பகைவனின் 23
Pani23

23 பகலவனின் பனிமலர் அவளோ!!
வீட்டின் படுக்கையில் சுவாதி படுத்திருந்தாள்..எப்படி இங்கே வந்தாள். என்ன நடந்தது ,தெரியாது,, ஸ்ரீ முகத்தில் விடை காண தேட அது என்னைக்கு விடை சொல்லிச்சு ..
ஸ்ரீ அவள் அருகே அமர்ந்திருந்து லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவன் அப்படியே தூங்கி இருந்தான்.. ஒற்றை கையில் சிகரெட் மெல்ல மெல்ல புகைவிட்டு அவன் கையை சுடுவதற்கு போகும் முன்.. சுவாதி வேகமாக எழும்பி அதை தட்டி விட.. உடலை நெளித்துக் கொண்டு எழும்பிய ஸ்ரீ..
"என்ன சிகெரெட் வேணுமா ?வேணும்னா கேட்டு வாங்குடி, புடுங்குற.. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க
"ஓய் என்ன "என்று , இல்லை என்ற தலை ஆட்டியவள் மறுபடியும் போய் படுக்கையில் படுத்து கொண்டு ஸ்ரீயை பார்த்தாள் .. என்ன நடந்து சொல்ல மாட்டான் தெரியும் அவளே இறந்தகாலம் தேட ஆரம்பித்தாள்..
"உங்கள நான் இதுக்கு முன்னாடி பார்த்திருக்கேனா ?
"ஆமா..உடனே பதில் வந்தது ..
"எங்க ? எப்போ எப்படி
"டெய்லி பார்த்துகிட்டுதான இருக்க ..இப்படி ,இங்க .
"ப்ச் அது இல்ல பாவா... நாம கல்யாணத்துக்கு முன்னாடியே.. முதல் நாள் உங்கள பஸ்ல போகும் போது பார்த்தேன் , அப்பவும் இந்த முகத்தை எங்கையோ பார்த்தது போல இருந்தது .. இப்ப நிறைய கேள்வி எல்லாம் உங்ககிட்டேயே வந்து நிற்கிறது போல இருக்கு ... "
"தள்ளி நிற்க சொல்லும்மா.. நான் ரொம்ப மோசமானவன் நான் சொல்லலை இந்த உலகம் சொல்லுது .. " இவன்கிட்ட கேட்பதற்கு தெருவில் நாலு சொறி நாயிடம் பேசியிருந்தால் கூட , தனக்கு பதில் சொல்லி இருக்கும் என்று நினைத்து நகத்தை கடித்துக் கொண்டே மீண்டும் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்
உங்களுக்கும் எனக்கும் ஏற்கனவே சம்மந்தம் இருக்கு, நான் உங்க கூடவே இருந்திருக்கேன்.. அது காதலா, நட்பா அதுதான் குழப்பம் .. ஆனா நானும் இந்த உலகத்தில சந்தோஷமா இருந்திருக்கேன்..அதுக்கு காரணம் நீங்க மட்டும்னு தெரியுது .. நான் யாரு? உங்களுக்கும் எனக்கும் இடையில என்னன்னு சீக்கிரம் கண்டுபிடித்து தீருவேன்... என்றவளுக்கு ஸ்ரீ புதிதாக தெரிந்தான்...
"என் இறந்தகாலம் உங்கள சுத்தி இருக்குன்னு எனக்கு நல்லா தெரியுது, கேரளாவில் தனக்கு சிகிச்சை நடந்தது அதன் பிறகு தாயை அடையாளம் தெரியாதது ,எல்லாம் யோசித்து பார்த்தவளுக்கு ..
ஆக!! என் புத்தகத்தில் நடுவில பாதி பக்கத்தை காணல, அதை தேடினா இந்த ஸ்ரீ யாருன்னு தெரிஞ்சிடும் கேட்டா சொல்ல மாட்டான் , சொல்லும் வரை விட கூடாது...
காலை ஆட்டி கொண்டு டிவியை பார்த்து கொண்டிருந்த ஸ்ரீ அருகே அவளே நெருங்கி அமர்ந்து கொண்டாள்.. அவன் கண்டுகொள்ளாது டிவியை மாற்றினான்..
"பசிக்குது பாவா... அவன் சுள்ளென்று வாயை திறக்க போக..அவன் வாயை இறுக பொத்திய சுவாதி ..
