கழிமுள்ளி நெஞ்சுக்காரி-25
கழிமுள்ளி-25
அரவிந்த் அவளை இப்போது தனது கைவளைவில் இருந்து லேசாக விலக்கி நிறுத்தினான்.
அவ்வளவுதான் அடுத்த நொடி அரவிந்தை சப்பென்று நதியா அறைந்திருந்தாள்.
“நீ எதுக்குடா என்னைத் தொட்டு முத்தம் கொடுக்கிற?உனக்கு நதியான்னா அவ்வளவு கேவலமா போயிட்டாளா?நாலு ஆம்பளை பசங்கக்கூட நட்பா பேசி அவங்கக்கூடவே இருந்தா எவன் வேணுமானாலும் கைவைக்கலாம்னு நினைச்சியா?அப்படி நினைச்சுத்தானே,என்னை ஈஸியா மடக்கின. நான் அப்போ உன்னை காதலிச்சேன் அதனால்தான் நீ தொட்டதும் ஒட்டிக்கிட்டனே தவிற ஆம்பளை சுகத்துக்காக இல்லை புரியுதா? இப்போ அதே மாதிரி தொட்டு மயக்கலாம்னு திட்டம்போட்டுத்தான் இங்க வந்திருக்கியா? அப்படி வந்திருந்தனா அது நடக்காது. நீ செத்தாலும் அது நடக்காது நான் செத்தாலும் அது நடக்காது. ஒரே நாளில் உயிர் வலியைத் தந்துட்டுப் போன நீ என்னைப் பொறுத்தவரைக்கும் செத்தவன்தான்.இனி என்னைத் தொட்டன்னா அப்புறம் உன்னை நானே கொன்றுவேன் பார்த்துக்க”என்று அவனை தனது ஒருவிரலால் எச்சரித்து நின்றவளை அமைதியாக பார்த்துநின்றான்.
“என்னடா பார்க்கிற?என்ன பார்க்கிற? எங்கப்பாக்கிட்ட சொல்லி உன்னை என்ன செய்யிறேன்னு பாரு”என்று மீண்டும் அவனை எச்சரித்தாள்.
“யாருக்கிட்ட சொல்லுவ?”
“எங்கப்பாக்கிட்டடா?”
“ஓஹோ இதுக்கு முன்னாடி நமக்குள்ள நடந்ததெல்லாத்தையும் உங்கப்பாக்கிட்ட சொல்லிட்டியா?இப்போ இதையும் சேர்த்து சொல்லு. அப்புறம் அரவிந்த் எனக்கு உரிமையோட முத்தம் கொடுத்தான்பான்னு இந்த வார்த்தையையும் சேர்த்து சொல்லு”என்றவனது கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.
“நான் ஏன்டா சொல்லணும். அதுதான் அன்னைக்கே நீ வேண்டாம்னு சொல்லிட்டுப்போயிட்டியே அப்பவே எல்லாம் முடிஞ்சது. போடா போ. போய் வேற எவளாவது ஏமாந்தவக் கிடைப்பாளான்னு பாரு”
“நான் ஏன் இன்னொருத்தியைப் பார்க்கணும். அதுதான் நீயிருக்கியே தியா பேபி”
“பேபியா?”என்று அதிர்ந்தவள் இதுக்குமேல இங்கிருந்தால் இவன் மண்டையை உடைச்சாலும் உடைச்சிடுவேன் என்று நினைத்தவள் என் சாவியை நீயே வைச்சிக்க நான் அதை பெட்ரோல் ஊத்தி கொழுத்திக்கிறேன். புது வண்டியவே வாங்கிக்கிறேன் போதுமாடா. என்னை விட்று. இதுக்குமேல இங்க கூப்பிட்டன்னா நான் வரமாட்டேன். உன் ஜல்ஜாப்பு
வேலையெல்லாம் என்கிட்ட செல்லாது”என்றவள் திரும்பி கதவை நோக்கி நடந்தாள்.
