கழிமுள்ளி நெஞ்சுக்காரி-29
கழிமுள்ளி-29
நர்மதாவுக்கு விஜயை அங்கே பார்த்ததும் பயம் வந்தாலும் அதையும் மீறி “பார்டா இந்த குரங்கு எதுக்கு இங்க நிக்கிது. போன் பண்ணி நம்ம எடுக்கலைன்னதும் இங்க வந்துட்டானா?ஹப்பா பிரண்டுன்னா இப்படிலா இருக்கணும்”என்று நினைத்தவாறே அவனைத் தாண்டிப்போக முயன்றாள்.
“நர்மதாஆஆஆ”என்று ஒரு அதட்டல் குரல் கேட்டதும் சட்டென்று வண்டியை நிறுத்தி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“உன் வண்டியை உள்ள விட்டுட்டு வா”
“ம்ம்ம்”என்று தலையாட்டிவிட்டு வண்டியை நிறுத்திவிட்டு வெளியே வந்தாள்.
“ம்ம்ம் வண்டியி ஏறு. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”
“ஹான் என்ன?”
“வண்டியிலேறுடி”
தனது இடுப்பில் கைவைத்து அவனை முறைத்தவள் “என்ன அதிகாரமெல்லாம் தூள் பறக்குது. உன் இஷ்டத்துக்கெல்லாம் வரமுடியாது. நான் என் வண்டியில வர்றேன் எங்க வரணும்னு சொல்லு”என்று சொல்லிவிட்டு திரும்பினாள்.
“வேண்டாம் என் வண்டியிலயே போகலாம். அப்புறம் கொண்டு இங்க விட்றுவேன்”
“நான் சொல்ல வந்ததை சொல்லிட்டுப்போறேன். இதுக்கு எதுக்கு உன் வண்டியில நான் வரணும்”
“இப்போ வண்டியில ஏறுறியா இல்லை. உன்னைத் தூக்கி முன்னாடி வைச்சிக்கிட்டு போகவா”
“ஏதே”என்று அதிர்ச்சியில் கண்களை விரித்தவளை பார்த்து லேசாக சிரித்தான்.
“சீக்கிரம் வண்டியில உட்காருடி நேரமாகிட்டு”
“ம்ம்ம்” என்று வண்டியில் ஏறி உட்கார்ந்தவள் அவனது தோளை உரிமையாகப் பிடித்துக்கொண்டாள்.
அதை அவன் கண்டுக்கொள்ளவேயில்லை. இப்போ நேராகப்போய் ஒரு க்ளோஸ்டு ரெஸ்டாரண்ட் போய் நிறுத்தினான்.
“எதுக்கு இங்க வந்திருக்கோம். என்ன நீ காலையிலயே என்னை சுத்தல்ல விடுறியா?”
“இறங்கு கொஞ்சம் பேசவேண்டியது இருக்கு”
“ஏதோ பண்ற ஒன்னும் புரியமாட்டேங்குது”என்று இறங்கினாள். அவனும் வண்டியை நிறுத்திட்டு வந்தான்.
அவன் இப்போது ஒரு டேபிளுக்குக் கூட்டிட்டுப்போய் உட்கார வைத்தவன் “ என்னடி வேணும் உனக்கு ஆர்டர் பண்ணு”என்றுவிட்டு யாருக்கோ போன் பண்ணிக்கொண்டிருந்தான்.
அவளோ சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது அவர்களை நோக்கி வந்தவனைப் பார்த்தவள், நெற்றியை சுருக்கி கூர்மையாகப் பார்த்தாள்.
விஜய் அவனைப் பார்த்து சிரித்து வாங்க என்று எழுந்து நின்றான்.
அவனும் வந்ததும் உட்கார்ந்து விஜயும் உட்கார்ந்தான். அதைப்பார்த்ததும் விஜயை திரும்பி கேள்வியாகப் பார்த்தாள்.
