பகலவன் 19

Pani19

பகலவன் 19

19 பகலவனின் பனிமலர் அவளே!!

தெருவில் நின்ற மருமகளை பார்த்த மகேந்திரன்

"நினைச்சேன் என்னைக்காவது ஒரு நாள் இந்த நிலைமை வரும்னு , ஆனா இவ்வளவு சீக்கிரம் வரும்னு நினைக்கல, இவன் கூட வாழ்றதுக்கு நீ வாழாவெட்டியா என் வீட்டுல இரும்மா, எல்லோருக்கும் போடுற சோத்துல ஒரு வாய் உனக்கு போட மாட்டேனா.. அவன் போன திசையை பார்த்து நின்றவளுக்கு..

" போங்கடா!! இந்த கூந்தல் வாழ்க்கையே வேண்டாம் எனக்கு, ஒத்தையா இருக்க தெரியும்" என்று நிமிர்வுதான் வந்தது..

"அப்படி என்ன தப்பா கேட்டேன்னு வெளிய போடின்னு விரட்டி விடுறான்.. தப்பு செஞ்சான் தப்புன்னு சொன்னேன், எவனாவது தங்கையை ஒரு பொறுக்கி தூக்கிட்டு போயிருக்கான்னு சொன்னா, இப்படி நிற்க முடியுமா ? பாசமே இல்லாத ஜடம் தனக்கு எது தேவை , விருப்பமோ? அதை மட்டும் எல்லாரும் பண்ணணும்னு நினைக்கிறது .. சைக்கோ போல பண்ண வைக்கிறது .. ச்சை போதும்டா சாமி , இவன் கூட கிடந்து மட்டை அடிப்பதற்கு ஆப்பக்கடை போட்டு பொழைச்சிக்கலாம்" என்று நினைத்து ..

"அது போகட்டும் மாமா ராதிகா விஷயம் என்ன ஆச்சி? பேசாம ஹயர் ஆபீஸர் கிட்ட போயி கம்ப்ளைன்ட் கொடுத்துடலாமா.. ஸ்டீபன் ஆங்கிள்கிட்ட சொன்னா அவருக்கு ஆந்திரா கமிஷனர் எல்லாம் தெரியும் , ஏதாவது உடனே ஸ்டெப் எடுப்பாங்க . உங்க மகனை நம்பிகிட்டு இருந்தோம்னு வச்சுக்கோங்க, எதுவும் ஆகறதுக்கு இல்ல.."

"இரும்மா இரும்மா பதறாத.. அதை சொல்றதுக்குதான் ஓடி வந்தேன் .. ராதிகா போன அரை மணி நேரத்துல எப்படி போனாளோ அதே மாதிரி பத்திரமா வீடு வந்து சேர்ந்துட்டா.."

"தேங்க் காட் ..எப்படி மாமா 

"தெரியலேயே , என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு கேட்டா எதுவுமே சொல்லாம ரூமை போய் பூட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கா ... நானும் அத்தையும் பலவிதமா கேட்டு பார்த்தாச்சு, யாரு உன்ன காப்பாத்தினா, எப்படி இவ்ளோ சீக்கிரத்துக்குள்ள உன்ன கண்டுபிடிச்சாங்கன்னு கேட்டா எல்லாத்துக்கும் அமைதியா உம்முன்னு இருக்கா.. நீ கேட்டா உன்கிட்ட ஏதாவது வாய் திறக்க வாய்ப்பிருக்கு சுவாதி .. "

"சுவாதிவந்து ராதிகாவின் அருகில் அமர்ந்தாள் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், கண்கள் கண்ணீரை உதிர்த்துக் கொண்டிருந்தது ... 

எதுவும் தவறாக நடந்து இருக்குமோ? அரை மணி நேரம் கூட ஆகவில்லையே, போன பத்தாவது நிமிஷம் நான் நன்றாக இருக்கிறேன் வந்து விடுவேன் என்று போன் போட்டாளே.. ஏன் இவ்வளவு கலக்கமாக இருக்கிறாள் என்று தாய்க்கும், தகப்பனுக்கும் உலகில் நடக்கும் கொடூர சம்பவங்களை பார்த்து சற்று பீதியாகத்தான் இருந்தது..

