தெள்ளழகே-15

தெள்ளழகே-15

தெள்ளழகே!-15

ராதா மெதுவாக தனது கண்ணீரைத் துடைத்தவள் வெண்ணிலாவைத் தூக்கிக்கொண்டு கீழே வந்து தனது அப்பாவிடம் போய் நின்றாள்.

“என்னால் இனிமேல் ஒரு நிமிஷம் கூட வீட்ல இருக்க முடியாது இந்த ஊரில் இருக்க முடியாது. இந்த ஊருக்கு இனி நான் வரவே மாட்டேன். என்னைக் கூப்பிடவும் செய்யாதீங்க. என்னை இப்பவே சென்னைக்கு பஸ் பிடிச்சு அனுப்பி விடுங்க இல்லை என்னைக் காரில் கூட்டிட்டு போங்க”

தாமரை ஏற்கனவே ராதாவிடம் கோபத்தில் இருந்தார் மணிகண்டனும் இவளது பிரச்சனையால் வெளியே போக வேண்டிய நிலையாயிற்று செல்வத்தையும் தனிக்குடித்தனம் போக சொல்லியாச்சு என்று கோபத்தில் இருந்தவருக்கு இப்பொழுது இவன் சென்னைக்கு இப்போவே போகணும்னு கிளம்பியதும் இன்னும் அதிக ஆத்திரமாய் வந்தது.

அவரைப் பொறுத்தவரை மகன்கள்தான் முதலில், அதற்கு பின்பு தான் மகள் பேத்தியெல்லாம். அது மணிகண்டன் மூத்த மகன் என்பதால் அவன் என்ன தப்பு செய்தாலும் அதை பொறுத்து சகித்து மன்னித்து ஏற்றுக் கொள்ளும் தாமரையால் ராதா தப்பே செய்யாமல் இருந்தாலும் அவளைக் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே அவரது குணமாக மாறி போயிட்டு. இனி புதுசாக எல்லாம் அவரை அடித்து சிறுபிள்ளையைப்போல திருத்தவெல்லாம் முடியாது. அவரிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

“ஏன்? ஏன்? இவ்வளவு அவசரமா சென்னைக்கு போற .உன் காதலன் இன்னைக்கு வரச்சொல்லி இருந்தான் என்ன?அதுதான் அன்னைக்கு பொண்ணு கேக்க வந்தானே அந்த மோகன் வரச்சொல்லி இருக்கானோ? ஓடிப்போய் கல்யாணம் பண்ண போறீங்களா? என்று சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்த வார்த்தை எல்லாம் பேசினார்.

“அம்மாஆஆஆ இதுக்குமேல ஏதாவது பேசின அப்புறம் உன் மண்டையை உடைச்சிடுவேன்” என்று பக்கத்தில் இருத்து பூச்சாடியை எடுத்து எறிந்துவிட்டாள்.

அதில் தாமரை பயந்து நல்லவேளை ஓடிப்போய் ஒதுங்கி நின்று கொண்டார் “என்னை கொல்லத்தான் என் மேலே ஜாடியைத் தூக்கி எறிஞ்சிட்டா. இவளுக்கு உண்மையில் பைத்தியம் முத்திட்டுப் பாருங்க.அந்தச் சென்னை பையன் பொண்ணுக்கேட்டு வந்தாம்ல அவன்கூட போகிறதுக்கு பிளான் பண்ணி இருப்பாபோல. அதுக்காக தான் இவ்வளவு சண்டை பிடிச்சு சென்னைக்கு போகணும்னு பிடிவாதம் பிடிக்கிறா இவளை சென்னைக்கு கூட்டிட்டு போகாதீங்க” இன்று தாமரை கண்டதையும் உளறிக் கொண்டிருந்தார்.

இப்போது பளீர்னு ஒரு சத்தம் வந்தது. ராதாவும் குழந்தையும் அப்படியே அதிர்ந்து வாயைப்பிளந்து நின்றுவிட்டனர்.