அப்போதே அவளுக்கு விஜய் இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கான் என்று புரிந்துவிட்டது.
நர்மதா திரும்பி விஜயை முறைத்துப் பார்த்தவளுக்கு, அந்தக்கோபம் அப்படியே எதிரில் வர்றவன் மேலும் திரும்பியது.
நர்மதா பார்த்து பக்குவாமா அடிகொடு!உன் கோபத்தை தாங்கிப்பானுங்களான்னு தெரியாதே!
விஜய் இப்போது நர்மதாவைப் பார்த்தவன்
“ நர்மதா இது வந்து?”
“மிஸ்டர் சோடாபுட்டி அம்மாஞ்சி அரவிந்தா?”என்று சரியாக கணித்து கேட்டாள்.
அதைக்கேட்டதும் வந்தவனுக்கு ஆச்சர்யம்,
“வாவ் நர்மதா நீ ரொம்ப ஷார்ப்புன்னு விஜய் சொன்னது கரக்ட்தான். நர்மதா நதியா மதிரி இல்லை சார். நதியா பாவம். இது ஒரு சொர்ணாக்கான்னு சொன்னான். என்னை சரியா கண்டுபிடிச்சிட்டியே. ஹாய் ஐயம் அரவிந்த்”என்று சிரித்தவாறே அவளைப் பார்த்து கையை நீட்டினான்.
ஹாய் என்று மட்டும்சொல்லிவிட்டு கைக்கொடுக்காமல் தவிர்த்தவள் விஜயிடம் “இப்படித்தான் என்னைப் பத்தி சொர்னாக்கான்னு சொல்லி வைச்சியா?என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது. அவன் அவன் இந்த தேவதை திரும்பி பார்க்கமாட்டாளான்னு ஏங்கிட்டு இருக்காள் க்கும். நீதான் பர்மா ரவுடி”என்று அவனிடம் சண்டைப்போட்டவள் அரவிந்தைக் கண்டுக்கவேயில்லை.
அதைப்பார்த்த அரவிந்த் புன்னகையோடு “பார்றா என் கொழுந்தியாவுக்கு என் மேல கோபமாக்கும். ஓகே ஓகே. அப்புறம் என் நதியா எப்படி இருக்கா?”
“எங்க அக்கா நதியா நல்லாயிருக்கா. நான் உங்களுக்கு ஒன்னும் கொழுந்தியா இல்லை”என்று சிடுசிடுத்தவள் இப்போ விஜயைப் பார்த்து “இவரைப் பார்க்கத்தான் என்னை இங்கக் கூட்டிட்டு வந்தியா?”என்று கோபத்தில் கேட்டாள்.
“ஷ்ஷ்ஷ் கொஞ்சம் அமைதியா இருடி என்றவன் நீ எதுக்கு நேத்து நைட்டு மெசேஜ் பண்ணிருந்த? அதைச்சொல்லு முதல்ல.என்ன உங்கப்பா நிச்சயம் வேண்டாம்னு ஒரேடியா கல்யாணத்தை வைக்கிறாரா?”
“ப்ச்ச் இல்ல சண்டே அவளுக்கு நிச்சயம்னு வைச்சிட்டாரு”
“என்ன இந்த சண்டேவா?”என்று அரவிந்த் அதிர்ச்சியில் கேட்டான்.
