கழிமுள்ளி நெஞ்சுக்காரி-21

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-21

கழிமுள்ளி-21

நதியாவை ஒரு வாரம் ஹாஸ்பிட்டலில் வைத்திருந்துவிட்டு, அவள் ஓரளவு சரியானதும் வீட்டுக்குக்கூட்டிட்டு வந்தனர்.

நர்மதா இப்போது அவளது பொருட்களைக் கொஞ்சம் நதியாவுடைய ரூமுக்குள் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த நதியாவோ “ஏன்டி உன் திங்கஸ்ஸை என் ரூமுக்கு மாத்துற. எனக்கே இங்க திங்க்ஸ் வைக்க இடமில்லை. இந்த வீட்டுல எத்தனை ரூம்ஸ் இருக்கு அதுல எதுலாயாவது கொண்டு வைக்கலாம்ல”என்று சொன்னாள்.

அதைக்கேட்ட நர்மதாவோ “நான் இன்னையிலிருந்து காலேஜ் தொடங்குறவரைக்கும் உன் ரூம்லதான் இருக்கப்போறேன். உன்னால இந்த வருஷம் என்னை எங்கேயும் வெளில கூட்டிட்டுப்போகலை. அதனால் உன் ரூமையே சுத்திப்பார்த்துக்கலாம்னு வந்துட்டேன்” என்று ஹாயாக அவள் பெட்டில் படுத்துக்கொண்டாள்.

அதைப்பார்த்த நதியாவோ “தெரியாமல் சூசைட் பண்ணிக்கணும்னு நினைச்சு ஒரு காரியத்தை செய்துட்டேன். அதுக்காக இப்படியா அப்பா பழிவாங்குவாங்க. உன்னைப்போய் எனக்குத் துணையா அனுப்பிருக்காங்க பாரு. இதைத்தான் என்னால தாங்கிக்க முடியல எருமை” என்று அவள் மேல் தலையணையைத் தூக்கி எறிந்தாள்.

அதேக் கேட்ச் பிடித்தவள் காலுக்கு வைத்து படுத்துவிட்டாள். அவள் தூங்கியதும் நதியாவுக்கு அழுகையாக வந்தது. தனது கையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதில் போட்டிருந்த தையல் தழும்புகள் இன்னும் தெரிந்தது. அதில் வலி தெரிந்தது.அப்படியே கண்ணை மூடிக்கொண்டு தலையை கட்டிலில் சாய்த்தாள்.

அவளது கண்களில் இருந்து கண்ணீர் தானாக கன்னத்தில் இறங்கியது. அவள் எவ்வளவு நேரம் அழுதுகொண்டிருந்தாள் என்று தெரியாது.

இப்போது அவளது கன்னத்தில் வடித்துக்கொண்டிருந்த கண்ணீரை துடைக்கும் கரத்தின் தொடுகையில் சட்டென்று கண்களைத் திறந்துப் பார்த்தாள்.

நர்மதா அவளது கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்ததும் நதியா அவளை அப்படியே பாய்ந்து கட்டிக்கொண்டாள்.

அவளது தோளில் சாய்ந்து சிறுபிள்ளைப்போல குலுங்கி குலுங்கி அழுதாள். இப்போது நர்மதா அவளை தேற்றும் உற்றத் தோழியாகிப்போனாள்.

அவளது முதுகை வருடிக்கொடுத்தாள். அவளது முடியை ஒதுக்கிக்கொடுத்தாள். அவள் தனது மனதைத் திறந்து மொத்தமாக அழுது தீர்க்கும்வரைக்கும் அவளுக்காக காத்திருந்தாள்.

அவள் அழுது முடித்து மெதுவாக நிமிர்ந்து நர்மதாவின் முகத்தைப் பார்த்தாள் நர்மதாவும் அழுதிருந்தாள். இப்போது நதியா அவளது கண்ணீரைத் துடைத்தவள் “என்னால நம்ம வீட்டு மொத்த சந்தோசமும் போயிடுச்சில்ல. சாரிடி”என்று இவள் அவளுக்கு சமாதானம் சொன்னாள்.