"எனக்கு பசிக்கல ,உங்க குழந்தைக்கு பசிக்குதாம் இப்ப பானிபூரி வேணுமாம், எங்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணுது ..அப்பா ரொம்ப மோசம், பானிப்பூரி வாங்கி தர மாட்டைக்கிறான்.. அவன குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ள போட்டிருங்கன்னு என்கிட்ட தனியா சொல்லுச்சு..தெரியுமா? கண்ணை அவனை போல உயர்த்தி காட்ட..
"ஏய் என்ன விளையாடுறியா? ஆறு மாசம் குழந்தை எப்படி பேசும் .."
"ஆறு மாச குழந்த, இட்லி கேட்டு அடம் பிடிக்கும்போது ஆறு மாசம் குழந்தை ஏன் பானிபூரி கேட்டு அடம் பிடிக்காது பாவா ... உதட்டை அழகாக சுளித்தாள் ... அவன் நம்பாது அவளை பார்க்க
"உங்க குழந்தை உங்க கிட்ட பேசினது உண்மைன்னா.. என்கிட்ட பேசுனதும் உண்மைதான் ..வேணும்னா நீங்களே கேளுங்க அவன் கையை பிடித்து நைட்டி உள்ளே விட்டு ..
"இப்ப கேளுங்க சொல்லும்" என்று கிசுகிசுக்க...
"அப்படி எதுவும் சொல்லலை ,உளறாத ,கையை விடு..
"ப்ச் சொல்லுதுங்கிறேன்.. காதை வச்சி கேளுங்க மல்லாக்க படுத்து கொண்டு அவன் சட்டையை பிடித்து இழுக்க...
"செவுடி பேந்திடும் விடுடி, தனியா இருக்கிற பையனை கற்பழிக்க பார்க்கிறியா... என்ன நடந்தாலும் டைவர்ஸ் தர்றது உறுதி.."
"நானும் டைவர்ஸ் கொடுக்கிறது உறுதிதான் பாவா.. பாப்பாவுக்காகதான நாம சேர்ந்து இருக்கோம் ..அப்ப அவ சொல்றது நாம ரெண்டு பேரும் கேட்கணும் இல்லையா.. வாங்க வந்து கேட்டுட்டு முடிவு சொல்லுங்க .. நான் என்னவோ பொய் சொன்ன மாதிரியே பேசுறீங்க .. நைட்டியை மேலே உயர்த்தி குட்டி வயிற்றை காட்ட..
"ப்ச் மயங்கி விழுந்து மண்டை சூடாகி போனா போல ,எப்படி காட்டிட்டு கிடக்கா.."அவள் காது கேட்கவே கூறிவிட்டு ஸ்ரீ திரும்ப ..
பழைய சுவாதியாக இருந்தால் எப்படி பேசுறான் என பத்மினி போல உதடு துடிக்க அழுதிருப்பாள்..
"இவன் தொல்லை கொடுத்தா, இவனுக்கு டபுள் மடங்கு தொல்லை கொடுத்து ஓட விட்டா, ஆள் தெறித்து ஓடும்" என்று மூளையின் பகுதி கட்டளை கொடுத்தது..
"ஓவரா பேசி அடிச்சிட்டா.. நீ செஞ்சு பாரு , ஆள் பொட்டி பாம்பா பம்முவான்" என்று மறு கட்டளை கொடுக்க ,,துணிந்தே இறங்கி விட்டாள்..
"அடிச்சா அடிடா..உன் வாயால நானா யாருன்னு சொல்லுவ .. நான் உன்ன விட்டுட்டு வந்தேனா, இல்லை நீ என்ன விட்டுட்டு போனியான்னு தெரியணும்..."
நட்பு என்றால் இவ்வளவு எளிதாக அவனை தன் கணவனாக ஏற்றிருக்க முடியாது.. இது காதல் காதல் காதல் என்று மட்டும் உறுதியாக தெரிந்தது ..
அவனுக்கு பணிந்து போன நார்மல் மனைவி காதலை காட்டி, மூக்கை சல்லியாக பெயர்த்து போ என அனுப்பி விடடான் .. ஒரு மாற்றத்துக்கு துணிந்து நிற்கும் காதலை காட்டி பாப்போம், அவளை ஆட்கொள்ளும், புது நினைவுகள் கொடுக்கும் தாக்கத்தில், அதன் படி தெரிந்தோ தெரியாமலேயோ செயல்பட ஆரம்பித்தாள் ...அவன் முதுகு காட்டி நிற்க..
"ஆஹா ஆளுக்கு ஸ்விட்ச் வேறு எங்கேயோ இருக்கு.. நம்மகிட்ட வேறு எதுவோ இந்த புள்ள எதிர்பார்த்து ஏமாந்து கிடக்குபோல.. பேசுன பேச்சுக்கு பல்லு உடையும்னு பார்தா, திரும்பி நின்னு சிகரெட் இழுக்கிறான்"..