 "மாமா நீங்க வெளியே போங்க நான் என்ன ஏதுன்னு கேட்கிறேன் அவர்களை வெளியே அனுப்பி வைத்துவிட்டு.. கதவை மூடிவிட்டு ராதிகாவின் கன்னத்தை தாங்கியவள்

என்னடா ஆச்சு?? என்று கேட்கவும் அவள் வயிற்றை கட்டிக்கொண்டு ஓ என்று அழ ஆரம்பித்தாள்.. எதுவும் தப்பா நடந்துருச்சா? எது நடந்தாலும் பரவாயில்லைடா உனக்கு நாங்க இருக்கோம் பயப்படாம சொல்லு ..

"ஒருத்தர் நகம் கூட என் மேல படல அண்ணி..

"அப்ப யாருடா உன்னை காப்பாத்துனது.. அவள் மறுப்பாக தலையசைத்து சுவாதியின் மடியில் படுத்துக்கொண்டாள் ...

"அவள் பத்திரமாக வந்ததே போதும் .. இனி மானங்கெட்டு ஸ்ரீயோடு ,என் கூட வாழு என போக போவது இல்லை,,? அவளுக்கும் கொஞ்சமேணும் சுயமரியாதை இருக்குமே ரொம்ப சீண்டி விட்டான்.தாய் இல்லாமல் ,,தகப்பன் இல்லாமல் வாழ முடிந்தவளுக்கு கணவன் இல்லாமலும் வாழ முடியும்.. உன் குத்தல் பேச்சு சைக்கோதனங்களை பொறுத்து வாழ வேண்டிய தேவை இல்லை..தன் மீது காதலும் இல்லை, ஆசையும் இல்லை பிறகு எதுக்கு இப்படி ஒரு வாழ்க்கை.. இனியும் அவனோடு இருக்க நினைத்தால் .. அவன் சொன்னது போல இந்த பந்தம் பிள்ளை பெக்கத்தான் என்றாகி போகும்... காலையில் மாமா அத்தையும் சொல்லிவிட்டு கிளம்பி விட வேண்டும்" என மணியை பார்த்தாள் , இரவு பத்து தாண்டியது 

"எந்த பாரில் இப்போது போதையில் சரிந்து கிடக்கிறானோ?பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு அடமெண்ட் ஆள பார்த்தது இல்லை" நினைவெல்லாம் நீயே போல ஸ்ரீராம்தான் அவள் தூக்கத்தை கலைத்தான் ..அவன் வேண்டாம் என்று ஒரு மனம் வாதிட.. இன்னொரு மனம் பாவா பாவா என துடித்தது அவள் இதயம் படபடத்தது தடவி கொண்டு அறையில் நடந்தாள்... 

காலையில் கண் முழிக்கும் போது வீட்டுக்குள் திபுதிபுவென போலீசார் நுழைய.. சுவாதிக்கு அய்யோ குடிச்சிட்டு யாரையும் எதுவும் பண்ணிட்டானா கடவுளே ,அவனை விட்டு போவேன் என்று நினைத்தேனே தவிர ,அவருக்கு எதுவும் ஆகணும் என்று நினைக்கவில்லை...

"சார் என்ன வேணும் ?எதுக்கு இப்படி அனுமதி இல்லாம உள்ள வர்றீங்க, கதவை ஏன் சார் அடைக்கிறீங்க?" என்று மகேந்திரன் ஓடி போய் கதவை திறக்க போக ,தயா கதவை மறைத்து நின்றான்... 

"எப்பா தம்பி அவனுக்கும் உனக்கும் பிரச்சனை, இதுல வீட்டுல உள்ள பொண்ணுங்கள வச்சி விளையாடாத, அவன் எனக்கு பையன் இல்லை தலைமுழுகிட்டேன், தயவு செஞ்சு வெளிய போப்பா ஊரே கைகொட்டி சிரிக்கிற மாதிரி பண்ணாத" என்று கெஞ்சாத குறையாக நிற்க .. 