அவளது கையைப் பிடித்துக்கொண்ட நர்மதா “ஏன் நதி உனக்கு அந்த அரவிந்தை இந்தளவுக்குப் பிடிக்குமா?அவனுக்காக இவ்வளவு தூரம் இறங்கிட்டியே?அவனை அவ்வளவு காதலிக்கிறியா?இப்பவும் அந்தக் காதலை நினைச்சு அழுறியா?”என்று கேட்டாள்.

“இல்லையென்று தலையாட்டியவள் அன்னைக்கு அவனுக்காக அழுதேன். ஏன் என்னை புரிஞ்சிக்காமல் என் காதலைத் தூக்கியெறிஞ்சிட்டுப் போயிட்டான் நான் என்ன தப்பு பண்ணினேன். என்னைப் பத்தி எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்லிருக்கேன். என் குடும்பம் பிரண்ட்ஸ்னு நிறைய பேசியிருக்கோம். ஆனால் ஒரு தடவைக்கூட அவன் அவனைப் பத்தியோ, அவனது குடும்பத்தைப் பத்தியோ பேசினதில்லை. வெற்றிவேல் சாரோட அக்கா மகன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ஏன் கேட்கணும்னு நினைச்சேன்.எனக்கு அரவிந்த் மட்டும்போதும்னு நினைச்சேன். ஆனால் அவன் நல்ல பழகி காதலிச்சிட்டு என்னை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சிட்டுப் போயிட்டான். அவனைப் பார்த்தால் இன்னசெண்ட் மாதிரியே இருந்துச்சு. அவன் கடைசியே பேசினதுக்கு அப்புறம்தான் தெரியுது அவன் இன்னசெண்ட் இல்லை, மனசுல வஞ்சம் வைச்சு எங்களை பழிவாங்கியிருக்கான்னு. இதுக்கப்புறம் எதுக்கு அவனை காதலிக்கணும், வெறுக்கிறேன்”

“அப்புறம் ஏன்கா கையை அறுத்துக்கிட்ட? உனக்கு எங்களைவிட அவன்தான் பெருசா தெரிஞ்சானா? நீ இல்லாம்மா அம்மா எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சியா? அப்பா எவ்வளவு வேதனைப்படுவார்னு ஒரு செகண்ட்கூட நினைக்கலையே நீ. நீயில்லாமல் என் நாட்களே நகராதுன்னு உனக்குத் தெரிஞ்சும் அவனுக்காக இப்படி பண்ணிட்டியேக்கா. உன்னை அப்படி பார்க்கும்போது எங்களுக்கு எப்படி துடிச்சிருக்கும்னு யோசிச்சுப்பாரு”என்றவளின் கண்ணீர் அவள் கைளில் படபடவென்று விழுந்தது.

அவளது உதடுகள் எப்படி படபடவென்று வார்த்தைகளை உதிர்க்குமோ அதே மாதிரி படபடவென்று கண்கள் இரண்டும் கண்ணீரை உதிர்த்தது.

அதைப்பார்த்த நதியா அவளை இழுத்துக் கட்டிக்கொண்டு அழுதாள். நர்மதா எப்பவும் அவ்வளவு சீககிரம் ஆழமாட்டாள். நதியாக்கூட சண்டைப்போட்டு அவங்கம்மாகிட்ட அழறமாதிரி பாவலா காட்டுவாளே தவிர்த்து மனசு வலித்து வேதனையோடு அழுததில்லை. இப்போ தனது அக்காவுக்காக அழுகிறாள்.

நதியா அவளது கண்ணீரைத் துடைத்தவள் “உங்களையெல்லாம்விட அரவிந்த் ஒன்னும் எனக்கு பெருசுல்ல, ஆனாலும் நான் அவன்கிட்ட தோத்துப்போயிட்டனேன்னு கேவலமா இருக்கு. நான் அவனை அடிச்சு காயப்படுத்தினதுக்காக என்னையும் என் பிரண்ட்ஸையும் பழிவாங்கத்தான் என்னை லவ் பண்ணி விளையாடினானாம். அவனுக்கும் எனக்கும் செட்டே ஆகாதாம். அவன் இன்னும் நிறைய பேசினான். அப்படியே வார்தையால் நெஞ்சைக் குத்திக் குதறிட்டான். எப்படி இவன்கிட்ட நான் ஏமாந்துப்போனேன்னு நினைக்கும்போதே கஷ்டமா இருந்துச்சு. இப்படிப் போய் ஏமாந்துட்டனேன்னுதான் கையை அறுத்துக்கிட்டேன். அவன் காதல் வேணும்னு இல்லை. என்னை வேண்டாதவனுக்காக நான் ஏன் சாகணும். எனக்கும் அவன் வேண்டாம். அவனை நான் வெறுக்குறேன்”என்று உறுதியாகச் சொன்னவளை நதியா பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

“என்ன நர்மு அப்படிப் பார்க்கிற?”

