பகலவன்20

Pani20

பகலவன்20

20 பகலவனின் பனிமலர் அவளோ?

தூத்துக்குடி 

விளையாட்டு மைதானம் !!

நம்ம ஸ்ரீ நாட்டை திருந்துவான் என எதிர்பார்த்து காத்திருந்த என்னை போல பாவப்பட்ட ஜீவன்களுக்கு ஐயோ!!

ஸ்ரீ கிரிகெட் மட்டையை சுழட்டி கொண்டு..புழுதியில் புரண்டு போய் நின்றான்.. 

"பாலை போடுறா சோங்கி" என்று ஸ்ரீ விசில் அடிக்க ஒருவன் பாலை வீச தூக்கி, அவன் அடித்த அடியில் பால் காணாது போய்விட்டது..

கலெக்டர் ஊரை திருத்த வருவான் என மக்கள் காத்திருக்க, இந்த பய கிரிகெட் விளையாடி ஸ்கோர் சேர்த்து கொண்டிருந்தான்.. கரையில் வினய் புலம்பி கொண்டிருந்தான்..

"எனக்கு ஜோடி தர்றேன்னு சொன்னியேன்னு நம்பி வந்த என்ன இப்படி புலம்ப வச்சே கடைசி எபி வரை கொண்டு போகுது இந்த ரைட்டர் ..எம்மா தாயே! நீ எனக்கு ரொமானாஸ் பண்ண ஜோடி தரலைன்னாலும் பரவாயில்லை.. இந்த தொல்லைகிட்ட இருந்து விடுதலை வாங்கி தாம்மா உனக்கு புண்ணியமா போகும் , எங்க போனாலும் செல்லுக்கு சார்ஜர் மாதிரி என்ன தூக்கி போட்டு கொண்டு வந்திடுறான்..  

"மச்சான் சத்தம் இல்லாம புலம்பு.. விளையாட டிஸ்டர்ப்பா இருக்கு "

"ஏன்டா நீயெல்லாம் உருப்படுவியா? பைக்கில போகும் போது சைக்கிள்ல மோதி சாவ... "

"சாகும் போது உன்னையும் கூட்டிகிட்டுதான் மச்சான் போவேன், உன் பக்கம்தான் பால் விழுந்தது எடுத்து போடு .."

"என் கூடவேதான நாசமாபோறவனே சுத்தின எப்படா முடிச்ச..அது சரி டிரையினிங் எல்லாம் போவாங்களே நீ போனியா என்ன .."

"ம்ம் ம்ம் உபி யில 

"அடேய் நான் யோகா படிக்க போறேன்னு போனது இதுக்குதானாடா.."

"அப்பவே யோசிச்சிருக்க வேண்டாம், நமக்கும் யோகாவுக்கும் என்னடா சம்மந்தம்... தம் இருக்கா??" என்று ஸ்ரீ வினய் பாக்கெட்டை தடவி எடுத்து பத்தவைக்க..

"டேய் கலெக்டர் டா நீ..

"அது காலையில ஒன்பது மணியிலிருந்து இப்ப நான் ஸ்ரீ ..

"என்னடா இப்படி பண்ற, உன்ன பார்த்து பசங்க கெட்டு போவாங்கடா..

"எவனும் இங்க சின்ன புள்ள இல்லை , நான் உட்கார்ந்து திருத்த ,என் வேலையும் அது இல்லை.

"அப்படி சொன்னா எப்படி மச்சான், நீ ஒரு நாடே திரும்பி பார்க்கற ஆள்டா நீ சரியா இருக்க வேண்டாமா ஸ்ரீ? "அவனோ ஆழ புகை எடுத்து ஊதி கொண்டே..

"இந்த கூந்தல் எல்லாம் வராதுன்னு தான் அன்டன்கிரவுண்ட் ஆபரேசன் போனேன்.. நமக்கும் பொறுமைக்கும் , ஒழுக்கத்துக்கும் காததூரம் மச்சான் .. இவன்கதான் கையில கால்ல விழுந்து போஸ்டிங் போட்டு அனுப்பிட்டான்க..

