கழிமுள்ளி நெஞ்சுக்காரி-23

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-23

கழிமுள்ளி-23

அரவிந்த் இப்போது கிளாஸ் முடிஞ்சு வெளியே வந்தான். இவ்வளவு நேரம் உள்ளுக்குள் இருந்த எரிச்சலைக் கொட்டுவதற்காக நேராக பிரின்சிபால் ரூமுக்குப் போனான்.

அவரோ என்னவென்று நிமிர்ந்துப் பார்த்தார்.அரவிந்தைக் கண்டதும் புருவம் நெறிய கண்களை இடுக்கி “சொல்லுங்க அரவிந்த் சார்”என்று கேட்டுவிட்டு கெத்தாக உட்கார்ந்தார்.

அவனோ நேரடியாகவே அவரிடம்“உங்கப்பொண்ணுக்கிட்ட சொல்லிவைங்க. இப்படி மரியாதையில்லாமல் நடந்துக்கிட்டான்னா டிசிபிளின் கமிட்டி சொல்லி காலேஜ்ல இருந்து தூக்கிடுவேன். அந்த ஐஞ்சு வானரத்தையும் சேர்த்து தூக்கணும்னாலும் அதையும் சேர்தது செய்வேன். எனக்கு என் மரியாதை முக்கியம். இங்க இப்போ நான் காலேஜ் லெக்ட்சரர் மட்டுமில்லை, இந்த காலேஜ் மொத்தமும் என் பேருலதான் இருக்கு. நான் என்ன முடிவெடுத்தாலும் சரின்னுதான் எல்லோரும் தலையாட்டுவாங்க. மாமா சொன்னதுனால மட்டும்தான் உங்களை பிரின்சிபாலா உட்கார வைச்சிருக்கேன். இல்லைன்னா போன மாசமே தூக்கியிருப்பேன். அப்பாவை மாதிரியே மகளுக்கும் திமிரும் கொழுப்பும் அதிகமாயிருக்கு. அதுக்கு நான் ஒன்னும் செய்யமுடியாது நீங்கதான் தட்டிவைக்கணும்”என்றவன் திரும்பி வெளியே வந்து ஸ்டாப் ரூமுக்குப் போனான்.

அதுக்கு முன்னாடி அங்கே நின்றிருந்த விஜய் கேங்கினைக் கூப்பிட்டான்.

“ஹேய் நதியா க்ரூப்ஸ் இங்க வாங்க”என்றுதான் கூப்பிட்டான்.

“டேய் இங்கப்பாருடா இவனோட திமிர. இவனெல்லாம் நமக்கு லெக்ட்சரரா வந்து நம்மளை எப்படி கூப்பிடுறான் பாரு” என்றுவிட்டு நான்குபேரும் அவன் பக்கத்தில் போனார்கள்.

“என்னடா கேங்கா சொல்லி வைச்சு சுத்துறீங்களா உங்க கூட்டத் தலைவி டான் மேடம் எதுக்குடா என் கிளாஸ்ல இருந்து வெளியே போனாள். உங்களுக்கு மரியாதை தெரியாதுன்னு எங்களுக்கு தெரியும் அதுக்காக கிளாஸ்ல இருந்து பெர்மிஷன் கேட்காமல் வெளியே போவீங்களா? நாளைக்கு வரும்போது என்னை வந்துப் பாத்துட்டு போக சொல்லு. இல்லைன்னா கிளாஸ்குள்ள வரதுக்கு பர்மிஷன் கொடுக்க மாட்டேன். அவகிட்ட சொல்லிடுங்க. போன வருஷம் அடிதடியில் இறங்கிற மாதிரி இந்த வருஷமும் அடிதடியில இறங்கினா மொத்த கூட்டத்தை தூக்கி வெளியில வீசிடுவேன். காலேஜ்ல பர்ஸ்ட் டைம் உங்களுக்கு வார்ன் பண்ணி விடுறேன்.இதுக்கு மேல உங்க அடாவடி ஏதாவது இங்கே இருந்துச்சு அதுக்கு அப்புறம் அந்த அரவிந்த் யாருன்னு காண்பிக்க வேண்டியது இருக்கும்” என்று வார்ன் பண்ணிட்டு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்காமலே போய்விட்டான்.

