பகலவன்17

Pani17

பகலவன்17

17 பகலவனின் பனிமலர் அவளோ??

ஸ்ரீ நேரே வந்து அவன் தங்கும் இடத்தில் வண்டியை விட்டான் .. வினய் ராப்பிச்சைக்காரன் போல திண்ணையில் அமர்ந்து ஒத்தையாக பேசி கொண்டிருக்க 

"என்ன மச்சான் இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு நினைச்சேன் இப்பவே பைத்தியம் ஆகிட்ட போல, "

"ஏன் சொல்ல மாட்ட , எங்கடா போன? நான் பிச்சைக்காரன் போல வீட்டு வாசல்ல உட்கார்ந்து இருக்கேன்.. வாம்மா சுவாதி .."

"ஹான் அண்ணா" இங்க எப்படி வாழ ஒரே அறை இவன நம்பிவா நம்பி வான்னு ஏலம் விட்டு அழைத்தது வைத்து , சரி பய ஒரு குட்டி வீடாவது வாடகைக்கு வாங்கி வைப்பான்னு பார்த்தா, அதே அழுக்கு பேச்சுலர் ரூம் ... 

"மச்சான் சுவாதி கூட தனிக்குடித்தனம் போக போறீயா ? உன் பொருள் எல்லாம் எடுக்க வந்தியா .. வினய் நண்பன் பின்னாடி போக ..

"ஆமா மச்சான் இந்தா உன் பொருள் வேற எங்கேயாவது ரூம் பார்த்து தங்கிக்க, நானும் ஸவீட்டியும் இங்கதான் இருக்க போறோம்..

"ஏதே ?டேய் உன்ன நம்பி என் வீட்டை விட்டு வீராப்பா வந்துட்டேன்டா இப்படி கழட்டி விட்டா எங்கடா போவேன்.."

"ப்ச் மச்சான் புதுசா கல்யாணம் முடிஞ்ச ஜோடி புரிஞ்சிக்க, வெட்டியா நின்னு பேசி எங்க டைம்மை வேஸ்ட் பண்ணாத.. இன்னையிலிருந்நு இது ஸ்ரீ வீடு

"அதுக்கு ஓனர் விடணுமேடா, நானே திருப்பதி போனவன் வீட்டுப் பூட்டை திறந்து உட்கார்ந்தேன்.. வந்தா கழுத்தை பிடிச்சி வெளிய தள்ளிடுவான்..

"ஸ்ரீயை தள்ளினா கை இருக்காதுன்னு தெரியும் நீ என்ன பண்ற, தங்கச்சிக்கு என்னென்ன சீர்வரிசை பண்ணணும்னு நினைக்கிறியோ , அதை எல்லாம் வாங்கி கொண்டு ராத்திரிக்குள்ள வச்சிடு..

"எனக்கு ஏதுடா மச்சான் தங்கச்சி? தலையை சொரிந்தான் 

"நான் யாரு.

"ஸ்ரீ 

"என்ன எப்படி கூப்பிடுவ

"மச்சான்னு..

"அப்ப என்,பொணடாட்டி யார்??

"தங்..அடேய் சம்பள பணம் பாக்கெட்டுல இருக்கிறதை பார்த்துட்டதான..

"ம்ம் அதேதான் போ போ 

"இதெல்லாம் நியாயமே இல்லை மச்சான், நைட் வேலைக்கு போயிட்டு வந்தவன படுக்க விடாம விரட்டினா கூட பரவாயில்லை, காசை காலி பண்ண சொல்றியே .. 

"இதுக்கே அழுதா எப்படி மச்சான, இன்னும் உன் தங்கச்சிக்கு தீபாவளி சீரு, பொங்கல் சீரு, 

"நீ மூடு என்கிட்ட இருக்கிற இரண்டு கிட்டினியும் உன் கண்ணை உறுத்துது போல ..

"தங்கச்சிக்காக அதை விக்க மாட்டியா?

"திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்குன்னு வாச்சிச்சாம் கல்யாணம்ங்கிற மாதிரி, உன் அலப்பறை ரொம்ப ஜாஸ்தியாதான்டா இருக்கு , இதுக்காவே ஒரு கல்யாணத்தை பண்ணி, உன் கண் எதிரே பஸ்ட் நைட் பண்ணல, ச்சை இவன் கூட சேர்ந்து நமக்கும் வாய் சொன்ன பேச்சு கேட்க மாட்டைக்குது .. "புலம்பி கொண்டே தன் துணிகளை பொறுக்கி கொண்டு வெளியே போனவன் நண்பனுக்கு வெளியே வா என கண்களை காட்டி விட்டு போனான்... சுவாதி அந்த ஒத்த அறையை தன் அரண்மனையாக கருதி காலடி எடுத்து வைத்தாள்... 

