கழிமுள்ளி நெஞ்சுக்காரி-31

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-31

 கழிமுள்ளி-31

விஜய் அந்த ரூமுக்குள்ளே வந்தவன் “என்னாச்சு அரவிந்த்?உங்க குடும்பம் மொத்தமும் வெளிய காத்திருக்காங்க. இங்க என்ன நடந்திட்டிருக்கு?”என்று கேட்டவன் நதியாவைப் பார்த்தன்.

“அவளது கண்கள் பயத்தைக் காட்டியது. எனனாச்சு?உண்மை நதியாவுக்கு தெரிஞ்சிடுச்சா?”என்று பதறி கேட்டவனை நதியா அதிர்ந்துப் பார்த்தாள்.

“விஜய்”

“நதி”அவள் பக்கத்தில் போனான்.

“விஜய் என் மாமனார் என்னை கொலைகாரன்னு அவங்க பொண்ணுக்கிட்ட சொல்லிட்டிருக்காரு. ஆனால் அவரு பண்ணின பிராடுத்தனத்தை சொல்லலை. அதுல என் பொண்டாட்டி பயந்துப்போய் நிக்கிறா. அதுதான் கொலைகாரன் இப்போ கடத்தல்காரனா மாறி என் பொண்டாட்டிய தூக்கிட்டு போயிடலாமான்னு யோசிக்கிறேன்”

“அரவிந்ந் ப்ளீஸ் அவளுக்கும் எல்லாத்தையும் கேட்டதும் அதிர்ச்சியா இருக்கும்ல, நாங்களாவது அடுத்த மனுஷங்க. ஆனால் அவள் உங்களோட வாழ்க்கையை பகிர்ந்துக்கணும்னு வாழப்போறவள். அவள் தடுமாறறதுல தப்பில்லையே. ஆனால் அதுக்கு கொஞ்சம் டைம் தேவைல. இப்போ நிச்சயம் முடிச்சிட்டு அப்புறம் எதுன்னாலும் பேசி முடிவெடுக்கலாமே”என்று விஜய் சொன்னதும் அரவிந்த் சிரித்தான்.

“அதென்ன பிரண்ட்ஸ்னா ஒன்னுபோலதான் யோசிப்பீங்களா?இதைத்தான் என் பொண்டாட்டியும் சொல்லுறா?நீயும் அதையே ரிப்பீட் பண்ற. இதுல பயப்பட என்னயிருக்கு விஜய்? இப்பவே அவா என் பொண்டாட்டித்தானே. நான் நினைச்சிருந்தா இப்பவே என்கூட வாழவான்னு இழுத்துட்டுப்போகலாமே. ஆனாலும் யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது, என் மாமனாருக்கும் எந்த கௌரவக் குறைச்சலும் வந்திடக்கூடாதுன்னு பார்த்து பார்த்து செய்திட்டிருக்கேன். அதைவிடு ஏன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை துரத்திவிட்டு நான் இங்க வரணும்?அவனுங்க இருக்கும்போதே இவா என் பொண்டாட்டின்னு சொல்ல எனக்கு எவ்வளவு நேரமாகும் சொல்லு. அதையெல்லாம் விட்டுட்டு இப்படி கெஞ்சிட்டு நிக்கணும்னு எனக்கென்ன ஆசையா விஜய்?”

அதைக்கேட்ட விஜய் வேறு எதுவும் பேசாமல் ரமேஷைப் பார்த்தான்.

“எனக்கு இந்தக் கொலைகாரன் மருமகனா வர்றதுல விருப்பமில்லை. என் மகளுக்கு வேற மாப்பிள்ளைப் பார்த்துக் கட்டி வைக்கிறேன். இவன் நதியாவுக்கு வேண்டாம். நதியா வா இது சரிபட்டு வராதுன்னு நான் சொல்லிடுறேன்”என்றவர் மகளை தன் பக்கமாக இழுத்து நிறுத்தினார்.