“உங்களுக்கு என்ன மேன் ஷாக்கு?அதுதான் அவளை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சிட்டு அவளை சாகத் தூண்டினீங்களே, அதுக்குப்பிறகு இப்போ வந்து என்ன ஷாக்காகுறீங்க, ஷாக்க குறைங்க. இது எங்க பேமிலுக்குள்ள மேட்டர்”
“ஹல்லோ அந்த பேமிலிக்குள்ள நானும் ஒருத்தன். இவனெல்லாம் பேமிலி கிடையாது. அவன் வெறும் பிரண்டு மட்டும்தான். நான் உன் மச்சான்மா பார்த்தது கவனமாபேசு. நாளைபின்ன உன் லவ்வுக்கும் ஏதாவது பிரச்சனைன்னா இந்த மச்சானோட துணை வேணும்”
“ஏதே காதலா?அதெல்லாம் நமக்கு செட்டாகாது. அப்புறம் உன்னை மாதிரி ஒருத்தனை நம்பி எங்க அக்கா ஏமாந்தது போதும். நானெல்லாம் ஏமாறமாட்டேன். இப்போ எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்கீங்க அதைச்சொன்னா நான் கிளம்பிடுவேன். இந்த விஜய் கூப்பிட்டதாலதான் வந்தேன்”என்று பட்டென்று பேசிவிட்டாள்.
நர்மதா இப்படித்தான் பேசுவாள் என்று தெரியும் என்பதால் விஜய்க்கு அவளை ஒன்றும் சொல்ல இயலவில்லை. ஆனால் அதைக்கேட்டு அரவிந்தின் முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. அவன் அப்படியே அமைதியாகிவிட்டான்.
அதைப்பார்த்த விஜய் உடனே நர்மதாவின் கையைப்பிடித்து “எதையும் தெரிஞ்சிக்காமல் யாரையும் குற்றம் சொல்லாத நர்மதா. என்ன நீ இப்படி பேசுற?”என்று சத்தம் போட்டான்.
“என்ன தெரிஞ்சிக்காம பேசுறேன்? எனக்கு ஒரு பதில்மட்டும் சொல்லு. இவரு பக்கம் என்ன வேணும்னாலும் நியாயம் இருக்கட்டும்,இவரு தப்பே பண்ணலன்னு வைச்சிக்கலாம், அக்காவை ப்ரேக்கப் பண்ணினதுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம், ஆனால் அன்னைக்கு நதி கையை அறுத்துக்கிட்டதுக்கு அப்புறம் அப்பா போய் அவளைப் பார்க்காமல் இருந்திருந்தா இப்போ அவா செத்து இரண்டு மாசமாகிருக்கும். அப்போ வந்து யாருக்கிட்ட விளக்கம்சொல்லுவாராம், செத்துப்போன நதியோட போட்டவுலயா, இல்லை கல்லறையில போயா?அதுபாட்டுக்கு வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டிருப்பாங்க. நம்மதான் நதியை இழந்துட்டு அழுதிட்டிருந்திருப்போம். இதுக்கு அவருக்கிட்ட பதில் இருக்கா?எங்கப்பா அந்த நேரத்துல எப்படியோ அவளைப் பார்க்கப்போயிருக்காரு. சாமிதான் எங்கப்பாவை அங்க அனுப்பிருக்காங்க. இல்லைன்னா இப்பவும் அதை நினைத்துப் பார்க்க முடியலை”என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அதைப்பார்த்த இருவருக்கும் ஒருமாதிரியாக இருந்தது.
“சாமி ஒன்னும் உங்கப்பாவை அவளோட ரூமுக்கு அனுப்பலை. உங்கப்பாவை அங்க போகவைச்சது இந்த ஆசாமிதான். நான்தான் உங்கப்பாவை அவளைப்போய் பார்க்கச் சொன்னேன். அப்பவே டெய்லி யாராவது பக்கத்துல இருங்கன்னு சொன்னேன்”
“என்ன?”என்று நம்பமுடியாமல் கண்களை இமைக்காது இரண்டுபேரையும் மாத்தி மாத்தி பார்த்தாள்.
ஆஹா ஏதோ நடந்திருக்குபோல. அப்போ இவங்களோட லவ் பெயிலிருக்குப் பின்னாடி அப்பா இருப்பாரோ?என்று சட்டென்று விசயத்தை கிரகித்துக்கொண்டாள்.
