தெள்ளழகே-13

தெள்ளழகே!-13
தருணிகா கோவிலுக்குள் வரும்போதே கிருஷ்ணனையும் ராதாவையும் பார்த்துவிட்டாள்.
கிருஷ்ணனின் பார்வை முழுவதும் ராதா மீதும் குழந்தையின் மீதும் தான் இருந்தது.
பூங்கோதையின் சொந்தங்களும் நிறையபேர் வந்திருக்க அவர்கள் தருணிகாவைக் கண்டதும் இவள் சிவலிங்கம் மகள்தானே. கிருஷண்னுக்கு இவளைத்தானே பேசிமுடிச்சிருக்காங்க.அப்படியே ராதா ஜாடையிலதான் இருக்கா. ராதாமாதிரியே முடி நீளமாத்தான் இருக்கு. என்ன ராதா பட்டணத்தில் படிச்ச பதவிசானா பொண்ணு. அவள் ஆளும் நல்ல கலருல.இவ ராதா அளவுக்கு இல்லைன்னாலும் அவளமாதிரியே இருக்கா. அதுதான் பூங்கோதை இவளைப் பார்த்திருப்பா போல”என்று பேசிக்கொண்டே வந்தனர்.
அதைக்கேட்டதும் தருணிகாவுக்கு பொறாமை தானாக வந்தது. கிருஷ்ணனையே கொஞ்சம் கோபத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஏன் கோபம் வருகிறதென்றே தெரியவில்லை.ராதாவை அழகென்று சொன்னதாலா? இல்லை ராதாவைபோன்ற அழகியையே விவாகரத்து பண்ணிவிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாங்களே என்னவா இருக்கும்? அதுவும் நம்மளைவிட ராதா பெரும் பணக்காரியாச்சே?”என்று மனது அலைபாய அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்குமே கல்யாணம் பேசிமுடிச்சாச்சு. நிச்சயம் வேண்டாம் ஒரேடியாகக் கல்யாணத்தை வைச்சிடலாம்னு ஆவுடையப்பன் பேசி அவளது அப்பாவை சம்மதிக்கவைத்து எல்லோமே முடிவாகிவிட்டது.
இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் எனும்போது நிறைய யோசிக்கிறாள்.
அடுத்து தீபாரதனைத் தட்டு வரலும் எல்லோரும் கண்களைத் திறந்து ஆர்த்தியைத் தொட்டுக் கண்களில் ஒத்தி சாமியை மீண்டும் கும்பிடுத்திரும்பும் போதுதான் ராதா கிருஷ்ணனைப் பார்த்தாள்.
அவளது கண்களில் எந்த அதிர்வும் இல்லை அவனைப் பார்த்தும் எந்த உணர்வும் இல்லை.அப்படியே திரும்பி தனது மகளின் கையைத் தூக்கிக் கும்பிடச்சொன்னவள் அமைதியாக நின்றிருந்தாள்.
அதற்குள் பூங்கோதையும் நாகேஷ்வரியும் தாருணிகா “இங்கேவா” என்று சத்தமாக அழைத்து அவர்கள் பக்கமாக அவளை நிற்கவைத்தனர்.
தருணிகாவிற்கு ஒருமாதிரி நெருடலாகவும் கூச்சமாகவும் இருந்தது.
ஆனால் பூங்கோதை அவளைப்பிடித்து கிருஷ்ணனின் அருகில் நிற்கவைத்தவர் ”சாமி இவங்க இரண்டு பேருக்கும் அர்ச்சனை செய்யுங்க. இவதான் என் வீட்டு மருமகளாகப் போறவ. அடுத்த வாரம் கல்யாணம். நல்ல பாந்தமான பொண்ணு. குணத்துல தங்கம் என் மகனுக்கு ஏத்த ராசாத்தி” என்று புகழ்ந்தார்.