அவளோ அவரது கையில் இருந்து விலகி நின்றவள் “நீங்க சொன்னீங்கள்ல அரவிந்தைக் கொலைகாரன்னு அவனைக்கூட நம்பிடலாம், ஆனால் பெத்த பொண்ணுக்கிட்ட நல்லவங்க மாதிரியே நடிச்சி,எனக்குத் தெரியாமலயே எல்லாத்தையும் செய்துவைச்சிட்டு நல்லவங்கமாதிரி பேசுனீங்களே உங்களைத்தான் நம்ப முடியாது. ஏம்பா நான் அரவிந்த் கார்ல இருந்து இறங்கும்போதே எங்க காதலைக்கண்டுபிடிச்சிருக்கீங்கள்ல. ஏன் அன்னைக்கே உனக்கும் அரவிந்துக்கும் என்ன அப்படின்னு கேள்விக் கேட்கலை? அப்படி கேட்டிருந்தா நானே உங்கக்கிட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பேன். இல்லைன்னா அரவிந்தும் நானும் காதலிக்கிறோம்னு சொன்னனே அப்போவாவது இது எங்களுக்குப் பிடிக்கலை.அரவிந்தைப் பத்தி விசாரிச்சோம் இப்படியான தகவல் உங்கம்மாவுக்கு வந்திருக்கு, நீ கொஞ்சம் யோசிச்சுக்கன்னு என்கிட்ட நேரடியா பேசிருந்தீங்கன்னா இந்த பிரச்சனையை அப்பவே முடிச்சிருக்கலாமே. அதைவிட்டுட்டு அரவிந்துக்கிட்ட போய் பேசி, அவனை வைச்சி என்னையும் என் காதலையும் விட்டு விலகியிருக்க சொல்லி என்னவெல்லாம் பண்ணிருக்காங்க இவங்களை எப்படி நம்புறது?எனக்கென்னமோ நான் கையை அறுத்துக்கிட்ட இராத்திரி அரவிந்துதான் அப்பாவுக்கு போன் பண்ணி என்னை பார்க்க சொல்லிருக்கணும்னு தோணுது?”

“இதுதான் என் தியா. என்னை சரியா புரிஞ்சு வைச்சிருக்கிறா. எத்தனை நாள் எத்தனை வருஷம் காதலிக்கிறோம் அப்படிங்கிறது இங்க மேட்டரேயில்லை. எப்படி காதலிக்கிறோம், எவ்வளவு ஆழமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறோம் அப்படிங்கிறதுதான் காதலே. உன்னைப் பத்தி எந்தக் கவலையும் இல்லாமல், நம்ம காதலை பிரிச்சிட்டோம்னு நல்ல தூங்கிட்டிருந்த உங்கப்பாவை எழுப்பி என் தியாவைப் பாருங்க. என் மனசுக்கு சரியா ஏதோ தோணலைன்னு சொன்னேன். என் பொண்ணைப் பத்தி எனக்குத் தெரியும். அவள் அப்படியெல்லாம் பண்ணமாட்டாள். இந்தக் காதலுக்காகவெல்லாம் அவள் எதுவும் பண்ணிக்கமாட்டாள்னு சொன்னாரு. அப்புறம் எப்படியோ உன்னை பார்க்க வந்து உன்னைக் காப்பாத்திட்டாரு. என்னகென்னமோ உங்கப்பாவெல்லாம் உங்கம்மாவை காதலிச்சுக் கல்யாணம் பண்ணின மாதிரியே தெரியலை.அப்படி பண்ணியிருந்தால் காதலோட வலியை புரிஞ்சிருப்பாரு”என்று நக்கலாகவும் அவருக்கு ஒரு கொட்டு வைத்து பேசினான்.

“இங்கப்பாரு எங்களோட காதலைப் பத்தி பேச உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இந்தக் கல்யாணத்தை நான் நடத்தவிடமாட்டேன். என் மகள் வாழ்க்கை உன்னைக் கட்டிக்கிட்டா நல்லாயிருக்காது”

“ஹலோ மிஸ்டர் என்ன கட்டிக்கிட்டா நல்லாயிருக்காதா? ஏற்கனவே அவளை நான் கல்யாணம் பண்ணியாச்சு. இது உங்களுக்காக நாங்க நடத்துற கல்யணாம்.உங்க கௌரவம் போகக்கூடாதுன்னு பண்றேன். ஏதோ இவருக்கிட்ட நாங்க பெர்மிஷன் கேட்டமாதிரியும், இவரு பெர்மிஷன் தந்தாதான் நான் வாழ்க்கையை தொடங்குற மாதிரியும்ல பேசுறாரு. என் பொண்டாட்டி என்னை வெறுக்கிறாளா? நீங்க ஏதும் சொல்லி வைச்சு அவளை மொத்தமா என்னை வெறுக்கிற மாதிரி இருக்கிறாளான்னு பார்க்கத்தான் இத்தனை நாளும் வெயிட்டிங்க். நீங்க சொன்னதும் தலையாட்டிட்டுப் போகிறதுக்கு நான் ஒன்னும் அம்மாஞ்சியில்லை. அரவிந்த் எல்லாத்தையும் தலைதெறிக்க ஓடவிடுற கோயமுத்தூர்காரன்”

