பொய் 4
Poi4

4 பொய்யில் ஒரு மெய்!!
என் கண் ஒருவேளை பொய் சொல்கிறதோ??
இல்ல இது என் ராம் கிடையாது என்று அவள் படபடக்கும் இதயத்திடம் சொல்ல பார்த்தாள்
ஆனால் முடியவில்லை, செல்போனில் வந்திருக்கும் புகைப்படம் உண்மைதானே, அது அவள் கணவன் பைக், அதை ஓட்டுவது அவள் கணவன்தான் ஆனால் பின்னால் இருப்பது.. அவள் இல்லையே அவ்வளவு தெளிவான புகைப்படம்.. இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும் ...
புருஷன் பைக்ல இன்னொரு பெண் போறது தப்பா என்று கேட்டால், இல்லைதான், ஆனால் என் கணவன் இன்னொரு பெண்ணை இதுநாள்வரை பைக்கில் ஏற்றியது கிடையாதே, இது பொய்யாய் இருக்கணும் , பொய்யாய் இருக்கணும் வேற ஏதாவது காரணம் இருக்கணும்.. அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று சமாதானப்படுத்திக் கொண்டவளுக்கு, வேலையில் கவனம் போகவே இல்லை... மணியை பார்த்துக் கொண்டே நிர்றாள்.. அவன் வரும் நேரம் வர.. கைகள் ஓடவில்லை, என்னவோ தெரியவில்லை பதறியது , இருதயம் வேறு நிலையில்லாது அடித்துக் கொண்டது..
அரவிந்த் எப்போதும் போல நார்மலாக உள்ளே வந்தவன்...
என்ன சீதா குழந்தைங்க ஸ்கூல்ல இருந்து வந்தாச்சா ?? என்று லஞ்ச் பாக்ஸை அவள் கையில் கொடுக்க ..
"இன்னைக்கு சாப்பாடு எப்படி இருந்துச்சு ராம்" என்றவள் அவனை ஓரப்பார்வையால் பார்த்துக் கொண்டே லஞ்ச் பேக்கை வேக வேகமாக திறந்து டிபன் பாக்ஸை பார்த்தாள்... கழுவி நீட்டாக இருந்தது...தடயம் இல்லாது தவறு செய்ய பழகிய கணவன் அவனோ??
ம்ம் சூப்பரா இருந்ததே , உன் சாப்பாட்டுக்கு என்ன குறை, சுட சுட சாப்பாடு அமிர்தமா போச்சு என்று அரவிந்த் முகத்தை கழுவி டவலில் அவன் துடைக்க
"பொட்டட்டோ வறுவல் சூப்பரா இருந்ததா??
"ம்ம் எப்போதும் போல செம டேஸ்ட் , நல்ல கிரிஸ்பியா செஞ்சிருந்த, முதுகு காட்டி நின்று கொண்டிருந்த சீதாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது
ராம் பொய் சொல்லுவானா?? அதுவும் இவ்வளவு நேர்பட, தொண்டை ஏறி இறங்க அவனை திரும்பிப் பார்த்த சீதா
"நான் இன்னைக்கு வெண்டைக்காய் கூட்டு கொடுத்துவிட்டு இருந்தேன்... உருளைக்கிழங்கு வறுவல் கொடுத்து விடல ராம்" என்று அழுத்தமாக அவனைப் பார்க்க... சட்டென முகத்தை துடைத்துக் கொண்டிருந்த அரவிந்த் முகம் மாறி ,சிறு நொடியில் தன்னை நிலை படுத்திக் கொண்டவன்
"கிரிஸ்பியா இருந்ததா.. சோ, அது பொட்டோவா இல்ல வெண்டைக்காயான்னு நான் கவனிக்கல போல சீதா ... பட் ,ஏதோ ஒன்னு நல்லா இருந்தது என்றவன் வார்த்தை குளற,
"இன்னைக்கு வெளியே எங்கும் போனீங்களா ராம்
"இல்லையே உனக்கு தெரியாதா, இன்னைக்கு மந்த் எண்டு கணக்கு முடிகிற வேலை இருக்கும்.. பேங்க் விட்டு எங்கேயும் வெளியே போக முடியாதுன்னு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்ல
"ம்ம் , ஆமால்ல எனக்கு வயசாகிடுச்சு போல ராம் அதான் இப்ப எல்லாம் நிறைய மறக்கிறேன் போல என்று அவன் திருட்டு முழியை இருதயம் நடுங்க பார்த்தாள்
ஆனா நான் மதியம் சாப்பாடு கொடுக்க வரும் போது உங்க பைக் அங்க இல்லேயே ராம்...
