தெள்ளழகே-17

தெள்ளழகே!-17
கிருஷ்ணன் அதிர்ந்து நிற்கும் ராதாவையே பார்த்திருந்தவன் காபியை நிதானமாகக் குடித்துமுடித்துவிட்டு எழுந்தான்.
அதைப்பார்த்த ராதா கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அப்படியே அறைக்குள் போக திரும்பிக் காலடி எடுத்து வைத்தாள்.
“நான் சென்னையில்தான் இருப்பேன். உன்னை என்கூட கூட்டிட்டுப் போகிறவரைக்கும். உனக்கு என்னைப் பார்க்கணும்னு தோணுச்சுன்னா போன் பண்ணு. அதே நம்பர்தான் வைச்சிருக்கேன். அதே காலர் ட்யூன்தான் இன்னும் மாத்தவேயில்லை. சொன்னது புரியும்னு நினைக்கிறேன் என்றவன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
அதற்கு அவளோ உதட்டைசுழித்தவள் போடா டேய்.. நீயெல்லாம் ஒரு மனுஷனா! என்ற ரீதியில் பார்த்தாள்.
அதைப்பார்த்தவன் இன்னும் சிரித்தவன் அப்படியே பறக்கும் முத்தத்தை அவளை நோக்கி கொடுத்தான்.
அதைப்பார்த்தவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.அவன் பேசியதை யெல்லாம் கேட்டும் கேட்காத மாதிரியே உள்ளே சென்றவளுக்கு அவன் பேசினதுக்கான எந்த உணர்வும் இல்லை.எருமை மாடு வந்து சத்தம்போட்டா யாராவது மதிப்பாங்களா? என்ற ரீதியில் விட்டுவிட்டாள்.
கிருஷ்ணன் அப்படியே அவள் வருவாளா? என்று பார்த்து இருந்தான்.அவள் வருவதுபோன்று தெரியவில்லை என்றதும் மகளை மட்டும் மடியில் தூக்கிவைத்துவிட்டு அப்படியே கொஞ்சநேரம் இருந்தான்.
அதற்குள் நல்லத்தம்பி வெளியே சென்றிருந்தவர் வந்துவிட்டார்.
மணிகண்டனையும் மைதிலியையும் பார்த்ததும் ”எப்போ உன் பொருட்களையெல்லாம் எடுத்துட்டு போற. செல்வம் தனியாக போயிட்டான். நீ இன்னும் வீடு பார்க்கலையா என்ன?எனக்கு என் பொண்டாட்டியோட ஹெல்த் முக்கியம். என் மகளோட நிம்மதி முக்கியம்.நீ உன் பொண்டாட்டியை தாங்குற மாதிரி நான் என் பொண்டாட்டியை இப்போ புத்தி வந்த பிறகாவது நல்ல பார்த்துக்கணும்ல. உன் பொண்டாட்டி சும்மா இருப்பாளாம் என் பொண்டாட்டி இந்த வயசுலயும் வேலை செய்யணுமா?போங்க போங்க சீக்கிரம் பொருட்களை எடுத்துட்டுப்போங்க. இல்லைன்னா அவ்வளவையும் வெளியே அள்ளிப்போட்டிருவேன்”என்று கிருஷ்ணன் இருப்பது தெரிந்தும் வேண்டுமென்றே பேசினார்.
கிருஷ்ணனுக்குக் கோபம் வந்தாலும் அமைதியாக அவரைப் பார்த்தான்.
“என்ன கிருஷ்ணா நான் சொல்லுறது சரிதானே? உங்கம்மா எங்க ராதாவை இதைவிட மோசமாக நடத்தினாங்களாம். நாங்க அப்படியெல்லாம் நடத்தமாட்டோம். கொஞ்சமே கொஞ்சம் மனுஷத்தன்மை இருக்குல்ல. அதான் தனிக்குடித்தனம் போகச்சொல்லிட்டேன். பிடிக்கலையா விலகி இருந்துக்கங்க. அதுக்கா ஒரேடியாக வெறுக்கவா முடியும்?”என்று அவனிடம் தீர்வைச் சொன்னார்.
