மூப்பு அடையா யட்சகா 31
Muppu31
31 மூப்பு அடையா யட்சகா !!
மாமா இன்னைக்கு எதுக்கு எல்லாருக்கும் சாக்லேட் கொடுக்குறீங்க.தன் கை நிறைய கொடுத்த சாக்லேட்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அருகில் இருந்த குழந்தைகளுக்கு பங்கு போட்டு கொடுத்த சிறு பெண்ணின் தலையை தடவி விட்டார் ஜீவரத்தினம் ..
கம்பீரம் என்பது அழகில் இல்லை , நடத்தையில் தோரணை என்பது பண்பில் வருவது, மிடுக்கு என்பது நாம் செயலில் வெளிபட வேண்டியது என்று பார்த்து பார்த்து செய்யும் ஒரு ஆண்!! யட்சன் ஜீவரத்தினம், அவர் என்ன செய்தாலும் வலது கையால் கூட இருக்கும் அவரின் துணைவி ஜீவகாருண்யா !!
சேற்றில் தான் செந்தாமரை மலரும் என்பது போல மருந்தம்பட்டி என்ற ஊரின் , ஊர் மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் ஒரு அரக்கர் கூட்டத்தின் இளைய வாரிசாக பிறந்தவர் யட்சக ஜீவரத்தினம்!! ஏழை எளியவர்களின் ரத்தத்தில் தான் அவர்கள் வயிறு வளர்ப்பது , கொலை கொள்ளை , திருட்டு அடுத்தவர் மனைவியை அபகரிப்பது என்று நாக்கூசும் அத்தனை அக்கிரமங்களும் இயல்பாக செய்யக்கூடிய ஒரு குடும்பத்தில் ஏன் பிறந்தோம் என்று வருந்தாத நாள் இல்லை...
ஏதாவது ஒரு காரணம் சொல்லி அந்த ஊருக்கு வெளியே தான் ஜீவரத்தினம் வளர்ந்தது படித்தது எல்லாம்... படிக்கும் பொழுது காருண்யாவின் மீது காதல் கொண்டு அவளைக் கரம் பிடிக்க நினைக்க... இவரை வைத்து கோடிக்கணக்கான சொத்தை வரதட்சணை என்ற பெயரில் ஆட்டையை போட்டு விட காத்திருந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி!! காருண்யாவைக் கொல்ல வகை தேடினார்கள் கட்டியவளை மட்டுமல்ல , காதலித்தவளை விட்டு விடுவதும் நல்ல ஆண் மகனுக்கு அழகு இல்லையே.. காருண்யாவை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விட்டார்.... அப்போது சென்னை என்பதே இன்னொரு நாடு போலதான் அவ்வளவு சீக்கிரமாக இந்த சென்னை பட்டிணத்திற்குள் இவர்களை தேடி கண்டுபிடிப்பது சுலபமல்ல என்பதால் சென்னை அவர்களுக்கு வரமாக மாறிப் போனது...
மூத்தவன் பிறந்தான் யட்சன் ஜீவரத்தினம் என்று அவரின் பெயரை வைக்க மனைவி ஆசைப்பட...
யாராவது புருசன் பெயரை அப்படியே பிள்ளைக்கு வைப்பாங்களாடி...
தெரியல எனக்கு வைக்கணும்னு தோணுது.. உங்களை திட்ட முடியாதுல்ல உங்க பேரை அவனுக்கு வச்சா அவனை திட்டுறது போல உங்களை திட்டுவேன்ல" என்று காருண்யா சிரிக்க.. அது என்னவோ அவர் பெயரில்தான் இவன் மறைந்து வாழ வேண்டும் என்று அப்போதே கடவுள் திட்டம் வகுத்தார்....