“என்னாடா இவன் போன மாசம் வரைக்கும் நம்மக்கூட சண்டைப்போட்டுட்டு இந்த மாசம் வந்து லெக்ட்சரருன்னு வந்து நிக்கிறான். இப்படி வார்ன் பண்றான். இவனை என்னடா பண்ண?”

“ஒன்னும் பண்ணவேண்டாம். நம்ம டீ குடிக்கப்போகலாம்”என்ற விஜய் அவர்களை இழுத்துக்கொண்டு கேண்டீன் பக்கம் போனான்.

“டேய் கிளாஸுக்கு போவோம்டா. பிரச்சனையாகிடப்போகுது”

“விடுறா பார்த்துக்கலாம். நம்ம நதியே கோபத்துல வீட்டுக்குப் போயிட்டாள். அடுத்து அவள் காலேஜிக்கு வர்றாளோ என்னவோ தெரியலன்னு இருக்கேன். அவளே இங்கப் படிக்கலைன்னா நம்ம என்னத்தைப் படிக்க. ரமேஷ் சார் ஏதாவது வழிபண்ணுவார். அவளை எங்க எக்ஸாம் எழுத வைக்கிறாரோ அங்கயே எழுதிட்டுப்போவோம்”என்று விஜய் சீரியஸ்ஸாக பேசிட்டிருந்தான்.

தினேஷ் அவனது கையைப் பிடித்து “ரொம்ப சீரியஸ்ஸா சீனைப் போடாத. இப்போ கிளாஸுக்குப் போகிற வழியைப் பாரு. ஏற்கனவே நீ ஒரு செமஸ்டர் எக்ஸாம் எழுத வேண்டியதிருக்கு. அதுனால சும்மா எதையும் யொசிக்காமல் வா கிளாஸ் அட்டண்ட் பண்ணுவோம்”எ

,ன்று இழுத்துட்டுப் போயிட்டான்.

நதியை எப்படி சமாதானப்படுத்தி இந்த ஒரு வருஷத்தையும் இங்கயே முடிக்க வைக்கலாம் என்று ரமேஷ்குமார் யோசித்துக்கொண்டிருந்தார்.

அவரது யோசனை கீதாஞ்சலிக்கு கேட்டுச்சோ என்னவோ உடனே போன் பண்ணிவிட்டாள்.

ரமேஷ் போனை எடுத்தவர் “சொல்லு கீது”என்று கேட்டதும் அந்தக் குரலில் உள்ள அயர்ச்சியிலயே அவள் அவரது நிலையை புரிந்துக்கொண்டாள்.

“என்னாச்சு?எதுவும் பிரச்சனையா?”என்று கேட்டதும் இங்கு நடந்ததை சொல்லி முடித்தார்.

“ஓஓஓ நதி வீட்டுக்கு வந்துட்டாளா?நான் இப்போதான் ஆபிஸுக்கு வந்தேன். நதிததான் காலேஜிக்குப் போறாளே நம்ம எதுக்கு வீட்டுல இருக்கணும்னு இப்போதான் லீவை கேன்சல் பண்ணிட்டு ஜாயின் பண்ணலாமான்னு கேட்கவந்தேன். இப்போ என்ன பண்ண? அவளை தனியா வீட்டுல விடமுடியாது.நான் உடனே வீட்டுக்குப்போறேன்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள்.

போன வருஷம் நம்மக்கிட்டயே படிச்சிட்டு இந்த வருஷம் வந்து நம்மளையே மிரட்டுறான் இவனை இங்கயிருந்து விரட்டலாமான்னு ரமேஷ் யோசிச்சார்.