அதைக் கேட்டதும் கிருஷ்ணனுக்கும் மண்டைக்குள் மணி அடித்தது. இப்போ ராதாவை வான்னு கூப்பிட்டாலும் அவள் என்னை நம்பி வந்தாலும் இவரு சொன்னமாதிரி நல்லா வாழணுமே. அதுக்கு எங்கவீட்டுக்கு எப்படிக் கூட்டிட்டுப் போகமுடியும். தனிக்குடித்தனம் தானே சரியாகவரும் ஆனால் அவளை கூட்டிக்கொண்டுப்போய் எங்கே வாழ வைப்பேன் அவள் எந்த நரகம் வேண்டாம் என்று வந்தாளோ அதே நரகத்துக்குள்ளேதான் போகமுடியும். இப்படி இருக்கும்போது அந்த வீட்டுக்குள்ளே மறுபடியும் ராதாவை கூட்டிட்டுப்போக முடியுமா என்ன? அம்மா அளை எப்படி நடத்துவாங்க? ராதை எப்படியாவது சமாளிச்சிப்பாள்தான். ஆனால் அதே சூழலுக்குள் மீண்டும் தள்ளிவிட நான் அரக்கன் இல்லை. இப்போது புது கிருஷ்ணாவா இருக்கனே. இதெல்லாம் யோசிக்கலையே!
கிருஷ்ணா இப்போதுதான் உண்மையான சூழ்நிலையில் இருந்து ராதாவைப்பத்தி யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
இந்த பத்துவருஷத்தில் அக்காவையும் அக்கா குழந்தைகளுக்கு தங்கம்போல தாங்கின மாமனார் மாமியாருக்கூடவே பிரிவு வந்துருக்கு. நீங்க விலகி இருங்க தனிக்குடித்தனம் போங்கன்னு சொல்லுறாங்களே. அப்போ என் அம்மா அப்பாகிட்ட ராதா எப்படி இருந்திருப்பாள். இதுக்கப்புறம் நான் என்னோட வாழ்க்கை சரி பண்ண என்னசெய்யபோறேன்’ என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
“என்னப்பா எங்களை நாயை விரட்டுற மாதிரி விரட்டுறீங்க?”என்று மணிகண்டன் ஆதங்கப்பட்டான்.
“இதை நான் மூணு வருஷத்துக்கு முன்னாடியே செய்திருக்கணும். என் மகளை நாயை விடக் கேவலமா நடத்தி அவ வாழ்க்கையே வேண்டாம்னு விரட்டுனவங்க வீட்டுல உள்ளப் பொண்ணை நானும் அதே மாதிரி விரட்டாமல் என் மகனோடு சந்தோசமா வாழவிட்டேன்ல அதைச் சொல்லணும் முதல்ல. ரொம்ப பேசின உனக்கு என் சொத்துக்கள்ல இருந்து சல்லிக்காசு கிடையாதுன்னு எழுதி வைச்சிடுவேன். உன் பொண்டாட்டி வீட்டுல போய் உட்காரு போ போ”என்று விரட்டினார்.
“எதுக்கு இப்போ எங்கமேல இவ்வளவு வன்மத்தையும் பழியையும் கொட்டுறீங்க. உங்க மகள் வாழாமல் வந்ததுக்கு நான் என்ன செய்யமுடியும்? நான் வரதட்சணைக் கொடுமைன்னு போலீஸ்ல கேஸ் குடுப்பேன் இந்த வீட்டைவிட்டுப் போகமாட்டேன்”
“ஓஹோ வரதட்சணைக் கொடுமைன்னு யாரு பேருல கேஸ் குடுப்ப? என் பேருல மட்டும்தானா இல்லை இந்த நிக்கிறானே மானங்கெட்ட மலைமாடு உன் புருஷன் அவன் பேருலயுமா?”
அதுக்கப்புறம்தான் அச்சோ கோபத்துல மைதிலி ரொம்ப பேசுறாளே என்று முதன்முறையாக “ மைதிலி அமைதியா இரு அப்பாக்கிட்ட நான் பேசிக்கிறேன்” என்று மணிகண்டன் அடக்கினான்.