மனைவி ஆசைக்கு எப்பவும் தடை இல்லை தன் பெயரையே அவனுக்கு சூட்டி ஆடம்பரமாய் ஊர் கூட்டி விருந்தளிக்கவில்லை ... ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாத பிள்ளைகளுக்கு மனைவி கையில் கிடந்த காப்பை விற்று சாப்பாடு போட்டு மகிழ்ந்த குடும்பம் அவர்களின் சந்தோஷமும் பெருகியது ... தான தர்மங்களும் பெருகியது சுத்தம் குவிந்தது தொழிலதிபர் பட்டியலில் சேர்ந்தது
இதோ அவர்களே நினையாத நேரம் ... ரெண்டாம் மகன் பிறந்தான் .... ஜீவ இன்பாதித்தன் என்று பெயர் சூட்டினர் .. மூத்தவன் போல சிங்கமாக சுற்றி வருவான் என நினைக்க வளர வளரத்தான் புரிந்தது அவன் சற்று மந்தமாக இருப்பது .... ஏதோ கணவன் மனைவி ரத்த மாதிரி ஒத்து போகாது இப்படி ஆகும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்....
அப்போ இப்படியே தான் இருப்பானா ?
கொஞ்சம் மந்தமா இருக்கான், வளர வளர சரியாக வாய்ப்பு இருக்கு சார்....என்று விட .... அம்மாஞ்சி போல மூத்தவன் கையில் உட்கார்ந்து பேக்க பேக்க முழிக்கும் மகனை கண்டு சற்று வருத்தம் தான்
ப்பா அதெல்லாம் சரியா வருவான் நான் இருக்கேன்ல என்று விடலை பருவத்தை நோக்கி நகரும் யட்சன் அவரகளுக்கு எப்போதும் ஒரு பலமே...நீ இவ்வளவு பெரிய பையனா ஆன பிறகு தம்பி பெத்து இருக்காங்க உனக்கு வெளிய வர வெட்கமா இல்லை என்று யட்சனை நண்பர்கள் கிண்டல் பண்ண...
அவர் மனைவி அவர் வாழ்க்கை , ஏன் பெரிய பையன் இருந்தா மனைவியை கட்டி அணைக்க கூடாதா காதலிக்க கூடாதா பிள்ளை பெத்துக்க கூடாத ... ஐம்பது வயசுல சின்ன வீடு வைக்கிறவனை விட்டுருங்க, அறுபது வயசுல பிள்ளை பெத்துட்டான்னு அருவருப்பா பேசுங்க ... அவர் பொண்டாட்டி கூடதானடா பிள்ளை பெத்தான் என்ன ஊரோ உலகமோ என்று பல்லை கடிப்பான்...
ஜீவாவின் மூன்றாம் வயது பிறந்த நாளை கொண்டாடத்தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஆசிரமத்தில் உணவும் சாக்லேட்டும் கொடுக்க அந்த ஆசிரமம் வந்தது ...
ப்பா எனக்கு எக்ஸாம் இருக்கு நீங்க போங்க, என்று யட்சன் வராது போக கேக் வெட்டி கொண்டாடினர்...
என் மகனுக்கு பிறந்த நாள் குட்டி அதான் சாக்லேட் தர்றோம்...
"ம்க்கும் சாக்லேட் தந்தா போதுமா , நீங்க எல்லாம் எவ்வளவு அழகா ட்ரெஸ் போட்டிருக்கீங்க பாருங்க.. அவங்களுக்கு எதுவும் இல்ல என்று மூன்று வயதில் பிஞ்சு கையை நீட்டிய அப்பெண் விவரம் பார்த்து கண்ணை விரித்தார் ஜீவரத்தினம்
"சாரிம்மா அடுத்த முறை ட்ரெஸ் எடுத்து வர்றேன் ...
"அது என்ன அடுத்த முறை , இப்ப காசு இல்லையா மாமா ...
"இருக்கே இந்தா உன் கையால கொடு" என்று பணத்தை ஜீவரத்தினம் அவளிடம் கொடுக்க, அங்கேயே பணத்தை ஆட்டையை போட்டது ஒரு குட்டி உருவம் ...
