என் நெஞ்சிலாடும் களபமே-11

களபம்-11
அருண் மோகனின் அருகில் உட்கார்ந்திருந்தான்.
“டேய் மச்சான் உண்மையில உனக்கு எதுவும் ஆகிடுச்சாடா என்ன?இங்கிருந்து போகும்போது அப்பாவி அம்பியா போன, அங்கிருந்து வரும்போது இப்படி அந்நியனாக வந்திரிக்கியேடா! சொல்லுடா உன்னை யாராவது கடத்திட்டுப்போய் மூளையில அஎதுவும் ஆபரேஷனுக்கு கீப்பரேஷன் பண்ணி விட்டுட்டாங்களாடா? எனக்கு ஆச்சரியமா இருக்கு. எங்க பழைய மோகனசுந்தரம் தாண்டா வேணும் இப்படியா இருக்கிற சுந்தர் வேண்டாம்டா” என்று அருண் அவனைக் கலாய்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கே மித்ராவும் சங்கரனும் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தனர்.
சங்கரனுக்கு மோகனைப் பார்த்ததும் முதலில் திடுக்கிட்டவர் பின் சுதாரித்தவருக்கு ஒரு கெத்து வந்ததுவிட்டது’உன்கிட்டதானடா என் மகளைக் கட்டிக்கிறதுக்கு நாயா பேயா அலைஞ்சுக்கேட்டேன். எங்க அக்கா சொன்ன ஒத்தை வார்த்தைக்காக என் மகளை உனக்குக் கட்டிக்கொடுக்க நினைச்சு பொறுமையா காத்திருந்ததுக்கு நீ எங்க மூஞ்சிலயே கரியைப்பூசிட்டுப் போனல்ல.இப்போ பாரு உன்னைவிடவும் அதிகம் படிச்ச மாப்பிள்ளை, வசதியான மாப்பிள்ளை,இப்படி எல்லாத்துலயும் உன்னைவிட பெட்டரா ஒருத்தரை என் மகளுக்காக கண்டுபிடிச்சு கட்டி வைக்க போறேன்.அவன் வெளிநாட்டுல இருக்கான். உன்ன விட அதிகமா சம்பாதிக்கிறான்’ என்று நினைத்தவருக்குப் பெருமைப்பொங்கி முகத்தில் வழிந்தது.அதனால் கொஞ்சம் கெத்தாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவன்முன்பு வந்து நின்றார்.
அதைப்பார்த்த மோகன் அவரை வித்தியாசமாகப் பார்த்தான். அவருக்குப் பின்னாடி வந்துக்கொண்டிருந்த மித்ராவுக்கோ “இது மோகன் அத்தான்தானே? திரும்பி வந்துட்டாரா? எப்போ வந்தாரு”என்று ஆச்சர்யத்தோடு அவனருகில் போனவளின் கையைப்பிடித்து சங்கரன் இழுத்து அவனோடு பேசவிடாது நிறுத்தி வைத்திருந்தார்.
“என்னாச்சுப்பா? என் கையை எதுக்கு இழுத்துப் பிடிச்சு வைச்சிருக்கீங்க?” என்று புரியாது அவரது முகத்தைப் பார்த்துக்கேட்டவளை முறைத்தவர்” இங்கப் பாரு இன்னும் இருபதுநாள்ல உனக்கு கல்யாணம். மாப்பிள்ளை பேசி முடிச்சாச்சு. நிச்சயமும் நடந்தாச்சு.
இப்போபோய் நீ மோகன்கிட்ட போய் பேசிட்டு இருந்தால் அது பார்க்கிறவங்க கண்ணுக்கு அது நல்லா இருக்காது.அவன் திரும்பி வந்துட்டாம்னா அது நமக்கு சந்தோஷம் அவ்வளவுதான். நீ இப்போ அவன்கிட்ட பேசணும்னு அவசியமில்லை. சாப்பாட்டுக் கூடையைக் கையிலக் கொடுத்துட்டு வெளியே போய் என் வண்டிப் பக்கத்துல நில்லு” என்று விரட்டினார்.
