கழிமுள்ளி நெஞ்சுக்காரி-24
கழிமுள்ளி-24
நதியா நேராக வண்டியை தன்னுடயை பிரண்ட்ஸ் முன்னாடி போய் நிறுத்திவிட்டு அப்படியே ஸ்டைலாகத் திரும்பி அரவிந்தின் காரைப் பார்த்து நக்கலாகச் சிரித்தாள்.
அவளது சிரிப்பைப் பார்த்த அரவிந்த் “வாடி என் இவளே என் கிளாஸுக்குள்ளதானே நீ வரணும். அப்போ பார்த்துக்கிறேன்”என்று அவனும் சிரித்தவாறே காரை பார்க் செய்துவிட்டு நடந்துவந்தான்.
அவனைப் பார்த்ததும் தனது வண்டியின் ஆக்ஸிலேட்டரைத் திருப்பி உர்உர்ரென்று சத்தத்தோடு அரவிந்தை சுத்தி வண்டியை ஓட்டியவள், வீலிங் பண்ணி அவனைப் போகவிடாது முன்னும் பின்னுமாக நகர்ந்தாள்.
அதைப்பார்த்த விஜய்தான் “ நதி!!!”என்று சத்தம்போட்டுக் கூப்பிட்டான்.
அதைப்பார்த்த அரவிந்த் திரும்பி விஜயைப் பார்த்தான்.
“நதி சாரைப் போகவிடு. சார் போகமுடியாமல் நிக்கிறாங்க பாரு”என்று கத்தினான்.
அதன்பின்தான் அங்கிருந்து நகர்ந்து பிரண்ட்ஸ் பக்கமாக வந்து தனது வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியவள்,திரும்பி அரவிந்தை பார்த்து “போடாடேய் நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளேயில்லை!” என்பதுபோன்று நக்கலாக உதட்டை வளைத்துச் சிரித்தாள்.
அதைப்பார்த்த அரவிந்த் ஸ்டைலாகவும் வேகமாகவும் நடந்து அவங்க பக்கத்தில் வந்தான்.
எல்லோரும் என்ன பண்ணப்போறானோ என்று பயந்து எழுந்து நின்றனர். அவளோ எவன் வந்தா எனக்கென்ன என்பதுபோன்று ஹாயாக வண்டியில் உட்கார்ந்திருந்தாள்.
அவளருகில் வந்தவன் வண்டியில் இருந்த சாவியை வேகமாக எடுத்தான். அதைப் பிடிக்கப்போன நதியாவிடமிருந்து லாவகமாக கையை விலக்கி சாவியை அப்படியே பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.
அதைப்பார்த்தவள் “என் சாவியை கொடுங்க சார்”என்று கோபத்தில் கையை நீட்டிக்கேட்டாள்.
“சாவியா? தரலாமே. வந்து என்கிட்ட மன்னிப்புக் கேட்டு சாவியை வாங்கிட்டுப்போ”என்றவன் உதட்டை வளைத்துச் சிரித்துவிட்டு அமைதியாக அவனோட ஆபிஸ் ரூமுக்குப் போயிட்டான்.
அதைப்பார்த்த நதியாவோ “டேய் இவன் மண்டையை இன்னைக்கே உடைச்சு மாவிளக்கு போட்டுறேன்டா. இவன் என் பைக் சாவியவே புடுங்கிட்டுப்போயிட்டான்டா”அரவிந்தின் பின்னாடி ஓடினாள். அவள் பின்னாடி பிரண்ட்ஸ் நான்குபேரும் வேகமாக ஓடிப் பிடித்துக்கொண்டு வந்தனர்.
“அம்மா நதியா தாயே அது பழைய ஸ்டுடண்ட் அரவிந்த் இல்லை. இந்தக்காலேஜோட எல்லா பவரையும் பேண்ட் பாக்கெட்டுக்குள்ள வைச்சிருக்கிற அரவிந்த் சார். அவனை அடிச்சிடாத போலீஸ் கேஸாகிடும்”என்று பிடித்திழுத்துக் கொண்டுவந்தனர்.
“ஏன்டா என்னை தடுத்து இழுத்துட்டு வந்தீங்க. என்னை ஏமாத்திட்டு இங்கயே இந்த பொறுக்கி வேலைக்கு வருவானாம். அவனை நான் சும்மாவிடணுமா?”