ரமேஷ் சார் காலேஜே அவனோடது. அவனை விரட்டமுடியாது. ஆனால் நம்ம இங்கிருந்து போகமுடியும்ல. அவன் நம்மளை விரட்டிற போறான் என்று மனசு உண்மையை சொன்னது.

‘இல்லை நான் என்னோட தகுதியோடதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். எவனும் என்னை விரட்ட முடியாது. நானும் போகவும்மாட்டேன். இவனெல்லாம் என்ன பொடியன் வந்துட்டான் என் மகளைப் பத்திப்பேசுறதுக்கு போடா டேய்” என்று இப்போது சத்தமாகச் சொன்னவர் கிளாஸ் ரூம் செக் பண்ண ரவுண்ட்ஸ்க்குப் போய்விட்டார்.

அரவிந்த்துக்கு சேர்மன் ரூம்லயேதான் தனியாக சேர் போட்டுக் கொடுத்திருந்தனர். அது மொத்தமே இப்போ அவன் ப்ராப்பர்ட்டிதான் ஆனாலும் வெற்றிவேல்தான் இப்பவும் சேர்மன் பொறுப்பில் இருக்கிறார்.

தன்னுடையை டேபிள்ல இருந்தவன் கண்ணை மூடி அப்படியே உட்கார்ந்திருந்தான்?

அவனது கண்முனே நதியா வந்து நின்றாள்.

காலையில் தன்னைக் கண்டதும் எழுந்து நின்றவளைப் பார்த்ததும் அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் தன்னை மதிக்காது போனதும் கையைப்பிடிச்சு இழுத்து கன்னத்துல நாலு அப்பு அப்பணும்னு வந்த எண்ணத்தையும் கோபத்தையும் சிரித்தே சமாளித்திருந்தான்.

இப்பவும் அந்தக் கோபம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் இவா எதுக்கு இவ்வளவு சாந்தமா கிளாஸுக்கு வந்தா?அப்படி வரக்கூடியா ஆளில்லையே?என்னவா இருக்கும்? என்று அவளைப் பத்தியே யோசித்தவனது, எண்ணம் அவளைச் சுற்றியே இருந்தது.

அதற்குள் அடுத்த கிளாஸுக்கான நேரம் வந்துவிட எழுந்துப்போய்விட்டான்.

‘எதுக்குடா உனக்கு இந்த லெக்ட்சரர் வேலை. பேசாமல் ஜப்பான் போனியா அங்கயே உன் கம்பெனியை நடத்துனியான்னு இல்லாமல் இப்படி இங்க சுத்திட்டிருக்கியேன்னு’ காதுக்குள்ள கேட்ட சத்தத்தை திரும்பக் கேட்கக்கூடாதுன்னு கிளாஸுக்குள்ள போய் பாடத்தை நடத்த ஆரம்பித்தான்.

ஒரே நாள்ல உலக பேமஸ் மாதிரி ஒரே நாள்ல காலேஜ் பேமஸாகிட்டான் அரவிந்த்!

ஏற்கனவே இங்க படிக்கும்போதே அவனை சைட்டடிக்கன்னு ஒருக்கூட்டம் இருந்தாலும், அவனது அம்மாஞ்சி லுக்கு கொஞ்சம் பின்வாங்க வைத்திருந்தது.

இப்போது இன்ஞ்சினியரிங் காலேஜ் லெக்ட்சரர்.அதுவும் பழைய அம்மாஞ்சியா இல்லாமல் ஸ்மார்ட்டாஆஆஆ வந்து நின்னதும் வாவ் ஹேண்டஸ்ம் என்று இளைஞிகளுக்கு ஒருமுறை பார்வை அவன் பக்கம் திரும்பத்தான் செய்தது. ஆனால் அவனவோ கடமையே கண்ணாயிரம்னு கிளாஸ் எடுத்திட்டிருந்தான்.

முதல் முறையாக காலையில் இருந்து சாயங்காலாம் வரைக்கும் நதியா அண்ட் க்ரூப் பாய்ஸ் கிளாஸுக்குள்ள இருந்தது இதுவே முதல் தடவை! கின்னஸ் ரெக்கார்டுடா!

