பொய் 5

Poi5

பொய் 5

5 பொய்யில் ஒரு மெய்!! 

அம்மா அப்பா கூட ஏதாவது சண்டையா? ஏன் முகம் டல்லா இருக்கு என்று அவீரா தாயின் முகத்தை கூர்ந்து பார்க்க 

"இல்லையே சும்மாதான் இருக்கேன்,

"சும்மா சொல்லாதீங்க அம்மா, அப்பா முகமும் டல்லா இருக்கு.. நீங்களும் அப்பாகிட்ட பேசின மாதிரியே இல்லை! ஏதோ பிரச்சினை மாதிரி தான் தெரியுது என்ன ஆச்சு மகள் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறாள் என்று சீதாவும் நினைத்தாள் ஹாலில் உட்கார்ந்து டிவியை பார்த்துக் கொண்டிருந்த ராமும் நினைத்தான்

"ஓஓஓ அந்த அளவுக்கு நீ பெரிய மனுஷியா ஆயிட்டியா, படிடி நான் நைட் சாப்பாடு ரெடி பண்ணிட்டு வரேன்" என்று மழுப்பிய பதில் சொல்லிவிட்டு மனைவி கிச்சன் நோக்கி போக ராம் சிறிது நேரம் டிவியை பார்ப்பது போல் அமர்ந்திருந்தவன்.. பிள்ளைகள் படிப்பில் கவனமாக இருக்கவும், டிவியை ஆஃப் பண்ணிவிட்டு மனைவி நோக்கி உள்ளே போய்விட்டான்.. அவள் இன்னும் அழுது கொண்டே காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருக்க... அவள் அருகே போய் நின்றவன்

"சாரிடி உண்மையா உன்ன அடிப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல , வலிக்குதா? என்று சீதாவின் கன்னத்தை தொட போக..

அடித்தது கூட வலிக்கவில்லை ,ஆனால் சமாதானம் செய்யும் பொழுது தானே வலி தெரியும் பெண்களுக்கு .. அவளுக்கும் அவள் கன்னத்தை தொடும்பொழுது தான் வலித்ததின் வீரியம், மனதையும் கன்னத்தையும் காயப்படுத்த .. அழுகை இன்னும் பீறிட்டு வெடிக்க ஆரம்பித்துவிட்டது..

"ப்ளீஸ்டி அழாத பிள்ளைங்க என்னை தப்பா நினைக்க போறாங்க ...

"என்ன அடிக்கிற அளவுக்கு என் மேல வெறுப்பா உங்களுக்கு ..

"ப்ச் , அப்படி இல்லடி நீ கூட என்ன புரிஞ்சுக்கலேங்குற விரக்தின்னு கூட வச்சுக்கலாம்தானே

"என் கோபத்தை தாபத்தை வேற யாரு கிட்ட காட்டுவேன்...  

"ஆனா ,இத்தனை நாளும் எதுவும் என்கிட்ட காட்டுனது இல்லையே , என்ன பிரச்சனை இருந்தாலும் நேருக்கு நேர் எனக்கு இந்த பிரச்சனை இருக்கு அப்படின்னு என்கிட்ட தானே சொல்லுவீங்க இப்ப எல்லாம் ரொம்ப விலகி விலகி போறீங்க ராம்.. ஏன்? என்று அவள் நேரடியாகவே ராமின் கண்ணை பார்த்து கேட்க தடுமாறி கீழே குனிந்து கொண்டவன்..

"வொர்க் பிரஷர், மேனேஜர் ஆனதிலிருந்து வேலை அதிகம் உனக்கு தெரியாதா சீதா

"இதுதான் உண்மையான காரணமா ராம்

"ஆமா வேறென்ன காரணம் இருக்க போகுது ..

"யார் அந்த ஷில்பா?? நேரடி தாக்குதலில் திருடனாக முழித்து தன்னை நிலைபடுத்தி கொண்டவன்

"என்ன சந்தேக படுறியா சீதா ?

"இதுநாள் வரை சந்தேகம் வரல ராம் , ஆனா எப்போ என்ன அடிக்கிற அளவு ஆனதோ, அப்பவே சம்திங் ராங் 

"ப்ச் நீ ஓவரா இமேஜின் பண்றடி, நான் சின்ன வீடு வச்சிருக்கிற மாதிரி பார்க்காத 

"நான் அப்படி சொல்லலையே ஏன் அந்த அளவு நீங்க போறீங்க ராம் "

"பின்ன நீ பார்க்கிறது பேசுறது எல்லாம் பார்த்தா, என்ன சந்தேக படுறியோன்னு தான் தோணுது ... நமக்காக நம்ம குடும்பத்துக்காக நான் நாயா உழைக்கிறேன், அது உனக்கு நல்லா தெரியும் ,எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பேசும் போது வலிக்குது, ப்ச் போ இதுக்கு மேல என்னத்த சொல்லன்னு தெரில என்று ராம் முகம் சுண்டி போக ...