அப்பா “என்னப்பா நீங்க?அத்தான் ரெண்டு வருஷம் கழிச்சு திரும்பி வந்திருக்காரு. அவரிடம் எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு அப்புறமா வெளியே போறனே.கையை விடுங்களேன்” என்றவள் அவரது பேச்சையும் மீறி மோகன் அருகில் செல்ல எத்தனித்தாள்.
அவளது கையை இறுக்கிப்பிடித்து பின்பக்கமாக இழுத்தவர் “மித்ராஆஆஆ! நான் இவ்வளவு தூரம் சொல்லிட்டிருக்கேன்.என் பேச்சை மீறி அவன்கிட்ட நீ எப்படி போசப்போகலாம்?” என்று கோபத்தில் உச்சஸ்தாயில் கத்தியவர் பளீரென்று அவளது கன்னத்தில் அடித்துவிட்டார்.
அவருக்கு ஒரு பயம் வந்து விட்டது.மகள் எங்கே தன் பேச்சை மீறி இப்போ நடக்கப்போற கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி மோகனோடு போய்விடுவாளோ?இவன்தான் வேணும் என்று கல்யாணத்தை நிறுத்தி விடுவாளோ? என்று பல யோசனையோடு இருந்தவர் அவள் மோகனிடம் பேசப்போகிறேன் என்றதும் அறைந்து விட்டார்.
இதை மோகன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அதைவிடவும் அடிவாங்கிய அதிர்ச்சியில் நின்ற மித்ரா அப்படியே கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கண்கள் கலங்க வலியில் சங்கரனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அந்த நேரத்தில் அருண் அங்கு இல்லை. அவன் வெளியே சென்றிருந்தான்.
சுமி உடனே சங்கரன் அருகில் வந்த “எதுக்கு மாமா மித்ராவை அடிச்சீங்க? அவ அப்படி என்ன தப்புச்செய்தான்ன் அடிச்சீங்க? அண்ணனை பார்த்ததும் அண்ணன்கிட்ட எப்படி இருக்கீங்கன்னு விசாரிக்கத்தானே வந்தாள். அது உங்களுக்கு பொறுக்கலையா?அவ வந்து அண்ணனை விசாரிச்சா உடனே அவன் அவளை கல்யாணம் பண்ணிப்பானா என்ன? நீங்கதான் அவளுக்கு வேற ஒருத்தனை பார்த்து கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களே. அவளும் அந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாளே! அப்புறம் எப்படி நீங்க மித்ராவை அடிச்சீங்க? உங்க மகளை கண்டிக்கணும்னா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் காண்டிங்க.இங்க அம்மாவை வைச்சிருக்கோம். நீங்க வந்து இப்படியெல்லாம் பண்ணாதீங்க. எங்க அம்மாவுக்கு இது தெரிஞ்சா அவங்களுக்கு எவ்வளவு மனசு வலிக்கும்?தயவு செய்து நீங்க எங்களுக்கு சாப்பாடு கொண்டு வர வேண்டாம் எங்களை பாக்குறதுக்கும் வரவேண்டாம். நீங்க உங்க மகளை கூட்டிட்டு போங்க.உங்க மகள் கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க போங்க மாமா” என்று சத்தம் போட்டாள்.
அதைக்கேட்ட சங்கரன் கொஞ்சம் அதிகப்படியாகத் தான் போயிட்டோமோ? என்று முழித்தார்.
சங்கரன் மித்ரா அடித்ததையும் அவள் வாங்கியதையும் அமைதியாக தீர்க்கமாகப் பார்த்திருந்த மோகன் மித்ரா வெளியே சென்றதும் எழுந்து மாமாவின் அருகில் வந்தான்.