எப்போடா காலேஜ் முடியும்னு காத்திருந்தா நாலுபேரும் நேராக நதியாவைப் பார்க்கத்தான் போனாங்க. 

அவளோ ஏற்கனவே கீதாஞ்சலிக்கிட்ட சண்டைதான் போட்டிருந்தாள்.நான் அந்தக் காலேஜிக்கு படிக்கபோகமாட்டேன். யாரு என்ன சொன்னாலும் போகமாட்டேன். எனக்கு இஞ்சினியரிங்க் வேண்டாம். நான் வேற ஏதாவது கோர்ஸ் படிக்கிறேன். என்னை விட்றுங்க. அந்த அரவிந்த் இருக்கிற இடத்துல நான் படிக்கமாட்டேன் என்று சண்டைப்போட்டு அழுது, ஆர்ப்பட்டம் பண்ணிட்டுத்தான் படுத்து தூங்கியிருந்தாள்.

இப்போ இவங்க நாலு பேரும் போனதும் கீதாஞ்சலி “ஏன்டா அவளை தனியா வீட்டுக்கு வரவிட்டீங்க. அவளை அங்கயே பிடிச்சு வைச்சிருந்திருக்கலாம்ல. அந்த அரவிந்த் இருக்கான்னு இனி படிக்கப்போகமாட்டேன்னு அழுது அடம்பிடிக்கிறா. ஏதாவது பண்ணி அவளை அந்தக் காலேஜ்லயே படிக்க வைக்கணும். அவனுக்குப் பயந்து ஓடிவந்த மாதிரி இருக்கக்கூடாது”என்று வேதனையோடு சொன்னாள்.

அதைக்கேட்ட விஜய் “இந்த விசயத்தை எங்கக்கிட்ட விட்றுங்க ஆண்டி நாங்க பார்த்துக்கிறோம் அவளை கூப்பிடுங்க நாங்க பேசுறோம்” என்று அவளுக்கு தைரியம் சொன்னான்.

கீதாஞ்சலி போய் அவளை எழுப்பி கீழே கூட்டிட்டு வந்தாள். நதியா வந்ததுமே அவளது முகத்தைப் பார்த்தனர். நல்ல அழுதிருப்பாள் போல கண்கள் சிவந்து வீங்கிருந்தது. முகமும் ஒரு மாதிரி இருந்தது.

அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்த விஜய் “ஹலோ ரவுடி என்ன ஒரே அழுகைபோல. என்னைக்காவது நம்ம இந்த மூணு வருஷத்துல அழுதிருக்கோமா? மத்தவங்கதான் நம்மளால அழுதிருக்காங்க. அதனால் எங்க ரவுடி மறுபடியும் அதே நதியாவா காலேஜிக்கு நாளைக்கு வருவாளாம். அங்க வந்து அவளை ஏமாத்திட்டுப்போன அந்த அரவிந்தை அலறவிடுவாளாம். என்ன சொல்லுற?”என்று கேட்டான்.

“நான் எங்கயும் வரமாட்டேன். எனக்கு அவன் மூஞ்சியை பார்க்கவே பிடிக்கலை. அவன் இருக்க இடத்துக்கு வரமாட்டேன்”என்று அங்கிருந்து எழுந்துப்போக முயன்றாள்.

“சரி நீ எங்கேயும் வரவேண்டாம். இப்போ எங்களோட டீ குடிக்க வா”

“எனக்கு டீ வேண்டாம். நான் எங்கேயும் வரல”

“அப்போ காபியும் பப்ஸும் வாங்கித் தர்றேன் வா”

“வேண்டாம். நீ என்ன சொன்னாலும் நான் வெளியே வரமாட்டேன். போய் அந்த அரவிந்த் மண்டையை உடைச்சிட்டு வாங்கடா. அதுக்கு அப்புறம் நான் உங்கக்கூட வர்றேன்”