"என்னடா பண்ணிட்டு இருக்க , உன்ன நம்பி வந்த பொண்ணு, நீ காதலிச்ச பொண்ணு, உன் உலகமா இருக்கிற பொண்ண, ஏன்டா இப்படி கஷ்டப்படுத்திற.. பாரு நீ போதும்னு உன் பின்னாடி வந்திருக்கு, இந்த ரூம்ல கொண்டு இருக்க வைக்கிற , அவ வீட்டு நாய்க்குட்டி கூட இதை விட நல்ல இடத்தில இருக்கும்டா.. உன் ஸ்வீட்டியை தேடுறேன்னு, சுவாதியையும் இழக்க போற ..அவ ஸ்வீட்டி முடிஞ்சு போச்சி.. அதுக்கு பிறகு அவ வாழ்க்கை எங்கேயோ போய், மறுபடி சாவோட போராடி புதையல் போல கிடைச்சிருக்கா , என் ஸீவிட்டி வேணும்னு ,பிழைச்சி வந்தவள உருட்டி விளையாடாத.. இதுவரை எந்த விஷயத்துக்கும் உன்கிட்ட நான் சொன்னது இல்லை ..இத்தனை நாள் உன் லைப்பை உன் இஷ்டம் போல வாழ்ந்த, ஆனா நீ இப்போ விளையாடிட்டு இருக்கிறது அவ லைப்ல.. ஏற்கனவே இரண்டு தடவை மறந்து போயிருக்கா.. நீ பண்ற கிறுக்குத்தனத்தில மறுபடி எதுவும் ஆகி போனா , பிறகு அய்யோ அம்மான்னு கதறினாலும் எதுவும் ஆகாது ஸ்ரீ.. நான் சொல்றது கேட்குதா.. ஸ்வீட்டி இதுதான் என சற்று நாளைக்கு முன்தான் வினய்யுக்கு தெரியும் பாவம்டா செத்து போன அவள நினைச்சு இவள தொலைக்காத என நண்பன் நோளை தட்ட அவ எங்க செத்தா இந்தா இருக்கா என சுவாதியை காட்டிட நண்பனை முறைக்க மட்டும் தான் வினய்யால் முடிந்தது 

"என்ன மச்சான் சொன்ன??" என்று ஸ்ரீ ஹெட்போனை உருவி அவன் கையில் கொடுக்க...

"நீ இப்படியே எவன் சொல்றதையும் கேட்காம பண்ணிட்டு திரிடா , ஒருநாள் ஒருத்தரும் இல்லாம நிற்க போற.."

"அப்புறம் 

"ப்ச் உங்கிட்ட போய் சொன்னேன் பாரு , ஸவீட்டியும் இல்லாம சுவாதியும் இல்லாம, நீ அலையதான்டா போற.. 

"அப்படி ஆகும் போது சொல்லி அனுப்புறேன் வா, ரெண்டு பேரும் சேர்ந்து சரக்கடிச்சி லவ் பெயிலியர் கொண்டாடலாம் ," ஸ்ரீ எப்போதும் எதற்கும் இப்படி அலட்டாதவன்தான்.. ஆனால் ஸ்வீட்டி என்று வந்தால் மட்டும் உருகுவான்.. இத்தனை வருடம் கழிச்சி அவள் கிடைத்து வாழ்க்கை அமைத்து, நிம்மதியாக இருக்காது, ஏன் அதை அவனே சிக்கலாக்குறான் , அவனுக்கு தேவை காதல்!! இந்த சுவாதி கொடுக்க தயார்.. பின்ன என்னதான்டா வேணும் ? என்று சத்தியமாக வினய்க்கே புரியவில்லை.. ஆனால் ஆழமாக அடி வாங்க போகிறான் என்று மட்டும் தெரிந்தது.. 

"இந்தா மச்சான் இதுல நாலாயிரம் ரூபாய் இருக்கு அவளுக்கு என்ன வேணும்னு பார்த்து வாங்கி கொடு , உனக்கு வேலை கிடைக்கிற வரை நான் என்கிட்ட இருக்கிறதை தர்றேன், நல்லா இருப்ப அந்த பொண்ண கண் கலங்க வச்சிடாத... பாவமாக முழிக்கும் சுவாதியை பார்த்து இரக்கம் எல்லோருக்கும் தானாக சுரந்தது.. 

"இதுதான் என் மச்சான் .. பார்ல கணக்கு முடிக்க காசு இல்லைன்னு இரண்டு நாளா அந்த பக்கம் போகாம இருந்தேன்.. நண்பன் அவசர தேவை உணர்ந்து காசு தந்த பார்த்தியா? நீதான்டா உயிர் நண்பன் என்று வினய் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஸ்ரீ பைக்கை தூக்கி கொண்டு போக.. 

