பொய்யில் ஒரு மெய் 2
Poi2

2 பொய்யில் ஒரு மெய் !!
மாலை வேலை முடிந்து அரவிந்த் வீட்டுக்குள் வர, வீடு பளீச்சென்று கிடந்தது.. அதற்கு காரணம் அவன் மனைவி உண்மைதான் .... ஆனால் அவளோ, அழுக்கு நைட்டியில் எண்ணெய் வடிய வந்து நின்றாள்...
கையில் அழுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்று கோடீஸ்வரன் மனைவியாக இருக்க வேண்டும், இல்லை கட்டிய கணவன் பெத்த பிள்ளைகளை கண்டு கொள்ளாமல் முழு நேரமும் அலங்காரத்தில் இருக்க வேண்டும் ...
அவள் கோடீஸ்வரன் மனைவியும் கிடையாது.. தன் மனைவி பதவியை மறந்தவளும் கிடையாது, காலையிலிருந்து மாலை வரை ஓடி களைக்கும் உடல் .. இதில் எங்கே இருந்து தன் நலனை அவள் பார்ப்பது ... இரவு தூங்கப் போகும் முன்பு குளித்து இன்னொரு நைட்டியை மாட்டிக் கொண்டு அக்கடா என்று மகன் அருகே போய் படுப்பாள், எப்போது தூங்கினால் என்று தெரியாதே பல நாட்கள் தூங்கி விடுவாள் .. அந்த அளவு உடல் அடித்துப் போட்டது போல் வலிக்கும் ..இது எல்லாம் இல்லத்தரசிகளும் படும் வேதனை தானே..
அழுக்கு நைட்டியில் வந்து நின்ற மனைவியை எப்போதும் போல ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போய் சோபாவில் அமர்ந்தான் அரவிந்த்..
பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பெல்லாம் அவள் இப்படி கிடையாது.. சரியாக அவன் வேலை முடித்து வரும் நேரம் அழகாக சேலை அணிந்து, சிறிதாக பூ வைத்து பளிச் புன்னகையோடு அவனை வரவேற்பாள்... அவளை பார்த்ததும் இவனுக்கு அத்தனை சோர்வும் போய் உற்சாகம் ஒட்டிக் கொள்ளும்.... மனைவி பின்னாலேயே சுற்றிக்கொண்டு திரிவான்.. அவள் மல்லிகை மணம் குறையும் போது அவள் மார்பில் தலை வைத்து தூங்குவான்,
"ஏண்டி நான் வர்ற டைமாவது குளிச்சிட்டு கொஞ்சம் பூ வெச்சி பாக்குற மாதிரி நிக்க கூடாதா ?"
"ஏன் இப்போ எனக்கு என்ன குறைச்சல், சேலை கட்டிக்கிட்டு என்னால வேலை செய்ய முடியல ராம், அதோட நீங்க ஒன்னு வேணும்னு கேப்பீங்க உங்க மகன் ஒன்னு வேணும்னு கேட்கிறான், முழு நேரமும் கிச்சன்ல நிக்கறதுக்கு யாராவது அலங்காரம் பண்ணிக்கிட்டு நிப்பாங்களா?? நான் என்ன சின்ன பொண்ணா?? ரெண்டு குழந்தைகளை பெத்து இதோ உங்க மகள் சடங்காயாச்சு, இதுக்கு மேல பூவும் பொட்டும் வச்சு மினுக்கிட்டு இருந்தா, ஊர்ல என்ன என்ன சொல்லுவாங்க ??
"என்ன சொன்னா என்ன சீதா, நாம அழகு படுத்துவது நமக்காக, எனக்காக... வேலை முடிஞ்சு வரும்போது கண்ணுக்கு லட்சணமா என் பொண்டாட்டி என்ன வரவேற்கணும்னு நான் நினைக்க மாட்டேனா என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் சண்டையே நடந்து இருக்கிறது..
குடும்பம் கணவன் கணவனின் தேவைகள், பிள்ளைகளின் வேலைகள் என செய்து செய்து பெண்கள் அவர்கள் நேரத்தையும் அவர்களுக்கான சில ஆசைகளையும் அங்கே புதைத்தே விடுகின்றனர்... அதில் ஒன்றுதான் தன்னை அழகு படுத்திக் கொள்வது... அது ஒன்றும் தவறில்லையே மிகைப்படுத்தாமல், தன்னை எப்பொழுதும் சுத்தமாக , பார்ப்பதற்கு லட்சணமாக அழகான ஆடையில் நேர்த்தியாக வைத்திருப்பது நமக்கே ஒரு நல்ல மனநிலையை கொடுக்கும் என்று பெண்கள் மறந்து தான் போகின்றனர்..