“நதியா நீங்க இன்னும் நம்ம பந்தத்துக்குள்ளதான் இருக்கீங்க. நான் நினைச்சா மட்டும்தான் அதுல இருந்து நீங்க விடுபடமுடியும். எனக்கு அதுல இருந்து விடுபட விருப்பமில்லை. இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லிட்டுப்போங்க”
“நீ என்னைக்கு நான் வேண்டாம்னு சொல்லிட்டுப்போனியோ அப்பவே இந்த பந்தத்துல இருந்து விடுபட்டுட்டேன். நீ நினைக்கிற நேரெமெல்லாம் வேண்டாம்னு வைக்கவும் வேணும்னு வைக்கவும் நான் ஒன்னும் உன் கையில் இருக்கிற பொம்மையில்லை”
“நான் வேணும்னா உன் கையில் உள்ள பொம்மையாக மாறட்டுமா தியா?” என்று காதலாகி கசிந்துருகி உருகும் குரலில் கேட்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே உறைந்துப்போனவள் ‘இவன் என்ன ப்ளான்ல இப்படி பண்ணிட்டிருக்கான். நம்மளை வேண்டாம்னு போனவன் திரும்ப வந்து இப்படி பேசிட்டிருக்கான். இது என்ன ப்ளான்ல வந்திருக்கான் என்று தெரியலையே. முடிஞ்சு போன உறவை ஏன் இவன் புதுப்பிக்க நினைக்கிறான். இதென்ன புதுக்குழப்பமாயிருக்கு? வேண்டாம்னு போனவன் வேணும்னு வந்து நிக்கிறான்? இது சரியில்லையே?’என்று யோசனையோடு அவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.
“என்னடி யோசனையோடு பார்க்கிற?அதே உன் அரவிந்த்துதான். ஏன் இப்படி வந்ததுலயிருந்து ஏதோ ஒருத்தி மாதிரியே பேசுற. நான் உன் சோடாபுட்டிடி. இங்க வா”என்று இரண்டு கையையும் விரித்து கூப்பிட்டான்.
அவள் மெதுவாக அடியெடுத்து அவன் பக்கத்தில் வந்தவள் “ உனக்காக நான் உன் மீது வைத்தக் காதலுக்காக கையை அறுத்துக்கிட்டு சாகக்கிடந்தப்போ வந்து தியான்னு கூப்பிட்டிருந்தாக்கூட எழுந்து உன்னைக் கட்டிப்பிடிச்சிருப்பேன். ஆனால் நான் அவ்வளவு வேதைனயோடு இரத்தம் வடிஞ்சு உயிருப்போயிரும்னு இருக்கும்போது மயங்கியிருக்கேன். எங்கப்பா வந்து என்னைக் காப்பாத்திட்டாங்க. அந்த ஒரு மாசம் உன்னை மறக்கிறதுக்கு நான் பட்ட வேதனையும் கண்ணீரும் வலியும் இருக்கே அது இந்த நரம்பைக் கட் பண்ணும்போதுக்கூட நான் அனுபவிச்சதில்லை”என்று தனது கையைக் காண்பித்துச் சொன்னவளின் கையை அரவிந்த் பிடிக்கப்போனான்.
ஆனால் அவளோ அவனிடம் தனது கை அகப்படாது விலகிக்கொண்டாள்.
“ஒரு மாசம் பழக்கமோ இரண்டுமாச பழக்கமோ ஆனால் உன்கூட நான் பழகி காதலிச்சது உண்மைதானே! அந்தக் காதலுக்காகவாவது உன் நாக்கும் வார்த்தைகளும் இரக்கம் காட்டியிருக்கலாம்! அப்போ இல்லாத காதல் இப்போ திடீர்னு முளைச்சு வந்திடுச்சா என்ன?எனக்காக இந்த ஒரு உதவியைமட்டும் என் வாழ்க்கையில் பண்ணு. இது உன்னோட காலேஜாவே இருக்கட்டும் தயவுசெய்து நான் இந்த வருஷம் படிச்சு முடிக்கும்வரைக்கும் இங்க வராத”என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டாள்.
அவள் இவ்வளவு பேசும்போது அவளையே இமைக்காது பார்த்திருந்தவன், அவள் கடைசியாக கைக்கூப்பி கெஞ்சியதும் அப்படியே நொந்துப்போய்விட்டான்.
