கழிமுள்ளி நெஞ்சுக்காரி-32
கழிமுள்ளி-32
நதியா மெதுவாக எழுந்து நர்மதா கொண்டுவந்த ஜூஸைக் குடிச்சிட்டு கொஞ்சம் தெம்பாக உணர்ந்தவள் அரவிந்திடமிருந்து விலகி உட்கார்ந்தாள்.
அரவிந்த் நர்மதாவிடம் “உங்க அக்காவைப் பார்த்துக்க, அப்புறம் நான் வேண்டாம்னு வேத்து கிரகத்துல ஏதாவது இருக்கா, அங்கப்போய் தப்பிச்சிக்கலாம்னு புதுசா ஏதாவது ஐடியா போட்டாலும் போடுவா. ஏன்னா அவா மிஸ்டர் ரமேஷ்குமார் மகள்ல செய்தாலும் செய்வா. அப்புறம் இனிதான் கல்யாண வேலை நிறைய இருக்கு அதையெல்லாம் செய்யணும். அப்புறம் உன் சொந்தக்காரங்க என்ன பேசிட்டிருந்தாங்க?”என்று கேட்டவன் அங்கிருந்த கீதாஞ்சலியை கேவலமாகப் பார்த்துவிட்டு, நக்கலாக சிரித்தான்.
உடனே கீதாஞ்சலி எழுந்து வெளியே போய்விட்டாள். அவள் வீட்டாட்கள்தான் உட்கார்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர். அதைக்கேட்டுக்கொண்டிருந்த ரமேஷும் இப்போது கீதாஞ்சலியைப் பார்த்தார்.
இரண்டுபேருக்கும் அடுத்து என்ன செய்யணும் என்று எதுவும் தெரியாது அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.
வெற்றிவேல்தான் “என்ன ரமேஷ் சார் அதுதான் நிச்சயம் முடிச்சிடுஞ்சே. நாங்க கிளம்புறோம். அடுத்து என்னென்ன செய்யணும்னு நான் உங்களுக்கு தகவல் சொல்லுறேன். நீங்க பொண்ணோடு மட்டும் மண்டபம் வந்தா போதும்”என்று சொல்லி எழுந்தார்.
அவங்க மொத்தக்குடும்பமும் எழுந்து வர்றோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டனர்.
அரவிந்தும் இதற்குமேல் இங்க இருக்கமுடியாது என்று எழுந்தவன் நதியாவிடம் திரும்பி “ இங்கப்பாரு இவன்தான் போயிட்டானே வேற ஏதாவது செய்து எஸ்கேப்பாகணும்னு ப்ளான் போட்டன்னு வையேன் மறுபடியும் சொல்லுறேன் அப்பவே வந்து நான் உன்னைத் தூக்கிட்டுப்போயிடுவேன். எவனுக்கும் பயப்படமாட்டேன். உங்கப்பாவுக்கும்கூட புரியுதா?இந்த அரவிந்தை மீறி நீ எந்தபக்கமும் திரும்ப முடியாது. என் கண்ணு எப்பவும் உன் மீதேதான் இருக்கும். புரிஞ்சுதுங்களா அம்மணி”என்றவன் வேஷ்ட்டியைத் தூக்கி கட்டியவன் வாசல் பக்கம் வந்தவன் திரும்பி நதியாவைப் பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்ணடித்து,உதட்டைக் குவித்து பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.
அவளோ ஆஆஆஆவென்று அதிர்ச்சியில் அவன் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்கு இப்போ என்ன உணர்வென்றே தெரியவில்லை. இன்னைக்கு காலையில் இருந்து நடந்ததையெல்லாம் கேட்டதுலயே அவளது மனது ஒருமாதிரி சோர்வுக்குள் போய்விட்டது.
இனி யாரு என்ன சொன்னாலும் அது மூளைக்குள்ள போகவேபோகாது. அவளுக்கு இப்போது தேவையெல்லாம் தூக்கமும் தனிமையும்தான். அதனால் அப்படியே கண்ணைமூடிப் படுத்துக்கொண்டாள்.
விஜயும் நர்மதாவும் அவளோடு பேச வந்ததற்கே வேண்டாம் என்று கையை வைத்து தடுத்துவிட்டாள்.
இப்போது யாரோடும் அவள் பேச தயாராகயில்லை என்பதை புரிந்துக்கொண்டு இருவரும் வெளியே வந்துவிட்டனர்.