அப்பாவா அம்மாவை அடிச்சது?என்று நம்பமுடியாமல் பார்த்தாள்.

தாத்தா பாட்டியை அடிச்சதும் பயத்தில் அழுத வெண்ணிலா ராதவின் தோளில் படுத்துக்கொண்டாள்.

“நானும் நம்ம பொண்டாட்டியாச்சே.. கைநீட்டக்கூடாதுன்னு மூணுவருஷமா பொறுத்து பொறுத்துப் போயிட்டிருந்தால் வாயிக்கு வந்தபடியெல்லாம் பேசுவியா. உன் மகன்களை மட்டும்தான் பெத்தியா இவளை ஹாஸ்பிட்ட இருந்து தவிட்டுக்கு வாங்கிட்டு வந்தியா என்ன?:என்று கேட்டவருக்கு மூச்சு வாங்கியது.

“ஓடிப்போய் தண்ணி எடுத்துவந்து அவருக்குக் குடுத்தவள் டென்சனாகதிங்க ப்பா.யாரு திட்டுனா? என் அம்மாதானே? என் வாழ்க்கை இப்படியாகிடுச்சேன்னு ஆதங்கத்துல ஏதாவது என்னைச் சொல்லிக்கிட்டே இருப்பாங்க அவ்வளவுதான் விடுங்க”

“நீ ஓடிப்போகிறாதா இருந்தால் ஏன் இன்னும் கிருஷ்ணன் கட்டின தாலியோடு இருக்கன்னு ஒரு நிமிஷமாவது யோசிச்சிருப்பாளா இவ? அதைவிடு நம்ம மகள் அப்படி நடப்பாளா? எதுவென்றாலும் நம்மக்கிட்டதானே பேசுவா சொல்லுவான்னு புரிய வேண்டாமா? மூத்தமகனை சுயநலப்பிசாசாக வளர்த்து வைச்சிருக்கா.அதுனால்தான் தனிக்குடித்தனம் போகச்சொன்னேன். இதை நான் முதலிலேயே செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தம்னா மைதிலி மூலமாக உனக்கு உன் குடும்பத்தைக்கும் பிரச்சினை வந்திருக்காதுன்னு எனக்கு இப்போ தோணுது.அதற்கு அப்புறமா சுதாரிச்சு உன்னை அது தனியா விடு பார்த்து வைச்சிருக்கணும் அதுவுமில்லன்னா அவனையாவது வச்சிருக்கணும்.எல்லோரும் ஒன்னா இருக்கணும்னு நான் ஆசைப்பட்டது தப்பாபோயிட்டு. இப்போ அவங்க அவங்க சம்பாத்தியத்தில் வாழும் போது தான் தெரியும். வாழ்க்கையைப் பட்டுத் தெரிஞ்சிக்கட்டும்”

“இப்போ எதுக்கு என்னை அடிச்சீங்க? இவ நல்லதுக்கு தான் என்ன சொல்லுறேன்.இப்படியே யாருக்கூடடையவது ஓடிப்போயிட்டா அவ வாழ்க்கைத்தான நாசமா போகும். இதை நான் சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா” என்று தாமரை அழுது கொண்டே சொன்னார்.

கண்டபடி பேசாதீங்க இப்போ ஆமா. நான் அவன்கூடதான் போக போறேன்னு சொன்னேன்னா இப்போ நீங்க என்ன பண்ணுவீங்க! உங்களால என்ன செய்ய முடியும்? ஒன்னும் செய்ய முடியாதுல!

