மூப்பு அடையா யட்சகா 25
Yecha25
25 மூப்பு அடையா யட்சகா!!
தன் கையில் இருந்த விஷபாட்டிலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் கண்களை மூடி அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.. கனவுகளில் மட்டுமல்ல அவள் நினைவுகளிலும், நிஜங்களிலும் அவள் இறந்த காலங்களிலும், நிகழ்காலங்களிலும் என்று அத்தனை பிம்பமும் அவனாக இருந்தான்..
நரைத்த அழகனை மூப்பு அடையாத யட்சகனை, முதுமையே ஆகாத காதலுக்கு சொந்தக்காரனை பைத்தியக்காரி போல் காதலிக்கும் அவளுக்கு உலகம் வைக்கும் பெயர் விபச்சாரி!!
இருந்து விட்டு போகட்டுமே , கர்வமாக அந்த அவப்பெயரும் வாங்க சம்மதமே!!
தாலி கட்டி கெளரவ படுத்திய அத்தனை காதலும் புனிதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறதா?
தாலி கட்டாத இவள் காதல் அவளை பொறுத்த வரை புனிதமே!!
கண்ணகியின் கற்பு எப்படி புனிதமானதோ?
மாதவியின் கற்பும் அப்படி புனிதமானதே!!
எங்கும் எதிலும் அவன் இருந்தான், சிரித்தான் முறைத்தான் அவளை இடைக் கிள்ளி சிரிக்க வைத்தான், சில்மிஷம் செய்து சிவக்க வைத்தான், கோபத்தில் முறைக்க வைத்தான், கொஞ்சி உதட்டைப் பிதுக்க வைத்தான். உலகத்தில் உள்ள அத்தனை ஆணிலும் இந்த நரை அழகன் மட்டும் தானே அவளுக்கு தனியாக தெரிகிறான்.. அழகனாக தெரிகிறான் ,
காதலா, கொண்டாட அவன் வேண்டும்
காமமா, கொண்டாட அவன் வேண்டும்
சோகமா, கட்டிக்கொள்ள அவன் வேண்டும்.. சந்தோஷமா, உற்சாகமாய் அணைத்துக் கொள்ள அவன் வேண்டும்
எல்லாவற்றிற்கும் அந்த அரைக்கிழவன் வேண்டுமே!!
உலகம் ஒத்து கொள்ளாதா இக்காதலை? இந்த உலகமே வேண்டாம் .. அவனோடு வாழ்ந்த வாழ்க்கை போதும் உலகத்தை ஜெயித்த உணர்வு தந்தானே .. நான் இல்லாது அவன் என்ற ஒற்றை கேள்வி சுருக்கென்று தைக்க ... அவனும் பின்னே வருவான் என்ற நம்பிக்கையோடு கண்ணீரை துடைத்த தேனிசை விஷத்தை வாயில் ஊற்ற போக
இசை இசை
டொம் டொம் இசை இசை கதவை திற
யட்சன் சாருக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு" தோழி கதவை பலமாக தட்டினாள்...
"இசை கேக்குதா உன்ன பாக்குறதுக்கு தான் சார் வந்திருப்பார் போல இருக்கு ... நம்ம தெரு முக்குல, பெரிய லாரி அவர் வண்டிய அடிச்சு தூக்கிருச்சு, ஸ்பார்ட் அவுட்டுன்னு சொல்றாங்க வா இசை என்று தோழி விஷயத்தை சொல்ல விஷப்பாட்டில் பறந்தது...
ஆஆஆஆஆஆ என்று அலறியவள் , தான் சாக போவதை உணர்ந்தானா, அங்கும் உனக்கு முன் நான் இருப்பேனேடி என்று போய்விட்டானா?
அய்யா ஓஓஓஓஓஓஓ கதறியவள் கதவு நோக்கி ஓட தாயும் தகப்பனும் வழியை மறைத்து நிற்க....
அவர்களை தாண்டி கதவை திறந்து கொண்டு தேனிசை சம்பவம் நடந்த இடத்துட்டு பட ...
ரத்தத்தில் சிதறி கிடந்த யட்சனை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டிருந்தார்கள் உறைந்து போய் நின்றாள் மழை அவளுக்காக கண்ணீரை வடித்தது இடியும் மின்னலும் என்று வானம் கிழித்து கொண்டு ஊற்றியது ...
