கழிமுள்ளி நெஞ்சுக்காரி-8

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-8

கழிமுள்ளி-8

விஜய் நதியாவோடு பேசவேயில்லை. ஏன் உன்னை அரவிந்த் பிடிச்சிருந்தான், எதுக்கு நீ அப்படி அவன் கைக்குள்ள நின்றிருந்தன்னு எதுவுமே கேட்கலை. அப்படியே கிளாஸுக்குள்ள போனவன் தனியாக போய் உட்கார்ந்துவிட்டான்.

நதியா அவன் பக்கத்திலும் போய் உட்காரமுடியாது என்பதால் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இவனுக்கு என்னாச்சு?ஏன் மூஞ்சு தூக்கிவைச்சிருக்கான் என்று நினைத்தவாறே தினேஷை பார்த்தாள்.

அவனோ எங்க போயிருந்தீங்க இரண்டுபேரும். இவ்வளவு லேட்டா வந்தீங்க. எங்களை விட்டு நீங்க மட்டும் எங்கப்போனீங்கன்னு? அவனும் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

நதியாவோ இவன்வேற லூசுமாதிரி கேள்விக்கேட்டுட்டு போடா இவனே என்று திரும்பிக்கொண்டாள்.

“இவன் அரவிந்த் என்னை பிடிச்சிருந்ததுக்கா கோபபட்டான். அரவிந்த் நான் கீழ விழாமல் இருக்கதுக்குத்தானே பிடிச்சான்?” என்று விஜயை பத்தி யோசிக்காமல் இப்போ அரவிந்தைப் பத்தி யோசிக்க ஆரம்பித்தாள்.

இந்த அரவிந்த் பார்க்கத்தான் பாவமா இருக்கான். ஆனால் நம்மளை பிடிச்ச பிடி இரும்பு பிடியா இருந்துச்சே!இந்த அம்மாஞ்சிக்குள்ள இவ்வளவு பவரூ?நம்பமுடியலையே!ஆனாலும் அவன் நம்மள இப்படி பாவமா வித்தியாசமா பார்க்கிறது நல்லாதான் இருக்கு. அச்சோ உள்ளுக்குள்ளே ஏதோ ஓடுதே!என்று புல்லரிச்சவள் மண்டையில யாரோ நச்சுன்னு தட்டுனமாதிரி இருந்துச்சு. உடனே என்னவென்று பார்க்க அவளுக்கு பின்னாடி அவளது கேங்க் வந்து உட்கார்ந்திருந்தது.

“என்னடி உள்ளுக்குள்ள ஏதோ ஓடுதேன்னு புலம்பிட்டிருக்க நல்ல குனிஞ்சு பாரு பென்ச்சுக்குள்ள பல்லி ஓடப்போகுது!இப்போதான் இரண்டு பல்லியைப் பார்த்தேன்” என்று சொல்லி முடிக்கிறதுக்குள்ள நதியா ஐய்யோ பல்லி என்று பென்ச்மேல ஏறியே நின்றுவிட்டாள்.

அதைப்பார்த்த லெக்ட்சரர் பிரியாவும் பயந்து கிளாஸுக்கு வெளியே வந்துவிட்டாள்.

அவள் சத்தத்தைக் கேட்டு கேர்ள்ஸ் எல்லாம் பல்லிக்குப் பயந்து அலறி பென்ச்சு மேல ஏறி நின்றுவிட்டார்கள்.

இப்போ தினேஷ் அடுத்து என்ன சொல்லன்னு தெரியாமல் பேய் முழிமுழிச்சவன் “ஏன்டி குரங்கே உன்கிட்டதான் விளையாட்டுக்கு சொன்னேன். இப்போ என்னடான்னா நீ இப்படி மொத்த கிளாஸையும் பென்ச்சு மேல ஏத்திட்டியே. உன்னையெல்லாம் பிரண்டா வைச்சிக்கிட்டு காமெடிக்கூட பண்ணமுடியல. கீழே இறங்கி உட்காரு”என்று திட்டவும்தான் மெதுவாக உட்கார்ந்தாள்.