“ஏன்டி உன்னை ஏமாத்திட்டுப் போனான்னு சத்தம்போட்டு சொல்லுற?அடங்குடி. நீ எங்க பழைய நதியாவா திரும்பி வந்தது ரொம்ப சந்தோசம். ஆனால் அதுக்காக கொலைகாரியா மாறிடாதம்மா. தயவு செய்து அமைதியா”இரு என்று விஜய் அவளை மலையிறக்க கெஞ்சிக்கொண்டிருந்தான்.
“என்னடா விஜய் நீ. என்கூட சேர்ந்து அவனைத் தூக்கிப்போட்டு மிதிப்பன்னு நினைச்சா இப்போ இப்படி சமாதானமா பேசுற. நான் மாறினதைவிடவும் நீ ஏன்டா இப்படி மாறிட்டன்னுதான் எனக்கு கஷ்டமா இருக்கு. எங்க அடாவடி விஜய் மொத்தமா மாறிட்டான்” என்று அவள் அவனிடம் புகார் வாசித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அந்தப் பக்கமாக வந்த மனோஜ் அவங்களைப் பார்த்துட்டு பக்கத்துல வந்தான்.
“என்னடா உங்க கேங்கிற்குள்ள ஏதோ சண்டைன்னு சொன்னாங்க? உண்மையிலயே சண்டைதான் போடுறீங்க போல. யாரு நதியாவை முதல்ல மடக்கலாம்னா சண்டைப்போடுறீங்களா? ஆட்டைக்கு என்னையும் சேர்த்துக்கோங்க”என்று சொல்லித்தான் முடிச்சான் அவன் மூக்குல இருந்து இரத்தம் பொலபொலன்னு கொட்டியது.
என்னடா மனோஜ் மூக்குலயிருந்து இரத்தம் கொட்டுது என்று நாலுபேரும் திரும்பி பார்த்தால், அவன் மூக்குல அடுத்தும் குத்துறதுக்கு ரெடியா இருந்த நதியாவைப் பார்த்ததும் அவளது கையைப் பிடித்துக்கொண்டனர்.
“டேய் மனோஜே ஓடித்தப்பிச்சிருடா. இல்லைன்னா எங்க நதி உன் மூக்கை மொத்தமா பஞ்சராக்கிடுவாடா” என்று தினேஷ் அவனை போவென்று தள்ளிவிட்டான்.
நதியாவின் கையைப்பிடித்து மடக்கிய விஜயோ “ஏய் நதி அவன் மூக்கு பிஞ்சு மூக்குடி. உன் அடியையெல்லாம் தாங்கமாட்டான்டி. நீ டேக்வாண்டோலாம் படிச்சிருக்கன்னு அவனுக்குத் தெரியாதும்மா தாயே. எதுக்கு இந்தக் கொலைவெறி. அவன் வாயாலதானே பேசுனான். நீயும் வாயலயே பேசிருக்கலாமே. எதுக்கு கையால பேசின?இந்தளவுக்கு மாற்றம்லாம் வேண்டாம் நதி. போதும் அரவிந்த் மேல உள்ளக் கோபத்தை அரவிந்த்துக்கிட்டயே காட்டு போதும்”என்று சமாதானப்படுத்தினான்.
முகஷோ ஓடிவந்து “டேய் அவளைக் கூட்டிட்டு வாடா. கிளாஸுக்கு நேரமாச்சு. அவா வந்த அரைமணி நேரத்துல அரைடஜன் பிரச்சனையை உருவாக்கிட்டாடா. வாங்கடா அவளைக்கூட்டிட்டு கிளாஸுக்குப்போவோம்னு” பாவமாகக் கூப்பிட்டான்.
இருடா என்றவன் தினேஷ் ஓடிவா அவனை அவனே பார்த்துப்பான்.மூக்குல ஒரு பேண்டெய்ட் ஒட்டிட்டு போகச்சொல்லு. நம்ம கிளாஸுக்குப்போவோம் என்று சொல்லிவிட்டு நதியாவை இழுத்துக்கொண்டு கிளாஸுக்குள்ள போனான்.
அங்கயோ எல்லோரும் சார் எப்போ வருவாரு என்று வெளியே பார்த்துக்கொண்டியிருந்தார்கள்.
