கழிமுள்ளி நெஞ்சுக்காரி-4
கழிமுள்ளி-4
நதியா தளர்ந்து விழுந்ததைப் பார்த்த கீதாஞ்சலி அவள் பக்கத்தில் வந்து கையைப்பிடித்து தூக்கி நிறுத்தினாள்.
ரமேஷ் வந்து அவளைப் பிடித்தவர் “கீது அவளை விடு. அதுதான் அடிச்சிட்டல்ல போ. இனி நான் அவக்கிட்ட பேசிக்கிறேன்”என்று மனைவியை சாந்தப்படுத்த முயன்றார்.
அவளோ “பேசாமல் போயிடுங்க. இல்லைன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன். நீங்களே உங்க பொண்ணுங்களை வளர்த்துக்கங்கன்னு எங்கேயாவது ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடுவேன் பார்த்துக்கங்க. இவ்வளவு நாளும் காலேஜ் கட்டடிச்சா, படம் பார்க்கபோனா,அட்டென்டென்ஸ் ஷார்ட்டேஜ்னு கூப்பிட்டுவிட்டாங்க. இன்னைக்கு அதேமாதிரிதான் இருக்கும்னு பார்த்தால் கூடபடிக்கிற பையனை பாட்டிலால அடிச்சு இரத்தக்காயமாக்கிருக்கா. அதுவும் சேர்மனுக்கு சொந்தக்கார பையனையே. அந்த பையன் ஏதோ பாவம் அம்மாஞ்சியா இருக்கப்போய் இவங்களை மன்னிச்சு விட்டான். இல்லைன்னா இன்னைக்கு கையில டீ.சியோட வீட்டுக்கு வந்திருப்பா. நம்ம பிள்ளைங்க படிச்சு நம்மளைவிட பெரியாள வரணும்னு நினைச்சா இவா ஜெயில்ல களி திங்கப்போயிடுவா போல. எல்லாத்துக்கும் காரணம் நீங்க ஒருத்தர்தான்.ஊர்ல இருக்க பிள்ளைங்களோட படிப்பு, டிசிப்பிளின்னு பார்த்துக்க தெரியுது. சொந்தப்பிள்ளைங்க டிசிப்பிளின் படிப்பை பார்த்துக்க தெரியலை, அப்படியே கோட்டையை விட்டுட்டு நிக்கிறீங்க. இன்னைக்கே இரண்டுல ஒன்னு எனக்குத் தெரியணும். இவாளால இவக்கூட சுத்தறவனுங்க கெட்டுப்போறானுங்களா, இல்லை அவனுங்களால இவா இப்படி இருக்காளான்னு பார்க்கணும். அப்படியே அடுத்த ஒரு வருஷம் முடிஞ்சதும் பாரீனுக்கு எங்கேயாவது படிக்க அனுப்பணும்”என்று நீளமாக பேசி முடித்து மூச்சு வாங்கினாள்.
அதை பார்த்த ரமேஷ் தண்ணியை எடுத்துட்டு வந்து கையில் கொடுத்தார். அதை வாங்கி குடித்துவிட்டு அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு ஷோபாவில் உட்கார்ந்துவிட்டாள்.
அடி வாங்கியவளைவிடவும் அடி கொடுத்தவள்தான் தளர்ந்துப்போனாள்.
இப்போ நதியா மெதுவாக எழுந்து உட்கார்ந்தவள் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தாள். நர்மதாவோ அவளது தோளில் அடித்து “உன்னாலதான்டி அம்மாவுக்கு மூச்சு வாங்குது. நீ ஏன்டி இப்படி இருக்க? பாவம் அம்மா சாயங்காலத்துல இருந்து உன்னைத் தேடிட்டிருக்காங்க. உன் போனை எதுக்கு ஆஃப் பண்ணி வைச்சிருக்க. ஒரு மெசேஜாவது அனுப்பிருக்கலாம்லா. அவங்க நீ எங்கயோ ஓடிப்போயிட்டன்னு பயந்துட்டாங்க” என திட்டிக்கொண்டிருந்தாள்.
அதைக்கேட்ட நதியா மெதுவாக திரும்பி அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள் “பேசாமல் தொலைஞ்சே போயிருக்கலாம். சப்கலெக்டரம்மா கொடுத்த அடியில அப்படியே கண்ணுல மின்னல் பறந்துச்சு தெரியுமா?இதுல இவங்க என்னை காணும்னு தேடினாங்களாம். போடி அந்தப்பக்கம். அடிக்க ஆளுக்கிடைக்கலையேன்னு என்னைத் தேடியிருப்பாங்க”என்றவாறே தனது கன்னத்தைத் தடவினாள்.