“அப்படியெல்லாம் உன்னைவிட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்.அதுக்கான காரணமும் உனக்கே தெரியுமே”
“என்ன மண்ணாங்கட்டி காரணம் இருக்கும். உங்கம்மா சம்மதிக்கலை மாமா சம்மதிக்கலை, வேற பொண்ணை ரெடி பண்ணிட்டாங்கன்னு ஏதாவது காரணம் சொல்லுவ. அந்தக் காரணமெல்லாம் எனக்குவேண்டாம். இங்கிருந்து போயிடு அரவிந்த். இல்லைன்னா?”
“இல்லைன்னா என்ன பண்ணுவ? என் மண்டையை உடைப்பியா?இல்லை என் உயிரை எடுப்பியா?நீ என்னை செய்தாலும் நான் ஏத்துப்பேன்”
“உன்னை நான் ஒன்னுமே செய்யமாட்டேன். நான் என் வண்டியோடு போய் தண்ணி லாரியில முட்டிப்பேன் சோ சிம்பிள்”என்று தனது தோளைக் குலுக்கிச் சொன்னவளை பார்த்து அரவிந்த் அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டான்.
அவன் அப்படி அதிர்ச்சியாகி நிற்பதைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் சந்தோசத்துக்கு பதிலாக வேதனைதான் வந்தது. அதை முகத்தில் காண்பிக்காது கெத்தாக வர்றாட்டா அரவிந்த் சார் என்றுவிட்டு கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தாள். அவள் வெளியே வரவும் ரமேஷ் அவள் முன்பு வந்து நின்றார்.
அவளைப் பார்த்ததும் “இங்க என்ன பண்ற? எதுக்கு இப்போ இங்க வந்த? இவன்கிட்ட பெர்மிஷன் லெட்டர் குடுத்திட்டுப்போகத்தானே சொன்னேன்.இவனைப் பார்க்க இவ்வளவு நேரமா?”
“அப்பாஆஆஆ! என்னாச்சு? எதுக்கு இவ்வளவு கேள்வி. உங்கக்கிட்ட சொல்லிட்டுத்தானே வந்தேன்”என்று அவரது தோளைப்பிடித்து குலுக்கவும்தான் உணர்வுக்கு வந்தார்.
“இல்ல அரவிந்த் ரூம்ல உன்னைப் பார்த்ததும் ஷாக்காகிட்டேன். வேறொன்னும் இல்லை. இனி அவனைப் பார்க்க நீ வரவேண்டாம். எதுன்னாலும் என்கிட்ட வந்து சொல்லு நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். நீ இப்போ கிளாஸுக்குப் போ”என்று கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டார்.
அதைக்கேட்டதும் “இந்த அப்பாவுக்கு என்னாச்சு?”என்று புரியாமலயே கிளாஸுக்குப் போனாள். ஆனாலும் மனதுக்குள்ளாக ஒரு வலியை தன்னையறியாமல் உணரத்தான் செய்தாள்.
அவனை அவ்வளவு திட்டிட்டு வந்தாலும் அந்தக் காதல் அவளை சும்மாயிருக்க விடவில்லை.அதனால் கலங்கிப்போய் உட்கார்ந்தவள் பக்கத்தில் இருந்த தினேஷையும் விஜயையும் பார்த்து “என்னை அந்த பொறுக்கிக்கிட்ட தனியா விட்டுட்டு வந்துடீடீங்களேடா!உங்களைப் போய் நண்பேன்னு நினைச்சேன் பாரு. இனி நீங்க என் பிரண்ட்ஸ் இல்ல போங்கடா”என்றவளுக்கு அழுகையாக வந்தது.
அதைக்கேட்டதும் அதில்ல விஜய் “நதி அரவிந்த் உன்கிட்ட ஏத்வது பேசுவான்னுதான் வந்துட்டோம். ஒருவேளை அவனுக்கு இன்னும் உன்மேல காதல் இருக்கும்னு நினைக்கிறேன். ஒருவேளை நீங்க பேசிகீசி ஒன்னாயிட்டா நல்லதுன்னு நினைச்சோம்”என்று சொல்லி முடிக்கிறதுக்குள்ள அவனை நதி அடித்திருந்தாள்.
இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அதனால் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அப்படியே அவளைப் பார்த்தவன் வேறெதுவும் பேசாது அப்படியே எழுந்து வெளியே போய்விட்டான்.
“என்ன நதி அவனை நீ இப்படி எல்லோர் முன்னாடியும் அடிச்சிட்ட. அவன் நம்ம பிரண்டு நதி. உனக்காகவும் உர் நல்லதுக்காகவும் யோசிக்கிறவன். உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கலை. என்னதான் கோபமிருந்தாலும் நீ அவனை அடிச்சிருக்கக்கூடாது”என்று திட்டிய தினுஷேம் எழுந்து வெளியே போய்விட்டான். நம்மளும் போனால் நதி தனியா இருப்பாளே என்று முகேஷும் வஸந்தும் அவளோடவே உட்கார்ந்திருந்தார்கள்.
ஆனால் நதியாவுக்குத்தான் கிளாஸையும் கவனிக்கமுடியாமல் பிரண்ட்ஸை சமாதானப்படுத்தவும் முடியாமல் தவித்தவளுக்கு அரவிந்த் பேசியதுவேற அவளை உள்ளுக்குள் கொன்றுக்கொண்டிருக்க அப்படியே கிளாஸ்லயே தலையை கவிழ்த்துப் படுத்துவிட்டாள்.
அதுக்கும் லெக்ட்சரருங்ககிட்ட திட்டு வாங்கிட்டு ஒரு வழியாக கிளாஸ் முடிஞ்சு வெளியே வந்தாள்.
நேராக விஜயைத் தேடிப்போனாள். அவன் அங்கே கிரவுண்டுக்குள்ளே இருந்தான்.
அவன் பக்கத்தில் போனதும் “ சாரி விஜய் அடிக்கணும்னு அடிக்கலை. சட்டுன்னு அரவிந்த்கு நீ சப்போர்ட் பண்ணி பேசினதும் அடிச்சிட்டேன். எல்லாம் தெரிஞ்ச நீயே அரவிந்துக்கு சப்போர்ட் பண்ணலாமா?”என்று கேட்டவாறே அவனது தோளில் கையைப்போட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.
அவனோ அவளது கையை எடுத்துவிட்டவன் “எல்லாம் தெரிஞ்சதுனாலதான் அரவிந்துக்கு சப்போர்ட் பண்ணி பேசினேன். நம்ம பக்கத்து நியாயத்தை மட்டுமே எப்பவும் நினைக்ககூடாது நதி. எதிர்தரப்புல என்ன சொல்லவர்றாங்கன்னும் யோசிக்கணும். அப்போதார் உண்மை என்னென்னு புத்திக்கு எட்டும்”என்று பெரிய மனுஷன் மாதிரி பேசினான்.
அதேக்கேட்டவள் எந்த உண்மையா இருந்தாலும் எனக்கு வேண்டாம். அவன் நம்ம எல்லாத்தையும் தப்பா பேசினான். உனக்கும் எனக்கும் வேற மாதிரி அசிங்கமான ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொன்னான். நான் என்னுடைய தேவைக்காகத்தான் உங்களை பிரண்ட்ஸா வைச்சிருக்கேன்னு சொன்னான். அதையெல்லாம் கேட்டுட்டு நான் சாகத் துணிஞ்சவடா. இப்போ போய் அவன்கிட்ட அதையெல்லாம் மறந்து நிக்க சொல்லுறியா?நீயும் அவனுக்காக சப்போர்ட் பண்றியா?ரொம்ப சந்தோசம். எல்லாருக்கும் நதியான்னா பைத்தியாக்காரின்னு நினைப்பு போல”
“அப்படியில்லை நதி. நான் என்ன சொல்லவர்றேன்னா?”
“நீ எதையும் சொல்ல வரவேண்டாம். வா கேண்டில்ல போய் டீ அடிப்போம். எனக்கு தலைவலிக்குது”என்றாள்.