"யோவ் தள்ளி போயிடு , உன் மகன் மேல கொலை கடுப்புல இருக்கேன்.. பெரிய புடுங்கியா அவன், இவ காலேஜ் போன இடத்தில பைக்குள்ள வச்சி கஞ்சா விற்கிறதா எனக்கு கம்ப்ளைன்ட் வந்துச்சு அது தெரிஞ்சு அவளை போய் அரெஸ்ட் பண்ணுனா, உன் மகன் துப்பாக்கிய காட்டி என்ன மெரட்டி இவள தூக்கிட்டு வந்துட்டான்.. அப்போ போலீஸூன்னு நாங்க எதுக்குய்யா இருக்கோம்..

ஏது போதை மருந்தா?? .. 

"ஆமா !!எனக்கு அப்பவே உன் மகன் மேல சந்தேகம் உண்டு ,. இவன் ஏதோ அண்டர்கிரவுண்ட் தாதா வேலை பாக்குறான்னு, இதோ இப்போ தெரிஞ்சிருச்சு இல்ல, கஞ்சா ,ஆயுதம் துப்பாக்கி வியாபாரம் ..இது மட்டும்தானா இல்ல பொண்ணுங்கள வியாபாரம் பண்ற மாமா தொழிலும் பார்க்கிறானா?" என்றதும் மகேந்திரன் தயாவின் சட்டையை கொத்தாக பிடித்து, கோபத்தில் நரநரக்க ..

"அது சரி நீ மிலிட்டரியிலியிருந்து வந்தவன், ஒருவேளை நாட்டையும் கூறு போட்டு அப்பனும் மகனும் வித்திடலாம்னு பிளான் போடுறீங்களோ? கான்ஸ்டபில்ஸ் வீடு ஃபுல்லா தேடுங்க, குறிப்பாக ஸ்ரீயோட ரூம்ல , என்ன கிடைச்சாலும் கொண்டு வந்து இங்க கொட்டுங்க.. எண்ணி 24 மணி நேரத்துக்குள்ள அந்த ஸ்ரீராம பிடிச்சு உள்ள தூக்கிப்போட்டு , வாழ்க்கை முழுக்க வெளிய வராத மாதிரி ஆக்கல நான் தயா இல்லை.. என் மேலேயே கை வைக்கிறானா, இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வீட்டு பொண்ணுங்க அத்தனை பேர் சேலையையும் உருவி, இந்த நடுத்தெருவில நாய் மாதிரி இழுத்துட்டு போகல , போவேன்.. அப்பத்தான் என்ன பத்தி அவனுக்கு தெரியும் அடிபட்ட பாம்பாக சீறினான் தயா ... 

"அண்ணி பயமா இருக்கு ..

"என்னடா இவன் என்னவோ சொல்றான், கஞ்சா அது இதுன்னு.. நேத்து என்ன நடந்து ராதி "

"அய்யோ இல்லை அண்ணி, நேத்து காலேஜ் போகும் போது இவன்தான் வழி மறிச்சி என் பைக்குள்ள ஏதோ பாக்கெட் வச்சான்... அப்புறம் அப்பாவுக்கு போன் போட்டு ,உங்க மகள நான்தான் பிடிச்சு வச்சிருக்கேன், ஸ்ரீயை வர சொல்லுன்னு சொன்னான் .. அடுத்த ஐஞ்சு நிமிசத்துல அண்ணன் வந்தார்... அவனை பத்தி தெரியாதா இந்த நாயை தூக்கி போட்டு சமுட்டிட்டான் .. என் தங்கச்சி மேல கை வைப்பியான்னு சொல்லி சொல்லி அடிச்சார் அண்ணி.. கடைசியா என் தலையை தடவி கொடுத்தான் பாருங்க " அவன நாம சரியா புரிஞ்சிக்கலையோன்னு தோணுது அண்ணி... சுவாதிக்கு யோசிக்க நேரம் கொடுக்காது .. 

"சார் துப்பாக்கி , கஞ்சா, வெடிகுண்டு, இது எல்லாம் ஸ்ரீராம் ரூம்ல இருந்தது என்று வந்து கொட்ட ... 

"ஆண்டவா !! என்று மகேந்திரன் மூச்சடைத்து நெஞ்சை பிடிக்க

மாமாஆஆஆ, அப்பா ,என்னங்க...

"என் தலையில மண்ணள்ளி போட்டுட்டானே அய்யோ! இப்ப நான் எப்படி வெளியே தலை காட்டுவேன்" என்று நெஞ்சில் அடித்து கொண்டு அழ...