“அடி பலமோ நதி”
“ம்ம்ம் ரொம்ப பலம்”
“அப்படியெல்லாம் கலெக்டரம்மா உன்னை வேகமாக அடிக்கமாட்டாங்களே. என்னவா இருக்கும்?அவ்வளவு பெரிய பிரச்சனையா காலேஜ்ல பண்ணி வைச்சிருக்க”
“ம்ம் ஒருத்தனை பாட்டிலால அடிச்சிட்டேன். அவன் நெத்தியில மூணு தையல் போட்டிருக்கு”
“ஐய்யோ அம்மாஆஆஆஆ. அந்தளவுக்கு காலேஜ்ல ரவுடியா பார்ம் ஆகிட்டியா?அதனால்தான் இரண்டுபேரும் உன்மேல கோபத்துல இருக்காங்களா?போச்சு போ. ஏற்கனவே அம்மா இன்னைக்கு உனக்காகத்தான் வெப்சைட்ல படிக்கத் தேடினாங்களா?போச்சு போ எப்படியும் உன்னை வெளிநாடு அனுப்பி படிக்கவைப்பாங்க போல. நீ போ உன் பின்னாடியே நானும் வந்திருவேன்.ஹய்யோ ஜாலி”
“உண்மையாவா சொல்லுறடி?”
“எது உண்மையாவான்னு கேட்கிற?”
“என்னை வெளிநாடு அனுப்புற ப்ளானு?”
“உண்மைதான்”
“அப்போ என்னை மிரட்டுறதுக்கு அதைச் சொல்லலையா?”
“ஹ்ஹூம்”
“என்னை விட்டுட்டு எப்படி இரண்டுபேரும் இருப்பாங்கடி”
“நீ பண்ற பிரச்சனையை சாமாளிக்கிறதுக்கு உன்னை பிரிஞ்சிருக்கிறது பரவாயில்லைன்னு நினைச்சிருப்பாங்களாயிருக்கும்”
“அப்படிங்கிற?”
“அப்படியேத்தான். நீ எந்தளவுக்கு அவங்களுக்கு டார்ச்சர் கொடுத்திருந்தா அவங்க அப்படி யோசிக்கிறளவுக்கு வந்திருப்பாங்க பாரு. இனியாவது என்னை மாதிரி நல்லவிதமா நடந்துக்க”
“உன்னைய மாதிரியா?”
“ம்ம்ம் என்னைய மாதிரிதான்”
“போடி இவளே கொன்றுவேன் உன்னை. உன்னை மெடிக்கல் படிக்கச் சொன்னா பீ.காம் படிக்கிறேன்னு போய் நின்னவதானே நீ. உன்னாலதான் அவங்களுக்கு டென்சனே.போடி அந்தப்பக்கம்”என்று அவளைத் தள்ளிவிட்டாள்.
அவள் பொத்துன்னு கீழே போய் அம்மாஆஆஆஆன்னு சத்தத்தோடு விழுந்தாள்.
அவளது சத்தம் கேட்டு இப்போ இரண்டுபேரும் திரும்பி பார்த்தனர்.
“அக்கா என்னை தள்ளிவிட்டுட்டாம்மா. அம்மாவை ஏன் இப்படி கஷ்டப்படுத்துறன்னு கேட்டதுக்கு அப்படித்தான்டி செய்வேன். உனக்கென்னடி வந்துச்சுன்னு தள்ளிவிட்டுட்டாம்மா”என்று சொல்லி அழுதாள்.
கீதாஞ்சலி இப்போது நதியாவைப் பார்த்து முறைத்துவிட்டு தன் தலையில் அடித்துக்கொண்டாள்.
இப்போது ரமேஷைப் பார்த்து “இவளை என்ன செய்வீங்களோ தெரியாது. இந்த ஒரு வருஷ படிப்பிற்காவது உங்க காலேஜ் ஹாஸ்டல்லயாவது சேர்த்துவிட்டு அவளை வெளிய வரவிடாமல் பார்த்துக்கங்க. அந்த பசங்கக்கூட சேர்ந்து ஆம்பளை மாதிரியே நடந்துக்கிறா. இது சரியில்லை. பொம்பளை பிள்ளைக்கு தைரியம் வேணும்னு வளர்த்தது தப்பா போச்சுது. பேசாமல் பனிரண்டு முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைச்சிருந்தாங்கூட நிம்மதியா இருந்திருக்கலாம் போல”என்று திட்டினாள்.