“ஏய்ய்ய் என்று ரமேஷ் அவன் சட்டையைப் பிடிக்க அவரது கையை அசால்டாக தட்டிவிட்டவன் “ இன்னும் பத்து நிமிஷத்துல என் குடும்பம் முன்னாடி நீங்க வந்து உட்காருறீங்க. நதியா அலங்காரம் பண்ணி பொண்ணா வந்து நிப்பா. எங்க நிச்சயம் எல்லோர் முன்னாடியும் நடக்கணும். இந்த அரவிந்த் முடிவெடுத்துட்டான். அது கண்டிப்பா நடக்கணும்”என்றவன் தியாவிடம் வந்தான்.

அவளது கன்னத்தை தொட்டு தடவிக்கொடுத்தவன் “ என் வாழ்க்கையில் அவ்வளவு பிரச்சனையோடதான் இங்க வந்தேன். ஆனால் உன்னை காதலிச்சபிறகு அத்தனை பிரச்சனையும் சமாளிச்சு மீண்டு வெளிய வரணும்னு நினைக்கவே உன் மீதான காதல்தான் காரணம். எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டனோ அதுக்கப்புறம் பயம் வந்திடுச்சு ஒருவேளை நான் என்னுடைய சூழ்நிலையில் இருந்து வெளியவரலைன்னா நீ என்னாவாயோன்னு பயம் வந்திடுச்சு. அந்த நேரத்துலதான் உங்கப்பா வந்து உன்கிட்டயிருந்து விலகிப்போகச்சொன்னார். அது நியாயம்னு தோணுச்சு. அதுதான் விலகிப்போனேன். அதுக்கும் நான்தான் காரணம். உங்கப்பா சொன்ன உடனே விலகிப்போறதுக்கு நான் ஒன்னும் கோழையில்லை. ஆனால் இப்போ எல்லா சூழ்நிலையையும் கடந்து உனக்காக என் காதலுக்காக நான் வந்திருக்கேன். எனக்கு நீ வேணும். என் நதியா எனக்கு வேணும் அவ்வளவுதான் ரெடியாகிட்டு வா”என்றவன் வெளியே போய் அவனது குடும்பத்தோடு போய் உட்கார்த்துக்கொண்டான்.

நதியா அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

அவளருகில் வந்த கீதாஞ்சலி அவளது கையை இழுத்துவிட்டு “இங்கப்பாரு எனக்கு நல்லத் தெரியும் அவன் ஒரு கொலை பண்ணியிருக்கான். எங்க பைல்ஸ்ல எதுவும் பொய்யில்லை. ஆனால் இப்போ அப்படி எந்த பைல்ஸ்ஸும் இல்லை. அப்படியே பணங்கொடுத்து மாத்திட்டாங்க போலிருக்கு. ஒரு கொலையையே செய்துட்டு மொத்தத்தையும் மறைச்சிருக்கான்னா அவன் எவ்வளவு பெரிய கிரிமினலா இருப்பான். அவன் சொல்லுறதையெல்லாம் கேட்காத. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்”என்று இப்பவும் மகளை அந்தக் காதலில் இருந்து பிரிக்கத்தான் பார்த்தார்கள்.

பெத்தவங்களோட மனசு மகளுக்காக துடிக்கத்தான் செய்தது. ஆனால் அதில் நேர்மையில்லையே!

“ஆண்டி இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி பேசிட்டே இருப்பீங்க. அது அரவிந்த் மேலே வேணும்னே போட்ட கேஸ். அதை அரவிந்த் எங்கக்கிட்ட சொல்லிட்டான்” 

“எங்கக்கிட்டன்னா? நம்ம பிரண்ட்ஸ் கிட்டயா விஜய்?”என்று நதியா கேட்டாள்.

