என் நெஞ்சிலாடும் களபமே-10

களபம்-10
மோகன் இப்போது இருப்பது டெல்லியில்.அவனது பழைய வேலையைவிட்டுவிட்டு புதியதாக வேலையில் சேர்ந்து இரண்டுவருடத்தில் நல்ல சம்பளத்துடன் மேனேஜர் போஸ்ட்டிங்கில் இருக்கிறான்.
ராதா கிருஷ்ணன் பிரச்சனையில் ஓடிப்போனவனுக்கு மனதெல்லாம் ரணமாக இருந்தது. செய்தது தப்பு என்று தெரிந்து விட்டது ராதாவை கடத்தியது தவறு என்று தெரிந்தது
இப்போது புரிந்து கொண்டு என்ன பிரயோஜனம் ராதாவும் கிருஷ்ணனும் எவ்வளவுதான் பிரிந்து இருந்தாலும் அவர்களது மனதில் ஒருவர் ஒருவர் தங்கள் இணையைத்தான் நினைத்துக் கொண்டிருந்தனர. வேறு வாழ்க்கைக்குள் மூன்று வருடமாகியும் போகமுடியவில்லை.
இது புரியாது ராதா விவாகரத்தானவள் அவளுக்கு நான் வாழ்க்கைக் குடுக்கிறேன்னு பொண்ணுக்கேட்டுப்போனது, அவளைத் தேடிப்போனது என்று எல்லாமே முட்டாள்தனம். அதைவிடவும் அவள் அவளது கணவர் கிருஷ்ணனோடு மறுபடியும் இணைந்து வாழ்வதற்கு தயாராகும்போது அவளை கடத்தினது அதைவிட பெரிய தப்புன்னு புரிந்துக்கொண்டான்.
எல்லாம் புரிந்து என்ன பிரயோஜனம் வாழ்க்கையைத் தொலைச்சிட்டானே!
அந்த குற்ற உணர்ச்சியிலும்,தான் செய்தது தவறு என்ற உணர்விலும் அவன் இந்த ஊருக்கு வரவே விருப்பப்படவில்லை. அம்மா எப்படி இருக்காங்க தங்கச்சி எப்படி இருக்கா! என்று அருணுடன் கேட்டு விசாரித்துக் கொள்வானே தவிர அவனுக்கு வருவதற்கு எந்த விதமான ஆசையும் கிடையாது.
ஆனால் இப்பொழுது அம்மா ஹாஸ்பிட்டலில் இருக்காங்க என்றதும் அவனை அறியாமலே மனம் தான வலிக்க இப்பபது யாரும் சொல்லாமலே ஊருக்கு திரும்பி கிளம்பிக் கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே அருண் போனை எடுக்கவில்லை என்றதுமே அவனுக்கு மெசேஜ் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான்.
இங்கே ருக்குமணிக்கு அடுத்தநாள் காலையில்தான் நினைவு வந்தது.சுமிதான் அழுதுக் கொண்டிருந்தாள்.
அவளை சமாதானப்படுத்திய அருண் மோகன் வருவதைச் சொன்னான்.
“அண்ணா வர்றானா? பொய் சொல்லாதிங்க?”என்று நம்பாமல் கேட்டாள்.
“நான் ஏன்டி பொய் சொல்ல போறேன். உங்க அண்ணன் மெசேஜ் போட்டிருக்கான் பாரு. அவன் எனக்கு போன் பண்ணான். நான் எடுக்கலை. நம்ம எடுத்து பேசினா ஏதாவது சாக்கு போக்க சொல்லுவான்னுதான் எடுத்து பேசல. அத்தையோட ஹாஸ்பிட்டல் போட்டோஸ் எல்லாம் அனுப்பி கொடுத்தேன்.அதைப் பார்த்ததும் கிளம்பி வார்றான்.
அப்புறம் அவன் வந்ததும் உங்க அம்மா ஐசிக்குள்ள படுத்துட்டு அவனை ஒன்னும் பேசாம இருக்கச்சொல்லு. நீயும் அவன்கிட்ட எதுவும் கேட்காதே.புரியுதா.அவன் வந்தா எப்போதும்போலவே இரு.பழசை நோண்டாதிங்க”
“ம்ம்ம் அண்ணா வந்தாலே போதும்.அவன் எங்கக்கூட எங்க கண்ணுமுன்னாடி இருக்கட்டும். பழசையெல்லாம் பேசி அவனைக் காயப்படுத்தமாட்டோம்.அம்மாகிட்டயும் சொல்லிடுறேன்.முதல்ல அம்மா நல்லபடியா வீட்டுக்கு வரட்டும்.அண்ணனை நினைச்சும் அவன்வாழ்க்கையை நினைச்சும் அம்மாவுக்கு நெஞ்சுவலியே வந்துட்டு.இனியாவது அவன் இங்கவந்து அம்மாக்கூட இருக்கணும்.அதுவேபோதும்”என மனம்நொந்துப் பேசினாள்.