ராம் ராம் போனில் படு பிஸியாக இருந்த அரவிந்த் மனைவி அழைப்பு கேட்க கூட இல்லை ..
ராம் ஹான் என்று பல அழைப்புக்கு பிறகு தலையை தூக்கினான்
"ம்ம் சொல்லு சீதா "
"எத்தனை தடவை கூப்பிட...
"ப்ச் கவனிக்கல என்ன ?
"இல்ல பக்கத்து வீட்டு லட்சுமி ஆன்டி பொண்ணுக்கு பெர்த்டே போயிட்டு வருவோமா?
நான் வரல சீதா வேலை இருக்கு "
"வீட்டுல என்ன வேலை உங்களுக்கு ... வாங்களேன் போயிட்டு வருவோம்...
"கொஞ்சம் கணக்கு முடிக்க வேண்டி இருக்கு சீதா மாச கடைசி வேற "
"ஓஓஓ அப்போ நானும் பசங்களும் போயிட்டு வரவா
"ம்ம் .... போயிட்டு வாங்க .. "என்றதும் சீதா அழைக்க மஞ்சள் சேலை கட்டி , ஒரு அட்டிகை ஒன்றை போட்டு கொண்டாள்..
காதல் திருமணம் என்றதும் தாய் தகப்பன் எதுவும் அவளுக்கு செய்ய விருப்பப்படவில்லை.. தாலி கூட மஞ்சள் தாலி தான்..பெத்தக் கடமைக்காக பெற்றவர்கள் திருமணத்தில் நின்றார்கள்.. அவ்வளவுதான் , அவள் போடும் மூக்குத்தியிலிருந்து காலில் மாட்டி இருக்கும் மெட்டி வரை அத்தனையும் அவள் கணவன் சம்பாதித்து அவளுக்காக போட்டது.. இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்ல... அவளுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து விடுவதில் அவனுக்கு இணை அவன் தான்... தன் கணவன் நியாபகத்தில் புல்லரித்துக் கொண்டே கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்தாள், சதை பிடிப்பான மேனி இரண்டு பிள்ளைகளும் தந்த புஷ்டியான வடிவான உடல்... சிறு சிறு நரை வேறு வர தொடங்கி விட்டது ... வயதுக்கு ஏற்ற உருவம் என்று நின்றாள்..
ராம் எப்படி இருக்கு , சேலை கட்டினாலே அவள் இடுப்பை வந்து கிள்ளும் கணவன் நியாபகம் வந்து அவன் முன் போய் நின்றாள்.. அவனுக்கு அவன் மனைவி எப்போதும் அழகாக இருக்க வேண்டும் அது எல்லா ஆண்களுக்கும் இருக்கும் இயல்புதான்.. ஆனால் அவன் நினைப்பது போல் எப்போதும் சேலை கட்டி பூவோடு அமர்ந்திருந்தால்... வேலையை யார் செய்வது? என அவள் அசந்த நேரம் அவன் கவனம் வேறெங்கோ போனதை அவள் அறியாளே!!
வீட்டுக்கு வேலையாள் போட்டுக் கொள்ளலாம், சீதா நீ என்ன மட்டும் பாத்துக்க.. உன் புருஷனுக்கு என்ன வேணும்னு கொஞ்சம் கண்ணை திறந்து பாருடி என்று அவன் அலுத்துக் கொள்வான்... அன்று விட்டு விட்டாள் இன்று பிடிக்க முடியாத தூரம் போயே போனான்..
ஏன் ஐயாவுக்கு மூணு நேரமும் வகைவகையாக சமைச்சு போட்டு நீங்க கொடுத்த ரெண்டு பிள்ளைகளையும் கவனமா பார்த்துக்கிறேனே அது போதாதா?? என்று உதட்டை சுளிப்பாள்.. அவனுக்கு அது போதாதே!!