"ஆபிஸ்ல உங்கள பார்க்கிறது என் வேலை, அதை நான் சரியா செய்றேன், வீட்டுல என்ன, சாரி சாரி உங்க குழந்தையை பார்க்கிறது மட்டும்தான் உங்க வேலைன்னு சொல்லி இருக்கீங்க பாவா,,
"அதுக்கு இப்படி காட்டிட்டு கிடப்பியா, அசிங்கமா இல்லை மூடிட்டு தூங்கு "
"இதுல என்ன அசிங்கம் இருக்கு, நீங்க பார்த்து , உரசி, உழுது, கடிச்சி சப்பி எடுத்ததுதான பாவா இந்த உடம்பு "என்றவள் அந்த ஆசையில் உடலை தெளிக்க.. தந்தம் போல வெளிரி கிடந்த தொடை அவன் ஆண்மைக்கு சவால் விட்டது..மயங்கி தெளிந்த மனைவியை ஆட்கொள்ளும் அளவு அவன் அரக்கன் இல்லையே தன பிடிறி அலைந்து உண்டாகும் சபலம் விரட்ட..
"போனா வராது பொழுது போனா கிடைக்காது..
"என்ன? "
"இல்லை குழந்தை பேசும் போதே, வந்து காது வச்சி கேட்டிருங்கன்னு சொன்னேன் .. அப்புறம் சத்தம் கேட்கல , நீ பொய் கொல்றன்னு எங்கிட்ட குதிக்க கூடாது சொல்லிட்டேன்.. "
"ப்ச் வயித்தை மட்டும் காட்டு அதுக்கெதுக்கு கீழ எல்லாம் காட்டுற "
"என்ன செய்ய பாவா , பாவாடை கட்டினா சொரியல் எடுக்குது வீட்டுக்குள்ள ப்ரீயா விடுறதுதான், மேலேயும் நல்லா கெட்டியாகி போச்சு, டாக்ட்டர் போட வேண்டாம்னு சொன்னாங்க... அவன் காது பக்கம் சத்தம் கேட்டு விலகினான்..
"ஒழுங்கா டிரஸ்ஸை போட்டுட்டு வா" ஸ்ரீ தன் கார் சாவியை எடுக்க
"பாவா உங்க பொண்ணு ஸ்பெசிபிக்கா பைக்ல போகணும்னு சொல்லி இருக்கு .. கார் வேண்டாம் பைக்ல போகலாம்.. "
"இவ என்ன ஓவரா போறா குழந்தை பேர சொல்லி என்ன ஏவுறா" ..தீடிரென வால் முளைத்த மனைவியை ஸ்ரீ பல்லை கடித்து முறைக்க..
"பாருங்க பாவா , நான் ஒன்னும் உங்க மேல விழுந்து கிடக்க ஆசைப்பட்டோ, இல்லை படுக்க ஆசைப்பட்டோ , பைக்கல இடிச்சிட்டு போக ஆசைப்படல.. உங்க பேபி கேட்டது ..உங்க குழந்தையோட ஒவ்வொரு வளர்ச்சியும் உங்களுக்கு முக்கியம் இல்ல பாவா" ..இத்தனை நாள் அமைதியாக போகும் ரகம் தீடிரென பேச ..
"நினைவு திரும்பிடுச்சா இல்லையே, ஸ்வீட்டின்னா என் கழுத்தை பிடிச்சி பன்னிக்குட்டி ஏறி, போன்னு ரகளை பண்ணுவாளே யோசனையாக பைக் சாவியை ஸ்ரீ எடுக்க..
"நீ பச்சையா பேசினா நானும் பேசுறேன், நீ அடாவடி பண்ணினா, நானும் பண்றேன்" ..என்ற முடிவோடு நைட்டியில் வெளியே வர..
"சேலை எங்க..
"அதை கட்டினா கசகசன்னு வருது இப்படியே இருக்கட்டும் .. இரட்டை பக்கம் கால் போட்டு அமர்ந்தவள்... போகலாம்" என்று தன் உடல் அவன் மேல் மொத்தமாக விழ பிடித்து கொண்டாள்..