“ நதி அவளுடைய காதலுக்காக உயிரையே கொடுக்க துணிஞ்சிருக்கா. ஆனால் நீங்க உங்க காதலுக்காக அவளையே எங்கப்பாக்கிட்ட வேண்டாம்னு தூக்கி கொடுத்துட்டு போயிட்டீங்க அப்படித்தானே. உங்களையெல்லாம் நதி காதலிச்சதே தப்பு. ஆணோ பெண்ணோ தன்னை நம்பி வந்தவங்களை எந்ய சூழ்நிலையிலையும் விட்டுட்டுப் போகக்கூடாது. நதிக்கு நீங்க மறுபடியும் வேண்டாம். தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க”என்றவள் எழுந்துப்போக முயன்றாள்.
“அப்போ நானும் சாகத்துணியணும்னு சொல்லுறியா?செய்த தப்பைதிருத்திக்க வந்திருக்கேன். நானும் நதியா விசயத்துல கொஞ்சம் அவளை தப்பா கணிச்சிட்டேன். அவா அப்படியான தப்பான முடிவு எடுக்கமாட்டான்னு நம்பினேன். அதுதான் நன் செஞ்ச பெரிய தப்பு. இப்போ எனக்கு உதவி பண்ணு நர்மதா”என்று அரவிந்த் அவளிடம் நேரடியாகவே கேட்டான்.
அதில் கொஞ்சம் மலையிறங்கியவள் “நதியோட வாழ்க்கைக்காக உங்களுக்கு உதவி செய்யுறேன் சொல்லுங்க என்ன செய்யணும்?”என்று கேட்டாள்.
“எனக்கு உங்க அக்காவை பொண்ணுப்பார்த்துட்டுப் போன குடும்பத்தோட டீடெயில் வேணும். நானும் ட்ரை பண்ணி பார்த்துட்டேன். அவங்க தகவல் எனக்கு கிடைக்கலை. அப்புறம் எப்போ நிச்சயதார்த்தம்னு எனக்கு அப்டேட் பண்ணனும்”
“இவ்வளவுதானா?”
‘ம்ம்ம்”
“தேங்க்ஸ்”
“உங்க தேங்க்ஸ் எனக்குத் தேவையில்லை. டேய் குரங்கே என்ன பார்த்திட்டிருக்க என்னைக் கொண்டுபோய் காலேஜ்ல விடு”என்று எழுந்து வெளியே வந்துவிட்டாள்.
அரவிந்த் கோபத்தில் போகும் நர்மதாவைப் பார்த்து லேசாக சிரித்தான்.
“என்ன சிரிக்கிறீங்க?”என்று விஜய் கேட்டான்.
“இல்ல உங்க கேங்குக்கே தண்ணிக்காட்டுற ஆளா இருக்காளே. அதுதான் பார்த்து சிரிச்சேன்”
“எங்களை மதிக்கவே செய்யாது இந்த சொர்ணாக்கா. நம்மளையே கவுண்டர் கொடுத்து மடக்கிடுவா. ஆனால் ரொம்ப அறிவா பேசுவா. வயசுல சின்னவளானதுனால கண்டுக்கவே மாட்டோம்”
“நதியா மாதிரி உள்ளுக்குள்ள சாப்ட் இல்ல இவா. நதி பாவம்”
“அதென்னவோ உண்மைதான். இவாக்கிட்ட மாட்டப்போறவன் செத்தான். தினமும் எண்டெர்டெயின்மெண்டுக்கு பஞ்சம் இருக்காது”
“என்னது மாட்டுறவனா?ஏற்கனவே ஒருத்தன் மாட்டிருப்பான்னுல நினைச்சேன்”
“அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை சார். இவளையெல்லாம் எவனும் மடக்கமுடியாது. இவளா பாவம் பார்த்து மடங்கினாதான் உண்டு.இப்போ வரைக்கும் ஒருத்தனும் மாட்டல”
“ஆஹான்” என்று கேட்டுவிட்டு அரவிந்த் சிரித்தான்.