அவளது தோளில் கையைப்போட்டு தன்பக்கமாக இழுத்தவன்”ஏன்டி பீல் பண்ற?அவனும் அந்த ராதாவை உண்மையாகவே காதலிச்சான்தான். ஆனால் என்ன அதை அந்தப்பொண்ணுக்கிட்ட சரியாகத் தனதுக் காதலைப் பத்திக் கேட்டிருக்கணும்.அவள் விவாகரத்து ஆனாலும் வேறோருத்தனை ஏற்கமாட்டாள்னு தெரிஞ்சும் பொண்ணுக்கேட்டது அவன் தப்பு.அவள் கடைசிவரைக்கும் பிரிஞ்சுப்போன புருஷனைத்தான் காதலிச்சாள். அந்தக் காதலே அவளை அவ புருஷனோடு சேர்த்து வைச்சுட்டு. அதுக்கு இவன் பண்ணின அலப்பறைதான் அதிகம். சரிவிடு எல்லாம் பட்டுத் திருந்தணும்னு இருந்தா யாரால் மாத்தமுடியும். இப்போ அதையெல்லாம் பேசிப்பயனில்லை.மோகன் வர்றான்.அவனை நான் பிக்கப் பண்ணிக் கூட்டிட்டு வர்றேன்.அவனைப் பார்த்தால் அத்தைக்கு உடம்பு சீக்கிரம் குணமாகிடும்”
“சரிங்க”என்று தலையாட்டியவள் தனது மகனைத் தூக்கிக்கொண்டாள்.
அருண் இப்போது ஏர்போர்ட் சென்றவன் மோகனின் வருகைக்காக காத்திருந்தான். பழைய மோகன் வருவான் என்று பார்த்திருந்தவனுக்கு அதிர்ச்சி.
மோகன் என்றால் நல்லவனாக முகம்.நல்ல அழகாக அம்மாக்கள் விரும்பும் ஹேர் ஸ்டைலோடு, மீசையை அழகாக ட்ரிம் பண்ணி,கிளின் ஷேவ்ல ஆபிஸ் போகும் ஒரு அக்மார்க் மிடில்கிளாஸ் ஆண்பிள்ளையாக இருப்பான். அதே மோகனை இப்போது எதிர்பார்த்து நின்றிருந்த அருணுக்கு மோகனின் புதிய தோற்றம் அப்படியே மிரளவைத்தது.
ஃபுல் ஸீலீவ் சேர்ட் தாடி மீசையோடு முடியை அதிகமாக வளர்த்து பரட்டைத் தலைப்போல வைத்திருந்தான். கண்களில் கருப்புக் கூலர்ஸ். பத்து நாளா தலையில எண்ணெய் தேய்க்காதவன் போன்று கேசம் படபடக்க நடந்துவந்தான்.
ஹேய் என்று தனது கையை அருணைப்பார்த்து அசைத்ததும் தான் அது மோகன் என்று கணித்தான்.
‘அடேங்கப்பா வாழ்க்கையின் தோல்வியில் இருந்து ஒருத்தன் எழுந்து வரும்போது எல்லாத்தையும் எதிர்கொள்ளும் தைரியத்தோடு மட்டுமில்ல புது ஆளாகவே உருமாறி வந்திருவாங்க போல!’என்று மிரண்டு மோகனைப் பார்த்தான்.
மோகனோ அவனருகில் வந்ததும் “அம்மா எப்படி இருக்காங்க. கண்ணு முழிச்சிட்டாங்களா?”என்று தாய்பாசத்தில் கலங்கிக்கேட்டான்.
“அது இன்னைக்குக் காலையிலயே கண்ணுமுழிச்சிட்டாங்க. ஆனாலும் அப்சர்வேஷன்லதான் வைச்சிருக்காங்க. உன்னைப் பார்த்தா சீக்கிரம் சரியாகிடுவாங்க.வா”என்று அவனது தோளில் கையைப்போட்டு இழுத்து காரில் உட்காரவைத்தான்.
“எப்படிடா இப்படி ஆளே மாறிட்ட?சத்தியமா நீ கையைக் காண்பிக்கலைன்னா நான் அடையாளமே கண்டுப்பிடிச்சிருக்க மாட்டேன் தெரியுமா?ட்ராஸ்ட்டிக் சேஞ்சஸ்டா”
“மனசு முழுக்க ரணமாக மாறிட்டுன்னா எல்லா மாற்றமும் தானாக வந்திரும்டா” என்று அழுத்தம் திருத்தமாக வார்த்தைகளை உதிர்த்தான்.
