என் நெஞ்சிலாடும் களபமே-34

களபம்-34
மோகனுக்கும் மித்ராவுக்கும் எல்லா பிணக்குகளும் தீர்ந்து சந்தோசமாக வாழ்ந்துக்கொண்டிருக்க,கிட்டதட்ட ஆறுமாதம் கழித்து காலையிலயே கோபத்தில் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டு மித்ரா உட்கார்ந்திருந்தாள்.
அதைப் பார்த்துச் சிரித்தவாறே ட்ரஸ் மாத்திக்கொண்டிருந்த மோகன் அவளருகில் வந்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு வயிற்றிலும் முத்தம் கொடுத்தான்.
“எதுக்கு இப்போ இந்த இலஞ்சம்.நீங்க என்ன சொன்னாலும் அவ கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன்னா வரமாட்டேன்தான்”
“இந்த அத்தானுக்காக வாடி. நல்லபொண்டாட்டில”
“நான்லாம் நல்லப்பொண்டாட்டின்னு யாரு சொன்னா? நான் நல்லப்பொண்டாட்டி இல்ல”
“எந்தப்பக்கம் போனாலும் கேட்டைப் போடுறாளே! மோகன் நீ இருந்த கெத்தென்ன இப்போ இருக்க நிலையென்ன பாரு? இதுக்குத்தான் மக்களே காதல் தோல்வின்னாலும் சிங்கிளாவே இருந்துடுங்க மக்களே. யாராவது தாலியை எடுத்து கைல தந்து கட்டுறா தாலியைன்னு சொன்னால் அப்படியே ஓடி வந்துருங்க மக்களே! இப்படி எல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்காதீங்க” என்று சத்தமாக பேசினான்.
“என்ன சொன்னீங்க?” எனக்கேட்டு அவனை ஏறிட்டுப் பார்த்து முறைத்தாள்.
“அது அப்படித்தான் இப்ப நீ கிளம்பி ரெடியாகி என்கூட வர முடியுமா? முடியாதா? இதுதான் கடைசியா நான்கேட்கிறது வருவியா மாட்டியா?”
“அதுதான் நானும் ஒரு வாரமா சொல்லிட்டிருக்கனே. வரமாட்டேன்!வரமாட்டேன்!வர முடியாது! வர முடியாது! நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு சொன்னேனே! அது உங்கக் காதுல விழலையா?இப்போ சொல்லுறேன் அந்த வெள்ளைக்கொழுக்கட்டைக் கல்யாணத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன் வரமாட்டேன். போதுமா இப்போ காதுல விழுந்துச்சா?”
“அதெல்லாம் விழுந்துச்சு அப்பவும் விழுந்துச்சு இப்போவும் விழுந்துச்சு.நீ முதல்ல எழுந்துக் கிளம்பு.அங்கப்பாரு புடவை எடுத்து வைச்சிருக்கேன்.எல்லாம் ரெடியா இருக்கு.இப்போ நீ கிளம்பலைன்னா நான் உனக்குப் புடவைக்கட்டிவிட்டுக் கூட்டிட்டுப்போவேன்”
“அவ என்ன கேவலப்படுத்தினவ. அதுவும் அத்தனைபேர் முன்னாடியும் ஆபீஸ்ல வைச்சு அடிக்க வந்தா. அது எதனால? உங்களால்தான். உங்கமேல இருந்த காதல்னாலயும் பொஸஸிவ்னஸ்னாலயும்தான். அதனால் அவள் கல்யாணத்துக்கு நான் வரமாட்டேன். அப்படி எல்லாரும் முகத்துல முழிக்க வேண்டாம்ங்குறதுக்காகதான் நான் வேலையே வேண்டாம் என்று ரிசைன் பண்ணிட்டு ஆறு மாசமா வீட்ல உக்காந்துட்டிருக்கேன் .இதுக்கு மேல என்ன கூப்பிட்டீங்க நான் ஊருக்கு போய்டுவேன்”
அந்த வார்த்தையைக் கேட்டவன் எதுவுமே சொல்லாது வேகமாக டையைக் கழற்றி சோபாவில் போட்டான்.சட்டையைக் கழற்றி தூக்கி எறிந்தான். அப்படியே போய் அந்தக் குஷனில் கவிழ்ந்தடித்துப் படுத்துக்கொண்டான்.
