1 தெருளோ மருளோ காதல்

They1

1 தெருளோ மருளோ காதல்

வந்துட்டேன் மச்சான்ஸ் குட்டி ட்ரைனிங்க்காக பெங்களூர் வரை போயிட்டேன் அதான் இங்கிட்டு வரல..

இதோ இப்ப வந்தாச்சு , 

கதை போட போட ஐஞ்சு ஐஞ்சு எபியா எடுத்திடுவேன் சோ பின்னாடி படிச்சிட்டே வாங்க பிறகு எப்பியை காணலன்ன தேட படாது ..

1  தெருளோ,மருளோ காதல்?

தெருள்  மயக்கம் நீங்கி தெளிவு அடைதல் , ஞானம் அடைதல் 

மருள் தெளிவு இல்லாமே,  ஞானம் இல்லாமை 

அம்பாசமுத்திரம் !!

மாஆஆஆஆ வீட்டின் முன்னே மாடுகள் பசிக்கு மா ஆஆஆமா என்று கத்தி கொண்டு இருக்க ... 

உங்களுக்கு நல்லது கெட்டது செய்ய தாய் தகப்பன் இருக்கா,  இல்ல உறவுக்காரங்க இருக்காங்களா ? வந்த நல்ல சம்மந்தத்தை ஏம்டே  வேண்டாம்னு சொல்லி உதறுற" என்று பெரியவர்கள் தலையில் அடித்துக் கொள்ள

"யோவ் என் அக்காவுக்கு என்ன வயசாகி போச்சுன்னு , இப்போ கல்யாணத்துக்கு மாப்பிள்ளையை கூட்டிட்டு வந்து நடு வீட்டுல உட்கார வச்சிருக்கீங்க என்று 12 வயதுக்கான அந்த குட்டி உருவத்தில் கோபம் சீற்றம் எதையும் செய்யும் துணிச்சல் கொண்டு நிமிர்ந்து நின்றான்

பெரியநாயகம் !!

"அதெல்லாம் கல்யாணம் கட்டி கொடுத்தா,  பிள்ளை பெக்கிற வயசுதான் சமைஞ்சு மூணு வருஷம் ஆகிப்போச்சு கட்டிக் கொடுத்தா பிள்ளைய பெத்துட்டு வந்து நிக்க போறா என்று ஒரு கிழவி நொடிந்து கொள்ள 

"இங்க பாரு கிழவி இன்னொரு வாட்டி , என் அக்காவ புள்ள பெக்குற இயந்திரம் மாதிரி பேசின கரண்டைக்காலை வெட்டி புடுவேன் பாத்துக்கோ... 

"ம்க்கும்,  திமிரு புடிச்ச கழுதை ,மீசை கூட இன்னும்  முளைக்கல,  அதுக்குள்ள என்ன பேச்சு பேசுறான் பாருங்கடே,  இவன் எல்லாம் வளர்ந்து நின்னா ஒருத்தனையும் மதிக்க மாட்டான் போல இருக்கு"என்று அந்த கிழவி அவன் காது கேட்கவே திட்டிக் கொண்டு வெளியே போக .... 

"என் அக்காவுக்கு எப்போ கல்யாணம் பண்ணி கொடுக்கணும் யாரை  கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு எனக்கு தெரியும்டே ... அவ பூ மாதிரி , போற இடத்துலேயும் பூ மாதிரி தாங்குற புருஷன் வரணும் ... இதுதான் என்னுடைய ஆசை போங்கடே இடத்தை காலி பண்ணுங்க.. 

யாராவது 15 வயசுல அவள கல்யாணம் கட்டி கொடுக்கலன்னு அழுதாங்களாடே?  என்று பெரியநாயகம் வாசலில் கட்டிப்போட்டிருந்த மாட்டிற்கு தீவனத்தை வைக்க ஆரம்பிக்க...  தம்பியின் கையை ஓடி வந்து பிடித்த அவன் தமக்கை பெரியநாயகி ..

நாயகம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வாயேன் முற்றத்தில் மாப்பிள்ளையாக உட்கார்ந்திருந்த சுந்தரம் அவர்கள் குடும்பத்தார் ஊர் மக்கள் என்று  யாருக்கும் கேட்காமல் தம்பியிடம் குசு குசு என்று பெரியநாயகி கிசுகிசுக்க ... அக்காவுக்கு மறுப்பேச்சு பேசாத பெரியநாயகம் அங்கு இருந்த அத்தனை பேரையும் ஒரு முறைப்பு முறைத்து விட்டு தன் அக்காவின் பின்னால் உள்ளே போனான்..