“நம்ம பிரண்ட்ஸ்னா தினேஷ்க்கும் எனக்கும். அப்புறம் உன் தங்கச்சி நர்மதாவுக்கும் தெரியும். அரவிந்த் எல்லா விசயத்தையும் திறந்து சொல்லிட்டான். அப்புறம் நினைக்கிற மாதிரி அரவிந்த் அம்மாஞ்சி இன்னசெண்ட் ஒன்னும் கிடையாது. அவன் படிக்கிறப்போ காலேஜையே கலக்கின பெரிய ரவுடி. அதாவது உன்னை மாதிரி. ஆனால் உண்மையகயே ரவுடி. அவன் ரொம்ப கெத்து தெரியுமா?எங்களையெல்லாம்விடவும் உன்னை நல்லா பார்த்துப்பான். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்கப்பா அம்மா நினைக்கிற மாதிரியெல்லாம் கெட்டவன் கிடையாது. அதை நான் உறுதியா சொல்லுவேன். அரவிந்தையும் எனக்கு நல்லா தெரியும்,உன்னையும் எனக்கு நல்லாதெரியும். இரரண்டுபேராலயும் வேறு யாருக்கூடவும் வாழமுடியாதுங்கிறதும் எனக்குத் தெரியும்”

அதைக்கேட்டதும் நர்மதா அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் “உனக்குத் தெரியாத நிறைய விசயங்கள் இருக்கு. அது அத்தானே உன்கிட்ட சொல்லுவாங்க. நீ அவரை நம்பு இப்போதைக்கு ரெடியாகி வெளியே போ”என்று அவளுக்கு நம்பிக்கைக் கொடுத்தாள்.

நதியா எழுந்து அரவிந்த கொண்டுவைதுத்விட்டு போன புடவையைக் கட்டிக்கொண்டாள், அதோடு இருந்த நகையையும் போட்டாள்.

அவள் ரெடியாகி வெளியே வரவும் ரமேஷும் கீதாஞ்சலியும் அவளது கையைப்பிடித்துக்கொண்டனர்.

“நதியாம்மாஆஆஆ வேண்டாம்டா. அப்பா சொல்லுறதைக் கேளுடா”என்று கண்கள் கலங்கினார்.

“அப்பாஆஆஆ பூதம் இருக்கு பூதம் இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி. அதையும்தான் எதிர்கொள்ளுறனே. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம். நீங்களா இதை சிக்கலாக்கி வைச்சிக்கிட்டீங்க. இதுக்குமேல வர்றதை ஏத்துக்கிறேன். அரவிந்தை நம்புறன் இல்லை அது இங்க பிரச்சனையில்லை. எதுவந்தாலும் நான் பார்த்துக்கிறேன் அவ்வளவுதான்” என்று அவரது கையை தள்ளிவிட்டு வெளியே வந்தவள் எல்லோருக்கும் வணக்கம் வைத்தாள்.

ரமேஷுக்கும் கீதாஞ்சலிக்கும் வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது. அதனால் அமைதியாக வந்து அரவிந்தின் குடும்பத்திற்கு எதிராக வந்து உட்கார்ந்தனர்.

அரவிந்தோட அப்பா சண்முகவேல்தான் பேச்சைத் தொடங்கினார்.

“எங்க அரவிந்துக்கு உங்கப்பொண்ணுதான்னு அந்த கடவுளே முடிச்சுப்போட்டிருக்கான். அதனால எதுவும் பேசுணும்னு இல்லை. எனக்கு மூணு பிள்ளைங்க. என் குடும்பம் கொஞ்சம் பெருசுதான். இரண்டு தம்பிங்க குடும்பமும் நானும் ஒத்துமையாதான் இருக்கோம். இங்க எல்லோருமே ஒன்னுதான். இதுதான் என் மனைவி கனகவல்லி. இந்த குடும்பத்தை இவ்வளவு சுமூகமாக கொண்டுபோறவங்க. எங்களுக்கு நிறைய பேக்டரி, வீடு மண்டபம்னு நாங்க சம்பாதிச்சது, எங்கப்பா சொத்துன்னு இருக்கு. கோயமுத்தூருலயே பேருபோன குடும்பம். ஒரே தங்கச்சி சுகந்தி. அவ குடும்பத்தைத்தான் உங்களுக்கு தெரியுமே பிரின்சிபால் சார். எங்களுக்கு உங்க மகளை ரொம்ப பிடிச்சிருக்கு. ஏற்கனவே அரவிந்தும் வெற்றியும் சொல்லிருக்காங்க. நீங்க சொன்னீங்கன்னா நாளைக்கே சென்னையில இருக்க நம்ம மண்டபத்துல வைச்சே கல்யாணத்தை முடிச்சிடலாம். இல்லைன்னா அடுத்தவாரம் வைச்சிக்கலாம். என் பையனுக்கு பொண்ணை மட்டும் கொடுங்க அதுபோதும்”என்று முடித்துவிட்டார்.

நதியாவுக்கு சண்முகவேலை ரொம்ப பிடித்திருந்தது. அவர்களுடை மொத்த குடும்பமுமே அவ்வளவு யதார்தமான மனிதர்களாகவே இருந்தனர்.