"ஆமா குட்டி யாரு புதுசா இருக்கு
"பக்கத்து தெரு புள்ளை சார் , இங்கேயே தான் கிடக்கும் , அவளை பார்த்தா அத்தனை பேருக்கும் அவ்வளவு சந்தோசம் ஆகிடும்.. வாயி வாயி துடுக்கு பேச்சு வயசுக்கு மீறி பேசுவா , செய்வா ...
"அடிச்சிக்காம தின்னுங்க " என்று பத்து வயது பிள்ளையை மிரட்டி கொண்டு நின்றது வேறு யார் தேனிசை தான் ...
"ச்சே ச்சே நறுக்குன்னு இந்த வயசுலேயே பேசுது, நியாயம் கேட்டு வாங்குது பாருங்க, நல்லா வரும்" என்று விட்டு போனார்...
வெளியே வந்து விளையாடி கொண்டிருந்த ஜீவாவை தேட பிள்ளையை காணவில்லை ரெண்டு நாள் தேடாத இடம் இல்லை ..
ஒரு பொம்பளை கார் பொம்மையை கையில வச்சி காட்டிச்சு அந்த பையன் அது பின்னாடி போயிட்டான் என்று கூற அய்யோ என்று காருண்யா அழ ..
"அந்த பொண்ணு நகை அடைக்க போட்டு ஆளு ரவுடி போல இருந்தாளா...
"ஹான் ஆமா ஆமா" என்றதும் தன் அக்கா, அவர்கள் வீட்டில் வளர்ந்து வரும் அடுத்த ரவுடி சிந்தாமணி அன்றி வேறு இல்லை என்று புரிந்தது ... நேரே சிந்தாமணி தேடி போக அவர்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து காரை உருட்டி விளையாடி கொண்டிருந்தான் ஜீவா...
"வா தம்பி எப்படி இளைச்சு போயிட்ட "என்று உச்சி கொட்டிய சிந்தாமணி சங்கை போய் ஜீவரத்தினம் பிடிக்க போக.... ஓங்கி பிடித்து தள்ளிய சிந்தாமணி
"உனக்கு என்கிட்ட போராடுற அளவு எல்லாம் தெம்பு இல்லடா தம்பி ...நீ படிச்சு கிழிச்சு இருக்கலாம்... ஆனா பலத்துல எங்களை மிஞ்ச முடியாதுடா உண்மையையும் அதுதான் .. இவர் சாதுவானவர்... அவர்கள் ரத்தம் குடிக்க அஞ்சாத அரக்கர் குலம்..அடங்கி போய் தான் ஆக வேண்டியதாகி போனது ...
"எங்களுக்கு உன்மேல என்ன பகை ரத்தினம் , என் தம்பி நல்லா இருந்தா,ஃசந்தோஷப்படுற முதல் ஆளு நாங்க தான்... ஆனா பாரு ஏகப்பட்ட காசு சம்பாதிச்சுட்டியாமே, கொஞ்சம் கண்ணுக்கு உறுத்தலா இருக்குப்பா.... நீ என்ன பண்ற? ஒரு ரெண்டு லட்ச ரூபா வச்சுட்டு, உன் பிள்ளையை எடுத்துட்டு போ .... என்ன புள்ள வளத்து வச்சிருக்க சூதுவாது தெரியாம நாலு சப்பி மிட்டாயை போட்டா அவன் பாட்டுக்கு தின்னுகிட்டு இருக்கான்.... காருண்யா அதுக்கு மேல் பல்லியை பார்த்து ஓடும் ஆள் நடுங்கியே போனார் ....
"இங்க பாரு சிந்தாமணி உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னுதான் நான் வெளிய போனது தேவையில்லாம வம்புக்கு வராத போலீஸ் ஸ்டேசன் போக வேண்டியது இருக்கும் ..