தருணிகாவிற்குப் புரிந்துவிட்டது. இந்தப்பேச்செல்லாம் ராதாவைக் குத்துவதற்கும் அவளுக்கு வலிக்கவேண்டுமென்ற நோக்கத்திற்காகவே பேசப்படுகிறது என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
அதனால் தருணிகா அப்படியே அமைதியாக கிருஷ்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.
இப்போதும் அவனது கவனமும் கண்ணும் ராதாமேல்தான் இருந்தது.அந்தக் கண்ணில் ராதாவுக்கான தவிப்பு இருந்தது.
அப்போ எதுக்கு இவங்க இரண்டுபேரும் பிரிஞ்சிருக்காங்க? நம்ம இவரு வாழ்க்கைக்குள்ள போனாலும் இவரு நம்மக்கிட்ட ஒட்டுவாரா? அப்புறம் என் வாழ்க்கையில நட்டாத்துல போன மாதிரி ஆகிடுமே? பணம் இருக்கு சொத்து இருக்குன்னு இப்போ நம்ம கழுத்தை நீட்டிட்டு பின்னாடி இரண்டாந்தாரம்னு வெளிய விரட்டிட்டா என்ன பண்ண முடியும்?
வாழவெட்டியா அம்மாவீட்டுல வந்தா உட்காரமுடியும்? இன்னும் தங்கச்சிங்க இருக்காங்க. அண்ணன் இருக்கான். இது சரி வருமா யோசி தருணிகா? அப்பா சொல்லுறாங்க ஆட்டுக்குட்டி சொல்லுறாங்கன்னு தாலியை வாங்கிட்டு அப்புறம் ராதா மாதிரியே பிள்ளையைக் கையில வைச்சுட்டா நிக்கப்போற” என்றுதான் பயத்தில் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனனை அவள் ஏறிட்டுப் பார்த்தாள்.
அவனோ தருணிகா அருகில் வந்ததும் ஒட்டாது ஒதுங்கி நின்னவன் பூங்கோதை சொல்லுவதைக் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை.
இதே போனவாரம் என்றால் அவன் நினைத்திருந்ததே வேறு. திருவிழாவுக்கு ராதாவையும் என் மாமியாருக் கப்டாயப்படுத்திக் கூட்டிட்டு வர்றாங்க. இங்க ஒருத்தன் பொண்ணுக்கேட்டு வந்ததுனால பிரச்சனையாகிட்டு என்று மைதிலி தகவல் சொல்லிருந்தாள்.
அதைக் கேட்டதும் கிருஷ்ணனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அம்மையார் அங்க போய் இரண்டாவது கல்யாணத்துக்கெல்லாம் தயாராகிட்டாங்களா? அவள் வரட்டும் இங்கு திருவிழாவுல நான் கட்டிக்க போறவக் கையைப் புடிச்சு அவ முன்னாடியே கூட்டிட்டு போகல என் பேரு கிருஷ்ணன் இல்ல. அவள வெறுப்பேத்த நான் தருணிகா பக்கத்துல ஒட்டி வர சீன்போடுறேன் நிச்சயதார்த்துக்கு முன்னாடியே அவளை நான் பைக்ல கூட்டிட்டு போறேன். ராதா அதைப்பார்த்து அழணும் என்று பலவாறு யோசித்திருந்தான்.