"அப்ப நீ திருந்த மாட்ட..

"நான் ஏன்டா திருந்தனும், தப்பு செஞ்சாதான திருந்தனும்.. நான் நானா இருக்கேன், உனக்கு ஏன் எடுக்குது.."

"நீ ஏன் சொல்ல மாட்ட , இத்தனை படிப்பு படிச்சி கலெக்டர் ஆன நாய் , என்னையும் எதுலையாவது சேர்த்து விட்டிருக்கலாம்தான..

"மச்சான் நீ குயந்தை புள்ள பயந்துடுவ, இது எல்லாம் உனக்கு செட் ஆகாது, வா குச்சி மிட்டாய் வாங்கி தர்றேன்" என அவன் கழுத்தை தொங்கி கொண்டே வழக்கம் போலவே டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீயை குடிக்க 

இதுதான் கலெக்டர் ஸ்ரீராமாம்!! ச்சை பின்றான்யா, எவ்வளவு கேஷுவலா இருக்கார் , எளிமையா போறார் என இளையவர் கூட்டம் மொத்தமும் அவனை திரும்பி பார்த்தது.. அவன் ஏன் அதை எல்லாம் பார்க்க போறான் நண்பனை சண்டைக்கு இழுத்து விளையாடி கொண்டு நின்றான் 

"மச்சான்... சுவாதி இதுக்குதான ஆசைப்பட்டா.

"என் ஸ்வீட்டி ஆசை பட்டான்னு சொல்லு, இன்னொரு வாட்டி அவ பேர் என் காதுல விழுந்தது தென்னைக்கு உரம் போட உன்ன வெட்டி முக்கிடுவேன்..

"இரண்டும் ஒருத்திதான்டா, ஏன்டா ஆரம்பத்துல இருந்து குழப்பிட்டு இருக்க 

"இரண்டும் ஒருத்திதான், ஆனா இவ என் ஸ்வீட்டி இல்லை ..

"தெளிவா குழப்புறானே..

"சரிடா அப்படியே வச்சிக்க .. இப்ப சுவாதி ஆசைப்பட்ட மாதிரி நீ பொறுப்பா இருக்க",பளார் என்ற சத்தத்தில் திரும்பி பார்க்க..ஸ்ரீ எங்கேயோ நின்றான்.. 

"அந்த பொண்ணுதான் வேண்டாம் சொல்லுதுதான ____புடுங்கி போல பூவை கொடுக்கிற "என்று எவனோ எவளுக்கோ பூவை கொடுக்க தேவையில்லாது போய் ஆஜார் ஆகி, அவனை அடித்து கொண்டு நிற்க...

"அதான என் மச்சானாவது திருந்தி பொறுப்பு துறப்பு வர்றதாவது இந்த ஆரம்பிச்சிட்டான்ல , ஒன்னு இவன வேலையை விட்டு தூக்கணும் .. இல்லை இவனே வேலையை எழுதி கொடுத்துட்டு வரணும் எப்படிதான் இவனால மட்டும் இப்படி இருக்க முடியுதோ" .கண்ணை கட்ட வைத்தான்.. 

"சரி மச்சான் நான் நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன்..

குளித்து துண்டோடு சுற்றும் நண்பனிடம் சொல்லி விட்டு கிளம்ப வினய் ரெடியாக.

"மச்சான் நான் ஒருதடவை சொன்னா சொன்னதுதான் உனக்கு நான் ,எனக்கு நீ கடைசி வரை மாறாது..

"ஏதே, அதெல்லாம் முடியாது என் கம்பெனியில வேலை பார்க்கிற பாக்கியாங்கிற பொண்ண இப்பதான் பேசி கீசி சரி பண்ணி, கல்யாணம் வரைக்கும் கொண்டு .. ஆஹா! ஆஹா! அதே பார்வை பார்கிறானே, இவன நம்பி வாயை விட்டது தப்பா போச்சே ,சோலி முடிச்சிடுவானே "போனில் வேறு மெசேஜ் அடிக்க வினய்க்கு வயிறு கலக்கியது..