விஜய் வேற வழியின்றி வீட்டுக்கு கிளம்பினான். அவன் பின்னாடியே வந்த நர்மதா “ஓய் நீ எப்படி கரெக்ட்டா இங்க வந்த? உன்கூட உங்க கூட்டம் வரலையா?”என்று கேட்டாள்.
“ம்ம்ம் அவனுங்க எல்லாம் அழையா விருந்தாளியா நிச்சயதார்த்தத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டானுங்க”
“அப்போ நீ மட்டும் ஏன் வந்தியாம்?”
“நான் வந்தது மாப்பிள்ளை வீட்டு சைடுல இருந்து. மாப்பிள்ளை அரவிந்த் என்னை தனியா கூப்பிட்டிருந்தாரு”
“ஓஹோ சரிதான். இப்போ அந்தப்பக்கமா சாய்ஞ்சிட்டியா?”
“நதிக்கு எது நல்லதோ அந்தப்பக்கம் சாஞ்சிக்கிட்டேன் அவ்வளவுதான்”
“எனக்கொரு டவுட்டு உண்மையிலயே அரவிந்த் அவரோட பிரண்டை கொன்னுருப்பாரோ?”
“இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்”
“ப்ச்ச் அப்போ உனக்கு எல்லாமும் தெரிஞ்சிருக்கு”
“உனக்குத் தெரிஞ்சதுதான்டி எனக்கும் தெரியும். ஆனால் அரவிந்த் அதை பண்ணிருக்கமாட்டாருன்னு நான் நம்புறேன்”
“ஒருவேளை பண்ணிருந்தா?”
“அதுவும் நல்லதுக்குத்தான் அப்படியான ஒருத்தன் இருக்கிறதுக்கு சாவதேமேல்”
“என்ன?”
“பின்ன என்னடி நம்மளை நம்பி வர்ற பொண்ணை எந்த சூழ்நிலையிலும் தப்பா நடத்தக்கூடாது, தப்பா பார்க்கவும்கூடாது.அப்படி தப்பா நடத்தினான்னா அவன் சாகவேண்டியதுல ஒருத்தன்தான்”
“அப்போ நண்பர்களா இருந்தா காதலிக்கூடாதுன்னு சொல்லுறியா?”
“அட லூசே. நான் சொல்ல வர்றது உனக்குப்புரியலையா. ஒருவேளை நட்பா பழகி இரண்டுபேரும் புரிஞ்சிக்கிட்டு ஓகே இவங்க நம்ம லைப் பார்ட்னரா வந்தா நல்லாயிருக்குமேன்னு பரஸ்பரபுரிதலோட காதலிக்கிறாங்கன்னா அதுவேற. ஆனால் அப்படியெதுவும் இல்லாமல் அவளை உடம்பு ரீதியா அடைய நினைக்கிறான்னா அவன் எவ்வளவு பெரிய காமக்கொடூரனா இருப்பான். அவனையெல்லாம் பிதுக்கிவிடணும்”
“ஹான் என்ன?”
“அதெல்லாம் உனக்கு புரியாத வார்த்தை. ஆமா எதுக்கு நீ என்கிட்ட கேள்விக்கேட்டுட்டு இருக்கடி?”
“ம்ம்ம் எனக்கு வேறவேலையில்லை. நான் கொஸ்டின் கேட்டா நீ எதுக்கு பதில் சொல்லுறியாம்”
“அதுசரி உன்னையும் ஒரு ஆளா மதிச்சு பதில் சொன்னேன் பாரு என்னை?”
“உன்னை?”
“நானே அடிச்சிக்கணும்னு சொல்ல வந்தேன்”
“அதுக்குத்தான் நான் இருக்கனே. நான் வேணும்னா அடிக்கவா?”
“எப்படி அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல கொட்டிட்டு ஓடினியே அப்படியா?”
“அது வந்து வந்து” என்று பதில் சொல்ல முடியாமல் திணறியவள் அவன்கிட்டயிருந்து ஓடித்தப்பிக்கத்தான் நினைத்தாள்.
ஆனால் விஜய் அதற்குள் அவளது கையைப் பிடித்த்க்கொண்டான்.
“ஐய்யோ விஜய் கையைவிடு”என்று துள்ளியவளைப் பார்த்து சிரித்தான்.
“வாடி வா!என்னையவே கொட்டிட்டுப் போனல்ல இருடி நான் இப்போ கொட்டுற கொட்டுல அப்படியே இன்னும் அரையடி குள்ளமாகிடுவ பாரு” அவள் தலையில் கொட்டுவதற்கு கையை ஓங்கினான்.