"சோ முடிஞ்சு , தங்கச்சியை வச்சி காலேஜ் பசங்க மத்தியில கொக்கைன் வித்திருக்கான்..ஹார்பர் நடுகடல்ல வச்சி துப்பாக்கி சேலீங், இது போக தீவிரவாதிங்க கூட வெடிமருந்து டீலிங் , போதுமா உங்க பையனை பத்திய ரகசியம் .. "

"அவன் தங்கச்சி, பொண்டாட்டி இரண்டு பேரையும் தரவா செக் பண்ணுங்க, ஒட்டுதுணி கூட உடம்புல இல்லாம விட்டு பாருங்க" என்று ஒரு பெண் கான்ஸ்டபிளிடம் தலையாட்ட..

"அய்யோ!! அய்யோ!! என் பிள்ளைங்க மேல கை வைக்காதீங்க , அவன் செஞ்ச தப்புக்கு உங்க கால்ல நான் விழுறேன் தம்பி, என்ன வேணும்னா இழுத்துட்டு போங்க .. அதுக வாழ வேண்டிய புள்ளைங்க தப்பு பண்ணாதீங்க தம்பி"..அவரை ஓங்கி தள்ளி விட்ட தயா.. 

"ம்ம் இங்கேயே செக் பண்ணுங்க , கமான் ஹூயிக் என்று சுவாதி அருகில் வந்தவன்..

"என்னவோ உன் மேல கை வச்சதுக்கு சாவடி அடிச்சான் ,. பொட்ட !!போய் ஒளிஞ்சிகிட்டான்.. இப்ப வர சொல்லுடி.. உங்கள விட்டுடுறேன் .. எனக்கு தேவை ஸ்ரீதான் அவன இழுத்துட்டு போயிட்டே இருப்பேன்.. போனை போடு , இல்லை இத்தனை பேர் முன்னாடி நீங்க ரெண்டு பேரும் ___மணமா நிற்க போறதை யாராலும் தடுக்க முடியாது ... என்று ராதிகா ஷாலை பிடித்து உருவ போக , சட்டென்று சுவாதி மறைத்தார் போல நின்று கொண்டு 

"நான் அவருக்கு போன் போடுறேன் ப்ளீஸ் அதுவரை எதுவும் பண்ணாதீங்க..

"ம்ம் ஓகே , சீக்கிரம் தாலி அறுக்க ரெடியா இரு .. இல்ல, என்கூட ஒருநாள் படு , உன் மொத்த குடும்பத்தையும், உன் புருஷனையும் சேர்த்து விட்டுடுறேன்.. வர்றியா மேல ரூமுக்கு போகலாம் பல்லை கடிச்சிகிட்டு உன் புருஷனை நினைச்சுக்க நான் அலுங்காம ஏறிட்டு போயிடுறேன், உனக்கும் அசிங்கமா தோணாது, என்ன ரெடியா?" என்று அவள் காது கூச பேச ... சுவாதி அருவருத்து போய், ராதிகா காதை பொத்தி கொண்டாள்...

"அப்ப வர மாட்ட , பத்தினி வேஷம் போட்டா ஊரே உங்க ரெண்டு பேரையும் ஒட்டுதுணி இல்லாம பார்க்க போகுது எனக்கு என்ன?" .. என்று இருவர் தலை முடியையும் கொத்தாக இழுத்து கொண்டு வெளியே வர.. ஊரே நின்று வேடிக்கை பார்த்தது ... வெளியே சீறி வந்து கமிஷனர் வண்டி நிற்க தயா உடலை வளைத்து ..

"சார் .. என சல்யூட் அடித்தான் 

"இங்க என்னைய்யா பண்ணிட்டு இருக்க ?யாருய்யா இவர் வீட்டை சர்ச் பண்ண வாரண்ட் கொடுத்தது .. 

"சார் ஸ்ரீராம் சட்டத்துக்கு புறம்பாக , ஆயுதம் போதை மருந்து வச்சிருக்கிறதா.. கம்ப்ளைன்ட் வந்தது சார் அதான் செக்கிங் பண்ணினேன்... "

"கிடைச்சுதா 

"ஆமா சார் நிறையா இருந்தது ..