எப்படி பெண்ணுக்கு சிலதை ஆணிடம் வெளிப்படையாக சொல்ல முடியாதோ ? அதேபோல ஆணுக்கும் பலதை பெண்ணிடம் இயல்பாக சொல்லி விட முடியாது, எனக்கு நீ தரும் நேரம் போதவில்லை , நீ தரும் தனிமை சுகங்கள் போதவில்லை அது வேண்டும் என்று கேட்க சங்கடமாக இருக்கும் அதை கேட்காமல் மென்று முழுங்கி விட்டு போய்விடுவான்.
தாம்பத்தியம் என்றாலே சுகம் மட்டும்தானா ??என்று கேட்டுவிடலாம் , ஆனால் கசப்பான உண்மை இனப்பெருக்கத்தை கூட்டவும், ஜனத்தொகையை பெருக்கவும் தான் இந்த திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன... காதலை வாங்கவோ அல்லது காதலுக்காக எல்லாம் திருமணங்கள் நடைபெறுவது இல்லை சந்ததி பெருக்கத்துக்கு சமூகம் உண்டாக்கிய ஒன்று திருமணம் என்பது மறுக்க முடியாத உண்மை....
திருமணத்தில் காதல்கள் மறக்கப்படுவதால் தான் விவாகரத்துகள் பெருகி கிடக்கிறது...மனைவி சலித்து விடுகிறாள், கணவன் அலுத்து போகிறான்...
ம்ம் நல்லா இருக்கு சீதா?? என்று போனையே அவன் பார்க்க
அவ்வளவுதானா??...
வேறென்ன? என்றான் தலையை தூக்கி அவளை பார்த்தபடி ரசிக்க அவளிடம் எதுவும் இல்லை என்றாகி போனதுவோ, அன்று ஈர்த்த எதுவும் இன்று ஈர்க்க வில்லை போலும்.. கடமையாக அவளை ஒரு பார்வை பார்த்தான்....
வர லேட்டாகும்னு நினைக்கிறேன் ராம் ..
"எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை சீதா முடிச்சிட்டு வா ... அப்போ போக வேண்டாம் என்று அடம் பிடிக்கும் கணவன் , இன்று போ என்பது போல நின்றான் ... பிள்ளையும் மனைவியும் வெளியே போன அடுத்த நொடி கதவை அடைத்து கொண்டு விசில் அடித்தவன், போனை தூக்கி கொண்டு உள் அறையில் அமர்ந்தான்.... முகத்தில் அவ்வளவு பிரகாசம் அது என்னவோ பொன்னை விட பித்தளை தான் பளபளக்கிறது... ஆனால் அவன் அறியானே பித்தளை ஒரு நாள் தான்யார் என காட்டி கொடுத்து விடும் என்று...
நான் இப்ப ப்ரீயாதான் இருக்கேன், நீ என்ன பண்ற..
அய்யா ப்ரீன்னா நானும் ப்ரீதான் "
"ப்ரீயா, அப்படின்னா புரியலையே? என்று உல்லாச பேச்சை தொடங்க.. கண்ட பேச்சுகளும் காட்சிளும் மணிக்கணக்காக போனது ,.
மாயை தேடும் உலகில்
அன்புக்கு விலை ஏது??
மாயை எப்போதும் அதிகமாக ஈர்க்கதான் செய்யும்
மனைவியாக வருபவளுக்குதான் ஏகப்பட்ட கடமை உண்டு , கள்ளத்தனமாக வருபளுக்கு உடல் தேவை,பணம் அதை தவிர எதுவும் தேவையில்லை..
மனைவி தன்னை அழுகு படுத்த தேவையில்லை ...
ஆனால் கண்டவள் தன்னை அழுகு படுத்தினால் தான் அவள் அழகு விலை போகும் ..
மனைவி கூச்ச நாச்சம் கொண்டு பேசினாள் குடும்ப பெண்ணா நீ என்று தூற்ற படுவாள் ,
ஆனால் அதே பரத்தை என்றால் அபச்சார பேச்சு இனிக்க பேசுவாள்
மனைவிக்கு ஒரு சட்டம் வைத்து தாம்பத்திய தர்மம் பேசும் ஆண்கள், கண்ட பெண்களிடம் அதை எதிர்பார்ப்பது இல்லை ..சுத்த பத்தமும் பார்ப்பது இல்லை ...
சபலங்கள் எல்லாம் எதோ ஒரு தேவையில் திருப்தி இன்மையால் தொடங்கியது தானே, ஆணோ பெண்ணோ தன் உடல் மன தேவை பூர்த்தி ஆகாத போதுதான் அதை தீர்த்து கொள்ள இடம் தேடுகிறார்கள்...