அதற்குள் பல்லி எங்கன்னு தேடி பார்த்துட்டு இல்லையென்றதும் பிரியா விசாரித்தார்.

ஆஹ்ஹா வசமா சிக்கிட்டாங்க அப்படிங்கிற மாதிரி ஐஞ்சு பேரும் இப்போ கிளாஸுக்கு வெளியே வெற்றிகரமாக நிக்கவைப்பட்டார்கள்.

“ஏன்டா இப்படி? காலையில் இருந்து அமைதியா இருந்து மிஸ்டர் ரமேஷ்கிட்டெல்லாம் நல்லபேரு வாங்கினேன் தெரியுமா?இப்போ மத்தியானமே மொத்தமா முடிச்சுவிட்டீங்க போங்க”

“நம்மளையெல்லாம் திருந்திட்டோம்னு சொன்னாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க நதியா. அதனால திருந்திர வேலையை விட்டுட்டு நம்ம நம்மளா இருக்கிற வேலையை பார்ப்போம். அதுதான் எப்போதும் நமக்கு நல்லது. யாருக்காகவும் நடிக்கவேண்டியதில்லை பாரு. வாங்கடா இனி அடுத்தும் இந்த பிரியா மேடம் கிளாஸ்தான் நம்மளை வெளியேதானு நிக்கவைக்கும். இப்போ வெளியவும் போகமுடியாது கேட்டு மூடியிருக்கும், வாங்க கிரவுண்டுக்குப் போய் மரத்தடியில் ஒரு தூக்கத்தை போடுவோம்” என்று விஜய் சொன்னதும் எல்லோரும் தலையாட்டிவிட்டு அப்படியே கிரவுண்டுபக்கம் நடந்தனர்.

“ஏன்டா விஜய் என்கிட்ட முகம் கொடுத்து பேசமாட்டுக்க.மத்தியானத்தில் இருந்து பார்க்கிறேன் என்கூட சண்டைப்போட்டியா என்ன?”

“உன்கூட சண்டைப்போட்டுட்டு நான் எங்கப்போறதாம். நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு வா”

“நீ எனக்கு சமோசா வாங்கித்தா நான் தின்னுட்டே வாயை மூடிகிட்டு வர்றேன்”

அதைக்கேட்டதும் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தான். அவ்வளவுதான் அப்படியே கப்சிப்புன்னு வாயை மூடிக்கிட்டு அவன் பின்னாடியே நடந்தாள்.

“வரவர இந்த சாமியார் ரொம்ப பண்றான்டா. இவனுக்கு இந்த காலேஜ்லயே ஒரு ஆளு செட் பண்ணிவிட்டுட்டா என்ன?”என்று சீரியஸ்ஸாக தினேஷிடம் கேட்டாள்.

“ஏன் நதி மேட்ரிமோனி சைட்டு எதுவும் ஆரம்பிக்கபோறீயா என்ன?”என் வஸந்த் அக்கறையாகக் கேட்டான்.

“இல்லையே ஏன்டா?”

“முதல் போனி விஜய்கிட்ட இருந்து ஆரம்பிக்கிறியே.. அவனுக்கு ஆளு செட் பண்ணனும்னு சொன்னியே அதுதான் கேட்டேன்”

“அடிங்க என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது” என்று வஸந்தை அடிக்க கையோங்கவும்,அவன் அவளிடமிருந்து தப்பியோடினான். 

நதியாவோ இருடா வர்றேன் என்று அவன் பின்னாடியே ஓடினாள்.

அப்படியே எல்லோரும் சிரித்தபடியே அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அங்கே நிறையபேரு பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருக்க நடுவாக ஒரு வளர்ந்தவன் கையில் பாலோடு நின்றிருந்தான்.

ஓடின வேகத்தில் வஸந்த் அவன் பின்னாடி போய் ஒளிந்தான். அவன் ஒளிந்ததைப் பார்த்ததும் நதியா அவனுக்கு முன்னாடி நின்று வஸந்தைப் பிடிக்க முயன்றாள்.