நர்மதா அப்படியே பயந்து கண்களை மூடிக்கொள்ளவும் “அது அந்த பயம் இருக்கட்டும். இனி என்கிட்ட விளையாடுவ. கொன்றுவேன்டி. இப்போ ஐய்யோ பாவம்னு சும்மா விடுறேன்”என்று அவளது கையைவிட்டான்.
அதைப்பார்த்தவள் ஹப்பாடா அடிக்காமல் விட்டுட்டான் என்று நினைத்து கண்ணைத் திறந்தவளைப் பார்த்து நாக்கைத் துருத்தி சிரித்தான்.
“ம்ம்ம் நீ சிரிக்கும்போது பார்க்க நல்லாவேயில்லை. நீ உர்ர்ன்னு முறைச்சிட்டேயிரு உன் முகரைக்கு அதுதான் கொஞ்சமாச்சும் நல்லாயிருக்கு. போடா உராங்குட்டான்” என்றவளை அடிக்க கையோங்கினான். அவ்வளவுதான் நர்மதா விடு ஜூட்டு என்று ஓடிவிட்டாள்.
“இருடி என் கையில மாட்டுவல்ல அப்போ தூக்கிட்டுபோய் தண்ணி டேங்குக்குள்ள இறக்கிவிடுறேன், அப்போதான் சரிபடுவ” என்று திட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவனது மனசுக்குள்ளயே நர்மதா கேட்ட கேள்வி வண்டாகக் குடைந்துக்கொண்டிருந்தது. ஒருவேளை உண்மையிலயே அரவிந்த் அப்படி செய்திருந்தா என்ன பண்ண?என்ன பண்ணமுடியும்?நமக்கு நதியோட வாழ்க்கை முக்கியம். அதெல்லாம் நடந்து முடிஞ்சது. இப்போ அவரு நதியாவோட வீட்டுக்காரர். இங்கேயில்லன்னாலும் வெளிநாட்டுக்காவது போய் அவளோடு வாழ்ந்திடுவாரு. அதுவரைக்கும் நமக்குப்போதும். எதையுமே ஆராயாமல் அதுபாட்டுக்கு விட்டுடணும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
இங்கோ அரவிந்த் வீட்டுக்குப்போனதுமே எல்லோரும் உட்கார்ந்து பேசினார்கள்.
“அரவிந்த் அடுத்து என்ன செய்யணும்னு ப்ளான் பண்ணிட்டியா?”
“ஆமாப்பா. இங்க காலேஜ்ல இப்போதைக்கு ஜாயிண்ட் பண்ணிட்டேன். பாதியிலே விட்டுட்டு வரமுடியாது. அதுவுமில்லாமல் உங்க மருமகளுக்கும் ஒரு வருஷ படிப்பு இருக்கு. அவளும் படிப்பை முடிச்சிட்டா அடுத்து நான் கொஞ்சநாள் வெளியவே இருக்க ப்ளான் பண்றேன். இப்போதைக்கு இங்க செட்டிலாகிற ப்ளான் இல்லை”
“அதுதான் பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சே. அப்புறம் எதுக்கு அங்கப்போய் செட்டிலாகணும்னு நினைக்கிற?”
“நம்ம பக்கத்துல இருக்கிற பிரச்சனைதான் முடிஞ்சிருக்கு. எதிர்ல இருக்கிறவனுங்களுக்கு நான்தானே பிரச்சனையே. அப்போ என்னைய முடிக்க நினைப்பாங்கள்ல. இங்கிருந்தா அது என்னையும் பாதிக்கும் என் நதியாவையும் பாதிக்கும். அதுதான் இங்க இருக்கவேண்டாம்னு முடிவு பண்ணிருக்கேன்”
அதைக்கேட்டதும் சுத்தியிருந்த அத்தனைபேரும் அமைதியாகிவிட்டனர். அவனது அப்பா சண்முகவேல்தான் “என்னடா இது மழை விட்டாலும் தூவானம் விடாத மாதிரி இப்படி பெரிய பிரச்சனையில் இருந்து வெளியே வந்தும் இப்படியெல்லாம் இவயை சுத்தி பிரச்சனை வருதே”என்று வேதனையோடு புலம்பினார்.