“அதைக்கேட்ட ரமேஷ்தான் என்ன கீதும்மா இது. அவளைப் பத்தி ஓவரா திங் பண்ணி நீ இப்போ இப்படி கண்டதையும் பேச ஆரம்பிச்சிட்ட. அவளை வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பணும்னுதானே சொன்ன இப்போ என்னடான்னா இப்படி பேசுற. நீ முதல்ல உன் முடிவுல ஒழுங்கா நில்லு. அவளும் உன்னை புரிஞ்சுப்பா. அப்படித்தானே நதி”என்று இரண்டுபேரையும் சமாதானப்படுத்த கேட்டார்.
“அப்படியெல்லாம் வெளிநாட்டுக்குப்போய் படிக்கமுடியாது. எனக்கு என் பிரண்ட்ஸ் முக்கியம். நாங்க அடுத்து பீ.ஜியை இங்கயே முடிக்கத்தான் ப்ளான் பண்ணிருக்கோம். அது நம்ம காலேஜ்லயேதான் படிப்போம். எப்படியும் அடுத்த வருஷம் அங்கதானே படிப்போம் அப்போ பார்த்துக்கலாம்”என்று அடிவாங்கிய கன்னத்தைத் தடவியாவறே சொன்னாள்.
அதைக்கேட்ட கீதாவோ “நீங்க அவப்பேசுறதைக் கேட்டுட்டு சும்மா இருக்கீங்க ரமேஷ். பாருங்க எப்படி பேசுறான்னு. அவக்கிட்ட சொல்லி வைங்க அவா நினைக்கிறது எதுவுமே நடக்காது. அவள் வெளிநாட்டுக்கு படிக்கப்போகலைன்னா ஓகேதான். ஒரு பாரீன் மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைச்சு அவளை வெளிநாட்டு அனுப்புவனே தவிற இந்த ஊர்ல இருக்கவிடமாட்டேன்”என்று சபதமே போட்டார்.
ஆகா அம்மாவுக்கும் மகளுக்கும் நடுவுல இப்போ நான் மாட்டிக்கிட்டனே என்று ரமேஷ் முழித்துக்கொண்டிருந்தார்.
“அதையும் பார்க்கலாம் என்னை அடிச்சீங்கள்ல. நான் உங்கப்பேச்சை கேட்கவேமாட்டேன். நான் இனி என் முடிவுலதான் உறுதியா இருப்பேன்”
“இங்கப்பாரு பொண்ணா நடந்துக்க. இல்லைன்னா உதைபடுவ. உன் பிரண்ட்ஸ்கூட சேர்ந்துதான் இப்படி பிஹேவ் பண்ற”
“அப்படியெல்லாம் இல்ல. அவங்க நல்ல பிரண்ட்ஸ் எனக்காக எதுன்னாலும் செய்வாங்க. அவங்க என் பிரண்ட்ஸ்மா. நீ சும்மா அவங்களைத் திட்டாத. நான் இன்னைக்கு செய்தது தப்புத்தான். ஆனால் அது தெரியாமல் நடந்த தப்பு. அதுக்காக என்னை இப்படி பழிவாங்கதம்மா”
“நான் பழிவாங்குறன்னா?என்னடி பேசுற?”என்றவளுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
ரமேஷ்தான் “என்ன நதிம்மா இது?அம்மாக்கிட்ட இப்படி பேசுற. உன் பிஹேவியர் ரொம்ப மாறிட்டு. இதுக்காகத்தான் அவள் உன்னை வெளிய படிக்க அனுப்பணும்னு சொல்லுற. இனி அவளே வேண்டாம்னு சொன்னாலும் நான் கேட்கமாட்டேன். இப்போதிலிருந்து உன் படிப்புல கவனம் வை. உன்னோட மேல்படிப்பு வெளிநாட்டுலதான் போ”என்று உறுதியாகச் சொன்னார்.
கீதாஞ்சலி அப்படியே ரமேஷின் தோளில் சாய்ந்து அழுதுவிட்டார்.
கீதாஞ்சலி அழுவதைத் தாங்கிக்க முடியாத ரமேஷும் கண்கலங்கிவிட்டார். நர்மதா இவ்வளவு நேரம் வெ
விளையாட்டாக அழுதவள் அவங்கப் பக்கத்துல போய் கீதாஞ்சலியோட தோளில் சாய்ந்துகொண்டாள்.
இதுக்குமேல நதியாவால் எதுவும் பேசமுடியாது போயிற்று. அவங்க வீடு எப்பவும் கலகலன்னுதான் இருக்கும்.