அதில் அவன்மேல் இரண்டுமூன்று முறை நதியா இடித்துக்கொண்டாள்.வஸந்தை பிடிக்கிற எண்ணத்தில் இருத்தவள் யாருமேல இடிக்கிறோம், யாருக்கிட்ட விளையாடிட்டிருக்கிறோம் என்பதை கவனிக்கவில்லை.

ஆனால் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த விஜயிக்கு மூக்குலயும் காதிலயும் புகை பயங்கரமாக வந்தது. அந்தக் கோபத்தின் வேகத்தில் அவர்கள் பக்கத்தில் ஓடிவந்தான்.

இரண்டுபேரும் அவனையே இரண்டுமூணு நிமிஷம் சுத்தி சுத்தி வந்தனர். அதைப்பார்த்த வளர்ந்தவனவன் பின்னாடி கையை நீட்டி வஸந்தை இழுத்து நதியா பக்கத்தில் நிறுத்தியவன் “உங்களுக்கு வஸந்தை பிடிக்கணுமா இந்த பிடிச்சு அடிகுடுங்க நதியா மேடம்”என்று சிரித்தவாறே சொன்ன அரவிந்தை இப்போதான் இரண்டுபேருமே நிமிர்ந்து பார்த்தார்கள்.

“ஆஹா இவனா இவன்கிட்டயா பிடிச்சு விளையாடினோம். ஐய்ய்யோ இவன் சேர்மன் ஆளில்ல” என்று வஸந்த் அப்படியே ஒதுங்கி வந்தான்.அவன் பக்கத்தில் வந்த விஜய் அவன் முதுகில் ஒரு அடி ஓங்கிப்போட்டான்.

அம்மாஆஆஇஇ என்று வஸந்த் முதுகைத் தடவியவாறே விஜயைப் பார்க்க அவனது முகம் கோபத்தில் ஒருமாதிரி இருந்தது.

“என்னாச்சு இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம்?”என்று புரியாமல் பார்த்தான்.

ஆனால் விஜயின் பார்வை அவனிடமில்லை என்றதும்,அவனது பார்வை சென்ற திசையில் பார்த்தான்.

நதியா அரவிந்தின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அரவிந்தோ சிரித்தமுகத்துடன் “ஹலோ மேடம் உங்க பிரண்ட் உங்கக்கிட்ட பிடிச்சுக் குடுத்துட்டனே. எதுக்கு என்னையே பார்த்திட்டிருக்கீங்க. எனக்கு உங்களைப் பார்த்தாலே பயமா இருக்குது தெரியுமா. நீங்க கொஞ்சம் அந்தப்பக்கமா தள்ளிப்போனீங்கன்னா நான பிராக்டிஸ் பண்ண வசதியா இருக்கும்”என்று அவளது தோளைப்பிடித்து தள்ளி நிறுத்தினான்.

“ஹல்லோ இது ஒன்னும் உங்க தனிப்பட்ட ஆளுக்கான கிரவுண்ட் கிடையாது சோடாபுட்டி. இது ஸ்டூடன்ட்ஸுக்கு பொதுவான கிரவுண்ட். இங்க யாருவேணும்னாலும் நிக்கலாம். நான் இங்கதான் நிப்பேன் நீ வேணும்னா வேறெங்காயவது போய் பிராக்டிஸ் பண்ணு. நீ என்ன பெரிய லார்ட்டு லபக்குதாஸா என்ன? ஏதோ நீ மட்டும்தான் புட்பால் விளையாடுற மாதிரியே பேசுற. எங்க விஜயும் புட்பால் வாலிபால்னு எல்லாம் விளையாடுவான். அவன் சேம்பியனாக்கும்”