“எதுக்குடா என்னை அடக்குற. உங்கப்பனை அடக்கு.நான் எதுக்கு அடங்கிப்போகணும். நான் எங்கம்மா வீட்டுக்குப்போறேன். கண்டவன் பேசுறதையெல்லாம் நான் கேட்கணுமா?” என்று மணிகண்டனையும் நல்லத்தம்பியையும் அவமரியாதையாகப் பேசினாள்.
நல்லத்தம்பிக் கோபத்தில் மணிகண்டனைப் பார்க்க “என்ன பேசுற மைதிலி? பொம்பளைக்கு இவ்வளவு வாய் ஆகாது. என்னையும் எங்க அப்பாவையும் மரியாதை இல்லாம பேசுற! இப்படித்தான் உங்க வீட்ல வளர்த்தாங்களா? இப்படித்தான் உங்க அம்மா தம்பி எல்லாம் பேசிப்பேசியே எங்க ராதாவைக் கொடுமை படுத்தினீங்களா?” என்று சந்தடிசாக்கில் ராதாவுக்காவும் பேசிவிட்டான்
“என்ன? என்ன நாங்க கொடுமைப்படுத்தினமா? யாரு கிட்ட என்ன பேசுறீங்க? மரியாதை பேசுங்க” என்று மணிகண்டனின் சட்டையை பிடித்து அடிக்காத குறையாக மைதிலி உசுப்பினாள்.
அவ்வளவுதான் தாமரை மைதிலியிடம் ஓடிவந்து மைதிலி என்று அவளயுக் கையை பிடித்து இழுத்து “யார அடிக்க கையை ஓங்குகிற? அவன் உன் புருஷன்டி நான் பெத்த பிள்ளை. என் பிள்ளையை அடிக்கவே கை ஓங்குவியா?: என்று மைதிலியை பளாரென்று தாமரை அறைந்து விட்டார்.
அவ்வளவுதான் மைதிலி உடனே “என்னை அடிக்க நீங்க யாரு. மாமியாருன்னா பெரிய இவளா?” என்று தாமரையை அடிக்கக் கையோங்கவும் மணிகண்டன் அவனையும் அறியாது கோபத்தில் மைதிலியை அறைந்துவிட்டான்.
வாழ்க்கையில் முதல் முறையாக அப்போதுதான் மணிகண்டனின் கோபத்தை மைதிலி பார்த்தார் அவன் அடித்த அடியில் சுருண்டு போய் விழுந்து விட்டாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஓடிப்போய் தனது அக்காவை தூக்கி நிறுத்தினான்.
“பாருடா தம்பி உன் கண்ணுமுன்னாடியே உன் அக்காவை எப்படி அடிக்கிறாங்கன்னு. அம்மாவும் மகனும் என்னைக் கொடுமைப் படுத்துறாங்க. வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இவங்களைப் புடிச்சு உள்ளத் தள்ளுவோம்.வா வா மகளிர் போலீஸுக்குப் போவோம்” என்று அவனது கையைப்பிடிச்சு இழுத்தாள்.
அடுத்த நொடியே கிருஷ்ணன் அவளை அடித்திருந்தான் அவனும் அடித்தவுடன் “என்னடா தம்பி அடிச்சிட்ட?”என்று பதறி தனது பாசமான தம்பியைப் பார்த்தாள்.
“உன்னை தன் வீட்டுப்பொண்ணு மாதிரி பார்த்திருந்தவங்களையே இவ்வளவு மரியாதை இல்லாமல் அசிங்கமா பேசுற. மணிகண்டன் மச்சான் உன்னை எந்த இடத்துலயும் இந்நாள்வரைக்கும் விட்டுக்கொடுத்ததே இல்லை.அவங்க தாய்தகப்பன் கிட்டக்கூட நீதான் முக்கியம்னு சொன்னவரு அவரையே மரியாதை இல்லாமல் சட்டையைப்பிடிச்சு இழுக்கிற, பேசுற. இதேபோல ராதா நம்மவீட்டுல பிரச்சனை செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் நீயே சொல்லு? அவள் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டுப் போனவளையே மதிக்கலைன்னு ஆளாளுக்கு சண்டைப்போட்டு எனக்கும் அவளுக்கும் பிரச்சனையை உண்டு பண்ணி, என்னவெல்லாம் செய்திருக்கீங்க. அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா?”