“வாங்க மாமா எப்படி இருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?நான் இல்லாதப்போ எங்கம்மாவை நல்ல பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி. ஹாஸ்பிட்டல்ல சேர்த்து சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து தர்றீங்க. நீங்களும் உங்க பிள்ளைங்களும் நல்லாயிருங்க”என்று வாழ்த்தியவன் அம்மாவைப் பார்க்க உள்ளே சென்றுவிட்டான்.
சுமியும் சங்கரனும் பெரிய சண்டையை எதிர்பார்த்திருக்க அவனோ ஒன்றுமே சொல்லாது புயல் அமைதியாகயாகக் கடந்துப்போகிற மாதிரியே கடந்துப்போனான்.
அதுதான் இருவருக்கும் ஆச்சர்யம்! இதுக்கு முன்பென்றால் எதெற்கெடுத்தாலும் எமோஷனாலகி சண்டைப் போடுவான். இப்போ அப்படியே மொத்தமாக மாறி அமைதியாகப் போனான்.
இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியாது மாமாவும் மருமகளும் போகும் அவளையே பார்த்திருந்தனர்.
உடனே சுதாரித்த சங்கரன் “சுமி இதுல சாப்பாடு இருக்கு. அக்காவுக்கும் குழைய சீரகம் மிளகெல்லாம் போட்டுக் கஞ்சி வைச்சுக் கொண்டு வந்திருக்கேன். அவள் எழுந்ததும் லேசாகக் குடுத்திரு.வேற எதுவும் வேணும்னா எனக்குப் போன் பண்ணு” சுமி திட்டுவதை கூட பொருட்படுத்தாமல் கையில் சப்பாட்டுக் கூடையைக் கொடுத்துவிட்டு வேகமாக வெளியே வந்தவர் மித்ராவை அங்கே தேடினார்.ஆனால் மித்ரா அங்கு எங்குமே இல்லை.
உடனே பயந்து போய் மனைவிக்கு அழைத்தவர்”ஏன்டி மித்ரா அங்க வந்தாளா?”என்று இங்கு நடந்ததை மறைத்துக்கொண்டுக் கேட்டார்.
தனமோ என்னாச்சு வெயில்ல உங்களுக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சுட்டா என்ன? உங்கக்கூடத்தான் உங்க அக்காவைப் பார்க்கணும்னு அவளையும் சேர்த்துதானே உங்க வண்டியிலக் கூட்டிட்டுப்போனீங்க. இப்போ அவமட்டும் வீட்டுக்கு வந்துட்டாளான்னு எப்படி கேட்கிறீங்க?அறிவிருக்கா மனுஷா.வண்டியில் கூட்டிட்டுப்போய் எங்கேயும் தள்ளிப்போட்டுட்டீங்களா என்ன?”என்று கோபத்தில் போனுலூடே கத்தினார்.
“அடியேய் இங்க அந்த தறுதலை மோகன் வந்திருக்கான்டி.அவனைப் பார்த்ததும் உன் மக வேகமாப்போய் பேசப்போனாளா?”
“ எங்க மகள் அவன்கூட ஓடிப்போயிடுவளோன்னு அவளை அடிச்சிருப்பீங்க அவள் கோபத்துல வெளியே வந்துட்டாளா?”
“ஆமாடி அப்படியே மந்திரம்போட்டுத் தெரிஞ்ச மாதிரியே சொல்லுறியேடி.அவளை வெளி வண்டிக்கிட்ட நில்லுன்னு சொன்னேன்டி. ஆனால் அவளைக் காணும் ஹாஸ்பிட்டல் முழுக்கத் தேடிட்டேன்”என்று பாவமாகச் சொன்னார்.
“எதுக்கு மந்திரம்போட்டுப் பார்க்கணும்.அதுதான் உங்கள பத்தி நல்லா தெரியுமே! இருபத்தஞ்சு வருஷமா உங்கக்கூடத்தானே குப்பைக்கொட்டுறேன். நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாதா என்ன இதுதான் எங்க நடந்திருக்கணும்னு நானே தான் எழுதி சொல்லி இருக்கேன் நான் இப்போ மித்ராவுக்கு போன் பண்ணி எங்க இருக்கான்னு கேட்கிறேன்.ஆமா நீங்க அவளுக்கு போன் பண்ணுனீங்களா? இல்லையா?”
