என் நெஞ்சிலாடும் களபமே-22

களபம்-22
மோகனுக்கு மனதளவில் ஒரு நிம்மதிக்கிடைத்தது.மித்ராவுக்கோ தனக்கும் தன் காதலுக்கும் அத்தானிடமிருந்து ஒரு அங்கீகாரம் கிடைத்த சந்தோசத்தில் அவனருகிலே படுத்து நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
காலையில் எழுந்தவன் அவள் தன்னருகில் படுத்திருப்பதைப் பார்த்தான்.
அவளையே சிறிதுநேரம் பார்திருந்தவன் ஒன்றுமே சொல்லாது எழுந்துப்போய் குளிச்சுட்டு ஆபிஸிற்கு ரெடியானான்.
நல்லத் தூக்கத்தில் இருந்த மித்ரா அவன் அங்குமிங்கும் நடமாடும் சத்தத்தை உணர்ந்து எழுந்தாள்.
அவளது ட்ரெஸ் எதுவும் அங்கில்லை.அதனால் அருகில் கிடந்த பெட்சீட்டை எடுத்து வேகமாகச் சுற்றிக்கொண்டு போனவளை மோகன் வழிமறித்தான்.
அவனைப் பார்த்ததும் சந்தோசமாகவும் கொஞ்சம் வெட்கத்தோடும் புன்னகைத்தவள் ”என்னத்தான் வழி மறிக்கிறீங்க.நான் குளிக்கப்போகணும். என்னோட ட்ரெஸ் வெளியதான் இருக்கு.எடுத்துட்டுக் குளிச்சிட்டு வர்றேன்”என்று அந்த முதல் உறவும் புதுஉறவும் தந்த மயக்கத்திலும் சந்தோசத்திலும் பூரிப்போடு அவனிடம் உரிமையாகப் பேசினாள்.
அதைப்பார்த்தும் கண்டுக்காது அவளிடம் நேரிடையாகவே ”இனி இந்த ரூமூக்குள்ள வராத.அங்க ஹாலிலேயே இருந்துக்க.எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. என்கிட்ட நெருங்காத.எனக்குத் தோணும்போது நான் உன்னோடு குடும்பம் நடத்துறேன். தயவு செய்து புரிஞ்சுக்க? நேத்து நடந்ததுக்காக திரும்பவும் என் பக்கத்துல வராத” என்று ஏதோ அவள் அவனை பலவந்தப்படுத்தியது போன்று பேசினான்.
அதைக்கேட்டதும் சட்டென்று ஒருமாதிரி கேவலமாக காதலின் பிச்சைக்காரி போன்று உணர்ந்தவள் சட்டென்று உடைந்து அழுதுவிட்டாள்.
“நான்… நான்… ஒன்னும் பண்ணலையேத்தான். நீங்க நீங்கதானே எல்லாம்…” என்று திக்கித் திணறி சொன்னாள்.
“ப்ப்ச் இப்போ எதுக்கு அழற? ஊப்ஸ் அதெல்லாம் எனக்குத் தெரியும்.நான் ஒன்னும் மறதிமன்னன் இல்லை.என்கிட்ட நீ நெருங்காமல் இருந்தாலே நான் என்னைக் கண்ட்ரோல் பண்ணிப்பேன்.போ குளிச்சுட்டு எனக்கு ஏதாவது சமையல் பண்ணி வை.எனக்குத் திரும்பவும் அதை ஞாபகப்படுத்தாதே”என்று விரட்டினான்.
தனது உதட்டைக் கடித்து அவன் முன்பு அழாத பொங்கிவந்த அழுகையோடு வாயைப்பொத்திக்கொண்டு ஓடியவள் போய் குளிக்க நின்றாள்.
அவன் தன்னைத் தொடும்போது இருந்த சந்தோசமெல்லாம் இப்போது அருவருப்பாக உணர்ந்தாள்.உடலில் நேற்று நடந்த மாற்றத்தைவிடவும் அவனிடம் இப்போது கண்ட மாற்றம்தான் வலித்தது.
‘ஏன் எனக்கு மட்டும் இப்படியாகணும்?பேசாம அத்தானை தனியாகவே டெல்லிக்கு அனுப்பி வைச்சிருக்கலாம்.இந்த அத்தையும் அண்ணனும் சேர்ந்து என்னையும் அவங்கக்கூட அனுப்பிவைச்சு இப்படி வேதனைப்பட வைச்சுட்டாங்க’ என்று கத்திக் கதறி அழுதாள்.
அவளது அழுகையின் சத்தம் அவனுக்குமே கேட்டது.உடனே கதவைத் தட்டினான்.அவன் கதவைத் தட்டியதும் வாயை இருகைகளாலும் பொத்தியவள் சத்தம்வராது அழுதாள்.