வெற்றிவேல்தான் “விடுங்க மச்சான் நம்ம வீட்டுக்கு பிள்ளைக்காக என்னலாமோ பண்ணிட்டோம். இது பண்ணமாட்டோமா. அவனுக்கு எது நல்லதோ அதை செய்வோம்”என்று சமாதானப்படுத்தினார்.
ஒரு குடும்பத்தில் பழி பாவம்னு வந்துட்டா அது அவ்வளவு சீக்கிரத்தில் போகாது என்பதுதான் தெரிஞ்சவிசயமாச்சே!அதனால் வருவதை ஏற்றுக்கொள்ளுவோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
“சரி நீ சொல்லுறதும் வாஸ்தவம்தான். அதுக்காக எவ்வளவு நாள் அங்கயே இருக்கமுடியும் நம்ம சனத்தோட இருக்கணும்ல. அதுதானே எங்களுக்கும் நல்லது உனக்கும் நல்லது. அதனால சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சு பிள்ளைக்குட்டிங்களை எங்க கண்ணுக்கும் காமிச்சிட்டு நீ வெளிநாட்டுக்குப்போ”என்றார்.
அதைக்கேட்டவன் சரிப்பா என்று தலையாட்டிவிட்டான். ஆனால் மனசோ க்கும் அங்க ஒருத்தி நம்மளை மனசுக்குள்ளயே வைச்சு இப்போ கும்மாங்குத்து குத்திட்டிருப்பா. அவளைக் கரக்ட் பண்ணி சமாளிச்சு அவளோட முதல்ல வாழணும். அதுக்கப்புறம்தான் புள்ளைக்குட்டியெல்லாம். டேய் அரவிந்த் ரவுடியா இருக்கிறதைவிட புருஷனா இருக்கிறது ரொம்ப குஷ்டமா இருக்கும்போலயே!இப்பவே கண்ணைக்கட்டுதே என்று புலம்பியவாறே கட்டிலில் படுத்தான்.
அவன் கண்முன் வந்து நின்ற உருவத்தைப் பார்த்து அப்படியே அதிர்ந்து எழுந்துவிட்டான்.
ஊப்ப்ஸ் என்று தனது தலையை உலுக்கி தன்னை நிதானப்படுத்திக்கொண்டான். எவ்வளவு சீக்கிரம் நதியைக் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூட்டிட்டு வந்திடனும் என்று நினைத்துக்கொண்டான்.
உடனே நதியாவுக்கு போன் பண்ணினான். அவளோ போனை கையில் வைத்து அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதைப்பார்த்த நர்மதா“என்ன கோயமுத்தூர் மச்சானா?பேசு பேசு”என்று தோளில் இடித்தாள். அவளை முறைத்துப்பார்த்தாள்.
“என்ன முறைக்கிற?அதுதான் முறைப்படியும் உரிமைப்படியும் அவர் இரண்டு மாசத்துக்கு முன்னாடியே என் மச்சானாகிட்டாரே. இப்போ கல்யாணம் பண்றது சம்பிராதத்துக்கு. எதுக்கெடுத்தாலும் முறைக்காத அறிவை யூஸ் பண்ணுங்க அம்மணி”என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
“என்னது அம்மணியா?”
“அரவிந்த் அத்தான் உன்னை அப்படித்தானே கூப்பிட்டாங்க”
“நானே எல்லோர் மேலயும் கோபத்துல இருக்கேன். நீ வேற கடுப்பேத்தாத”
“ஏன் கோபம்?”என்று தெரியாத மாதிரியே கேட்டாள்.
“எதுவும் தெரியாத மாதிரி கேட்காத அப்பா செய்து வைச்சிருக்கிற வேலை ஒரு பக்கம், அரவிந்தை நினைச்சு வர்ற பயம் ஒருபக்கம்னு மொத்தமாக குழம்பிப்போய்தானே இருக்கேன்”
“அப்படியா?அப்போ இப்படியே குழம்பி புலம்பிக்கிட்டே இரு. உனக்கு வேற வேலையே இல்லை”
“ஏன்டி?”
