கழிமுள்ளி நெஞ்சுக்காரி-19

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-19

கழிமுள்ளி-19

நதியா கையில் உள்ள நரம்பைக் கட் பண்ணிருக்கிறதுனால இரத்தம் ரொம்ப வெளியேறிடுச்சு, இரத்தம் அடைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிருந்தாங்க. அதுக்கு பதிலா இரத்தம்கொடுக்க பிரண்ட்ஸ் நாலுபேரும் போனார்கள்..

“ஏன்டா நதியா இப்படி பண்ணினா? பைத்தியமாடா அவா? இதுக்கெல்லாம் காரணம் அந்த சோடபுட்டிதானேடா? இருக்குடா அவனுக்கு, இவா எழுந்து வரட்டும் அவளோட போய் அவன் மண்டையை உடைப்போம்” என்று முகேஷ் பொங்கிவிட்டான்.

நாலுபேருக்குமே இதுக்கான காரணம் அவனாதான் இருக்கணும்னு யூகிக்கமுடிஞ்சது. ஆனாலும் இப்போதைக்கு அவனை ஒன்னும் செய்யமுடகயாதே! அதனால் அமைதியாக இரத்தம் கொடுத்துவிட்டு வந்துவிட்டனர்.

உண்மையில் இப்படியான நட்புக்கிடைக்க அவள் கொடுத்துதான் வைத்திருக்கணும்.அதைவிடவும் இந்தளவுக்கு அவளுக்காக நிற்ககூடிய நட்பை வளர்த்துக்கிட்ட அவளை தோழியாக பெற்ற இவங்களும் லக்கிதான். 

ஆனால் அந்த லக்கி இப்போ அவசர சிகிச்சைப் பிரிவில் உணர்வில்லாமல் படுத்திருக்காளே!எழுந்துவருவாளா?இல்லையா? என்று எதுவுமே தெரியாமல் அவளுக்காக பெற்றவர்களும் நண்பர்களும் பரிதவித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்து அவளை பார்த்துட்டுப்போனாங்க என்றால் போலீஸ் விசாரனை ஒரு பக்கம் என்று ரமேஷிடம் விசாரனை செய்தனர்.

அவளுக்கு இரத்தம் கொடுத்தாச்சு. அதுக்கப்புறம் என்ன செய்ய என்ற கவலையோடு பிரண்ட்ஸும் அங்கேதான் இருந்தனர்.

விஜய் எதுவுமே பேசாது அமைதியாக உட்கார்ந்திருந்தான். அதுக்கு அப்புறம் எங்கேப்போனான் என்று யாருக்குமே தெரியாது.

தினேஷ்தான் அவனைத் தேடினான். அவன் வீட்டுக்குப்போயிட்டானோ என்று போன் பண்ணிப்பார்த்தான்.ரிங் போயிட்டேயிருந்துச்சு போனை யாரும் எடுக்கவில்லை. இவன் எங்கப்போனான் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அங்கயே ரூம் எடுத்து கீதாஞ்சலியையும் நர்மதாவையும் படுக்கவைத்துவிட்டு ரமேஷ் மட்டும் ஐ.சி.யூவின் முன்னாடி உட்கார்ந்திருந்தார்.

தினேஷ் இப்போது வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தவன் சார் என்றழைத்தான்.

“நான் நான் நேத்தே இதை உங்கக்கிட்ட சொல்லிருந்தா இவ்வளவு பிரச்சனையாகிருக்காதுன்னு நினைக்கிறேன்.நதி ரொம்ப தெளிவா இருந்தா அதுதான் அவளே தெளிஞ்சு வந்திடுவான்னு நினைச்சு யாருக்கிட்டயும் சொல்லாமல் விட்டுட்டேன்” என்று தொடங்கியவன் அப்படியே நேத்து நடந்ததை சொன்னான்.

அதைக்கேட்ட ரமேஷ் எந்த அதிர்ச்சியும் காட்டாது. அப்படியா என்று மட்டும் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்தார்.

“சார் இப்போ நம்ம நதியாவை இந்தளவுக்குக் கொண்டுவந்த அந்த அரவிந்தை உள்ளே தள்ளிடலாம் சார். அவன் மட்டும் என் கையில கிடைச்சா நானே கொன்றுவேன் சார்” என்று ஆவேசமாகப் பேசினான்.