அரவிந்த் ஒன்றும் பெண் பித்தன் இல்லை ஆனால் இயல்பாக தன் உணர்வை அடக்க வேண்டிய மனைவியை நாடி நாடி தோற்று போனான் அதன் விளைவு வழி மாறி போய் கொண்டிருந்தான்....
தன் மனைவி தராத நேரத்தை இவள் தந்தாள்
தன் மனைவி தராத காமத்தை அவள் தந்தாள்
மனைவி தராத இன்பத்தை அவள் கொடுத்தாள் பின்ன என்ன வேண்டும்.. எல்லாம் மறந்து கண்கள் சொக்கி போய் இருட்டு அறையில் கொதிக்கும் உடலோடு அரவிந்த் கண் கிறங்கி கிடந்தான்.. வீட்டு முகப்பு மணி ஒலிக்க ..
நாளைக்கு பேசுறேன் என்று அவசரமாக போனில் உள்ள சட்டிங் எல்லாவற்றையும் நீக்கியவன் தன்னை சரி செய்து கொண்டு வந்து கதவை திறக்க ... மனைவி களைத்து போய் நின்றாள் ஒரு கையில் அவனுக்காக சாப்பாட்டையும் வாங்கி கொண்டு வந்திருந்தாள்..
ராம் அங்கேயே சாப்பாடு தந்தாங்க, உங்களுக்கும் வாங்கிட்டு வந்துட்டேன்
"ப்ச் எதுக்கு சுமந்துட்டு வர்ற? நான் எதாவது சாப்பிட்டுக்க மாட்டேனா சீதா
"உங்களுக்கு இப்படி விருந்து வீட்டு சாப்பாடுன்னா பிடிக்குமே ராம் , அதான் வேணுமான்னு கேட்டாங்க உடனே வாங்கிட்டு வந்தேன் ... "
கணவனுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருந்த மனைவிதான்... ஆனால் உணவு மட்டும் அல்ல , அவன் தேவை இன்னும் அதிகம் உண்டு என்பதை மறந்து , உணவில் அவள் கவனத்தை செலுத்தினாள்.... எல்லாம் முடித்து சீதா படுக்கையில் போய் விழ ... ராம் உடலில் உண்டான கொதிப்பை அடக்க மனைவியை மெல்ல அணைக்க ..அவளோ கீச்சு குரலில் முகத்தை சுருக்கி கொண்டு
"ராம் ப்ளீஸ், அலைச்சல் சாஸ்தி உடம்பு எல்லாம் வலிக்குது வீக் எண்டு பண்ணுவோமா??என்று சீதா பாவமாக அவனை திரும்பி பார்க்க.. அரவிந்த் உடனே தலையாட்டி பெருமூச்சு விட்டவன் . கட்டிலில் நகர்ந்து படுக்க... இவள் விட்ட தூக்கத்தை தொடர அவன் போனில் மெசேஜ் வந்தது ஷில்பாவிடம் இருந்து
நாளைக்கு மீட் பண்ணுவோமா அரவிந்த் சார்? என்று இருக்க யோசனையாக மனைவியை பார்த்த அரவிந்த் ...
சீதா நாளைக்கு மதிய சாப்பாடு வேண்டாம் "
"ஏன் என்னாச்சி ராம்?" தூக்கத்தில் பதில் வர
கிளைண்ட் ஒருத்தரை மீட் பண்ண போறேன் அங்கேயே சாப்பிடுக்கிறேன்
"ஹோட்டல் சாப்பாடா உங்களுக்கு ஒத்துக்காதே ராம்
""ஒரு நாள் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது சீதா ...
"ப்ச் சரி ராம் என்று அவள் கொட்டாவி விட
"நாளைக்கு மீட் பண்ணலாம் ஷில்பா" என்று பதில் அனுப்பி விட்டு அரவிந்த் படுத்தான்..
ஒரு குடும்பம் கட்ட படுவதும் பெண்ணால்தான்
ஒரு குடும்பம் இடிக்கப்படுவதும் ஒரு பெண்ணால் தான்
ஒருத்தி பார்த்து பார்த்து கட்டி வைத்திருந்தாள் ,
ஒருத்தி இடிக்க காத்து கொண்டிருந்தாள்...