பகலவன் 22
Pani22

22 பகலவனின் பனிமலர் அவளோ?
இரவு ஒரு மணி வரை வேலை ஸ்ரீக்கு... காலையில் எப்படி இருப்பானோ அதே வேகத்தில்தான் எந்த ஜாமம் ஆனாலும் இருப்பான் .. இன்று கூடுதல் உற்சாகம் ஸீவிட்டி ஸ்வீட்டாக கிடைத்தது.. அவை போதாதுதான் ஆனாலும் ஓகே லெவல் ..
"மச்சான் கிளம்புவோமா தங்கச்சி தனியா இருக்கும்.. வினய் கண்களை கசக்கி கொண்டு உள்ளே வந்தான்..
சாதா வினய்யா அவன் ,,இப்போது தூத்துக்குடி துறைமுகத்தில் கஸ்டம்ஸ் ஆபிசர் அவனுக்கு சல்யூட் என்ன ?கவனிப்பு , மரியாதை என்ன ..
"நீ இங்க கலெக்டர், நான் அங்க கலெகடர்டா நான் நின்னா கப்பல் நின்னிடும் யூ நோ" என்று சிரிப்பான்..எப்போது அவன் சான்றிதழ் கொடுத்தான் என தெரியாது .. ஆனால் ஸ்ரீதான் அவனுக்கு எல்லாம் செய்து வைத்திருந்தான்..
"அங்க உள்ள எக்ஸாம், இன்ட்ர்வி பாஸ் பண்றது உன் சாமர்த்தியம் சிபாரிசு எல்லாம் பண்ண மாட்டேன்" என அவனே அழைத்து போய் ..
இது இது இப்படி பண்ணு, நான் வெளியே வெயிட் பண்றேன் என வினய்யுக்கு கற்று கொடுத்து உள்ளே அனுப்பி விட்டு மூணு மணிநேரம் வெளியேவே நின்றான்..
"அவனுக்காக எழுதினானோ இல்லையோ வியர்வையை துடைத்து கொண்டு நின்ற ஸ்ரீக்காக எழுதினான்.. என் நண்பன் என்று மெச்சி கொண்டான் .. இதோ எக்ஸாம் பாஸாகி கெரளவமான வேலையும் கிடைத்து விட்டது , ஹார்பர் பகுதியே வினய்க்கு கீழ்தான் என்பது போல் பவுர்புல் போஸ்டிங் ..
"குறிப்பா, என் பொண்டாட்டி தனியா இருக்கான்னு நீதான்டா வருத்தபடணும்.. இங்க நான் வருத்தப்படுறேன்.
"ஏன் அவளை பூச்சாண்டி பிடிச்சிட்டு போக போகுதா.. அவ பூச்சாண்டியை பயம்காட்டாம இருந்தா சரிதான் அந்த இட்லி கடையில நிறுத்து..
"எதுக்கு மச்சான் ? உனக்கும் சேர்த்து நான் வாங்கிட்டு வந்துட்டேன்
"ப்ச் இது ஸவீட்டுக்கு ..
"இப்பதான் அவமேல அக்கறை இல்லன்னு சொன்ன.. "
"அது சுவாதி மேல.. இது என் ஸ்வீட்டிக்கு" என இறங்கி போய் சாப்பாடு வாங்கி கொண்டு வந்து ஏற... வினய் ஏதோ கேட்க வாயெடுத்து கை வைத்து பொத்தி கொண்டான்..
"என்ன மச்சான் ஏதோ சொல்ல வாய் வருது பொத்திட்டு இருக்கிறதுபோல இருக்கு .. சும்மா கேளு மச்சான், நான் தப்பா நினைக்க மாட்டேன்" போனில் ஸ்வீட்டி போட்டோவை ஜூம் பண்ணி இச் வைத்து கொண்டே பேச..