“பார்றா ஒரே நாள்ல இந்த ஏமாத்துக்காரன் மொத்த கிளாஸையும் மயக்கி வைச்சிருக்கான்.ம்ம்ம் இது தேறாது போலடா”என்று நதியா சொல்லவும் உன்னையும் அந்த ஏமாத்துக்காரன்தான் கொஞ்சநாள்லயே ஏமாத்திட்டுப்போனான் நதியா! இவன் தொழிலே ஏமாத்துறதுதான் போல”
“அப்படித்தான் போலடா”என்று பேசிக்கொண்டிருக்கும்போதே அரவிந்த் கிளாஸுக்குள்ளே வந்தான்.
அவனைப் பார்த்ததும் விஜய் உட்பட எழுந்து நின்றார்கள். ஆனால் நதியாவோ போடா மயிரே என்று வாயிக்குள்ளயே முணங்கியவாறே தலையை வெளிப்பக்கமாக திருப்பி ஜன்னல் வழியாக பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
விஜய் அவளது தலையில் ஒன்னு போட்டவன் “எழுந்திரு நதி”என்று மெதுவான குரலில் சொன்னான்.
“போடா டேய் அப்படியெல்லாம் அவனுக்கு மரியாதை குடுக்கமுடியாது”என்று உட்கார்ந்தேயிருந்தாள்.
இப்போது எல்லாரையும் உட்கார சொன்ன அரவிந்த் “நதியா எழுந்து நில்லு. நேத்து என் கிளாஸ்ல இருந்து என்னோட பெர்மிஷன் இல்லாமல் வெளியே போனதுக்கும், லீவு போட்டதுக்கும் சேர்த்து அப்பாலஜி லெட்டரும், லீவு லெட்டரும் தந்துட்டுகிளாஸுக்குள்ள வா. பிரின்சிபாலைப் பார்த்து நடந்ததைச் சொல்லி, பெர்மிஷன் லெட்டர் அவருக்கிட்டயிருந்தும் வாங்கிட்டு என்கிட்ட காண்பிச்சிட்டு, நான் பெர்மிஷன் குடுத்ததும் கிளாஸுக்குள்ள வா. இப்போ வெளியே போய் நில்லு”என்று சொன்னான்.
அவளோ எதுக்குப்போகணும் என்பதுபோல உட்கார்ந்திருந்தாள்.
இன்னும் அவள் மரியாதையில்லாமல் உட்கார்ந்திருப்தைப் பார்த்தவன் “இப்போ நீயா எழுந்து வெளிய போறீயா?இல்லை பிரின்சிபால் சாரைக் கூப்பிட்டு வெளிய அனுப்பவா?”என்று கேட்டான்.
உடனே எழுந்தவள் அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவாறே தனது பிரண்ட்ஸை பார்த்தாள். அவர்கள் யாருமே அவளோடு எழுந்துப்போகவில்லை. அவளோ உடனே கோபத்தில் வெளியே போய் நின்றாள்.
அதன்பின் அரவிந்த் அவளைக் கண்டுக்கொள்ளவேயில்லை. ஆனால் வெளியே நின்ற நதியாவுக்கோ கோபம் கோபமாக வந்தது. உடனே ஜன்னல் வழியா விஜயை எட்டிப்பார்த்தவள் “துரோகி என்கூட ஏன்டா எழுந்து வரலை. உங்களுக்கு இருக்குடி மவன்களா? வெளியே வாங்கடா?”என்று திட்டியவாறே வெளியே நின்றாள். இவனையெல்லாம் மதிக்கவேகூடாது என்கின்ற கோபமும் வெறியும்தான் அவளுக்கு வந்தது. அதனால் அங்கயே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது அந்தப்பக்கமாக வந்த ரமேஷ் மகளைப் பார்தததும் கோபம் வந்துவிட்டது.
நேராகவே கிளாஸுக்குள்ளயே வந்து “அரவிந்த் சார் என்னாச்சு? ஏன் உங்க ஸ்டூடன்டை வெளிய நிக்க வைச்சிருக்கீங்க?”என்று கேட்டார்.
அவன் நடந்ததை சொல்லிவிட்டு “என்ன சார் இப்படி பேரண்ட்ஸ் மரியாதை தெரியாத பொண்ணா வளர்த்து வைச்சிருக்காங்க. இப்படியே இந்தப் பொண்ணு பண்ணிட்டிருந்தா டீ.சியில இன்டிசிபிளின்னு எழுதி குடுத்திடணும், அப்போதான் அந்தப் பொண்ணோட எதிர்காலம் குறித்து கொஞ்சமாச்சும் பேரண்ட்ஸ்க்கு யோசிப்பாங்க”என்று பவ்யமாக சொன்னான்.