"மச்சான் போன எடுத்து பாருடா..

"ஒரு மண்ணும் வேண்டாம் , பாக்கியா பக்கத்து வீட்டுகாரன் கூட ஓடி போயிட்டா அதுதான..

"இல்லை மச்சான் பாக்கியா புருஷன் வேற எவளையோ கல்யாணம் கட்டிக்கிட்டானாம்.. வினய் மூக்கை சிந்தி அழ..

"மச்சான் கர்சீப் வேணுமா..

"மூடிட்டு போடா ..நீ மட்டும் கல்யாணம் அது இதுன்னு எல்லாத்தையும் பார்த்துட்டு ,என்ன மட்டும் ஏன்டா சேர விட மாட்டைக்கிற..

"நல்ல எண்ணம் மச்சான் , பொண்ணுங்களே போர்ஜரிடா , நான் நம்பி ஏமாந்து போயிட்டேன்.. நீயும் பீல் பண்ணி நிற்க கூடாது பாரு ,அந்த நல்லலெண்ணம் ..

"வாயில அசிங்க அசிங்கமா வருது போயிடு, " அவர்களுடைய உலகம் எப்போதும் தனியே!! நண்பன் இருந்தா நரகத்துக்கும் போகலாம் என்ற கூற்றுக்கு அடைமொழி அவர்கள்தான்.. 

"என் மகன கரிச்சி கொட்டுனீங்க ,பாருங்க இப்ப எப்படின்னு ."

"ஆமா எங்க அண்ணன் கலெக்டர் , அய்யோ இதை இப்பவே வாட்சப் குரூப்ல சேர் பண்ணணுமே" என ராதிகா ஓட..

"அந்த உரக் கடை பத்மா என் மகனை பேசின பேச்சுக்கு அவளை உண்டு இல்லைன்னு ஆக்கணும் இருங்க வர்றேன்" என சிவகாமி ஊரில் தண்டோரா போட கிளம்பி. மகேந்திரனுக்கு சந்தோஷம்தான் ஆனால் அதை வெளிக்காட்டவில்லை ... 

சுவாதி மட்டும் சோபாவில் எதிரே கிடந்த ஸ்ரீராம் போட்டோவை வெறித்து பார்த்த கொண்டிருந்தாள்..

"ஏம்மா சுவாதி..

"ஹூம் மாமா..

"அவன் பண்ணின வேலை சீக்ரட் , வெளிய சொல்ல முடியாம மறைச்சி வச்சிருப்பான் நமக்குதான் அது தெரியல ... நீ எப்போ ம்மா தூத்துக்குடி கிளம்ப போற , அவன் போய் சாயின் பண்ணிட்டான்.. எப்படியும் குவார்ட்ஸ் அது இதுன்னு செட் ஆக ,நாலு நாள் ஆகும்.. கிளம்பு நானே கொண்டு விட்டுட்டு வந்திடுறேன்.."

"எதுக்கு மாமா??..

"என்னம்மா நீ ,அவன் உன்கிட்ட விளங்காத வேலை பார்க்கிறான்னு நினைச்சுதான் அவனை திட்டினேனே தவிர , வேற எதுவும் இல்லடா.. இப்ப உன்ன நல்லா வச்சிக்குவான்னு நம்பிக்கை வந்திடுச்சி போயிட்டு வா.."