ஏற்கனவே எனக்கு விவாகரத்து முடிஞ்சு எந்த தடையும் இல்லாதுதான் இருக்கேன். யாரை வேணும்னாலும் என் இஷ்டப்படிக் கல்யாணம் பண்ணிக்கலாம் .இப்போ உண்மையிலயே மோகன் என்னை நேசிச்சிருந்தா நான் அவரைக் கல்யாணம் பண்றதுல என்ன தப்பு? கிருஷ்ணனுக்கு நாளைக்குக் கல்யாணம்.அவன் பண்ணிக்கலாம் நான் பண்ணிக்கக்கூடாதா? இது என்ன அவனுக்கு ஒரு நியாயமும் எனக்கொரு நியாயமும் சொல்லுறீங்க. இதை முதல்ல நிறுத்துங்க. ஒருத்தி வாழ்க்கை சரியில்லைன்னு உங்கக்கிட்ப வந்தால் நீங்களே அவளை சாவடிச்சிடுவீங்க சாமி போதும்டா இதுவரைக்கும் பட்டதே. இதுக்குமேல மனசுல வலுவில்லை” என்று நெஞ்சில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

நல்லதம்பிதான் அவளைத் தாங்கிப்பிடித்தவர் தாமரையிடம் “பெத்த பெண்ணை பேசிய சாகடிக்கிற உன்னை மாதிரி தாயால்தான் புருஷன் வீட்டுலயே பாதிபேரு தற்கொலை செய்துக்கிறாங்க. இங்கவந்தாலும் யாரு தயவிலாவதுதானே வாழணும். உழைத்து தனியாக வாழலாம்னு நினைச்சாக்கூட உன்னை மாதிரி பெண்களும் அவங்களை வாழவிட மாட்டீங்க. நானும்தான் அவளை மானம் போயிடும் மரியாதைப்போயிடும்னு திட்டினேன் ஆனால் அசிங்கமா ஒருநாளும் திட்டினதில்ல.நம்ம பொண்ணுமேல நமக்கு நம்பிக்கை வேண்டாமா.அன்னைக்கு ஆஸ்பத்திரியில் அவ்வளவு அழுதாளே அப்பவே எனக்கு மனசு சங்கடமா போச்சுது. தகப்பனா அவளைத் தாங்கிப்பிடிக்கத் தவறிட்டனோன்னு இருந்துச்சு. உனக்கு மனசு உறுத்தலையா” என்று வேதனையோடு கேட்டார்.

அதைக்கேட்ட தாமரைக்கு கஷ்டமாக இருந்தாலும் “அவக்கிட்ட நான் பலமுறை செல்லிருந்தேன். மாமியார்னா அப்படி இப்படித்தான் இருப்பாங்க. அவங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப்போ உன் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு. அதை அவள் கேட்கலை. இப்போ இந்தக் கஷ்டம் தேவையா. புருஷன்கூட இருந்தால்தான் எப்போதும் மரியாதை.உங்கம்மா என்னை என்னா பாடுபடுத்தினாங்க? நீங்களும் உங்கம்மா பேச்சைக்கேட்டு என்னை அடிச்சீங்க கொடுமைப்படுத்துனீங்க நான் அனுசரிச்சு வாழலையா! அதுமாதிரிதானே இதுவும். இது பொம்பளையா பொறந்த எல்லாரும் படவேண்டியதுதானே. நான் உங்கக்கிட்டக் கோச்சிக்கிட்டு விவாகரத்து வாங்கியிருந்தால் மூணு பிள்ளைங்களையும் எப்படி வளர்த்திருப்பேன்? எங்கம்மா அப்பா சோறுபோடுவாங்கன்னா போகமுடியும்? மூணுபிள்ளைங்களையும் கிணத்துல தள்ளிட்டு செத்துதான் போயிருக்கணும். உங்கக்கூட அனுசரிச்சு வாழப்போய்தான் மூணுபேரும் நல்லாயிருக்காங்க. அதைத்தான் அவளிடமும் சொன்னேன். வாழாமல் வந்து பாடுபடுறா?”

அதைக்கேட்டதும் நல்லத்தம்பிக்கு ஒருமாதிரி குற்றவுணர்ச்சி இந்த வயதிலும் வந்தது. நம்ம நம்ம பொண்டாட்டியை சரியாக நடத்தியிருந்தால் நம்ம மகன்களும் நல்ல மனுஷங்களா இருந்திருப்பாங்களோ? நம்ம மகள் வாழ்க்கையும் சரியாக இருந்திருக்குமோ?என்று மனம்கலங்கினார்.

