தெள்ளழகே-16

தெள்ளழகே-16

தெள்ளழகே!-16

மோகன் ராதாவிடம் காலையில் பேசிச்சென்றதோடு சரி. அதன்பிறகு எந்தவிதத்திலும் அவளிடம் பேசவோ அவளது கவனத்தைத் திருப்பவோ எதையும் செய்யவில்லை.அவனுண்டு அவன் வேலையுண்டு என்று இருந்துவிட்டான்.

ராதாவுக்கே ஆச்சர்யம். என்னடா இது இண்டுவருஷமா நம்ம என்னதான் அமைதியாக இருந்தாலும் வந்து வந்து டார்ச்சர் பண்ணிட்டிருப்பான். திடீர்னு நல்லவனா மாறிட்டானா? வாய்ப்பில்லையே நான் சம்மதிக்கிறேனா இல்லையான்னு தெரியாமலே கிறுக்குத்தனமாக எதையெதையோ செய்திட்டிருந்தவன் இவ்வளவு சீக்கிரமாக திருந்திட்டானா? என்று யோசனையிலயே இருந்தாள்.

அவனிடம் என்னவாயிற்றுன்னு கேட்கலாம்தான். ஆனால் நம்மபோய் பேசி அவன் மீண்டும் முருங்கைமரம் ஏறிட்டாம்னா என் நிலைமை இந்த ஆபிஸ்ல அவ்வளவுதான்.

ஆனால் முன்னாள் புருஷன் கிருஷ்ணன் என்று என்னலாமோ உளறினானே? கல்குவாரியெல்லாம் இவனுக்கு எப்படித்தெரியும்? என்று குழம்பிப்போய் உட்கார்ந்திருந்தவளிடம் அவளது ஆபிஸ்மேட் சரண்யா வந்தாள்.

“என்னடி மோகன் சாருக்கு மதுரையில் வைச்சு உன் கிருஷ்ணன் செமைத்தையா விருந்துக் கொடுத்து அனுப்பியிருப்பாரு போல? ஆனாலும் கிருஷ்ணனுக்கு உன்மேல இம்பூட்டு அன்பு ஆகாதுடி. விவாகரத்து செய்தபின்னும் அந்தக்காதல் அப்படியேதான் இருக்குப்போல. நீதான் மூன்று வருஷமா பிரிஞ்சிருக்கிறதா சொல்லிட்டு இருக்க”

“தெளிவா சொல்லுப்பா. என்ன நடந்ததன்னு எனக்கு ஒன்னுமே தெரியாது. நானே இரண்டுமூணு நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன்” என்று அங்கு நடந்ததைச் சொன்னாள்.

“அப்படியா?கிருஷ்ணனுக்கு இரண்டாவது கல்யாணம் முடிஞ்சுட்டுதா?இல்லை மோகன் சொன்னதை வைச்சுப் பார்க்கும்போது அதுக்கு வாய்ப்பேயில்லையே. நீ நல்ல விசாரிச்சுப்பாரு”

“எங்க அண்ணனும் அண்ணியும் இன்னும் மதுரையில்தான் இருக்காங்க. அவங்க கல்யாணத்திலிருந்து இன்னும் வரலை. செல்வம் அண்ணாவும் அண்ணியும் கல்யாணத்துக்குப் போகலை. அப்பா தனிக்குடித்தனம் போகச்சொன்னதும் உடனே வந்து வீடு பார்த்துக் காலிபண்ணிட்டுப் போயிட்டாங்க. இனி இவங்கதான் வீட்டை மாத்தணும். கல்யாணம் முடிஞ்சு வந்து மாத்துறதா சொன்னாங்க. அதுதான் இன்னும் வரலை”

“ஓஓ.ஆனால் அவங்க வீடு பார்க்கதுக்காக நாட்களைக் கடத்துறாங்கன்னு தோணுதுடி. அங்கக் கல்யாணம் நின்னிருக்கும்னு எனக்குத் தோணுது ஏதுக்கும் உங்க அண்ணனுக்கு போன் பண்ணிக் கேளேன்”

“கேட்டு மட்டும் என்னாகப்போகுது. அவனுக்குக் கல்யாணம் முடிஞ்சாலும் முடியாட்டாலும் எங்க விவாகரத்து முடிஞ்சு நாங்க பிரிஞ்சது பிரிஞ்சதுதானே. இதுல எனக்கென்ன பிரச்சனை”