“மேடம் நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் லார்ட்டு லபக்குதாஸ்தானுங்க மேடம். இந்த காலஜே என் மாமாவோடது. இந்த கிரவுண்டு எங்கப்பா கட்டிக்கொடுத்ததுங்க. அப்போ இது எனக்குத்தானுங்களே சொந்தம் மேடம். நான் கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிக்கிறேன் மேடம்” என்று அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவனது அருகாமை அவளுக்கு என்னவோ செய்ய, இதுக்குமேல இவன் பக்கத்துல நின்னா சரியாகாது என்று விலகிப்போனவளின் முன்பாக இரு கைகளாலும் அணைக்கட்டினமாதிரி, அவளைத் தொடாமலயே பாலைக் கையில் வைத்து சிறைபிடித்திருந்தான்.

அதைப்பார்த்த நதியா சட்டென்று அவன் பக்கமாகத் திரும்பி நின்றவள் “என்ன அரவிந்த் உனக்கு கொஞ்சம் கொழுப்பு கூடிட்டுப்போலிருக்கு. என்கிட்டயே விளையாடுற?”என்று தெனாவெட்டாகக் கேட்டாள்.

அவளுக்கும் அவனுக்கும் நூலளவுதான் இடைவெளியி இருந்தது. அவளது மூச்சுக்காற்று அரவிந்தின் நெஞ்சில் மோதி அவனது நெஞ்சில் உள்ள முடிகள் பறந்தது.

அதை அவனுமே உணரத்தான் செய்தான். அவன் அழுத்தி மூச்சு விட்டாலே அவளது நெஞ்சில் இடிக்கும். இதையெல்லாம் பார்த்த விஜய் ஓடிவந்து பகத்தில் நின்றான்.

“விஜய் இங்கப்பாரேன் இந்த சோடாபுட்டிக்கு தைரியத்தை. என்னையவே பால் வைச்சு லாக் பண்ணிருக்கான். இவனுக்கு நீ யாருன்னு காண்பிச்சு இந்த பாலை வாங்கு”

அரவிந்தும் சளைக்காது “விஜய்சார் நீங்க பெரிய புட்பால் ப்ளேயராம், வாலிபால்ல சேம்பியனாம். அப்படியா நம்ம விளையாடுவோமா?”என்று கேட்டவாறே பாலை இரு கையிலும் மாத்தி மாத்தி போட்டுப் பிடித்தான்.

அதைப்பார்த்த விஜய் எட்டி பாலை பிடிக்க முயன்றான். அரவிந்தோ பாலை சுத்திப்போட்டுப் பிடித்தான்.

இப்போது இருவருக்கும் இடையில் நதியா மாட்டிக்கொண்டு முழித்தாள்.

இருவரும் பந்தைப் பிடிக்க ட்ரை பண்றானுங்களா இல்லை சண்டைப்போடுறானுங்களா என்று தெரியாதளவுக்கு பாலை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதைப்பார்த்த நதியாவுக்குத்தான் மூச்சு முட்டியாது. இருவருக்கும் இடையில் சுத்தி சுத்திப் பார்த்தும் நகர்ந்தும் மூச்சு வாங்கியது.

“டேய் சோடாபுட்டி நிறுத்துடா தலை சுத்துது” என்று நதியா சத்தம்போட்டும் கண்டுக்காது பாலை கீழே தட்டிப்போட்டான். அதை விஜய் பிடிக்க முயன்றான். இதுக்குமேல முடியாது என்று நினைத்த நதியா அரவிந்தின் பக்கமாகத் திரும்பியவள் அவனது நெஞ்சில் கைவைத்து “அரவிந்த் ப்ளீஸ் நிறுத்து. நீங்க விளையாடுற மாதிரி எனக்குத் தெரியல”என்றதும் சட்டென்று நின்றுவிட்டான்.

இப்போது பால் விஜயின் கையிற்குபோனது. நதியா அரவிந்தின் நெஞ்சில் கைவைத்துப் பேசியதும், அவன் அவளது கையை தனது நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தபடி அவளது முகத்தைப் பார்த்தான்.