"ப்ச் , இப்ப எதுக்கு இவ்வளவு குறுக்கு விசாரணை பண்ணிக்கிட்டு இருக்க சீதா , வேலை முடிஞ்சு மனுஷன் வீட்டுக்கு வந்தா , காபி குடிக்கிறீங்களா டீ குடிக்கிறீங்களான்னு கேட்காம... அங்க போனீங்களா, இங்க போனீங்களான்னு ஏன் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்க" .... ஒரு நாள் இல்லாத திருநாளாக அவன் கோபத்தில் கத்த திடுக்கிட்டுப் போனாள் சீதாலட்சுமி
"ராம் இப்ப நான் என்ன கேட்டுடேன் கோவப்படுறீங்க
"பின்ன கோபப்படாம ,ஆயிரம் வேலையில இருக்கிறவன் உருளைக்கிழங்குன்னு பார்த்தானா வெண்டக்காய்னு பார்த்தானா, பைக் சாவி என் மேஜையில் இருந்தது , பைக்கை யாரு தூக்கிட்டு போறான்னு யாருக்கு தெரியும்? எல்லாத்துக்கும் உன்கிட்ட விளக்கம் சொல்லனும்னா எப்படி சீதா இப்ப உனக்கு என்ன தெரியணும்
உங்களை நான் மார்க்கெட் பக்கம் உள்ள ரெஸ்ட்ராண்ட்ல பார்த்தேனே ராம் அதான்?? என்றதும் தடுமாறி அவளை திரும்பிப் பார்த்தவன்
"என்னையா , நோ நோ சான்சே இல்ல.. நான் பேங்க விட்டு எங்கேயுமே போகல நீ வேற யாரையும் பார்த்து இருப்பியா இருக்கும்.. எனக்கு தலை வலிக்குது முடிஞ்சா காபி போட்டு கொடு , இல்ல தயவு செய்து சும்மா இரு டார்ச்சர் பண்ணாத, " என்றவன் வேகமாக அறைக்குள் நுழைய இவளுக்கு உதடு துடிக்க அழுகை கொட்ட ஆரம்பித்துவிட்டது
"ஏதோ தப்பு நடக்கிறது தப்பை மறைக்க கோபம் கொள்கிறார் தப்பை மறைக்க தடுமாறுகிறார் தப்பை மறைக்க ஓடுகிறார்,ஆனால் என்ன தப்பு???? கடவுளே !! நான் நினைச்ச மாதிரி எதுவும் இருக்க கூடாது ,அந்த போன்ல வந்த போட்டோ அது சொன்ன செய்தி எதுவும் உண்மையாக இருக்க கூடாது, எனக்கு ராம அவ்வளவு பிடிக்கும், ராமுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும். நாங்க உண்மையா காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டு தம்பதிகள், எங்களுக்கு இடையில பிரிவு வராது துரோகம் வராது, ஏமாற்றம் வராது , நான் நம்புறேன் இத அவர்கிட்ட பேசி யாரோ நம்ம ரெண்டு பேரையும் பிரிக்கிறதுக்கு சதி செய்றாங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லிடனும் "என்று அவன் மீது இருந்த அதீத நம்பிக்கையில் புலம்ப ஆரம்பித்தவள்..
குளியலறையில் சத்தம் கேட்கவும் அவன் வந்ததும் இதைப் பற்றி பேசி விட வேண்டும் என்று நினைத்து அறைக்குள் போக ...அவன் செல்போன் வெகு நேரமாக அடித்துக் கொண்டே இருக்கவும். யாராக இருக்கும் என்று நினைத்து போனை போய் பார்க்க ஷில்பா என்று இருந்தது ..
கண்ணை சுருக்கி அதை பார்த்தவள் மறுபடியும் அவள் தான் அழைத்தாள்...