“நதி அவன் சொல்ல வர்றதைக் கேளேன்”
“நான் இப்போ எதையும் கேட்கிற மூடுல இல்லை”
இப்போ அமைதியாக மூன்றுபேரும் டீக்குடிக்க போனார்கள். அப்போது அவர்களைத் தாண்டி அரவிந்தின் கார் போனது. அவனது பார்வையெல்லாம் நதியாவை நோக்கித்தான் இருந்தது. அடுத்து அவன் என்ன பண்ணப்போறான் என்று யாருக்குமே தெரியாது. அவளோ அவனைக் கண்டுக்காது நடந்தாள்.
அப்படியே டீயெல்லாம் குடிச்சு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துவிட்டனர்.
இரவு டின்னர் டைம்ல “நதியாம்மாஆஆ நாளைக்கு நீ காலேஜிக்குப் போகவேண்டாம். நாளைக்கு என்னோட பிரண்டு வீட்டுலயிருந்து உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அவனும் அவன் குடும்பமும் அயர்லாந்துல இருக்காங்க. அங்கயே செட்டில்டு. நாளைக்கு பொண்ணுபார்க்க வர்றாங்க. எங்கேஜ்மெண்ட் அடுத்தவாரம். ஒரு பதினைஞ்சு நாள்ல உனக்கு கல்யாணம்”என்று சீரியஸ்ஸாக சொல்லிமுடித்தார்.
அதைக்கேட்டவளுக்கு என்ன சொல்லவென்று தெரியாது முழித்தாள்.
நர்மதாதான் “என்னப்பா அக்காவுக்கு திடீர்னு கல்யாண ஏற்பாடு பண்ணிட்டீங்க? அவ படிப்பை முடிக்கவேண்டாமா?இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கே? கல்யாணம் முடிஞ்சு அயர்லாந்து போயிட்டா எப்படி படிப்பை முடிப்பா?”
“அதெல்லாம் பேசிட்டேன். இப்போ கல்யாணம் முடிஞ்சதும் மாப்பிள்ளைக்கூடவே போயிடுவா. அவளுக்கான பிராக்டிக்கல்ஸுக்கும் எக்ஸாமுக்கும் வந்தா போதும். நான் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன்”
“அப்பாஆஆஆ இதெல்லாம் சரியில்லப்பா. மாப்பிள்ளையை அவளுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவேண்டாமா?”என்று நர்மதா கோபத்தில் கேள்விக்கேட்டாள்.
“நர்மதா இது உனக்குத் தேவையில்லாத பேச்சு. அவள் ஏற்கனவே பிரச்சனையில் இருந்து தப்பி வந்திருக்கா அவளுக்கு எது நல்லது எது கெட்டது எதுன்னு நாங்க பார்த்து செய்துப்போம். நீ எதையும் குழப்பிவிடாத. அவளுக்குப் பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அவன்தான் மாப்பிள்ளை. அவளுக்கு கல்யாணம் உறுதி பண்ணியாச்சு. அவ்வளவுதான்”என்று பேச்சை முடித்துவிட்டார்.
நதியாவுக்குத்தான் சாப்பாடு தொண்டைக்குள் இறங்கவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தவளுக்கு எண்ணங்கள் எங்கெங்கோ போனது.
கீதாஞ்சலியைப் பார்த்தாள். அவளோ “அப்பா உன் நல்லதுக்குத்தான் எல்லாம் செய்வாங்க நதிம்மா”என்று அவளது கையை அழுத்திக்கொடுத்தாள்.
இதுக்குமேல நம்மளோட கருத்து சொல்ல என்னயிருக்கு? எது நடக்கணுமோ நடக்கட்டும். இதுவரைக்கும் என் வாழ்க்கையில் நடந்ததே எதிர்பாரததுதான். ஹ்ஹ்ஹ்ம்ம் எல்லாம் நன்மைக்கே என்று நாளைய பொண்ணுபார்க்கும் படலத்துக்கு தயாரானாள்!
என்ன நதியா இதெல்லாம்? அங்க ஒருத்தன் உன்னையே உயிருன்னு உளறிட்டிருக்கான்.நீ இங்க கல்யாணத்துக்கு தயாராகிட்டியே? சோ சேடு!