நாளை இரவு கதை நீக்கப்படும் மூப்பு அடையா யட்சகா 35

Yecga35

நாளை இரவு கதை நீக்கப்படும் மூப்பு அடையா யட்சகா 35

35 மூப்பு அடையா யட்சகா !! 

அவன் வந்துட்டானா இரவு ஒன்று தாண்டியும் உள்ளே வராத மகனை தேடி வாசலில் யட்சன் பார்வை இருக்க .... தூங்கிய குழந்தைகளை அவன் மடியில் போட்ட தேனிசை 

ம்ஹூம் வர்ற நேரம் தான் என்று முடிக்கும் முன் போதையில் தள்ளாடி கொண்டே ஜீவா உள்ள வந்தவன் 

ஹிஹி டேட் குட் நைட் என்று ஜீவா சல்யூட் அடிக்க ...

இங்க வா ... என்று யட்சன் அழைக்க 

தூக்கம் வருது டேட் காலையில மீட் பண்ணுவோம் என்று யட்சன் மடியில் கிடந்த குழந்தைகளை குனிந்து முத்தமிட்டுவிட்டு போக ... போகும் ஜீவா முதுகை பார்த்த யட்சன் முகத்தில ஒரு மெல்லிய கவலை தெரிய ..

"ஜீவா , தினமும் காலையில் தகப்பனோடு வேலைக்கு போகிறான்... ஆனால் அடுத்த இரண்டாவது மணி நேரம், எனக்கு தலைவலி காய்ச்சல் , கீழே விழுந்துட்டேன் கால் வலிக்குது சாப்பிட்டது செமிக்கல என்று பள்ளிக்கு போகும் சிறுவன் காரணங்கள் அடுக்குவது போல வீட்டிற்கு வருவான்.... சிறிது நேரம் அறையில் ஏசி ஓடும் பிறகு கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி விடுவான்... இதுவே தான் வழக்கம் !!

யட்சன் ஏதாவது சொல்லப் போய் , உங்களுக்கு அவளும் உங்க பிள்ளைங்களும் தான் முக்கியம் நான் யாரோதான? என்று ஒரு வார்த்தை வந்து விடுமோ? என்று யட்சன் அவனை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் இப்போதெல்லாம் திணறுகிறான் ... 

உங்களோட பாதுகாப்புல உங்க கைவளைவுல அவன் இருக்கிற வரைக்கும், இதே நிலைமைதான் எதுவும் மாறப் போறது இல்ல.. ஏன்னா அவன் மிக பாதுகாப்பான இடத்துல இருக்கான், இந்த பாதுகாப்பு எல்லா நேரத்துலேயும் ஒருத்தனை வடிவமைக்காது... நதி தெரியுமா அது ஓடுற வேகத்துல போகுற திசையில தனக்குன்னு ஒரு பாதை அமைச்சுக்கும் ... அதுக்கு அணை கட்டி வைக்கிற வரைக்கும் அந்த எல்லைக்குள்ளேயே தான் இருக்கும். ,அந்த தடுப்பை எடுத்து பாருங்க அதனுடைய வேகம் அதனுடைய திசை எல்லாம் மாறும் ... 

"அதுக்கு அவனை ஒத்தையா விட சொல்றியா எப்படா எல்லாத்தையும் ஆட்டைய போடலாம்னு அந்த பொம்பள காத்துட்டு இருக்கா... இவனுக்கு ஏதாவது ஆயிப்போச்சுன்னா? 

"அவன இவ்வளவு கஷ்டப்பட்டு திருத்தி இவ்வளவு தூரம் கொண்டு வந்தீங்கல்ல ! இந்த ஒத்த பயத்தை விடுங்க .. அவன் நீங்க நினைக்கிற மாதிரி ஒருத்தனா மாறிடுவான் 

"என்ன செய்ய சொல்ற?? சொல்லு செய்றேன் 

அந்த பொம்பள எங்க?

"கொலை செய்ய முயற்சி செஞ்சதா ரெண்டு வருட தண்டனை கொடுத்து உள்ளே தூக்கி போட்டிருக்கேன் .... 