இதுவரைக்கும் விளையாட்டாக நினைத்தவள் அவன் அவளது கையின்மேல் கையை வைத்து தனது நெஞ்சோடு பிடித்ததும் ஒரு மாதிரி அதிர்ச்சியில் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனது இதயம் துடிப்பதை அவளது கைகள் உணர்ந்தது. அவனது நெஞ்சின் திண்மையை அவள் உணர்ந்தாள். அவனது வியர்வையை அந்தக் கைகள் பார்த்தது.

அப்படியே அதிர்ச்சியில் நின்றிருந்தவளை ஊடுருவிப் பார்த்தவனின் கண்களில் என்ன தெரிந்தது என்று அவளால் உணரமுடியவில்லை. 

அரவிந்தோ சட்டென்று குனிந்து காதில் கிசுகிசுத்தான் “என்ன நதியா மேடம் இப்படி இடிச்சிட்டு நிக்கிறீங்க. ஒரு கன்னிப்பையனை இப்படித் தொட்டு நிக்கலாமா? உங்க கைகள் என்னைத் தொடலாமா?என் பிஞ்சு நெஞ்சு சின்னாபின்னமாக சிதறாதா?நானே பாவம் புள்ளைப்பூச்சி என்னை இப்படி பக்கத்துல வந்து நின்னு தொட்டு என் வாலிபத்தை வதைக்கலாமா?உங்களைப் பார்த்தால் எனக்கு வேற பயமா இருக்கு.நான் பாவமில்லையா?”என்று வில்லங்கமா கேட்டுவைத்தான்.

அவன் குனிந்து காதில் பேசியதை பார்த்த மற்றவர்களுக்கு, அவன் அவளுக்கு முத்தம் கொடுப்பது மாதிரியாக இருந்தது.

ஆனால் நதியாவுக்கோ அவன் அந்த ஹஸ்கி குரலில் ஆண்மையோடு தன் காதில் பேசியதும் உள்ளுக்குள்ளே மொத்தமாக உடைந்துப்போனாள். அதனால் அவளது இதயம் எகிறித் துடிக்கவும், படபடவென்று நடுங்கிவிட்டாள்.

அதற்குள் “ஏய்ய்ய் எங்க நதியை என்னடா பண்ற?” என்று நான்குபேரும் சேர்ந்து ஓடிவந்து அரவிந்தை தள்ளிவிட்டார்கள்.

அவன் இதை எதிர்பார்க்காததால் அப்படியே பொத்தென்று கிரவுண்டில் விழுந்துவிட்டான். அவன் விழுந்ததும் விஜய் ஓடிப்போய் அவனது மேல் உட்கார்ந்து அவனது முகத்தில் அடிக்கப்போனான்.

நதியா ஓடிப்போய் விஜய் என்று அவனது கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

“என்ன நதி?அவன் உன்னை கிஸ் பண்றான் நீ தள்ளிவிடாமல் பார்த்திட்டிருக்க. இவனை அடிச்சு மூஞ்சுக்கீஞ்சை பிய்ச்சு வர்றேன்”என்று மீண்டும் கையை ஓங்கினான்.

அதற்குள் அரவிந்த் சுதாரித்து அவனது கையைப் பிடித்து நிறுத்தியவன் “வலிக்குது விஜய் சார். என்னை எதுக்கு அடிக்கீங்க?”என்று பாவமாகக் கேட்டு வைத்தான்.

“விஜய்!!!எதுக்கு பாவம் அரவிந்தை அடிக்க அப்போற. அவனை விடு. உனக்கு புட்பால் விளையாடத்தெரியும்னு சொன்னேன். அதனால பாலை வைச்சு உனக்கு விளையாட்டுக் காண்பிச்சான். நான் இடையில் போயிட்டேன் அவ்வளவுதான். எனக்கு யாரும் கிஸ்ஸெல்லாம் தரல, என்கிட்ட காதுல பேசத்தான் செய்தான். எழுந்து வா. ஏற்கனவே அவனுக்கும் நமக்கும் பிரச்சனை நடந்திருக்கு. நம்மளை பிடிச்சு வெளிய தள்ளிடப்போறாங்க”என்று சத்தம்போட்டதும் விஜயிம் அவன் மேலிருந்து எழுந்தான்.

