர்கள் ஒரே நாளில் சமரசமாகி கணவன் மனைவியுமாக மீண்டும் ஒட்டிக்கொண்டனர் என்பதை அது சொல்லாமல் சொல்லியது.

அருணும் மோகனும் இதுங்களாம் என்ன ஜென்மங்கள் என்று நினைத்து நக்கலாக உதட்டை வளைத்துக்கொண்டு பார்த்திருந்தனர்.

சீனு உள்ளே வரவும் வந்தனா குழந்தையை வாங்கிக்கொண்டு மித்ராவின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கமுடியாது குனிந்தே நடந்துவந்தாள்.

சீனு மித்ராவின் அருகில் வரவும் சப்பென்று சத்தம் கேட்டுத்தான் வந்தனா நிமிர்ந்துப்பார்த்தாள்.

சீனு தனது கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.மித்ரா கோபத்தில் கண்கள் சிவக்க அடுத்தக் கன்னத்திலும் ஒரு அடி ஓங்கி வைத்திருந்தாள்.

வந்தனாவும் சீனுவின் அம்மாவும் ஓடிவந்து சீனுவின் கையைப்பிடித்து இழுத்து மித்ராவிடம் சண்டைப்போட்டனர்.

“ஏய் எதுக்கு என் மகனை அடிக்கிறடி?ஒரு ஆம்பளையைக் கையை நீட்டி அடிக்கிற பொம்பளையா நீ?” என்று எகிறினார்.

வந்தனாவோ”எதுக்குங்க என் புருஷனை அடிக்கீங்க?உங்களுக்கு யாரு அவரை அடிக்க உரிமை தந்தது.இதுக்குமேல அவர்மேல் கையை வைச்சீங்க அவ்வளவுதான் நல்லாயிருக்காது”என்று எச்சரித்தாள்.

அப்படி எச்சரித்தவளின் கையைப்பிடித்து வளைத்து ”வாடி நல்லவளே இவனைக் கட்டிக்கிட்டு குடும்பமும் நடத்துவீங்களாம். அப்புறம் பிள்ளையைக் குட்டியைப் பெத்துகிட்டு சண்டை போடுவீங்களாம் இந்த நாயும் அதைப் பெத்துப்போட்ட நாயும் வந்து எங்கப்பாவை ஏமாத்தி என்னைக் கட்டிக்க வருவானாம் பணமும் வாங்குவானாம். ஏமாத்துக்கார நாயிங்க உங்களை நாங்க கொஞ்சணுமா? இந்த நாயிங்களால எங்கப்பாவோட உயிர்போனதுதான் மிச்சம். மகளுக்கு கல்யாணம்னு பார்த்துப் பார்த்துச் செய்த அவரு இப்போ உயிரோடு இல்லை.எல்லாம் இவனுங்களால்தான்.ஏய் பொறுக்கி உன்னையெல்லாம் பெத்து இப்படி விட்றுக்க உங்கம்மாவை செருப்பால அடிப்பேன்னு சொல்லு”என்று தனது காலில் கிடந்த செருப்பை உருவினாள்.

அதற்குள் மோகன் பாய்ந்து வந்து” மித்ரா செருப்பைக் கீழேப்போடு இது சரியில்லை” என்று அவளது தோளைப்பிடித்து பின்னாடி இழுத்தான்.

“எது சரியில்லத்தான் இந்தா நாய் செய்ததா?நானே உங்களை நினைச்சுட்டு அப்படியே வாழ்ந்திடலாம்னு இருந்தேன்.அதெல்லாம் சரிவாராதுன்னு உங்கமாமா இந்த நாயை வரனாக் கொண்டுவந்தார்.