அதைப் பார்த்தவர் “அவனைக் கொன்னுட்டு உன் வாழ்க்கையை அழிச்சிக்கப்போறியா?ஒருத்தி குத்துயுரா உள்ளக்கிடக்கா அவளுக்காகன்னு நீங்க ஏதாவது பண்ணிட்டு நீங்களும் வாழ்க்கையை தொலைக்கப் போறீங்களா. இப்போதைக்கு நீங்க நாலு பேரும் அமைதியா சும்மா இருக்கிறதே அவளுக்கு நல்லது. நீங்க ஏதாவது செய்து வைச்சு, என் பொண்ணோட பிரச்சனை நாலு பேருக்குத் தெரிஞ்சு, அவ பேரு கெட்டுப்போயிடும். இதை இத்தோடு விட்றுங்க அவா எழுந்து வந்தபிறது அவளுக்கு அடுத்தும் எதிர்காலம் இருக்கு. அது இப்போ நடந்த இந்த பிரச்சனையால பாதிக்கக்கூடாது. ஒரு அப்பாவை அவளுக்காக மட்டுமில்லை உங்களுக்காகவும் சேர்த்த்துதான் யோசிக்கிறேன். இதை இத்தோடு விட்றுங்க”என்று முடித்துவிட்டார்.

இதுக்கப்புறம் என்னத்தை பேசவென்று தினேஷ் அமைதியாகவே எழுந்துப்போய்விட்டான். 

அவருக்கிட்ட பேசினதை இப்போ வஸந்த் முகேஷ்கிட்ட சொன்னதும் கோபப்பட்டவர்கள் “இப்போதைக்கு அமைதியா இருப்போம் மச்சான். கொஞ்ச நாள் பொறுத்து பார்த்துக்கலாம்.நம்ம நதியாவையே இப்படி பண்ண வைச்சவனையும் தூக்கி ஹாஸ்பிட்டல்ல போடுவோம். எவன் செய்தான்னே தெரியக்கூடாது”என்று திட்டம் போட்டான்.

“அதுதான்டா செய்யணும். ஆனால் இப்போ அமைதியா இருப்போம். நமக்கு நம்ம நதியா முக்கியாம்”என்றுவிட்டு இப்போ முதலில் நதியா எழுந்துவரட்டும் என்று காத்திருந்தனர். டாக்டர்ஸ் எதுவுமே இதுவரைக்கும் சொல்லவில்லை.

ரமேஷ் டாக்டரிடம் கேட்டதுக்கு இரத்தம் ஏத்திருக்கோம், பொறுமையா இருங்க.இரத்த இழப்பு சரியானதும்தான் எதுன்னாலும் சொல்லமுடியும். கையில் ஸ்டிட்ச் போட்டும் இரத்தம் நிக்கிறமாதிரி இல்லை. எங்களால் முடிஞ்சளவுக்கு ட்ரை பண்ணிட்டிருக்கோம், இப்போதைக்கு எதையுமே சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

அடுத்தநாள் இரவு வரைக்குமே அவள் கண்முழிக்கவில்லை. ரமேஷ் மொத்தமாக உடைந்துப்போனார். அவரால் இதுக்குமேலயும் தாங்கமுடியாதென்று உள்ளேபோய் மகளின் கையைப்பிடித்துக்கொண்டு முகத்தில் வைத்து அழுதார்.

ஏனோ அவரது மொத்த உலகமும் நின்றுவிட்டதுபோன்றிருந்தது. கீதாஞ்சலி தண்ணிக்கூட குடிக்காமல் அரை மயக்கத்துலயே படுத்திருந்தாள்.நர்மதாவும் அவள் பக்கத்துலயே படுத்திருந்தாள்.

ஆஹா மெத்தம் ஒரு அழகாக துள்ளித்திரிந்த குட்டிமுயலை மனசை சாகடிச்சு ஹாஸ்பிட்டல் படுக்கவைச்சிட்டாங்க! அந்த முயல் குடும்பமும் இப்போது மொத்தமாக முடங்கிக்கிடக்கிறது.

இது யாரால் வந்த சாபமோ?

அடுத்த நாள் இரவுதான் டாக்டர்ஸ் வந்து செக் பண்ணிட்டு பயமில்லை, ஓரளவு ப்ளட்லாஸ் ரிகவராகிடுச்சு. அவங்க கண்ணுமுழிச்சா வார்டுக்கு மாத்திடலாம், வேற ஒன்னுமில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதன்பின்தான் ஓரளவு தெளிந்த ரமேஷ் கீதாஞ்சலியையும், நர்மதாவையும் தேத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்மட்டும் ஐ.சி.யூவின் வாசலில் உட்கார்ந்திருந்தார்.

அடுத்த நாள் இரவு மெதுவாக அவர் பக்கத்தில் வந்து விஜய் உட்கார்ந்தான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவர் “நெத்தில என்னடா காயம். ப்ளாஸ்டர் போட்டு ஒட்டிருக்க. நேத்து போனவன் இப்போ வர்ற. நீ வீட்டுக்கும் போகலைன்னு அப்பா சொன்னாரு. எங்கடா போன?”என்று நெற்றி சுருக்கி கேட்டார்.