‘இது நம்ம நண்பனும் மச்சானுமான பழைய மோகன்தானா? இவனுக்குள்ள பேய் எதுவும் புகுந்துட்டா?’ என்று மேலும்கீழும் பார்த்தான்.
“என்னடா அப்படிப் பார்க்கிற? வண்டியைப் பார்த்து ஓட்டு .ஹாஸ்பிட்டல்ல இருக்கிற எங்கம்மாவைப் பார்க்க வந்திருக்க என்னைக் கொண்டுபோய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திடாத”என்று மோகன் சொல்லவும் அருள் கடுப்பாகி விட்டான்.
“டேய் உன்ன தேடி கண்டுபிடிச்சு ரெண்டு வருஷமா பேசிட்டு இருக்க உன் நண்பன்டா.என்னை நீ இப்படி பேசுறியா? இரு போறபோக்குல அந்த பாலத்துக்கு கீழே உன்னை தள்ளி விட்டுட்டு போறேன்” என்று வண்டியை வேகமாக ஓட்டினான்.
அதைக் கேட்ட மோகனோ போடா டேய் என்று உதட்டை வளைத்து நக்கலாகச் சிரித்துவிட்டு கண்களை திருப்பிக்கொண்டான்.
சென்னைக்குள் வந்ததுமே அவனது மனம் எவ்வளவு தான் அழுத்தமாக இருந்தாலும் சிறிது பட படவெனறு அடித்துக் கொண்டது. எந்த ஊரு வேண்டாமென்று போனாலும் எதற்காக போனாலும் எல்லாமே அவனது கண்ணுக்கு முன்பாக வந்தது. அதனால் அவனது இறுகி முகம் இன்னும் பாறை போல் இறுகிக் கொண்டது.
அதை அருண் கவனித்தாலும் உடனே கவனிக்காதமாதிரியே முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
இருவரும் அமைதியாக ஹாஸ்பிட்டல் சென்று இறங்கவும் அருணைக்கூட அழைக்காது நேராக ஹாஸ்பிட்டலுக்குள் ஓடினவன் முன்பக்கத்தில் இருந்த ரிசப்ஷனில் விசாரித்து ஐ.சி.யூவை நோக்கிச்சென்றான்.
அங்கே சுமியைப் பார்த்தாலும் முதலில் அம்மாவைப் பார்க்கவேண்டும் என்ற அவசரத்தில் உள்ளே சென்றான்.
ஒருவர்தான் பார்க்க அனுமதி என்பதால் சுமியும் அருணும் வெளியே நின்றுக்கொண்டனர்.
மோகன் உள்ளே சென்றதுமே ருக்குமணிக்கு உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ உடனே கண்களை உருட்டி முழித்து பார்த்தார்.
அவருக்கு வைத்திருந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுக்க முயன்றார்.
மோகன் எடுக்கவிடாது அவரது கையைப்பிடித்துக் கொண்டவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.
ருக்குமணி கண்களில் அவரை அறியாமலே கண்ணீர் வந்து பக்கவாட்டில் அப்படியே வழிந்தது.அதைப்பார்த்தவன் “உனக்கு ஒன்னுமில்லமா.நான் வந்துட்டேன் பாரு.டாக்டர்ஸும் உனக்கு ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாங்களாம்.சும்மா அப்ஷர்வேஷனுக்குத்தான் இங்க வைச்சிருக்காங்க.அழாதம்மா”என்று கண்ணீரைத் துடைத்துவிட்டவனுக்குமே கண்கள் கலங்கியது.
அவரோ தலையை அசைத்து எனக்கும் ஒன்னுமில்ல என்றவர் அந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை எடுத்துவிடக் கையைக் காண்பித்தார்.
உடனே நர்ஸினை திரும்பிப்பார்த்து எடுக்கலாமா? என்று கேட்டுவிட்டு அவர் உதவியுடன் மெதுவாக எடுத்துவிட்டான்.
“ஏன்டா எனக்கு ஏதாவது ஆனாதான் பார்க்கவரணும்னு இருக்கா என்ன?நான் செத்துப்போயிருந்தா எப்படி வந்து பேசிருப்ப.வந்து பார்த்துட்டுத்தானே நின்றிருக்கமுடியும்.இரண்டு வருஷம் எப்படி என்னை பார்க்கமல் இருக்கமுடிஞ்சது.நான்தான் தினம் தினம் உன்னை நினைச்சு ஏங்கி இப்படி வந்து ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்கேன்.உனக்கு என் ஞாபகம்கூட வரலையா?”என்று வேதனையோடு கேட்டார்.