இவன் என்னைக்கு வீட்டுக்குள்ள வந்தானோ அப்பவே எங்க அப்பா நிம்மதி போச்சு.பணம் வேணும் நகை இவ்வளவு வேணும்னு கேட்டுக் கேட்டு சாகடிச்சானுங்க.இப்போ மொத்தமாக் கொன்னுட்டானுங்க.இந்த நிக்கிறாளே இவன்கூட வாழ்ந்த ஆட்டக்காரி இந்த வந்தனா நேத்து என்னமாதிரி சண்டைப் போட்டாள். ஆனால் இப்போ இந்த இரண்டுக் கழுதைகளும் இப்போ ஒட்டி உரசிக்கிட்டு வருது. இதுங்களால எங்கப்பா செத்துப் போயிட்டாரு.இப்போ இந்த இரண்டு டேஷுகளையும் எங்கப்பாவைத் திருப்பித் தரச் சொல்லுங்கத்தான். எனக்கு எந்த வாழ்க்கையும் வேண்டாம் எனக்கு எங்கப்பாவைத் திருப்பித் தரச்சொல்லுங்கத்தான்” என்று கத்திக் கதறினாள்.

அவளது கதறலும் அழுகையும் மோகனை அப்படியே உலுக்கிப்போட்டது.அவளை இழுத்துப்பிடித்து நிறுத்தினான்.

அருண் இன்ஸ்பெக்டரிடம் பேசி தனது சித்தப்பா எவ்வளவு பணம் குடுத்தாரு யாருக்கிட்டக் குடுத்தாரு என்று மித்ராவிடம் கேட்டு எழுதி புகார்கொடுத்தனர்.

உடனே சீனுவின் அம்மா சத்யவதி”நாங்க யாருக்கிட்டயும் எந்தப் பணமும் வாங்கலை சார். அவங்க பொய்யா புகார் கொடுத்து எங்களைப் பழிவாங்குறாங்க”என்று பொய்யாக பழிப்போட்டார்.

மித்ரா அவரருகில் வந்து”எங்கப்பா எந்த தேதியில் எவ்வளவு பணம் எடுத்தாருன்னுத் தெரியும். உங்கக்கிட்டக் கொடுத்ததும் தெரியும்.அதுக்கான ஆதாரமா காட்டட்டுமா.இந்தாங்கா நீங்க எங்கப்பாக்கிட்ட பணம் வாங்குனதுக்கு சாட்சி என் தங்கச்சி மொபைல்ல எடுத்த போட்டோ”என்று காண்பித்தாள்.

அவ்வளவுதான் அதற்குமேல் எதுவும் பேசமுடியாது பணத்தைக்கொடுக்க சரியென்றுத் தலையாட்டினார்.

உடனே வந்தனா “எதுக்கு அத்தை நீங்க குடுக்கிறீங்க! என்னால்தானே இவ்வளவும் நானே இப்போ சீனுவைக் கல்யாணம் பண்ணிருந்தாலும் இவ்வளவுக் குடுத்திருப்பேன்ல நானே அந்தப்பணத்தைக் கொடுக்கிறேன். இப்போதான் நான் நம்ம வீட்டுக்கு வாழவந்துட்டனே.எனக்கிருக்க சொத்துக்கள் எல்லாம் என்ன பண்றதுக்கு வைச்சிருக்கேன். சீனுவுக்காகக் கொடுக்கிறேன்” என்று தன்னுடைய பெருந்தன்மையைக் காண்பித்தாள்.

ஹப்பா சத்யவதிக்குப் பெருமைத் தாங்கலை.சரியென்று தலையாட்டிவிட்டார்.

உடனே வந்தனா செக்குபோட்டு எந்த தேதியில் போடணும்னு எல்லாம் எழுதிக் கொடுத்தாள்.அவ்வளவுதான் பணம் கிடைச்சிட்டுல்ல கேஸை வாபஸ் வாங்குன்னு வந்தனா சொன்னாள்.

“உனக்குத்தான் உன் சீனுக்கிடைச்சிட்டான்ல எங்கப்பாவை எனக்கு உயிரோடக்குடு”என மித்ரா கேட்டாள்.

“லூசா நீ?அதெப்படி முடியும்?”