அதைப் பார்த்தவளுக்குப் புரிந்துவிட்டது.இனி நம்மக்கூட சண்டையெல்லாம் போடமாட்டாங்க. ஆனால் அவங்க ஆசையை நமக்காக மனசுக்குள்ள வைச்சுப் பூட்டிட்டாங்கன்னு தெரிந்துவிட்டது.
இப்போது மெதுவாக எழுந்தவள் குளித்து முடித்து புடவையெல்லாம் கட்டிக்கொண்டு வந்து நின்றாள்.
அவள் தலையில் உள்ள பூவின் வாசமும் கொலுசொலியும் அவனை உசுப்பேற்றியது.ஆனாலும் அமைதியாகப் படுத்திருந்தான்.
அவன் இன்னும் கோபத்தில்தான் இருக்கிறான் என்றாலும் அவன் கழட்டுப்பட்ட சட்டையை எடுத்து வைத்து மீண்டும் ஐயன் பண்ணிக்கொண்டிருந்தாள்.அப்போது விரலைச் சுட்டுக்கொண்டாள்.
ஆஆஆ அவுச் என்று கையை உதறியவள் வாயிற்குள் விரலை வைத்து வலியை பொறுத்துக் கொண்டாள்.
அதற்குள்ள அவள் ஆஆஆஆ என்று வலியில் கத்திய சத்தத்தை கேட்டு வேகமாக எழுந்து ஓடி வந்தவன் அவளது கைவிரலைப் பிடித்து ஊஃப் ஊஃப் ஊதியவன் அவளது விரலை தனது வாயிற்குள் வைத்து அவ்வளவு வலியை குறைக்க தொடங்கினான்.
ஒன்னும் இல்ல லேசாதான் பட்டிருக்கு. எனக்கு வலிக்கவேயில்லை என்று அவனு வாயிலிருந்து தனது விரலை உருவி உடுத்தவிட்டு ஐயன் பண்ணியிருந்த அவனது சட்டையை கையில் கொடுத்தாள்.
அந்த சட்டை வாங்கி அப்படியே வைத்துவிட்டு அவரது கையை மீண்டும் பிடித்துச் சூட்டுக்கொப்பளம் எதுவும் இருக்கா? என்று பார்த்து அது ஒன்றும் இல்லை என தெரிந்தபின்புதான் கையைவிட்டான்.
“எதுக்கு இப்போ எனக்கு டிரஸ் அயன் பண்ற ?அதுதான் நம்ம போகலைன்னு ஆயிடுச்சுல்ல. கல்யாணத்துக்கு போகலன்னு நம்மளை யாராவது கேக்க போறாங்களா என்ன? அப்படியே குப்தா சார் கேட்டாலும் நான் சமாளிச்சுக்கிறேன்” என்றவன் கோபத்தில் முறுக்கி கொண்ட போய் உட்கார்ந்தான்
அவனருகில் வந்தவள் அவனது மண்டையில் நறுக்கென்று கொட்டிவிட்டு “போய் சட்டையைப் போட்டுட்டு வாங்க.அந்த வெள்ளைக்கொழுக்கட்டைக் கல்யாணத்துக்குப் போகணும்ல. உங்களுக்காக வர்றேன்”
“எனக்காகவெல்லாம் யாரும் வரவேண்டாம்.அப்படியே பக்கத்துல உட்காரு.அதுதான் நம்ம போகலைன்னு முடிவெடுத்து சட்டை எல்லாம் கழட்டி போட்டுட்டனே. அப்புறம் எதுக்கு கிளம்ப சொல்லுற? ஒன்னும் வேண்டாம் நீ என் பக்கத்திலேயே உட்காரு நம்ம பேசிட்டு இருக்கலாம்”என்று அவளது கையை பிடித்து தனது பக்கத்தில் உட்கார வைத்தான்.