கி.....ழ......வாஆஆஆஆ காற்று தான் வந்தது, கால்கள் தள்ளாடியது அவன் நரைத்த அழகை ரசித்த அவளுக்கு அந்த நரைத்த முடி எங்கும் சிகப்பு சாயம் யார் பூசியது கோவம் கொண்டாள்..... அவன் தேக்கு மர தேகத்தில் சுகித்தே வாழ்ந்தவள் அதில் உண்டான சல்லடை கண்டு கடவுளிடம் சண்டைக்கு சீறினாள் ஆம்புலன்ஸ் கதவு மூடப்பட்டு வண்டி நகர ஆரம்பிக்க
நோ நோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓ கொட்டும் மழையில் அவன் ரத்தம் அவள் காலடியில் காதல் பரிசாக கிடக்க.. ஆம்புலன்ஸ் அவளை தாண்டி போக
ஆஆஆஆஆ வண்டியின் பின்னே ஓடினாள் காதல் பாரத்தை தாங்க முடியாத யட்சனின் காதலி !!
மூச்சு திணறி மருத்துவமனை வாசலில் வந்து தேனிசை நின்றாள்...
சண்முகம் ஐசியுவில் சார் இருக்கார் என்று அழுத அவளுக்கு ஆறுதலாக ஒற்றை வார்த்தை சொல்ல... ஐசியூ நோக்கி அவள் பாதம் ஓட ... குறுக்கே வந்து மறைத்து கொண்டு நின்றான் ஜீவா
ஜீவா அவர பார்க்கணும் வழியை விடு யட்சன் அருகே போக பேயாக நின்றாள்..
"எங்க வந்த ஏன் வந்த .... ஐசியூ அருகே போகாதபடி கையை நீட்டி தடுத்தபடி ஜீவா நின்றான்...
"ஜீவா உன் கால்ல வேணாம் விடுறேன்டா அவர பாக்கணும் தயவு செஞ்சு அனுமதி கொடு ப்ளீஸ்" என்று ஜீவாவின் காலை தேனிசை கட்டிக் கொள்ள போக சட்டென பின்னால் நகர்ந்த ஜீவா...
"ஏன் இசை இப்படி பண்ணின... உன்னை நம்பி இந்த வீட்டுக்குள்ள விட்டதுக்கு , இப்படி ஒரு அசிங்கத்தை உன்னால எப்படி பண்ண முடிஞ்சது ? என்று கண்ணீரை துடைத்துக் கொண்டே ஜீவா இசையை பார்த்து கேட்க ... உதடு துடிக்க அவனை அண்ணாந்து பாரத்த தேனிசை
"நான் பேசுறத புரிஞ்சுக்குற அளவுக்கு இங்க யாருக்கும் என்ன பத்தி தெரியாது... என் மனசு என்ன சொல்லுதுன்னு புரிஞ்சுக்கிற ஒரே ஆளு உன் அப்பா தான்... தயவு செய்து அவரைப் பாக்க விடு ஜீவா.. "
"மாட்டேன் என்ன மீறி அப்பாவை நீ பார்க்க முடியாது உன்னால தான் இன்னைக்கு அவர் இந்த நிலைமையில இருக்கார்... உன்ன உள்ள விடமாட்டேன்.... போயிடு இசை "
"ஜீவா நான் தப்பு பண்ணலடா,அவர் இப்படி கிடைக்கிறதுக்கு காரணம் நான் இல்ல.. சொன்னா புரிஞ்சுக்கோ, நீங்க கொடுக்குற மாத்திரை மருந்து விலை உயர்ந்த ஹாஸ்பிட்டல் சிகிச்சை எதுவும் அவருக்கு உயரை திருப்பிக் கொடுக்காது, அவருக்கு இந்த சுகர் பேபி வேணும்... என்னோட மூச்சு காத்து வேணும் நான் வேணும்., அவர் கைய புடிச்சுகிட்டு நான் இருக்கேன் எழும்பி வா கிழவான்னு ஒரு வார்த்தை சொல்றதுக்கு அவர் பக்கத்துல நான் இருக்கணும் ஜீவா ப்ளீஸ் என்னை விடு ...
"உன்ன நம்பி ஏமாந்தது போதும் இனியும் ஏமாறுவேன்னு, எப்படி நினைச்ச?
