பகலவன்14

Pani14

பகலவன்14

14 பகலவனின் பனிமலர் அவளோ?? 

ஸ்ரீ இவ்வளவு குட்டிக்கரணம் போட்டு , தாலியை கட்டிட்டு கண்ணுல காதலை தேட, அங்கே ஒன்னும் பிரதிபலிக்கல .. அப்போ இங்கேயே கிட , காதல் வரணும், வந்தே ஆகணும்.. எனக்கு என் ஸீவிட்டிதான் வேணும் .. பாவா பாவன்னு சுத்தணும் இந்த ஊமை கேட்டான் வேண்டாம் ,தேடி வா என்று விட்டுவிட்டு வந்தாச்சி.. இவ்வளவு தான் கதை, அது ஏன் அப்படி ஆச்சு.. இது என் இப்படி ஆச்சின்னு கேட்டா காதை கடிச்சி விட்டிருவேன் .. 

அவன் மாற போவது இல்லை, எனெற்றால் ஸ்வீட்டிக்கு இந்த ஸ்ரீதான் பிடிக்கும் ..

அவள் அன்று கேட்ட அழகிய குடும்பம் கொடுத்தான்.. அவளை அருகில் வைத்து சபலப்படாது ஸ்ரீயால் இருக்க முடியாது .. வினய்யோடு தனிக்குடித்தனம் ஓடிட்டான் .. 

அவள் காதல் மூக்காலமும் மறதி நோயில் தீண்டாடும் காதல் .. இவன் காதல் மூக்காலமும் இவளை சுமந்து கொண்டே, ஏழு வருடமாக அவளை மனதில் போட்டு வாழ்கிறான்..

அதிசயமாக மறுபடி வந்தவளை பார்க்கும் போது காதல் காமம் எல்லாம் அளவுக்கு மீறி சுரந்து தள்ளியது.. ஆனால் அவன் ஸீவிட்டியாக வேணும் , அவன் காதலை தணிக்க .. 

 இந்த புது பிறவியில் அதே காதலை கொடு , எனக்கு உன் காதல் முழுதாக பைத்தியகாரத்தனமாக வேணும் என வெறியன் போல நிற்கிறான், அவள் காதலை கண்ணால் கண்டவன் ,, அதன் ரூசி அலாதியானது ஊரே அவனை கெட்டவன் எனும் போது.. போ பாவா நான் இருக்கேன், நாம சேர்ந்து ஜாலி பண்ணலாம் என்று அவன் கழுத்தை பிடித்து தொங்கிய ஸ்வீட்டி எங்கே? இப்ப இருப்பது சுவாதி , அமைதி , பொறுப்பு , எல்லார் நலனும் அவசியம் அதுக்காக தன் ஆசையை ஒதுக்கி வைத்து கொண்டால் தப்பில்ல ,என ஊர் உலகம் சுற்றி பார்த்து தன் சுயம் என்ற ஒன்றை மறந்து நிற்கிறாள் .. சுவாதிக்கு இந்த ஸ்ரீ சிலநேரம் பாவாவாக, பொறுக்கியாக என இரண்டு முறை அவன் சந்திப்பும் மாறி மாறி கிளறி குழம்பிய குட்டையில் காதல் மீன் பிடிக்க காத்திருக்கிறான்.. எனக்கு என்னவோ மீனுக்கு பதில் பெத்தக்குட்டி (தவளை லார்வா நிலை)கிடைச்சாலும் கிடைக்க போகுதுன்னு தோணுது.. 

"குவாட்டர் திறந்து கொடு தண்ணீ மிக்ஸ் பண்ணுடி ஆம்லெட் போடு , வந்து ஊத்து என்று ஏவ.. சாப்பாடு பரிமாறும் மனைவி சாதா மனைவி , இவன் பொண்டாட்டி சரக்கு பரிமாறி அபூர்வ சிந்தாமணி ஆகினாள்.. 

"ஏன் மேடம் நீங்க என்ன ஸ்கூல் படிக்கிற பொண்ணா? லேட்டா வந்து நின்னுட்டு காரணம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க மூணாவது பீரியட் போயிட்டு இருக்கு . இப்ப வந்து நிக்கிறீங்க என்று அவள் துறை தலைவர் பிடித்து சுவாதியை திட்ட.. அவர் முன்னால் குனிந்து நின்று கொண்டிருந்தாள் ஒரு மாதமாக லேட்டா வந்தா அவரும் என்னதான் செய்வார்... டெய்லி ஸ்ரீயோடு மல்லு கட்டி வந்து சேர மதியம் ஆகி விடுகிறது.. 