"ஏம்டே  வேண்டாம்னு சொல்ற? "என்ற  அக்காவை அதிர்ந்து போய் நாயகம் பார்க்க ...

"ஏன் அக்கா உனககு கோட்டி புடிச்சி போச்சா., அந்த ஆள உனக்கு புடிச்சிருக்கா ... 

"அது 

"பக்கத்தில் போனாலே சுருட்டு வாடை குடலை புடுங்குது .. அதோட நானே சந்தைப் பக்கத்தில் நாலு அஞ்சு பொண்ணுங்க பக்கம் ஒதுங்குறதை  பார்த்து இருக்கேன்...  நீ இளவரசிக்கா உனக்கு ஏத்த ராஜகுமாரனை என்ற தம்பியின் வாயை கையை வைத்து பொத்திய பெரியநாயகி..

அம்மா அப்பா இல்லைங்கிற கவலை எனக்கு ஒரு நாள் கூட இருந்தது இல்லடே,.  வயசுல என்னை விட நீ மூணு வயசு குறைஞ்சவனா ,  இருந்தாலும் தாய்க்கு தாயா தகப்பனுக்கு தகப்பனா என்ன உன் நெஞ்சில இன்ன வரைக்கும் சுமக்கிறடா,  அதுக்கான வயசு உனக்கு இருக்கான்னு கூட எனக்கு தெரியல...  ஆனா என்னையும் இந்த குடும்ப பாரத்தையும் ஒத்த ஆளா சுமக்கிற,  உனக்கு இதுக்கு மேலயும் பாரமா  இருக்க நான் விரும்பல நாயகம்

"ப்ச் அக்கா என்ன பேசுற "என்று அவள் கையை தட்டி விட்டவன்...

"நீ எனக்கு பாரமா ??

"உனக்கு வேணும்னா நான் பாரமா இல்லாம இருக்கலாம்டா எனக்கு ஒவ்வொரு நாளும் தம்பிக்கு பாரமா நாம  இருக்கிறோமோன்னு வருத்தம் இருக்கு .. என்னைக்கோ ஒரு நாள் என்ன யாருகிட்டேயோ கல்யாணம் கட்டி கொடுக்கதானடா போற...  அதுக்கு இந்த  ஆளுக்கு கட்டி கொடுத்துடு என்ற பெரியநாயகியை அதிர்வோடு நாயகம் பார்க்க

அக்கா  அவனை போய் 

"அதெல்லாம் கல்யாண கட்டுனா சரியா போகும் நாயகம் ஒரு குழந்தை வந்தா ஆஆஆ என்று இழுக்க 

"என்னக்கா நீ கூட இப்படி பேசுற , கல்யாணம் கட்டுறது வெறும் பிள்ளைக்காகவா?.. 

"வயசுக்கு மீறி பேசாத நாயகம். 12 வயசுல உனக்க

என்ன தெரியும் 

"15 வயசுல கல்யாணத்தை பத்தி உனக்கு என்னக்கா தெரியும்..

" தெரியலன்னா தெரிஞ்சுக்க வேண்டியதுதான் எனக்கு இந்த மாப்பிள்ளையை  புடிச்சிருக்கு கல்யாணம் கட்டி வை... 

" முடியாது எனக்கு அந்த ஆளை புடிக்கல..உனக்கு கல்யாணம் தான் பண்ணி வைக்கணும்னா,  நல்ல பையனா என்ற நாயகம் முன் கை குப்பி  நின்ற பெரியநாயகி...

"தயவு செஞ்சு கல்யாணம் கட்டி கொடுத்துடுடா எனக்கு அவரை புடிச்சிருக்கு ... 

"ப்ச் 

பிடிக்கவே இல்லை என்றாலும் பிடித்திருக்கு என்று மனதில் கசப்பை விழுங்கி கொண்டு பெரிய நாயகி சம்மதம் சொன்னாள்

தன் தம்பி படிக்க வேண்டிய வயது,  தாய் தகப்பன் இறந்து போய் பெண்ணாக இவள் பூப்படைந்து நிற்க..  தன் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டு அவளை ஆளாக்குவதையே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று இதோ அவளை பத்திரமாக இதுவரை பார்த்தவன்...  குரங்கு கையில் பூமாலையாக சுந்தரம் கையில் வேறு வழியில்லாமல் கல்யாணம் கட்டிக் கொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நின்றான்...