அதைக்கேட்டதும் ஸ்டுடண்ட்ஸ் எல்லோரும் சிரித்தனர்.ரமேஷுக்கு அவமானமாக இருந்தது. ஆனாலும் அரவிந்திடம் எதுவும் சொல்லாமல் திரும்பி நதியாவிடம் “என்னோட ஆபிஸ் ரூமுக்கு வா”என்றுவிட்டுப் போய்விட்டார்.
நதியாவும் கோபத்தில் அரவிந்தைப் முறைத்துப் பார்த்துவிட்டே அவங்கப்பா பின்னாடியே போனார்.
அவர் பெர்மிஷன் லெட்டர் எழுதி கையில் கொடுத்துட்டு “ இனி நீ அரவிந்த் கிளாஸ்ல வெளியே நிக்கக்கூடாது. அவன் முன்னாடி என்னையும் கேவலப்படுத்தாதா. உன் படிப்பில நீ யாருன்னு நிருபிச்சு அவன் முன்னாடியே நல்ல மார்க்கோட இந்த காலேஜ்லயிருந்து நீ போறதுதான் அவனுக்கு கொடுக்கிற பதிலடி”என்றார்.
“ம்ம்ம் சரிப்பா” என்றவள் அங்கயே கொஞ்சநேரம் உட்கார்ந்துவிட்டு அடுத்த பெல் அடிச்சு அரவிந்த் அவன் ரூமுக்குப் போனதும் வெளியே வந்தாள்.
இப்போ போய் தன்னோட பிரண்ட்ஸ்கிட்ட பெர்மிஷன் லெட்டரைக் காண்பித்தவள் “ஏன்டா என்கூட வெளியதான் வந்து நிக்கலை. இப்போ அந்த அரவிந்தைப் பார்த்து இதைக் கொடுத்துட்டு அப்படியே என்னோட வண்டியை சாவியை வாங்கணும். என்கூட துணைக்கு வாங்கடா”என்று கூப்பிட்டாள்.
வாங்கடா போவோம் என்று முகேஷ் எழும்பவும் அவனது கையைப் பிடித்திழுத்த விஜய் “நீ உட்காருடா நானும் தினேஷும் போயிட்டு வர்றோம்” என்று எழுந்து அவள் கூடவே நடந்தார்கள்.
மூன்று பேரும் சேர்ந்துதான் உள்ளே வரலாமான்னு கேட்டுட்டுப் போனார்கள்.
அவர்களை உள்ளவரச் சொன்னவன் என்னவென்று மூவரையும் பார்த்தான்.
நதியா அரவிந்தின் முன்னாடி லெட்டரைத் தூக்கி போட்டவள் “இது பெர்மிஷன் லெட்டர் சார். இனி நான் கிளாஸுக்குள்ள வரலாம்ல, அப்புறம் எங்கப்பா எங்களை நல்லாதான் வளர்த்திருக்காங்க. உங்க பேரண்ட்ஸை மாதிரி பொறுக்கியாகவும் ஏமாத்துக்காரனாகவும் வளர்த்து அடுத்தப்பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுக்க வரல. உங்களோட வளர்ப்புக்கு என்னோட வளர்ப்பு பெட்டர்தான். என் சாவியை கொடுங்க சார்”என்று கையை நீட்டினாள்.
அவளையே கண்ணெடுக்காது பார்த்திருந்தான் அரவிந்த். அதில் கடுப்பானவள் “இப்படித்தான் உங்கப்பா அம்மா அடுத்த பொண்ணுங்களை பார்க்கச்சொல்லி வளர்த்தாங்களா?இவ்வளவு கேவலமா வளர்த்து வைச்சிருக்காங்க,இதுல சார் வந்து எங்கப்பம்மா என்னை நல்ல வளர்க்கலைன்னு சொல்லுறீங்க வேடிக்கையால்ல இருக்கு. ஆளைப்பாரு பொம்பளை பொறுக்கி மாதிரி பார்க்கிறதையும் பாரு”
“ம்ம்ம் அப்புறம் வேற என்னென்ன திட்டணுமோ எல்லாத்தையும் இப்படி தனியா இருக்கும்போதே திட்டிக்க. ஆனால் கிளாஸ்ல அமைதியா இருக்கணும் புரியுதா”
“முதல்ல என் சாவியைக் கொடு நான் போகணும். உன் மூஞ்சியைப் பார்க்கவே பிடிக்கலை. தினமும் உன் மூஞ்சியை பார்க்கணும்னாலே ஆத்திரம் ஆத்திரமா வருது. உன்னை ஏதாவது செய்து கொன்னுடப்போறனோன்னு பயமா இருக்கு”என்று கத்திவிட்டாள்.