"ப்ச் தள்ளி உட்கார்டி.."வித்யாச நடத்தை கண்டு அவனே குழம்பி போனான், ஆளு தெளிவா இருக்கா செய்கை சரியில்லையே என்று யோசிக்கும் முன் அவன் கன்னத்தில் அவள் கன்னம் உரசியது
"தூக்கம் வந்து விழுந்துட்டா , உள்ள உங்க குழந்தை இருக்குல்ல பாவா, அதுக்காகத்தான் இப்படி ஒட்டி இருக்கேன் , வேற ஒன்னும் தப்பா நினைக்காதீங்க.. வயிற்றோடு கட்டி கொண்டு அவன் தோளில் முகத்தை புதைத்து கொண்டாள் ..
"நீ என்கிட்ட மிதி வாங்க போறன்னு நினைக்கிறேன்..எதுக்கு இப்ப ஓவரா பண்ற..."
"உங்களுக்கு நான் தொல்லையா இருந்தா வேணும்னா, அனுப்பி விட்டிருங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை .. இல்ல உங்க கண் எதிர்லதான் இருக்கணும்னா.. நான் இனி இப்படிதான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்.. இஷ்டம்னு வச்சிக்க இல்லை கழட்டி விடு , டைவர்ஸ் தர போறவனுக்கு அவ்வளவுதான் மரியாதை கழுத்தில் கடித்து வைக்க ..கழுத்தை உதறினான்..
இப்பவே கொண்டு போய் விடுறேன், ஸ்ரீ பத்தி உனக்கு சரியா தெரியல..
"விடுங்க நாளைக்கே உங்க கலெக்டர் ஆபீஸ் முன்னாடி சேலை இல்லாம நிற்பேன் என்றதும் ஸ்ரீ பைக்கை பிரேக் போட்டு நிறுத்த..
"எஸ் பாவா, என் புருஷன் என்ன குழந்தையோடு ஏமாத்திட்டான் , நியாயம் வழங்குங்கன்னு சேலையில்லாத போராட்டம் நடத்துவேன்.. சட்டம் உங்க கையிலதான் பாவா . பட் சாட்சி என் கையில கலெக்டருக்கு தெரியாதா சட்டங்கள் இல்லை .. என் பையன் சரி கிடையாதுன்னு சாட்சி சொல்ல உங்க குடும்பமே தயார் , வினய் அண்ணா உட்பட .. உதட்டை பிதுக்கி சிரித்தாள் ..
"ஒழுங்கா நான் சொல்றது மாதிரி என்ன வச்சிக்கிட்டா, குழந்தையை பெத்து தந்துட்டு டைவர்ஸ் தர்றேன் ....
கொஞ்சம் இறங்கு ...
மாட்டேன் இப்படியே விட்டுட்டு போயிடுவீங்க..அவளை கொத்தாக தூக்கி இறக்கி விட்டவன்..
"ஸ்ரீகிட்ட விளையாண்டு பார்க்கிறியா , ரோட்டுல நில்லு என்று போய்விட..
"பாவாஆஆஆஆஆஆஆஆ ச்சை என்று தரையில் காலை உதைத்து நின்றவளுக்கு காலடியில் ஏதோ தட்டுப்பட அவன் பர்ஸ் இவளை தூக்கும் போது தவறி விழுந்திருந்தது .. குனிந்து எடுத்த சுவாதிக்கு முகம் முழுக்க நிம்மதி....
"கண்டுபிடிச்சிட்டேன் பாவா.. நீ இந்த ஸ்வீட்டியைதான் சுவாதிக்கிட்ட தேடுற ...கிடைத்ததை உற்று பார்த்தாள்
அதனுள் ஸீவிட்டி ஸ்ரீ தோளில் தொங்குவது போலவும், அவன் அவளை கன்னத்தில் கடிப்பது போலும் போட்டோ உள்ளே வைத்திருந்தான்... அந்த ஒரு புகைப்படம் போதும் தஙகள் உறவு எப்படி இருந்திருக்கும் என அறிய ..
"என் அனைத்துமானவள் !!"என்று கீழே அவன் கையெழுத்து..
எனக்காக ஒருவன்! எனக்கானவன் இவன் ! நீ விட்டாலும் இனி நான் உன்னை விடேன் .. பழசு நியாபகம் வருதோ இல்லையோ , இந்த சுவாதியும் உன்ன பைத்தியமா சுத்துவா, சுத்த வைப்பா..அநத ஸ்வீட்டி மறந்து சுவாதி பின்னாடி சுத்துவ, இது சேலஞ்ச் பாவா ... என்றவள் அந்த பாதையில் அவனை தேடி நடைபோட ஆரம்பித்தாள்...
காதலை தேடியர்வர்கள் எப்போதும் தோற்றது இல்லை ...
உன்னைய நம்பி நிம்மதியா காதலிக்க கூட முடியாதே அதான??