"சாரி ராம் 

"விடு சீதா உனக்கு தெரியாதா என்ன பத்தி , நான் உங்ககிட்ட எதையாவது மறைப்பேனா..

"சரிப்பா தெரியாம பேசிட்டேன் போதுமா ..

"நீ எப்படி என்ன சந்தேக படலாம் 

"அது இல்ல ராம் பக்கத்து வீட்டு மாமி புருசன் இருக்கார்ல 

"ஆமா அவருக்கு என்ன?? என்றான் மனைவி முகம் நார்மல் ஆனதும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி கேரட்டை எடுத்து கடித்து கொண்டே ,

"அவருக்கு நீலாங்கரை பக்கம் ஒரு சின்னவீடு இருக்காம்..

"வச்சிட்டு போறார் வசதியானவர் நாலு வீடு வச்சிக்கிட்டா தப்பா ???"என்ற அரவிந்த் கன்னத்தில் இடித்த சீதா 

"நான் சொன்னது கட்டுற வீடு இல்ல ,வச்சிக்கிற வீடு செட்டப் வச்சிருக்காராம்.. கல்யாண வயசுல பிள்ளையை வச்சிக்கிட்டு சின்ன பொண்ணு ஒன்னை செட் பண்ணி , அங்க குடும்பம் நடத்தி இருக்கார்.. மாமி ஏதேர்ச்சியா அதை பார்க்க போயி விசாரிச்சா .. நாலு வருச பழக்கம் போல, பிள்ளை வேற இருக்குன்னு குண்டை போட.. மாமி நெஞ்சை புடிச்சிட்டு சாஞ்சிட்டாங்க.. என்னத்த கண்டு மயங்கி தொலைச்சாரோ, எனக்கு அந்த பொண்ணு தான் வேணும்... நீ ஜீவனாம்சம் வாங்கிட்டு போன்னு ஹாஸ்பிட்டல்ல சண்டை போல ... நேத்து பங்சன் போனேன்ல, இந்த விஷயத்தை கேட்டதுல இருந்தே என்னன்னு தெரியல ராம், உடம்பு எல்லாம் பதறுது ... ஒரு குடும்பத்தை கெடுத்த அவ நல்லா இருப்பாளா ?அடுத்தவ புருசன், அடுத்தவன் பொண்டாட்டி தான் இவங்களுக்கு கிடைச்சதா.. சொல்லும் போதே கண்ணீர் வந்தது... ஏன் இந்த பேராசை ?? ஒரு குடும்பத்தை கெடுத்த சுகம் தேவையா?? அதில எப்படி மகிழ்ச்சி காண முடியும் ??

"ப்ச் இப்ப எதுக்கு அடுத்த வீட்டு சங்கதி சீதா" அரவிந்த் முகம் வியர்த்து வடிந்தது...  

"இதெல்லாம் காதுக்கு போனதுல இருந்து சூடாகி போனேன் ராம் , அதான் உங்களையும் அங்க பார்த்ததும் அதையும் இதையும் மிக்ஸ் பண்ணி குழம்பி சந்தேக பட்டுடுட்டேன்... சாரி ராம், எனக்கு தெரியாதா என் ராம் பத்தி ஆனாலும் ஒரு பயம் தான் "

"என்ன பயம் ?? 

"பின்ன இன்னும் ஹீரோ போல இருக்கீங்க ரெண்டு பிள்ளைக்கு தகப்பன் போலவா இருக்கீங்க, யாராவது கொத்திட்டு போயிட்டா நான் என்ன செய்றது... 

"ஹாஹா கிளி போல பொண்டாட்டி நீ இருக்கும் போது வப்பாட்டி தேடுவேனா ?

"ம்ம் தேட மாட்டீங்க இருந்தாலும் எனக்கு அப்பப்ப லூசாகிடுதே ... மாமி கூட தான் அழகா இருக்காங்க அவர் சின்ன பொண்ணா தேடி வச்சிக்கலையா. அதோட எதோ அவ புருஷன் போல திமிரா பேசுறா , மாமி நிலைமையை யோசிச்சாவே பாவமா இருக்கு ஏன்தான் இப்படி அலையிறாங்களோ ,உடம்பு சுகம் மட்டும்தான் வாழ்க்கையா ராம்,. 