"ரொம்ப சந்தோஷம் !! உனக்கு எந்த ஊர் பிடிக்கும் சொல்லு.."

"சார் .. 

"உன்ன எல்லாம் தண்ணீ இல்லாத காட்டுக்கு மாத்தி விடணும், போலீஸ் டிரெயினிங் போனியா இல்லை அங்க போய் பிச்சை எடுத்தியா ..உன்னால ஒட்டுமொத்த டிபார்மெண்டுக்கும் கெட்ட பேர் ... ச்சை தள்ளுய்யா "என்று கமிஷனர் அவனை பிடித்து தள்ளியவர்..

"சாரி மேடம், தப்பு நடந்துருச்சு.. தப்பா நினைக்காதீங்க, சார் வந்தா நானே வந்து உங்க கிட்ட பேசினதா சொல்லிடூங்க.. சுவாதி பே என முழிக்க 

"வீட்டுல கலைச்சு போட்டது அத்தனையும் அதுஅது இடத்தில வைக்கல, அத்தனை பேருக்கும் சஸ்பெண்ட் ஆர்டர் வரும் .ம்ம் "என்ற மேலதிகாரி சத்தத்தில் அடுத்த ஐஞ்சு நிமிடத்தில் வீடு பழைய நிலைக்கு வர... யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை இவ்வளவு பெரிய மனிதர் பணிவாக வந்து.

" சாரி மகேந்திரன் என பல முறை கேட்க.. 

"எல்லாம் நான் பெத்த தருதலையால வந்தது பரவாயில்லை சார்.. இன்னும் உங்கள மாதிரி உண்மைக்கா போராடுற ஆபீசர் இருகிறது பார்க்கும் போது , சந்தோஷம்.. அவன் தப்பு பண்ணி இருந்தா சட்டப்படி தண்டனை கொடுங்க சார்..

"ஹாஹா முதல்ல டீவி போட்டு பாருங்க சார் வர்றேன்" என்று அத்தனை பேரும் காலி பண்ண..பக்கத்து வீட்டு நபர் ஓடி வந்து மூச்சிறைக்க..

"எக்கா நம்ம ஸ்ரீ ஸ்ரீ .. 

"அய்யோ என்னாச்சி ??"

"டிவியை போட்டு பாருக்கா நம்பவே முடியல" ... என்றதும் ராதிகா ஓடி போய் டிவியை ஆன் பண்ண..

வெகுநாட்களாக ஆந்திராவை கைக்குள் வைத்திருந்த போதை மாஃப்பியா கும்பல் மொத்தமாக பிடிபட்டது .. பள்ளி, கல்லூரி மாணவர்களை திட்டமிட்டு போதைக்கு அடிமை ஆக்கி .. ஆட் கடத்தல் செய்து அவர்களை விபச்சாரம் மற்றும் உடல் உறுப்புகள் நீக்கம் செய்யும் கும்பல் இன்று ஆந்திர காட்டுக்குள் சுற்று வளைத்து பிடிக்கப்பட்டனர்..

"ச்சை அதை ஆப் பண்ணி போடும்மா, நாம இருக்கிற நிலையில இதை பார்த்து , என்ன நடக்க போகுது.. எல்லாம் அவன்தான் பண்ணி இருப்பான்னு , இப்ப முக்கிய குற்றவாளி போட்டாவுல , அந்த நாய் போட்டோ வரும் , இருக்கிற குறை உயிரும் போக போகுது...

"இதுவரை கண்டுபிடிக்க முடியாத இந்த கூட்டத்தை சில வருடத்தில், தனிப்படை மூலம் கண்டறிந்து ஒட்டுமொத்த நாட்டையும் திருப்பி பார்க்க வைத்தவர்...

ஸ்ரீராம், ஐஏஎஸ் .. 

ஸ்பெசல் அன்டன்கிரவுண்ட் ஆபிசர், அவர்களை நாடே கொண்டாடுகிறது ...

 ஐஏஎஸ்ஐ சிவில் சர்வீஸ் எக்ஸாம் மூலம் முதல் முயற்சியில் வெற்றி பெற்று வந்தவர் என்றும்.. போதை மற்றும் ஆட்கடத்தல் பிரிவில் ..நான்கு ஆண்டுகளாக தன் அடையாளத்தை மறைத்து சாதாரண ஆட்கள் மற்றும் போதை கடத்தல் கும்பலோடு உயிரை பணயம் வைத்து பணி புரிந்திருக்கறார் ... 