“இல்லை ஒருவேளை அரவிந்த் உன்னைத் தேடிவந்தா அவனைத் ஏத்துப்பியா?”

“அதெல்லாம் வரமாட்டான்”

“ஒருவேளை வந்தால் என்ன பண்ணுவ?”

அப்படியே கொஞ்சம் நேரப் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் இருந்தவள் இப்போது தங்கச்சியின் முகத்தைப்பார்த்த நேராகவே “அவனை ஏத்துக்கமாட்டேன். அவன் முகத்தைப் பார்க்கவே விரும்பலை. என் கண்முன்னாடி அவன் வந்தான்னா அவன் மண்டையை உடைச்சிட்டுத்தான் மறுவேலை. என்னைக் காயப்படுத்தி ஏமாத்தினவன் எப்பவும் எனக்கு வேண்டாம். நான் அவனை மறக்க நினைக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் அவனைப் பார்க்க நினைக்கலை. இனி அவனைப் பத்தி பேசவும் விரும்பலை. அப்படியொருத்தன் என் வாழ்க்கையில் வந்தான் என்பதையே மறக்கணும், போதும் காதல் மண்ணாங்கட்டி இதெல்லாம். இனி அந்த துரோகியைப் பத்தி என்கிட்ட பேசாத. அவன் பெயரையும் சொல்லாத.இத்தோட அவனைப் பத்தின பேச்சை நிறுத்திடுவோம்”என்றவள் கண்ணை மூடிப் படுத்துவிட்டாள்.

இதுக்குமேல இனி அரவிந்தைப் பத்திப்பேசக்கூடாது என்று நினைத்த நர்மதா, அவள் பக்கத்தில் படுத்து அவளது தோளில் கைப்போட்டுப் படுத்துக்கொண்டாள்.

நர்மதா நல்லா தூக்கத்தில் இருக்கும்போது விசும்பல் சத்தம் கேட்டுகண்ணை முழித்துப்பார்த்தாள். நதியாவின் உடல் குலுங்கியது. அவள் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்த நர்மதாவுக்கு ஏன்டா அரவிந்தைப் பத்தி பேசினோம்னு இருந்துச்சு. இப்போ விஜய் மேலதான் அவளுக்கு கோபம் வந்தது.

‘இந்த குரங்கு அரவிந்தைப் பத்தி கேட்க சொல்லிச்சேன்னு கேட்டேன் இப்போ அவா வேதனைப்படுறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கு. அவனை வரட்டும் அவன் மண்டையில இன்னும் நாலு கொட்டுகொட்டி வைக்கிறேன்’ என்று நினைத்தவள் நதியாவை சமாதானப்படுத்தவும் முடியாது, அவள் அழுகிறதைப் பார்க்கவும் முடியாது தவித்துப்போனாள்.

ஒருவழியாக எப்போ, எப்படி தூங்கினாள்னு தெரியாது தூங்கிவிட்டாள்.

காலையில் எழுந்து பக்கத்தில் நதியாவைப் பார்த்தாள் அவளில்லை.ஐய்யோ எங்கப்போனாள் என்று பதறியடித்துக்கொண்டு எழுந்து மணியைப் பார்த்தாள். அது எட்டுமணிக்கு மேல காட்டியதும்தான் ஹப்பாடா அப்போ நம்மளுக்கு முன்னாடியே முழிச்சிருப்பா என்று வெளியே வந்தாள்.

அங்கே நதியா காபி கப்போடு கீதாஞ்சலி பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளெங்க பேசினாள். கீதாஞ்சலிதான் அவளிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவள் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

உண்மையில் நதியா இப்படி இருக்கக்கூடிய ஆளே கிடையாது. இந்த பத்து நாளில் மொத்தமாக மாறிப்போயிருந்தாள்.

