மூப்பு அடையா யட்சகா 21
Yecha21
21 மூப்பு அடையா யட்சகா !!
டேட் இது ஓகேவா? முதல் முறை க்ளின்சேவ் அடித்து அபிசியல் லுக்கில் வந்து நின்ற மகனை யட்சன் ரசித்து பார்க்க
கிழவனே கண்ணு போட்டிருவான் போல" என்று கண்மை எடுத்து ஜீவா காது பக்கம் தடவி விட்ட தேனிசை ...
"அழகா இருக்க ஜீவா" என்று நெட்டி முறிக்க
"ம்க்கும் யட்சன் கனைத்திட
"பொறாமை பிடிச்ச கிழவன்.. என்று முனங்கி விட்டு ....
மதியம் சாப்பிட வந்திடுவியா ஜீவா ...
அப்பாட்ட கேட்கணும் இசை ... "
"வேணும்னா சாப்பாடு எடுத்துட்டு மதியம் ஆபீஸ் வரவா ஜீவா?
"ஆமா பால்வாடி புள்ளை நீ , பால் பாட்டில் தூக்கிட்டு ஒரு ஆள் பின்யாடியே வர வேண்டியதான், கெளம்புடா நேரம் ஆகுது என்று யட்சன் எழும்பிட... ஜீவா நெற்றியில் குங்குமத்தை தீட்டி கொண்டிருந்த தேனிசையை பார்த்த யட்சன் பார்த்தபடி நின்றான் ...
"ஆமா இசை நீ வீட்டுல என்ன பண்ண போற பேசாம நீயும் எங்ககூட ஆபீஸ் வாயேன்...
ஐடியா நல்லாதான் இருக்கு , பட் உன் டேடிக்கு ஓகேவான்னு கேளேன் வீட்டுல போர்தான் அடிக்கியது நரைச்சமுடிக்காரன் நிழலில் சுத்துனா அவன விடும் மூச்சில் கூட மல்லிகை மலர் வாசம் வருவது போல பிரம்மை
"அது என்ன மியூசியமா சுத்தி பார்க்க, இன்னொரு நாள் போகலாம் என்று யட்சன் தடை போட்டான், இவளை கூட்டிட்டு போய் அவன் வேலை தடை படவா ?
ப்ளீஸ் டேடி அவளும் வரட்டும் ஆபிஸ் எனக்கு புது இடம் ஒரு மாதிரி ஸ்வரிங் ஆகுது, இசை இருந்தா பெட்டரா பீல் ஆகும் என்று ஜீவா கெஞ்சுதலாக யட்சனை பார்க்க
"ப்ச் வந்து ஏற சொல்லு...
"அக்கா சாப்பாடு ரெடி ஆனதும் ட்ரைவர் அண்ணாட்ட ஆபிசுக்கு கொடுத்து அனுப்ப சொல்லிடுங்க, சாருக்கு கட்டி தயிர் தனி பாக்ஸ்ல வச்சிருங்க , ஜீவாவுக்கு ஜூஸ் ஜில்லுன்னு இருக்கணும் , சாருக்கு குளிர் இல்லாம சுகர் கம்மியா பார்த்து அனுப்பி வைங்க "என்று கிச்சன் பார்த்து கத்தி கொண்டே வந்தவள் நச்சென யட்சன் நெஞ்சில் இடித்து நின்றவளை அவன் முறைத்தபடி...
"கண்ணு தெரியலையா
"ஹிஹி பின்ன பார்த்துட்டு வந்தேனா கவனிக்கல...
"இதெல்லாம் பண்றதால என் கோபம் குறைஞ்சிடுச்சுன்னு தப்பு கணக்கு போடாத," செருப்பு போட்டு கொண்டு இருந்தவளிடம் சத்தம் இல்லாமல் யட்சன் கூற, அவனை உதட்டை சுருக்கி பார்த்த தேனிசை
"இதெல்லாம் நான் பண்ணினதனால நானும் இத்தோடு விட்டுடுவேன்னு நினைக்காதீங்க.. 10 கோடிக்கு எத்தனை சைபர்னு தெரியும்ல கிழவா காசை ரெடி பண்ணுங்க புரியுதா ?? என்று புருவத்தை உயர்த்தி கேட்க ...