"ஏதாவது வாயை திறந்து சொல்லுங்க மேடம்.. நல்ல பொண்ணு டெடிகேஷனாக இருப்பீங்க வேலைக்கு சரியா வருவீங்கன்னு சொன்னாங்க, ஆனா நீங்க வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் கூட ஆகல, இந்த மாதிரி இர்ரெகுலரா இருக்கீங்க.. நீங்களே இப்படி இருந்தா உங்க உங்களுக்கு கீழ இருக்கிற ஸ்டூடண்ட் எப்படி இருப்பாங்க..வறுத்து எடுத்தான் அனைவர் முன்னாலும் .. 

"சாரி சார் , ராத்திரி சரக்கு அடிச்சிட்டு தூங்க லேட் ஆயிடுச்சு..

" வாட் .."

" அய்யோ சாரி சார் ,என் ஹஸ்பண்ட் குடிச்சிட்டு நைட்டு தூங்க லேட்டாகி ,அதனால முழிக்க லேட் ஆகி , காலேஜ் வர லேட் ஆயிடுச்சு "உளறினாள்.. 

"இனிமே இப்படி நடக்காது சார் ," ஞாயிறு தன் ரூமுக்கு இழுத்துட்டு போய் சரக்கு போட வேண்டியது , கேட்டா வீக் என்ட் பார்ட்டிடி என்று தினுசாக சிரிப்பான்.. 

"தொல்லை, திங்கவும் விட மாட்டேங்குறான் தூங்கவும் விட மாட்டேங்குறான் , யார் சொன்னாலும் கேட்கவும் மாட்டைக்கிறான், நான் எல்லார்கிட்டேயும் திட்டு வாங்கி மானம் போய் நிற்க வேண்டியதுதா இருக்கு .."

"இன்னைக்கு விரதம் முன்ன வந்திடு சுவாதிம்மா" என்று சிவகாமி கூறி அனுப்பினால் வேண்டுமென்றே பத்து மணிக்கு கொண்டு வந்து விடுவான்.. அங்கேயும் பல்லை இளிக்க வைப்பான்... வேண்டாத தேவையில்லாத ஆணி மொத்தத்தையும் புடுங்க வைத்து குறை மெண்டலை, முழு மெண்டலாக மாற்றி வைத்தான் .. 

"இது சரியா வராது மேடம் உங்க இடத்துக்கு எத்தனை பேர் இன்ட்ர்வி வந்தாங்க தெரியுமா?" பிலா பிலா என அரை மணிநேரமாக நிறுத்த வழி இல்லை 

"எவன்டா அது என் பொண்டாட்டியை திட்டினது" என்று ஹாக்கி மட்டையை தூக்கி கொண்டு ஸ்ரீ உள்ளே வர..

"வெகு சிறப்பு !! வேலைக்கு ஸ்வாகா பாட போறான்" என சுவாதி பதறி ஓடி போய் ஸ்ரீயை மறைத்தார் போல நின்றவள்..

"யாரும் எதுவும் சொல்லலை, நீங்க போங்க , முதல்ல யாரு உங்களுக்கு சுடச்சுட அப்டேட் பண்றது.."

"தள்ளுடி... அவன் உன்ன தேவையில்லாம பேசுறான் பார்த்துட்டு நிற்கிற "

"வேற என்ன செய்ய சொல்றீங்க வேலை பார்க்கணும்ல, நானாவது வேலை பார்க்கலைன்னா எப்படி குடும்பத்தை ஓட்ட ..."அவளை மேலும் கீழும் ஸ்ரீ பார்த்து விட்டு 

"என்ன வேலைக்கு போய் சம்பாதிக்க சொல்றியா? 

"அய்யோ ஆண்டவா நான் அப்படி சொல்லவே இல்லை ..

"எங்க சொல்லிதான் பாரேன் , உன் வாயை கிழிக்க பிறகு வர்றேன்.. முதல்ல அந்த சொட்டையை என்னன்னு கேட்டுட்டு வர்றேன் ... ""

"ப்ளீஸ் பாவா" அந்த பாவா சொன்னா இவன் மெல்ட் ஆவான்.. அப்படியே தள்ளிட்டு போயிடலாம் என ஸ்ரீயை பாவா சொல்லி கெஞ்ச .. அடுத்த அரை மணிநேரத்தில் .. ஸ்டாப் ரூம் பைல் எல்லாம் சிதறி கிடந்தது..கையில் சர்டிஃபிகேட் வைத்து கொண்டு சுவாதி நின்றாள் ..வேலை கோவிந்தா !!

"போச்சி எனக்கு இருந்த ஒரே நிம்மதி வேலை அதையும் கெடுத்துட்டு எவ்வளவு கெத்தா உட்கார்ந்து தம்மடிக்கிறான்.. இவன யாராவது சங்கிலி போட்டு கட்டி வைங்கடா, குறுக்கால வந்து விழுந்து எல்லாத்தையும் கெடுத்து விடுறான்".. நேரே போய் அவன் சிகரெட்டை பிடிங்கி கீழே போட்டவள்

"ஏன் பாவா இப்படி பண்றீங்க ... ஒன்னு நீங்க வேலைக்கு போய் , என் தேவையை பாருங்க இல்லை, என்னையாவது வேலைக்கு போக விடுங்க , உங்களுக்கு என்னதான் வேணும்னு என்ன இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க ... 