வெற்றிவேல்தான் இரண்டு குடும்பத்தாருக்கும் நடுவாக நின்று நிச்சயத்தை நடத்தினார்.

ரமேஷுக்கு மனேசயில்லை. ஆனாலும் தன்னுடைய குடும்பத்தார் முன்னாடி கேவலப்பட்டிரக்கூடாதே என்று எல்லாத்தையும் சகித்துக்கொண்டிருந்தார்.

ரமேஷ் மற்றும் கீதாஞ்சலி குடும்பத்தாருக்கு இது பெரியவர்களால் பேசிமுடிவு செய்த கல்யாணம் என்பதுமாதிரியே எல்லாத்தையும் முடித்து தட்டுக்களை மாற்றினார்.

அடுத்து அரவிந்தின் அப்பாவே கல்யாணத் தேதியையும் குறித்து வர்ற புதன்கிழமையே கல்யாணத்தை வைச்சிக்கிலாம்,எதுக்குப்போட்டு நாட்களை கடத்தணும் என்றவர் அரவிந்தைப் பார்த்தார்.

அவனும் கண்ணைக் காண்பித்துவிட அந்த நாளையே குறித்துவிட்டனர்.

ரமேஷுக்குத்தான் இதை எப்படி தடுப்பது என்று யோசனை ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது அரவிந்த் வேகமாக எழுந்து ஓடிப்போய் நதியாவைத் தாங்கிப் பிடிக்கவும்தான் பார்த்தார்கள்,அவள் மயங்கிவிழுந்திருந்தாள்.

உடனே அவளைத் தூக்கிட்டுப்போய் பக்கத்தில் இருந்த ரூமில் படுக்க வைத்தவன், அவளுக்கு முகமெல்லாம் துடைத்துவிட்டு, ஏசியை போட்டுவிட்டான். மெதுவாக தண்ணியை எடுத்து தெளிக்கவும் கண்ணைத் திறந்துப்பார்த்தாள்.

“நர்மதா ஏதாவது ஜூஸ் எடுத்துட்டு வா. உங்க அக்கா இந்த நிச்சயதார்த்தம் நடந்திடுமேன்னு பயத்துலயே எதுவும் ஒழுங்கா சாப்பிட்டிருக்கமாட்டாள்” என்று சொன்னவனை பார்தது கண்களை விரித்து நதியா பார்த்தாள்.

‘ஆஹா இவன் நம்மளைப் பத்தி நல்லா தெரிஞ்சு வேச்சிருக்கானே!’என்றுதான் அவளது யோசனையை போனது.கீதாஞ்சலியை அவளது பக்கத்திலயே விடவில்லை.

அதற்குள் அவர்களது சொந்தக்காரங்க எல்லோரும் தங்களுக்குள்ளே பேச ஆரம்பித்துவிட்டனர்.

ஏற்கனவ இரண்டுபேருக்கும் ரெஜிஸ்டர் கல்யாணம் முடிச்சிட்டாமே. இப்போ நதியாவேற மயங்கிவிழுந்துட்டாள். அடுத்த கல்யாணத்தையும் வளைகாப்பையும் ஒன்னாதான் வைப்பாங்க போலிருக்கு. இப்போ உள்ள பிள்ளைங்க எங்க பொறுமையா இருக்காங்க. எல்லாம் இந்த பெத்தவங்களை சொல்லணும். கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் நடத்திட்டு இப்படி மயங்கி விழுந்திடுறாங்க. என்ன பத்து மாசத்துக்குப் பதிலாக கல்யாணம் முடிஞ்சு எட்டுமாசத்துலயே கையில குழந்தையோடு இருக்காங்க. எல்லாம் அவசரம்தான் என்று ஒருத்தர் பேச ஆரம்பிக்க, அது பரவி எல்லாருக்கும் செய்தியாகப்போய் இப்போது நதியா கர்ப்பாமாக இருக்காளம் என்று கன்பார்மே பண்ணிட்டாங்க!

அவ்வளவுதான் இனி ரமேஷ் சார் நீங்களே நினைச்சாலும் கல்யாணத்தை நிறுத்தமுடியாது போலயே!எல்லாரும் நதியா கர்ப்பம்னு நினைச்சிட்டாங்க. இனி அரவிந்தைத் தவிற வேற யாருக்கு கட்டி வைச்சாலும் அது பிரச்சனையில்தான் வந்து நிக்கும், இப்போ என்ன பண்ணப்போறீங்க பிரின்சிபால் சார்?