அது வண்டியில இருந்து கீழ விழுந்துட்டேன். அடிபட்டிடுச்சு. அதுதான் அப்பாக்கிட்ட சொல்லாம பிரண்ட் வீட்டுல இருந்துட்டு இப்போ வர்றேன்”

“வண்டியில இருந்து கீழ விழுந்துட்டியா? வேறெங்கயும் அடிபட்டுச்சா டீ.டீ போட்டியா?”என்று அக்கறையாக விசாரிச்சார்.

“வேறெங்கெயும் அடியில்லை. நெத்தியில மட்டும்தான் அடி. நதி எப்படி இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க?”

“ப்ளட் லீக் குறைஞ்சிடுச்சு. இனி அவா கண்ணுமுழிச்சா மட்டும்போதும்னு சொன்னாங்க. ஆனால் எப்போ கண்ணு முழிப்பான்னு இருக்கு”என்று வேதனையோடு சொன்னார்.

“அதெல்லாம் நம்மளை திட்டுறதுக்காவது எழுந்து வந்திடுவா. அப்படியெல்லாம் நம்மளை விட்டுப்போகமாட்டா அந்த இராட்சஷி”என்று அவளைத் திட்டியவன் அவரைக் கூர்மையாகப் பார்த்தான்.

எப்பவும் அவர்தான் அப்படிப் பார்ப்பார். ஆனால் இன்னைக்கு அவன் அவரைக் கூர்மையாகப் பார்க்கவும் கொஞ்சம் திணறிவிட்டார்.

“என்ன விஜய்?என்கிட்ட எதுவும் பேசணுமா?”

“நதியா இப்படி பண்ணினது வேணும்னா உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்,ஆனால் ஏன் செய்தான்னு உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லாதிங்க. அவா கண்டிப்பா அவளோட லவ் மேட்டரை உங்ககிட்ட சொல்லிருப்பா. உங்களுக்கு அவளை மகளா மட்டும்தான் தெரியும். எனக்கு அவளைத் தோழியா தெரியும். அவளோட அப் அண்ட் டவுண்ஸ்னு எல்லாத்தையும் பேசியிருக்கோம். இந்த தடவை அவாமேல உள்ளக் கோபத்துல நான் பேசாமல் இருந்துட்டேன். அப்படியிருந்தும் நேத்து அவள் ஒருமாதிரியாதான் இருந்தாள். இப்போ கேட்டா வேணும்னே சொல்லமாட்டாள்னுதான் விட்டுட்டேன். எனக்கு இப்போ எல்லாமே தெரியும்”என்று சொல்லிவிட்டு அவரது முகத்தைபு பார்க்காமல் எழுந்து ஐ.சி.யூவின் வாசலில் நின்று நதியாவைப் பார்த்தான்.

இப்போது திரும்பி ரமேஷ்குமாரை பார்த்தவன் “ என்னோடா எல்லா சூழ்நிலையிலும் என்னைத் தாங்கி நின்னவ இப்போ இப்படி படுத்திருக்கா. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உங்களையும் சும்மாவிடமாட்டேன் அவனையும் சும்மாவிடமாட்டேன். உங்க இரண்டுபேரோட உயிர் என் கையிலதான்”என்று அடிக்குரலில் சொன்னான்.

அதைக்கேட்ட ரமேஷ் மிரண்டுவிட்டார். விஜய் அது வந்து என்று ஏதே சொல்லவந்தார்.

“தனது கையை நீட்டி வேண்டாம் சார் எதுவும் சொல்லவேண்டாம். நான் எதையும் கேட்கவிரும்பலை. நீங்க இரண்டுநாளா நிறைய யோசிச்சு டயர்டா இருக்கீங்க தூங்கவும் இல்லை. தினேஷ் வெளிய கார்ல வெயிட் பாண்றான். இராத்திரி வீட்டுக்குப்போய் தூங்கிட்டு வாங்க. இங்க நான் இருக்கேன்.பணம் ஏதும் கட்டணும் மருந்து வாங்கணும்னா கார்ட் தந்துட்டுப்போங்க”

“இல்லை வேண்டாம். நான் நான் என் பொண்ணுப் பக்கத்துலயே இருக்கணும். நான் போகமாட்டேன்”

“இப்படியே இருந்தீங்கன்னா அப்புறம் உங்க பொண்ணு பக்கத்துலதான் பெட்டுப் போட்டு படுத்திருக்கணும். அங்க இரண்டு ஜீவன் உங்களை நம்பியிருக்கே. போங்க போய் ரெஸ்ட் எடுங்க. நான் ஏற்கனவே ட்க்டருக்கிட்ட பேசிட்டு வந்துட்டேன். நான் பார்த்துக்கிறேன்”என்று அவரை இழுத்துக்கொண்டு காரில் ஏற்றினான்.