"இப்ப எதுக்கு என் சிகரெட்டை தூக்கி போட்ட..

"நான் நம்ம வாழ்க்கை பத்தி பேசிட்டு இருக்கேன் பாவா .. உங்களுக்கு பத்து ரூபாய் சிகரெட் போச்சுன்னு கவலையா ..நான் என் வாழ்க்கையே போச்சுன்னு நிற்கிறேன் "

"ப்ச் எனக்கு என் சிகரெட் வந்தே ஆகணும் வாங்கிட்டு வந்து உன் வாழ்க்கை பத்தி பேசு "... 

" ச்சை எந்த நேரத்தில இவன பார்த்து தொலைச்சேனோ தெரியல, என் நிம்மதி அமைதி எல்லாம் போச்சு , அவனும் வாழ மாட்டைக்கிறான் நம்மையும் வாழ விட மாட்டேங்குறான்..

"ஒரு ஃப்ல்டர், அப்பறம் ஒரு சுவிங்கம், நாத்தம் தாங்க முடியல இதோட முத்தம் வேற அடிக்கடி தந்துகிட்டு ... "

"என்னய்யா பார்த்துட்டு இருக்க சீக்கிரம் எடுத்து கொடு.. நேத்து பீர் வாங்கும் போதே கடைக்காரன் கண்டுக்கல அப்ட்ரால் சிகரெட்டுக்கு , இந்த பார்வை பார்க்கிற கொடு" என ஸ்ரீ பண்ணும் டார்ச்சர் தாங்காது அவனை திட்டிவிட்டு.. அவன் கையில் வந்து திணிக்க 

"இப்போ லைப் பத்தி பேசலாமா? 

 ம்ம் பேசு ... அவன் முகம் பார்த்தால் பேச்சு வராது என திரும்பி கொண்டவள் 

"எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு பாவா, நாம சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை , நீங்க கொஞ்சம் பொறுப்பா மாறுங்க , பெரிய வேலை கூட வேண்டாம் .. மாசம் பத்தாயிரம் ரூபாய் கிடைச்சா கூட போதும் பாவா , நமக்குன்னு சின்ன வீடு, உங்களுக்கு சோறு ஆக்கி போட்டுகிட்டு , குழந்தைங்கள பார்த்துகிட்டு சந்தோஷமா வாழலாம்... என்ன பாவா சொல்றீங்க?" என்று ஸ்ரீ நோக்கி திரும்ப .. ஸ்ரீ அப்பவே போயிட்டான்.. 

"ச்சை இவன நம்பி இன்னும் நிற்கிறேன் பாரு, என்ன சொல்லணும் "அழுகையை துடைத்து கொண்டே வீடு வந்து சேர்ந்தவள் ... நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு வச்சிடணும் என போனை எடுத்து ஸ்ரீக்கு போட... 

"யார் சுவாதியா?வேறுகுரல்.. 

" நீங்க... 

"நான் வினய் ம்மா ..

அண்ணனா அவர் எங்க ...

"வேலைக்கு கடல் உள்ள போயிருக்கான் ம்மா..

"என்னது .... கடல் உள்ளேயா ..

"தெரியாதா நைட் ஷிப்ட் வேலைம்மா ..

 "ஹார்பர்ல வந்து நிற்கிற கப்பல் அடித்தளம் போய் இஞ்சின் சரியா இருக்கான்னு செக் பண்ற மெக்கானிக் ம்மா .. 

"எப்போ வேலைக்கு சேர்ந்தார் .. 

"இன்னைக்குத்தான் ம்ம் , வர காலை மூணு மணி ஆகும் வந்ததும் பண்ண சொல்றேன் "என வைத்து விட.. சுவாதி முகம் எங்கும் நிம்மதி, அவன் போட்டோ முன்னாடி போய் நின்றவள் 

"எனக்கு தெரியும் பாவா.. நீங்க என்ன காதலிக்கிறீங்க.. எப்படி என்னால உங்கள விட்டுட்டு போக முடியலையோ, அதே போல உங்களாலையும் என்ன விட்டுட்டு போக முடியாது, எனக்காகதான வேலைக்கு எல்லாம் போக ஆரம்பிச்சுட்டீங்க .. எட்டி அவன் கரு உதட்டில் முத்தம் இச் வைத்தவள்..

"ஆசையா இருக்கு பாவா உங்ககூட வாழ , கண்ணு சொருகி உங்க மேல விழணும் போலிருக்கு எப்போ வருவீங்க... "தன் விருப்பம் அறிந்து வேலைக்கு போன ஸ்ரீ மீது வெளிக்காட்டாத காதல் பிரளயம் எடுத்து வர...   