அதற்குள் விஜய் என்று நர்மதா வெளியே இருந்துக் கூப்பிட்டாள்.
“ஐய்யோ சார் அவா கூப்பிடுறா. இனியும் போகாமல் இருந்தால் அவ்வளவுதான் வாயாலயே நம்மளை கொன்றுவா வர்றேன் சார்” என்று கிளம்பிவிட்டான்.
விஜய் நர்மதாவை காலேஜ்ல கொண்டுபோய் விட்டான். நர்மதா அவனைப் பார்த்து “இதுக்குமேல இப்படி என்கிட்ட கேட்காமல் ஏதாவது செய்துவைச்சன்னு வையேன். அங்கே அடிப்பேன் அக்கா பிரண்டுன்னுலாம் பார்க்கமாட்டேன்”என்று எச்சரித்துவிட்டுத்தான் போனாள்.
“யப்பா இவாக்கிட்டலாம் பார்த்துதான் இனி நடந்துக்கணும்” என்று தலையை உலுக்கிவிட்டு காலேஜிக்கு கிளம்பிவிட்டான்.
இங்கே அரவிந்தோ அடுத்து என்ன செய்யணும்னு ஏற்பாடு பண்ணிவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டிலிருக்கும் நதியாவுக்குத்தான் மனசே சரியில்லை. இந்தக் கல்யாணத்தை ஏற்கவும் முடியாது வேண்டாம்னு சொல்லமுடியாது திணறிக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு தன் மனதை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாமல் மூச்சு முட்டியாது. எங்கே இருக்கிற இந்தப்பிரச்சனையில் தன்னையறியாமலயே அரவிந்தைத் தேடி ஓடிருவேன் போலயே என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்த நர்மதாவோ அவளாகவே கலங்கித் தெளியட்டும் என்று விட்டுவிட்டாள். அரவிந்த் கேட்ட உதவிக்காக மாப்பிள்ளை வீட்டு தகவலை கீதாவிடம் கேட்டு அதை அப்படியே அரவிந்துக்கு அனுப்பிவிட்டாள்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே நதியாவுக்கு மனசு ஒரு மாதிரி நிலையில்லாது தவித்தது. இன்னைக்கு எங்கேஜ்மெண்ட் முடிச்சிட்டுன்னா அடுத்து கல்யாணம்தானே. ஐய்யோ கல்யாணம் பண்ணிட்டு குடும்பத்தை விட்டுட்டு போகணும், என் பிரண்ட்ஸை விட்டுட்டு போகணும்,ஐய்யோ என்னால முடியல என்று தாங்கிக்க முடியாது அழுதாள்.
அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த நர்மதாதான் “எதுக்கு நீ இப்படி அழுதிட்டிருக்க?இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னா வேண்டாம்னு அப்பாக்கிட்ட சொல்லவேண்டியதுதானே?”என்று திட்டினாள்.
“எப்படி சொல்லமுடியும் நான் செய்தமுட்டாள் தனத்திலிருந்து காப்பாத்தினதே அப்பாதான். அவரை எதிர்த்து இப்போலான் என்னால பேசமுடியல”என்று அழுதாள்.
“அதுசரி அப்போ கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டுக்குப்போய் வாழு”
“அதை நினைக்கவே என்னால முடியல”
“அப்போ அரவிந்த் மச்சான்கிட்ட போ”
அதைக்கேட்டதும் அவளைப் பார்த்து முறைத்தவள் “என்னடி அரவிந்த மச்சான்னு கூப்பிடுற?என்னாச்சு உனக்கு?”
“எனக்கு ஒன்னுமாகலை உனக்குத்தான் என்னென்னமோ ஆகிடுச்சு”
“என்ன உளறிட்டிருக்க?”