பொம்பள அவளே என்னை வேண்டாம்னு போயிட்டு இன்னொருத்தனை பொண்ணுப் பார்க்க வரச் சொல்லிருக்கான்னா எவ்வளவு மனதைரியமும் திமிரும் இருக்கணும்? எங்கம்மா சொன்ன மாதிரி அவ சென்னையில் பிறந்து வளர்ந்தவ இங்க நமக்கு சரிவரமாட்டாள். அதுவுமில்லாமல் நம்ம குடும்பத்துல இருந்து அங்க பொண்ணு கொடுத்திருக்கோம். நம்மளைவிட பலமடங்கு வசதியுள்ளவங்க. அவள் நம்மளை மதிக்கமாட்டாள் வேண்டாம்னு சொன்னபிறகும் அவளைப் பிடிச்சிருக்குன்னு கல்யாணம் பண்ணினதுக்கு நல்ல வாழ்ந்தாளே என்கூட. இதுல அடுத்தக்கல்யாணத்துக்கு தயாராகிட்டாளா? அவ வரட்டும் நானும் இன்னோரு கல்யாணம் செய்து என் பொண்டாட்டியோடு அவமுன்னாடி ஆம்பிளை சிங்கமாக நிற்பேன்’எ ன்று வீரப்போடு பேசியவனின் மனமோ இப்போது ராதா என்று ஏங்கி நின்றிருந்தது.
தருணிகாவைப் பொண்ணு பார்க்கப்போகும்போது ஏதோ ஒரு பொண்ணு என்றுதான் போனான். ஆனால் அவளிடம் ராதாவின் ஜாடை இருந்ததால் உடனே சரியென்று சொல்லிவிட்டான்.
என்னதான் அவன் அத்தனை கெத்தாக சொன்னாலும் இப்போது தனது முன்னாள் மனைவியைப் பார்த்ததும் மனம் தாயைக் கண்டக் கன்றுக்குட்டியாக அவளிடமே செல்கிறது!
மைதிலிக்கு கிருஷ்ணனின் இரண்டாவது கல்யாணத்தே ஏற்கமுடியவில்லை. ராதாவாக இருந்தால்கூட அவள் நம்மை அனுசரித்துப் போகக்கூடியவள். ஆனால் தருணிகா எப்படின்னு தெரியாதே?
இந்த நேரத்துல என் மாமானார் வேற தனியாகப் போகச்சொல்லிட்டாரே. கிருஷ்ணன் இரண்டாவது கல்யாணம் முடிச்சா இங்க வந்துட்டுப் போகிறதுல பிரச்சனையாகுமே? பேசாமல் இந்தக்கல்யாணத்தை நிறுத்திடலாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் பூஜை எல்லாம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு செல்வதற்காக வெளிப் பிரகாரத்தில் நடந்தார்கள்.
கிருஷ்ணனோ தருணிகாவைக்கூட கவனிக்காது வேகமாக நடந்தவன் ஓடிப்போய் வெண்ணிலாவைத் தூக்கிக்கொண்டான்.
ராதாதான் அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தாள்.
திடீரென்று தனது கையில் இருந்து யாரோ வெண்ணிலாவே தூக்கியதும் பயந்து சத்தம் போடுவதற்கு திரும்பினாள் அதற்கு அது கிருஷ்ணன் என்று தெரிந்த அமைதியாக அப்படியே நின்று விட்டாள்.
வெண்ணிலா கிருஷ்ணனை பார்த்தும் சிரித்தாள் ராதாவையும் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள்.
ராதா அமைதியாக மகளைமட்டும் பார்த்துவிட்டு அங்கிருந்து விலகிவந்து நின்றுக் கொண்டாள்.
தாமரைதான் “ஏன்டி அறிவிருக்கா அந்த மனுஷனே பிள்ளையைப் பார்க்கணும் கொஞ்சணும்னு வந்து எடுக்கிறாரு.இப்படி மூஞ்சியைத் தூக்கிவைச்சுட்டு வந்திருக்க” என்று மீண்டும் தனது வார்த்தையால் அவளை காயப்படுத்தத் தொடங்கியிருந்தார்.
அவளோ கிருஷ்ணனையும் மகளையும் பார்த்தவள் அம்மா நீ நினைக்கிறது நடக்கவே நடக்காது.அது இந்த ஜென்மத்துல இனி நடக்க வாய்ப்பேயில்லை.என் மகளை நான் அந்தாளுக் கிட்டக் குடுக்கமாட்டேன்.அவனுக்கு மீண்டும் இடமும் குடுக்கமாட்டேன். அந்தப்பொண்ணையே இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் வாழ்க்கையை வாழச்சொல்லு” என்று அவனுக்குக் கேட்கும்படியே சொன்னாள்.