"உடம்பு சுகம் வாழ்க்கை இல்லை ஆனா அதுவும் சேர்ந்தது தான் வாழ்க்கை சீதா

"ஓஓஓ ஆம்பள ஆம்பளைக்கு சப்போர்ட்டா?

"எத்தனை நாள் தான்,மனுசன் காஞ்சி கிடப்பார் மாமா... அதான் இளசா தேடி போயிருப்பார்.. அதோட இப்ப உள்ள சில பொண்ணுங்க செட்டில் ஆனவன் கிடைச்சா விடுறது இல்லை.. நீ உலகத்தை பார்க்கிறது வேற கண்ணுல .. உன்ன போல எல்லா பொண்ணும் இருக்க மாட்டா, எப்படா விழுவான் கொத்திட்டு போகலாம்னு காத்து இருப்பாளுக, ஒரு தடவை விழுந்துட்டா எழும்ப கஷ்டம் சீதா ..இதெல்லாம் உனக்கு புரியாது..

"ம்க்கும் புரியாதே இருந்துட்டு போறேன் ராம் .. ஆனா எப்படி முடியுது யாரோ தின்ன எச்சில் தட்டுல சாப்பிட அருவருப்பு படுறோம்.. ஆனா யாரோட ஆணையோ பெண்ணையோ எப்படி அணைக்க முடியுது... அரவிந்த் எச்சில் விழுங்க 

"அருவருப்பா இருக்காது மனைவி தவிர கணவன் தவிர இன்னொரு ஆணை பெண்ணை அப்படி தேட?? 

காதலுக்கு மட்டும் இல்லடி காமத்துக்கும் கண்ணு இல்ல.... தீண்டாமை பார்க்காது, ஏழை பணக்காரன் தெரியாது எப்படி பணம் எல்லாருக்கும் பொதுவோ அப்படியே காமமும் இங்க பொது ... பணத்தை பிச்சைக்காரன் தொட்டதுன்னு தூர போடுறோமா?? இல்லைல்ல, அதே போல இப்போ இதுவும் பழகி போச்சு ... அவரவர் தேவையை பொறுத்து உலகம் மாறி போச்சு சீதா ...

"என்ன ராம் இதுக்கு சப்போர்ட் பண்றீங்க 

"ச்சே சே நான் சப்போர்ட் பண்ணல சீதா, பட் உலகம் எங்கேயோ போகுது நீயும் கவனமா இருன்னு சொல்றேன்...  

"நீங்க சொல்றது எல்லாம் கேட்க்கும் போது பயமா இருக்கு ராம் .. 

"அதை விடுங்க சீதாலெட்சுமி, புருசனை தொட விட்டு ஒரு மாசம் ஆகுது இன்றைக்கு நைட் வழி உண்டா 

"ம்க்கும் பசங்களை வச்சிக்கிட்டு என்னத்த பண்ண போறீங்களாம்.... என்று மனைவி சிணுங்க 

"ஏதையாவது பண்ணிக்கிறேன், நீ ஓகே மட்டும் சொல்லு .. 

"பெரியவ தூங்கினதும் என்று மனைவி கண்ணை சிமிட்ட அவள் கனத்ததில் பச்சக் என முத்தம் வைத்தவன் அவளை சமாதானம் செய்த திருப்தியில் போக.. 

"ச்சை நான் ஒரு மடச்சி எவனோ தப்பு பண்ணினா ராமும் தப்பு பண்ணுவார்னு எப்படி யோசிக்கலாம் , அத்தனை பேர் எதிர்த்து நின்ன போதும் என்ன விடாம கல்யாணம் பண்ணி இன்ன வரை எனக்கு எந்த குறையாது வச்சி இருக்காரா அவர் அம்மாக்கிட்ட கூட விட்டு கொடுக்க மாட்டாரே 

"நாங்க பார்த்திருந்தா கூட இப்படி மாப்பிள்ளை அமைஞ்சு இருக்காது சீதா" என்று தாய் தகப்பன் சொல்லும் அளவு குணசீலன் அரவிந்த்.. தகப்பன் உடல் பலகீனம் ஆன போது கூட பத்து நாள் லீவ் போட்டு மருத்துவமனையில் இருந்து பார்த்து கொண்டு வீட்டில் விட்டான்.... ஒரு நாள் கூட அவளை குறை சொல்ல மாட்டான் .. இப்படி ஒரு கணவன் கிடைப்பது அரிதிலும் அரிது என்று மனம் அவனுக்கு வக்காலத்து வாங்க 

ஆனா ஏன் அந்த பொண்ணு கூட அங்க போனார் அதை பத்தி கேட்டா மழுப்புறார்..