“அவ நம்மக்குடும்பத்தை பிரிக்கப் பார்த்தாடா . உன்னை அம்மாகிட்ட இருந்தும் எங்கக்கிட்ட இருந்தும் பிரிச்சு அவமட்டும் சந்தோசமாக வாழப்பார்த்தாடா. அதுதான் அம்மா அழுதாங்க. உன்கிட்ட பேசினாங்க. தினமும் அவளைப் பத்தி சொன்னாங்க”
“ச்சை வாயை மூடு.அவள் ஒருநாளும் அப்படி பேசினதேயில்லை. தனிக்குடித்தனம்னு வார்த்தையே அவ வாயிலிருந்து வந்ததில்லை. நீங்கெல்லாம் பொய்பித்தலாட்டம் செய்து என்னையும் அவளையும் பிரிச்சிட்டீங்க. இப்போ நல்லக்குடும்பத்து மனுஷங்களை கேவலப்படுத்தணும்னு இப்படி பண்றியா? ஒரு கூடப்பிறந்தவனாக உனக்கு எல்லாமே செய்தாச்சு. நீ இனி நம்ம வீட்டுப் பக்கம் வரலாம்னு கனவுலயும் நினைக்காத .நல்லபடியா உன் புருஷன்கூட வாழப்பாரு. அப்படி குடும்பமா நம்ம வீட்டுக்கு வந்து அப்பா அம்மாவைப் பார்க்கணும்னா வந்துட்டுப்போ .இப்படி குடும்பத்தை உடைச்சுட்டு வந்தன்னா ஓடவோட விரட்டிருவேன் பார்த்துக்க”என்று கோபத்தில் மைதிலியை மீண்டும் அடிக்கப்போனான்.
மணிகண்டன் அவளைப் பிடித்து தன்பக்கம் நிறுத்தி கிருஷ்ணன் அவளை அடிக்கவிடாது தடுத்துவிட்டான்
அவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. ஏங்கி ஏங்கி அழுதாள்.மணிகண்டனின் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
“நீயும் என்னை அடிச்சிட்டல்லா தம்பி. உனக்கு இப்போ ராதா வேணும்னு தோணிட்டு அதனால்தான் என்னை அடிக்கிற”என்று இன்னும் புரியாது அவனையும் குற்றம் சாட்டினாள்.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட எப்படியும் போ” என்றவன் அங்கிருந்துத் திரும்பினான்.அங்கே ராதா கையைக் கட்டிக்கொண்டு என்னடா புதுசா கூத்தெல்லாம் நடத்துறீங்க? என்ற ரேஞ்சில் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தாமரைக்கு அவன் எதிரிலே மைதிலியை அடித்து விட்டோம் என்று குற்ற உணர்ச்சி இருந்தது. அதனால அமைதியாக ஒரு இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.
நல்லத்தம்பியோ “அவர் அருகில் போய் பார்த்தியா ஒருமருமக பண்ற வேலையா இது? தான் இவங்களை அந்தந்த இடத்தில வைத்திருந்தால் சரியா இருந்திருக்கும்.நீ ஓவரா என் மகன் பிள்ளைங்கன்னு அவங்களைப் பார்க்கபோய் இப்போ அவங்க ரொம்ப ஆட ஆரம்பிச்சிட்டாங்க . இதுதான் உனக்கு கடைசியா சொல்லுறது. இனி மகன் மருமகள்னு யாரும் இங்க வரக்கூடாது அவங்களை வெளியே போக சொல்லு” எங்க உறுதியாக சொல்லிவிட்டார்.