"அக்கா நல்லா இருக்கியா?? அடுத்த நாளே நாயகம் சுந்திரம் வீட்டு  வாசலில் போய் நிற்க ... உள்ளே பயந்த பார்வை பார்த்துக் கொண்டே ஓடிவந்த பெரியநாயகி நாயகத்தின் கையை இழுத்துக் கொண்டு வந்து வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக விட்டவள்

"நல்லா தாண்டா இருக்கேன்,  இப்படி அக்காவ கட்டிக் கொடுத்துட்டு அடிக்கடி இங்கு வந்து நின்னா கட்டி வந்த இடத்தில  என்ன நினைப்பாங்க... 

" நீ நல்லா இருக்கியான்னு பார்க்கிறதுக்கு தான் வந்தேன் ...

"அதெல்லாம் நான் ரொம்ப நல்லா இருக்கேன்..  அந்த மனுஷன் என்ன ரொம்ப நல்லா வச்சிருக்கார் கிளம்பு ... இனி நான் சொல்லாம நீ இங்க வராத" என்ற அக்காவின் பதட்டம் புரியாமல் இல்லை பெருமூச்சு விட்டுவிட்டு பெரியநாயகம் கிளம்பி வந்துவிட்டான்... 

முதல் இரவு இவளுக்கு மட்டும் தானே அந்த கேடு கெட்டவனுக்கு இது எத்தனாவது இரவோ? முதல் இரவு படுக்கை மீது உதிர்ந்து கிடந்த மலர்கள் மத்தியில் மதுபாட்டிலோடு உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருந்தான் சுந்தரம்...  

தம்பிக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று நினைத்து தானாக நரகத்தில் வந்து மாட்டிக் கொண்டாள்  பெரிய நாயகி...  இந்த நரகத்திலும் கிடைத்தது அதிசய மலர்...

ஒரு வருடத்தில் அடி உதை அவமானங்கள் , கணவன்  தாறுமாறான வாழ்க்கை ஓட்டம் இதையெல்லாம் பார்த்து இந்த வாழ்க்கை தேவைதானா??  இதற்கு பேசாமல் செத்து விடலாமே என்று பெரியநாயகியின் பெருமூச்சுக்கு விடை கிடைத்தது போல் அவள் கர்ப்பத்தில் அழகாக வந்து உதித்தாள் ராஜகுமாரி!!!

விஷயம் மூணாவது மனுசி மூலம் அறிந்த நாயகம் வலியோடு வியர்வையை துடைத்து கொண்டான் ... அன்று போ என்றவள் இன்றுவரை வா என்று அவனை அழைக்கவே இல்லை ... 

தர்ம ஆஸ்பத்திரில பிள்ளை பிறந்து இருக்கு போல போய் பாரு என்று பக்கத்து வீட்டு பெண்மணி கூற வெறுங்கையோடு எப்படி  பிறந்த வைரத்தை பார்க்க .. 

அக்காவின் மகளுக்கு,  தான் பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு மாட்டையும் விற்று ஐந்து பவுனில் தங்கச் சங்கலியை வாங்கிக் கொண்டு பெரியநாயகம் மருத்துவமனைக்கு ஓடி வர...

அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ அக்காவின் உயிரற்ற உடலைத்தான் அவனால் பார்க்க முடிந்தது...  இதுவரை கண்ணீர் காணாத அவன் கண்கள் கண்ணீரை அரும்பி  நின்றது 

"நிறைமாத கற்பிணின்னு பார்க்காம அவங்க வயித்துல எட்டி உதைச்சு இருக்காங்க ... அதுல குறை உயிராதான் அவங்களை ஹாஸ்பிட்டல்ல கொண்டு சேர்த்தாங்க..  சிலையாக நின்ற நாயகம் அருவாளை எடுத்து கொண்டு முதலைக்கண்ணீர் வடித்த சுதந்திரத்தை வெட்ட துள்ளி ஓட .. அவனை ஊரே அடக்கி பிடித்தும் , முடியாது திமிறி கொண்டு சுந்தரம் கழுத்தை நோக்கி அவன்  அருவாளை வீச போன சமயம் 

ஞேஏஏஏஏஏஏஏஏஏஏஏ என்ற பிஞ்சு குரலில் அழுகை சத்தம் அவன் ஓங்கிய கையில் இருந்து அருவாளை கீழே விழ வைத்தது ..