அவள் அப்படி சொல்லி முடிக்கும் போது அவளை தெனவெட்டாக பார்த்தவன் தனது பெரியமீசையை முறுக்கிக் கொண்டே மகளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான்.
அப்பொழுது அவனுக்கு நேராக வந்த தருணிகா “இது யாரு உங்க மகளா? இந்த மகளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க தான் பாத்துப்பீங்களா? நீங்கதான் வளர்க்க போறீங்களா?”என்று கொஞ்சம் வேகமாகவே கேட்டாள்.
அவனுக்கு இப்படி பெண் பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவது, கத்திப் பேசுவது எதுவுமே பிடிக்காது என்று ராதாவுக்கு தெரியும். அதனால் முகத்தை சுழித்தவாறு அவர்களையே ராதா பார்த்து இருந்தாள்.
“நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் கல்யாணமாகிய எனக்கு குழந்தை இருக்குன்னு உனக்குத் தெரியத்தானே செய்யும். என் குழத்தையை அவக்கிட்ட இருந்து வாங்குவதற்காக காத்திட்டு இருக்கேன். இதெல்லாம் இரண்டுக்குடும்பம் பேசி முடிச்சாச்சு. நீ அதுக்கெல்லாம் சம்மதித்தால் தானே கல்யாணமே உறுதியாச்சு.அப்புறம் இதெல்லாம் உனக்கு என்ன கேள்வின்னு என் முன்னாடி வந்து கேட்ககற. இங்க இப்படி நிற்காதே. என் தாலியை இன்னும் உன் கழுத்துல வாங்கல. அதுக்குள்ள என்னை அதிகாரம் பண்ண வந்துட்டியா? பிச்சுப்புடுவேன் பிச்சு ஓடிப்போயிரு” என்று விரட்டினான்.
அதைக்கேட்டதும் தருணிகா அவனைப் பார்த்து மிரண்டு அங்கிருந்து சென்றவள் தனது அப்பாவிடம் போய் அழுதுகொண்டிருந்தாள்.
அவரோ அவளை சமாதானப்படுத்தினார்.
இப்போது வெண்ணிலா கிருஷ்ணனிடம் இருந்து ராதாவிடம் வருவதற்குக் கையை நீட்டினாள்.
ராதா ஒரு இன்ச்கூட நகராது பார்த்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் உடனே ராதாவின் அருகில் வரவும் வெண்ணிலா அம்மாவிடம் தாவிக்கொண்டாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த பூங்கோதைக்கு அவ்வளவு கோபம் வந்தது.
உடனே அங்கிருந்து வேகமாக ராதாவிடம் வந்தவர் ”என்ன என் மகனை உன் மகளை வைச்சுத் திரும்பவும் மடக்கிப் போடலாம்னு பார்க்கிறியா? அதெல்லாம் நடக்காது அவனுக்குன்னு ஒருத்தி வந்தாச்சு. இந்த நாடகமெல்லாம் இனி இங்க செல்லாது போ போ”என்று விரட்டினார்.