கிருஷ்ணன் உடனே நல்லம்தம்பியின் அருகில் வந்தவன் அவரது கைய பிடிச்சு “மன்னிச்சிடுங்க மாமா இப்படி வளர்த்து வெச்சிருக்கோம் தெரியாமலே அவளுக்காக நான் நிறைய சப்போர்ட் பண்ணிட்டேன் இவ்வளவு மரியாதை குறைவா நடந்துப்பான்னு நான் நினைக்கவேயில்லை. எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்”
“அட விடுங்க மருமகனே எல்லா வீட்டுலயும் உள்ளதுதானே இதுக்கு எதுக்கு மன்னிப்பு.ஆனால் ஒன்னு ஆணோ பெண்ணோ எங்க வீட்டுப் பிள்ளைங்களை நான் நல்லா வளர்த்திருக்கேன்.அதுவரைக்கும் எனக்கு சந்தோசம்.மணிகண்டன் மேல வருத்தம் இருந்தது.இப்படி பெத்தவங்களைவிடவும் பொண்டாட்டியைத்தான் முக்கியமாக நினைக்கிறான்னு. ஆனால் அவன் நியாயமாகத்தான் நடந்திருக்கான்.வாழ்க்கையில் இரண்டுபேரையும் பேலன்ஸ் பண்ணத் தெரியாம விழுந்துப்போறதுக்கு பதிலாக ஒருபக்கமா கொஞ்சம் சாஞ்சுப்போறது தப்பில்லன்னு புரிஞ்சு வைச்சிருக்கானே.அவன் வாழ்ந்திடுவான்”எனச் சொன்னவர் மணிகண்டனிடம் திரும்பி ஒருவாரம் டைம் தர்றேன் உனக்காக.வீடு பார்த்து தனிக்குடித்தனம் போயிடுங்க.அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் நல்லது”என்று இதுதான் முடிவு என்று முடித்துவிட்டார்.
மணிகண்டன் சரி என்று தலையாட்டிவிட்டு தங்கள் அறைக்குள் மனைவி அழைத்துக் கொண்டு போய் விட்டான்.
“ நீ அவ்வளவு எல்லாம் நல்லவன் இல்லையே? என்று ஒற்றை கூறவும் தூக்கி மன்னிப்பு கேட்ட கிருஷ்ணனை ராதா ஆச்சரியமாக பார்த்தாள்.
“மாமா என் பொண்டாட்டி பிள்ளைகளை எல்லாம் என்னோட கூட்டிட்டு போக நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி நடந்த பிரச்சனைகள் எல்லாத்தையும் மறக்க நினைக்கிறேன். என் பொண்டாட்டி பிள்ளைகளோடு வாழனும்னு ஆசையா இருக்கு. உங்க மகள்கிட்ட சொல்லி என்னோடு வாழ வைங்க” என்ற நேரடியாகவே கேட்டு விட்டான்.
அதைக் கேட்டதுக்கு தாமரைக்கு முகம் எல்லாம் பிரகாசமாகி தன் மகளோட வாழ்க்கை இனி நல்லா இருக்கும் என்று சந்தோஷப்பட்டார்.
நல்ல தம்பியோ ராதாவை பார்க்க ராதா பதிலே சொல்லாத அமைதியாக இருந்தாள்.
“நான் இதுல தலையிட முடியாது. இதுக்கு முன்னாடின்னா நானே அவளை அடிச்சு உன்னோடு வாழட்டும்னு விரட்டிவிட்றுப்பேன். ஆனால் என் மகளின் வலிவேதனையை நான்கேட்டுத் தெரிஞ்சதுக்குப்புறம் ஒரு தகப்பனா நான் அவளை மறுபடியும் அங்க அனுப்பமாட்டேன். அவள் இப்படியே என் மகளாகவே இருந்தாலும் பரவாயில்லை. உயிரோடாவது இருக்காளேன்னு இருக்கும். அவளாக உன்னோடு வாழ முடிவெடுத்தால் அதை நான் தடுக்கவும் மாட்டேன்”என்று முடித்துவிட்டார்.
அவ்வளவுதான் ஓடிவந்து ராதா அவங்கப்பாவைக் கட்டிக்கொண்டு அப்பாஆஆஆஆ என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
இந்தப்புரிதலுக்காகத்தானே இத்தனை நாளும் அழுதாள். எல்லோரும் அவளை ஒட்டுமொத்தமாக வதைக்கும்போது அமைதியாக இருந்தவளுக்கு அவளது அப்பாவின் அந்த பேச்சுக்கள் அப்படியொரு நிம்மதியைக் கொடுத்தது.
அதிலயே ராதாவின் எண்ணம் என்ன என்பதை கிருஷ்ணன் புரிந்துக்கொண்டவன் அங்கிருந்து அமைதியாக வெளியேறினான்.