ஜீவா நான் நான்
நீ நல்லவன்னு சொல்ல போறியா, பணத்துக்கு ஆசைப் படாதவன்னு சொல்ல போறியா? பணத்துக்காக தப்பே செய்யாதவன்னு சொல்ல போறியா? அப்பாவுக்கும் உனக்கும் தொடர்பு இல்லைன்னு சொல்லப் போறியா ? இல்ல பணத்துக்காக என் காதலியா நடிக்க இந்த வீட்டுக்குள்ள வந்தது நான் இல்லைன்னு சொல்ல போறியா? சொல்லு இசை, காசுக்காக நடிக்க வந்த நீ , காசுக்காக என் அப்பாவை கொல்ல ட்ரை பண்ணல ...
நானா?? திக்குமுக்காட போனாள் பழி மேல் பழி விழுந்ததில்...
எஸ் யூ ஆர் ஏ கல்ப்ரிட்!!
"நான் கொடுக்கிறேன்னு சொன்ன பணத்துக்காக என் காதலியா நடிக்கிறதுக்கு சம்மதம் சொல்லி உள்ள வந்தவதானே நீ.... கல்யாணம் முடிஞ்சாதான் கார் ரேஸ் நடத்த பணம் தருவேன்னு அப்பா சொன்னதுனால காதலியா நடிக்கிறதுக்கு பொண்ணு தேடும் போது , அந்தப் பணத்துக்காக தானே நீ இந்த நாடகத்தில் நடிக்க வந்த ....
"ஆனா ஜீவா நான் சொல்றதை கேளு"
தவறு எதற்கு செய்தாலும் ஆனால் தவறு தவறுதான் அன்று அவள் ஆடும் போது தூங்கிக் கொண்டிருந்த தவறுகள் , இன்று அவளை நின்று கொன்றது....
தன் மகனின் மீது நம்பிக்கையில்லாதவன் தன் மகன் போக்கின் மீது பிடித்தம் இல்லாத யட்சன் ஜீவா கார் ரேஸ் நடத்த பல கோடிகளை கேட்க உனக்குன்னு ஒருத்தி வந்து .. மாமா அவர் என்னையும் இந்த குடும்பத்தில் நல்லா பாத்துக்குவார் பணம் கொடுங்கன்னு சொன்னா மட்டும்தான் பணம் தருவேன்... உனக்குன்னு ஒருத்தி வந்தா தான் இனிமே நீ சரி வருவ போல இருக்கு என்று தகப்பன் குண்டக்க மண்டக்க அவனை மாட்டி விட
"ப்பா இதுக்காக கல்யாணம் பண்ணவா சொல்றீங்க என்று தலையை அவன் சொரிய
"கல்யாணம்தான் பண்ணனும்னு அவசியம் இல்ல காதலியை கூட்டிட்டு வந்து நின்னாலும் சரிதான் ஆனா உன்னை நம்ப மாட்டேன், உன்ன மாதிரியே கூறு கெட்டவளா வந்தான்னா ரெண்டு பேரையும் அடிச்சு விரட்டிடுவேன் ... உன்னை வச்சி மேய்க்க கூடிய ஒருத்தியா இருக்கணும், அப்படி ஒருத்தி வந்தா, என் மனசு அதை ஏத்துக்கிட்டா.. காசு இல்லன்னா இந்தா பொம்மை கார் , இத வச்சு ஓட்டு என்ற தகப்பன் பேச்சு பாதி புரிந்தது, பாதி புரியவில்லை.... நண்பர்களிடம் போய் தகப்பன் சொன்னதை சொல்ல போலி காதலியை இறக்கி தகப்பனிடம் நாடகம் நடத்தி பணத்தை வாங்கி விடலாம் .... கார் ரேஸில் இரட்டிப்பு லாபம் எடுத்த பிறகு தகப்பனிடம் உண்மையை சொல்லிக் கொள்ளலாம் என்று அவர்கள் சொன்ன ஐடியாவின் பெயரில் போலி காதலியை தேட தேனிசை கிடைத்தாள்...
"ஒரு மாசத்துக்கு லவ்வரா நடிக்கிறதுக்கு லட்ச கணக்குல தர்றேன்னு ஒரு இளிச்சவாயன் லவ்வர் ரெடி பண்ணி தர சொல்றாண்டி என்று கன்னத்தில் கை வைத்து யோசனையாக உட்கார்ந்திருந்த தேனிசை அருகில் வந்து தோழி அமர
"நீ போக வேண்டியது தானே
"அட போடி நான் வேற ஒருத்தன் கூட கமிட் ஆயிட்டு மாட்டிகிட்டு முழிக்கிறேன்.... நீ ஃப்ரீயா இருந்தா போயேன்,.,
"ப்ச் இன்ட்ரஸ்ட் இல்ல" என்று தலையை உதறிய தேனிசை சிறிது நேரம் யோசித்து விட்டு .