“ஆளப்பாரு ஆள பிரீத்தாக கல்யாணத்துக்கு வரலைன்னு சண்டைப் போட்டு கோவத்துல சட்டை, பேண்டு எல்லாம் கழட்டி போட்டு உக்காந்துட்டு, இப்போ வந்து பேசிட்டு இருக்கலாம் ஜாலியா பேசலாம் வா அதுஇது பேசுறதைப்பாரு.நீங்க எதுக்கு அடிப்போடுறீங்கன்னு எனக்குத் தெரியும்.நான் புடவைக்கட்டி பூ வைச்சுட்டு வந்ததும் ஐயாவுக்கு மூடாகிப்போச்சு அதுதானே.அதுக்கு என்னென்னவோ சொல்லுறதைப்பாரு. அதெல்லாம் முடியாது நீங்க கோவிச்சிட்டு இருக்கீங்கன்னு நான் போய் புடவை கட்டி, நகையெல்லாம் போட்டுட்டு கிளம்பியாச்சு. பூவெல்லாம் வைச்சுட்டேன். நல்லா இருக்கேனா? இல்லையா? அப்படியே கிளம்பி வாங்க கல்யாணத்துக்கு போயிட்டு வருவோம்” என்று அவனது கையைப் பிடித்து இழுத்தாள்.
அவனோ கள்ளச்சிரிப்புச் சிரித்தவாறே “போகணுமா மித்து.உன்னைப் பார்த்ததும் அப்படியே வேறமாதிரியான மயக்கம் வருதுடி.அதனால நம்ம இங்கயே இருந்துக்கலாம்” என்றவன் அவளது வயிற்றில் முத்தம் வைத்தான்.
“ஓய் அத்தான் எழும்பி கிளம்புங்க இப்ப கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்துருவோம் அடுத்த மாசம் ஊருக்கு போகணும்ல. நிறைய வேலை இருக்கு.வளைகாப்பு நடத்தணும். அதனால அதுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வருவோம். எனக்கு கொஞ்சம் டிரஸ்சும் எடுக்கணும். கல்யாண வீட்டுக்கு போயிட்டு அப்படியே வந்திடலாம்”என்றவள் அவனிடம் இருந்து விலகி வெளியே சென்றாள்.
“ப்ச்ச் நல்ல மூடு வரும்போது தான் இவ இப்படி பண்ணுவா” என்று அலுத்துக் கொண்டவன் வேகமாக கிளம்பி அவளோடு பிரீத்தாவின் கல்யாண ரிசப்ஷனுக்கு சென்றான்.
அவனை எல்லாம் ப்ரீத்தா அந்த கல்யாண கூட்டத்தில் கண்டுக் கொள்ளவேயில்லை.அவள் தனது கணவருடன்
சந்தோஷமாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போக வேண்டிய விஷயம் என்று அவளுக்கு நன்றாக புரிந்திருந்தது என்பதால் அதை அப்படியே காலத்திற்கு தகுந்த போல ஏற்றுக் கொண்டாள்.
அதைப் பார்த்ததும் மித்ராவுக்குதான் ஆச்சரியமாக இருந்தது’இந்த அத்தானும் இப்படித்தானே பழைய விஷயங்களை கடந்து வந்திருப்பாங்க. நம்மளும் இனி பழைய விஷயங்களிலிருந்து கடந்து வரணும்’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு அங்கு நல்ல திருப்தியாக சாப்பிட்டு சந்தோஷமாக பிரீத்தாவின் கல்யாணத்தில் கலந்து கொண்டாள்.
அதை மோகனுமே எதிர்பார்க்கவில்லை.நல்லது இப்படியே இருக்கட்டும், அப்போதான் இனி பிரீத்தாவை வைத்து எங்களுக்குள்ள சண்டைவராது என்று மனதிற்குள் நிம்மதியாக உணர்ந்தான்.