"பத்து பைசா கூட என்கிட்ட வாங்கிக்க மாட்டடி,. அவள் கேள்வியாக பார்க்க
"புரியல அன்னைக்கு வேணும்னா பொம்பள சோக்குல, உன் மார்பில் மயங்கி கிடந்திருப்பேன் ஆனா இப்போ ரொம்ப தெளிவா இருக்கேன் உன்கிட்ட மட்டும் தான் பென் டிரைவ் இருக்கா, நீ மட்டும் தான் வீடியோ எடுப்பியா என்ன , நேத்து என் ரூம்ல வந்து என்ன தாங்கி தடவி படுக்கையில் படுக்க வச்சி குழந்தை போல தாலாட்டுனியே எல்லாம் நாங்களும் எடுத்து வச்சிருக்கோம்ல வீடியோவா? அதுவும் ஹச்டி பிரிண்டில, ரொம்ப தெளிவா போக்கஸ் முழுக்க குமுதாதான் அண்ணாச்சின்னு , உன்ன நோக்கி தான் அத்தனையும் ஷூம் போட்டு வச்சிருந்தேன் என்றதும் தேனிசை எச்சில் விழுங்க
ஒழுங்கா உங்கிட்ட இருக்கிற என் வீடியோவை தந்துட்டு உன் வீடியோவை வாங்கிக்க "
"இல்லைன்னா...
"நரைச்ச எனக்கு இனி என்ன வாழ்க்கை சொல்லு பணக்காரன் இப்படித்தான் இருப்பான்னு முடிச்சிடுவாங்க... ஆனா உன் நிலமை ? நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம் , ஆனா நீ?? ... என்று ஒற்றை புருவத்தை கேலியாக தூக்கி அவளை மிரட்ட...அவன் முகத்தை உத்து பார்த்த தேனிசை தோளை உலுக்கி கொண்டே
"பயந்துட்டேன் கிழவா.... பத்து கோடி தந்தா பேன்ட்ரைவ் இல்லை, சுடசுட ரெண்டையும் ப்ரெண்ட் போட்டு விடுங்க ... எது அதிக சேர், ட்ரெண்ட் ஆகுதுன்னு பார்ப்போம் "என்று கிசுகிசுப்பாக சொல்லி விட்டு அவன் அடிக்க கையை நீட்டும் முன் கார் பின் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள்...
இவ்வளவு பணம் இவளுக்கு எதுக்கு ? எப்போதும் உண்டாகும் கேள்வி இன்றும் உண்டானது ... ஆனால் அவன் மேனாமினுக்கி பதில் சொல்ல மாட்டாளே...
"இளையராஜா ஹிட்ஸ் போடுங்க அங்கிள்" என்றவளை காரை ஓட்டி கொண்டிருந்த அவன் சென்டர் மிரர் பார்த்து முறைக்க
"நரைச்சமுடி இருந்தா அங்கிள் தானே அதான் சொன்னேன் ... ஜீவா உங்க டேடியை அங்கிள்னு தான கூப்பிடணும்....
"உன் இஷ்டம்... அவன் முதல் நாள் வேலைக்கு போகும் பயத்தில் நகத்தை கடித்து துப்பி கொண்டிருக்க.....
"அங்கிள் அங்கிள் ராஜாஸ் பாட்டு போடுங்க வேண்டாம் வேண்டாம் நீங்க காரை ஓட்டுங்க நானே போட்டுக்கிறேன்" தேனிசை பின்னிருந்து உடலை முன்னே கொண்டு வந்து ரெண்டு சீட்டுக்கும் இடையே வேண்டுமென காரை ஓட்டும் யட்சன் கியர் போடும் கையில் ஆனந்த தாண்டவம் ஆடிய அழகுபுரியை தேய்த்து முன்னே வந்தவள், இது வேண்டாம் இது நோ சோகப்பாட்டு, இது கிழடுக பாட்டு
"ப்ச் எதையாவது வச்சிட்டு போடி, வண்டி ஓட்ட விடாம "என்று அவன் எரிச்சலில் சத்தமின்றி கூற .. யட்சன் காது மடல் சுவந்து போய் இருந்தான்.. அவன் கியர் போடும் இடத்தில் இவள் பசு மாடு போல நின்று கொண்டிருக்க , கறவை செய்து பழகிய அவன் கைகள் கியரை அழுத்தி பிடித்தது..