“ஐயோ தனம் போன் பண்ண மறந்துட்டேன். அவளைத் தேடிப்பார்த்தேன் காணலைன்னதும் வீட்டுக்குப் போயிருப்பாளோன்னு உனக்குப் பண்ணினேன்”என்று மனைவியிடம் பம்மிக்கொண்டு பாவமாகப் பேசினார்.
“இதெல்லாம் மட்டும் நல்ல வக்கனையா மூஞ்ச பாவமா வச்சுக்கிட்டு பேசுங்க. ஆனா எதைச் சொன்னனோ அதை சரியா செய்யாதீங்க அவன பார்த்த உடனே எப்படி இருக்க மருமகனே நல்லா இருக்கியான்னு கேட்டுட்டு பேசாம சாப்பாட குடுத்துட்டு வந்து இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காரு உங்களை யாரு மித்ராவ அடிக்க சொன்னா உங்க பேச்சுக்கே எல்லாரும் கட்டுப்பட்டு நிற்கிறான் என்று அடிப்பீர்களோ என்று கேட்டவர் டக்கென்று ஃபோனை வைத்து விட்டார்.
“அதுசரி இவ என்னைக்கு என்னை நிதானமாகப் பேசியிருக்காள். எப்படியும் இன்னைக்கு வீட்டுல சண்டைத்தான் நடக்கும்.இந்த மித்ரா எங்கத்தான் போய் தொலைஞ்சா” என்று யோசனையோடும் திட்டிக்கொண்டும் மீண்டுமாக மித்ராவைத் தேடுவதற்குத் திரும்பினார்.
அவருக்குப் பின்னாடியே மோகன் அவரைப் பார்த்தாவறே நின்றிருந்தான்.
அவனைக் கண்டதும் ஐய்யையோ! இவனைத் தறுதலைன்னு தனத்துக்கிட்டத் திட்டினோமே! இவன் கேட்டிருப்பானோ? என்று நினைத்தவர் மோகனைக் பார்த்து திரு திருவென்று முழித்து ஈஈஈயென்று சிரித்தார்.
மோகனும் இவர் என்ன இப்படி முழிச்சிட்டு நிக்கிருறார் என்று யோசனையோடு அவரே கூர்மையாக பார்த்தான். அவனுக்குமே அவர் தறுதலையென்று என்று சொன்னதெல்லாம் கேட்கத்தான் செய்தது. ஆனாலும் அது தெரியாத மாதிரி நின்றிருந்தான்.
என்ன மாமா என்ன ஆஸ்பத்திரியிலயே சுத்திட்டு இருக்கீங்க? உங்க அக்காவை விட்டுட்டு வீட்டுக்கு போக மனசு இல்லையா? ஒன்னு பண்ணுங்களேன் வேணும்னா ஒரு பெட்டு உங்க அக்கா பக்கத்தில் போட சொல்லுறேன் பக்கத்துல துணைக்குப் படுத்துக்கோங்க” என்று நக்கலாக கேட்டான்
“ஏதே அக்கா பக்கத்துல பெட்டா! விட்டா நம்மளையும் தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல்ல போட்றுவான்போல” என்று ஒன்னும் இல்ல மருமகனே மித்ரா இங்க இல்லை. எங்கப்போனான்னு அவளைத் தேடிக்கிட்டு இருந்தேன் என்று சொன்னவர் வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
எங்கே மோகன் அக்காவோட பேச்சைக் கேட்டு மித்ராவைக் கட்டித்தாங்க மாமா என்று கேட்டுருவானோ? என்று அவருக்கு சிறியதாக ஒரு பயம் இருந்தது.