ஸ்ஸப்பாடா ஒவ்வொருத்தனுக்கும் உலகத்துல ஆயிரம் பிரச்சனை.நம்க்கு அதுக்குமேல வந்துட்டு. இத்தோட என் பிரச்சனையெல்லாம் முடிஞ்சு போகட்டும் கடவுளே! கல்யாணத்துக்கு வந்ததுக்கு நல்ல தின்னுட்டு சந்தோசமாக வீடு வந்து சேர்ந்தனர்.
இரவு வீடு வந்து குளித்துவிட்டு வந்தவள் “அந்த வெள்ளை கொழுக்கட்டைக்கு கல்யாணம் முடிஞ்சது எவ்வளவு பெரிய விஷயம். அதனால் இனி அவ நமக்கு இடையில் வர மாட்டாள் அப்படிங்கிறது எவ்வளவு பெரிய நிம்மதி” என்றவள் மோகனின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள்.
இது போதுமே இனி அவர்கள் வாழ்க்கையில் வேறெந்தப் பிரச்சனை வராதுடா சாமி.இனி நிம்மதியாக வாழலாம் என்றுதான் இருவருமே நினைத்தனர்.
அடுத்த ஒரு மாதம் எப்படி போனது என்றே தெரியாத இருவரும் இப்பொழுது வளைகாப்பு நடத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தனர்.
ருக்குமணிக்கு என் மருமகள் மாசமாக இருக்கா எனக்கு பேரப்பிள்ளைகள் வரப்போறாங்க என்ற சந்தோஷத்திலே அவரது இருதய பிரச்சினை எல்லாம் கண்டுகொள்ளாது பின்னுக்குத் தள்ளிவிட்டார்.
அந்த சந்தோஷத்திலிருந்து வளைகாப்பு நன்றாக நடத்தி முடித்திருந்தார். அடுத்த நாள் காலை மோகனும் மித்ராவும் கோவிலுக்கு சென்றனர்.
வளைகாப்பு நடத்துவதற்காக மட்டும் தான் சென்னைக்கு வந்திருந்தனர் தவிர பிரசவம் எல்லாம் டெல்லியில் வைத்துதான் நடத்தணும் என் கூடவே என் பொண்டாட்டி இருக்கணும் என்று மோகன் சொல்லிவிட்டான்.
அதனால் மொத்த குடும்பத்திற்கும் சேர்த்து டெல்லிக்கு விமான டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்து விட்டான்.
இப்போது இருவரும் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட மனநிம்மதியோடு வெளியே வந்தனர்.
அங்கே ராதா அவளது கணவன் கிருஷ்ணனுடன் தனது இரண்டுக் குழந்தையோடு உள்ளே வந்துக்கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதும் மோகன் ஒரு நொடி ப்ரீசாகி நின்றுவிட்டான்.பின் தன்னைத்தானே நிதானித்து சுதாரித்து, மித்ராவின் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு ராதாவின் எதிரே போய் நின்றான்.
“நல்லாயிருக்கீங்களா மிஸஸ் ராதா கிருஷ்ணன்.இது உங்க இரண்டாவது குழைந்தையா பையனா? பொண்ணா?” என்று யதார்த்தமாக கேட்டான்.
கிருஷ்ணனனோ மோகன் இப்படி நார்மலாக பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. ராதாவுக்குமே ஆச்சர்யமும் அதிர்ச்சியும்தான். ஆனாலும் அதை வெளிக்காட்டாது “நல்லா இருக்க மோகன் சார் நீங்க எப்படி இருக்கீங்க? இது உங்க மனைவியா? கர்ப்பமாக இருக்கிறாங்களா? நல்லது வாழ்த்துகள்” என்று மித்ராவுக்கு கைக்கொடுத்து வாழ்த்தினாள்.
உடனே மோகன்” வணக்கம் கிருஷ்ணன் சார் எப்படி இருக்கீங்க.நல்லாயிருக்கீங்களா” என்று கேட்டுக் கைக்கொடுத்தான்.