"எப்படி மாமா போக சொல்றீங்க.. வெட்டியா சுத்தும் போது நீ வெட்டி தருதலை, பொறுக்கின்னு வாய்க்கு நூறு தடவை நீங்க வாயால சொன்னீங்க ,நான் மனசுல நினைச்சேன் இரண்டுக்குமே வித்யாசம் ஒன்னும் இல்லை .. அதோட அப்ப அவர விட்டுட்டு இப்ப போய் ஒட்டிக்க பார்த்தா ஆதாயத்துக்கும் , அவர் பதவிக்கும் , பணத்துக்கும் ஆசைப்பட்டு போன மாதிரி ஆகாது.. "

"அதோட உங்க மகன் கேரக்டர் இதுதான் மாமா!! அதுல எந்த மாற்றமும் கிடையாது.. நீங்க சொன்னீங்கன்னு அவர்கூட வாழ போறேன்னு வைங்க.. அவர் பேசுற பேச்சை கேட்டுட்டு நாண்டுகிட்டு நின்னுதான் சாகணும் .. இது சரிவராது மாமா.. எனக்கு இனி ஒரு சுடு சொல்லு தாங்க முடியாது, ஏற்கனவே அவர் பேசினா மனுசன் காதுல வாங்க முடியாது.. இப்ப கலெக்டர் வேற புண்ணாக்கி விட்டிருவார்..நான் சென்னைக்கு போகலாம்னு ஏற்கனவே முடிவு எடுத்துட்டேன் மாமா.. அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை .. "

"என்ன சுவாதிம்மா நீ இப்படி சொல்ற... அவன் நிலமை அப்படி அமைச்சு போச்சு , அதுக்கு என் மகன் வேண்டாம்னு நீ எப்படி சொல்லலாம் என்று சிவகாமி மருமகளிடம் நியாயம் கேட்க..

"அதான, அண்ணி அண்ணன் மேல என்ன கோவம் என்ன காப்பாத்த உடனே வரலைன்னுதான.. ஆனா அவர்தான என்ன காப்பாத்தினார்.. பாருங்க நம்மகிட்ட தப்பா நடந்த தயா வேலை போய் நிற்கிறான்.. இதுக்கு எல்லாம் என் அண்ணன்தான் காரணம் .."அவள் அமைதியாக தன் பொருளை அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்..

"கலெக்டர்னா பேசின பேச்சு , நடத்தை எல்லாம் மாறிடுமா.. உன் குழந்தைன்னு சொல்றேன் .. ஓஓ அப்டியான்னு பதில் சொல்றான்.. இப்ப வரை வெளிய அனுப்பிவிட்ட பொண்டாட்டி இருக்காளா செத்தாளான்னு பார்க்கல, இவன நம்பி கூட போய் வாழணுமாம்.. நேத்து வரை தருதலை, இன்னைக்கு பெரிய ஆளாம்.. நல்லா மாத்தி மாத்தி பேசுறாங்கய்யா,, ஏற்கனவே பணம் கொடுத்தாதான் காலைவிரிப்பியான்னு கேட்பான்.. இப்ப பணம் ,பதவி இருக்குன்னு படுக்க வந்தியான்னு கேட்பான் .. வாய் முழுக்க கலிஜி , இவனுக்கெல்லாம் எவன் கலெக்டர் வேலை கொடுத்தானோ, நமக்கு இவனோடு கழியாது சாமி ..." கணவன் மனைவி சண்டை இயல்புதான்.. 

ஆனால் இவ்வளவு நடந்த பிறகு கூட மனைவி நலன் பத்தி கேட்டு விசாரிக்காத ஸ்ரீயை, உடனே தலையில் வைத்து கொண்டாட அவளுக்கு முடியவில்லை .. அவன் இந்திய ஜனாதிபதியாக இருந்தாலும் வேண்டாம் என் பிள்ளை ,என்ன மதிக்காத அவனை தேடி நான் போக மாட்டேன் என்று முடிவாக இருந்தாள்... 

"சாரி மாமா எதுவும் தப்பா பேசியிருந்தா போயிட்டு வர்றேன், இன்னொரு முறை வாழ்க்கை உங்கள எல்லாரையும் சந்திக்க வாய்ப்பு தந்தா , உங்கள வந்து பார்கிறேன் என்று கண்ணீரை துடைத்து கொண்டவள்..