“அதெப்படி முடியும்னு கேட்கிறியே நீ நேத்து வந்து பிரச்சனை பண்ணினதுக்குப் பதிலாக முந்தினநாளே என்னுடைய வீட்டுக்கோ இல்லை சீனு வீட்டுக்கோ போய் பிரச்சனை பண்ணிருந்தால் நாலுபேரு முன்னாடி எங்கப்பா பொண்ணுக்கல்யாணம் நின்னுப்போச்சேன்னு செத்திருக்கமாட்டாரே. அதுக்கு ஒரு பதிலைச் சொன்னால்தான் விடுவேன்.இல்லையா இங்கயே உட்கார்ந்து உங்க மேல என்னென்ன செக்க்ஷன்ல கேஸ்போடணுமோ அத்தனையிலும் போட்டு மொத்தமாக போட்டு உங்க எல்லோரையும் உள்ளத் தள்ளிடுவேன்.

மானநஷ்டவழக்குப் போடுவேன்” என்று ஆவேசமாக நின்றாள்.

இதுக்குமேல இவளைப் பேசவிட்டால் அப்புறம் இங்கயே குடியிருந்திருவாள் என்று மோகன் அவளது கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“எதுக்குத்தான் என் கையைப் பிடிச்சு இழுத்து நிறுத்துறீங்க. எனக்கு நியாயம் வேணும்.எங்கப்பா உயிருக்குப் பதில் வேணும்” என்று அழுதாள்.

“இப்படி அவங்களைப் பழிவாங்கினா உங்கப்பா ஆன்மாக்கூட சாந்தியடையாது.உன் கல்யாணம் தல்லபடியா முடிஞ்சதைப் பார்த்துட்டுத்தான் செத்துப்போனாரு.அப்போ அவரு நிம்மதியாகத்தான் செத்திருக்காரு. இந்த பரதேசிக்கும்பலை பழிவாங்க ஒன்னும் அவர் சொல்லலை.உன் வாழ்க்கையை வாழத்தான் சொல்லிட்டுப்போயிருக்காரு”என்று மோகன் அவளை சமாதானப்படுத்த முயன்றான்

“அதுக்காக இந்த டேஷுகளை சும்மா விடச் சொல்லுறீங்களாத்தான்?”

“பணம்தான் வந்துட்டுல்ல அப்போ வா போகலாம்”

“முடியாது! செத்தது உங்கப்பா இல்லை எங்கப்பா!நீங்க இதுல தலையிடாதிங்க அத்தான்.நீங்க யாரு இதுல தலையிட?”

அவ்வளவுதான் “நீங்க யாரு தலையீட?”என்ற வார்த்தையைக் கேட்டதும் மோகனுக்குக் கோபம் வந்தது.அதைவிட அருணுக்குக் கோபம் ரொம்ப வநததுன

மோகன் பேசாது அமைதியாக விலகிப்போயிட்டான்.அருண் வந்து மித்ராவை அடித்துவிட்டான்.

“நீ பேசுறதெல்லாம் கேட்டுட்டு நிக்க இங்க யாரும் உன் அடிமையோ வீட்டுவேலைக்காரங்களோ கிடையாது.அவனை எப்படி நீ யாருன்னு கேட்கலாம்?அவன் ஆசையெல்லாம் ஒதுக்கி வைச்சிட்டு அவனுக்காக இருக்கும் வாழ்க்கையையும் விட்டுட்டு உன் கழுத்துலத் தாலிக்கட்டியிருக்கான் அவனை யாருன்னு கேட்கிற அறிவிருக்கா?”என்று திட்டினான்.

“என்ன அண்ணா நீயும் இப்படிப் பேசுற?நான் எங்கப்பாவை இழந்து நிக்கிறேன்.அதுக்கான நியாயம் கேட்கிறேன் அதுதப்பா”

“தப்பேயில்லை நீயே எல்லாம் பார்த்துக்குவன்னா நாங்க யாரு? நாங்க எதுக்கு வரணும்?”

‘அண்ணா!!!’ என்று அழைத்தவளுக்கு அடுத்துப்பேச வார்த்தை வரவில்லை அழுதாள்.

“வா இவனுங்களை மனுஷனுங்க லிஸ்ட்லக்கூட சேர்க்கக்கூடாது. அவனுங்க செய்ததே அவனுங்களுக்கே வந்துச்சேரும்” என்று அவளை இழுத்துக்கொண்டு வந்தான்.மோகன் அருண் பேச ஆரம்பிக்கும்போதே வெளியே போய்விட்டான்.