“உனக்கு ஒருபிரச்சனையும் இல்லைப்பா. ஆனால் மோகனுக்கு உன் முன்னாள் கணவனால் பிரச்சனையாகிருக்குதே. அது எதுக்குன்னு யோசி

அப்போ விசயம் வெட்ட வெளிச்சமாகப் புரியும்”

“மோகன் எதுக்கு மதுரைக்கு வந்தானாம். பைத்தியம் மாதிரி அதுக்கு கிருஷ்ணன் அடிச்சு விட்றுப்பாரு”

“மோகனை எதுக்கு கிருஷ்ணன் அடிக்கணும் அதுக்குப் பதில் சொல்லு?”

“அதுதான் சொன்னனே”

“ப்ச்ச் என் பொண்டாட்டிப் பின்னாடி இனி சுத்தினனா கொன்றுவேன் .உன்னை இதே கல்குவாரியில் வைத்து மூடிடுவேன்னு மிரட்டித்தான் இரண்டு நாள் அங்க வைச்சு நல்லக் கவனிச்சு விட்றுக்காரு”

“ஓஓஓ”

“என்ன ஓஓஓ போடுற”

“ப்ச்ச் அது அவங்களுக்குள்ள பிரச்சனை”

“அது உன்னால் வந்த பிரச்சனை உன்மேல் உள்ள உரிமைக்காக வந்தப் பிரச்சனை”

“இதுல எங்கிருந்து உரிமை வந்துச்சு. இவனுக்கும் என்கிட்ட எந்த உரிமையும் இல்லை. அவனுக்கும் இருந்த உரிமை இல்லாமல் போயிற்று.இவனுங்க லூசுங்க மாதிரி அடிச்சிக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும். அவனுங்களாச்சு அவனுங்க சண்டையாச்சு”என்று அதற்குமேல் பேசப்பிடிக்காது அமர்ந்துவிட்டாள்.

“க்கும் உன் வாழ்க்கை திரும்பவும் கிருஷ்ணனின் கைக்குள் போகப்போகுது அதுதான் நிதர்சனம். அவன் உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டான். அவனும் யாரோடும் வாழமாட்டான் அதுதான் உண்மை. பாரு நான் சொன்னதுதான் நடக்கப்போகுது” என்று சொல்லிவிட்டு அதற்குப்பிறகு அவளோடு இந்தப் பிரச்சனைகளைப் பத்தி பேசவேயில்லை.

மோகனுக்கு அவளை மறுபடியும் பார்த்ததும் அவனால் அவளோடு பேசாது இருக்கமுடியவில்லை.

மாலை அவள் வீட்டுக்குக் கிளம்பும்போது நேராக அவள் முன்பு வந்தவன்”நீ ஏற்கனவே விவாகரத்தானவள்னு தெரியும். தெரிந்துதான் காதலித்தேன் ஒரு மகள் இருக்கான்னும் தெரியும். அவளையும் என் மகளாக ஏற்றுக் கொண்டுத்தான் கல்யாணம் என்றெல்லாம் உன்னிடம் நெருங்கி வரலாம்னு யோசிச்சேன். ஆனால் எந்த கால்யாணத்துல இருந்து வேண்டாம்னு உன் முன்னாள் கணவரிடமிருந்து பிரிந்து வந்தியோ அதே உறவுக்குள்ளதான் நீ மீண்டும் போகப்போறன்னு நான் நினைக்கவேயில்லை. அந்தாளைவிட உனக்கு என்னால் ஒரு நல்லவாழ்க்கையும் நிம்மதியான குடும்ப உறவுகளையும் தரமுடியும்னு நம்பினேன். ஆனால் அது உனக்குத் தேவையில்லைபோல. எனிவே கிருஷ்ணனுக்கும் உனக்கும் வாழ்த்துகள். உன் முடிவை என்னால் ஏத்துக்க முடியலைன்னாலும் உன் சந்தோசமான முடிவுக்கு என் வாழ்த்துகள். பை நான் பிரான்ச் மாறிப்போறேன். இனி உன்னைப்பார்த்தால் நல்லாயிருக்காது” என்றவன் அங்கிருந்து அவளைத் திரும்பிப்பார்க்காது அவளது வாழ்க்கையில் இருந்து மொத்தமாக விலகிப்போய்விட்டான்.