தாமரைக்கு என்ன பேசவென்று தெரியாது முழிக்க,கிருஷ்ணன் “அம்மா பேசமா போ.எனக்கு எல்லாம் தெரியும்.நான் ஒன்னும் சின்னப்புள்ள இல்ல.போய் அப்பாக்கூட நின்னு சாமிக்கும்பிட்டு வா. இதுல நீ தலையிடாத”
“என்ன கிருஷ்ணா என்னயை அங்கப் போகச்சொல்லுற, நான் பேசவேண்டாமா? உன் வாழ்க்கைக்காக நான்தானே பேசணும்”
“இதுவரைக்கும் நீங்க பேசினது செய்தது எல்லாம் போதும் போங்க”
“என்னடா இந்த திமிர்பிடிச்சவளைப் பார்த்ததும் உன் புத்தி எல்லாம் மாறி போகுதா? அதுதானே ஏற்கனவே கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை மயக்கி அவ முந்தானைல முடிச்சுக்கிட்டவதானே. அந்த முந்தானையிலிருந்து உன்னை வெளியே கொண்டு வந்து உனக்கு நான் எவ்வளவு நல்லது பண்ணி இருக்கேன். இப்போ உனக்கு இரண்டாவது கல்யாணத்துக்காக தருணிகாவை பார்த்து வச்சிருக்கேன். ஆனா நீ இவளுக்காக என்ன இங்கிருந்து பேசாத போன்னு விரட்டுற. எதுவும் சரியில்லடா. பெத்த தாயை நீ இப்படி கேவலப்படுத்தினா உனக்கு நல்லதே நடக்காது” என்று சாபம் கொடுக்கிற மாதிரி பேசினார்.
இதற்கு மேலே இங்கு நின்றால் நமக்குத்தான் பிரச்சனையாகும் என்று ராதா மகளை தூக்கிக் கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியே நடந்தாள்.
கிருஷ்ணன் ஓடிப்போய் அவளது கையைப்பிடித்து நிறுத்தினான்.
அவனது கையில் இருந்து தனது கையை வெடுக்கென்று பிரித்தெடுத்தவள் தனது ஒருவிரலை நீட்டி,கண்களை உருட்டி எச்சரித்தாள்.
அவளது வார்த்தைகள் பேசியதைவிடவும் அவளது கண்கள் அவ்வளவு கோபமாக எச்சரித்தது.
அவளது கண்களிலே அப்படியே மயங்கியவன் ஒன்றும்பேசாது அமைதியாக நின்றுவிட்டான்.
ராதாவோ அவனே திரும்பிக்கூட பார்க்காது அப்படியே வேகமாக நடந்தவள் காருக்குள் ஏறிவிட்டாள்.
அவளது மனதோ பட படவென்று அடித்துக் கொண்டிருந்தது. நான்இவ்வளவு வேணான்னு பிளான் பண்ணி விரட்டி விட்டால் மறுபடியும் அவள் பின்னாடியே போயிடுவான் போல இருக்கே என்று பதட்டத்தோடு அவர்களை பூங்கோதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணனுக்கு இப்பொழுது ராதாவின் கோபம் ரசிக்கும்படியாக பிடித்திருந்தது. லேசான புன்னகையோடு திரும்பியன் முன்பு கோபத்தில் தருணிகா அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள்.
அவளைப் பார்த்து அசட்டாக ஒரு சிரிப்பு சிரித்தவன் அங்கிருந்து நகர்ந்து போக அவனது முன்பு வந்தவள் “உங்க இரண்டுபேருக்கும் விவாகரத்தாயிட்டே இனி ராதாவுக்கும் உங்களுக்கு எந்த சம்பந்தம் இல்லைன்னு சொல்லிதான் என்னை பேசி முடிச்சிருக்காங்க. ஆனா இங்க நடக்கிறதைப் பார்த்தால் அப்படி இல்லபோலிருக்கு. இதுக்கு எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” என்று கேட்டாள்.
“உன் கழுத்துல நான் தாலி கட்டினதுக்கு அப்புறம் இப்படி ராதா பின்னாடி போனால் நீ என்கிட்ட கேள்வி கேட்கலாம்.இப்போ உனக்கு கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை” என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அதைக்கேட்ட தருணிகா அப்படியே விக்கித்துப்போய் நின்று விட்டாள்.
ஆனால் கிருஷ்ணன் ஒரு வழியாக திட்டம் போட்டிருந்தான் என்றால் மோகன் மூலமாக விதி வேறொரு திட்டம் போட்டு வைத்திந்தது.