எப்போவாவது நதியாவால் கொஞ்சம் பிரச்சனைகள் வெடிக்கும் ஆனாலும் உடனே சரியாகிவிடும். இன்னைக்குத்தான் அவளால் மொத்தமாக அழுதுவிட்டனர்.
கீதாஞ்சலிக்கு நதியா எதிர்த்து எதிர்த்து பேசுறது கஷ்டமாக இருந்தது. தன்னோட பொண்ணை எப்படியெல்லாம் படிக்க வைக்கணும்னு நினைச்சாளோ அதை ஒன்னுக்கூட அவ பண்ணலையே. அந்த ஆதங்கம் இன்னும் இருக்கு. அவளைப் பத்தியும் அவளது எதிர்காலம் பத்தியும் ரொம்ப யோசித்தாள்.
அதுவும் இப்போ காலேஜ் போனதுக்கு அப்புறம் எல்லாத்துலயும் பிரச்சனை பண்ணிட்டு வர்றதுனால அவளை இனி இங்க படிக்கவைச்சா படிக்கமாட்டாள். அதனால் வெளிநாட்டுக்கு அனுப்பணும்னு தானாக முடிவெடுத்து அதை சொன்னதும் நதியாவுக்கு கோபம் வந்துவிட்டது.
இப்போ கீதா அழுததும் எல்லோரும் அமைதியாகிவிட்டனர். அதுக்கு மேல எதுவும் பிரச்சனை பண்ணவேண்டாம்னு நினைத்த நதியா அமைதியாக தன்னுடையை ரூமுக்குப் போய்விட்டாள்
அவள் தன்னுடைய ரூமுக்கு வந்ததும் கீதாஞ்சலி சொன்னதை யோசிக்க ஆரம்பித்தாள்.
“ஒருவேளை நான் திரும்பவும் காலேஜ்ல பிரச்சனை பண்ணிட்டிருந்தா என்னை அப்படியே வெளிநாடுக்கோ வெளியூருக்கோ பேக் பண்ணி அனுப்பிடுவாங்களோ?அப்படியெல்லாம் நடக்கவிடக்கூடாதே நதியா. இதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கணுமே?”என்று மூளையைப்போட்டுக் கசக்கிக்கொண்டிருந்தாள்.
உடனே விஜய்க்கு போன் பண்ணினாள்.
அவனே அப்போதான் வீட்டுக்குப் போய் மிஸ்டர் திருமூர்த்திக்கிட்ட திட்டு வாங்கிட்டு அக்கடான்னு பெட்டுல வந்து படுத்தான்.
அதுக்குள்ள அவனைத் தூங்கவிடாமல் போன் சத்தம் கேட்டதும் எடுத்துப் பார்த்தான்.
நதியா என்றதும் எடுத்துக் காதில் வைத்தான் “டேய் விஜய் எங்கம்மா என்னை அடுத்து வருஷம் படிப்பை முடிச்சதும் பாரீன் அனுப்பி படிக்கவைக்க ப்ளான் பண்றாங்கடா. இப்போ என்ன பண்றது?’என்று அவரிடம் ஐடியா கேட்டாள்.
“என்னது பாரீன் அனுப்பி படிக்க வைக்கப்போறாங்களா?அதுவும் அடுத்த வருஷமா?அதுக்கு ஏன்டி இப்போ ஐடியா கேட்கிறா. அதை அப்போ பார்த்துக்கலாம். நீ போகாத அவ்வளவுதான் சிம்பிள்”
“அது எனக்குத் தெரியாதா?நான் போகலைன்னா என்னை பாரீன் மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி அனுப்பிடுவாங்களாம்டா”
“க்கும் இதுவேறயா. உன்னை மிரட்டுறதுக்கு சும்மா சொல்லிருப்பாங்கடி. நீ பேசாம படுத்து தூங்கு. மூணு நாளு கழிச்சு காலேஜ்ல மீட் பண்ணலாம்
அப்போ இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணலாம்”
“லூசாடா நீ இப்போ ஐடியா சொல்லுன்னா மூணு நாள் கழிச்சு டிஸ்கஸ் பண்ணலாம்னு சொல்லுற”
“நீ லூசாடி. இந்த செமஸ்டரே இன்னும் முடியலை. அதுக்கப்புறம்தான் அடுத்த வருஷம் வரும். அதுக்கு அப்புறம் ரிசல்ட்டு, நீ பாஸாகாணும்,அதை வைச்சு அப்ளை பண்ணனும், இப்படி நிறைய இருக்கு. அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். எனக்கு தூக்கம் வருது நான் தூங்கப்போறேன் பை” என்று போனை வைத்துவிட்டான்.