"எதுக்குடா தம்பி , நான் ஏதாவது கேட்பேன்.. நீ குண்டக்க மண்டக்க பதில் சொல்லுவ.. தேவையா? நீ சுவாதியை கட்டிகிட்டு, ஸ்வீட்டியை வச்சிகிட்டாலும் சரிதான் ..இல்லை ஸவீட்டியை கட்டிகிட்டு சுவாதிக்கு பிள்ளை கொடுத்தாலும் சரிதான், இனிமே நான் நவ துவாரங்களையும் பொத்திட்டு இருக்கலாம்னு முடிவு எடுத்துட்டேன் "
"இவ்வளவு சீக்கிரம் திருந்திட்ட... இந்தா சாவி நான் ஸீவிட்டி கிட்ட போறேன் .. காலையில வருவேன் கதவை வந்து தொற ," ஸ்ரீ ஸீவிட்டி வீட்டை நோக்கி ஓட...
"டைவர்ஸ் பண்ண போறேன்னு சொல்றான், அவளை தூக்கி கொண்டு வந்து பக்கத்தில வச்சிருக்கான்.. பிடிக்கலைங்கிறான் அவளுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து அவ கூட இருக்க ஓடுறான், நாமதான் எதுவும் குழும்புறோமோ..
வவ் வவ் என ஒரு நாய் தனியாக நின்று புலம்பும் வினய்யை பார்த்து குரைக்க.
"எங்க நிலைமை பார்த்து உனக்கே பாவமா இருக்கா பப்பி , முடியல அதுக இரண்டு பேரும் பண்ணறது , சட்டையை கிழிச்சிகிட்டு நம்மள தெருத்தெருவாக அலைய விட போகுதுக ஒருவேளை இதுக்கு பேர்தான் லவ்வா?" ச்சை தலையை உதறி கொண்டு போய்விட்டான்..
ஸ்ரீ தன்னிடம் உள்ள சாவியை எடுத்து சத்தமில்லாது கதவை திறந்து உள்ளே போக.. சுவாதி படுக்கையில் படுத்திருந்தாள் ..
தலைக்கு குளித்து கூந்தல் பரந்து கிடந்தது முகத்தை மூடிய முடியை அவள் அருகே அமர்ந்து நடுவிரலில் தள்ளி அவள் வதனம் காண, கூடு விட்டு அலைந்து திரிந்த பறவை , அதன் கூடு வந்து அடைந்து தலைவன் செட்டையில் தன் தலையை சாய்த்து கொண்டது போல நிம்மதியும் அமைதியும் அதில் இருந்தது ... அவள் அருகே ஒருக்களித்து படுத்து கொண்டவன் சுவாதி மீது வலிக்காது காலை தூக்கி போட அவளே இழுத்து ..
"நல்லா போட்டுக்க பாவா "என்று நெருக்கி போட்டு கொண்டு ..அவளும் ஸ்ரீ மீது காலை தூக்கி போட தொடை அழகு தெரிய கிடந்தாள்..
"ஸ்வீட்டி பாவா பேசுறது கேட்குதா?
"ம்ம்...
அவள் தலையை தடவி கொண்டே பழைய நாட்கள் ஒவ்வொன்றாக பேசினான்.. சுவாதி தூக்கத்திலேயே ம்ம் போட்டு பதில் கூற பெருமூச்சு விட்டான்... காற்றில் அவள் வயிற்றுபக்க சேலை விலக..
"ஓஓஓ என் பட்டுகுட்டியை கவனிக்கலைன்னு அப்பாவ கூப்பிடுறீங்களா" என்று அவள் வயிற்று பக்கம் போய் குனிந்து சேலையை முகத்தில் ஓரம் தள்ளி இச் வைக்க...
"பாவாஆஆஆ என்றவளை எட்டி பார்த்தான்...தூக்கத்தில் சிரித்து கொண்டே திரும்பி படுத்தவள்.. அவனையும் இழுத்து தன்னை கட்டு கொள்ள சொல்லி, அவன் நெஞ்சில் பதுங்கி கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள்.. அவள் தன்னை ஒட்டி கிடக்கும் வரை அவளோடு இருந்து சுவாதியை முகம் மறையாது பார்த்து கொண்டிருந்தான் .. விடியல் வேளை வந்து கட்டிலில் விழுந்த நண்பனை யோசனையாக வினய் பார்த்தான்...