மோகன் நல்ல மனிதன்தான். ஆனால் அதை என்னிடம் காண்பிக்க முயன்றிருக்க வேண்டாம். நான் யாருடைய பரிதாபத்திலும் நல்லவாழ்க்கை வாங்கி வாழ விரும்பவில்லை. அதுவும் காதல் என்கின்ற பெயரில் இன்னொருமுறை பாழுங்கிணத்துல விழ விரும்பவில்லை. ஒருமுறை விழுந்து எழுந்ததே போதும் என்று தனது முடிவில் எப்போதும்போல உறுதியாக இருந்தாள்.

இப்போது வீட்டுக்கு போனவளுக்கு அம்மாவிடம் கிருஷ்ணன் கல்யாணத்தைப் பத்திக் கேட்கலாமா ? வேண்டாமா? என்று இருமனதாக இருந்தது.

அதற்குள் மகள் அவளது மடியில் ஏறி உட்கார்ந்துக்கொண்டு கதைகள் பேசத்தொடங்கினாள்.

அதில் கவனமில்லாது இருந்தவளுக்கு மகள் சொன்ன கடைசி வார்த்தையில் “என்ன சொன்ன வெண்ணிலா?”என்று வேகமாகக் கேட்டாள்.

“அப்பா ஸ்கூலுக்கு வந்தாங்க”

“யாரு அப்பா?”

“வெண்ணிலா அப்பா?”

“என்ன?”என்று அதிர்ந்து மகளைப் பார்த்தாள்.

“அவர் எப்படி நீ படிக்கிற ஸ்கூலுக்கு வர முடியும்? வெண்ணிலா யாரையோ பார்த்து அப்பான்னு சொல்லக்கூடாது புரியுதா”

“இல்லம்மா நம்ம ஊர்ல பார்த்தோமே கிருஷ்ணாப்பா என்னை தூக்கிட்டு வந்தாங்களே அப்பா”

“என்னது கிருஷ்ணாப்பா வா? எங்கப்பார்த்த? எப்படிப்பார்த்த?” என்று தனது அம்மாவைத் திரும்பிப் பார்த்தாள்.

“அது கிருஷ்ணன் மருமகன் பாப்பா எந்த ஸ்கூல்ல படிக்கிறான்னு போன் பண்ணி கேட்டான் சொன்னேன்.

அவன் நான் போறதுக்குள்ள அங்க வந்துக் காத்திட்டிருந்தான்.நான் போனதும் அவனும் கூடவே வந்துப் பாப்பாவைப் பார்த்துப் பேசிட்டுப் போனான்”

“யாருக்கிட்டக் கேட்டுட்டு வந்தான். இத்தனை நாள் எங்கப்போச்சு பாசம் மயிரெல்லாம். இப்போ திடீர்னு மகள்மீது என்ன அக்கரை வேண்டிக்கிடக்கு. என்னை சாகடிக்க புதுசா ப்ளான் எதுவும் போடுறானா என்ன?”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.மனுஷங்க அப்படியேவா இருந்திடுவாங்க மாறுவாங்கல”

“அதேதான் நானும் சொல்லுறேன். மனுஷங்க மாறுவாங்கள்ல அப்போ நான் ஏன் மாறக்கூடாது.ஸஎனக்கு என் மனதளவில் எந்த மாற்றமும் வந்திருக்காதா?”

“விதண்டாவாதத்துக்கு ஏதும் பேசக்கூடாது ராதா. அதுசரியில்லை. நீ மாறிட்டன்னா என்ன அர்த்தம். அந்த மோகனைக் கல்யாணம் பண்ணிக்க மனசு மாறிட்டுதா?”

“ஆமா எனக்கு என் பழைய புருஷன் தேவையில்லன்னு மனசு சொல்லப் போய்தானே பிரிஞ்சு வந்து வாழ்ந்திட்டிருக்கேன். திரும்பத் திரும்ப அவனைப்பத்தியே பேசிட்டிருக்க. முடிஞ்சது முடிஞ்சதுதான்மா. இனி ஒட்டாது .நீயா ஏதாவது செய்தன்னு வையேன். நான் என் மகளைத் தூக்கிட்டு எங்கேயாவது கண்காணாத இடத்துக்குப் போயிடுவேன்”என்றவள் வந்தக்கோபத்தில் வெண்ணிலாவின் முதுகில் லேசாக அடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளே சென்றபிறகுதான் ஞாபகத்துக்கு வந்தது ”ஆமா அவன் எப்படி இங்க வந்தான்? நேத்துதானே கல்யாணம் முடிஞ்சிருக்கு.ஒரே நாளில் எப்படி சென்னைக்கு வந்தான்?”என்று சந்தேகம் வந்தது.