விஜய்தான் “நதி இது அவங்களோட ஆபிஸ் ரூம். அப்புறம் நம்மதான் சண்டைப்போடுறோம்னு ஏதாவது கோல்மால் பண்ணிடுவாங்க வா போகலாம்” என்று அவளைக் கூப்பிட்டான்.
அவளோ நிமிர்ந்துப் பார்த்து “நான் சகத்துணிஞ்சதைவிடவா இவன் அதிகமா எனக்குப் பண்ணிடப்போறான். எதுவந்தாலும் பார்த்துக்கலாம்டா. ஆனால் இவன் முன்னாடி மட்டும் நான் தோத்துப்போயிடக்கூடாதுடா”என்றவளுக்கு அவளையும் அறியாமல் கண்கள்கலங்கிவிட்டது.
அதில் அரவிந்த் அப்படியே அதிர்ந்து அவளை வேதனையோடு பார்த்தான். அவன் கண்கள் அந்த வேதனையை அவளுக்கு சொன்னது. அவன் முகம் அப்படியே மாறிவிட்டது.
“தியாஆஆஆ”என்று அவனையும் அறியாமல் கூப்பிட்டுவிட்டான்.
அவளோ யாரோ யாரையோ கூப்பிடுறாங்க என்று ரெஸ்பான்ஸ் கொடுக்காமலயே நின்றிருந்தாள்.
“விஜய் தினேஷ் நீங்க கிளாஸுக்குப் போங்க. நதியா அப்புறமா வருவா”
“ஏன் அவங்க போகணும். அவங்க என்கூடத்தான் நிப்பாங்க. நீ முதல்ல சாவியைக் கொடுடா. என் சம்பந்தப்பட்ட எந்தப்பொருளையும் நீ தொடுறதுக்கூட எனக்கு அருவருப்பா இருக்கு. என் வண்டி சாவியைத் தாடா”என்று மரியாதையை காற்றில் பறக்கவிட்டுவிட்டு பேசினாள்.
அவனோ கூர்மையான பார்வையோடு கடுமையான வார்த்தையோடும் விஜயையும் தினேஷையும் பார்த்தான்.
அவ்வளவுதான் விஜய் நதியாவிடம் குனிந்து “நதி நாங்க கிளாஸுக்குப் போறோம். நீ சாருகிட்ட பேசிட்டு வா”என்றவன் அவளது பதிலுக்குக் காத்திராமல் வெளியே போக, அப்படியே தினேஷும் அவன்கூடவே போய்விட்டான்.
நதியாவுக்கு விஜய் மீதும் தினேஷ் மீதும் கோபம் வந்து அவர்கள் பின்னாடியே நடக்கய் திரும்பினாள்.
“தியாஆஆ நில்லு”என்னு கம்பீரமான அதட்டல் குரல் அரவிந்திடம் இருந்து வந்தது.
நதியா அவளையறியாமலயே அப்படியே நின்றவள் அவனைப் பார்க்க திரும்பினாள்.
அவனோ அவளது பக்கத்தில் நின்றிருக்க, அதை எதிர்பார்க்காதவள் தடுமாறி பின்னாடி நகர்ந்தாள். அதில் பேலன்ஸ் இல்லாமல் கால் தள்ளாடவும்,சட்டென்று அவளது இடுப்பில் கையைப்போட்டுப் பிடித்து தன்னோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டான்.
அதில் கைககால்கள் நடுங்க அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான் அரவிந்த்.
அவ்வளவுதான் அடுத்த நொடியே குனிந்து அவளது உதடுகளை கடித்து வேகமாக தனது உதட்டிற்குள்ளே இழுத்துக்கொண்டான்.