"என்ன வேலைன்னு சொன்னாதான செய்ய முடியும்?" காலையில் ஸ்ரீ பைல்களை பார்வையிட்டு தொகுதி வாரியாக வேலைகளை பிரித்து கொண்டிருக்க.. சுவாதியை வேலைக்கு அழைத்து வர சொல்லி.. கார் வந்து நிற்க ஏறி வந்தவளை காணாது ஸ்ரீ வேலை செய்து கொண்டிருந்தான்...
"ப்ச் உங்களுக்கு வேலை முடிஞ்சதும் சொல்லுங்க நான் வர்றேன்..."
"இப்ப என்ன பண்ற ..
"உங்கள பார்த்துட்டு லூசு போல நிற்கிறேன் ..
"அதுதான் வேலை, , என்னை பார்த்துட்டே இருக்கிறதுதான் வேலை.. எதிர்ல உட்கார்ந்து இப்படியே பார்த்துட்டு இரு..
"ஏதே இப்படி ஒரு வேலையா விளையாடுறீங்களா..
"வேலை பிஸியில என்ன பார்த்துக்க முடியல, அதான் என்ன பார்த்துக்க வேலைக்கு ஆள் போட்டிருக்கேன் .. நீ என்ன பாரு, நான் வேலையை பார்க்கிறேன்... "
வேண்டுமென்றே இழுத்து வைத்து பொறுமை இழக்க வைக்கிறான் என தெரிந்து அவளும் அலுப்பு இல்லாது அவனை பார்த்து கொண்டே இருந்தாள் ....அவன் அவ்வப்போது எட்டி பார்த்து என்ன என்று கேட்பான், அவன் கண்களால் அதிக நேரம் உணர்வை கடத்த..அதில் மெல்லிய காதல் கடந்து வரும் அதையும் கடந்து ஒரு வலி , அது அவளை சரியாக தாக்கும் ...தன் கண்களை உடனே திருப்பி கொள்வாள்...
இதோ இங்கு வந்து நான்கு மாதம் ஆகிறது .. ரெகுலர் செக்கப் வாக்கிங் அனைத்துக்கும் கூட இருப்பான்.. சாப்பாடு, மாத்திரை முதற்கொண்டு அவன்தான் கொடுப்பான்..
பிள்ளை மேல மட்டும் பாசம் , புதுசா வந்திருக்கு போல என்று உதட்டை சுளித்து கொண்டு அவனை பார்க்க.. அவன் பார்வை சொல்லும் நீதான் முக்கியம் என்று... அவன் கவனிப்பில் நன்றாக சதை போட்டு ஆரோக்கியமாக குழந்தையோடு அவளும் வளர்த்தாள் என்றுதான் கூற வேண்டும்..
இரவு தூக்கத்தில் இருந்தவளை ஸ்ரீ வழக்கம் போல பார்க்க கள்ளச்சாவி போட்டு உள்ளே வர ,அவன் கைதவறி செல்போன் கீழே விழுந்து சிதற...
ஆஆஆ என சுவாதி அலறி எழும்பி உட்கார்ந்தாள்...ஸ்ரீ கையை கட்டி கொண்டு நின்றான்.. ஆளு இப்ப எழும்பும் தெரியும் அலட்டிகொள்ளவில்லை.. முழிச்சா சொல்ல ஆயிரம் காரணம் வச்சிருப்பான்
நீங்க இங்க என்ன பண்றீங்க? கதவு பூட்டிதான கிடந்தது ..
"என் புளளையை பார்க்க வந்தேன்
"வாட்... இது நம்புற மாதிரியா இருக்கு" என்று ஸ்ரீயை கண்கள் சுருக்கி பார்க்க...
"ம்ம் நம்புடி பாப்பாவுக்கு இட்லி வேணுமாம், நீ மட்டும் தின்னா குழந்தைக்கு பசிக்காது, அதான் கம்ப்ளைன்ட் பண்ணிச்சு , வாங்கிட்டு வந்தேன் .. என் குழந்தையை பட்டினி போட்ட உன்ன குண்டர் சட்டத்துல தூக்கி உள்ள போடணும்.."
"ஆறு மாச குழந்தை சாப்பாடு கேட்டுச்சா..
"எங்கடா கேட்டிச்சு
"ஓஓஓ சரி சாப்பாடு எங்க ?