மனதை திடம் பண்ணி கொண்ட சீதா போனை அட்டென் செய்து காதில் வைக்க
"சார் உங்க வொய்ப் கிட்ட மாட்டாம தப்பிச்சிட்டீங்களா?? நாம ஹோட்டல்ல இருந்ததை அவங்க பார்க்கல தான" என்று படபடவென பேச இவளுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது... பில் கொடுக்க அரவிர்ந்த் வெளியே வரும் போது ஆட்டோவில் ஏறி போகும் மனைவியை கண்டு திகைத்து போய் நின்றவன் , ஷில்பாவை போய் திட்ட ஆரம்பித்து விட்டான்
"இதுக்கு தான் சொன்னேன் ஷில்பா , என் பொண்டாட்டி கண்ணுல மாட்டி இருந்தா என் நிலைமையை யோசிச்சு பாரு ..
இல்ல அது "
"ப்ச் என்று அரக்க பறக்க ஓடி வந்தான்...
"ஹலோ ஹலோ அரவிந்த் சார் இருக்கீங்களா??" என்று ஷில்பா கத்த, அதற்குள் அரவிந்த் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் ... சீதா கையில் போனை பார்த்து பதறியவனாக அருகில் ஓடி வந்தவன் .. போனை சீதா கையிலிருந்து வேகமாக பிடுங்கி அதை பார்க்க ..ஷில்பா போன் கட் செய்யப்படாமல் இருக்க..
"ஹலோ நான் உனக்கு பிறகு பேசுறேன் வை என்று போனை கத்தரித்து விட்டவன்..
:ராம் என்று சீதா உதடு நடுங்க ஏதோ கூற வாயை திறக்க போக
பளார் என்று ஒரு அறை மனைவியை விட்டான்
ராம்இஇஇஇ அலறி சீதா , துள்ளி போய் படுக்கைகள் விழுந்தாள்
"நான் அவ்வளவு தூரம் சொல்லியும்... நான் ஏதோ தப்பு செஞ்ச மாதிரி என் போனை எடுத்து வேவு பாக்குறியா ... என் போனை நீ எப்படி எடுக்கலாம்? ஹான், அவ்வளவுதான் நீ என் மேல வச்சிருக்க நம்பிக்கையா சீதா ??என்று சீதாவை தீயாக முறைத்து அரவிந்த் பார்க்க ..
"ராம் நீங்களா ,என்ன அடிச்சீங்க???
என்னை அடித்துவிட்டானா?? நம்ப முடியாமல் படுக்கையில் குப்புற கிடந்தவள் . கன்னத்தை பொத்திய கையோடு அவனை திரும்பிப் பார்க்க
ஷட் !!என்று தலையில் அடித்துக் கொண்டு அரவிந்த் அவள் அருகே வர போக ..சட்டென நகர்ந்து எழும்பி கொண்டவள் ...
"அந்த பொண்ணு தான் போன் போட்டுச்சு ரொம்ப நேரமா அடிக்கவும் ஏதோ அவசரம்னு நினைச்சு போனை எடுத்துட்டேன்... நான் ஒன்னும் தப்பு செய்யலையே, இதுவரைக்கும் இதுதானே பழக்கமாக இருந்தது.. எப்போ இருந்து என்னோட போன் உன்னோட போன்னு பிரிச்சு பார்க்க ஆரம்பிச்சீங்க.. அதோட என்னை அடிக்கிற அளவுக்கு நான் அப்படி என்ன பண்ணிட்டேன்?
"ப்ச், சீதா ஐ அம் சாரி" என்று அவள் கன்னத்தை தொட போக சட்டென அவன் கையை உதறிவிட்டவள்
"என்கிட்ட எதையும் மறைக்கிறீங்களா ராம்
"அப்படி எல்லாம் இல்லடி, திருப்பி திருப்பி சந்தேகமா என்ன பாக்காத .. நான் எதுவும் பண்ணல வேலையில ஏகப்பட்ட டென்ஷன் .. வீட்டுக்கு வந்து நீயும் கண்டதையும் பேசின உடனே கோபம் வந்துடுச்சு..
"அந்த பொண்ணு நீங்க ரெண்டு பேரும் ஹோட்டல் போனதா சொல்லுச்சு .. அப்போ, நான் உங்களை தான் பார்த்து இருக்கேன் ...அப்படித்தானே?? நீங்க ஹோட்டல்ல தான் நின்னு இருக்கீங்க, ஆனா ஏன் என்கிட்ட மறைக்கிறீங்க , கேட்டா ஏன் என்னை அடிக்கிறீங்க..