“இங்கப்பாரு உன் அழுகையெல்லாம் இங்க செல்லாது.எனக்கு தோணினா மட்டும்தான் உன்னோடு வாழமுடியும்.சும்மா எல்லாத்துக்கு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாத.உங்கப்பன் இப்படித்தான் நெஞ்சப்பிடிச்சுக்கிட்டு அழுது எங்கம்மாவை ஏமாத்திட்டாரு.அதே மாதிரி நீ என்னை ஏமாத்த நினைக்காத.சீக்கிரம் வெளியே வந்து சாப்பாடு பண்ணு” என்று சொல்லிவிட்டு ஹாலில் போய் உட்கார்ந்தான்.
மித்ராவால் மோகன் நடந்துக்கொள்ளவதைப் புரிந்துக்கொள்ளவே முடியாது தவித்தாள்.
தனது அழுகையை குளிக்கும் தண்ணீரோடு கடத்திவிடு வெளியே வந்தவள் அவசர அவசரமாக சமையல் செய்துமுடித்து மோகனுக்குச் சாப்பாடுக் கொடுத்து ஆபிஸிற்கு அனுப்பிவிட்டாள்.ஆனால் அவளது மனது ஆறவேயில்லை.
ஏதோ நான் அவங்களை மயக்கிட்டமாதிரியே பேசுறாரு.ஏதோ கோபத்தை தன்னைக் கொடுமைப்படுத்தத் தொடங்கிட்டான் என்று நினைத்தாலும் அது அவளால் ஏற்றுக் கொள்ள முடியாதுபோனது.
ஏதோ வேண்டா வெறுப்புக்கு ஒரு தாலியை கட்டி ஆகாத பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துற மாதிரி அவனது செயல் இருப்பதால் அவளது மனது தினம் தினம் தத்தளிக்க ஆரம்பித்தது.
அதன்பின் ஒரு சக மனிதனாக கூட அவனோடு பேச அவளுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை என்பதே உண்மை.
அந்த வீட்டில் இன்னொரு அறையும் இருக்கிறது.அதனுடைய சாவி குப்தாவிடம் இருக்கிறது.அது தனக்கு வேணும் என்று கேட்டாலே அவர் கொடுத்துவிடுவார்.
ஆனால் இன்னும் கேட்கத்தோணலை. இருக்கட்டும் அப்புறம் பார்த்துக்கலாம் என்று விட்டுவிட்டான். ஆனால் அதற்கும் காலம் நேரம் வரும்னு அவனே எதிர்பார்க்கவில்லை.
தினம் தினம் மித்ரா மனதில் ஆயிரம் எண்ணங்கள் சும்மாவே தோன்றி தோன்றிய மறைந்தது. இப்படி இருந்தால் சரி படாது என்று வேலைக்கு செல்லலாம் என முடிவெடுத்து விட்டாள்.
அதனால் அவனிடம் சொல்லாமலே இங்கே எந்தெந்த கம்பெனிகள் இருக்கிறது என்று பார்த்து அந்தந்த கம்பெனிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் போராட்டத்திற்கு பின்பு அவளுக்கு இன்டர்வியூக்கு மெயில் வந்திருந்தது.
அந்த ஒரு மாதம் அந்த வீட்டுக்குள் இருக்கிறது மூச்சு முட்டுவது போல் தோன்றியது.நிறைய வரையதுக்கு வாங்கி வந்த பிறகு வரைய ஆரம்பித்தாள்.
இப்படி ஒரு மாதம் கழித்து டீவி பார்த்திருந்தவன் திடுரென்று அவள் வரைந்ததை எடுத்துப் பார்த்தான். அதை பார்த்தப்பின்புதான் மெதுவாக இவள் என்ன படித்திருக்கிறாள்? என்று யோசித்தான்.
அன்று அவளோடு கலந்தப்பின்பு அவனுக்கே பலநேரம் அவளை நெருங்கத் தோன்றியது. ஆனால் வேண்டாம் என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டான்.
இப்போதுஅவளது படிப்பை பற்றி யோசிக்கும் போது தான் அவனுக்கு மண்டையில் உறைத்தது.
‘மாமா பொண்ணு சொந்த தாய் மாமா பொண்ணு என்ன படிச்சிருக்கான்னு கூட தெரியாம இருந்திருக்க, அது கூட பரவாயில்லை இப்ப தாலி கட்டிட்டு வந்து ஒரு ஒரு மாசம் ஆகியும் அவள் என்ன படிச்சிருக்கான்னு கூட தெரியாம இருக்கியே! பொண்டாட்டிய பத்தி எந்த ஒரு கவலையும் இல்லாத மனுஷனா இப்படியா இருப்பேன்’ என்று மனசாட்சி உறுத்தியது.