நதியா அதிர்ந்து அவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டாள். ஆனால் அவன் அவளை விடுறதா இல்லை. அதைப்பார்த்தவள் அவனிடமிருந்து திமிறினாள்.
அவனோ அவளது தலையைத் தனக்கு வாகாகப் பிடித்து முத்தத்தை ரசித்துக் கொடுத்தான்.
இதற்குமேல் முடியாது என்று அவனது தலையை முடியைப் பிடித்து இழுத்து இழுத்து அவனது முகத்தைப் பார்த்தாள்.
அதில் அவ்வளவு கோபமிருந்தது. கண்களில் அனல் தெறிக்க “ச்ச்சீ உனக்கு வெட்கமாக இல்லையா. என்னை பழிவாங்கணும்னு காதலிக்கிறேன்னு ஏமாத்திட்டுப் போயிட்டு இப்போ வந்து முத்தம் கொடுக்கிறியே வெட்கமாயில்லை. நீயெல்லாம் என்ன ஆம்பளையா?அதுவும் உனக்கு உரிமையில்லாதவளை வலுக்கட்டாயமா பிடிச்சு முத்தம் கொடுக்கிறியே. இருடூ இதுக்காகவே உன்மேல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுத்து இந்த காலேஜையே இல்லாமல் பண்றேன்”என்று கத்தினாள்.
அவளது வாயை தனது கையால் பொத்தியவன் “யாரு உரிமையில்லாதவளைத் தொட்டா? நானா?உன்னைத் தொடுறதுக்காக முழு உரிமையும் எனக்கு மட்டும்தான்டி இருக்கு. அதை மறந்துட்டியா என்ன? எங்க போய் இப்போ கேஸ்குடு பார்ப்போம். நானும் நடந்த எல்லாத்தையும் சொல்லி உன்னை என்கூடவே கூட்டிட்டுப்போயிடுறேன். எனக்கு இந்த காலேஜும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்”என்றவனை அதிர்ச்சியில் பார்த்தாள்.
‘அவன் சொன்னமாதிரி நம்ம இவன் பேர்ல கேஸ் கொடுத்தாக்கூட செல்லாமல் போயிடுமே. இப்போ என்ன பண்றது? இவனை எப்படி பழி வாங்குறது?’என்று யோசித்தாள்.
“என்ன டான் மேடம் யோசனை இவனை எப்படி பழிவாங்கலாம்னா? அதெல்லாம் உங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அப்போ என்ன நடந்தாலும் அமைதியா போன அம்மாஞ்சி, சோடாபுட்டி இப்போ இல்லை. இதுதான் ஒரிஜினல் அரவிந்த். இந்த அரவிந்த் நினைச்சா அதை செய்துமுடிச்சிட்டுத்தான் வேற வேலையே பார்ப்பான். இப்போ சொல்லு உனக்கு என்னை பழிவாங்கணுமா?”
“ஆமாடா ஆமா பழிவாங்கணும்தான் ஆனா ஆதையும் நான்தான் செய்வேன் உன்னை அழவைக்கணும். நான் என் காதலுக்காக அழுது சாகப்போன மாதிரி நீயும் அழணும். ஒருத்தி உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கிறது புரியாமல் ஏமாத்திட்டு ப்ரேக்கப் பண்றேன்னு அசிங்கமா பேசிட்டுப்போன உன்னை துடிக்க துடிக்க பழிவாங்கணும்”என்று சொன்னவளின் வாய்தான் பழிவாங்கணும்னு சொல்லுச்சு, கண்களோ கலங்கித் தவித்தது.
அதைப்பார்த்தவன் அவளை வேகமாக இழுத்து தன்னோடு மீண்டும் இறுக்கி அணைத்துக்கொண்டான்.
நதியோவோ அவனது தோளிலும், நெஞ்சிலும் அடித்தவள் “என்னை விடுறா பொறுக்கி, சீட்டர் நீ என்னைத் தொடாத விடுறா”என்று கத்திக்கொண்டிருக்க, அவனோ இன்னும் அழுத்தமாக அவளை இறுக்கி எலும்பு நெறுங்குறளவுக்குக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தான்.
என்னடா நடக்குது இங்க? டேய் அரவிந்த் நீ அவளை ப்ரேக்கப் பண்ணிட்டு போனவன்டா?ஐய்யோ ஒன்னுமே புரியலையே!