அதைப்பார்த்த ராதாதான் “நீங்க வளர்ந்த விதம் அப்படிப்பா. இனி எதையும் சரிப் பண்ணமுடியாது. நடந்து முடிஞ்சதை பேசி எந்தப் பயனும் இல்லை.

நாளையில் இருந்து நான் வேலைக்குப் போறேன். அதுக்குமட்டும் அனுமதிக்குடுங்க. யாரோட தயவும் இல்லாமல் என் மகளை நானே வளர்த்துக்கிறேன். அவன் இரண்டாவது கல்யாணம் பண்ணட்டும் மூணாவது கல்யாணம் பண்ணட்டும். என்னவேணும்னாலும் செய்யட்டும் நான் என் மகளுக்காக வாழ்றேன். பிற்காலத்தில் எனக்கு வாழ்க்கைவேணும்னு தோணினா நான் பார்த்துக்கிறேன். அதுக்கு தடையாக நீங்க இல்லாமல் இருந்தாலே போதும்” என்றவளின் மனவேதனையை இப்போது தாமரையுமே உணர்ந்தார்.

என்ன செய்ய மனதளவில் அவளுக்கு நிறைய காயங்களையும் ரணங்களையும் கொடுத்தப்பின்பு வந்த அனுதாபத்தால் என்ன பயன்?

நல்லத்தம்பி டிரைவரை வரச்சொன்னார்.காரில் ஏறி சென்னைக்குப் புறப்பட்டாச்சு.

அவர்கள் அங்கிருந்து கிருஷ்ணனின் கல்யாணத்துக்கு முன்பே கிளம்பியதைக் கேள்விப்பட்ட பூங்கோதை ஹப்பாடா நல்லது. கிருஷ்ணன் கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்களோன்னு நினைச்சேன் .ராதா மறுபடியும் இங்க வாழவந்துட்டான்னா என்ன பண்றது? அவ வரமாட்டாள்தான், அதைவிட விவாகரத்தாகிட்டு. எந்த உரிமையும் கிடையாதுதான். இருந்தாலும் இந்தக் கிருஷ்ணனை நம்ப முடியாதே! அவ போனதுதான் நல்லது.என் மகன் இனி தருணிகாவோடு நல்லா வாழ்வான் என்று நிம்மதியாக உணர்ந்தார்.

கிருஷ்ணனுக்கு மனது ஒருமாதிரியா இருந்தது. இனி வெண்ணிலாவை பார்க்கணும்னா சென்னைக்குத்தான் போகணுமா ?சரி வேற வழியில்லை. நம்ம வாழ்க்கையை நம்ம பார்ப்போம். அதுதான் பிரிஞ்சுட்டோமே இனி என்ன இருக்கு. அவ வாழ்க்கையை அவள் பார்க்கட்டும் என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். மகளுக்கு ஏதாவது தேவையென்று வரும்போது பார்த்துக்கலாம் என்று தனது மனதை திடப்படுத்திக் கொண்டான்.

ராதா சென்னை சென்றதும் ஊரில் நடந்தவைகளை மறந்துவிட்டு தனது குழந்தை தனது எதிர்காலமென்று கடந்தவைகளை மறந்துவாழ முயன்றாள். அதே ஆபிஸிற்கு ரிசைனிங் லெட்டரை கேன்சல் பண்ணிட்டு திரும்பவும் ஜாயின் பண்ணியிருந்தாள்.

மீண்டும் அதே ஆபிஸிற்குச் சென்றாலும் மோகனால் மனுபடியும் எந்தப் பிரச்சனையும் வராது. அப்படியே வந்தாலும் அதை சாமாளிக்க தைரியம் இருக்கிறது.

இப்போது அப்பா தனது நிலையைப் புரிந்துக்கொள்கிறார்.