“தினேஷ் நீயும் வேணும்னா அங்க வெளியே படுத்துக்கிறியா?”

“இல்லை சாரை வீட்டுல விட்டுட்டு நான் இங்கயே வந்திடுறேன்.உனக்கும் நதியாவுக்கும் துணைக்கு வர்றேன்”

‘சார் நாங்க இருக்கோம் பயப்படாதிங்க”என்று அவருக்குத் தைரியம் சொல்லி அனுப்பிவைத்தான்.

தினேஷிடம் கண்ணைக் காண்பித்தான். அவனும் தலையை ஆட்டினான்.

இப்போது திரும்பி வந்தவன் ஐ.சியூவின் கதவைத் திறந்து உள்ளப்போனான். 

அவள் பக்கத்தில் கொஞ்சநேரம் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அவனால் தனது கண்ணீரை அடக்கமுடியாது திணறிப்போனான்.

அப்போது நதியாவின் கண்கள் மெதுவாக அசையவும் நர்ஸினைக் கூப்பிட்டான்.

அவள் மெல்ல கண்ணைத் திறந்துப் பார்த்தாள். எல்லாமே கண்களுக்கு முன்பாக மங்கலாகத் தெரியவும் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

நர்ஸு உடனே டாக்டர்ஸைக் கூட்டிட்டு வர போனாள். அதற்கும் நதியா மீண்டும் கண்களைத் திறந்தவளுக்கு எல்லாமே இரண்டு இரண்டாக நிற்பதுபோன்றிருந்தது.

“ஐய்யோ எல்லாமே இரண்டு இரண்டா தெரியுதே. அப்பாஆஆஆ கீது, நர்மதா” என்று மெதுவாக சத்தமிடமுடியாது வாயிற்குள்ளாகவே முணுங்கினாள்.

“நதி நதி நாங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம்.உனக்கு ஓன்னுமில்ல ஒன்னுமில்ல. அப்படியே படுத்துக்க. ப்ளீஸ் பீளீஸ்” என்று அவளது தோளைத்தட்டி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.

“அப்போ என் கையை பிடிச்சிருக்கிறது யாரு விஜய். என் கையை விடச்சொல்லு விஜய்” என்று கண்ணைத் திறக்கப்பயந்து சொன்னாள்.

“அது யாருமில்லை நதி. உனக்கு ட்ரிப்ஸ் எல்லாம் போட்டிருக்கு. இந்தக் கையில கட்டுப்போட்டிருக்கு அமைதியா இரு அமைதியா இரு” என்று அவளது கையைத் தடவிக்கொடுத்தான்.

அவளுக்கு இன்னும் உருவங்கள் எல்லாம் மங்கலாகத்தான் தெரிந்தது. அப்படியே கண்ணை இறுக மூடினவள் அமைதியாகிவிட்டாள்.

நர்ஸ் டாக்டரைக் கூட்டிட்டு வந்ததும் அவர் செக் பண்ணிட்டு “எல்லாமே நார்மலாகிட்டு. இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை. இவங்கப்பா எங்கே?”என்று கேட்டார்.

“அவரை இப்போதான் சார் வீட்டுக்கு அனுப்பி வைச்சோம் பாவம்சார் இரண்டுநாளா ஒரு கண்ணுக்கு தூங்கவேயில்லை.அதுதான் நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்லி அனுப்பிவைச்சோம்”

“நீங்க யாரு?”

“மாமா பசங்க சார்”

“ஓகே ஓகே”என்று போய்விட்டார்.

இப்போதான் விஜயிக்கு மனசுக்குள் கொஞ்சம் தைரியம் வந்தது. அவனுக்குமே நதியாவுக்கு எதுவும் ஆகிடுமோ என்ற பயம் இருந்தது. அதை வெளியே காட்டிக்கலைன்னாலும் உள்ளுக்குள் உதறிட்டுத்தான் இருந்தது. இப்போது அந்த உதறல் எல்லாம் நின்று அவள் மீண்டு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை வந்திருந்தது.

அவள் மீண்டு வருவதுக்கூட இப்போ பிரச்சனையில்லை. இனி அவளை எப்படி தேற்மிக்கொண்டுவருவது என்பதுதான் பிரச்சனை.

அவங்களோட பழைய நதியாவாக மீண்டு வந்தாள் நல்லது! இல்லைன்னா அவ்வளவுதான்!