“பின்ன என்னக்கா நீ. அரவிந்த் பின்னாடி இருக்கிறது பூதமா புதையாலான்னு பார்த்திடுறேன்னு நீயே அப்பாக்கிட்ட சொல்லிட்ட, அப்புறம் குழம்பாத, எது வந்தாலும் சமாளிக்கலாம் அவ்வளவுதான். நாளைக்கு உனக்கு புடவை எடுத்து அனுப்பிடுறேன்னு மச்சான் மெசேஜ் பண்ணிட்டாரு. அப்புறம் எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க. என்னதான் ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டாலும், இப்படி எல்லோர் முன்னாடியும் நடக்கிற கல்யாணம் வேற வைப் கொடுக்கும். அதை என்சாய் பண்ணுக்கா. நாங்கெல்லாம் உன்கூடத்தானே இருக்கோம். அதைவிட விஜயும் எல்லாத்தையும் விசாரிச்சிட்டுத்தான் அரவிந்துக்கு ஓகே சொன்னதே. பீ ஹாப்பீ நதியாஆஆஆ”என்று அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
அவ்வளவுதான் நதியாவுக்கு கொஞ்சம் பயம் நீங்கியிருந்தது. எதுன்னாலும் பார்த்துக்கலாம் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள்.
ஆனால் இன்னும் அப்பா அம்பாவிடம் பேசவில்லை. இப்போதைக்கு அவங்களிடம் ஓதுங்கியிருக்கிறது நல்லது என்று தீர்மானித்திருந்தாள்.
கல்யாணத்துக்கு முந்தின நாளே அவளுக்கான எல்லாவற்றையும் அரவிந்தே கொண்டுவந்துக் கொடுத்தான்.
கல்யாண புடவையிலிருந்து நகைகள் வரைக்கும் அவன் வாங்கினது, அவங்க கொடுத்ததுதான் போடணும் என்று சொல்லிவிட்டான். உங்க வீட்டுல உள்ள எதையும் போட்டுட்டு வரக்கூடாது என்று சொல்லிவிட ரமேஷுக்கும் கீதாஞ்சலிக்கும் வேற எதுவும் சொல்லமுடியவில்லை. அவர்களால் இந்தக் கல்யாணத்தையும் நிறுத்தமுடியவில்லை. அதனால் நடக்கும் கல்யாணத்தில் பொம்மை மாதிரி பார்வையாளர்களாக மட்டுமே நின்றிருந்தனர்.
அதிகாலையிலயே அவர்களைக் கூட்டிட்டுப்போக கார் வந்தது. அரவிந்த் அவர்களுக்கு பாதுகாப்பிற்காக பவுன்சர்களையும் கூடவே இரண்டுகார்களிலும் அனுப்பி வைத்திருந்தான்.
‘பார்றா மச்சான் பொண்டாட்டிய எவ்வளவு பாதுகாப்பாகூட்டிட்டு போறாங்க. செமல்ல”என்று சொல்லும்போதே ரமேஷ் கோபத்தில் கண்கள் சிவக்க அவளை பார்த்தார்.
“பாதுகாப்பாக கூட்டிட்டுப்போகலை. நம்ம எங்கேயும் ஓடிப்போயிடக்கூடாதுன்னு ஆளு போட்டு கூட்டிட்டுப்போறான். அந்த அரவிந்த்து? இதுல அவன் நல்லவன்னு சர்ட்டிபிகட் குடுக்காத”
“அதுசரி அவங்க அவங்க எண்ணத்துக்குத் தக்கத்தானே யோசிக்கமுடியும். நான் நல்லதா யோசிச்சேன். நீங்க மாத்தி யோசிக்கிறீங்க அவ்வளவுதான்”
“ஒரே நாள்ல பத்திரிக்கையை அடிச்சு நம்ம சொந்தங்களுக்கு அவனோட ஆளை வைச்சே குடுத்துட்டான். அவனுங்க சொந்தங்கள் ஏற்கனவே வந்துட்டானுங்க. எனக்கு என்னவோ இவ்வளவு வேகத்துல கல்யாணம் பண்றது சரியா தோணல”
அதைகேட்ட நதியாவோ “ நீங்க ஒரே வாரத்துல கல்யாணத்தை நடத்தணும்னு நினைச்சீங்க. அவன் உங்களை முந்திக்கிட்டு மூணே நாள்ல நடத்துறான். இரண்டுபேரும் ஒருத்தொருக்கொருத்தர் சளைச்சவங்கயில்லை”என்று அவரையும் சேர்த்து மட்டம் தட்டினாள்.
“நான் செய்ததுக்கு சரியான காரணம் இருக்கு”
“அரவிந்தும் இதைத்தான் சொல்லப்போறான், நான் செய்யிறதுக்கு காரணம் இருக்குன்னு உங்களை மாதிரியே வியாக்கியானம் பேசுவான்”
இதுக்குமேல இவக்கிட்டபேசமுடியாது என்று அமைதியாகிவிட்டார்.