ம்ம் இது பெர்பெக்ட்டா இருக்கும் இல்ல அங்கிள்.. பொசிசன் சரியா இருக்கா உதட்டை கடித்து முனங்கினாள் தன் முகத்தை திருப்பி அவன் உதட்டுக்கு நேரே தன் உதடு போக தேனிசை திரும்ப யட்சன் சட்டென முகத்தை திருப்பி கொள்ள...
ஜீவா மட்டும் இல்லாம இருந்திருந்தான் கிழவன் முடியை பிச்சி எடுத்து நாக்கை கொக்கி போட்டு இழுத்து கடிச்சிருப்பேன் தெரியுமா ? தாறுமாறான போதை குரலில் தேனிசை சொல்லிவிட்டு போய் அமர...
காலையில பிடிச்ச பாட்டு கேட்டா அந்த நாளே உற்சாகமா இருக்குமேன்னு பார்த்தேன் சாரி அங்கிள் தொல்லை பண்றேனா? அவன் முகம் போன போக்கை கண்டு தேனிசைக்கு தேன் குடித்த மந்தி நிலை...
சக்கரைக்கட்டி சக்கரைகட்டி சந்தன பெட்டி என்று தூக்கலாக காதல் பாடல் ஒலிக்க சீட்டில் அமர்ந்திருந்த அவள் பார்வை முழுக்க சென்டர் மிரரில் தெரிந்த யட்சன் முகத்தில் ரோட்டை பார்த்து ஒட்டிக்கொண்டு இருந்தவன் கைகள் ஸ்டீயரிங் மீது மெலிதாக தாளம் போட, கைசெயின் உரசும் சத்தம் புதிதாக ஒரு இசை அமைக்க.. சட்டென ஏதோ தோன்றி அவன் மிரரை பார்க்க , தன் கழுத்தில் கிடந்த செயின் கடித்தபடியே தேனிசை அவனைத்தான் லட்சையின்றி பார்த்து கொண்டிருந்தாள்... யட்சன் மகனை வேகமாக திரும்பி பார்த்தான் ஜீவா அமைதியாக சீட்டில் அமர்ந்திருந்து வெளியே பார்த்து கொண்டிருந்தான்....
எதுக்குடி இப்ப ஆம்பள காணாதவ போல பார்க்கிற அவன் உதடுதான் அசைந்தது, தாடை இறுகி அவன் உதட்டு அசைவதை இன்னும் அதே பார்வை பார்த்தவள்
சக்கரைக்கட்டி என்று கடிப்பது போல செய்ய
என்ன சொன்ன இசை? என்று ஜீவா திரும்பி பார்க்க ...
சர்க்கரைக்கட்டி பாட்டு நல்லா இருக்குல்ல அதை சொன்னேன் "
"ஓஓஓ .... அப்படி ஒன்னும் நல்லா இருந்தது போல இல்லையே
"உனக்கு ரசனை இல்லை ஜீவா, அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும் ... ம்ம் ஏக்க பெருமூச்சு ஒன்றை அவள் வெளியிட .. கண்ணாடியில் அவளை பார்த்த யட்சனை பார்த்தபடி ஏற்றம் ஏறி இறங்க வேண்டுமென அவள் மூச்சை இழுத்து விட சிகப்பு சேலையில் இருந்த அவளின் அழகு நச்சென ஏறி இறங்கி நரைத்தவன் காட்சிக்கு காட்சி பொருளாகியது...
"அந்த பாட்டு வைங்க அங்கிள் இது அங்கிள் என்று வேண்டுமென ஆயிரம் அங்கிள் போட்டு நரைத்தவன் நரை எல்லாம் கோவத்தில் கொதிக்க ஆபீஸ் வந்து சேர்ந்தனர்....