"வர்ற வழியில காக்கா தூக்கிட்டு போயிடுச்சு, என் குழந்தையை எப்போ பார்க்கணும்னு தோணுதோ அப்ப வருவேன் ,அவளோட ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு முக்கியம், அதை சொல்லதான் வந்தேன் ..
"பாப்பா நாளைக்கு உனக்கு சப்பாத்தி வாங்கிட்டு வர்றேன் "என்று சுவாதி வயிற்றை தடவி கொடுத்துவிட்டு ஸ்ரீ ஓடிவிட, சுவாதி முகத்தில் விரிந்த புன்னகை..
"இவன் ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லை, மணி இரண்டு குழந்தை பார்க்க வந்தானாம்" வெறுப்பை மீறி பார்க்க வைத்தான், ரசிக்க வைத்தான் ,சிரிக்க வைத்தான் .. பேச மட்டும் செய்யாத ராசா என்று புலம்பவும் வைத்தான் ...
"ஸ்ரீ மாலை நேரம் வேலை முடித்து நகர்ந்தவன்.. எதிரே அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சுவாதி அருகே தட்டி
"ம்ம் கிளம்பு ..
எங்க?
"எமலோகத்தில எமன் நல்லா இருக்காரான்னு பாத்துட்டு வருவோம்..வான்னா வாடி .. பத்து பாசம் மூச் இல்லாம இருந்தா உனக்கு சேதாரம் இல்லை பைக்கை வந்து நிப்பாட்டியவன்..
"பின்னாடி உட்கார்ந்து தூங்கி தொலைச்சிடாத..குழந்தை இருக்கு கவனம் ..என்ற ஸ்ரீயை ஒரு நொடி தட்டி முழிக்காது பாத்தாள்.. அடிக்கடி யாரையோ அவன் நியாபகம் படுத்துகிறான்.. அது மட்டும் அவளுக்கு நன்றாக தெரிகிறது..
"ஸீவிட்டி தூங்கிடாதடி உன்ன பிடிச்சிகிட்டு வண்டி ஓட்ட கஷ்டமா இருக்கு .. "
"அப்போ கார் வாங்கு பாவா...
"என்ன கார் வாங்கலாம் , அதையும் நீயே சொல்லு நீதான அதுல ஏற போற" ... ஆளு காதலை சொல்லவில்லை என்றாலும் அவள்தான் தனக்கு முக்கியம் என காட்டி கொண்டே இருப்பான்
"வால்வோ வாங்கு பாவா செமையா இருக்கும் ப்ளாக் கலர் ஓகேயா? "என்று இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்து , அவன் வயிற்றை விழுந்து கட்டி கொள்ள...
"ப்ச் ஏய்!! என்ன கனவு காண்றியா, ஏறு "திடுக்கிட்டு சுவாதி சட்டென்று திரும்பி, கார் ஷெட்டில் நிற்கும் காரை பார்த்தாள் கருப்பு நிற வால்வோ..
"என்னடி ஏறி தொலை..
"ம்ம் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர போனவள்.. தலையை உதறி ஒரு பக்கம் உட்கார்ந்து கம்பியை பிடித்தாள்...
வண்டி முன்னோக்கி நகர நகர அவள் தலை வலிக்க ஆரம்பித்தது... தீடிரென டிராபிக்கில் வண்டியை நிறுத்திய ஸ்ரீ..
"ஸ்வீட்டி இறங்கி இங்கேயே நில்லு" என சொல்லி கொண்டே சட்டையை கழட்டியபடி ஓட ஆரம்பிக்க..
அவன் போகும் திசையை தலையை சாய்த்து பார்த்தாள் .. ஒரு பெண் ஆக்ஸிடெண்ட் ஆகி குப்புற கிடக்க.. ஸ்ரீ அந்த பெண்ணை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு நிற்க , சுவாதி உடல் உதற ஆரம்பித்தது
"பாவாஆஆஆ பாவா விட்டுட்டு போயிடாத "என்று தலையில் ரத்தம் வடிய கிடந்த, அவள் நினைவுகள் கிளறி மேல வர...
"ப்ச் டிராபிக் ரூல் பார்த்து வண்டி ஓட்ட தெரியலைன்னா எதுக்கு வண்டியை எடுக்கிறாள்க" என்று கையை கழுவி அவள் சேலையில் துடைக்க போக , அவள் வெறித்த பார்வையை கூர்ந்து பார்த்தவன்.. அவள் தோளை தட்ட..