"அத்தை உங்கள கட்டு பிடிச்சிக்கவா.. ஏதோ போல வலிக்குது புரியல , நானும் புரிஞ்சிக்க டிரை பண்றேன்.. என் தலைக்குள்ள ஏதோ நடக்குது நான் செய்யிறது தப்பா சரியான்னு.. கத்தணும் போல இருக்கு, ஏதோ என் வாழ்க்கையில நடந்திருக்கா, இல்லை நடக்க போகுதா ஒன்னும் புரியல" என்றவள்."

"ஒருவேளை நான் செத்துட்டா, அனாதை பொணமா போட்டுறாதீங்க அத்தை" என்றவளை ராதிகாவும் சிவகாமியும் கட்டி அணைத்து கொண்டனர்...

"உன் அமைதிக்காக கொஞ்ச நாள் தனியா இருடா எல்லாம் சரியாகும்" என்று அவளை கொண்டு போய் சென்னையில் ஸ்டீபன் பொறுப்பில் விட நினைக்க

"இல்ல மாமா நான் ஹாஸ்டல் பார்த்துட்டேன், ___ ஸ்கூல்ல அப்ளிகேசன் கொடுத்திருக்கேன் வேலை கிடைச்சிடும் ... "

"சரிம்மா எதுன்னாலும் நாங்க இருக்கோம்..

"ம்ம் அனுப்பி வைத்தவளுக்கு தன்னை பார்த்தே சிரிக்க தோணியது.. 

உறவுகள் இல்லாத உலகு !!அது எனக்கு மட்டுமே போல ... தோளை உலுக்கி கொண்டு இதையும் ஏற்ற் கொண்டாள்..

இதோ ஒரு மாதம் ஓடி விட்டது வேலையில் சேர்ந்து..

"இத நோட்டுல அப்படியே காப்பி பண்ணுங்க.. என போர்டில் திரும்பி எழுதி போட்டு கொண்டிருந்தாள் சுவாதி..

"மேடம்...

"ஹான் யா என திரும்ப ஒப்பனை இல்லாத மயில் போன்ற நீல நிற சேலையில் ஆசிரியைக்கு உரிய காட்டன் சேலை, கொண்டை , சாக்பீஸ் சகிதம் சுவாதி நின்றாள் ..

"உங்கள ஆபிஸ் வர சொன்னாங்க மேடம் ..

"என்னய்யா?? கிளாஸ் போயிட்டு இருக்கே முடிஞ்சதும் வரவா.."

"ஏதோ அவசரம் போல மேடம், கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க சீக்கரம் வாங்க..

"ஓஓ என்னவா இருக்கும்" என்று சுவாதி ஆபிஸ் நோக்கி வர... உள்ளே கேட்ட குரலில் அவள் கால்கள் அப்படியே நின்று கொண்டது..

"பாவாவா? "ஜன்னல் வழியே அவள் அதிர்ந்து அடுத்த அடி எடுத்து வைத்து வருவதை ஸ்ரீ மேஜையில் ஒரு கால் தொங்க போட்டு அமர்ந்திருந்து பார்த்து கொண்டே, போனில் பேசி கொண்டிருந்தான்...

"ஓகே வை ..

"சார் ரொம்ப அரெஜெண்ட் வோர்க் சார்..

"உன் அவசர ___ க்கு எல்லாம் பார்க்க முடியாது, நான் அங்க இருக்கும் போது புடுங்கிட்டு இருந்தியோ... நீ எந்த மந்திரி மசாலாவாவும் இரு, ஸ்ரீகிட்ட உன் வேலை ஆகாது .. ப்ரோசிஜர் என்னவோ அதை பாலோ பண்ணாம கட்டியிருந்தா இடிக்க தான் செய்வேன், வை "என்று வள்ளென்று கத்தி விட்டு வைத்தான்..