"இப்போ நீ உள்ள வரும்போது ஒருத்தன் பம்மிட்டு வெளிய போனானே, அவன்தான் நம்ம ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்... ஏதோ பொம்பளை விஷயத்துல மாட்டிக்கிட்டானாம... காப்பாத்தி கொடுக்கான்னு என் கால்ல தான் வந்து விழுந்துட்டு போறான்.. அவனா உனக்கு பாதுகாப்பு கொடுக்க போறான் என்று தங்க வளையல் குலுக்கி சிந்தாமணி விளையாட ,
தன் குடும்பத்தின் நிம்மதிக்காக பாம்புக்கு பால் வார்க்க வேண்டியதாகி போனது ,, பாம்புக்கு பால் வார்த்தாலும் , பாம்பு தேனை கக்காது விஷத்தை தான் கக்கும்...
மூத்தவன் கோவக்காரன் படிப்புல முதலிடத்தில் இருக்கும் அவனிடம் இதை எல்லாம் சொல்லி கோவத்தை உண்டாக்காத காருண்யா "என்று மனைவிக்கு கூறிவிட இவர்கள் சிலந்தி வலையில் சிக்கியது யட்சனுக்கு தெரியாதே போனது ...
தங்க முட்டை போடும் வாத்து வயிற்றை கிழித்து பார்த்தால் என்ன என்ற ஆசை சிந்தாமணிக்கு வந்தது ,..
இத்தனை அக்கிரமம் பண்ணி காசு சேர்க்கிறோம் ஆனா அவன் ஒரு படி மேலேயே இருக்கானே, அது மேலதான் என் கண்ணு இருக்கு என்று சிந்தாமணி கண் பளபளக்க...
சண்முகம் மூத்தவனை கொண்டு விட்டுட்டு என்னை கொண்டு போய் ஆபீஸ்ல விடு என்றார் பட்டு சேலையில் வந்த தன் மனைவியை ரசித்து கொண்டே..
சரிங்க அய்யா .... புத்தகத்தை புரட்டி கொண்டு வந்த மகன் அவரை உரித்து வைத்தது போலவே வருவது தானாக மீசையை முறுக்க வைத்தது ...
"காரு , மாமாவுக்கு குளிக்க சுடுதண்ணீ எடுத்து வை என்று மோகமாக மனைவிக்கு குரல் போக
சரிதான் இனி ரெண்டு மணிநேரம் கழிச்சு தானப்பா வெளிய வருவீங்க..
"அது முதுகுல அழுக்குடா மை,சன் ..அம்மா தேய்ச்சி குளிச்சு விடுவா என்று சிரித்த தகப்பன் முதுகில் அடித்தவன்
"அடுத்தது பொம்பளை பிள்ளையா பெத்து தாங்கப்பா" என்று ஜீவ ரத்தினத்தை வெட்க பட வைத்து விட்டு போனவன் ... மூன்று வயது ஆன பின்னும் பேச தெரியாத பிள்ளையாக தத்தைக்க புத்தைக்க என்று நடக்கவும் வராது அண்ணன் காலை பிடித்த தம்பி அருகே குனிந்து உட்கார்ந்தான்
அப்பா அம்மா அண்ணன் என்ற தெளிவு கூட பிள்ளைக்கு இல்லை .... பெருமூச்சு விட்டவன்... அவன் அழுக்கு பண்ணின சட்டையை கழட்டி மாற்றிவிட்டுவிட்டு தாய் தகப்பன் குரலை கேட்டு கொண்டே வெளியே போனான் ...
அந்த குரல்கள் இனி அவனுக்கு கேட்க போவது இல்லையே ...