இப்போது மித்ராவின் கையைப்பிடித்து வெளியே அழைத்து வரும்போது மித்ரா அருணிடம் “அண்ணா இந்த ஒரே ஒருவாட்டி மட்டும் என் கையை விடேன்.ஒருத்தங்களுக்குக் குடுக்கவேண்டியது பாக்கி இருக்கு”என்று கெஞ்சினாள்.

“வேண்டாம் மித்ரா நீ என்ன பாக்கிக் குடுப்பன்னு தெரியும்.வேண்டாம் போதும்.எல்லாம் முடிஞ்சு.இனி திரும்பிப்பார்க்காத”

“அண்ணா இந்த ஒரே ஒரு தடவை மட்டும்தான்.இல்லைன்னா காலம் முழுசும் உறுத்தும்”என்று கெஞ்சியவளைப் பார்த்து மனசு கஷ்டமாக இருக்கவும் அவன் இறுக்கி ப்பிடித்திருந்தக் கையை விட்டுவிட்டான்.

உடனே வேகமாகச் சென்றவள் சீனுவை அடிப்பாள் என்று பார்த்திருக்க,அவளோ வந்தனாவைச் சப்பென்று அறைந்தாள்.

“உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு எங்கப்பாவைக் கொன்னது நீதான்டி.சீனு இதுக்கு முதற்காரணமாக இருந்தாலும் நீதான் முழுமுதற்காரணம்.உனக்கு அவனை பயமுறத்தி பணியவைச்சு வாழவைக்கணும்னா நீ அவங்கக்குடும்பத்தோடு தனியா பேசிருக்கணும்.அதைவிட்டுட்டு காத்திருந்து பகையாக வைச்சு அவனை பழிவாங்க வந்த.உன் எண்ணம் நிறைவேறிட்டு.எங்கப்பா செத்துப்போயிட்டாரு.அந்தக் குற்றவுணர்ச்சியே இல்லாமல் இவன்கூட எப்படி நீ இப்படி நிக்கிற.மானங்கெட்டதுகளே!”என்று தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ந்து நின்றவளைப் பார்த்து திட்டினாள்,

வந்தனாவை அடித்ததும் சீனு ஓடிவந்து அவளைப் பிடித்து இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டவன் மித்ராவை அடிக்கக் கையோங்கினான்.

அவனது கையைப் பிடித்துத் தடுத்து முறுக்கியவள் ஒற்றை விரலால் எச்சரித்தாள்.

அவனது தாய் சத்யவதியைப் பார்த்து இவங்களுக்குக் கொடுத்ததை விடவும் அதிகமா உனக்குத்தான் தந்திருக்கணும்.தன் பிள்ளைத் தப்புசெய்தால் அதைத் திருத்தணுமா,இல்லையா அந்த தப்புக்குத் தண்டனைக் கொடுக்கணும்,அதைவிட்டுட்டு அப்படியே அவனுக்குத் துணைக்கு நிற்கிற உன்னை மாதிரி ஒருத்தியை அடிக்கிறதே எனக்குப் பாவம்”என்றுவிட்டு யாரையும் கண்டுக்காது திரும்பி நடந்தாள்.

அருணுக்கும் இதுவே பெரிய ஷாக்குத்தான் தங்கச்சி இஸ் ஆன் பயர்!என்று புரிந்துக்கொண்டான்.

இப்போது அவனது கையைப்பிடித்து கெத்தாக நடந்தாள்.இவனுங்க தப்பு செய்வானுங்களாமாம்,தண்டனை நாங்க அனுபவிககணுமா? என்னங்கப்பா நியாயம் இது?என்று நினைத்துதான் இவ்வளவையும் செய்தாள்.

ஆனால் அவள் பேசியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மோகன் எந்தவிதமான உணர்வுகளையும் தனது முகத்தில் காட்டாது அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

அவனது கோபம் உள்ளே தீயாகக் கனன்றுக்கொண்டிருந்தது!