நதியாவுக்கு முடியை தழைய தழைய கட்டிப்போடுறது பிடிக்கவே பிடிக்காது. ஆனால் இப்போ கீதாஞ்சலி அவளுக்கு முடியை பின்னி போட்டிருந்தாள். அது அவளது முகத்துக்கு சாந்தத்தைக் கொடுத்ததுபோல இருந்தது.

எப்படி இருந்த நதியா? இப்படி இருக்காளே!” என்று மனதிற்குள் வருத்தப்பட்டாலும் அவளிடம் காட்டிக்கொள்ளாமல் போய் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள்.

அவள் உட்கார்ந்து நதியாவிடம் பேசிக்கொண்டிருக்கவும் நதியாவை பார்க்க தினேஷும் விஜயும் வந்தார்கள்.

“வந்துட்டாய்ங்கய்யா வந்துட்டாய்ங்க. ஒரு வாராம் வராம இருந்தானுங்க இப்போ வந்துட்டானுங்க. போச்சொல்லுங்கடா இவனுங்களை”என்று சத்தமாகத் திட்டினாள்.

நதியா அதைப்பார்த்து லேசாக முறுவலித்தவள் “வா தினேஷ்”என்று கூப்பிட்டவள் விஜயைப் பார்த்தாள்.

“ஏன் என்னையெல்லாம் வான்னு கூப்பிடமாட்டியா என்ன?”

“ப்ச்ச் வந்து உட்காரு. அதுதான் நீ நினைச்ச மாதிரி நடந்திடுச்சே. அதுதான் நான் எப்படியிருக்கேன்னு பார்க்க வந்திருக்க”

“-நதி” என்று தினேஷ் சத்தம்போட்டான்.

“விடுறா மனசுக்குள்ள இருக்கிறதை அவா சொல்லட்டும். நம்மளைத்தானே திட்டமுடியும்”என்றவன் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“இப்போ உனக்கு என்ன அடிக்கணுமா அடிச்சுக்க. சில விசயங்களை நானுமே தப்பாதான் புரிஞ்சிருக்கேன். விடு விடு. அப்புறம் என்ன ப்ளானு?”

“எதுக்கு என்ன ப்ளானு?”

“எங்கக்கூட வெளிய வர்றியா? அப்படியே நம்ம எப்பவும் சுத்துற மாதிரி சுத்திட்டு வருவோம். உன் வண்டியை எடு போவோம்?”

“இல்லை நான் வரலை. எனக்கு ஹெல்த்து சரியாகட்டும்”

“உன் ஹெல்த்து சரியாதான் இருக்கு வா போகலாம்”

“இல்லை நான் வரலை நீங்க போங்க. இனி வெளிய போக என்னைக் கூப்பிடாதிங்க”

“நதி”

“ப்ளீஸ் விஜய்”

“நதி ப்ளீஸ் எங்கக்கூட வாயேன் எங்களுக்கு நீயில்லாமல் கஷ்டமா இருக்கு”என்று தினேஷ் கெச்சினான்.

அவளோ இல்லை என்னை கட்டாயப்படுத்தாதிங்க என்று எழுந்து விறுவிறென்று மாடிக்குப்போய்விட்டாள்.

இதுக்குமேல என்ன பண்றதுன்னு தெரியாமல் இரண்டுபேரும் உட்கார்ந்திருந்தனர். விஜய் மெதுவாக நர்மதாவைப் பார்த்து கண்ணால் என்னாச்சு என்று கேட்டான்.

அவளோ உதட்டை வளைத்து ஒன்னுமில்ல போடா என்றுவிட்டு எழுந்து வெளியே வராண்டாவிற்குப் போனாள்.

இதுக்குமேல இனி இங்க என்ன பண்றது என்று நினைத்தவன் வெளியே வந்தான்.

அங்கே நின்ற நர்மதாவிடம் போனவன் “ என்னடி உதட்டையெல்லாம் சுழிக்கிற?உன்கிட்ட ஹெல்ப் கேட்டதுக்கு ரொம்ப ஆட்டியூட் காண்பிக்கிறியோ”என்று திட்டினான்.