வீட்டுக்கு வரும் போது தகப்பன் ஒரு பக்கம் கழுத்து அறுப்பட்டு கிடக்க தாய் தலையில் ரத்தம் வடிய பாதி உயிரில்கிடக்க.... ஜீவா கையில் புதிய கார் பொம்மை ஒன்று இருந்தது அதை உருட்டி
டூர் டூர் என்று ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்க்கும் தகப்பனுக்கும் இடையே உட்கார்ந்து விளையாடி கொண்டிருந்தான்
யட்சன் நிலையோ வேறு அசைவற்ற நின்றான்... தகப்பன் அருகே ஓடினான் உயிர் போய் கிடந்தது ... தாய் அருகே ஓடினான்...,
கண்ணா ...கண்ணா ,
ம்மா தாயை மடியில் எடுத்து வைத்து கொண்டு அப்போதும் திடமாக பார்த்த மகன் தலையை தடவி கொடுத்த காருண்யா ... சிந்தாமணி சொத்துக்காக தங்களை இப்படி ஆக்கியது கூறிட
அவளை, ஏன்மா இதை முன்னமே சொலலலை
"அப்பா சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டார்
"நான் சாக பயப்படல தங்கம் அப்பா எப்பவும் சொல்வார் போகும் போது உன்னையும் கூட்டிட்டு தான் போவேன்டின்னு , அவர் முன்ன போறார் நான் பின்ன போறேன் அவ்வளவு தான் தங்கம், அழாத வடிய துடித்த கண்ணீரை துடைத்து விட்டவர் ...
ஆனா ஆனா என்று பசிக்கு விரலை சப்பி தாயை தேடிய ஜீவாவை நோக்கி காருண்யா பார்க்க ...ஓடிப்போய் ஜீவாவை தூக்கி கொண்டு வந்து தாய் அருகே கொடுக்க
இந்த புள்ளையை விட்டுட்டு விட்டுட்டு என்று அழ .... தாய் கையில் நாடித்துடிப்பு குறைவதை அறிந்த யட்சன்
"அப்பாவும் இல்லாம அம்மாவும் இல்லாம இந்த புள்ளை எப்படி உலகத்தை எதிர்கொள்ள போறான் அந்த பிசாசுக இவனை விட்டு வைக்குமா? உன்னால அத்தனை பேரையும் சமாளிக்க முடியுமா ? என்று திக்கி திணற....
"இவனுக்கு தாயா தகப்பனா நான் இருப்பேன்மா.... இந்த உலகத்தை எதிர்த்து போராட கூடிய வலிமை என் இழப்புகளுக்கு இருக்கும்மா, நான் உயிரோட இருக்கிற வரை இவன் என் புள்ளை !! அவனை உருவாக்கி கொண்டு வர்றது என் பொறுப்பு , இது உன்மேல சத்தியம் !! அவனுக்காக வருத்தபடாதீங்க ... இவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை தந்த சிரிப்பில்
"என்ன காணலைன்னு உன் அப்பா தேடுவார் போறேன்யா" என்று யட்சனை ஒரு கை ஆசீர்வாதம் பண்ண இன்னொரு கை ஜீவாவை ஆசீர்வாதம் பண்ண அவர் ஜீவன் அவன் மடியிலேயே போக ..
தம்பி இஇஇஇஇ பைலை கொண்டு வந்த சண்முகம் நிலை அறிந்து பதறி போனார் ...