"டேய்இஇஇஇஇஇ மச்சான்இஇஇஇஇ காசும் போச்சா "என திரும்ப, சுவாதி கண்ணில் நீர் கட்டி போய் நின்றாள்.. 

"சரியாகிடுவான்மா கொஞ்சம் விளையாட்டுதனம் ஓவர் ..." நண்பனுக்கு பரிந்து கூட பேச முடியாது தலையை சொரிந்தான்.. 

தொலைத்தவனுக்கே தேடுதல் அருமை தெரியும் !!

இழந்தவனுக்கே பிரிவின் அருமை தெரியும் !!

எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை தெரியும்!!

யாருமில்லாத நடுரோட்டில் ஸ்ரீ பைக்கை விட்டுவிட்டு அதன் மீது வானத்தை பார்த்து படுத்து கிடந்தான்..  

"பொண்டாட்டி "என போன் அலற, அதை எடுத்து பார்த்துவிட்டு கட் பண்ணி வைத்து விட்டான்...

பின்னிரவு வேளை ஸ்ரீ வந்து கதவை தட்ட, கதவு திறந்து கிடந்தது..மெல்ல உள்ளே நுழைய வீடு பளிச்சென்று சாம்ராணி வாசம், ஒரே அறையை வாழும் இடமாக அதுஅது அந்த இடத்தில் இருந்தது ... அவன் துணி , அவள் துணி எல்லாம் துவைத்து காய போட்டு சமையலும் முடித்து வைத்து விட்டு நேற்று இரவு நடந்த கூடலில் வலித்த உடலை சற்று படுக்கையில் சாய்த்துவிட , அப்படியே தூங்கி போனாள்..ஸ்ரீ அடி வைக்கும் சத்தம் வராது , அவள் அருகே படுக்கை பக்கம் குத்தவைத்து உட்கார்ந்து அவள் கையை பிடித்து உள்ளங்கை பார்த்தான்..

"பாவா இப்படிதான் துணி துவைக்கணுமா" ஹாஸ்டல் அறை வரும் போகும் உரிமைக்காரி அவன் ஸவீட்டியே..

"ஆமாடி இப்படி உதறி போட்டா பெர்பெக்ட்" தன் துணியை துவைத்து காய போட்டவன் ,பின்னாடி சுற்றினாள்..

"ஏன் இது எல்லாம் உனக்கு தெரியாதா 

"அதுக்கு தான் ஆள் இருக்கே பாவா.

"சாப்பிடுறது மட்டும் தான் உன் வேல போல..

"ம்ம் அதுக்கும் கேர் டேக்கர் இருக்காங்க பாவா அள்ளி தருவாங்க .. என்று கட்டிலில் ஆடி கொண்டு அமர்ந்தவளா இவள் ..

இந்த ஏழு வருட சாதனையாக இந்த உலகம் மாற்றியது அவள் அழகிய சிரிப்பை ,, பெண் என்று சமுதாயம் போடும் சங்கிலியை அவளுக்கும் பூட்டி, அவள் விருப்பம் , சிரிப்பு மறந்து தன் வாழ்வை தொலைத்து இப்போது எதுவானாலும் பரவாயில்லை வாழ்கிறேன் என தன் வாழ்க்கையை வாழ முடியாது தடுமாறி நிற்கிறாள், உள்ளங்கை மரத்து போனவள் விரலை நீவி இதழில் வைத்து உரசினான் .. 

"உன் கூட்டை உடைச்சிட்டு வெளிய வா, வந்து ஆகணும் , அந்த வீருக்காக சாவு வரை போராட தெரிஞ்சது.. ஏன் எனக்காக போராட முடியல .. என் ஸ்வீட்டிக்கு என்ன தவிர எதுவும் முக்கியத்துவம் இல்லை.. ஆனா ஸ்வாதிக்கு அப்படி இல்லேயே எனக்காக முழுக்காதலை நான் உங்கிட்ட தேடுறதுல என்ன தப்பு இருக்கு .. எனக்கு வேணும் நீ கொடுத்தே ஆகணும் .. தா இல்லை தர வைப்பேன் .. ஏழு வருசம் உன்ன இதயதத்தில சுமந்து மூச்சடைச்சு போன எனக்கு, இந்த சொச்ச காதல் போதாது .. நீ நீயா வேணும்னு ஆசைப்படுறதுல என்னடி தப்பு ..

இதயத்தில் ஒரு பகுதி அவனுக்கு வேண்டாம் அவள் இதயம் மொத்தமும் அவனுக்கு வேணும் பேராசைக்காரன்..

பேராசை பெரும் நஷ்டம் என்று யார் கூற?