"ஐ லவ் யூ பாவா!!" இன்னும் முகம் முழுவதும் முத்தம் கொடுத்துவிட்டு மணியை பார்த்தாள்.. பத்து தாண்டி போனது .. ஸ்ரீ வந்ததும் பசிக்குமே கிச்சன் போய் உருட்டிட எல்லாம் காலி ..

ப்ச் சலித்து காயை நறுக்கி , சாம்பாருக்கு குக்கரை விசில் விட ... பதினொரு மணிக்கு அடித்த விசில் சத்தத்தில் குடும்பமே அலறி எழும்பி வந்து பார்க்க.. சேலையை சொருகி கொண்டு சமையலில் பயங்கர பிஸி சுவாதி ..

"சொன்னேல்ல ம்மா அண்ணன் கூட சேரந்து அண்ணியும் கிறுக்காகிடுவாங்கன்னு பாருங்க தினுசு தினுசா பண்றாங்க.."

"சும்மா இருடி.. ஏம்மா சுவாதி என்ன பண்ற ??"

"சமையல் அத்தை, உப்பு சரியா பாருங்க, அவருக்கு புடலங்காய் பிடிக்குமா அத்தை ..இல்லை கருவாடு வறுக்கவா ?" புருஷன் ஆசையில் அளவாக பேசும் ஸ்வாதி லொடலொடக்க.. 

"இத்தனை மணிக்கு கருவாடு பொறிக்க போறியா உனக்கு என்ன ஆச்சி?.. நாக்கை கடித்து திரும்பிய சுவாதி..

"சாரி அத்தை..உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன் அவர் வேலைக்கு போறார் ... அதான் வந்ததும் பசிக்கும்ல ,ரெடி பண்ணிட்டு இருக்கேன், போய் கொடுத்திட்டு வந்திடுறேன்.. ராதிகா பைக் சாவியை மேஜையில எடுத்து வச்சிட்டு போய் தூங்கு.. நீங்களும் போங்க அத்தை, நானே பார்த்துக்கிறேன்" என அவசரமாக சோற்றை வடித்து , பாக்ஸில் அடைத்து கொண்டு கிளம்ப..

"இரு சுவாதி மாமா கொண்டு போய் விடுவார்" அவளை பார்க்க பாவமாக இருந்தது ... ஸ்ரீயை எல்லாம் வைத்து காலம் தள்ளுவதே பெருசு, இவள் காதல் வேறு பண்றாளே மூக்கு உடையாம திரும்பி வந்தா சரி.. மகன் வண்டவாளம் தெரியுமே.. 

"அவன பத்தி நமக்கு தானே தெரியும், இந்த வேலை எத்தனை நாளைக்கோ ஆசையா ஓடுது .. அவ ஆசையை கெடுக்க கூடாது கொண்டு போய் விடுங்க.. "

ஹார்பர் வந்து அந்த குளிரில் இறங்கினார்கள்.. நைட் வேலையில் உள்ளவர்கள் மட்டும் அங்கும் இங்கும் நிற்க 

"போங்க மாமா நான் அவர் கூட வந்திடுறேன் 

"என்னம்மா நீ ஒத்தையில நிற்கிறேன்னு சொல்ற.. அதிக ஆள் நடமாட்டம் இல்லை . அவன் வரட்டும் விட்டுட்டு போறேன் "என்று மகேந்திரன் நின்று கொள்ள ... பெரிய கப்பலில் இருந்து குதித்து இறங்கி கொண்டு நின்றான் ஸ்ரீ.

"பாவாஆஆஆஆஆ" கத்தி சுவாதி அழைக்க சட்டென்று திரும்பி பார்த்தான் .. 

"பாவா நான்தான்" என்று குட்டியாக கீழே சூவாதி நிற்க கண்களை சுருக்கினான்..

"இந்த நேரத்தில இங்க எதுக்கு வந்தா என யோசித்து கொண்டே அவளை நோக்கி சட்டையை மாட்டி கொண்டு வந்த ஸ்ரீ.. தனக்காக கூடையோட நின்ற மனைவியை பார்த்து அப்படியே நின்று விட்டான்... அவன் மேல் உள்ள காதல் பேச இதை தவிர வார்த்தை வேண்டுமா? நம்பி ஏமாந்து போச்சு நம்ம ரவுடி பேபி.. 

"நல்லா இருந்தா சரிதான்" என மகேந்திரன் கிளம்பி விட்டார் ...

நல்லா இருக்க நான் விட்டாலும், நீ பெத்த மொவன் விட மாட்டான் சாமி.. அவ்வளவு சீக்கிரம் நிம்மதி பெருமூச்சு விடாதீங்க..