இருவரும் கைகக்குலுக்கிக் கொண்டனர்.மித்ராவைப் பார்த்து “இதுதான் ராதா இது அவங்க கணவர் கிருஷ்ணன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.
அப்போதுதான் மித்ரா ராதாவை உற்றுப் பார்த்தால் மிக அழகாக நேர்த்தியாக பாந்தமான அழகோடு ராதா இருந்தாள்.
எந்தளவுக்கு இவங்களை காதலிச்சிருந்தா அத்தான் அவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரு. அதுசரி அந்தக் கஷ்டம் வந்ததுனாலதான் அத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிருக்காரு.அதுதான் கடவுளோட திட்டம்போல என்று நினைத்துக்கொண்டாள்.
நலம் விசாரித்த பிறகு மோகன் ராதாவை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டு “மன்னிச்சிடுங்க ராதா! கடைசியாக நான் செய்தது பெரிய பிழை.உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்னு இருந்தேன். அந்தப் பிழையை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மன்னிச்சிடுங்க”என்று மன்னிப்புக் கேட்டவனை ராதாவும் கிருஷ்ணனும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
இவ்வளவு வருஷம் கழித்தும் செய்த தப்புக்காக மன்னிப்புக் கேட்டதே பெரிய விசயம்.அவனை மன்னிக்கிறதுதான் நம்ம கடமை என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்ட மோகினைப் பார்த்து இப்போது ராதாவுக்கு இப்பொழுது மரியாதை வந்திருந்தது.
அவன் அப்படி என்ன பயங்கரமான தப்புச் செய்துட்டான்? நான் விவாகரத்தாகி இருக்கேன்னு தெரிஞ்சும் நேசித்தாரு. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை. என் கணவனைத்தவிற அது விவாகரத்தாகி பிரிந்திருத்தாலும் அவரைத்தவிற யாரையும் மனாசாலக்கூட ஏத்துக்கொள்ள தயாராக நானில்லை. இதுல மோகன் என்ன பண்ணுவாரு. வாழ்க்கை பல சுவாரசியத்தையும் ட்விஸ்ட்டையும் வைச்சிருந்திருக்கு அவ்வளவுதான்”என்று சிரித்தவாறே மோகன் கேட்ட மன்னிப்பை ஏற்று பெருந்தன்மையோடு மன்னித்தும் விட்டாள்.
மோகன் இப்போது சந்தோஷமாக அவர்களிடம் இருந்து விடைபெற்றவன் மித்ராவின் தோளில் கையை போட்டு நெருக்கமாக பிடித்துக் கொண்டு தன் மனைவி தன்னுரிமை என்று உணர்ந்து அவளோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
ராதாதான் கிருஷ்ணனிடம் பார்த்தீங்களா மச்சான் மனுசங்க நிறைய வாழ்க்கையில அடிபடும் போது தங்களுடைய குணங்களை மாற்றுகிறாங்க. நல்லா இருக்கட்டும் என்று அவர்களுக்காகவும் சேர்த்து வேண்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
ராதாவின் வாழ்க்கை இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது தனது கணவன் மாமியார் குடும்பத்தை கொஞ்சம் ஒதுக்க வைத்தபின்பு தான் அவளது குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது. அதுவே போதும் என்று மனதிருப்தியுடன் கிருஷ்ணாவோடு வாழ்கிறாள்.
மோகனும் இனி ராதாவைக் கடத்தினதை நினைத்து குற்றவுணர்ச்சியில் வருந்தி வாழமாட்டான்.
அவனது வாழ்க்கை மித்ராவோடு சந்தோசமாக இருக்கும்.இப்போது நல்ல பக்குவபட்ட மனதுள்ளவனாக மித்ராவின் காதலனாக அல்லவா இருக்கிறான்!
அதனால் அவனது வாழ்க்கை கண்டிப்பாக சுபிட்சமாக இருக்கும்!