அதனால்தான் அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் ஓடிப்போய்விட்டார் அக்கா என்றால் சமாளிக்கலாம் மருமகன் என்றால் சமாளிக்க முடியாதே!அதனால்தான் வேகமாக அங்கிருந்துக் கிளம்பிவிட்டார்.
போகும் சங்கரனையே பார்த்து சிரித்துக் கொண்ட நின்றிருந்தவன் முதுகில் அருண் ஒரு அடி போட்டவன் என்னடா மாமாவே பாத்துட்டு இருக்க மாமா மேல அவ்ளோ பாசமா என நக்கலா கேட்டான்.
எங்க மித்ராவை நான் பொண்ணு கேட்டுறவம்னு பயந்து போய் ஓடுறாரு. ஒருத்தனுக்கு நிச்சயமான பெண்ணை போய் நம்ம கேப்போமா. அதுவும் இல்லாமல் அவளை நான் அப்படி எண்ணத்தில் பார்க்கவே இல்ல.அதனால் அவளுக்கு இப்போம் கல்யாணம் செட்டாகிட்டுன்னு தெரிஞ்சுதான் ஒதுங்கி இருந்தேன். நம்மள பத்தி புரிஞ்சுக்காமலே உங்க சித்தப்பா ரொம்ப அதீத கற்பனைக்கு போறாருடா சொல்லிவை!
அதெல்லாம் சொல்லிடலாம் சொல்லிடலாம் நீ என்ன பிளான்ல இங்க வந்திருக்க. இப்போம் அத்தை கொஞ்சம் ரெக்கவர் ஆகி வந்துட்டாங்க. அடுத்த வாரத்தில் டிஸ்சார்ஜ் இருக்கும். நீ அவங்கள உன்கூட கூட்டிட்டு போறியா? எப்படி?எல்லாம் முதல்லயே பிளான் பண்ணிடு.
மித்ரா கல்யாணத்துக்கு கண்டிப்பாக இருந்துட்டுதான் அத்தை வருவாங்க.அது வரைக்கும் பொறுமையா இருந்து,அவங்களை கூட்டிட்டு போறியா? எப்படி? என்று மோகனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை கேட்பதற்காக அருண் கேள்வியை கொக்கியாக போட்டான்.
அம்மாவை இங்கிருந்து டெல்லிக்குதான் கூட்டிட்டு போக ப்ளான்ல இருக்கேன்
மித்ரா கல்யாணம் முடிஞ்சிடுச்சுனா அடுத்து ஒரு சந்தோஷமான செய்தி நானும் உங்களுக்கு சொல்லுவேன் எனஒரு பீடீகையோடு முடித்தான்.
“டேய் அப்ப டெல்லில ஏதோ செட்அப் பண்ணிட்டப் போலிருக்கு. சரிதான் சரிதான் அது தான் மித்ராவை வேண்டாம் என்று சொன்னதற்கு காரணமா? நல்லா இருடா நல்லா இரு” என்று மோகனைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.
எதுவாக இருந்தாலும் உன்கிட்ட சொல்லாமலையாடா இருப்பேன் இன்னும் கன்ஃபார்ம் ஆகல. பார்க்கலாம் வாழ்க்கை நமக்கு என்ன வச்சி இருக்கிறது என்று சிரித்துக்கொண்டே இருவரும் உள்ளே சென்றனர்
ருக்குமணிக்கு இப்பொழுது உடம்பு ஓரளவு தேறி வந்திருந்ததால் எல்லாருக்கும் ஓரளவு மனது நிம்மதியாக இருந்தது.
ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு மொத்த பேரையும் புரட்டிப்போட்டிருந்தது அதில் பலியானது மித்ராவின் வாழ்க்கைதான்!
அதில இருந்த மித்ரா முதல் மத்த எல்லாரும் எப்படி மீண்டு வருவார்கள் என்பதை பெரிய விஷயமாக இருந்தது!