அரவிந்த் விஜயை பார்த்த பார்வையோ அடிவாங்கி அழும் பச்சைப்பிள்ளைபோல இருந்தது. ஆனால் விஜயால் அவனை நம்பமுடியவில்லை. 

நதியாவோ பாவம் விஜயும் பிரண்ட்ஸும் அரவிந்தை தள்ளிவிட்டுட்டாங்களே என்று பாவம் பார்த்தவள் அவன் பக்கத்தில் போய் “அடியெதுவும் படலையே அரவிந்ந். ஆர் யூ ஓகே. என் பிரண்ட்ஸ் உன்னை தப்பா நினைச்சிட்டாங்க. சாரி சாரி”என்று அவனது கையில் உள்ள மண்ணையெல்லாம் துடைத்துவிட்டாள்.

அவனுங்க நாலுபேரும் அதைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டனர்.

“நதி அவன் ஒன்னும் பாவமில்லை. உன்னை பால் வைச்சு சுத்தி சுத்தி விளையாட்டுக் காட்டினான்ல அது எதுக்குப் பண்ணினான்னு கேளு. அவன் சொல்லமாட்டான். நீ அவனை அடிச்சதுக்கு பழிவாங்க நினைக்கிறான் அதுதான் உன்னை இப்படி சுத்தல்ல விடுறான். எப்படியும் இவன் நம்மளை பழிவாங்குவான் பாரு” என்று தினேஷ் திட்டினான்.

“யாரு இந்த சோடாபுட்டியா!”என்று கேட்டு சிரித்தவள் “அப்படியா அரவிந்த் நீ எங்களை பழிவாங்குவியா என்ன?பாவம்ல நீ. நீயே என்னைப் பார்த்து பயப்படுற. நீ போய் எங்களை பழிவாங்குவியா என்ன?”என்று கேட்டுச் சிரித்தாள்.

அரவிந்த் லேசாக உதட்டைவிரித்து மட்டும் சிரித்தவன் “எனக்கு பிராக்டிஸ் இருக்கு மேடம் நான் பிராக்டிஸ் பண்றேன்” என்று பாலை எடுத்தவன் அவங்க முன்னாடியே ஓடி ஓடி வெறித்தனமாக பிராக்டிஸில் ஈடுபட்டான்.

அவனது கோபத்தை நம்ம மேல காட்டமுடியாது பால் மேல காட்டுறான்.இவன் ரொம்ப டேன்ஞ்ரானவன் என்று அதைப்பார்த்த ஆண்களுக்குப் புரிந்துவிட்டது.

அதைப்பார்த்த நதியாவோ “விஜய் உன்னைவிட சோடாபுட்டி செமையா விளையாடுறான்டா. இவன் மட்டும் முன்னாடியே நம்ம காலேஜ்ல படிச்சிருந்தான்னு வையேன் அவனுக்குத்தான் கேர்ள்ஸ் ஃபேன்ஸ் நிறைய கிடைச்சிருப்பாங்க. செம பிசிக் வைச்ங

சிருக்கான். ஆனால் பாரு அதைவைச்சு ஒருத்தனையும் அடிக்கமாட்டான் அம்மாஞ்சி”என்று அவனது விளையாட்டோடு சேர்த்து அவனையும் ரசாக்கத் தொடங்கியிருந்தாள்.

இதை எதிர்பார்க்காத அவளது பிரண்ட்ஸ் ஆச்சர்யமாக அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். எவனைப்பார்த்தாலும் அடிக்கலாமா உதைக்கலாமான்னு பார்க்கிற நம்ம நதியாவா இது!என்று அவர்களால் நம்பமுடியாது பார்த்தார்கள்!

அது சரி நதியா உண்மையாவே சோடாபுட்டியை ரசிக்கிறியா என்ன?