“அவன் மண்டையை உடைச்சிட்டு நாங்க ஜெயிலுக்குத்தான் போகணும். ஆனால் நீ அவனுக்கு எதிரா நின்னா அவனை பழிவாங்குன மாதிரியும் இருக்கும், நீயும் படிச்ச மாதிரியும் இருக்கும். யாருக்கும் உங்க பிரச்சனை தெரியாமலும் இருக்கும். நாங்க அவன் மண்டையை உடைக்கிறதுக்கெல்லாம் பயப்படல ஆனா நாங்க என்ன செய்தாலும் உன்னையும் சேர்த்துதான் பிடிச்சிட்டுப்போவாங்க புரியுதா? அதுக்குமேல ஒன்னு இருக்கு உங்களுக்குள்ள இருக்கிற அந்த பிரச்சனை வெளியே வந்து ஊருக்கே தெரியவைச்சிட்டா என்ன பண்றது. இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது. இனியும் தெரியக்கூடாது. ஆனால் அவன் எப்படி நம்மளை பழிவாங்கினானோ அப்படி அவனை பழிவாங்கணும். அது எங்களால முடியாது உன்ன்ல் முடியும். அதுக்கு ஏதாவது செய்யமுடியுதான்னு பாரு”

அதைக்கேட்டவள் நெற்றியை சுருக்கி யோசித்து,

உடனே எழுந்தவள் எனக்கு “காபியும் பப்ஸும் வாங்கித்தா?”என்றாள்.

“காபியும் பப்ஸ்ஸும் மட்டும்தான் வேணுமா? கொஞ்சம் சூடு சொரனையும் வாங்கித்தரவா”

அதைக்கேட்டதும் கோபத்தில் சோபாவில் இருந்த குட்டி தலையணைத் தூக்கி அவன்மேல் வீசினாள்.

“என்னை எதுக்கு அடிக்கிற. உண்மையைத்தனே சொன்னேன். இப்போ காபி குடிக்க வர்றியா இல்லையா”

“வர்றேன்டா”

“உன் வண்டியிலயே வா”

“வேண்டாம் உங்க வண்டியிலயே வர்றேன்”என்றவள் கொஞ்சமாச்சும் மனசு நிம்மதிக்காக வெளியே போயிட்டு வருவோம்னு கிளம்பினாள்.

கீதாஞ்சலிக்கும் அப்படியாவது கொஞ்சமாவது அவள் தெளியட்டும் என்றிருந்தது.

அவள் பிரண்ட்ஸ்கூட இருக்கிறதுதான் அவளுக்கு பலம். இப்போது போய் அவங்களோடு கொஞ்சம் கலகலவென்று பேசி சிரித்துவிட்டு வீட்டுக்கு வந்தாள்.

அந்த நேரத்தில் அரவிந்தைப் பத்தியோ அவனால் ஏற்பட்ட பிரச்சனையைப் பத்தியோ யாரும் பேசவில்லை.

ரொம்ப நாளுக்கு அப்புறம் பிரண்ட்ஸோடான அந்த தருணத்தை ரசித்திருந்தாள். பேசி சிரித்தாள்.

புதுவித உத்வேகம் அவளுக்குள் வந்திருந்தது.

அந்த சந்தோசத்தோடு வீட்டுக்குவந்தவள் நர்மதாவிடம் வம்பிழுத்து சண்டைப்போட்டு, சாப்பிட்டு முடித்து தூங்கிவிட்டாள்.

ரமேஷ் அமைதியாக இருப்பதைப் பார்த்த கீதாஞ்சலி “என்ன யோசனையில் இருக்கீங்க? நதியாவைப் பத்தியா?”என்று கேட்டாள்.

“ம்ம்ம்”

“அடுத்த என்ன செய்யப்போறீங்க”

“ஒன்னுமில்லை எப்படியாவது நதியாவை காலேஜிக்கு கூட்டிட்டுப் போகணும். இந்த வருஷைப் படிப்பை முடிக்க வைக்கணும். அரவிந்த்கிட்ட பேசி அவனை போகச்சொல்லணும்”

“முடியுமா?”