“அக்கா மாப்பிள்ளையை மச்சான்னு கூப்பிடாமல் அண்ணான்னா கூப்பிட முடியும். அதுவும் கோயமுத்தூர்கார மச்சான். ஆளும் அழகா இருந்தாரு ரொம்ப அறிவாவும் பேசினாரு”
“நர்மதா”
“என்ன அதிர்ச்சியாகுற. நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.,அந்த தைரியத்துல அவரு ஏதோ பேசினா நீ ஏதோ செய்து வைச்சிட்டு இப்போ அப்பா அப்பான்னு அப்பா புராணம் பாடிட்டிருக்க. உன் நிலமைக்கு காரணமே அவருதான்”
“என்னடி உளறிட்டிருக்க?”
“முதல்ல மச்சான்கிட்ட பேசு. அப்புறம் உனக்கே எல்லாம் புரியும்”
“யாருக்கிட்டயும் நான் பேசவேண்டாம். எதுவும் எனக்கு புரியவேண்டாம்”
“அப்போ இப்படியே உட்கார்ந்து அழுதுகிட்டிரு”என்று போய்விட்டாள்.
நதியா சாயாங்காலம்வரைக்கும் இப்படியே அழுதிட்டிருந்தாள்.
சாயங்காலம் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வந்திடுவாங்க என்று கீதா வந்து மகளுக்கு பட்டுப்டுவையெல்லாம் கட்டி, நகையை போட்டுவிட்டு அலங்காரமும் பண்ணினார்.
அவளது முகத்தைப் பார்த்த கீதா “நதிம்மா எல்லாம் உன் நல்லதுக்காகத்தான். தயவு செய்து சிரிச்ச முகமா இரு. இது உன்னுடைய நிச்சயதார்த்தம் நீயே சந்தோசமா இல்லைன்னா எப்படி?”என்று அவளை சமாதானப்படுத்தியிருந்தார்.
நதியாவுக்கு இப்போ மனசு திக்குதிக்குன்னு அடிச்சது. ஏற்கனவே காலையில் நர்மதா பேசியது வேற மண்டையை திங்க, என்ன நடக்கப்போகுதுன்னு தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்.
அங்கே கீழே திடீரென்று அமைதியாகிவிட, எந்த சத்தமும் கேட்காமல் போனதும் நதியா மெதுவாக நடந்து வந்துப்பார்த்தாள்.
அங்கே அரவிந்த் நடுவில் உட்கார்ந்திருக்க, அவனோடகூட பெரிய படையே வந்திருந்தது. அதில் அவளுக்கு தெரிந்தது காலேஜ் சேர்மன் வெற்றிவேல் மட்டும்தான்.
இவளுடைய குடும்பத்து ஆட்களும் இருக்க,அவங்கப்பா மட்டும் அமைதியாக எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் நின்றிருந்தார்.
இப்போது நர்மதா அவள் பக்கத்தில் வந்து தோளில் நாடியை வைத்தவாறே “உன் புருஷன் மிஸ்டர் அரவிந்த் உன்னை அவரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக வந்திருக்காரு. எல்லாத்துக்கு ரெடியா இரு நதியா”என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்.
“நர்மூஊஊஊ”என்று அதிர்ச்சியில் அவளைப் பார்த்துவிட்டு அரவிந்தைப் பார்த்தாள்.
அவனோ அம்மாஞ்சி மாதிரியே முகத்தை வைத்துக்கொண்டு எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்பதுபோல உட்கார்ந்திருந்தான்!
நதியாவுக்கு அடுத்து என்ன என்பதை யோசிக்க மூளையே வராது அதிர்ச்சியில் சிலையாகியிருந்தாள்.
அரவிந்துதான் யாரும் பார்க்கதவாறு கண்ணடித்துவிட்டு இந்த பூனையும் பால்குடிக்குமா என்பதுபோல இருந்தான்.
ஆஹா அரவிந்து ரமேஷுக்கு செக்கை அயர்லாந்துக்காரன் மூலமா வைச்சிட்டியாடா!