ப்ச் முட்டாள் அவர் அஸிட்டெண்ட் மேனேஜர் ரெண்டு பேரும் சேர்ந்து தானே போகணும் 

அது ஓகே ஆனா ஏன் ஒரே பைக்ல போனதை மறைக்கிறார் 

"நீ ரொம்ப யோசிச்சு மறு அடி வாங்கிடாத 

"என்ன போய் அடிச்சிப்புட்டாரே

"தப்பு செய்யாதவனை பிடிச்சு நீ கள்ள வீடு வச்சிருக்கேன்னு சொன்னா 

"நான் அப்படியா சொன்னேன் ?? 

"நீ சொன்னது அப்படி தான் அவருக்கு புரிஞ்சு இருக்கும் பின்ன உன்ன விட்டு வைப்பாரா ?

"அதுவும் சரிதான் ... இன்னைக்கு சமாதானம் பண்ணிடணும் 

"எங்க விடிந்த நேரத்தில இருந்த அடைஞ்ச நேரம் வரை வேலை இருக்கு, அவர் பக்கதுல வந்தாலும் ஆசை வரல.. தூக்கம் தான் வருது, மனுசன கட்டிட்டு தூங்கினா நல்லா இருக்குமேன்னு தோணுது அப்படியே சேர ஆசை வந்தாலும், பசங்க முழிச்சிட்டா என்ன பண்ணண்னு பதை பதைப்பா இருக்கு சொந்த வீட்டிலேயே கள்ள குடித்தனம் பண்ண வேண்டி இருக்கு ... ம்ம் இன்னைக்கு எப்படியாவது அவருக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் என்று நினைத்தவள் பிள்ளைகள் தூங்கியதும் அர்விந்த் அருகே போய் படுக்க .. உடல் தேவை உயிரை வதைக்க அரவிந்த் மனைவி நைட்டி உள்ளே விரலை நுழைக்க 

ப்ச் ராம் பசங்க முழிச்சிட போறாங்க சீக்கரம் பண்ணுங்க போர்வையை எடுத்து இருவருக்கும் மூடி கொண்டாள் ...

ரொம்ப ஆசையா இருக்குடி இன்னைக்கு மட்டும் டீப்பா வேணும் சீதா அவள் பின் அழகில் அம்பு கொண்டு ஏவ 

ரெண்டு பசங்க வந்த பிறகு என்ன சேட்டை இது? வாங்க என்று அவனை அவசர கூடலுக்கு ஆயத்த படுத்தி, போர்வை உள்ளே வேகவேக அசைவுக்கு அவன் ஊக்கபடுத்திட இவன் கொண்ட கண்ட ஆசையில் , கிடைத்தது லாபம் நிலையில் அதீத அசைவு கொடுத்து அலுப்பு தீர்க்க அவனை விட்டு வேகமாக நகர்ந்தவள்..

நல்லவேளை பசங்க முழிக்கல வாஷ் ரூம் போயிட்டு வர்றேன் 

ம்ம் 

எப்போதும் போல அறக்க பறக்க குட்டி கூடல் ... அரவிந்த் சலிப்பாக குளியலறை உள்ளே போன மனைவியை பார்த்தவன், அருகே இருந்த போனை எடுத்தான் படுக்கையில் அமர்ந்து வாட்சப் திறக்க 

லவ் யூ 

மிஸ் யூ  

எப்ப டைட்டா ஹக் பண்ண வருவீங்க ? 

ரொம்ப டெம்ட் ஆகுது, உங்கள ரொம்ப தேடுறேன் என்று இன்னும் கண்ணை கூச செய்யும் படங்களும் செய்திகளும் வரிசை கட்டி வர, குளியலறை போன மனைவியை ஒரு பார்வை பார்த்து கொண்டவன் கைகள் அதற்கு ரிப்ளை செய்ய ஆரம்பித்தது... முகம் எங்கும் பரவசம் கொட்டி கிடந்தது அந்த பொய் வாழ்க்கை தரும் சுகத்தில் ... அது தந்த போதையில் தனக்கு என்று ஒரு குடும்பம் இருப்பதை மறந்து தான் போனான் அவனும் ....

உலகத்தை கெடுப்பது ரெண்டே விஷயம் தான் 

ஒன்று பணம் 

மற்றொன்று சுகம் 

இது இரண்டிலும் வழி விலகி போகிறவன் தான் அதிகம் !!!