"தயவு செஞ்சு சொன்னா புரிஞ்சுக்கோ சீதா ஒரு க்ளைன்ட பார்க்கிறதுக்காக, நான் ஹோட்டல் போயிருந்தேன் அங்க தான் ஷில்பாவும் வந்து இருந்தா .. உன் மேல சத்தியம் பண்ணவா? அவன் தடுமாறாது அவளை பார்க்க.. சீதா அவனை கூர்ந்து பார்த்தாள்
"சத்தியமா நம்பும்மா, சத்தியம் பண்றேன்"
"வேண்டாம் இதை என்கிட்ட முதலில் சொல்றதுக்கு என்ன??
"நான் என்ன செய்ற ஏது செய்றேன்னு ,உன் பசங்க மாதிரி டெய்லியும் உன்கிட்ட வந்து ஒன்னு விடாம சொல்லணும்னு நினைக்கிறியா? நான் அவ்வளவு பெரிய பேங்க நிர்வகித்துக்கொண்டு இருக்கிற அதிகாரி , எல்லாத்துக்கும் உன்கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா சீதா கொஞ்சம் புரிஞ்சுக்கோ'
"புரிஞ்சுக்கிட்டேன் ராம் ... நான் அதே சீதாவா தான் இருக்கேன்... பட் நீங்க ரொம்பவே மாறிட்டீங்கன்னு புரிஞ்சுகிட்டேன்... சாரி உங்களோட பொருளை தொட்டது என்னோட தப்பு தான் . இனிமே உங்களோட போன் தொட மாட்டேன்" என்று சீதா கண்ணீரை துடைத்துக் கொண்டே நகர ..
"அம்மா "என்று உள்ளே வந்த பிள்ளைகளுக்கு வலுக்கட்டயமாக சிரிப்பை பரிசளித்துவிட்டு பிள்ளைகளோடு ஐக்கியமாகிவிட...
ராம் அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..
சண்டை எலலாம் இருவருக்கும் சகஜம் தான் ஆனால், இப்படி அடிக்கும் அளவு மூர்க்கம் ஆவான் என்று அவனே நினைக்கவில்லை
"நல்லவேளை போனை செக் பண்ணல பண்ணி இருந்தா என் நிலமை , இவள என்ன சொல்லி அவளை சமாளிக்க புரியவில்லை...
முகத்தை துடைத்து சரி செய்து கொண்டவன் மனைவியை மறுபடியும் ஷில்ஃபாவிடமிருந்து போன் வர
"அய்யய்யோ!! இவ எதுக்கு இப்போ போன் போடுறா ச்சை பொண்டாட்டி ஒரு பக்கம்னா, இவ ஒரு பக்கம் என்று அலறி அரவிந்த் போனை தூக்கிக் கொண்டு குளியலறை உள்ளே போனவன்.
"உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ஷில்பா , வீட்டுக்கு வந்தா எனக்கு போன் போடாதன்னு.. இப்ப எதுக்கு போன் போட்ட ... நானும் என் பொண்டாட்டியும் சண்டை போட்டு நாறனும். அதை நீ பார்க்கணும் அதுக்கு தானே எனக்கு போன் போடுற..
"சாரி அரவிந்த் சார் நீங்க சேஃபா போய் வீட்ல சேர்ந்துட்டீங்களான்னு கேக்குறதுக்காக தான் போன் போட்டேன்
"நான் என்ன பச்சை குழந்தையா காணாம போறதுக்கு இன்னொரு தடவை இப்படி இரிடேட் பண்ணாத , அவள் என்ன பேசினாளோ பெருமூச்சு விட்டவன்
"சரி சரி நான் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டேன் , டேக் கேர் வை என்று போனை வைத்தவன்
"இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும்.. இல்ல சீதா கண்டுபிடிச்சுடுவா என்று நெஞ்சை தடவினான்
மடியில் கனம் அதிகம் ... அதனால் வழியில் பயமும் அதிகம் .... கள்ளன் என்றாவது ஒருநாள் மாட்டாமல் போவானா??
உறுதியாக மாட்டுவான் !!