“முடியும்”

“ட்ரை பண்ணிப்பாருங்க. இல்லைன்னா என்ன பண்றது?”

“நடத்திக்காண்பிக்கணும். நமக்கு நம்ம பொண்ணோட எதிர்காலமும் படிப்பும், வாழ்க்கையும் முக்கியம். அதுத்தான்டி எனக்கு வேறெதுவும் முக்கியமில்லை”

“எதுன்னாலும் கவனமா செய்யுங்க. அவளுக்குத் தெரிஞ்சா பிரச்சனைய்கிடும்”

“அதை நான் பார்த்துக்கிறேன்” என்றவர் எழுந்துப்போய் நதியாவை பார்த்துவிட்டு வந்தார். அவள் நல்ல தூக்கத்தில் இருந்தார்.

“அவனை நம்ம பொண்ணு ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போதே கேஸ் கொடுத்து உள்ள தள்ளியிருக்கணும். அது செய்யாமல் போனாதுதான் இப்போ தப்பாகிடுச்சு” 

“அப்படி செய்திருந்தா அது நமக்கும் பிரச்சனையாகிருக்கும் நம்ம பொண்ணுக்கும் பிரச்சனையாகிருக்கும். அவன் பணபலத்தாலயும் ஆள்பலத்தாலயும் வெளிய வந்திருப்பான் அவ்வளவுதான் நடந்திருக்கும். நீ உன் மனசைப் போட்டுக் குழப்பிக்காம படுத்துத் தூங்கு”என்று அவளையும் சாமாதானப்படுத்திவிட்டுத்தான் படுத்தார்.

அடுத்தநாள் காலையில் நதியா வர்றாளா இல்லையான்னு தெரியாமல் காலேஜிக்கு போய்விட்டனர் விஜய் க்ரூப்ஸ்.

“எப்படியும் சார் அவளைக் கூட்டிட்டு வந்திடுவாரு என்ற நம்பிக்கையோடுதான் அவளுக்காக காத்திருந்தனர்.

ஆனால் அவர் காரில் தனியாகத்தான் வந்திறங்கினார். அதைப்பார்த்ததும் என்னடா இப்படியாகிடுச்சு என்று கவலையோடு கிளாஸுக்குப் போக மனதேயில்லாமல் உட்கார்ந்திருந்தனர்.

அப்போது அவளது என்பீல்ட் சத்தம் கேட்டதும் உத்துப் பார்த்தார்கள் அரவிந்தோட காருக்கு முன்னாடி தனது வண்டியில் எப்போதும் போல கம்பீரமாக நதியா வந்துக்கொண்டிருந்தாள். அரவிந்தோட காருக்கு வழிவிடாமல் வந்தாள்!

‘இவா நம்ம காருக்கு வழிவிடாமல் போறாளே’ என்று ஹார்ன் அடித்துப்பார்த்தான் அரவிந்த்.

அவளோ திரும்பி ஒரு லுக்குவிட்டவள் “உன் காருக்கெல்லாம் வழிவிடமுடியாதுடா வெண்ட்ரு”என்பதுபோல் பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டாள்.

அதைப்பார்த்த அரவிந்தோ வேண்டுமென்றே ஹார்ன் அடித்துக்கொண்டே வந்தான்.

“நீ என்னமும் பண்ணு நான் இப்படித்தான் போவேன்” என்று கெத்தாக வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

அரவிந்தின் கண்கள் ஒரு நொடி அவள் போவதையே ரசனையாகத்தான் பார்த்து வைத்தது.

இந்தக் காதல் வந்தாலும் இப்படித்தான் மானங்கெட்டுப்போய் ரசிக்கிறானுங்க. காதலிச்சு விட்டுட்டுப்போனாலும் வெட்கங்கெட்டுப்போய் ரசிக்கிறானுங்க!

டேய் அரவிந்த் நீயெல்லாம் எந்த கேட்டகரிலடா வருவ?