“இருடா உனக்கு ஏதாவது ஹெல்ப்புன்னா என்கிட்டதானே வருவ அப்போ நான் உன்னை வைச்சிக்கிறேன்டா” என்று திட்டிவிட்டு அடுத்து யாருக்குப் போன் பண்ணலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.
இது சரிவராது நம்மளே நம்மளைக் காப்பாத்திக்க ஏதாவது யோசிக்கவேண்டியதுதான் என்று நினைத்தவள் கன்னத்தில் கையைக்கொடுத்து தாங்கியவாறு உட்கார்ந்தவள் “நம்ம ஏன் யாரையாவது காதலிச்சுக் கல்யாணம் பண்ணக்கூடாது.கீதாஞ்சலியும் ரமேஷ்குமாரும் மட்டும்தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?நம்ம காதலிக்கக்கூடாதா?எவனையாவது இங்க உள்ளவனை மடக்கி காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டு இங்கயே செட்டிலாகிடவேண்டியதுதான். நான் பாரீன் போகமாட்டேன். அதெப்படி கீதாஞ்சலியையும் ரமேஷையும் விட்டுட்டு பாரீன் போவேன். அது நடக்கிற கதையில்லை. அப்படியே இங்கயே கல்யாணம் பண்ணிட்டு இருந்திட வேண்டியதுதான். இதுதான் நல்ல ஐடியா?”என்று முடிவெடுத்தவள் உடனே விஜயிக்குத்தான் போன் பண்ணினாள்.
அவனோ பாதி தூக்கத்துல எழுந்து போனை எடுத்தவன் காதில் வைத்தான்.
“ஹலோ”
“விஜய்”என்று அவள் கூப்பிட்டதும்
“ஏன்டி நதியா உனக்கெல்லாம் தூக்கம் வராதாடி. ஏன்டி என்னை இப்படி பாடாய் படுத்துற. உனக்கு இப்போ என்னதான்டி பிரச்சனை?”
“மச்சான் நான் உடனே காதலிக்கணும்டா. அதுவும் நல்ல படிச்ச, நல்ல வேலையில் இருக்கிற ஒருத்தனைத்தான் காதலிக்கணும்டா”என்று அவள்பாட்டுக்கு பேசிக்கொண்டேபோனாள்.
அதைக்கேட்ட விஜயிக்குத்தான் அதிர்ச்சியாக இருந்தது. இவா என்ன உளறிட்டிருக்கா?காதலிக்கணுமா?என்று குழம்பிப்போனவன் பயந்து எழுந்து உட்கார்ந்தான்.
“நதி ஆர் யூ ஓகே. என்னாச்சு உனக்கு?நடுரிதாதிரியில பேய் கனவு எதவும் கண்டியா?இப்படி உளறிட்டிருக்க?”
“அதெல்லாம் இல்லடா. எங்கம்மா என்னை பேக் பண்ணி வெளிநாட்டுக்கு அனுப்பணும்னு நினைக்கிறாங்கல”
“ஆமா”
“அதுக்குத்தான் நான் ஒரு ஐடியா பண்ணிருக்கேன்”
“என்ன ஐடியா?”
“நான் இங்கயே ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டா என்னை எப்படி வெளிநாட்டுக்கு அனுப்புவாங்க. பேரன் பேத்தின்னு நம்மக்கிட்டதானே வந்தாகணும்.எப்படி என் ஐடியா?”
“மண்ணாங்கட்டி. உன் ஐடியாவுல ஆணி அடிச்சு,அதுல பூதான் போடணும். பேசாம படுத்துத் தூங்குடி குரங்கே. எனக்குன்னு ஒரு பிரண்டுன்னு வந்து சேர்ந்திருக்கப்பாரு. ஊர்ல அவன் அவன் பிரண்டஸ் எப்படியெல்லாம் இருக்காங்க எனக்குன்னு மட்டும் ஒரு கிறுக்கி பிரண்டா வந்திருக்கா பாரு. போன வை. இனி போன் பண்ணின வீட்டுக்கு வந்து அடிப்பேன். காதலிக்கிற மூஞ்சைப்பாரு”என்று திட்டிவிட்டு போனை வைத்துவிட்டான்.
அவன் திட்டியதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டவள் காத்திலயே கையால் எழுதி யோசிக்க ஆரம்பித்தாள்.
“யாரைக் காதலிக்கலாம்?”என்று ஆழ்ந்த சிந்தனைக்குள் போய்விட்டாள்.
யம்மா நதியா காதல் என்ன கடையில விக்கிற பானிபூரியா?நினைச்சதும் கையில வர்றதுக்கு!