அண்ணனுங்க அவனவன் வாழ்கையைப் பார்த்துப்பானுங்க நம்ம விசயத்தில் தலையிடமாட்டானுங்க என்கின்ற தைரியம் அவளை வேலைக்குச் செல்ல தூண்டியிருந்தது.

அதனால் மகளை ப்ளேஸ்கூலில் விட்டுவிட்டு அம்மாவை மத்தியானம் வந்து அவளை அழைத்துச் செல்ல எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தாள்.

அப்போதுதான் தாமரை உணர்ந்தார். தனக்கென்று யாருமில்லை என்றதும் அவளாகவே எல்லாத்தையும் செய்கிற திறனும் அறிவும் வந்திருக்கிறது.இதுவே நல்லது.

இனி ராதாவை தாமரை கரித்துக்கொட்டமாட்டார். வாழவெட்டி வாழாமல் வந்துவிட்டாள். அவளது எதிர்காலம் என்னாவது என்று நினைத்து புலம்புவதற்கான அவசியமில்லை என்பது தெளிவாக புரிந்துக்கொண்டார்.

மணிகண்டனும் மைதிலியும் இன்னும் மதுரையில் இருந்து வரவில்லை.திருமணத்தை சிறப்பித்துவிட்டு மெதுவாக வருவார்கள்.அவர்களுக்கு என்ன யாரைப்பற்றியும் யாருடைய வாழ்க்கை பற்றியும் எந்தக் கவலையும் அற்றவர்கள்.

ராதா அதையெல்லாம் மறக்க வேலைக்குச் சென்றால் தான் நல்லது என்று அடுத்த நாளே வேலைக்குக் கிளம்பி ஆபிஸிற்குள் தான் நுழைந்தாள்.

அவளை மோகன் கையில் கட்டுடணும் தலையில் பிளாஸ்த்திரியுடணும் வரேவற்க நின்றிருந்தான்.

அதைப்பார்த்ததும் இவனுக்கென்னவாயிற்று என்று யோசித்தவாறே அவனருகில் வந்தாள்.

“ரொம்ப ரொம்ப நன்றி மேடம். உங்க முன்னாள் கணவருக்கும் உங்களுக்கும் இவ்வளவு அந்நியோந்நியம் இருக்கும்னு எங்களுக்குத் தெரியாது. நீங்க இரண்டுபேரும் விவாகரத்து வாங்கிட்டு பிரிஞ்சிருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனால் பிரிஞ்சிருந்தாலும் நீங்க மனசளவில் பிரியாமல்தான் இருக்கீங்க. உங்க காதல் இன்னும் உயிரோடுதான் இருக்கு என்பதையும் உங்களுக்கு இடையில் வேற யாரும் வரமுடியாது என்பதையும் உங்க முன்னாள் புருஷன் அதுதான் மிஸ்டர் கிருஷ்ணன் கல்குவாரியில் வைச்சு நல்ல அடிச்சு மண்டையில் உரைக்கிறமாதிரி சொல்லிட்டாரு .உங்களுக்கு இடையில் இனி நான் வரமாட்டேன் .இதை நீங்களே அஹிம்சை வழியில் சொல்லியிருக்கலாம். உங்க வாழ்க்கையில் இனி குறுக்க வரவேமாட்டேன். போதும்டா சாமி உங்களை காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்க்கை குடுக்கலாம்னு நல்லது நினைச்சதுக்கு கடவுள் பெருசா இல்ல இல்ல அந்த கிருஷ்ணன் இல்லை உங்க முன்னாள் புருஷன் கிருஷ்ணன் நிறைய தந்துட்டாரு. நீங்கெல்லாம் நல்லவருவீங்க” என்று வேதனையோடு சொல்லிவிட்டு தனது கேபினுக்குச் சென்றுவிட்டான்.

ராதாவோ இவன் என்ன உளறிட்டுப்போறான்? என்று புரியாது முழித்துக் கொண்டிருந்தாள்.

அது என்ன விசயம் என்று மாலை தனது வீட்டில் கிருஷ்ணனைக் கண்டதும் புரிந்துக்கொண்டாள்.