உடனே அவளருகில் போய் உட்கார்ந்தன்.
“நீ என்ன படிச்சிருக்க?”என்று கேட்டதும் சட்டென்று திரும்பி அவனை ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவனைப்போல பார்த்தாள்.
“என்ன அப்படிப்பார்க்கிற?”
ஒன்னுமில்லை என்று தலையைமட்டும் ஆட்டியவள் மீண்டும் தனது வரைதலைத் தொடர்ந்தாள்.
“நீ சிவில்இன்சினியரிங்கா படிச்சிருக்க?”
ஆமா என்று அதற்கும் தலையாட்டினாள்.
“எல்லாத்துக்கும் தலையாட்டினா என்ன அர்த்தம்.நான் ஒருத்தன் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாமல் தலையைமட்டும் ஆட்டிட்டிருந்தா என்ன அர்த்தம்?”என
கோபத்தில் அந்த டீபாவில் இருந்து பைலைத் தூக்கி எறிந்தான். அதுல அவளுடைய ரெசூய்மே இருந்தது.அது அப்படியே தெறித்து விழுந்தது.
அதை எடுத்துப் பார்த்தவனுக்கு அதிர்ச்சிதான்.எம்.ஈ.சிவிலா? நான் என்னவோ எம்.ஏ பீ.ஏன்னு நினைச்சேன் என்று வாய்விட்டே சத்தமாகச் சொல்லிட்டான்.
அதைக்கேட்டவள் அப்படியே கோபத்தில் முகம் சிவந்துத் திரும்பிப்பார்த்தவள் ”எதையும் யாரைப்பத்தியும் தெரிஞ்சுக்காமல் அன்டர்எஸ்டிமேட் பண்ணி நீங்களே ஏதாவது கற்பனையில் வாழ்ந்துக்கிறீங்க அதுதான் உங்கப்பிரச்சனையே? ராதா விசயத்திலும் அப்படித்தான் என் விசயத்திலும் அப்படித்தான் யோசிச்சு என்னோட வாழத்தொடங்கிட்டீங்க. இது எதுலக்கொண்டு போய்விடும்னு தெரியலை.ஒருவிசயத்திலும் தெளிவான சிந்தனையும் இல்லை முடிவும் எடுக்கத்தெரியலை”என்று சொல்லிவிட்டு அப்படியே திரும்பித் தனது வேலையில் கவனம் வைத்தாள்.
அதில் மனதில் அடிவாங்கியவனுக்கு ஆம்பளை என்கின்ற தெனாவெட்டும் திமிரும் சிலிர்த்து எழுந்தது.
மோகன் உடனே எழுந்து அவளருகில் சென்று அவளது கையைப்பிடித்துத் தூக்கி”என்னைப் பத்தி என்ன சொல்லவர்ற?அசடு, தத்தி, முட்டாள்னு சொல்லாமால் சொல்லுற அப்படித்தானே?”என்று கோபத்தில் கேட்டான்.
அவளோ அவனது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவள்ஸ”ஆமான்னு சொன்னால் என்ன செய்வீங்கத்தான். அடிப்பீங்களா? இல்லை கொன்னுப்போட்டிருவீங்களா? அத்தை என்னதான் மிரட்டினாலும் உங்க முடிவு உறுதியாக இருந்திருந்தா பிடிக்காமல் என் கழுத்துல தாலிக் கட்டியிருக்கமாட்டீங்க.இப்படி பிடிக்காய வாழ்க்கைக்குள்ள உங்களை யாரும் தள்ளிருக்கமாட்டாங்க. உங்களுக்கும் நிம்மதியாக இருந்திருக்கும். அதைத்தான் சொன்னேன்.நான் யாரையும் மட்டமாக நினைக்கமாட்டேன். நீங்க ராதாவை காதலிச்சீங்கன்னு எனக்கும் தெரியும் ஆனால் அந்தப்பொண்ணுக்கிட்ட ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேசியிருந்தா அவ மனசை புரிஞ்சிருந்திருக்கலாம் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வந்திருக்காதுல. அங்கயே கோட்டையை விட்டுட்டீங்க .இங்க பிரீத்தாகிட்டயும்…”என்று பேச்சைத் தொடங்கியவள் அவளைப் பத்திப்பேசக்கூடாதுன்னு உதட்டைக் கடித்துத் தனது வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
தனது கண்களை மூடிக் கொண்டு தன்னைத்தானே நிதானாப் படுத்தினாள்.
அவனுக்கோ அதைக்கேட்டதும் கோபம் சுர்றென்று மண்டைக்குள் ஏறி நின்றது.
அந்தக் கோபத்தின் பலன் என்னவாக இருக்கமோ?என்று மித்ரா கொஞ்சம் பயம் கலந்து அவனைப் பார்த்திருந்தாள்.