"_____,______, இவன்க ____ கட்டிடம் கட்டிட்டு நம்ம தாலியை அறுப்பான்க.. "தலைமை ஆசிரியர் பாவமாக பார்த்தார் .. அவர் வரலாற்றிலேயே இப்படி ஒரு கலெக்டர் பார்த்திருக்க மாட்டார்.. வாயா கூவமாடா என்பது போல் பேச்சு முழுக்க மட்டம்..

"வாங்க சுவாதி சார் யாரு..

"அந்த ____ரெல்லாம் நான் புடுங்கிக்கிறேன் நீ கிளம்பு என்று கூற அவர் சுவாதியை பரிதாபமாக பார்த்து கொண்டே வெளியே போனார் .. அடி மட்டும்தான் அவருக்கு தப்பியது..

"எப்படிடா அவளுக்கு வேலை கொடுக்கலாம் "என்று டையை இழுத்து வைத்து தரையில் உருட்டி விட்டான் ..

சுவாதி கூட ஒரு நிமிடம் அவன் வரவு கண்டு அதிர்ந்து தான் போனாள்..அதன் பிறகே..

"உடனே இறங்கி வந்து வாடின்னு கூப்பிடுற ஆளு இவர் இல்லையே, என்ன வில்லங்கத்தை லாரியில ஏத்திட்டு வந்தானோ தெரியலையே, வேலை போனா சோத்துக்கு வழியில்லையே" என்று யோசனையாக அவன் முன்னால் நிற்க.. அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தான் சுவாதியும் அவனைத்தான் பார்த்தாள்.. வெள்ளை நிற சட்டை மடக்கி , கருப்பு நிற பேண்ட் சட்டை பாக்கெட்டில் சிகரெட் தலை தெரிந்தது..

"அதான யார் இவன் ? இப்போ எதுக்கு வந்திருப்பான் , பெட்ரோல் எல்லாம் செலவு பண்ணி தொல்லை வந்திருக்குன்னா சத்தியமா நமக்கு நல்லதுக்கு இல்லை ..எதுக்கும் தயார் ஆகிக்குவோம் .." தனக்கு மனதில் தைரியம் சொல்லி கொண்டு நிமிர..

"அப்புறம் புருஷன் இல்லை, பொட்டும் தாலியும் பளிச்சுன்னு இருக்கு, எதுக்கு அதை போட்டு பம்மாத்து காட்டுற..

"என்ன விஷயமா வந்தீங்க? 

"டைவர்ஸ் வேணும்..

"தந்துடுறேன்" எங்க கையெழுத்து போடணும் இதுதான் வரும் என சுவாதிக்கு சற்று தெரிந்தது..

"போட்டிறலாம் என்ன அவசரம் ..

"எனக்கு க்ளாஸ் இருக்கு ...

"எனக்கும் வேலை இருக்கு ...

ப்பூஊஊஊஊஊ என்ன வேணும்?

""இந்த குழந்தை என் உயிர் , நானே வேண்டாம்னு முடிவு எடுத்த பிறகு. இந்த குழந்தை மட்டும் உனக்கு எதுக்கு அதையும் ___ ழிச்சிடு.

"பாவாஆஆஆஆஆஆஆஆஆஆ, என்ன வார்த்தை பேசுறீங்க...

"எஸ் நான் இல்லாம இது உண்டானியா உரிமை கொண்டாட, இது என் ரத்தத்தில உண்டானது ஒன்னு என் குழந்தையை கொடு ,இல்லை __ ழி ..

"ச்சை மாறவே இல்லைல்ல நீங்க 

"ப்ச் தோளை உலுக்கினான்..

"சட்டபடி எனக்கும் இந்த குழந்தை செல்லும்..நானும் கேஸ் போடுவேன்... "

"போடு சட்டம் என் கையில ஓட வச்சி அடிப்பேன்"... 

"உங்க மேல இப்பவரை , இந்த நிமிசம் வரை ஒரு இணைபுரியாத பாசம் இருந்தது.. எப்போ இந்த குழந்தையை ச்சை, ஐ ஹேட் யூ , இந்த உலகத்தில நான் வெறுக்கிற ஒரே ஆள் நீங்கதான் .."