அடுத்து கார் மண்டபத்துக்கு முன்னாடிபோய்தான் நின்றது. நான்குபேரும் இறங்கியதும்தான் எந்த மண்டபம் என்று பார்த்தார்கள்.அதிலயே அதிர்ந்துவிட்டனர். வி.ஐ.பிகள் வீட்டுக்கல்யாணம் நடக்கும் பெரியமண்டபம் அது. அவர்கள் உள்ளே பழறதுக்குள்ளாகவே அவளைக் கூப்பிட அரவிந்தின் அக்கா அம்மா சித்தி என்று கூட்டமே வந்துவிட்டனர்.
அவ்வளவுதான் அவளை அவர்கள் கூட்டிட்டுப்போய்விட, இவங்க மூணுபேருக்கு மட்டும் தனியா ஒரு ரூம் கொடுத்திருந்தனர்.
அதற்குப்பிறகு அவர்களை மூகூர்த்த நேரத்துக்குத்தான் வெளியே கூப்பிட்டார்கள்.
நதியாதான் தன்னை சுற்றி தனக்குத் தெரிந்தவர்கள் யாருமேயில்லை என்று மிரண்டுபோய் உட்கார்ந்திருந்தாள். இப்படியே இந்த மண்டபத்தின் பின்வாசல் வழியாக எகிறி குதிச்சு எங்கேயாவது ஓடிப்போயிடலாமா என்றுகூட நினைத்தாள்.
ஆனால் மாட்டிக்கிட்டா பிரச்சனை.அதைவிட எங்கேப்போறது என்ற திணறள் என்று அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அரவிந்தின் அக்கா அவளது கையைப் பிடித்து மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போதுதான் ஒரு மாதிரி மூச்சடைப்பது போன்று உணர்ந்தாள்.
இத்தோடு எனக்கும் என் குடும்பத்துக்கும் சம்பந்தமில்லாமல் ஆகிடுமே!நான் இன்னொரு வீட்டுக்கு வாழப்போயிடுவனே!என்று மனம் கண்டதையும் யோசித்துக் கலங்கியது. நர்மதாவுக்குமே அழுகை வந்துவிட்டது.
ரமேஷ் கீதாஞ்சலிக்கு இப்போவாவது இந்தக் கல்யாணம் நின்னுறக்கூடாதா என்ற ஏக்கம் இருந்தது.
அவள் மணமேடையில் வந்து உட்காரவும்தான் பார்த்தாள். அங்கே முன்னாடி அவளது பிரண்ட்ஸ் நான்குபேரும் உட்கார்ந்திருந்தார்கள்.
அவள் இப்போது அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு, அப்படியே திரும்பி அரவிந்தைப் பார்த்தாள்.
அவன் கண்ணை சிமிட்டி “என் பொண்டாட்டியோட எல்லா உறவுகளும் எனக்கு ரொம்ப முக்கியம்” என்று சொன்னான்.
அவளுக்கு கொஞ்சம் பயம்போயிருந்தது. ஆனாலும் உண்மைத் தெரியாமல் இவனோடு எப்படி வாழமுடியும்? என்ற முள்ளும் நெஞ்சில் குத்திக்கொண்டுதான் இருந்தது.
அவள் அடுத்து யோசிக்கும் முன்பே அவளது கழுத்தைச் சுற்றி அரவிந்தின் கைகள் நகரவும் என்னவென்று பார்த்த்ள்.அவன் தாலியை எடுத்து அவளது கழுத்தைத் சுற்றிக்கொண்டுப்போயிருந்தான்.
அவளை அறியாமலயே கண்ணை ஒரு நொடி மூடித்திறக்கவும், அவன் மூன்று முடிச்சைப்போட்டு அவளை சம்பிராதயப்படியும் தனது மனைவியாக்கிக்கொண்டான்.
அரவிந்துக்கு பூரிப்பான மகிழ்ச்சியென்றால் நதியாவுக்கு ஏதோ சிக்கிக்கொண்டோமே என்று கலக்கம் வந்திருந்தது. அவளது கலக்கள் கண்ணில் தெரிந்தது.
அதைப்புரிந்துக்கொண்ட அரவிந்த அவளது தோளைச் சுற்றி கையைக்கொண்டு வந்து அவளைப் பிடித்து தன்னோடு சாய்த்துக்கொண்டான்.
இவன் ஒருத்தன் அவன் என்ன நினைக்கிறானோ அதைதான் செய்துவைப்பான்!