“போடா குரங்கே. உனக்குப்போய் ஹெல்ப் பண்றேன்னு அவளை அழவைச்சதுதான் மிச்சம். அவளுக்கு அந்த அரவிந்தை இனி எப்பவுமே பிடிக்காதாம். அவனை இனி வாழ்க்கையில் பார்க்கவே கூடதுன்னு நினைக்கிறா. இப்படி ஒருத்தன்கிட்ட ஏமாந்துட்டமேன்னுதான் சூசைட் பண்ண ட்ரை பண்ணாலாம். எவ்வளவு அழுதா தெரியுமா? இப்போ அந்த அரவிந்த என் கண்ணு முன்னால வந்தான்னு வையேன் நான் அவனை கத்தியெடுத்து சொருகிடுவேன்.அவன் பேரைசொல்லும்போது

  அந்தளவுக்கு ஆத்திரம் வருது.இதுல இவரு கண்ணைக் காண்பிச்சதும் வெளியே வந்து டீடயல் சொல்லணுமா. இனி ஹெல்ப்பு அதுஇதுன்னு வந்த உன் மண்டையை பொளந்திடுவேன்”

அதைக்கேட்டது விஜயிக்கு ஒருமாதிரியாக முகம் மாறியது.

அதைப்பார்த்த நர்மதா “என்ன மூஞ்சு இஞ்சி தின்ன மாதிரி ஆகிடுச்சு?”என்று அவன் முகம் பார்த்துக்கேட்டாள்.

ஒன்னுமில்லை என்னு தோளைக்குலுக்கியவன் நாங்க கிளம்புறோம் தினேஷ் வா என்று கூப்பிட்டவன் “உங்க அக்காவை எங்களுக்கு டாட்டா காண்பிக்கவாது பால்கனிக்கு வரச்சொல்லு போ. இனி எப்போதாவதுதான் வருவோம். அடிக்கடி வரமாட்டோம்”

“ஹப்பாஆஆ ரொம்ப நல்லது போயிட்டு வாங்க”என்று வாசலைப் பார்த்துக் கையைக் காட்டினாள்.

“போய் நதியை வரச்சொல்லுடி. ஓவரா ஆடாத. அப்புறம் கொடமுளாகாய் மூக்குலயே குத்தப்போறேன்”

“போடா டேய்” என்றவள் மேலே சென்று நதியாவிடம் சொல்ல பால்கனி வந்தவள் அவர்களைப் பார்த்து நின்றாள்.

விஜயும் தினேஷும் வெளியே நடந்துப்போய் அங்க நின்றிருந்த ஒரு காரில் ஏறி உட்கார்ந்து அவளுக்கு டாட்டா காட்டினார்கள்.

“யாரு காரு அது?” என்று அவள் கையால் செய்கை செய்து கேட்டாள்.

“என்னோட பிரண்டோடது நதி. நாங்க எல்லோரும் சேர்ந்து வந்தோம். உன்னைப் பார்க்கத்தான் வந்தோம். பை”என்று கத்திசொன்னான்.

ஓகே என்று கட்டைவிரலைக் காண்பித்து சொல்லி டாட்டா காட்டியவளுக்கு நம்மளால் இனி பழைய நதியாவோ இருக்க முடியுமா? என்று ஆயிரம் கேள்விகள் வந்தது.

அந்தக் கேள்விகளோடு அப்படியே அந்தக் கார் மறையும்மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

நர்மதாதான் அவளது தோளில் கைவைத்து கூப்பிட்டு அவளைப் பார்த்து கள்ளமில்லாது சிரித்துவைத்தாள்.

அந்த சிரிப்பைப் பார்த்ததும் அவளுக்கு அரவிந்தின் ஞாபகம் வந்துவிட்டது.

ஏன் நான் இப்படியிருக்கேன்?என்று தன்மீதே கோபப்பட்டாள். 

இப்படித்தான் என்னை மறந்து வாழ்நாள் முழுவதும் இப்படியே இருப்பனோ?என்று அவளுக்குள்ளாகவே கேள்விக்கேட்டுக்கொண்டிருந்தாள்.

டேய் அரவிந்த் நல்லா இருந்த பிள்ளையை இப்படி பைத்தியமாக்கிட்டியேடா!