போலிசுக்கு போயிடுவோம் தம்பி
இவ்வளவு துணிஞ்சு பண்றாங்கன்னா அங்க ப்ளான் வேற அண்ணா... மைனர் ஆன என் தம்பி பிள்ளைங்களை நான் கஸ்ஸிடி எடுத்துக்கிறேன்னு எங்க ரெண்டு பேரும்ம் அவங்க கட்டுப்பாடு கொண்டு வரத்தான் இவனை விட்டு வச்சிருக்காங்க .... ஏன்னா அவர் சொத்து அவருக்கு பிறகு எங்களுக்கு வரும் அதுவே அவங்க கஸ்டடி வந்தா கொஞ்ச நாள் எங்களை கவனிச்சிட்டு சொத்தை எழுதி வாங்க இதை பண்றாங்கன்னு தோணுது "
"ஆமா தம்பி அப்ப என்ன பண்ண
"அவங்க ரெண்டு பேரையும் கொல்ல தெரிஞ்ச இவங்களுக்கு இவனையே கொல்ல முடியல ஆக வேற ஏதோ இருக்கு .... இவங்க சாவு உலகத்துக்கு தெரிய கூடாது என்றவன்... இரவோடு இரவாக சண்முகத்தின் உதவியோடு அந்த பங்களா வீட்டின் பின்புறத்திலேயே இருவரையும் அடக்கம் செய்தான்...
அண்ணன் இந்த ராத்திரி மட்டும் இவனை பத்திரமா பாத்துக்கோங்க என்று சண்முகத்தின் கையில் ஜீவாவை கொடுக்க ... அவனோ அண்ணனின் தோள்பட்டையில் உறங்கிக் கொண்டிருந்தவன் கைமாத்தவும் எழும்பி அழ
இருடா அண்ணன் வந்திடுறேன்.... என்று கொடுக்க ம்ஹூம் அழுது கரைய ....
எங்க தம்பி போறீங்க ?
வந்து சொல்றேன்... என்றவன் சட்டை மறைவில் இருந்த அருவாளை கண்டு சண்முகம் பதற....
தம்பி உங்க வாழ்க்கை வீணாகிடும்
"எனக்குன்னு ஒரு வாழ்க்கை இனி இல்லை ஆனா இவனுக்காக வாழணும் வந்துடுவேன்" என்று போனவன் இரவோடு இரவாக வீடு சிந்தாமணி வீடு புகுந்து கையில் கிடைத்தவர்களை எல்லாம் வெட்டி வீசினான்
இளம் ரத்தம் அவன் மூர்க்கத்திற்கு முன்னே அங்கே ஒருத்தனும் எதிர் நிற்க முடியவில்லை... குடும்பத்தையே கொத்தி குதறி போட்டுவிட்டு தொட்டிலில் கிடந்து அழுத குழந்தையை மட்டும் கை வைக்க மனம் இல்லாமல் வந்தான்....
யட்சன் ஒரு கையில் ரத்தம் வடிய அருவாள் இருக்க அவ்வளவு நேரம் சண்முகத்தின் கையில் அழுது அழுது ஓய்ந்து போன ஜீவா இத்தனை நாள் பேசாத உதடுகள் இத்தனை நாள் தன் எதிரே இருக்கும் உறவுகள் யார் என்று கூட தெரியாது வளர்ந்தவன் வாழ்ந்தவன்... தன் அண்ணனை அப்பா ஆஆஆஆ என்று அழைத்தபடி சண்மூகம் தோளை விட்டு இறங்கி அலறிக்கொண்டு போய்
அப்பா என்று கட்டிப்பிடிக்க .. அன்று அவனுக்கு தகப்பன் ஆகினான்....
தம்பி உங்களை போலீஸ் தேடுது...
"எல்லாத்தையும் பார்த்துக்கோங்க அண்ணன் வருவேன் மறுபடியும் வருவேன்"
இவனை நான் பாத்துக்கவா தம்பி
ம்ஹூம் அவன் என் புள்ளை நான் பார்த்துக்கிறேன் , ஆடிட்டரா எங்க சொத்து உடமைகளை
கவனமா பாத்துக்கிறேன்
ம்ம் என்று இருட்டில் தம்பியை தூக்கி கொண்டு ஓடினான் ....
சந்தோசத்தை சுமக்க வேண்டிய வயதில் தன்னை நம்பி கொடுத்து போன தம்பியை ஆளாக்க ஓடினான் ஓடினான் ஓடி ஓடி ஓய்ந்தான் ...