"ம்மா அண்ணன் கலெக்டரா??

"சும்மா இருடி நானும் உன்ன மாதிரி தான கேட்டு இருக்கேன் ..

"நாளை முதல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரா பணி நியமனம் செய்யபடுகிறார்.. அவருக்கு இந்திய அரசாங்கத்தின் சார்பில் பணி நியமனம் வழங்கப்படுகிறது .. சென்னையிலிருந்து இதோ அந்த காணொளி உங்களுக்காக.. என திரை பெரிதாக்கி ஸ்ரீயை காட்ட ..

ஸ்ரீராம் 

அதே காட்டான் லுக்தான்.. சட்டையை முறுக்கி கொண்டு மேலே ஏறி போய் பணி நியமனத்தை வாங்கி கொண்டு கீழே வரும் போதே இன் பண்ணிய சட்டையை கலைத்து வெளியே இழுத்து விட்டுகொண்டு போனான்.. 

அவன் ஒவ்வொரு செயல்பாடும் திரையில் ஓட தாங்கள் காண்பது கனவா நினைவா என தெரியாது அனைவரும் நெஞ்சில் கைவைத்து நின்றனர்.. 

சுவாதிக்கு மட்டும் ஏதோ ஒரு குரல் காதை அடைத்தது 

பாவா ..

"ம்ம் சொல்லுடி 

எனக்கு ஒரு ஆசை பாவா?..

"என்ன ?

"நீங்க எனக்காக ஐஏஎஸ் ஆகுறீங்களா? வேண்டாம் ஐபிஎஸ் ஆகுங்க..

"ப்ச் ஏதாவது ஒன்னு சொல்லுடி "

"ஏன் இரண்டும் ஆக முடியாதா பாவா..

"ஆகலாமே ஐபிஎஸ் முடிச்சி ஐஏஎஸ் பாஸ் ஆகலாம் ஏன் இப்ப டவுட் .."

அப்படி படிக்கலாமா 

ம்ம் ஆனா ஒரே நேரத்தில இரண்டும் தர மாட்டாங்க ஐபிஎஸ் பாஸ் பண்ணி ஐஏஎஸ் பாஸானா கலெக்டர் ஆகலாம்.. மறுபடி ஐபிஎஸ் ஆக முடியாது   

"இல்லை நேத்து நியூஸ் பார்த்தேன் .. என்ன மாதிரி பணக்கார வீட்டு பொண்ணுங்களை போதைக்கு அடிமையாக்கி விற்குறாங்களாம் , யாராலையும் அவன்கள கண்டே பிடிக்க முடியலையாம், அதான் நீங்க பெரிய போஸ்ட் வந்து கண்டுபிடிச்சா சூப்பரா இருக்கும்ல உங்க போட்டோவை போட்டு ப்ளஷ் பண்ணி நியூஸ் வந்தா செமயா இருக்கும், அதான் கேட்டேன்   

"ஏன் நீ படிக்கிறது.. "

"எனக்கு அதெல்லாம் வராதே பாவா, அதான் எனக்கும் சேர்த்து, இரண்டும் நீங்களே பண்ணுங்க உங்களுக்கு ஐபிஎஸ் , எனக்கு ஐஏஎஸ் எப்படி ?என்று கண்சிமிட்ட..

"அப்ப படிச்சே ஆகணும்ங்கிற..

"ம்ம்ம் 

"ப்ச் சரி விடு இத்தனை நாள் என் அப்பனுக்காக படிச்சேன்,, இப்ப என் ஸ்வீட்டிக்காக முடிக்க மாட்டேனா. முடிச்சி இந்த கூட்டத்தை மொத்தமா பிடிக்கிறேன், இது என் ஸீவிட்டிக்காக மட்டும் சரியா ."

"தேங்க்ஸ் பாவா" என்று இச் வைத்தாள்.. 

அவள் விளையாட்டாக கூறிய கனவுகளுக்கு உயிர் கொடுக்க நினைத்தவன், தன் காதலுக்கு உயிர் கொடுக்க நினைத்ததில் என்ன தவறு இருக்கிறது..