"நீ பிறகு உட்கார்ந்து வெறுத்துக்க, என்ன முடிவு எடுக்க போற ?குழந்தையை என் கிட்ட கொடுத்துட்டு டைவர்ஸ் வாங்கிக்கிறீயா, இல்லை அ...

"ப்ளீஸ் மறுபடி மறுபடி அப்படி சொல்லாதீங்க உங்க குழந்தை இல்லையா அது..

"அதான் கேட்கிறேன் தந்திடு சிம்பிள்.... பெருமூச்சு விட்ட சுவாதி 

"சரி குழந்தை பெத்ததும் தந்திடுறேன்..

"வெரிகுட் , இந்தா இதுல கையெழுத்து போடு...

"எதுக்கு .

"நான் கலெக்டர்மா எல்லாம் லீகலாதான் பண்ணுவேன் நீ பாட்டுக்கு என்ன ஏமாத்திட்டு போயிட்டா நான் என்ன பண்ண ...

"ம்ம் கொடுங்க என வாசிக்க. 

"வாட்?? குழந்தை பெக்குற வரை உங்க கண்காணிப்புல இருக்கணுமோ, நோ எனக்கு யாரு நிழலும் தேவையில்ல? 

"நான் என்ன மண்டை மேல மரமா வளர்த்து வச்சிருக்கேன் நிழல் கொடுக்க, உன்ன கூட வச்சி சுத்துற அளவு எல்லாம் நீ ஒன்னும் ஒசத்தி இல்லை ..என் கண் எதிர இருந்தா போதும் ..

"நான் எங்கேயும் வர மாட்டேன்...

"அடுத்த பக்கத்தை பாருங்க செல்லம் ..

"என் குழந்தைக்கு என் மனைவி மூலம் ஆபத்து இருப்பதால் அவள் குழந்தை பெத்து எடுக்கும் வரை தன் கண் எதிரே என் பாதுக்காப்பில் வைத்து கொள்ள அனுமதி வேண்டி மணு" என்று கோர்ட் மூலம் வாங்கிய நோட்டீஸ் உதடு துடித்தது..

"எப்புடி ?? இப்போ வந்துதான ஆகணும்.. நீ என்ன பண்ற, அடுத்த எட்டு மணிநேரத்துல தூத்துகுடியில நிற்கிற . நிற்கல.. கோர்ட் அவமதிப்பு அது இதுன்னு அத்தனையும் போட்டு தூக்கி உள்ள போட கூட தயங்க மாட்டேன் .. பிஞ்சு பாடி தாங்குமான்னு பார்த்துக்க... அவள் சேரில் தலையை பிடித்து கொண்டு அமர..

"டைவர்ஸ் பேப்பர் கையெழுத்து போட்டு தந்தா சமிட் பண்ண வசதியா இருக்கும் நல்லா உருட்டி கையெழுத்து போடு .. "என்று அவள் மீது வீச.. கண்களை துடைத்து கொண்டு கையெழுத்து போட்டு கொடுத்தவள்..

"ஓட ஓட விரட்டுறீங்கல்ல, ஒரு நாள் ஒரு நாள் ...

"ப்ச் அப்படி ஓரமா நின்னு சபதம் விடு .. நேரம் கிடைக்கும் போது பொறுமையா கேட்கிறேன் ..

தூத்துக்குடியில் சந்திப்போமா? என்று அவளை ஒரு சுற்று சுற்றி விட்டவன்.. சுவாதி நிலையாக நின்று தலை கிறங்க பார்க்கும் போது ஸ்ரீ கேட்டை கடந்து காரில் ஏறி போய் விட்டான்... 

அவள் வாழ்க்கையை விட்டு அவனை வெளியேற்ற வேண்டும் என்றால் , அது அவன் நினைத்தால் மட்டுமே முடியும்!! 

அவ்வளவு சீக்கிரமா அவன நல்லவன் லிஸ்ட்ல சேர்த்துடாதீங்க மச்சீஸ்...