அன்று அக்காவுக்காக வாழ பழகியவன்,  இன்று அக்கா பெத்த ரத்தினத்துக்கும் யாரும் இல்லை என்று ஒரு நிமிட அழுகையில் புரிந்து கொண்டவன்  அழுகை சத்தம் நோக்கி ஓடி வந்தான்... 

குழந்தை அழுகையை உள்ளே அடக்கி கொண்டு பிள்ளையை கேட்க 

"பெண் குழந்தை ...

"ஓஓஓ 

"பெரிய நாயகி சாகறதுக்கு முன்னாடி சொன்ன ஒரே வார்த்தை,  என் பொண்ணை என் தம்பி கிட்ட சேர்த்துடுங்கன்னு சொன்னதோட அவங்க உயிர் போயிடுச்சு நாயகம் "என்று வெள்ளை துணியில் ரோஜா மலர் போல குவித்து வைத்திருந்த தன் அக்கா மகளை கைகள் நடுங்க அந்த 13 வயதில் வாங்கிக் கொண்டான் பெரியநாயகம்!! 

அக்கா செத்து பத்து நாள் கூட ஆகவில்லை , அவளை வைத்த கல்லறை கூட காயவில்லை சுந்தரம் அந்த வீட்டில் வேலை செய்த பெண்ணை ரெண்டாம் திருமணம் செய்து கொண்டான் என்ற செய்தி அறிந்து அருவாளை தீட்டிய நாயகம் தொடையில் பிஞ்சு பாதம் உரச ... தீயாக எரிந்த அவன் கண்கள் அந்த பட்டு பாதம் பிடித்து முத்தம் கொடுத்து 

"இந்த மாமன் உன்னை எப்படியும் வளர்த்து கரை சேர்த்துபுடுவேன்,அவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டா நீ அனாதையா ஆகிப்போவ அதுக்காக அந்த நாயை விடுறேன் "என்று தன் சீற்றத்தை அவள் காலடியில் சமர்பித்தான்...  

என்ன பேர் வைக்க நாயகம் ?  

அன்றில் ரதிதேவி !! அன்றில் !!அன்றில்  என்று காலை கையை அடித்து கொண்டு கிடந்த அக்கா மகள் காதில்  அவளுக்கு பெயர் வைத்தான் நாயகம் ... 

ஒரு தோளில் அக்கா மகள் இன்னொரு தோளில் கலப்பை பிடித்து வயலில் ஏர்  உழுதான் ...

மடியில் அவளை போட்டு கொண்டு அடுப்பில் அவளுக்கு பால் காய்ச்சினான்...

போகும் இடமெஙஂகும் அவளை முதுகில் பொதி போல சுமந்தே சென்றான்,..  

"அம்மா சொல்லு அம்மா சொல்லு பல் இல்லாத அக்கா மகளை மடியில் வைத்து கொண்டு நாயகம் சொல்லி கொடுக்க 

"மா....மா மாமா என்றது அந்த வெண்தாமரை சிற்பம் 

"ஹாஹா  அரும்பிய மீசையை முறுக்கும் உணர்வு வந்தது ... 

அவளின் முதல் நடை அவன் கை பிடித்து 

அவளின் முதல் மொட்டை அவன் மடியில வைத்து 

அவளின் முதல் சோறு அவன் கையால்

அவளின் முதல் தூக்கம் அவன் மார்பில் 

அவளின் முதல் சிரிப்பு அவன் முகம் பார்த்து 

அவளின் முதல் வார்த்தை மாமா என்றது 

காதல் மட்டும் தான் நேசிக்க வைக்குமா என்ன ?? அவன் நேசம் வைத்த அவளுக்காகவே தன் வாழ்க்கை , ஆசை , சுகம் துக்கம் அத்தனையும் மறந்து வாழும் யோகி அவன் !!

அதிகமாய் நேசித்தவர்களை வெறுக்க வைத்து வேடிக்கை பார்ப்பதே இப் பிரபஞ்சம் !! 

நேசித்தவளை வெறுக்க வைக்க போவது அவன் நேசத்துக்கு சொந்தக்காரியே!!