"ஹான் பாவா... சாரி கவனிக்கல" என்று வியர்த்து வடிந்திருந்தாள் ..
"சட்டையை கறையாகி போச்சு, வா இந்த கடையில சட்டை எடுத்துட்டு போவோம் "என்று ஒரு கடைக்குள் நுழைய...
"எந்த கலர் வேணும் சார்..
"ப்ளூ ஆலன்சோலி" என்று தன்னிச்சையாக அவள் வாய் கூற.. ஸ்ரீ சட்டென்று திரும்பி அவளை பார்த்தான்
"சாரி ஏதோ யோசனையில "என்று கையை பிசைந்தபடி தள்ளி அமர்ந்து கொண்டாள்...
"அவ சொன்னது எடுத்து போடுங்க" என்று ஒரு சட்டையை எடுத்து போட்டு , பட்டன் போடாது அவளை நோக்கி திரும்பி நிற்க.
"பாவா நான்தான் போடுவேன், நீ சும்மா இரு "என்று குதித்து கொண்டு வந்த ஸீவிட்டிதான் ஸ்ரீக்கும், நியாபகம் வந்தாள், சுவாதிக்கும் காட்சியாக வர.. சுவாதி கால்கள் தானாக ஸ்ரீயை நோக்கி நடந்தது அவன் முகத்தில் வெற்றி புன்னகை..
"போட்டு விடுறியா? என்றான் அவள் காதில் மெல்ல..
"ம்ம்" என்று சுவாதி சுற்றி நூறு பேர் நிற்க கவலை கொள்ளாது அவன் சட்டை பட்டனை போட ஆரம்பிக்க...அவன் காற்றை இழுத்து அவள் முகத்தில் ஊத.. ஷாக் அடித்தது போல அவனை பார்த்தவள் .. தலையை பிடித்து கொண்டே..
" ஏதோ கவனத்துல எதுவும் சொல்லிடாதீங்க... நான் வேணும்னு அப்படி பண்ணல" பரிதவித்தாள்...தவறாக பேசி விடுவானோ என்று ..
"உன் வேலை என்ன?
"உங்கள பார்க்கிறது "
"என்ன பார்க்கிறதுல இதுவும் ஒன்னுதான் .. உன் வேலையை செஞ்சா நான் ஏன் திட்ட போறேன், நான் சம்பளம் கொடுக்கிறேன், நீ வேலை பார்க்கிற.. மேல ஒரு பட்டன் போடல , அதையும் போட்டு விடு "என்று குனிந்து நிற்க ... சுற்றி அனைவரையும் பார்த்து சங்கோஜப்பட்டு கொண்டே அவன் மேல் பட்டனை போட்டுவிட..
"அடுத்து எங்க போறோம்?...
"பீச்சுல சுண்டல் வாங்கி திங்க "என்று சொல்லி கொண்டே ஸ்ரீ படியில் குதித்து இறங்க..
அவன் பின்னாடி இறங்கிய சுவாதி , முகம் வெளிரி போனது அவள் கண்ணில் பைக் கண்ணாடி வெளிச்சம் அன்றுபோல இன்றும் பளீரென்று பட..
"ஐஐ இதே போல மறுபடி பண்ணு பாவா" என்று குதித்த இரட்டை ஜடை போட்ட ஸீவிட்டி கண் முன்னால் அச்சுஅசாலாக வந்து நிற்க.. சுவாதி கடை வெளியே தெரிந்த கண்ணாடியில் தன் உருவத்தை தடவி பார்த்து கொண்டிருந்தாள்...
நான்... யார்........ இவன் யார்?
இதுநாள் வரை நிழலோவியம் போல வந்த உருவம் இன்று ஸ்ரீயை அடையாளம் காட்ட ... தூரத்தில் நின்று அவளை நோக்கி திரும்பிய ஸ்ரீராமை பார்த்து கொண்டே மயங்கி சரிந்தாள்...
சுவாதியாகவே தான் தொலைத்த ஸ்வீட்டியின் காதலை தேட ஆரம்பிப்பாள்..