“உடனே வெளியே வந்தவள் ஆமா அவன் எப்படி இங்க வந்தான். புதுப்பொண்டாட்டியோடு ஹனிமூன் போக இங்க வந்துட்டானா என்ன? அவன்கிட்ட சொல்லிவை. இனி மகள் பக்கம் வந்தாம்னா புதுக்கல்யாணம் பண்ணிருக்கதை வைச்சு வெண்ணிலாவை சுத்தமாக பார்க்கவே முடியாதபடி செய்திடுவேன்னு”

“க்கும் இதுலயே இரு.உன் மனசை மட்டும் மாத்திக்காத.ஸஉன் மனசு மாறதவரைக்கும் உன் வாழ்க்கை இப்படித்தான் நரகமாகப்போகும்.தாய் சொல்லயும் கேட்கமாட்ட தகப்பன் சொல்லுறதையும் கேட்கமாட்ட .அப்போ எப்படித்தான் வாழணும்னு இருக்க?”

“தாயே தாமரை விடு நிறைய சாபம் விட்டுட்ட அந்த சாபத்தையெல்லாம் மொத்தமாக வாங்கிட்டுத்தான் இப்படி சாகமா செத்துட்டிருக்கேன். இன்னும் என்ன எங்கக் கொண்டுபோய்விடப்போகுதோ தெரியல.மொத்தமாக பாடையில ஏத்திவிடுறவரைக்கும் சாபம் போடுவியா போட்டுக்க போட்டுக்க”என்றவள் பெரிய கும்பிடாகப்போட்டாள்.

அதில் தாமரை சட்டென்று கண்கலங்கிவிட்டாள் ”என்னடி இது நான் சாபம்விடுறேனா?உன் வாழ்க்கைக்காகத்தானே பேசுறேன்”

“போதும் எல்லோரும் என் வாழ்க்கைக்கா பேசுறேன்னு பேசுறேன்னு என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொன்னது போதும்.உடைஞ்சது ஒட்டாது அதைமட்டும் ஞாபகத்துல வைச்சுக்க.நீ ஒட்டவைக்க முயற்சிப்பண்ணாதே.எனக்கு வலிக்குது” என்றவள் அதற்குமேல் தாமரையோடு பேசப்பிடிக்காது போய்விட்டாள்.

இருந்தத் தலைவலிக்குக் கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கலாம்னு தூங்கிக்கொண்டிருந்தாள். திடீரென்று ஏதோ சத்தம் கேட்க என்னவென்று எழுந்து வந்துப் பார்த்தாள்.

அங்கே நடுவீட்டில் கிருஷ்ணன் உட்கார்ந்திருந்தான்.அவள் கதவைத் திறக்கவும் அவன்தான் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்?

மைதிலியும் மணிகண்டனும் அமைதியாக இருந்தனர். அவர்களைப் பார்த்ததும் “இதுங்க இவ்வளவு அமைதியாக நல்லபிள்ளைங்களா இருக்காதுகளே? இவன் வேற வந்திருக்கான் என்னவாக இருக்கும்?” என்று யோசித்தாலும் எதுவுமே கேட்காது கிச்சனுக்குப் போய் காபிப்போட்டுக் குடித்தாள்.

தாமரை மூத்தமகனைப் பார்த்த சந்தோசத்தில் அது இதென்று சமைக்க எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

அவரையே மேலும் கீழும் பார்த்தவள் ஒன்றுமே சொல்லாது அமைதியாக காபியைப்போட்டு எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழையவும் மணிகண்டன்” ராதா மச்சான் வந்திருக்காரு பாரு என்னனு கேட்கமால் போற? என்ன நினைச்சிட்டிருக்க?”என்று வழக்கமான பாணியில் திட்டினான்.