“ம்ம்மா அழாதம்மா.இப்போதான் ஏதோ கண்டத்துல இருந்துத்தப்பி வந்தமாதிரி வந்திருக்கம்மா.அழாத நான் இனி உன்கூடத்தான் இருப்பேன்மா”என்று தழுதழுத்தக் குரலில் சொன்னான்.
அதுவே ருக்குமணிக்கு யானைப் பலத்தைக் கொடுத்தது.அவனதுக் கையைப்பிடித்து முத்தம் வைத்தவர் அதன்பிறகு கொஞ்சம் அமைதியாகிவிட்டார்.
ஆனால் அவனது கையைவிடவில்லை.எங்கே கையைவிட்டால் மறுபடியும் எங்கேயாவது போய்விடுவானோ என்கின்ற பயம்அவருக்கு தன்னையறியாது மூளைக்குள் பதிந்துவிட்டது. மோகனின் கையை இறுக்கமாகப் பிடித்துவைத்துக்கொண்டதே அதன்விளைவுதான்.
அதைப்புரிந்துக்கொண்டவன் அவருக்கு மீண்டும் ஆக்ஸிஜன் மாஸ்கை வைத்துவிட்டு அருகிலயே இருந்தான்.சிறிது நேரத்திலயே அவரது கண்கள் மருத்தின் உபயத்தில் தூக்கத்தில் மூடவும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தவன் அப்படியே அவரது கையை மெதுவாக எடுத்து வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்தான்.
சுமி தனது மகனுடன் அருணின் அருகில் உட்கார்ந்திருந்தாள்.
அவளருகில் வேகமாக வந்து உட்கார்ந்த மோகன் சுமியின் கையைப்பிடித்தான்.
அவளோ அவனது கையைத் தட்டிவிட்டுவிட்டு அருணுக்குப் பின்னாடி போய் உட்கார்ந்துக்கொண்டாள். அவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.அருணின் தோளில் சாய்ந்து அழுதாள்.
மோகனுக்கு அது கஷ்டமாக இருக்கவும் எழுந்துப்போய் அவளருகில் உட்கார்ந்தவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டான்.
இப்போது ஒன்றும் சொல்லாமல் அமைதியாக ஏங்கி ஏங்கி அழுதவளின் தலையைப்பிடித்துத் தனது தோளில் தாங்கிக் கொண்டவனுக்கும் மனம் கனத்துக் கண்ணீர் வந்தது.
“எவளோ உன்னை கண்டுக்காமல் போனதுக்கு நீ செய்தது அதிகமாத் தெரியலையாண்ணா. எப்படி உன்னால் எங்களையெல்லாம் விட்டுட்டு போகமுடிஞ்சது.அதுவும் இரண்டுவருஷம் எங்களையெல்லாம் பார்க்கக்கூட உனக்குத் தோணலை இல்ல.போடா நீங்கெல்லாம் எவ்வளவு சுயநலமானவனுங்கன்னு இந்த இரண்டுவருஷத்துல தெரிஞ்சு போச்சுது.உங்கம்மாவைப் பார்த்துட்டு அப்படியே கையோடு உன்கூடவே கூட்டிட்டுப்போயிடு” என அழுதாள்.
அவளது தோளோடு சேர்த்துக் கைப்போட்டுப் பிடித்தவன் ”மனுஷனுடைய மனசுதான் அவனுடைய நல்லது கெட்டதுக்கு காரணம்.அது புரிந்து என்னை நானே சில ரணத்திலிருந்து மீண்டுவரத்தான் இந்த இரண்டுவருஷம் எடுத்துக்கிட்டது. முன்னாடியே செய்த தவறை புரிந்துத் தெளிந்தாச்சு.இன்னும் கொஞ்சநாள் போகட்டும்னு இருந்தேன். என்ன செய்ய அம்மாவுக்கு இப்படியாகிட்டுன்னதும் கையும் ஓடல காலும் ஓடல ஓடிவந்தாச்சு.விடு” என்று பெரிய மனிதன் தோரணையில் பேசியவனை சுமி அன்னாந்துப் பார்த்தாள்.
அவனது முகத்தின் உணர்வகளை மறைக்கின்றளவுக்கு தாடியும் மீசையும் மட்டும் வைக்கவில்லை. அவனது கண்களில் தெரியும் அந்த இன்னசெண்ட் என்கின்ற முத்திரை மாறியிருந்தது.
அவனது பார்வை அறிவோடு தெளிவாகவும் பெரிய மனிதனின் தோரணையாகவும் இருந்தது.
அவன் உண்மையிலயே தனது பழைய மோகனசுந்தரமாக இல்லை.புதிய பரிணாமம் புதிய மனிதனாக வந்திருந்தான்!
அது அவளையே அவனிடமிருந்து தள்ளி நிற்க வைத்திருந்தது!