மிடுக்கான நடையோடு குகையை விட்டு வெளியேறும் சிங்கம் போல யட்சன் முன்னே கம்பீரமாக நடக்க , அவன் பின்னே தேனிசையும், ஜீவாவும் போக
ஜீவா
டேட்
கால் மீ சார் என்ற யட்சனை எச்சில் விழுங்கி பார்த்தவன்
ஓகே டே சார்
இங்க நீ சாதாரண ஸ்டாப், உன் சம்பளம் இருபதாயிரம் ட்ரைனி ஸ்டாப் ... அதோ அவங்க உனக்கு ட்ரைனிங் தருவாங்க ., கத்துக்க
ம்ம் ஓகே.... தகப்பன் காட்டிய நபர் பின்னே வழி தப்பிய ஆட்டுக்குட்டி போல ஜீவா ஓட, மகனை பார்த்து கொண்டு நின்ற யட்சன் அருகே வந்து நின்ற தேனிசை
நான் என்ன பண்ணணும் சார் என்று மரியாதை அவனுக்கு குறையாது கேட்க
"ஹான் நீதான் சீமைப்பசு ஆற்றே... எனக்கு சோறூட்டி பாலூட்டி கூடவே உட்கார்ந்து பாரு ...
பிஏ போலவா..
உன்ன மாதிரி மொக்கை பிஏ எல்லாம் நான் வைக்க மாட்டேன் ... அங்க பார் அதுதான் என் பிஏ என்று அரேபியன் குதிரை போல அரைஆடையில் வந்த பெண்ணை யட்சன் கண் காட்ட. அவளுக்கே கண் கூசியது அப்பெண் ஆடையில் ..
அப்போ நான் யார்
வேலைக்காரி என்று புருவம் ஏற்றி இறக்க
ம்க்கும் என்று முகத்தை கோணி நின்று கொண்டாள்...
சார் கூப்பிட்டீங்களா? என்று அப்பெண் பவ்யமாக யட்சன் முன் வந்து நிற்க
"யா இவ இவங்க என்னோட கெஸ்ட் ... என்ன கத்துக்க நினைக்கிறாங்களோ கத்து கொடுங்க காலையில சாப்பிடல ___ கடையில ரெண்டு இட்லி சிகப்பு சட்னி ட்ரைவர்கிட்ட வாங்கிட்டு வர சொல்லி கொடுத்துடு.... என்றவனுக்கு காட்டாது தேனிசை முகத்தை திருப்பி கொண்டாள்.. யட்சன் டிஸ்யூ ஒன்றை அவள் புறம் நீட்ட , சட்டென வாங்கி குனிந்து நின்று கண்களை துடித்தாள்....
மீட்டிங் ரெடியா, ஸ்டாப்ஸ் அசம்புள் ஆயாற்றா என்று டையை கட்டி கொண்டே கேட்ட , அவன் ஆளுமையை ரசித்து கொண்டு நின்றவள் பார்வையில் இவன் கண்ணை சுருக்கி சமிக்ஞை கொடுக்க
சாரி சாரி தன்னை மறந்து அவனை ரசித்ததை கண்டிக்கிறான் என்று புரிந்து அப்பெண் காட்டிய இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள் கண்ணாடி அறை உள்ளே மீட்டீங் நடக்க , யட்சன் வெளுத்து வாங்கி கொண்டிருந்தான், அவன் தெரியும்படி சேரில் உட்கார்ந்து கன்னத்தில் கை வைத்து யட்சனை ரசித்தபடியே தேனிசை உட்கார்ந்து இருந்தாள்..
அவனை ரசிக்கத்தானே இந்த கண்கள் .. அவன் ருசிக்க தானே இந்த உடல் , அவன் துயிலத்தானே இந்த நெஞ்சு , அவன் சுகமாய் வாழத்தானே அவள் இதயம் !!
அவன் நரைக்கு வயது ஆகலாம், அவன் மூப்பை அடையா காதலுக்கு அவள் எப்போதோ ரசிகை ஆகி விட்டாளே!!