அவன் சொன்னதும் திரும்பிப்பார்த்தவள் “உன் மச்சான் வந்திருக்காம்னா நீ பார்த்துப்பேசு நான் எதுக்குப் பேசணும்? உன் பொண்டாட்டிக்கு தம்பியின்றதுனால எல்லாம் பேசமுடியாது. நீ உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனாக இருக்க.அவங்கெல்லாம் அப்படியில்லையே. அதுதான் அவனைப் பார்த்துக்க அவனோட புதுப்பொண்டாட்டி இருப்பாள்ல அவக்கிட்டப்போய் சொல்லு. வந்து அவன்கிட்ட பேசிட்டிருப்பா வந்துட்டானுங்க மாச்சான்கிட்ட பேசு மாமான் கிட்டப்பேசு மயிராண்டிக்கிட்டப் பேசுன்னு”என்று புது ராதாவாக தைரியமாகப் பேசினாள்.

“என்னப்பேசுற நீ? அவன் இவன்கின்ற உன் புருஷன்னு மரியாதை இல்லையா? மரியாதைக்கொடுத்துப்பேசு”

“அப்படியெல்லாம் மரியாதைக்கொடுத்துப் பேசமுடியாது. என்ன செய்வ?”

“ஏய் என்ன நீ என் தம்பியை மரியாதை இல்லாமல் பேசுற? இதுசரியில்லை. அவன் உன்னைப் பார்க்கத் தான் அங்கிருந்து வந்திருக்கான்”

“என்னை எதுக்கு அவன் பார்க்கணும்? அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே?”

“அதெப்படி சம்பந்தமில்லைன்னு சொல்லுவ அவ உன் புருஷன்டி”

“என் புருஷனா?தருணிகா புருஷனா? என் முன்னாள் புருஷன். தருணிகாவோட இன்னாள் புருஷன்”

அவள் பேசுவதை எந்தவிதத்திலும் கோபப்படாது சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்.

“என்ன தம்பி நீ இவளுக்காக தருணிகாவையே வேண்டாம்னு வந்திருக்கிற. ஆனால் இவ என்னடான்னா உன்னை இப்படி மரியாதை இல்லாமல் பேசுறா. இதுக்குத்தான் இவ்வளவு தூரம் வந்தியா?” என்னு மைதிலி திரும்பித் தம்பியிடம் கேட்டாள்.

“நம்ம மச்சான் நீ பேசும்போது இப்படித்தானே இருப்பாரு.நானும் அப்படி இருக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். பொண்டாட்டிக்கு அடங்கிற புருஷனா அதுதான் என் பொண்டாட்டி பேசுறதைக்கேட்டு ரசிச்சிட்டு இருக்கேன்” என்று உதட்டில் புன்னகையோடு ராதாவைப் பார்த்தான்.

அவனது பார்வையைப் பிடிக்காது உள்ளே செல்ல முயன்றவளைக் கூப்பிட்டான்.

“அடியே ராதா என் பொண்டாட்டியே! நீ மட்டும்தான் இந்த கிருஷ்ணனுக்கு பொண்டாட்டி. நான் எப்போதும் இந்த ராதாவுடைய கிருஷ்ணன்தான். அது நான் சாகுறவரைக்கும் மாறாது. மாத்தவும் பிடிக்கலை. அதுதான் உனக்காக இல்லை இல்லை நமக்காக இரண்டாவது கல்யாணத்தை நிறுத்திட்டு வந்திருக்கேன். அப்புறம் அந்த மோகனையும் நான்தான் அடிச்சு விரட்டினேன்.ஏன் தெரியுமா?”

ஏன் என்று கேட்காமல் எதற்கு என்பதுபோல் அவளது பார்வை இருந்தது.

“அதுவா இந்த கிருஷ்ணன் ராதாவுக்கு மட்டும்தான்னு சொன்னேன்ல அதேமாதிரி இந்த ராதாவும் இந்த கிருஷ்ணனுக்கு மட்டும்தான்.அதை எவனாலயும் மாத்த முடியாது”

அப்படியா என்பதுபோல் கைகளைக் கட்டிக்கொண்டு தெனாவெட்டாக அவனை பார்த்தாள்.

“ஆமா எவன் குறுக்க வந்தாலும் குடலை உருவி அவனை கல்குவாரியில கொண்டுபோய் புதைச்சிடுவேன்.கொன்றுவேன்!” என்று உதட்டில் இருந்த புன்னகை மாறி அப்படியே ரௌத்திரம் தெரிந்தது.

இவனென்ன புதுசா மாறியிருக்கான் என்று அதிர்ந்து அப்படியே ராதா நின்றுவிட்டாள்.