"ஆளு எப்படி?
"அவன் ஒரு இளிச்சவாய்டி, சாக்லேட் கொடுத்தா பிள்ளைங்க பூச்சாண்டி பின்னாடி போற மாதிரி... ஒரு குவாட்டர் பாட்டில் கொடுத்தா, பிரெண்ட்ஸ் பின்னாடி போய்விடுவான்.. இல்ல கார் படத்தை காட்டினாலே போதும் பல்லை காட்டிகிட்டு அங்கனையே நிப்பான்... கொஞ்சம் அரை லூசு ... ஆனா பொண்ணுங்க விஷயத்துல நல்ல பையன் அவங்க அப்பா ஜென்டில்மேன் ,எனக்கு நல்லா தெரியும் ... அதனால தான் உன் கிட்ட கேட்கிறேன் சேஃப்... பேசி பாரு புடிச்சா போ , இல்லன்னா விட்ரு நேத்து ஒரு லட்ச ரூபா கேட்ட .. அதனால உன்கிட்ட இந்த தகவலை சொன்னேன்.,, அப்புறம் உன் இஷ்டம் என்று தோழி சொல்லிவிட... கையை பிசைந்த தேனிசை
இது ஒன்றும் அவள் செய்த பெரும் பாவம் போல தெரியவில்லை
"தேங்க்ஸ் இசை உடனே காசு தர முடியாது , அப்பா கிட்ட அப்படி இப்படி உருட்டி பிரட்டிதான் வாங்கி தருவேன் ...
"அது ஓகே எங்க அம்மா அப்பா முன்னாடி இதையே மெயின்டைன் பண்ணிக்க வேற வழியில்லை புரியுதா??? "
அப்பாவை ஏமாத்துற புள்ள உலகத்தையே ஏமாத்துற நான் நல்ல கூட்டணி போட்டோம் போ என்று இசை சலித்தாலும் பணத்துக்காக தான் இந்த வீட்டுக்குள் ஜீவாவோடு வந்தது ...
யட்சன் தன் மகன் மீது வைத்திருந்த மீபாசம் அவளுக்கு தெரியுமே... தகப்பனுக்கும் மகனுக்கும் பிணக்கு உண்டாக்க அவளுக்கு மனம் இல்லாது ஜீவாவை காட்டியே கொடுக்கவில்லை இப்போது அவளே மோசடிக்காரி ஆகி நின்றாள்...
ஜீவா பணத்துக்காக வந்தது உண்மைதான் ஆனா அவருக்கும் எனக்கும்"
"பணத்துக்காக நீ என் அப்பா கூட தப்பா இருந்திருப்ப, அதே பணத்துக்காக எங்க அப்பாவ கொல்றதுக்கும் முயற்சி பண்ணி இருக்க.. எங்க அப்பாவ கொன்னுட்டு இந்த சொத்து பணம் எல்லாத்தையும் சுருட்ட பார்த்து இருக்க ... நீ ஒரு கொலைகாரி, நீ ஒரு பணப்பேய் பணத்துக்காக என்னவும் செய்யக்கூடிய ஒரு சூனியக்காரி
போ எங்களை விட்டு போஓஓஓஓஓஓ " என்று ஜீவா கத்த... அவன் தள்ளி விட்டத்தில் போய் பொத்தென்று தரையில் விழுந்தாள் ...
எவ்வளவோ ட்ரை பண்ணிட்டோம் ஜீவா சாரோட பல்ஸ் ரேட் குறைஞ்சிட்டே போகுது .. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பிடுங்க ..
பறந்த தலையோடு நலுங்கி கிடந்த சேலையோடு தன்னை புரிந்து கொள்ள யாருமே இல்லையே என்று நிற்கதியாக அப்படியே பூட்டப்பட்டிருந்த கண்ணாடி அறையை தேனிசை வெறிக்க வெறிக்க பார்த்தாள்..
நீரில்லா கொடியும்
காற்றில்லா கோடைகாலமும்
நட்சத்திரம் இல்லாத வானும்
மீன் இல்லா கடலும்
மலர் இல்லாத சோலையும் எப்படி அழகு தராதோ
அப்படியே நரை அழகன் இல்லாத இந்த அழகி வாழ்க்கையிலும் அவன் இல்லாது அழகியல் இல்லை !!