ஓஓ , எதிரிக்கு பயப்படுறீங்கல்ல 

"அவனை ஏதாவது பண்ணிட்டா 

"ஏதாவது ஆயிடுமோனு யோசிச்சு யோசிச்சு அவனுக்கு பாதுகாப்பு கொடுக்குறீங்க... அவனை அவனே காப்பாத்திகட்டும்..

அது 

"இந்தாங்க என்று ஒரு பேப்பரை தூக்கி கொடுத்தாள் 

"ட்ரைவர் வேலைக்கு ஆள் வேணுமாம் "

"அதுக்கு 

ஜீவா தான் போறான் ...

"ஏது, அவனா டிரைவராவா?? "

"ம்ம் யாருக்கிட்டேன்னு கேளுங்க 

"யாருக்கிட்ட ??

"மருதம்பட்டி சிந்தாமணி வீட்டுக்கு ... 

வாட்ஊஊஊ

யார்கிட்ட இருந்து மறைச்சு வச்சிங்களோ அங்கேயே போய் எதிர்நீச்சல் போட்டு பழகட்டும்..

 

அவ தான் ஜெயில்ல கிடக்காளே.. பின்ன என்ன ? 

"ஹிஹி இக்ககட சூடு என்று மார்கெட்டில் விரட்டி விரட்டி ஒருவனை துரத்தி வெட்டிய வெள்ளை வேட்டி சட்டைக்காரனின் வீடியோவை தூக்கி போட்டவள்....  

"இதுதான் அந்த கழிசடை பெத்து போட்ட ஆம்பள கழிசடை" என்று ஷூம் பண்ண 

கழுத்து நிறைய அடைத்த நகையோடு, அருவாளை வாயில் கவ்வி பிடித்து கொண்டு போஸீல் பின்னே கொலை செய்த பயமே இல்லாது ஏதோ பொருள்காட்சி போவது போல, அத்தனை பேருக்கும் கையை அசைத்து அரசியல்வாதி போல சிரித்தபடி போனான் அவன்!!

கொலை கொள்ளை திருட்டி போதை, பெண் சகவாசம் என்று அத்தனை கெட்ட வேலைகளையும் ரசித்து செய்யும் அக்மார்க் கெட்டவன்...  

சிந்தாமணி பெத்த புள்ள  

வஞ்சகமூர்த்தி !! 

இவனுக்கு ட்ரைவரா தான் ஜீவா போறான் போக வைக்கிறோம்... எதிரியை போல வாழ்க்கையை நல்லா யாரும் கத்து தர முடியாதுங்க... அவன் வாழ்க்கை என்னன்னு புரிஞ்சிக்ணும்னா இதுதான் சிறந்த இடம் .... சிந்தாமணிக்கு தான் ஜீவாவை அடையாளம் தெரியும் இவனுக்கு தெரியாது... அவர் இதுவரை இருந்தது பாசமும் நேசமும் மட்டும் இருந்த இடத்தில இனிமே இருக்க போறது 

ரத்தமும் , தீமையும் சகஜமா விளையாட போற ஒரு இடத்துல... என்ன நம்பினா அனுப்பி வைங்க, இல்ல உங்க இஷ்டம் 

அவனை அனுப்பி வைக்கிறது உன் பொறுப்பு ... என்று யட்சன் எழும்பி போய்விட்டான் 

நரைத்தவன் வாழ்ககை அழகாக தொடங்கி விட்டது

ஆனால் அது நிறைவாக வேண்டுமெனில் நேசிக்கும் அத்தனை பேரும் நலமாக இருக்க வேண்டுமே ஜீவா வாழ்க்கை அருகே காற்புள்ளி இருக்கும் வரை அவன் நிம்மதி அரைகுறை தான் ஆக அவன் வாழ்வை பூரணமாக்க வேண்டிய தேனிசை அதற்கான வழி தேடி விட்டாள் அந்த வழியில் ஜீவாவுக்கு கரணம் தப்பினால மரணம் தான் ஆனாலும் வாழ்க்கையை கற்று கொள்வான் என்ற நம்பிக்கை இருவருக்கும் வந்தது ...

குரோத கொள்முதல் அழகா !! 

கதையோடு விரைவில் வருகிறேன் ,

நன்றி 

வாழ்க வளமுடன்